22-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு யார்
கற்பிக்க வந்துள்ளார் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்கள்
என்றால் மகிழ்ச்சியில் புல்லரித்துப் போய் விடுவீர்கள்.
உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை கற்பிக்கிறார். இப்பேர்ப்பட்ட
கல்வியை ஒரு பொழுதும் விட்டு விடக்கூடாது.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு
இப்பொழுது எந்த ஒரு நிச்சயம் ஏற்பட்டுள்ளது? நிச்சய புத்தியின்
அடையாளம் என்னவாக இருக்கும்?
பதில்:
நாம் இப்பொழுது எப்பேர்ப்பட்ட
கல்வியை கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால், அதன் மூலம் இரட்டை
கிரீடம் அணிந்த ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆகிடுவோம் என்ற
நிச்சயம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சுயம் பகவான் கற்பித்து
நம்மை உலகத்திற்கு அதிபதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்பொழுது நாம் அவருக்கு குழந்தைகளாக ஆகி உள்ளோம். எனவே இந்த
கல்வியில் ஈடுபட்டு விட வேண்டும். எப்படி சிறிய குழந்தைகள்
தங்களது தாய் தந்தையைத் தவிர வேறு யாரிடமும் போக மாட்டார்கள்.
இது போல எல்லையில்லாத தந்தை கிடைத்துள்ளார். எனவே வேறு யார்
மீதும் விருப்பம் வரக் கூடாது. ஒருவரின் நினைவு மட்டுமே இருக்க
வேண்டும்.
பாடல்:
யார் இன்று அதிகாலையில் வந்தார்
.. .. .. ..
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள் - யார்
வந்தார் மற்றும் யார் கற்பிக்கிறார்? இது புரிந்து கொள்ள
வேண்டிய விஷயம் ஆகும். ஒரு சிலர் மிகவுமே புத்திசாலியாக
இருப்பார்கள். ஒரு சிலர் குறைவான அறிவுடையவர்களாக இருப்பார்கள்.
யார் நிறைய கல்வி அறிவு உடையவர்களாக இருப்பார்களோ அவர்களை
மிகவும் அறிவாளி என்று கூறுவார்கள். சாஸ்திரங்கள் ஆகியவற்றை
எழுதப் படிக்க அறிந்தவர்களுக்குக் கூட மதிப்பு இருக்கிறது.
குறைவாகப் படித்திருப்பவர்களுக்கு குறைவான மதிப்பு கிடைக்கிறது.
இப்பொழுது பாடலின் வார்த்தைகள் கேட்டீர்கள் - யார் வந்திருப்பது
கற்பிப்பதற்காக? ஆசிரியர் வருகிறார் அல்லவா? பள்ளிக் கூடத்தில்
கற்பவர்கள் ஆசிரியர் வந்துள்ளார் என்பதை அறிந்திருப்பார்கள்.
இங்கு யார் வந்துள்ளார்? முற்றிலும் புல்லரித்து போய் விட
வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை மீண்டும் கற்பிக்க
வந்துள்ளார். புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும் அல்லவா?
அதிர்ஷ்டத்தின் விஷயம் கூட ஆகும். கற்பிப்பவர் யார்? பகவான்!
அவர் வந்து கற்பிக்கிறார். ஒருவர் எவ்வளவு தான் பெரியதிலும்
பெரிய கல்வியைக் கற்கிறார் என்றாலும் கூட சட்டென்று அந்த
கல்வியை விட்டு விட்டு வந்து பகவானிடம் கற்க வேண்டும் என்று
விவேகம் (அறிவு) கூறுகிறது. ஒரு நொடியில் எல்லாவற்றையும்
விடுத்து தந்தையிடம் படிக்க வர வேண்டும்.
இப்பொழுது நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தினர் என்பதை பாபா
புரிய வைத்துள்ளார். உத்தமத்திலும் உத்தம புருஷர்கள் இந்த
லட்சுமி நாராயணர் ஆவார்கள். எந்த கல்வி மூலமாக இவர்கள் இந்த
பதவியை அடைந்தார்கள் என்பது உலகத்தில் யாருக்குமே தெரியாது.
நீங்கள் இந்த பதவியை அடைவதற்காகப் படிக்கிறீர்கள். யார்
கற்பிக்கிறார்? பகவான் ! எனவே மற்ற எல்லா கல்விகளையும் விடுத்து
இந்த படிப்பில் ஈடுபட்டு விட வேண்டும். ஏனெனில் தந்தை வருவதே
கல்பத்திற்கு ஒருமுறை நான் ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப்
பிறகும் நேரிடையாக கற்பிப்பதற்காக வருகிறேன் என்று தந்தை
கூறுகிறார். அதிசயம் ஆகும் அல்லவா? பகவான் இந்த பதவியை
அடையுமாறு செய்விப்பதற்காக நமக்கு கற்கிறார் என்று கூறவும்
செய்கிறார்கள். பிறகும் படிப்பது இல்லை. எனவே இவர் புத்திசாலி
இல்லை என்று தந்தை கூறுவார் அல்லவா? தந்தையின் படிப்பின் மீது
முழு கவனம் வைப்பதில்லை. தந்தையை மறந்து விடுகிறார்கள். பாபா
நாம் மறந்து விடுகிறோம் என்று நீங்கள் கூறு கிறீர்கள்.
ஆசிரியரையும் மறந்து விடுகிறார்கள். இது மாயையின் புயல் ஆகும்.
ஆனால் கல்வியை கற்க வேண்டும் அல்லவா? பகவான் கற்பிக் கிறார்
என்றால், அந்த படிப்பில் முற்றிலுமாக ஈடுபட்டு விட வேண்டும்
என்று விவேகம் (அறிவு) கூறுகிறது. சிறிய குழந்தைகள் தான்
படிக்க வேண்டி உள்ளது. ஆத்மாவோ எல்லோருக்கும் உள்ளது. மற்றபடி
சரீரம் சிறியது பெரியது ஆகிறது. நான் உங்களுடைய சிறிய குழந்தை
ஆகி உள்ளேன் என்று ஆத்மா கூறுகிறது. நல்லது என்னுடையவராக ஆகி
இருக்கிறீர்கள் என்றால் இப்பொழுது படியுங்கள். .பால் குடிக்கும்
குழந்தை ஒன்றும் அல்லவே. படிப்பு தான் முதல். இதில் மிகவும்
கவனம் (அட்டென்ஷன்) வைக்க வேண்டும். மாணவர்கள் பிறகு இங்கு (சுப்ரீம்
டீச்சர்) உயர்ந்த ஆசிரியரிடம் வருகிறார்கள். அந்த கற்பிக்கும்
ஆசிரியர்கள் கூட நியமிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இருந்தாலும் சுப்ரீம் டீச்சரோ இருக்கிறார் அல்லவா? 7 நாள் பட்டி
(பாடமுறை) கூட பாடப்பட்டுள்ளது. தூய்மையாக இருங்கள் மற்றும்
என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். தெய்வீக
குணங்களை தாரணை செய்தீர்கள் என்றால், நீங்கள் இது போல ஆகி
விடுவீர்கள். எல்லையில்லாத தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
சிறிய குழந்தைகளை தாய் தந்தையைத் தவிர வேறு யாராவது
தூக்கினார்கள் என்றால் அவர்களிடம் போக மாட்டார்கள். நீங்கள்
கூட எல்லையில்லாத தந்தையினுடையவர் ஆகி உள்ளீர்கள். எனவே வேறு
யாரையும் பார்ப்பதற்குக் கூட விருப்பமிருக்காது,
யாராயிருந்தாலும் சரி நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை
யினுடையவர் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் நம்மை
இரட்டை கிரீடமணிந்த ராஜாக் களுக்கெல்லாம் ராஜாவாக ஆக்குகிறார்.
ஒளி கிரீடம் மன்மனாபவ மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம்
மத்யாஜீ பவ. நாம் இந்த படிப்பின் மூலம் உலகிற்கு அதிபதி ஆகிறோம்
என்ற நிச்சயம் ஆகி விடுகிறது. 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு
சரித்திரம் மீண்டும் நடைபெறு கிறது அல்லவா? உங்களுக்கு ராஜ்யம்
கிடைக்கிறது. மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்தி தாமமாகிய
தங்களுடைய வீட்டிற்குச் சென்று விடுகிறார்கள். உண்மையில்
ஆத்மாக்களாகிய நாம் தந்தையுடன் கூட நமது வீட்டில் இருப்போம்
என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரிய வந்துள்ளது.
தந்தையினுடையவராக ஆகி விடும் பொழுது நீங்கள் சொர்க்கத்தின்
அதிபதி ஆகிறீர்கள். பிறகு தந்தையை மறந்து அனாதை ஆகி
விடுகிறீர்கள். பாரதம் இச்சமயம் அநாதை யாக உள்ளது. யாருக்கு
தாய் தந்தை இல்லையோ அவர்களுக்கு அநாதை என்று கூறப்படுகிறது. அடி
வாங்கிக் கொண்டே இருப்பார்கள். உங்களுக்கோ இப்பொழுது தந்தை
கிடைத்துள்ளார். நீங்கள் முழு சிருஷ்டி சக்கரத்தை அறிந்துள்ளீர்
கள். எனவே குஷியில் பூரித்துப் போக வேண்டும். நாம்
எல்லையில்லாத தந்தையின் குழந்தைகள் ஆவோம். பரமபிதா பரமாத்மா
பிரஜாபிதா பிரம்மாவின் மூலமாக பிராமணர்களின் புதிய படைப்பை
படைக்கிறார். இதுவோ மிகவுமே சுலபமாக புரிந்து கொள்ள வேண்டிய
விஷயம் ஆகும். உங்களுடைய படங்கள் கூட உள்ளது. விராட ரூபத்தின்
படம் கூட அமைக்கப்பட்டுள்ளது. 84 பிறவிகளின் கதையைக்
காண்பித்துள்ளார்கள். நாமே தான் தேவதை, பிறகு க்ஷத்திரியர்,
வைசியர் மற்றும் சூத்திரர் ஆகிறோம். இதை எந்த ஒரு மனிதரும்
அறியாமல் உள்ளார்கள். ஏனெனில் பிராமணர்கள் மற்றும்
பிராமணிகளுக்கு படிப்பிக்கும் தந்தை - இருவரின் பெயர் அடையாளமே
இல்லாமல் செய்து விட்டார்கள். ஆங்கிலத்தில் கூட நீங்கள் நல்ல
முறையில் புரிய வைக்கலாம். யார் ஆங்கிலம் அறிந்திருக்கிறார்களோ
அவர்கள் மொழி பெயர்த்து பின் புரிய வைக்க வேண்டும். தந்தை ஞானம்
நிறைந்தவர் (ஃபாதர் நாலேஜ்புல்) ஆவார். அவருக்குத் தான்
சிருஷ்டியின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது பற்றிய ஞானம்
உள்ளது. இது ஆன்மிகக் கல்வியாகும். யோகத்திற்குக் கூட தந்தையின்
நினைவு என்று கூறப்படுகிறது. அதற்கு ஆங்கிலத்தில் கம்யூனியன்
என்று கூறப்படுகிறது. தந்தையிடம் கம்யூனியன், ஆசிரியரிடம்
கம்யூனியன், குருவிடம் கம்யூனியன். இது காட்ஃபாதரிடம்
கம்யூனியன். சுயம் தந்தை கூறுகிறார் - என்னை நினைவு செய்யுங்கள்.
மேலும் எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். மனிதர்கள்
குரு ஆகியோரிடம் செல்கிறார்கள். சாஸ்திரங்கள் படிக்கிறார்கள்.
லட்சியம் நோக்கம் எதுவும் இல்லை. சத்கதியோ கிடைப்பது இல்லை.
நான் வந்திருப்பதே அனை வரையும் திரும்ப கூட்டிச் செல்ல என்று
தந்தை கூறுகிறார். இப்பொழுது நீங்கள் தந்தையுடன் புத்தியின்
யோகம் வைக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் அங்கு போய் சேர்ந்து
விடுவீர்கள். நல்ல முறையில் நினைவு செய்வதால் உலகின் அதிபதி
ஆகிடுவீர்கள். இந்த லட்சுமி நாராயணர் (பேரடைஸ்) சொர்க்கத்தின்
அதிபதியாக இருந்தார்கள் அல்லவா? இதை யார் புரிய வைப்பவர் ஆவார்?
தந்தைக்கு நாலேஜ்ஃபுல் என்று கூறப்படுகிறது. மனிதர்கள் பிறகு
அந்தர் யாமி (மனதில் இருப்பதை அறிந்தவர்) என்று கூறி
விடுகிறார்கள். உண்மையில் அந்தர்யாமி என்ற வார்த்தை கிடையாது.
(அந்தர்) உள்ளே இருக்கக் கூடியது, வசிக்க கூடியதோ ஆத்மா ஆகும்.
ஆத்மா செய்யக் கூடிய காரியத்தையோ அனைவரும் அறிந்துள்ளார்கள்.
அனைத்து மனிதர்களும் அந்தர்யாமி ஆவார்கள். ஆத்மா தான் கற்கிறது.
தந்தை குழந்தைகளாகிய உங்களை (ஆத்ம அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக
ஆக்குகிறார். ஆத்மாவாகிய நீங்கள் மூலவதனத்தில் இருப்பவர்
ஆவீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் எவ்வளவு சிறியதாக இருக் கிறீர்கள்.
அநேக முறை நீங்கள் பாகத்தை ஏற்று நடிக்க வந்துள்ளீர்கள். நான்
பிந்து (புள்ளி) ஆவேன் என்று தந்தை கூறுகிறார். எனக்கு பூஜையோ
செய்ய முடியாது. ஏன் செய்வீர்கள்? அவசியமே இல்லை. நான்
ஆத்மாக்களாகிய உங்களுக்கு கற்பிக்க வருகிறேன். உங்களுக்குத்
தான் ராஜ்யத்தை அளிக்கிறேன். பிறகு இராவண ராஜ்யத்தில் சென்று
விடும் பொழுது என்னையே மறந்து விடுகிறீர்கள். முதன் முதலில்
ஆத்மா தனது பாகத்தை நடிக்க வருகிறார். மனிதர்கள் 84 லட்ச
பிறவிகள் எடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அதிக
பட்சமே 84 பிறவிகள் தான் என்று தந்தை கூறுகிறார். வெளி
நாட்டிற்குச் சென்று இந்த விஷயங்களைக் கூறினீர்கள் என்றால்
இந்த ஞானத்தையோ எங்களுக்கு இங்கு வந்து கற்பியுங்கள் என்று
உங்களிடம் கூறுவார்கள். உங்களுக்கு அங்கு 1000 ரூபாய்
கிடைக்கிறது நாங்கள் உங்களுக்கு 10-20 ஆயிரம் ரூபாய் கொடுப்போம்
என்பார்கள். எங்களுக்கு ஞானம் கூறுங்கள். காட்ஃபாதர்
ஆத்மாக்களாகிய எங்களுக்குப் படிப்பிக்கிறார். ஆத்மா தான்
நீதிபதி ஆகியோராக ஆகிறார். மற்ற மனிதர்களோ எல்லாருமே தேக
அபிமானி (தேக உணர்வுடையவர்) ஆகிறார்கள். யாருக்குமே ஞானம் இல்லை.
பெரிய பெரிய தத்துவ ஞானிகள் ஆகியோர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.
ஆனால் இந்த ஞானம் யாருக்குமே இல்லை. காட்ஃபாதர் நிராகார மானவர்
கற்பிக்க வருகிறார். நாம் அவரிடம் படிக்கிறோம். இந்த
விஷயங்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டு விடுவார்கள். இந்த
விஷயங்களையோ ஒரு பொழுதும் கேள்விப்படவோ படிக்கவோ இல்லை. ஒரு
தந்தையைத் தான் லிபரேட்டர், கைடு என்று கூறுகிறார்கள். அவரே
லிபரேட்டர் என்னும் பொழுது பிறகு கிறிஸ்துவை ஏன் நினைவு
செய்கிறீர்கள்? இந்த விஷயங் களை நல்ல முறையில் புரிய
வைத்தீர்கள் என்றால் ஆச்சரியப்பட்டு போய் விடுவார்கள். இவற்றை
நாம் கேட்டு தான் பார்ப்போமே என்பார்கள். பேரடைஸ்-ன் (சொர்க்கம்)
ஸ்தாபனை ஆகி கொண்டிருக்கிறது. அதற்காக இந்த மகாபாரத போர் கூட
உள்ளது. நான் உங்களை ராஜாக்களுக் கெல்லாம் ராஜா, இரட்டை கிரீடம்
அணிந்தவனாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். தூய்மை, சுகம்,
சாந்தி எல்லாமே இருந்தது. சிந்தனை செய்யுங்கள் எவ்வளவு
வருடங்கள் ஆகி உள்ளன? கிறிஸ்துவிற்கு 3 ஆயிரம் வருடங்களுக்கு
முன்னதாக இவர்களுடைய ராஜ்யம் இருந்தது அல்லவா? இதுவோ
ஸ்பிரிச்சுவல் நாலேஜ் ஆகும். இவரோ (பிரம்மா பாபா) நேரிடையாக (டைரக்ட்)
அந்த சுப்ரீம் ஃபாதர்-ன் குழந்தை ஆவார். அவரிடமிருந்து
இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறார். உலக சரித்திரம் பூகோளம்
மீண்டும் (ரிபீட்) நடைபெறுகிறது. இது முழு ஞானம் ஆகும். நமது
ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் நிரம்பி உள்ளது. இந்த யோகத்தின்
வலிமை யால் ஆத்மா சதோபிரதானமாக ஆகி (கோல்டன் ஏஜ்) தங்க
யுகத்திற்குச் சென்று விடுவார். பின் அவருக்கு ராஜ்யம் வேண்டும்.
பழைய உலகத்தின் விநாசமும் வேண்டும். அதுவோ எதிரிலேயே
நின்றுள்ளது. பிறகு ஒரு தர்மத்தின் ராஜ்யம் ஆகும். இது பாவ
ஆத்மாக்களின் உலகம் ஆகும் அல்லவா? இப்பொழுது நீங்கள் பாவனமாக
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். கூறுங்கள் - இந்த நினைவின்
பலத்தினால் நாம் தூய்மை ஆகிறோம். பின் எல்லாமே விநாசம்
ஆகிவிடும். இயற்கை சேதங்கள் கூட வரப் போகிறது. நாங்கள் ரியலைஸ்
உணர்ந்திருக்கிறோம். மேலும் திவ்ய திருஷ்டி மூலமாகப்
பார்த்திருக்கிறோம். இவை எல்லாமே அழியப் போகிறது. தந்தை
வந்திருப்பதே தேவதை உலகத்தை ஸ்தாபிக்க. இதைக் கேட்டு ஒகோ!
இவர்கள் காட்ஃபாதர்-ன் குழந்தைகள் அல்லவா! என்பார்கள். இந்த
போர்கள் நிகழும், இயற்கை சேதங்கள் ஆகும் என்பதை குழந்தை களாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்ன நிலைமை ஏற்படும். இந்த பெரிய
பெரிய வீடுகள் ஆகியவை எல்லாமே சரிந்து விழ ஆரம்பிக்கும்.
தங்களையே அழித்துக் கொள்வதற்காக இந்த குண்டுகள் ஆகியவை 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்னாலும் தயாரித்திருந்தார்கள் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இப்பொழுது கூட குண்டுகள் தயாராக உள்ளன. யோக
பலம் என்பது என்ன பொருள் - அதன் மூலம் நீங்கள் உலகத்தின் மீது
வெற்றி அடைகிறீர்கள். மற்றவர்கள் யாராவது அறிந்திருக்கிறார்களா
என்ன? கூறுங்கள், சையன்ஸ் (விஞ்ஞானம்) உங்களையே அழிக் கிறது.
நமக்கு தந்தையுடன் யோகம் (தொடர்பு) இருந்தது என்றால், அந்த
சைலன்ஸ் பலத்தினால் நாம் உலகத்தின் மீது வெற்றி அடைந்து
சதோபிரதானமாக ஆகி விடுகிறோம். தந்தை தான் பதீத பாவனர் ஆவார்.
பாவன உலகத்தை அவசியம் ஸ்தாபனை செய்தே தீருவார். நாடகப்படி
பொருந்தி உள்ளது. குண்டுகளைத் தயாரிக்கிறார்கள் என்றால்
அப்படியே வைத்து கொண்டிருப் பார்களா என்ன? இது போன்ற
விஷயங்களைக் கூறிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அவர்கள் குஷி
அடைவார்கள். ஆத்மாவில் எப்படி பாகம் உள்ளது. இது கூட அனாதி
அமைந்த அமைக்கப் பட்ட நாடகம் ஆகும். உங்களுடைய கிறிஸ்து கூட
மறுபிறவி எடுத்து எடுத்து இப்பொழுது அவர் தமோபிரதான
நிலையிலுள்ளார். மீண்டும் தனது குறித்த நேரத்தில் வந்து (கிறிஸ்து
வந்து) உங்களுடைய தர்மத்தை நிலை நாட்டுவார். இது போன்ற (அத்தாரிட்டி)
அதிகாரத்துடன் பேசினீர்கள் என்றால் தந்தை அனைத்து
குழந்தைகளுக்கும் வந்து புரிய வைக்கிறார் என்பதை அவர்கள்
உணர்ந்து கொள்வார்கள். எனவே இந்த படிப்பில் குழந்தைகள் ஈடுபட்டு
விட வேண்டும். தந்தை, ஆசிரியர், குரு மூவருமே ஒரே ஒருவர் தான்.
அவர் எப்படி ஞானம் தருகிறார். இதையும் நீங்கள்
புரிந்துள்ளீர்கள். அனைவரையும் தூய்மையாக ஆக்கி அழைத்துச்
செல்கிறார். தேவதா பரம்பரையாக இருக்கும் பொழுது தூய்மையாக
இருந்தார்கள். தேவி தேவதையாக இருந்தார்கள். உரையாடுவதில்
மிகவுமே புத்திசாலியாக இருக்க வேண்டும். பேசும் நடையும் நன்றாக
இருக்க வேண்டும். கூறுங்கள் - மற்ற எல்லா ஆத்மாக் களும் ஸ்வீட்
ஹோம் - இனிமையான இல்லத்தில் இருப்பார்கள். தந்தை தான் அழைத்துச்
செல்கிறார். அனைவருக்கும் சத்கதி அளிக்கு வள்ளல் ஒரு தந்தை
ஆவார். அவருடைய ஜன்ம பூமி பாரதம் ஆகும். இது எவ்வளவு பெரிய (புண்ணிய)
தீர்த்தம் !
எல்லோரும் தமோபிரதானமாக ஆக வேண்டியே உள்ளது என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். எல்லோருமே புனர் ஜென்மம் எடுக்க வேண்டி
உள்ளது. யாருமே திரும்பிச் செல்ல முடியாது. ஆதாம் தான் 84
பிறவிகள் எடுக்கிறார். எனவே அவசியம் கிறிஸ்து கூட புனர் ஜென்மம்
எடுத்து எடுத்து பின்னர் போய் அதுவாக ஆகிடுவார். இது போன்ற
விஷயங்களைப் புரிய வைக்கும் பொழுது மிகவும் ஆச்சரியப்படுவார்கள்.
ஜோடியாக இருந்தீர்கள் என்றால் மிகவும் நல்ல முறையில் புரிய
வைக்க முடியும் என்று பாபா கூறுகிறார். பாரதத்தில் முதலில்
தூய்மை இருந்தது. பிறகு அபவித்திரமாக எப்படி ஆகிறார்கள்?
இதையும் கூறலாம். பூஜைக்குரியவர்கள் தான் பூசாரி ஆகி
விடுகிறார்கள். தூய்மையற்றவராக ஆகும் பொழுது பிறகு தங்களுக்கே
பூஜை செய்ய முற்பட்டு விடுகிறார்கள். ராஜாக்களின் வீடுகளில்
கூட இந்த தேவதைகளின் படங்கள் இருக்கின்றன. பவித்திரமான இரட்டை
கிரீடம் அணிந்தவர்களை கிரீடம் அணியாத தூய்மை யற்றவர்கள்
பூஜிக்கிறார்கள். அவர்கள் பூசாரி ராஜாக்கள் ஆவார்கள். அவர்களையோ
தேவி தேவதைகள் என்று கூறமாட்டார்கள். ஏனெனில் இந்த தேவதை
களுக்கு பூஜை செய்கிறார்கள். நீங்களே பூஜைக்குரியவர்கள்.
நீங்களே பூசாரி. (பதீதமாக) தூய்மையற்றவராக ஆகி விடும் பொழுது
இராவண ராஜ்யம் ஆரம்பமாகி விடுகிறது. இச்சமயத்தில் இருப்பது
இராவண ராஜ்யம் ஆகும். இது போன்று வந்து புரிய வைத்தீர்கள்
என்றால் எவ்வளவு ஆனந்தப் படுத்தி காண்பிக்கலாம். வண்டி யின் இரு
சக்கர மாக ஜோடிகள் இருந்தார்கள் என்றால் மிகவுமே அற்புதம்
செய்து காண்பிக்கலாம். ஜோடிகளாகிய நாம் தான் மீண்டும்
பூஜைக்குரியவர்களாக ஆகிறோம். நாம் தூய்மை, அமைதி, சுகம் (ப்யூரிட்டி,
பீஸ், ப்ராஸ்பரிட்டி) ஆகிய ஆஸ்தி எடுத்து கொண்டிருக்கிறோம்.
உங்களுடைய படங்கள் கூட வெளிப்பட்டு கொண்டே இருக்கின்றன. இது
ஈசுவரிய குடும்பம் ஆகும். தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். பேரன்,
பேத்திகள் ஆவார்கள். அவ்வளவு தான். வேறு எந்த சம்மந்தமும்
கிடையாது. இதற்கு புதிய படைப்பு என்று கூறப்படுகிறது. பிறகு
கொஞ்சம் பேர் தான் தேவி தேவதைகளாக ஆவார்கள். பிறகு மெல்ல மெல்ல
விரிவடைகிறது. இந்த (நாலேஜ்) ஞானம் எவ்வளவு புரிந்து கொள்ள
வேண்டியதாக உள்ளது. இந்த பாபா கூட தொழிலில் பெரிய நவாப் ஆக
இருந்தார். எந்த ஒரு விஷயத்தையும் பொருட்படுத்தாமல் இருந்தார்.
இதுவோ தந்தை கற்பிக்கிறார். விநாசம் எதிரிலேயே உள்ளது என்பதைப்
பார்த்த உடனேயே அனைத்தையும் சட்டென்று விட்டு விட்டார். நமக்கு
அரசாட்சி கிடைக்கிறது என்பதை அவசியம் புரிந்து கொண்டார். எனவே,
அற்பமான தொழிலை ஏன் செய்ய வேண்டும்?. எனவே பகவான் கற்பிக்கிறார்
என்பதை நீங்களும் புரிந்துள்ளீர்கள். இதுவோ முழுமையான வகையில்
படிக்க வேண்டும் அல்லவா? அவருடைய வழிப் படி நடக்க வேண்டும்.
தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று
தந்தை கூறுகிறார். தந்தையை நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.
வெட்கம் ஏற்படுவதில்லையா? அந்த போதை ஏறுவதில்லையா? இங்கிருந்து
மிகவும் நன்றாக (ரிஃப்ரெஷ்) புத்துணர்வு பெற்று போகிறார்கள்.
பிறகு அங்கு சோடா வாட்டர் ஆகி விடுகிறார்கள். இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் கிராமம் கிராமமாக சேவை செய்வதற்கான
புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். ஆத்மாக்களின் தந்தை
யார் என்பதை முதன் முதலில் கூறுங்கள் என்று பாபா கூறுகிறார்.
பகவானோ நிராகாரமானவர் ஆவார். அவரே இந்த பதீத உலகத்தை பாவனமாக
ஆக்குகிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சுயம் பகவான் சுப்ரீம் டீச்சர் ஆகி கற்பித்துக்
கொண்டிருக்கிறார். எனவே நல்ல முறையில் படிக்க வேண்டும்.
அவருடைய வழிப் படி நடக்க வேண்டும்.
2. சைலன்ஸ் - அமைதியின் பலத்தை சேமிக்கும் வகையில் தந்தையிடம்
அப்பேர்ப்பட்ட யோகம் (தொடர்பு) கொள்ள வேண்டும். சைலன்ஸ்
பலத்தின் மூலம் உலகத்தின் மீது வெற்றி அடைய வேண்டும். பதீதமான
(தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக (தூய்மை) ஆக வேண்டும்.
வரதானம்:
நேரம் மற்றும் சங்கல்பங்களை சேவையில் அர்ப்பணிக்கக் கூடிய
விதாதா, வரதாதா ஆகுக.
இப்பொழுது தனது சிறிய சிறிய விசயங்களுக்காக, உடலுக்காக,
மனதிற்காக, சாதனங்களுக்காக, சம்பந்தங்களுக்காக நேரம் மற்றும்
சங்கல்பம் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக இதை சேவையில் அர்ப்பணம்
செய்யுங்கள். இந்த சமர்பண விழா கொண்டாடுங்கள். சுவாசத்திற்கு
சுவாசம் சேவை யில் ஈடுபாடு இருக்க வேண்டும், சேவையில் மூழ்கி
இருக்க வேண்டும். சேவையின் ஈடுபாடு மூலம் சுய
முன்னேற்றத்திற்கான பரிசு தானாகவே கிடைத்து விடும். உலக
நன்மையில் சுய நன்மை கலந்திருக்கிறது. ஆகையால் நிரந்தரமாக
மகாதானி, விதாதா மற்றும் வரதாதா ஆகுங்கள்.
சுலோகன்:
தனது ஆசைகளை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகள் குறைந்து விடும்.
அவ்யக்த இஷாரே: சகஜயோகி ஆக வேண்டுமென்றால் பரமாத்ம அன்பின்
அனுபவியாக ஆகுங்கள்.
லௌகீக ரீதியில் ஒருவர் மற்றொருவரின் அன்பில் மூழ்கியிருந்தால்
அது அவரது முகத்தில், கண்களில், வார்த்தைகளில் அனுபவமாகும் -
இவர் அன்பில் மூழ்கியிருக்கின்றார், நாயகியாக இருக்கின்றார்.
அதே போன்று எப்பொழுது மேடைக்கு வருவீர்களோ, அப்பொழுது எந்த அளவு
தனக்குள் தந்தையின் அன்பை வெளிப்படுமோ, அந்த அன்பின் அம்பு
மற்றவர்களையும் அன்பான காயத்தை ஏற்படுத்தி விடும்.