21.12.25 காலை முரளி
ஓம் சாந்தி 05.03.2008 பாப்தாதா,
மதுபன்
சங்கமயுகம் என்ற வங்கியில் அமைதி சக்தி மற்றும் சிரேஷ்ட செயலை
சேமிப்பு செய்யுங்கள், சிவ மந்திரத்தின் மூலம் நான் என்பதை
மாற்றுங்கள்.
இன்று பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளின் அன்பை
பார்த்துக் கொண்டிருக் கின்றார். நீங்கள் அனைவரும் கூட அன்பு
என்ற விமானத்தின் இங்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். இந்த அன்பு
என்ற விமானம் மிக எளிதாக அன்பானவரிடம் வரவழைத்து விடுகிறது.
இன்று விசேஷமாக அன்பில் மூழ்கியிருக்கும் ஆத்மாக்கள்
பரமாத்மாவின் அன்பு என்ற ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருப்பதை பாப்தாதா
பார்த்துக் கொண்டிருக்கின்றார். பாப்தாதாவும் கூட நாலாப் புறங்
களிலும் உள்ள குழந்தைகளின் அன்பில் கலந்திருக்கின்றார்.
பரமாத்மாவின் இந்த அன்பு பாப் சமான் எளிதாக அசரீரியாக ஆக்கி
விடுகிறது. வியக்த உணர்விலிருந்து விலக்கி அவ்யக்த ஸ்திதியில்
அவ்யக்த சொரூபத்தில் நிலைக்கச் செய்து விடுகிறது. பாப்தாதாவும்
ஒவ்வொரு குழந்தையையும் சமமான ஸ்திதியில் பார்த்து மகிழ்ச்சி
அடைந்து கொண்டிருக்கின்றார்.
இன்றைய நாள் அனைத்துக் குழந்தைளும் சிவராத்திரி, சிவஜெயந்தி
தந்தை மற்றும் தனது பிறந்தநாள் கொண்டாட வந்திருக்கிறீர்கள்.
பாபா மற்றும் தாதா இருவரும் அவரவர்களது வதனத் திலிருந்து
குழந்தைகளாகிய உங்கள் அனைவரின் பிறந்தநாள் கொண்டாட வந்து
விட்டனர். முழு கல்பத்திலும் தந்தை மற்றும் உங்களது இந்த
பிறந்தநாள் தனிப்பட்டது மற்றும் மிக பிரியமான தாகும்.
பக்தர்களும் இந்த உற்சவத்தை மிக பாவனையுடன் மற்றும் அன்பாக
கொண்டாடு கின்றனர். நீங்கள் இந்த தெய்வீக பிறவியில் எந்த
சிரேஷ்ட அலௌகீக காரியம் செய்தீர்களோ, இப்பொழுதும் செய்து
கொண்டிருக்கிறீர்கள். அதை நினைவுச் சின்னமாக அல்ப காலத்திற்காக
கொண்டாடுகின்றனர். ஆனால் பக்தர்களின் அதிசயமாகும். நினைவுச்
சின்னத்தை கொண்டாடு பவர்கள், நினைவுச் சின்னத்தை
உருவாக்குபவர்களையும் பாருங்கள் எவ்வளவு அதிசயமாக இருக்கிறது!
நகல் செய்வதில் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஏனெனில்
உங்களுடைய பக்தர்கள் தானே! எனவே உங்களுடைய உயர்ந்த நிலைக்கான
பலன் அந்த நினைவுச் சின்னத்தை உருவாக்குபவர்களுக்கு வரதானத்தின்
ரூபத்தில் கிடைக்கிறது. நீங்கள் சம்பூர்ன தூய்மைக்கான விரதம்
ஒரு பிறவியில் ஒரு முறை எடுக்கிறீர்கள். ஒருநாள் தூய்மைக்கான
விரதமும் எடுத்து நகல் செய்கின்றனர். நீங்கள் முழு பிறவியிலும்
தூய்மையான உணவிற்கான விரதம் எடுக்கிறீர்கள், அவர்கள் ஒரு நாள்
விரதம் எடுக்கின்றனர். ஆக இன்று பாப்தாதா அமிர்தவேளை யில்
பார்த்துக் கொண்டிருந்தார் - உங்கள் அனைவரின் பக்தர்களும்
குறைந்தவர்கள் அல்ல. அவர்களது விசேஷதாவும் நன்றாக இருக்கிறது.
நீங்கள் அனைவரும் முழு பிறவிக்கும் உறுதி யான விரதம் உணவுகளில்,
மன சங்கல்பத்தில் தூய்மை, வார்த்தைகளில், செயல்களில்,
சம்பந்தம்-தொடர்பில் வந்தாலும் செயல்களில் முழு பிறவிக்கும்
உறுதியான விரதம் எடுத்தீர்களா? எடுத்தீர்களா? அல்லது சிறிது
எடுத்தீர்களா? தூய்மை பிராமண வாழ்க்கைக்கு ஆதாரமாகும். பூஜ்ய
நிலை அடைவதற்கு ஆதாரமாகும். சிரேஷ்ட பிராப்திக்கு ஆதாரமாகும்.
ஆக இங்கு வந்திருக்கும் பாக்கியவான் ஆத்மாக்கள் அனைவரும் சோதனை
செய்யுங்கள் - இந்த பிறவியில் தூய்மை ஆவதற்கான உற்சவம்
நாலாப்புறங்களிலும், பிரம்மச்சரியம் என்ற தூய்மை மட்டுமின்றி
எண்ணம்-சொல்-செயல், சம்பந்தம்-தொடர்பிலும் தூய்மை. இந்த விரம்
உறுதியாக எடுத்துக் கொண்டீர்களா? எடுத்துக் கொண்டீர்களா? யார்
உறுதியாக எடுத்துக் கொண்டீர்களோ, சிறிது அரைகுறையாக அல்ல,
அவர்கள் கை உயர்த்துங்கள். பக்காவா? பக்காவா? எவ்வளவு பக்கா?
யாராவது அசைத்தால் அசைந்து விடுவீர்களா? அசைந்து விடமாட்டீர்களா?
அவ்வப்பொழுது மாயை வந்து விடுகிறது அல்லவா! மாயாவிற்கு விடை
கொடுத்து விட்டீர்களா? அல்லது அவ்வப்பொழுது அனுமதி கொடுத்து
விடுகிறீர்களா? வந்து விடுகிறது. சோதனை செய்யுங்கள் - உறுதியான
விரதம் எடுத்துக் கொண்டீர்களா? சதா காலத்திற்கும் விரதம்
எடுத்துக் கொண்டீர்களா? அல்லது அவ்வப்பொழுதா? சில நேரம் சிறிது,
சில நேரம் அதிகமாக, சில நேரம் உறுதியாக, சில நேரம் பலவீனமாக -
இவ்வாறு கிடையாது தானே! ஏனெனில் பாப்தாதாவின் அன்பு என்ற
விசயத்தில் அனைவரும் 100 சதவிகிதத்தை விட அதிகம் என்று ஏற்றுக்
கொள்கிறீர்கள். பாப்தாதாவின் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது?
என்று ஒருவேளை பாப்தாதா கேட்டால் அனைவரும் மிகுந்த
ஆர்வம்-உற்சாகத்துடன் கைகளை உயர்த்துகிறீர்கள். அன்பில்
சதவிகிதம் குறைவாக கிடையாது, மெஜாரிட்டி அன்பு இருக்கிறது.
அன்பில் தேர்ச்சி அடைந்தது போன்று மெஜாரிட்டி அன்பில் தேர்ச்சி
அடைந்திருக் கிறீர்கள் என்பதை பாப்தாதாவும் ஏற்றுக் கொள்கிறார்.
ஆனால் தூய்மை என்ற விரதத்தில் நான்கு ரூபங்களிலும்
எண்ணம்-சொல்-செயல், சம்பந்தம்-தொடர்பு நான்கு ரூபங்களிலும்
சம்பூர்ன தூய்மை கடைபிடிப்பதில் சதவிகிதம் வந்து விடுகிறது.
இப்பொழுது பாப்தாதா என்ன விரும்புகின்றார்? பாப்தாதா இதைத் தான்
விரும்புகின்றார் - சமம் ஆவதற்கு என்ன உறுதிமொழி எடுத்தீர்களோ,
ஒவ்வொரு குழந்தையின் முகத்தில் தந்தையின் மூர்த்தி தென்பட
வேண்டும். ஒவ்வொருவரின் வார்த்தையில் பாப்சமான் வார்த்தைகள்
இருக்க வேண்டும். பாப்தாதாவின் வார்த்தைகள் வரதானமாக
ஆகிவிடுகிறது. எனவே நீங்கள் அனைவரும் இதை சோதனை செய்யுங்கள்,
எனது முகத்தில் தந்தையின் மூர்த்தி தென்படுகிறதா? தந்தையின்
மூர்த்தி என்ன? சம்பன்னம், அனைத்து விசயங்களிலும் சம்பன்னம்.
இவ்வாறு ஒவ்வொரு குழந்தையின் கண்கள், ஒவ்வொரு குழந்தை யின்
முகம் பாபாவிற்கு சமம் இருக்கிறதா? சதா புன்முறுவல் முகம்
இருக்கிறதா? அல்லது அவ்வப்பொழுது கவலையான, சில நேரம் வீண்
சங்கல்பத்தின், சில நேரம் உதாசீனம், சில நேரம் அதிக
உழைப்பிற்கான, இப்படிப் பட்ட முகம் கிடையாது தானே? சதா ரோஜா,
சில நேரம் ரோஜா போன்று மலர்ந்திருக்கும் முகம், சில நேரம் வேறு
ஏதாவதாக ஆகிவிடுகிறது. ஏனெனில் பிறப்பு எடுத்தவுடனேயே பாப்தாதா
இதையும் கூறிவிட்டார்-மாயை உங்களது இந்த சிரேஷ்ட வாழ்க்கையை
எதிர்க்கொள்ளும். ஆனால் மாயாவின் வேலை வருவது, சதா தூய்மை என்ற
விரதம் எடுத்திருக்கும் ஆத்மாக்களாகிய உங்களது வேலை தூரத்திலேயே
மாயாவை விரட்ட வேண்டும்.
சில குழந்தைகள் மாயாவை தூரத்திலேயே விரட்டுவது கிடையாது என்பதை
பாப்தாதா பார்க்கின்றார். மாயை வந்து விடுகிறது, வர விட்டு
விடுகிறீர்கள். அதாவது மாயாவின் பிரபாவத் தில் வந்து
விடுகிறீர்கள். ஒருவேளை தூரத்திலேயே விரட்டவில்லை எனில் மாயா
விற்கும் பழக்கமாகி விடும். ஏனெனில் இங்கு எனக்கு அமருவதற்கு
அனுமதிக்கிறார்கள் என்பதை அது அறிந்து விடுகிறது. அமர வைப்பதன்
அடையாளம் மாயை வந்து விடுகிறது. இது மாயை என்று யோசிக்கிறீர்கள்,
ஆனால் ஏன் யோசிக்கிறீர்கள்? இப்பொழுது சம்பூர்னம் ஆகவில்லை,
யாரும் சம்பூர்னம் ஆகவில்லை. இப்பொழுது ஆகிக் கொண்டிருக்கிறோம்,
ஆகிவிடுவோம் என்று கூற ஆரம்பித்து விடுகிறீர்கள். இது மாயாவை
அமர வைப்பதற்கான பழக்கம் ஆகிவிடுகிறது. ஆக இன்று பிறந்தநாள்
கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள், தந்தையும் ஆசிர்வாதம்,
வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் தந்தை
ஒவ்வொரு குழந்தையையும், கடைசி நம்பர் குழந்தையையும் எந்த
ரூபத்தில் பார்க்க விரும்புகின்றார்? கடைசி நம்பரும் கூட
தந்தைக்கு பிரிய மானவர் அல்லவா! எனவே கடைசி நம்பர்
குழந்தையையும் சதா ரோஜா மலராக பார்க்க விரும்புகின்றார்,
மலர்ந்திருக்க வேண்டும். வாடியிருக்கக் கூடாது. வாடி
விடுவதற்குக் காரணம் சிறிது சோம்பல் ஆகும். நடந்து விடும்,
பார்க்கலாம், செய்யலாம், அடைந்து விடலாம் ஆக இந்த லாம் லாம்
என்ற மொழி கீழே விழ வைத்து விடுகிறது. எனவே சோதனை செய்யுங்கள்
- எவ்வளவு காலம் கழிந்து விட்டது! இப்பொழுது நேரத்தின்
நெருக்கம் மற்றும் திடீரென்று நடக்கும் என்ற சைகை பாப்தாதா
கொடுத்து விட்டார், கொடுத்துக் கொண்டிருக்கின்றார் அல்ல,
கொடுத்து விட்டார். அப்படிப்பட்ட நேரத்தில் எவரெடி, அலர்ட் ஆக
இருப்பது அவசியமாகும். அலர்ட் ஆக இருப்பதற்கு சோதனை செய்யுங்கள்
- எனது மனம் மற்றும் புத்தி சதா சுத்தமாக மற்றும் தெளிவாக
இருக்கிறதா? சுத்தமாகவும் இருக்க வேண்டும், தெளிவாகவும் இருக்க
வேண்டும். இதற்கு நேரத்தின் மீது வெற்றி அடைவதற்கு மனதில்,
புத்தியில் கேட்சிங் பவர் மற்றும் டச்சிங் பவர் இரண்டும் மிக
அவசியமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரயிருக்கிறது, அதாவது
தூரத்தில் அமர்ந்திருந்தாலும் சுத்தமான மற்றும் தெளிவான மனம்
மற்றும் புத்தி இருந்தால் தந்தையின் சைகைகளை, கட்டளைகளை,
ஸ்ரீமத் கேட்ச் செய்ய முடியும். இது செய்ய வேண்டும், இது
செய்யக் கூடாது என்ற டச்சிங் ஏற்படும். ஆகையால் பாப்தாதா முன்பே
கூறியிருக்கின்றார்- நிகழ்காலத்தில் அமைதி சக்தியை தன்னிடத்தில்
எவ்வளவு சேமிக்க வேண்டுமோ சேமித்துக் கொள்ளுங்கள். எப்பொழுது
தேவையோ, எப்படி தேவையோ அவ்வாறு மனம் மற்றும் புத்தியை கட்டுப்
படுத்துங்கள். வீண் எண்ணங்கள் கனவிலும் தொட்டு விடக் கூடாது,
இவ்வாறு மனக்கட்டுப் பாடு தேவை. அதனால் தான் மனதை வென்றவர் உலகை
வென்று விடுவர் என்று கூறப்படுகிறது. ஸ்தூல கர்மேந்திரியம் கை
இருக்கிறது, எப்பொழுது தேவையோ, எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு
நேரம் கட்டளைப்படி நடத்த முடியும். அதே போன்று மனம் மற்றும்
புத்தியை கட்டுப்படுத்தும் சக்தி ஆத்மாவில் ஒவ்வொரு நேரத்திலும்
வெளிப்படையாக இருக்க வேண்டும். யோகா நேரத்தில் அனுபவம் ஆகிறது,
ஆனால் காரியங்கள் செய்யும் பொழுது, விவகாரங்கள் செய்யும் பொழுது,
சம்பந்தத்தின் பொழுது அனுபவம் குறைவாக இருக்கிறது என்று
இருக்கக் கூடாது. திடீரென்று சோதனை பேப்பர் வரயிருக்கிறது.
ஏனெனில் கடைசி ரிசல்ட்டிற்கு முன் வரை இடையிடையில் சோதனை
பேப்பர் கொடுக்கப்படும்.
ஆக இந்த பிறந்தநாள் அன்று என்ன விசேஷதா செய்வீர்கள்? அமைதி
சக்தியை எவ்வளவு சேமிக்க முடியுமோ, ஒரு விநாடியில் இனிமையான
அமைதியின் அனுபவத்தில் மூழ்கி விடுங்கள். ஏனெனில் அறிவியல்
மற்றும் அமைதி, அறிவியலும் மிகத் தீவிரமாக சென்று
கொண்டிருக்கிறது. ஆக அறிவியல் மீது அமைதி சக்தியின் வெற்றியானது
மாற்றம் ஏற்படுத்தும். அமைதி சக்தியின் மூலம் தூரத்தில்
அமர்ந்திருந்தாலும் எந்த ஒரு ஆத்மாவிற்கும் சகயோகம் கொடுக்க
முடியும், சக்தி கொடுக்க முடியும். அலையும் மனதை அமைதிப்படுத்த
முடியும். பிரம்மா பாபாவைப் பார்த்தீர்கள், ஒரு ஒப்பற்ற குழந்தை
சிறிது குழப்பத்தில் அல்லது சரீர கணக்கு-வழக்கில் பாதிக்கப்
பட்டிருந்தால் அதிகாலையில் எழுந்து அந்த குழந்தைக்கு அமைதி
சக்தியை கொடுத்தார், அவரும் அனுபவம் செய்தார். எனவே கடைசியில்
இந்த அமைதி சேவையின் சகயோகம் கொடுக்க வேண்டி யிருக்கும்.
சூழ்நிலையின் அநுசாரம் இந்த மிகவும் கவனத்தில் வைத்துக்
கொள்ளுங்கள், அமைதி சக்தி அல்லது தனது சிரேஷ்ட கர்மத்தின்
சக்தியை சேமிக்கும் வங்கி இப்பொழுது மட்டுமே திறக்கப்படுகிறது.
வேறு எந்த பிறவியிலும் சேமிப்பு செய்யும் வங்கி கிடையாது.
ஒருவேளை இப்பொழுது சேமிக்கவில்லை எனில் பிறகு வங்கி இருக்காது,
எங்கு சேமிப்பு செய்வீர்கள்! எனவே சேமிப்பு சக்தியை எவ்வளவு
சேமிக்க விரும்புகிறீர்களோ அவ்வளவு சேமித்துக் கொள்ளுங்கள்.
என்ன செய்ய வேண்டுமோ இப்பொழுதே செய்து விடுங்கள், என்ன யோசிக்க
வேண்டுமோ, இப்பொழுதே யோசித்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களும்
கூறுகின்றனர். இப்பொழுது என்ன யோசிக்கிறீர்களோ, அது யோசனையாக
இருக்கும். சிறிது காலத்திற்குப் பிறகு நேரம் நெருக்கத்தில்
வரும் பொழுது அந்த யோசனை பட்சாதாபத்தில் ரூபத்தில் மாறி விடும்.
இவ்வாறு செய்தேன், இவ்வாறு செய்ய வேண்டும். இது யோசனையாக
இருக்காது, பட்சாதாபமாக மாறி விடும். ஆகையால் பாப்தாதா முன்
கூட்டியே இந்த சைகை கூறிக் கொண்டிருக்கின்றார். அமைதி சக்தி,
ஒரு விநாடியில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கட்டும், அமைதியில்
மூழ்கி விடுங்கள். முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்
என்று இருக்கக் கூடாது. சேமிக்கும் முயற்சி இப்பொழுது தான்
செய்ய முடியும்.
ஆக குழந்தைகளின் மீது பாப்தாதாவிற்கு அன்பு இருக்கிறது. ஒவ்வொரு
குழந்தையையும் பாப்தாதா கூடவே அழைத்துச் செல்ல விரும்புகின்றார்.
உறுதிமொழி - கூடவே இருப்பேன், கூடவே செல்வேன்.. என்ற உறுதிமொழி
கடைபிடிப்பதற்கு சமம் ஆக வேண்டும், சமமானவர்கள் தான் கூட
செல்வார்கள். கூறியிருந்தேன் அல்லவா - இரட்டை அயல்நாட்டினருக்கு
கை மீது கை கோர்த்து நடப்பது பிடிக்கிறது. எனவே ஸ்ரீமத் என்ற
கை மீது கை இருக்க வேண்டும், தந்தையின் ஸ்ரீமத் அது உங்களுடைய
வழி இது தான் கை மீது கை என்று கூறப்படுகிறது. இன்று பிறந்தநாள்
உற்சவம் கொண்டாட வந்திருக்கிறீர்கள் அல்லவா! பாப்தாதாவிற்கும்
குஷியிருக்கிறது என்னுடைய குழந்தைகள், என்னுடைய குழந்தைகள் சதா
உற்சாகத்துடன் இருந்து உற்சவம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்
என்ற போதை தந்தைக்கு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உற்சவம்
கொண்டாடுகிறீர்களா? அல்லது விசேஷ நாட்களில் மட்டுமா? சங்கமயுகம்
முழுவதும் உற்சவமாகும். யுகமே உற்சவமாகும். வேறு எந்த யுகமும்
சங்கமயுகம் போன்று கிடையாது. ஆக நான் சமம் ஆகியே தீர வேண்டும்
என்ற ஆர்வம்-உற்சாகம் அனைவரிடத்திலும் இருக்கிறது தானே!
இருக்கிறதா? ஆகியே தீர வேண்டும். அல்லது பார்க்கலாம், ஆகலாம்,
செய்யலாம் என்று லாம் லாம் சொல்லவில்லை தானே? ஆகியே தீர
வேண்டும் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். ஆகியே தீர
வேண்டும், தியாகம் செய்ய வேண்டியிருக்கும், தபஸ்யா செய்ய
வேண்டியிருக்கும். எதையும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்,
தயாரா? அனைத்தையும் விட உயர்ந்த தியாகம் எது? தியாகம் செய்வதில்
ஒரு வார்த்தை தான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. தியாகம்,
தபஸ்யா, வைராக்கியம், எல்லையற்ற வைராக்கியம், இதில் ஒரே ஒரு
வார்த்தை தான் தடையாக இருக்கிறது, அறிவீர்கள் தானே! எந்த ஒரு
வார்த்தை என்பதை அறிவீர்கள் தானே? நான். தேக அபிமானத்திற்கான
நான். எப்பொழுதெல்லாம் எனது என்று கூறுகிறீர்களோ முதலில் என்ன
நினைவிற்கு வருகிறது? என்னுடைய பாபா. என்னுடைய பாபா வருகிறது
தானே! என்னுடைய என்று வேறு எதை வேண்டு மென்றாலும் கூறுங்கள்,
ஆனால் முதலில் என்னுடைய என்று கூறியதும் பழக்கம் ஆகிவிட்டது
பாபா வருகின்றார். அதே போன்ற நான் என்று கூறுகிறீர்கள், எவ்வாறு
என்னுடைய பாபாவை மறப்பதில்லையோ, ஒருவரிடம் எனது என்று கூறும்
பொழுது பாபா என்ற வார்த்தை நினைவிற்கு வந்து விடுகிறது. அதே
போன்று நான் என்று கூறும் பொழுது முதலில் ஆத்மா நினைவிற்கு வர
வேண்டும். நான் யார்? ஆத்மா. நான் ஆத்மா, இதை செய்து
கொண்டிருக்கிறேன். நான் மற்றும் எனது, எல்லைக்குட்பட்டது நீங்கி
எல்லையற்றதாக ஆகிவிட வேண்டும். முடியுமா? முடியுமா? தலை
அசையுங்கள். பழக்கம் கொண்டு வாருங்கள், நான் என்று கூறியதும்
உடனடியாக ஆத்மா என்று வர வேண்டும். எப்பொழுது நான் என்ற
அகங்காரம் வருகிறதோ அப்பொழுது ஒரு வார்த்தை நினைவிற்கு வர
வேண்டும் - செய்விப்பவர் யார்? தந்தை செய்விப்பவர் செய்வித்துக்
கொண்டிருக்கின்றார். காரியம் செய்கின்ற பொழுது செய்விப்பவர்
என்ற வார்த்தை சதா நினைவில் இருக்க வேண்டும். நான் என்ற
அகங்காரம் வரக் கூடாது. எனது கருத்து, எனது கடமை, கடமைக்கான
போதையும் அதிகமாக இருக்கிறது. எனது கடமை ஆனால் கொடுக்கக் கூடிய
வள்ளல் யார்? இந்த கடமையும் பிரபுவின் கொடுப்பினையாகும்.
பிரபுவின் கொடுப்பினையை எனது என்று நினைப்பது, யோசிப்பது
நன்றாக இருக்கிறதா?
பாப்தாதா ஒவ்வொரு இடத்திலும் இப்பொழுது ரிசல்ட்
விரும்புகின்றார். இந்த ஒரு மாதம் இயற்கையான குணமாக ஆக்கிக்
கொள்ளுங்கள். ஏனெனில் இயற்கையான குணம் மிக விரைவாக மாறி விடாது.
எனவே பாப்தாதா கூறியதை இயற்கையான குணமாக ஆக்கிக் கொள்ளுங்கள் -
சதா உங்களது முகத்தின் மூலம் தந்தையின் குணம் தென்பட வேண்டும்,
நடத்தையின் மூலம் தந்தையின் ஸ்ரீமத் தென்பட வேண்டும். சதா
புன்முறுவலான முகம் இருக்க வேண்டும். சதா திருப்தியாக இருந்து
திருப்திப்படுத்தும் நடத்தை இருக்க வேண்டும். ஒவ்வொரு
காரியத்தில், காரியம் மற்றும் யோகா சமநிலையில் இருக்க வேண்டும்.
சில குழந்தைகள் பாப்தாதாவிடம் மிக நல்ல நல்ல விசயங்களை
கூறுகின்றனர், என்ன கூறுகிறார்கள் என்று சொல்லட்டுமா? பாபா, இது
என்னுடைய குணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! வேறு
எதுவுமில்லை, எனது குணமே இப்படித் தான்! இப்பொழுது பாப்தாதா
என்ன கூறுவார்? எனது குணமா? எனது வார்த்தை இவ்வாறு இருக்கிறது,
சிலர் இவ்வாறு கூறுகின்றனர். கோபப்படவில்லை, எனது வார்த்தை
சிறிது கடுமையாக இருக்கிறது, சிறிது வேகமாக பேசி விட்டேன்,
கோபப்படவில்லை, வேகமாக பேசினேன் என்று சிலர் கூறுகின்றனர்.
பாருங்கள், எவ்வளவு இனிமையிலும் இனிமையான வார்த்தைகள்! பாப்தாதா
கூறுகின்றார் - எதை நீங்கள் எனது குணம் என்று நினைக்கிறீர்களோ,
அதை எனது என்று கூறுவது தவறாகும். எனது இந்த குணம் இராவனுடைய
குணமா? அல்லது உங்களுடைய குணமா? உங்களுடைய குணம் அநாதி காலம்,
ஆதி காலம், பூஜ்ய காலத்திற்கான ஒரிஜினல் குணமாகும். இராவணனின்
பொருளை எனது எனது என்று கூறுகிறீர்கள் அல்லவா! ஆகையால் செல்வது
கிடையாது. மாற்றான் பொருளை தன்னுடையதாக ஆக்கி
வைத்திருக்கிறீர்கள் அல்லவா! ஒருவர் மாற்றான் பொருளை தன்னிடம்
பத்திரப்படுத்தி வைத்தால், மறைத்து வைத்தால், நல்லவர் என்று
ஏற்றுக் கொள்வார்களா? எனவே ராவணனின் குணம், மாற்றான் குணத்தை
எனது என்று ஏன் கூறுகிறீர்கள்? என்னுடைய குற்றமில்லை, எனது
குணம் என்று மிக போதையுடன் கூறுகிறீர்கள். பாப்தாதாவின் மனதை
கவருவதற்கு முயற்சி செய்கிறீர்கள். இப்பொழுது இதற்கு முடிவு
விழா கொண்டாடுவீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? மனதார
கூறுங்கள், உள்ளப்பூர்வமாக கூறுங்கள், எங்கு மனம் இருக்குமோ,
அங்கு அனைத்தும் நடந்து விடும். இது என்னுடைய குணமல்ல என்று
மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். இது மற்றவரின் குணம், அதை நான்
வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் மறுபிறவி எடுத்து விட்டீர்கள்
அல்லவா! உங்களுடையது பிராமணக் குணமா? அல்லது பழைய குணமா? ஆக
பாப்தாதா என்ன விரும்புகின்றார் என்பதை புரிந்து கொண்டீர்களா?
நன்றாக கொண்டாடுங்கள், நடனம் ஆடுங்கள், விளையாடுங்கள், ஆனால்
ஆனால் என்பதும் இருக்கிறது. அனைத்தும் செய்தாலும் சமம் ஆகியே
தீர வேண்டும். சமம் ஆகாமல் கூடவே எப்படி செல்ல முடியும்!
சுங்கத் துறையில், தர்மராஜபுரியில் நிற்க வேண்டியிருக்கும்,
கூடவே செல்லமாட்டீர்கள். எனவே தாதிகள் கூறுங்கள், ஒரு மாத காலம்
ரிசல்ட் பார்க்கலாமா? பார்க்கலாமா? கூறுங்கள், பார்க்கலாமா? ஒரு
மாதம் கவனம் செலுத்துவீர்களா? ஒரு மாத காலம் கவனம் செலுத்தினால்
இயற்கையானதாக ஆகிவிடும். மாதத்தில் ஒரு நாள் கூட விட்டு விடக்
கூடாது. தாதிகள் பொறுப்பு எடுத்துக் கொள்கிறீர்கள், நல்லது.
அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் மீது சுப பாவனை, சுப
விருப்பம் என்ற கை கொடுங்கள். ஒருவர் கீழே தவறி விழுந்து
விட்டால் அவரை அன்பாக கை கொடுத்து தூக்குகின்றோம். ஆக சுப பாவனை
மற்றும் சுப விருப்பம் என்ற கை, ஒருவருக்கொருவர் சகயோம் செய்து
முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். சரி தானே? நீங்கள் சோதனை
குறைவாக செய்கிறீர்கள், காரியம் செய்த பின்பு சோதனை
செய்கிறீர்கள், ஆகிவிட்டது அல்லவா! முதலில் யோசியுங்கள், பிறகு
செய்யுங்கள். முதலில் செய்யுங்கள் பிறகு யோசியுங்கள் என்பதல்ல.
செய்தே ஆக வேண்டும்.
நல்லது, இப்பொழுது பாப்தாதா எந்த டிரில் செய்விக்க
விரும்புகின்றார்? ஒரு விநாடியில் அமைதி சக்தியின் சொரூபமாக
ஆகிவிடுங்கள். ஏகாக்ர புத்தி, ஏகாக்ர மனம். முழு நாளில் ஒரு
விநாடி இடையிடையில் ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். அமைதிக்கான
சங்கல்பம் செய்தீர்கள், சொரூபம் ஆகிவிட்டீர்கள். இதற்கு
நேரத்திற்கான அவசியம் கிடையாது. ஒரு விநாடிக்கான பயிற்சி
செய்யுங்கள், அமைதி, நல்லது.
நாலாப்புறங்களிலும் பிறந்தநாள் விழா கொண்டாடக் கூடிய
பாக்கியவான் ஆத்மாக்களுக்கு, சதா உற்சாகத்தில் இருந்து
சங்கமயுகத்தின் உற்சவம் கொண்டாடக் கூடிய, இவ்வாறு அனைத்து
ஆர்வம் உற்சாகம் என்ற இறக்கையினால் பறக்கும் குழந்தைகளுக்கு,
சதா மனம் மற்றும் புத்தியை ஏகாக்ரதாவின் அனுபவி ஆகக் கூடிய
மகாவீர் குழந்தை களுக்கு, சதா சமம் ஆகக் கூடிய ஆர்வத்தை சாகார
ரூபத்தில் கொண்டு வரக் கூடிய தந்தையை பின்பற்றும்
குழந்தைகளுக்கு, சதா ஒருவருக்கொருவர் அன்பு, சகயோகம், தைரியம்
கொடுக்கக் கூடிய தந்தையின் உதவி என்ற வரதானம் கொடுக்கக் கூடிய
வரதானி குழந்தைகளுக்கு, மகாதானி குழந்தைகளுக்கு பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் பல கோடி கோடி, கோடி மடங்கு
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
ஆசீர்வாதம்:
சதா ஏகாந்தம் மற்றும் சிந்தனையில் பிசியாக இருக்கக் கூடிய
எல்லையற்ற வானபிரஸ்தி ஆகுக.
நிகழ்கால நேரத்தின் படி நீங்கள் அனைவரும் வானபிரஸ்த நிலையின்
நெருக்கத்தில் இருக்கிறீர்கள். வானபிரஸ்திகள் ஒருபோதும் பொம்மை
விளையாட்டு விளையாடமாட்டார்கள். அவர்கள் சதா ஏகாந்தம் மற்றும்
சிந்தனையில் இருப்பர். எல்லையற்ற வானபிரஸ்திகளாகிய நீங்கள்
அனைவரும் சதா ஒருவரின் நினைவில் மூழ்கி அதாவது நிரந்தரமாக
ஏகாந்தத்தில் இருங்கள், கூடவே ஒருவரைப் பற்றிய சிந்தனை செய்து
நினைவு சொரூபமாக ஆகுங்கள். அனைத்து குழந்தைகளின் மீதும்
பாப்தாதாவிற்கு இது தான் சுப ஆசையாகும் - இப்பொழுது தந்தை
மற்றும் குழந்தை சமம் ஆகிவிட வேண்டும். சதா நினைவில் மூழ்கி
இருக்க வேண்டும். சமம் ஆவது தான் சமநிலையாகும் - இதுவே
வானபிரஸ்த ஸ்திதியின் அடையாளமாகும்.
சுலோகன்:
நீங்கள் தைரியம் என்ற ஒரு அடி எடுத்து வைத்தால் தந்தை உதவி
என்ற ஆயிரம் அடி எடுத்து வைப்பார்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
தந்தைக்காக அனைவரின் வாயிலிருந்தும் ஒரே ஒரு ஓசை தான்
வெளிப்படுகிறது - என்னுடைய பாபா. இதே போன்று ஒவ்வொரு சிரேஷ்ட
ஆத்மாக்களாகிய உங்களைப் பற்றி இந்த பாவனை இருக்க வேண்டும்,
உணர்வு இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் என்னுடையவர் என்ற
உணர்வு வர வேண்டும். இவர் என்னுடைய சுப சிந்தனையாளர், சகயோகி,
துணையாக இருப்பவர் என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதைத் தான் பாப்சமான், கர்மாதீத் நிலையின் சிம்மாசனதாரி என்று
கூறப்படுகிறது.
குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிறுக் கிழமையாகும்.
அனைத்து இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகள் மாலை 6.30 மணி முதல்
7.30 மணி வரை, யோக பயிற்சிக்கான விசே‘ நேரத்தில் தனது லைட்,
மைட் சொரூபத்தில் நிலைத்திருந்து, பிருகுட்டியின் நடுவில்
பாப்தாதாவை வரவேற்று, இணைந்த சொரூபத்தின் அனுபவம் செய்ய
வேண்டும் மற்றும் நாலாப்புறங்களிலும் லைட், மைட் கிரணங்களை
பறப்பும் சேவை செய்ய வேண்டும்.