23-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! எப்போதெல்லாம்
நேரம் கிடைக்கிறதோ அப்போது தனிமையில் அமர்ந்து விசார் சாகர்
மந்தன் (சிந்தனை) செய்யுங்கள், என்ன பாயிண்ட்டுகளைக்
கேட்கிறீர்களோ, அதை ரிவைஸ் செய்யுங்கள்.
கேள்வி:
உங்களுடைய நினைவு யாத்திரை
எப்போது முடிவுக்கு வரும்?
பதில்:
எப்போது உங்களுடைய எந்த ஒரு
கர்மேந்திரியமும் ஏமாற்றாமல் இருக்கிறதோ, கர்மாதீத் நிலை ஆகி
விடுகிறதோ, அப்போது நினைவு யாத்திரை முடிவு பெறும். இப்போது
நீங்கள் முழு புருஷார்த்தம் செய்ய வேண்டும். நம்பிக்கை
இழந்துவிடக் கூடாது. சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகி
அமர்ந்திருக் கிறீர்களா? குழந்தைகள் புரிந்து
கொண்டிருக்கிறார்கள், அரைக்கல்பமாக நாம் தேக அபிமானியாக
இருந்துள்ளோம் என்பதை. இப்போது ஆத்ம அபிமானியாக இருப்பதற்கு
முயற்சி செய்ய வேண்டி யுள்ளது. பாபா வந்து புரிய வைக்கிறார்,
தன்னை ஆத்மா என உணர்ந்து அமர்ந்திருங்கள். அப்போது தான்
தந்தையின் நினைவு வரும். இல்லையென்றால் மறந்து விடுவீர்கள்.
நினைவு செய்ய வில்லை என்றால் யாத்திரை எப்படிச் செய்ய முடியும்?
பாவங்கள் எப்படி நீங்கும்? நஷ்டம் ஏற்பட்டு விடும். இதை
அடிக்கடி நினைவு செய்யுங்கள். இது முக்கியமான விஷயம். பாபாவோ
அநேக விதமான யுக்திகளைச் சொல்கிறார். தவறு எது, சரி எது -
இதுவும் புரிய வைக்கப்பட்டுள்ளது. பாபாவோ ஞானக்கடலாக இருப்பவர்.
பக்தியையும் அவர் அறிவார். குழந்தைகள் பக்தியில் என்ன வெல்லாம்
செய்ய வேண்டியுள்ளது! புரிய வைக்கிறார், இந்த யக்ஞம் தவம்
முதலியன செய்தல், இவையெல்லாம் பக்தி மார்க்கம். தந்தைக்கு மகிமை
செய்கின்றனர் என்ற போதிலும் அது தலை கீழான மகிமை. உண்மையில்
கிருஷ்ணரின் மகிமையையும் முழுமையாக அறிந்து கொள்ள வில்லை.
ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? எப்படி
கிருஷ்ணர் வைகுண்டநாதர் எனச் சொல்லப்படுகிறார். நல்லது, பாபா
கேட்கிறார், கிருஷ்ணரைத் திரிலோகிநாத் எனச்சொல்ல முடியுமா?
திரிலோகிநாத் எனப்பாடப்படுகின்றது இல்லையா? இப்போது திரிலோகத்
தின் நாதன், அதாவது மூன்று உலகங்கள் மூலவதனம், சூட்சுமவதனம்,
ஸ்தூலவதனம், குழந்தை களாகிய உங்களுக்குப் புரிய
வைக்கப்படுகின்றது, நீங்கள் பிரம்மாண்டத்திற்கும் மாலிக்
ஆகிறீர்கள். நாம் பிரம்மாண்டத்திற்கு மாலிக் என கிருஷ்ணர்
புரிந்து கொண்டிருப்பாரா? கிடையாது. அவரோ வைகுண்டத்தில்
இருந்தார். புது உலகமாகிய சொர்க்கம் தான் வைகுண்டம் எனச்
சொல்லப் படுவது. ஆக, உண்மையில் திரிலோகிநாத் யாரும் இல்லை. பாபா
சரியான விஷயத்தைச் சொல்லிப் புரிய வைக்கிறார். மூன்று உலகங்களோ
உள்ளன. பிரம்மாண்டத்தின் மாலிக் சிவபாபாவும் இருக்கிறார்,
நீங்களும் இருக்கிறீர்கள். சூட்சுமவதனத்தின் விஷயமோ கிடையாது.
ஸ்தூல உலகத்திலும் அவர் மாலிக் கிடையாது. சொர்க்கத்திற்கோ,
நரகத்திற்கோ கூட மாலிக் அல்ல. கிருஷ்ணர் சொர்க்கத்தின் மாலிக்.
நரகத்தின் மாலிக் இராவணன். இது இராவண இராஜ்யம், அசுர இராஜ்யம்
எனச்சொல்லப்படுகிறது. மனிதர்கள் சொல்லவும் செய்கின்றனர், ஆனால்
புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா வந்து
புரிய வைக்கிறார். இராவணனுக்கு 10 தலைகள் காட்டுகின்றனர். 5
விகாரங்கள் பெண்ணினுடையவை, 5 விகாரங்கள் ஆன்களுடையவை. இப்போது
5 விகாரங்களோ அனைவரிடமும் உள்ளன. அனைவருமே இராவண இராஜ்யத்தில்
உள்ளனர். இப்போது நீங்கள் உயர்ந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்
கிறீர்கள். பாபா வந்து உயர்ந்த உலகத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கிறார். தனிமையில் அமர்வதன் மூலம் இது போன்ற விசார்
சாகர் மந்தன் நடைபெறும். அந்தப் படிப்பிலும் மாணவர்கள்
தனிமையில் புத்தகம் எடுத்துச் சென்று படிக்கின்றனர். நீங்கள்
புத்தகத்தைப் படிப்பதற்கான அவசியம் கிடையாது. ஆம், நீங்கள்
பாயின்ட்டுகளை குறித்துக்கொள்கிறீர்கள். இதைப் பிறகு மீண்டும்
சிந்தனை செய்ய வேண்டும். இவை புரிந்து கொள்ள வேண்டிய மிக ஆழமான
விஷயங்கள். பாபா சொல்கிறார் இல்லையா, இன்று உங்களுக்கு
ஆழத்திலும் மிக ஆழமான, புதுப்புது பாயின்ட்டுகளைப் புரிய
வைக்கிறேன் என்று? பாரஸ்புரியின் எஜமானர் லட்சுமி-நாராயணர்
ஆவார்கள். விஷ்ணு என்றும் கூட சொல்ல மாட்டார்கள். விஷ்ணுவையும்
கூட அவர்கள் இதே லட்சுமி-நாராயணர் தான் எனப்புரிந்து
கொள்ளவில்லை. இப்போது நீங்கள் சுருக்கமாக நோக்கம் குறிக்கோள்
என்ன என்பதைப் புரிய வைக்கிறீர்கள். பிரம்மா-சரஸ்வதி ஒன்றும்
அவர்களுக்குள் ஆண்-பெண் (யுகல்) என்பது கிடையாது. இவரோ
பிரஜாபிதா பிரம்மா இல்லையா? பிரஜாபிதா பிரம்மாவை கிரேட்-கிரேட்
கிராண்ட் ஃபாதர் எனச் சொல்கின்றனர். சிவபாபாவை பாபா என்று
மட்டுமே சொல்கின்றனர். மற்ற அனைவருமே சகோதரர்கள். இந்த அனைவரும்
பிரம்மாவின் குழந்தைகள். அனைவருக்கும் தெரியும், நாம் பகவானின்
குழந்தைகள் சகோதரர்கள் ஆகிறோம் என்பது. ஆனால் அவர் இருப்பது
நிராகாரி உலகத்தில் இப்போது நீங்கள் பிராமணர்
ஆகியிருக்கிறீர்கள். சத்யுகம் புது உலகம் எனச்
சொல்லப்படுகின்றது. இதன் பெயர் பிறகு புருஷோத்தம சங்கமயுகம் என
வைக்கப்பட்டுள்ளது. சத்யுகத்தில் இருப்பவர்கள் புருஷோத்தமர்கள்
(ஆத்மாக்களில் உத்தமமானவர்கள்). இவை மிகவும் அற்புதமான
விஷயங்கள். நீங்கள் புது உலகத்திற்காகத் தயாராகிக்
கொண்டிருக்கிறீர்கள். இந்த சங்கமயுகத்தில் தான் நீங்கள்
புருஷோத்தமர் களாக ஆகிறீர்கள். லட்சுமி-நாராயணர் ஆவோம் எனச்
சொல்லவும் செய்கின்றனர். இவர்கள் அனைவரைக் காட்டிலும் உத்தமமான
ஆத்மாக்கள். அவர்கள் தான் பிறகு தேவதா எனச் சொல்லப்
படுகிறார்கள். உத்தமத்திலும் உத்தமமான நம்பர் ஒன்
லட்சுமி-நாராயணர். பிறகு நம்பர்வார் குழந்தைகளாகிய நீங்கள்
ஆவீர்கள். சூரியவம்சி குலத்தை உத்தமம் எனச்சொல்வார்கள். நம்பர்
ஒன் அது தான் இல்லையா? மெது-மெதுவாகக் கலைகள் குறைந்து கொண்டே
போகும்.
இப்போது குழந்தைகள் நீங்கள் புது உலகத்தின் முகூர்த்தம் (நல்ல
ஆரம்பம்) செய்கிறீர்கள். எப்படி புது வீடு தயாராகிறது என்றால்
குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். முகூர்த்தம் செய்கிறார்கள்.
குழந்தைகள் நீங்களும் புது உலகத்தைப் பார்த்துக் குஷி
அடைகிறீர்கள். முகூர்த்தம் செய்கிறீர்கள். எழுதப்பட்டும் உள்ளது,
தங்க மலர்களின் மழை பொழிவதாக. குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு
குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும்! உங்களுக்கு சுகம், சாந்தி
இரண்டுமே கிடைக் கின்றன. வேறு யாருக்கும் இவ்வளவு சுகம் மற்றும்
சாந்தி கிடைப்பதில்லை. இன்னொரு மதம் வந்தால் பிரிவினை ஆகி
விடுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு அளவற்ற குஷி உள்ளது - நாம்
புருஷார்த்தம் செய்து உயர்ந்த பதவி பெறப் போகிறோம்.
அதிர்ஷ்டத்தில் எது உள்ளதோ அது கிடைக்கட்டும், பாஸாக வேண்டும்
என்று இருந்தால் பாஸாகட்டும் என்று அப்படியல்ல. ஒவ்வொரு
விஷயத்திலும் அவசியம் முயற்சி செய்தாக வேண்டும். முயற்சி
செய்யவில்லை என்றால் அதிர்ஷ்டத்தில் உள்ளபடி நடக்கட்டும் எனச்
சொல்லி விடுகின்றனர். பிறகு முயற்சி செய்வதே நின்று விடுகிறது.
பாபா சொல்கிறார், மாதாக்களாகிய உங்களை எவ்வளவு உயர்ந்தவர் களாக
ஆக்குகிறேன்! பெண்களுக்கு எல்லா இடங்களிலும் மதிப்பு உள்ளது.
வெளிநாடுகளிலும் மதிப்பு உள்ளது. இங்கே பெண் குழந்தை பிறந்து
விட்டால் தரமற்ற கட்டில் (சாதாரணமான படுக்கை) செய்து
விடுகிறார்கள். உலகம் முற்றிலும் அழுக்காக உள்ளது. இச்சமயம்
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், உலகம் என்னவாக இருந்தது,
இப்போது என்னவாக உள்ளது! மனிதர்கள் மறந்து விட்டுள்ளனர்.
வெறுமனே சாந்தி-சாந்தி என்று கேட்டுக் கொண்டே உள்ளனர்.
உலகத்தில் சாந்தியை விரும்பு கின்றனர். நீங்கள் இந்த
லட்சுமி-நாராயணரின் சித்திரத்தைக் காட்டுங்கள். இவர்களின்
இராஜ்யம் இருந்த போது தூய்மை, சுகம் மற்றும் சாந்தியும்
இருந்தது. உங்களுக்கு இந்த மாதிரி இராஜ்யம் வேண்டும் அல்லவா?
மூலவதனத்திலோ உலகத்தின் சாந்தி எனச்சொல்ல மாட்டார்கள்.
உலகத்தில் சாந்தி இங்கே தான் இருக்கும் இல்லையா? தேவதைகளின்
உலகம் முழு உலகத்திலும் இருந்தது. மூலவதனமோ ஆத்மாக்களின் உலகம்.
மனிதர்களோ இதையும் அறிந்து கொள்ளவில்லை-ஆத்மாக்களின் உலகம்
ஒன்று உள்ளது என்று. பாபா சொல்கிறார், நான் உங்களை எவ்வளவு
உயர்ந்த புருஷோத்தமர்களாக ஆக்குகிறேன்! இது புரிய வைக்க
வேண்டிய விஷய மாகும். அப்படி இல்லாமல் பகவான் வந்து விட்டார்
என்று உரத்த குரலில் திரும்பத் திரும்ப சொல்வதால் மட்டும்
யாரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.. இன்னும் அதிகமாக நிந்தனை
பரப்பவும், நிந்தனை செய்யவும் செய்வார்கள். பி.கே. தங்களின்
பாபாவை பகவான் என்று சொல் கின்றனர் என்பார்கள். இதுபோல்
சொல்வதால் சேவை நடைபெற்று விடாது. பாபா யுக்தி சொல்லிக் கொண்டே
இருக்கிறார். அறையில் 8-10 சித்திரங்களைச் சுவர் மீது மாட்டி
வையுங்கள். வெளியில் எழுதி வையுங்கள் - எல்லையற்ற
தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தி பெற வேண்டும்,
அதாவது மனிதரில் இருந்து தேவதை ஆக வேண்டும் என்றால் வாருங்கள்,
நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிறோம். அப்போது அநேகர் வரத்
தொடங்குவார்கள். தாமாகவே வந்து கொண்டிருப்பார்கள். உலகத்தில்
சாந்தியோ இருந்தது இல்லையா? இப்போது இவ்வளவு ஏராளமான தர்மங்கள்
உள்ளன. தமோபிரதான உலகத்தில் சாந்தி எப்படி இருக்க முடியும்?
உலகத்தில் சாந்தியை பகவான் தான் உருவாக்க முடியும். சிவபாபா
வருகிறார் என்றால் நிச்சமாக ஏதேனும் பரிசுப் பொருள் கொண்டு
வருவார். ஒரே ஒரு தந்தை தான் இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறார்,
மேலும் இந்த பாபா ஒரு முறை மட்டுமே வருகிறார். இவ்வளவு பெரிய
பாபா 5000 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறார். வெளிநாடு சுற்றுலா
சென்று திரும்பி வருகிறார் என்றால், குழந்தைகளுக்குப் பரிசு
கொண்டு வருகிறார்கள் இல்லையா? பெண்ணுக்குக் கணவனாக, குழந்தை
களுக்குத் தந்தையாகவோ ஆகிறார் இல்லையா? பிறகு பாட்டன்,
முப்பாட்ட னாகவும் ஆகிறார். இவரை (பிரம்மா) நீங்கள் பாபா
என்றும் சொல்கிறீர்கள். பிறகு தாத்தாவும் ஆவார். முப்பாட்டனும்
ஆவார். வம்சாவளி உள்ளது இல்லையா? ஆடம், ஆதி தேவ் என்ற பெயர்கள்
உள்ளன. ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய
உங்களுக்கு பாபா வந்து புரிய வைக்கிறார். பாபா மூலம் சிருஷ்டிச்
சக்கரத்தின் சரித்திர-பூகோளத்தை அறிந்து கொண்டு நீங்கள்
சக்கரவர்த்தி ராஜா ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபா எவ்வளவு
அன்போடும் ஆர்வத்தோடும் படிப்பு சொல்லித் தருகிறார்! எனவே அந்த
அளவுக்குப் படிக்க வேண்டும் இல்லையா? அதிகாலை நேரமோ அனை வரும்
ஓய்வாக இருப்பார்கள். காலை வகுப்பு அரை அல்லது முக்கால் மணி
நேரம் இருக்கும். முரளி கேட்டு விட்டுச் சென்று விடுங்கள்.
எங்கே இருந்தாலும் நினைவு செய்யவோ முடியும்.
ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாளாக உள்ளது. காலையில் 2-3 மணி
நேரம் அமர்ந்து கொள்ளுங்கள். பகல் நேர வருமானத்தை சரி செய்து
விடுங்கள். முழுமையாகப் பையை நிரப்பிக் கொள்ளுங்கள். நேரமோ
கிடைக்கிறது இல்லையா? மாயாவின் புயல் வருவதால் நினைவு செய்ய
முடிவதில்லை. பாபா முற்றிலும் சுலபமாகப் புரியவைக்கிறார். பக்தி
மார்க்கத்தில் எத்தனை சத்சங் கங்களுக்குச் செல்கின்றனர்!
கிருஷ்ணருடைய கோவிலுக்கு, பிறகு ஸ்ரீநாத் கோவிலுக்கு, பிறகு
வேறு எந்தெந்த கோவில்களுக்கோ செல்வார்கள். யாத்திரையிலும் கூட
எவ்வளவு கலப்பட (பலவிதமான) நினைவுள்ளவர்களாக ஆகின்றனர்! அவ்வளவு
கஷ்டத்தையும் அடைகின்றனர், எந்த ஒரு நன்மையும் கிடையாது.
டிராமாவில் இதுவும் விதிக்கப் பட்டுள்ளது. பிறகும் இது நடக்கும்.
ஆத்மாவாகிய உங்களுக்குள் பார்ட் நிரம்பியுள்ளது.
சத்யுக-திரேதாவில் கல்பத்திற்கு முன் என்ன பாôட் நடித்தீர்களோ,
அதையே இப்போதும் நடிப்பீர்கள். மேலோட்டமான புத்தி உள்ளவர்கள்
இதையும் கூடப் புரிந்து கொள்ளவில்லை. யார் நுட்பமான புத்தி
உள்ளவர்களோ, அவர்கள் தான் நல்லபடியாகப் புரிந்து கொண்டு
மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியும். அவர்களுக்கு
உள்ளுக்குள் இந்த உணர்வு வருகின்றது, அதாவது இது முதலும்
முடிவும் இல்லாமல் உருவாக்கப் பட்டுள்ள ஒரு நாடகம். இது
எல்லையற்ற நாடகம் என்பதை உலகத்தில் யாருமே புரிந்து கொள்ளவில்லை.
இதைப் புரிந்து கொள்வதிலும் நேரம் பிடிக்கின்றது. ஒவ்வொரு
விஷயமும் விளக்கமாகப் புரிய வைத்துப் பிறகு சொல்லப் படுகின்றது-
முக்கியமானது நினைவு யாத்திரை!. ஒரு விநாடியில் ஜீவன்முக்தி
என்பதும் பாடப்பட்டுள்ளது. மேலும் இதுவும் பாடல்
உள்ளது-ஞானக்கடல் என்று. கடல் முழுவதையும் மையாக்கி, காட்டை
யெல்லாம் எழுதுகோலாக்கி, பூமியைக் காகிதமாக்கி..........
அப்படியும் அதற்கு முடிவிருக்காது. ஆரம்பத்திலிருந்து நீங்கள்
எவ்வளவு எழுதி வந்திருக்கிறீர்கள்! நீங்கள் ஒன்றும் கஷ்டப்படக்
கூடாது. முக்கியமானது அல்ஃப்-தந்தை. தந்தையை நினைவு செய்ய
வேண்டும். இங்கேயும் நீங்கள் வருகிறீர்கள், சிவபாபாவிடம்.
சிவபாபா இவருக்குள் (பிரம்மா) பிரவேசமாகி உங்களுக்கு எவ்வளவு
அன்போடு படிப்பு சொல்லித் தருகிறார்! இதில் மிகையானது ஒன்றும்
கிடையாது. பாபா சொல்கிறார், நான் பழைய சரீரத்தில் வருகிறேன்.
எப்படி சாதாரண ரீதியில் சிவபாபா வந்து படிப்பு சொல்லித்
தருகிறார்! எந்த ஓர் அகங்காரமும் கிடையாது. பாபா சொல்கிறார்,
நீங்கள் என்னிடம் அழைக்கவும் செய்கிறீர்கள், பாபா, பதீத்
உலகத்தில் பதீத் சரீரத்தில் வாருங்கள், வந்து எங்களுக்குக்
கல்வி கற்றுக் கொடுங்கள். சத்யுகத்தில் நீங்கள் இவ்வாறு
அழைப்பதில்லை - வந்து வைர-வைடூரியங்களாலான மாளிகை யில்
அமருங்கள், உணவு முதலியவற்றைப் பெறுங்கள் என்று. சிவபாபா உணவு
உட்கொள்வது கிடையாது. முன்பு அழைத்திருந்தீர்கள், வந்து உணவு
சாப்பிடுங்கள் என்று. 36 வகையான உணவுகள் படைத்தனர். இது
மறுபடியும் நடைபெறும். இதையும் சரித்திரம் என்று தான் சொல்ல
வேண்டும். கிருஷ்ணரின் சரித்திரம் என்ன? அவரோ சத்யுகத்தின்
இளவரசர். அவரை பதீத-பாவனர் எனச் சொல்லப்படுவதில்லை.
சத்யுகத்தில் அவர்கள் உலகத்தின் மாலிக்காக எப்படி ஆனார்கள்?
இதையும் இப்போது தான் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களோ,
முற்றிலும் காரிருளில் (பயங்கரமான) உள்ளனர். இப்போது நீங்கள்
ஒளிப் பிரகாசத்தில் இருக்கிறீர்கள். பாபா வந்து இரவைப் பகலாக்கி
விடுகிறார். அரைக்கல்பம் நீங்கள் இராஜ்யம் செய்கிறீர்கள்
என்றால், எவ்வளவு குஷி இருக்க வேண்டும்?
எப்போது உங்களுடைய கர்மேந்திரியங்களில் எதுவும் ஏமாற்றாமல்
இருக்கிறதோ, அப்போது உங்களுடைய நினைவு யாத்திரை முடிவுக்கு
வரும். கர்மாதீத் அவஸ்தா ஆகி விட்டால் அப்போது நினைவு யாத்திரை
முடிவடையும். இப்போது இன்னும் முடிவடையவில்லை. இப்போது நீங்கள்
முழுமையான முயற்சி செய்ய வேண்டும். நம்பிக்கை இழந்தவர்களாக ஆகக்
கூடாது. சேவை மற்றும் சேவை. பாபாவும் வந்து முதியவரின்
சரீரத்தின் மூலம் சேவை செய்து கொண்டிருக்கிறார் இல்லையா? பாபா
செய்பவர் மற்றும் செய்விப்பவர். குழந்தைகளுக்காக எவ்வளவு அக்கறை
உள்ளது! - இதை அமைக்க வேண்டும், கட்டடம் கட்ட வேண்டும் என்று!
எப்படி லௌகிக் தந்தைக்கு எல்லைக்குட்பட்ட சிந்தனைகள் உள்ளன,
அதுபோல் எல்லையற்ற தந்தைக்கு எல்லையற்ற சிந்தனை உள்ளது.
குழந்தைகளாகிய நீங்கள் தான் சேவை செய்ய வேண்டும். நாளுக்கு நாள்
மிகவும் சுலபமாக ஆகிக் கொண்டே செல்கிறது. எவ்வளவு விநாசத்திற்கு
அருகில் வந்து கொண்டே இருக்கிறீர் களோ, அவ்வளவு சக்தி வந்து
கொண்டே இருக்கும். பாடப்பட்டும் உள்ளது, பீஷ்ம பிதாமகர்
முதலானவர்களுக்குக் கடைசியில் அம்பு தைத்தது என்று. இப்போது
அம்பு தைத்து விடுமானால் மிகவும் குழப்பம் ஏற்பட்டு விடும்.
அவ்வளவு கூட்டம் சேர்ந்து விடும், கேட்கவே வேண்டாம்!
சொல்கிறார்கள் இல்லையா, தலையைச் சொறியக் கூட நேரம் இல்லை என்று!
அதுபோல் யாரும் கிடையாது. ஆனால் அதிகமான கூட்டம் வந்து
விடுமானால் பிறகு அதுபோல் சொல்லப்படுகின்றது. எப்போது
அவர்களுக்கு அம்பு தைத்து விடுகின்றதோ, அதன் பிறகு உங்களுடைய
பிரபாவம் வெளிப்படும். குழந்தைகள் அனைவருக்கும் தந்தையின்
அறிமுகம் கிடைத்தாக வேண்டும்.
நீங்கள் மூன்றடி நிலத்திலும் கூட இந்த அவிநாசி மருத்துவமனை
மற்றும் பல்கலைக் கழகத்தைத் திறந்து வைக்க முடியும். பணம்
இல்லையென்றாலும் கூடப் பரவாயில்லை. சித்திரங்கள் உங்களுக்குக்
கிடைத்து விடும். சேவையில் மான-அவமானம், சுகம்-துக்கம்,
குளிர்-வெப்பம் அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
யாரையாவது வைரம் போல் ஆக்குவதென்பது சாதாரண விஷயமா என்ன?
நீங்கள் ஏன் களைத்துப் போகிறீர்கள்? நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அதிகாலை நேரம் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம்
மிகுந்த அன்போடும் ஆர்வத்தோடும் படிப்பைப் படிக்க வேண்டும்.
பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். அனைத்துக்
கர்மேந்திரியங்களும் கட்டுப்பாட்டில் வருகிற மாதிரி அப்படிப்
புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
2) சேவையில் சுகம்-துக்கம், மான-அவமானம், குளிர்-வெப்பம்
அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் சேவையில்
களைத்துப் போகக் கூடாது. மூன்றடி நிலத்தில் கூட மருத்துவமனை
மற்றும் பல்கலைக்கழகம் திறந்து வைத்து, வைரம் போல் ஆக்குகிற
சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:
உண்மையான ஆத்மிக சிநேகத்தின் அனுபூதி செய்விக்கக் கூடிய மாஸ்டர்
அன்புக்கடல் ஆகுக.
எப்படி கடலின் கரைக்குச் சென்றால் குளிர்ச்சியின் அனுபவம்
ஏற்படுகிறது. அது போல் குழந்தை கள் நீங்கள் மாஸ்டர் அன்புக்கடல்
ஆவீர்களானால் உங்கள் முன்னால் வரும் ஒவ்வோர் ஆத்மா வும் அனுபவம்
செய்ய வேண்டும் - மாஸ்டர் அன்புக்கடலின் அலைகள் அன்பின் அனுபூதி
செய்வித்துக் கொண்டே இருக்கின்றன. ஏனென்றால் இன்றைய உலகம்
உண்மையான ஆன்மிக அன்பிற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
சுயநல அன்பைப் பார்த்துப்பார்த்து அந்த அன்பிலிருந்து மனம்
விடுபட்டு விட்டது. எனவே ஆத்மிக சிநேகத்தின் சிறிது நேர அனுபூதி
யையும் கூட வாழ்க்கைக்கான ஆதரவு எனப் புரிந்து கொள்வார்கள்.
சுலோகன்:
ஞான செல்வத்தால் நிரம்பியவராக இருப்பீர்களானால் ஸ்தூல
செல்வத்தின் பிராப்தி தானாகவே கிடைத்துக் கொண்டே இருக்கும்.
அவ்யக்த இஷாரா - சங்கல்பங்களின் சக்தியைச் சேமித்து சிரேஷ்ட
சேவைக்கு நிமித்தமாகுங்கள்
எப்படி சத்யுக சிருஷ்டி பற்றிச் சொல்கிறார்கள் - ஒரே ராஜ்யம்,
ஒரே தர்மம், அது போலவே இப்போது சுயராஜ்யத்திலும் கூட ஒரே
ராஜ்யம், அதாவது சுயத்தின் சமிக்ஞையின் படி நீங்கள் அனைவரும்
நடக்கிறீர்கள். மனம், தனது மனதின் வழியைச் செலுத்தாமல், புத்தி
தனது நிர்ணய சக்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.
சம்ஸ்காரம் ஆத்மாவை ஆட்டிப் படைப்பதாக இருக்கக் கூடாது. அப்போது
ஒரே தர்மம், ஒரே ராஜ்யம் எனச் சொல்வார்கள். ஆக, அத்தகைய கட்டுப்
படுத்தும் சக்தியை தாரணை செய்யுங்கள் - இதுவே எல்லையற்ற
சேவைக்கான சாதனமாகும்.