21-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் அசுர வழியில் செல்வதால் வழிமாறி விட்டீர்கள். இப்போது ஈஸ்வரிய வழிப்படி சென்றால் சுகதாமத்திற்கு சென்று விடுவீர்கள்.

கேள்வி:
குழந்தைகள் தந்தை மீது எந்த நம்பிக்கை வைக்க வேண்டும், எதை வைக்கக் கூடாது?

பதில்:
நாம் பாபா மூலமாக தூய்மையாகி நம்முடைய வீடு மற்றும் இராஜ்யத்திற்கு செல்வோம் என பாபா மீது நம்பிக்கை வைக்க வேண்டும். குழந்தைகளே, இவர்கள் நோயாளியாக இருக்கிறார் கள், ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று என்மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என பாபா கூறுகிறார். இங்கே இரக்க படுதல், ஆசீர்வாதம் செய்தல் போன்ற விசயங்கள் கிடையாது. குழந்தைகளாகிய உங்களை பதீதத்திலிருந்து பரிசுத்தமாக மாற்ற நான் வந்திருக்கிறேன். இப்போது எந்த விகர்மமும் ஆகாமல் இருப்பதற்கான செயல்களை நான் கற்பிக்கிறேன்.

பாடல்:
இன்று இல்லாவிட்டாலும் நாளை இந்த மேகங்கள் பொழியும்.....

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் பாடலை கேட்டீர்கள். இப்போது வீட்டிற்குப் போக வேண்டும் என குழந்தைகள் அறிகிறீர்கள். பாபா அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார். ஆத்ம உணர்வு டன் இருக்கும் போது தான் அந்த நினைவிருக்கும். தேக உணர்வில் வந்து விட்டால் நினைவிருக் காது. பாபா பயணியாக வந்திருக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். நீங்களும் பயணியாக தான் வந்துள்ளீர்கள். இப்போது உங்கள் வீட்டை மறந்து விட்டீர்கள். பிறகு தந்தை, வீட்டை நினைவு படுத்தியுள்ளார். மேலும் தினந்தோறும் புரிய வைக்கின்றார். சதோபிரதான மாக மாறாத வரை போக முடியாது. பாபா சரியாகச் சொல்கிறார் என குழந்தைகளுக்கு புரிகிறது. தந்தை கூட குழந்தைகளுக்கு ஸ்ரீமத் கொடுக்கும் போது நல்ல குழந்தைகள் அதன்படி நடக்கிறார்கள். இச்சமயம் நல்ல வழியை கொடுக்கக்கூடிய தந்தை யாரும் இல்லை. ஆகவே தான் வழிமாறி இருக்கிறார்கள். ஸ்ரீமத் கொடுக்கக் கூடியவர் ஒரேயொரு தந்தை தான். அந்த வழிப்படி கூட சில குழந்தைகள் நடப்பதில்லை. அதிசயமாக இருக்கிறது. லௌகீக தந்தையின் வழிப்படி நடக்கிறார்கள். அது அசுர வழியாகும். இதுவே நாடகம் ஆகும். நீங்கள் அசுர வழிப்படி நடந்து இந்த நிலையை அடைந்துள்ளீர் கள் என குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இப்போது ஈஸ்வரிய வழிப்படி நடப்பதால் சுக தாமத்திற்கு சென்று விடலாம். அது எல்லையற்ற சொத்தாகும். தினந்தோறும் புரிய வைக்கின்றார். குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் இங்கேயே இருக்க முடியாது. வீட்டிலிருந்தாலும் நினைக்க வேண்டும். இப்போது நடிப்பு நிறை வடையப் போகிறது. வீட்டிற்கு திரும்ப போக வேண்டும். மனிதர்கள் எவ்வளவு மறந்து விட்டார்கள். இவர்கள் அவர் களுடைய வீடு, இராஜ்யத்தையும் கூட மறந்து போய் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது அல்லவா. இப்போது வீட்டையும் நினையுங்கள் என பாபா கூறுகின்றார். உங்கள் இராஜ்யத்தையும் நினையுங்கள். இப்போது நடிப்பு நிறையவடையப் போகிறது. இப்போது திரும்ப வீட்டிற்குப் போக வேண்டும் மறந்து விட்டீர்களா?

பாபா நாடகத்தின்படி எங்களுடைய நடிப்பு இப்படி தான், வீடு வாசலை மறந்து ஒரேயடியாக அலைந்துக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் கூறலாம். பாரத வாசிகள் தான் தங்களுடைய உயர்ந்த தர்மம், கர்மத்தை மறந்து தெய்வீக தர்மத்தையும் தெய்வீக கர்மத்தையும் தாழ்த்தி விட்டனர். இப்போது பாபா உங்களுடைய தர்மமும் கர்மமும் இவ்வாறு இருந்தது என எச்சரிக்கிறார். அங்கே உங்களுடைய கர்மங்கள் எந்த ஒரு தீங்கும் தராததாக இருந்தது என கூறு கின்றார். கர்மம், அகர்மம், விகர்மத்தின் விளைவுகளை பாபா தான் உங்களுக்குப் புரிய வைக்கிறார். சத்யுகத்தில் கர்மம் தீங்கு தராததாக இருக்கிறது. இராவண இராஜ்யத்தில் கர்மம் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. இப்போது தர்மத்தையும் கர்மத்தையும் உயர்ந்ததாக மாற்ற தந்தை வந்திருக்கிறார். எனவே இப்போது ஸ்ரீமத்படி உயர்ந்த கர்மத்தை செய்ய வேண்டும். எந்த ஒரு கீழான கர்மத்தையும் செய்து யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. இது ஈஸ்வரிய குழந்தைகளுடைய வேலை கிடையாது. என்ன டைரக்ஷன் கிடைக்கிறதோ அதன்படி நடக்க வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். சுத்தமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை வேறு வழி இல்லை என்றால் பாபாவிடம் ஆலோசனை கேளுங்கள். வேலை செய்யும் இடங்களில் சிறிது சாப்பிட வேண்டி யிருக்கிறது என பாபா புரிந்துக் கொள்கிறார். நீங்கள் யோக பலத்தினால் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள், பதீத உலகத்தை பாவனமாக மாற்றுகிறீர்கள் என்றால் உணவை தூய்மைப் படுத்துவது பெரிய விசயமா? வேலை செய்ய வேண்டும், பாபாவினுடையவராகி விட்டால் அனைத்தையும் விட்டுவிட்டு இங்கேயே வந்து இருக்க வேண்டும் என்பது கிடையாது. எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள். இவ்வளவு பேரும் இங்கே இருக்க முடியாது. அனைவரும் குடும்ப விவகாரத்தில் இருக்க வேண்டும். நான் ஆத்மா, பாபா வந்திருக்கிறார் நம்மை தூய்மையாக்கி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார், பிறகு இராஜ்யத்தில் வருவோம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இது இராவணனின் தேசமாகும். நீங்கள் நாடகப்படி முற்றிலும் அழுக்காகி விட்டீர்கள். இப்போது நான் உங்களை எழுப்புவதற்காக வந்திருக்கிறேன். ஸ்ரீமத்படி செல்லுங்கள் என பாபா கூறுகின்றார். எவ்வளவு பின்பற்றுகிறீர்களோ அவ்வளவு உயர்ந்தவராவீர்கள்.

பாபா நம்மை சொர்க்கத்திற்கே அதிபதியாக மாற்றுகிறார். அவரை மறந்து விட்டோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது பாபா சீர்திருத்துவதற்காக வந்திருக்கிறார் நன்கு திருந்த வேண்டும் அல்லவா, மகிழ்ச்சி அடைய வேண்டும். எல்லையற்ற தந்தை கிடைத் திருக்கிறார். குழந்தைகளிடம் ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுக்குள் பேசிக் கொள்வது போல் உங்களிடம் பேசுகிறார். அவரும் ஆத்மா தான். பரமாத்மா. அவருக்கும் நடிப்பு இருக்கிறது. ஆத்மாக் களாகிய நீங்களும் நடிகர்களே, உயர்ந்ததிலும் உயர்ந்ததிலிருந்து தாழ்ந்ததிலும் தாழ்ந்ததான நடிப்பும் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் அனைத்தும் செய்வது ஈஸ்வரனே என மனிதர்கள் பாடுகிறார்கள். நோயாளிகளை சரி செய்வது என்னுடைய நடிப்பு இல்லை. தூய்மையாக மாறினால் தான் நீங்கள் வீட்டிற்குப் போக முடியும். இராஜ்யத்திலும் போக முடியும். வேறு எந்த நம்பிக்கை யும் வைக்காதீர்கள். இவர்கள் நோய்வாய்ப் பட்டிருக்கின்றனர், ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என்பதில்லை, ஆசீர்வாதம், கிருபை போன்ற விசயங்கள் என்னிடம் எதுவும் இல்லை. அவை வேண்டும் என்றால் சாது சன்னியாசிடம் செல்லுங்கள். ஓ, பதீத பாவனா வாருங்கள் வந்து எங்களை தூய்மையாக்குங்கள், தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என நீங்கள் என்னை அழைத்தீர்கள். நான் உங்களை விஷக்கடலிலிருந்து அழைத்துச் செல்கிறேன். பிறகு நீங்கள் விஷக்கடலில் ஏன் மாட்டிக் கொள்கிறீர்கள் என பாபா கேட்கிறார். பக்தி மார்க்கத்தில் உங்களுடைய நிலை இப்படி ஆகி விட்டது. ஞானம், பக்தி உங்களுக்காவே. சன்னியாசிகள் கூட ஞானம், பக்தி, வைராக்கியம் என்கின்றனர். ஆனால் அதனுடைய பொருளை அவர்கள் அறிய வில்லை. இப்போது உங்களுடைய புத்தியில் ஞானம், பக்தி பிறகு வைராக்கியம் என்பது இருக் கிறது. எனவே எல்லையற்ற வைராக்கியத்தை கற்பிப்பவர் வேண்டும். இது சுடுகாடு என பாபா புரிய வைத்துள்ளார். இதன் பிறகு சொர்க்கமாக வேண்டும். அங்கே ஒவ்வொரு செயலும் நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது. இப்போது பாபா உங்களுக்கு விகர்மம் நடக்காத அளவிற்கு கர்மங் களைக் கற்பிக்கிறார். யாருக்கும் துக்கம் அளிக்காதீர்கள். பதீதர்களின் உணவை சாப்பிடாதீர்கள். விகாரத்தில் ஈடுபடாதீர்கள். இதில் தான் அபலைகள் மீது கொடுமை இழக்கப்படுகிறது. மாயா எப்படி தடையை ஏற்படுத்துகிறது என்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இது அனைத்தும் குப்தமாகும். அசுரர்களுக்கும் தேவதைகளுக்கும் இடையே யுத்தம் நடந்தது என்கிறார்கள். பிறகு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலும் யுத்தம் நடந்தது என்கிறார்கள். இப்போது போர் என்பது ஒன்று தான். நான் எதிர் காலத்தில் 21 பிறவிகளுக்காக உங்களுக்கு இராஜ யோகத்தை கற்பிக்கிறேன் என பாபா புரிய வைக்கின்றார். இது மரண உலகம் ஆகும். மனிதர்கள் சத்திய நாராயணனின் கதையைக் கேட்டு வந்துள்ளனர். எந்த நன்மையும் இல்லை. இப்போது நீங்கள் உண்மையான கீதையை கூறுகிறீர்கள். நீங்கள் உண்மையான இராமாயணத்தை கூட கூறுகிறீர்கள். ஒரு இராமர் சீதையின் விசயம் இல்லை. இச்சமயம் முழு உலகமும் இலங்கையாக இருக்கிறது. நாலாபுறமும் தண்ணீர் இருக்கிறது அல்லவா. இது எல்லையற்ற இலங்கையாகும். இதில் இராவணனின் இராஜ்யம் இருக்கிறது. ஒரு தந்தை தான் மணவாளன் மற்ற அனைவரும் மணப்பெண்கள். இப்போது பாபா உங்களை இராவண இராஜ்யத்திலிருந்து விடுவிக்கிறார். இது சோக வனம் ஆகும். சத்யுகம் சோகம் (துன்பம்) இல்லாத தோட்டம் என சொல்லப்படுகிறது, அங்கு துன்பம், துயரம் எதுவுமே இல்லை, இச்சமயம் துன்பமோ துன்பம் மட்டும் தான். ஒருவர் கூட சோகம் அற்றவர் கிடையாது. அசோகா ஹோட்டல் என பெயர் வைக்கின்றனர். இச்சமயம் முழு உலகமும் எல்லையற்ற ஹோட்டல் என புரிந்துக் கொள்ளுங்கள் என பாபா கூறுகின்றார். சோக (துன்பங்கள்) ஹோட்டலாக இருக்கின்றது. மனிதர்கள் உண்ணுதல், அருந்துதல் அனைத்தும் விலங்குகளைப் போல் இருக்கிறது. உங்களை பாபா எங்கே அழைத்துச் செல்கிறார் பாருங்கள். உண்மையிலும் உண்மையான அசோக வனம் சத்யுகத்தில் இருக்கிறது. எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லைக்கப்பாற்பட்டதின் வித்தியாசம் பாபா தான் தெரிவிக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு நிறைய மகிழ்ச்சி இருக்க வேண்டும். பாபா நம்மை படிக்க வைக்கிறார் என அறிகிறீர்கள். அனைவருக்கும் வழி காட்டுதல், கண்பார்வை அற்றவர்களுக்கு ஊன்றுகோலாக இருத்தல் போன்றவை நம்முடைய வேலை ஆகும். சித்திரங்கள் கூட உங்களிடத்தில் இருக்கிறது. இது இந்த நாடு என பள்ளிக் கூடங்களில் சித்திரங்களை வைத்து புரிய வைக்கப்படுகிறது. அது போல் நீங்கள் ஆத்மா சரீரம் அல்ல என்பதை புரிய வைக்கிறீர்கள். ஆத்மாக்கள் சகோதரர்கள், எவ்வளவு எளிதான விஷயங்களை கூறுகிறீர்கள். நாம் அனைவரும் சகோதரர்கள் என கூறுகிறீர்கள். நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் சகோதரர்கள் அல்லவா என பாபா கூறுகின்றார். இறை தந்தை என்று சொல்கிறீர்கள் அல்லவா! ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள கூடாது, சகோதரன் சகோதரி ஆகிறீர்கள். நாம் சிவபாபாவின் குழந்தைகள், அனைவரும் சகோதரர்கள் ஆவர். பிரஜா பிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதரன் சகோதரிகள் ஆவர். நாம் தாத்தாவிடமிருந்து சொத்து அடைய வேண்டும். எனவே தாத்தாவைத் தான் நினைக்கிறார்கள். இந்த குழந்தையை (பிரம்மா) கூட நான் என்னுடையவனாக மாற்றி யிருக்கிறேன். அதாவது இவருக்குள் பிரவேசமாகி இருக் கிறேன். இந்த விஷயங்கள் அனைத்தையும் இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். குழந்தை களே இப்போது புதிய தெய்வீக இல்லற மார்க்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது என பாபா கூறுகிறார். நீங்கள் பி.கே. அனைவரும் சிவபாபாவின் வழிப்படி நடக்கிறீர்கள். பிரம்மா கூட அவருடைய (சிவபாபா) வழிப்படி நடக்கிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினையுங்கள். மேலும் அனைத்து உறவுகளிலிருந்தும் விடுபடுங்கள் என பாபா கூறுகிறார். 8 மணி நேரம் நினைக்க வேண்டும். மீதம் 16 மணி நேரம் ஓய்வு, வேலை போன்ற எதை செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். நான் பாபாவின் குழந்தை என்பதை மறக்காதீர்கள். இங்கேயே வந்து ஹாஸ்டலில் இருக்க வேண்டும் என்பதும் கிடையாது. இல்லை. இல்லறத்தில் குழந்தை களுடனும் இருக்க வேண்டும். தந்தையிடம் வருவது புத்துணர்வு அடைவதற்காக ஆகும். மதுரா, பிருந்தாவனத்தில் மதுபனின் காட்சி காண்பதற்காக செல்கின்றனர். சிறிய மாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இப்போது இந்த எல்லையற்ற விசயங்களை புரிந்துக் கொள்ள வேண்டும். சிவபாபா பிரம்மா மூலமாக புதிய சிருஷ்டியை படைத்துக் கொண்டு இருக்கின்றார். நாம் பிரஜா பிதா பிரம்மாவின் வாரிசுகள் பி.கே. விகாரங்களின் விசயம் இருக்க முடியாது. சந்நியாசிகளின் சீடர்கள் ஆகின்றனர். அவர்கள் சந்நியாசி உடையை அணிந்து கொண்டால் பெயர் மாறி விடுகிறது. இங்கே கூட நீங்கள் பாபாவினுடையவர் ஆகிவிட்டீர்கள் என்றால் பாபா பெயர் வைத்தார் அல்லவா. எவ்வளவு பேர் பட்டியில் இருந்தனர். இந்த பட்டியைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. சாஸ்திரங்களில் என்னென்ன எழுதப்பட்டிருக்கிறது. மீண்டும் இவ்வாறே நடக்கும். இப்போது உங்களுடைய புத்தியில் சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டு உள்ளது. தந்தை சுயதரிசன சக்கரதாரி அல்லவா. சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிந்துள்ளார். பாபாவிற்கு சரீரம் இல்லை. உங்களுக்கு ஸ்தூல சரீரம் இருக்கிறது. அவர் பரமாத்மா ஆவார். ஆத்மா சுயதர்ஷன சகக்ரதாரி அல்லவா. இப்போது ஆத்மாவிற்கு எப்படி அலங்காரம் செய்வது? புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா. இது எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் ஆகும். உண்மையில் நான் சுயதர்ஷன சக்கரதாரி என பாபா கூறுகின்றார். ஆத்மாவில் அனைத்து சிருஷ்டிச் சக்கர ஞானமும் வந்து விடுகிறது என நீங்கள் அறிகிறீர்கள். பாபா கூட பரந்தாமத்தில் இருக்கக்கூடியவர். நாமும் அங்கே இருக்கக் கூடியவர்கள். குழந்தைகளே நானும் சுயதர்ஷன சக்கரதாரி, நான் பதீதபாவனன் உங்களிடம் வந்திருக்கிறேன் என பாபா தனது அறிமுகத்தை கொடுக்கின்றார். பதீதத்திலிருந்து பரிசுத்தமாக்குங்கள், விடுவியுங்கள் என்பதற்காகவே என்னை அழைத்தீர்கள். அவருக்கு சரீரம் இல்லை. அவர் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவர் பிறவி எடுக்கிறார். ஆனால் தெய்வீகமானது. சிவஜெயந்தி அல்லது சிவராத்திரி கொண்டாடுகிறார்கள். எப்போது இரவு முடிகிறதோ அப்போது பகலாக மாற்று வதற்காக நான் வருகிறேன் என பாபா கூறுகிறார். பகலில் 21 பிறவிகள், பிறகு இரவில் 63 பிறவிகள் என ஆத்மா தான் வித விதமாக பிறவி எடுக்கிறது. இப்போது பகலிலிருந்து இரவிற்கு வந்துள்ளீர். மீண்டும் பகலுக்குப் போக வேண்டும். உங்களை சுய தரிசன சக்கரதாரியாக மாற்றி இருக்கிறார். இச்சமயம் என்னுடைய நடிப்பு இருக்கிறது. உங்களையும் சுய தரிசன சக்கரதாரியாக மாற்றுகிறேன். பிறகு நீங்கள் மற்றவர்களை மாற்றுங்கள். எப்படி 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். அந்த 84 பிறவிகளின் சக்கரத்தைப் புரிய வைக்கப்படுகிறது. முன்பு உங்களுக்கு இந்த ஞானம் இருந்ததா? முற்றிலும் இல்லை. அஞ்ஞானியாக இருந்தீர். பாபா சுயதரிசன சக்கரதாரி, அவருக்கு ஞானக் கடல் என்று பெயர் என முக்கியமான விசயத்தை பாபா புரிய வைக்கிறார். அவர் சத்தியமானவர். சைத்தன்யமானவர். குழந்தைகளாகிய உங்களுக்கு சொத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாபா, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள் என குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். உப்புத் தண்ணீர் ஆகாதீர். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மேலும் அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தை கொடுக்க வேண்டும். பாபாவை அனைவரும் மறந்து இருக்கின்றனர். இப்போது என்னை மட்டும் நினையுங்கள் என பாபா கூறுகின்றார். நிராகார் ஆத்மாக்கள் முன்பு நிராகார் பகவான் கூறுகிறார். உண்மையில் நீங்கள் நிராகார். பிறகு சாகாரி ஆகிறீர்கள். உடல் இல்லாமல் ஆத்மா எதுவும் செய்ய முடியாது. ஆத்மா உடலிலிருந்து போய் விட்டால் எந்த ஒரு அசைவும் ஏற்படாது. ஆத்மா உடனே சென்று இன்னொரு உடலில் தனது நடிப்பை நடிக்கிறது. இந்த விசயங்களை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். உள்ளுக்குள் சிந்தியுங்கள். ஆத்மாக்களாகிய நாம் பாபாவிடமிருந்து சொத்து அடைகின்றோம். சத்யுகத்தின் சொத்து கிடைக்கிறது. நிச்சயம் பாபா பாரதத்திற்கு சொத்து அளித்திருக்கிறார். எப்போது சொத்து கொடுத்தார். பிறகு என்ன நடந்தது. மனிதர்களுக்கு இது எதுவும் தெரியவில்லை. இப்போது பாபா அனைத்தையும் தெரிவிக்கிறார். குழந்தைகளாகிய உங்களை தான் சுயதரிசன சக்கரதாரி ஆக்கியிருக்கிறார். பிறகு நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். மீண்டும் நான் வந்திருக்கிறேன். எவ்வளவு எளிதாக புரிய வைக்கின்றார். பாபாவை நினையுங்கள். மேலும் இனிமையாக மாறுங்கள். குறிக்கோள் எதிரில் இருக்கிறது. பாபா வழக்கறிஞர்களுக்கெல்லாம் வழக்கறிஞராக இருக்கிறார். அனைத்து சண்டை சச்சரவு களிலிருந்தும் விடுவிக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் நிறைய மகிழ்ச்சி இருக்க வேண்டும். நாம் பாபாவின் குழந்தைகளாகி இருக்கிறோம். பாபா சொத்து கொடுப்பதற்காக நம்மை தத்தெடுக்கிறார். இங்கே நீங்கள் சொத்து அடைவதற்காக வருகிறீர்கள். குழந்தைகளை பார்த்துக் கொண்டாலும் புத்தி பாபா மற்றும் இராஜ்யத்தின் பக்கம் இருக்க வேண்டும் என கூறுகிறார். படிப்பு எவ்வளவு எளிதாக இருக்கிறது. பாபா உங்களை உலகத்திற்கே அதிபதியாக்குகிறார். அவரை நீங்கள் மறந்து போகிறீர் கள். முதலில் தன்னை ஆத்மா என புரிந்துக் கொள்ளுங்கள். இந்த ஞானத்தை பாபா சங்கம யுகத்தில் தான் கொடுக்கிறார். ஏனென்றால் சங்கமத்தில் தான் பதீதத்திலிருந்து பவனமாகிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான ஆன்மீக பிரம்மா முகவம்சாவளி பிராமண குல பூசணர்கள் தேவதைகளை விட உயர்ந்த குலத்தவர். நீங்கள் பாரதத்திற்கு மிக உயர்ந்த சேவை செய்கிறீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் பூஜைக்குரியவர் ஆகிவிடுவீர்கள். இப்போது பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராகவும் சோழியிலிருந்து வைரமாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஆன்மீகக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இப்போது ஸ்ரீமத் படி ஒவ்வொரு கர்மமும் உயர்ந்ததாக செய்ய வேண்டும். யாருக்கும் துக்கம் அளிக்கக் கூடாது. தெய்வீக குணங்களை கடைபிடிக்க வேண்டும். பாபாவின் கட்டளைப் படி தான் நடக்க வேண்டும்.

2. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும். ஒரு போதும் உப்பு தண்ணீர் ஆகக் கூடாது. அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தை கொடுக்க வேண்டும். மிக மிக இனிமையாக மாற வேண்டும்.

வரதானம்:
மரியாதையை கேட்டு வாங்குவதற்கு பதிலாக, எல்லோருக்கும் மரியதையை கொடுக்கக்கூடிய, சதா சுயநலமற்ற யோகி ஆகுக.

உங்களுக்கு யாரேனும் மரியாதை கொடுத்தாலும், உங்களை ஏற்றுக்கொண்டாலும் அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், நீங்கள் அவர்களை தன்னுடைய இனிமையான சகோதர னாகவும், சகோதரியாகவும் ஏற்றுக்கொண்டு சதா சுயமரியாதையில் இருந்து, அன்பான பார்வை யுடன், அன்பான உள்ளுணர்வுடன் ஆத்மீக மரியாதையை (அந்த ஆத்மாவிற்கான மரியாதையை) கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். இவர்கள் மரியாதை கொடுத்தால், நான் மரியாதை கொடுப்பேன் - இது கூட ராயலாக யாசிப்பதாகும்., இதில் சுயநலமற்ற யோகி ஆகுங்கள். ஆன்மீக அன்பினுடைய மழையின் மூலமாக எதிரியை கூட நண்பனாக ஆக்கி விடுங்கள். உங்கள் முன்னால் யாரேனும் கல்லை விட்டு எரிந்தாலும் கூட, நீங்கள் அவர்களுக்கு இரத்தினங்களை கொடுங்கள் ஏனெனில் நீங்கள் இரத்தினாகர் தந்தையின் (இரத்தினங்களின் கடலாகிய தந்தையின்) குழந்தைகள்.

சுலோகன்:
உலகத்தின் புதிய படைப்பிற்கான காரியத்திற்காக இரண்டு சப்தங்களை நினைவில் வையுங்கள் - கருவி (நான் கருவி மட்டுமே என்ற புரிதல்) மற்றும் பணிவு (நடத்தையில்).

அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

சேவையில் வெற்றிக்கான முக்கிய சாதனம் - தியாகம் மற்றும் தபஸ்யா. அப்படிப்பட்ட தியாகி மற்றும் தபஸ்வியின் அர்த்தம் - சதா தந்தையின் மீது கொண்ட அன்பில் மூழ்கியிருத்தல், அன்பினுடைய கடலில் மூழ்கியிருத்தல், ஞானம், ஆனந்தம், சுகம், சாந்தியின் கடலில் மூழ்கி யிருத்தல் - இந்த நிலையையே தபஸ்வி என்று சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட தியாகியாக, தபஸ்வியாக இருப்பவர்களே உண்மையான சேவாதாரி ஆவார்கள்.