24.08.25 காலை முரளி
ஓம் சாந்தி 30.11.2006 பாப்தாதா,
மதுபன்
ஜுவாலாமுகி தபஸ்யா மூலம் நான் என்ற வாலை எரித்து பாப்தாதாவிற்கு
சமமாக ஆகுங்கள், அப்பொழுது சமாப்தி சமீபத்தில் வரும்
இன்று குறைவற்ற, அழிவற்ற பொக்கிஷங்களுக்கு எஜமானர் பாப்தாதா
தன்னுடைய நாலா புறங்களிலும் உள்ள சம்பன்னமான குழந்தைகளுடைய
சேமிப்பு கணக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். மூன்று
விதமான கணக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் - முதலாவது
தன்னுடைய முயற்சியின் மூலம் சிரேஷ்ட பிராப்தியின் சேமிப்பு
கணக்கு. இரண்டாவது சதா திருப்தியாக இருப்பது மற்றும்
திருப்திப்படுத்துவது, இந்த திருப்தியின் மூலம் ஆசீர்வாதங்களின்
கணக்கு. மூன்றாவது மனம், வார்த்தை, செயல், சம்பந்தம், தொடர்பின்
மூலம் எல்லையற்ற, சுய நலமற்ற சேவை மூலம் புண்ணியத்தின் கணக்கு.
நீங்கள் அனைவரும் கூட தங்களுடைய இந்த மூன்று கணக்குகளை சோதனை
செய்யத்தான் செய்கிறீர்கள். சதா அனைவரிடமும், தன் மீதும்
திருப்தியின் சொரூபம், அனைவருக்காகவும் சுபபாவனை, சுபவிருப்பம்
மற்றும் சதா தன்னை மகிழ்ச்சியாக, அதிர்ஷ்டசாலி ஸ்திதியில்
அனுபவம் செய்வது ஆகிய இவையே இந்த மூன்று கணக்குகளின் சேமிப்பு
எவ்வளவு உள்ளது, உள்ளதா அல்லது இல்லையா என்பதன் அடையாளங் கள்
ஆகும். மூன்று விதமான கணக்குகளின் அடையாளங்கள் தனக்குள் அனுபவம்
ஆகின்றதா? என்பதை சோதனை செய்யுங்கள். நிமித்த உணர்வு, பணிவான
உணர்வு, சுயநலமற்ற உணர்வு ஆகிய இவையே இந்த அனைத்து பொக்கிஷங்களை
சேமிப்பு செய்வதற்கான சாவி ஆகும். சோதனை செய்துகொண்டே
செல்லுங்கள். மேலும், சாவிக்கான நம்பரை அறிந்துள்ளீர்களா!
சாவியின் எண் - மூன்று புள்ளிகள். த்ரீ டாட். (மூன்று புள்ளிகள்)
ஒன்று - ஆத்மா புள்ளி, இரண்டாவது - தந்தை புள்ளி, மூன்றாவது -
நாடகத்தினுடைய முற்றுப்புள்ளிக்கான புள்ளி. உங்கள் அனைவரிடமும்
சாவியோ இருக்கின்றது அல்லவா! பொக்கிஷங்களை திறந்து பார்த்துக்
கொண்டிருக் கின்றீர்கள் தானே! இந்த அனைத்து பொக்கிஷங்களை
அதிகப்படுத்துவதற்கான விதி - திடத்தன்மை ஆகும். திடத் தன்மை
இருந்தது என்றால் இது நடக்குமா அல்லது நடக்காதா என்ற சங்கல்பம்
எவ்விதமான காரியத்திலும் எழாது. நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
உருவாக்கப்பட்டுள்ளது என்பது திடத்தன்மையின் ஸ்திதி ஆகும்.
உருவாகும், சேமிப்பு ஆகும், ஆகாது, இப்படி அல்ல. செய் கின்றோம்
தான்...., நடக்கின்றோம் தான்....., என்ற இந்த தான் தான் என்பது
கூடாது. திடத்தன்மை உடையவர்கள் நிச்சயபுத்தி, கவலையற்ற நிலை (நிஷ்
சிந்த்) மற்றும் உறுதியை (நிஷ் சித்) அனுபவம் செய்வார்கள்.
பாப்தாதா முன்னதாகவே கூறியிருக்கின்றார்கள் - ஒருவேளை
அதிகத்திலும் அதிகமாக அனைத்து பொக்கிஷங்களின் கணக்கை சேமிப்பு
செய்ய வேண்டும் என்றால் மன்மனாபவ என்ற மந்திரத்தை இயந்திரம்
ஆக்குங்கள். இதன் மூலம் சதா தந்தையின் துணை மற்றும் அருகில்
இருப்பதற்கான அனுபவம் தானாகவே ஏற்படும். தேர்ச்சி அடையத் தான்
வேண்டும், மூன்று விதமான பாஸ் இருக்கின்றன - ஒன்று அருகில் (பாஸ்)
இருப்பது, இரண்டாவது என்ன நடந்து முடிந்ததோ அது கடந்துவிட்டது
(பாஸ்) மற்றும் மூன்றாவது மதிப்புடன் தேர்ச்சி அடைவது (பாஸ்
வித் ஹானர்). ஒருவேளை, மூன்று பாஸ் இருக்கின்றன என்றால் நீங்கள்
அனைவரும் இராஜ்ய அதிகாரி ஆகுவதில் முழுமையான தேர்ச்சி (ஃபுல்
பாஸ்) பெறுகிறீர்கள். முழுமையான தேர்ச்சியை அடைந்து விட்டீர்களா
அல்லது அடைய வேண்டுமா? யாரெல்லாம் முழுமையான தேர்ச்சி
அடைந்துவிட்டீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். அடைய வேண்டியது
இல்லை, அடைந்து விட்டீர்களா? முதல் வரிசையில் உள்ளவர்கள்
உயர்த்தவில்லை, நீங்கள் அடையவேண்டுமா? இப்பொழுது சம்பூரணம்
ஆகவில்லை என்று யோசிக்கின்றீர்கள், ஆகையினால், கை உயர்த்த
வில்லையா? ஆனால், நிச்சயபுத்தி உடையவர்கள் வெற்றியாளர்களே
அல்லது வெற்றியாளர் ஆக வேண்டுமா? இப்பொழுது சமயத்தின் அழைப்பு,
பக்தர்களின் அழைப்பு, தன்னுடைய மனதின் சப்தம் என்ன வந்து
கொண்டிருக்கிறது? இப்பொழுதே சம்பன்னம் மற்றும் சமமாக ஆகியே
தீரவேண்டும் என்பது வருகிறதா அல்லது ஆகலாம், யோசிக்கலாம்,
செய்யலாம் . . . என்று யோசிக்கின்றீர்களா! இப்பொழுது சமயத்தின்
அனுசாரம் ஒவ்வொரு நேரமும் எவரெடி என்ற பாடம் உறுதியாக இருந்தே
ஆகவேண்டும். என்னுடைய பாபா என்று கூறினீர்கள், அன்பான பாபா,
இனிமையான பாபா என்று ஏற்றுக்கொண்டும் இருக்கின்றீர்கள். எனில்,
யார் அன்பானவராக இருக்கின்றாரோ, அவருக்கு சமமாக ஆகுவது கடினமாக
இருக்காது.
அவ்வப்பொழுது சமமாக ஆகுவதில் எது தடையை ஏற்படுத்துகின்றதோ,
அந்த பிரசித்தமான வார்த்தை அனைவரிடமும் உள்ளது, அனைவரும்
அறிவீர்கள், அனுபவிகள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். அது நான்
என்பதாகும், ஆகையினால், எப்பொழுதெல்லாம் நான் என்ற வார்த்தை
சொல்கின்றீர்களோ, அப்பொழுது நான் என்று மட்டும் சொல்லாதீர்கள்,
நான் ஆத்மா என்று சொல்லுங்கள் என்பதை பாப்தாதா முன்பே
கூறியிருக்கின்றார்கள். இரண்டு வார்த்தைகளை சொல்லுங்கள். நான்
என்பது சில நேரம் அபிமானத்தைக் கொண்டு வருகிறது, தேக
உணர்வினுடைய நான், ஆத்மாவினுடையது அல்ல. சில நேரம்
அபிமானத்தையும் கொண்டு வருகிறது, சில நேரம் அவமானத்தையும்
கொண்டு வருகிறது. சில நேரம் உள்ளம் உடைந்த வராகவும் ஆக்குகிறது,
ஆகையினால், இந்த தேக உணர்வினுடைய நான் என்பதை கனவிலும் கூட
கொண்டு வராதீர்கள்.
அன்பின் பாடத்தில் பெரும்பான்மையினர் தேர்ச்சி
பெற்றிருக்கின்றார்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். உங்கள்
அனைவரையும் எது இங்கே அழைத்து வந்தது? அனைவரும் விமானத்தில்
வந்திருக்கலாம், இரயிலில் வந்திருக்கலாம், பேருந்தில்
வந்திருக்கலாம், ஆனால், உண்மையில் பாப்தாதாவின் அன்பு என்ற
விமானத்தில் இங்கு வந்து சேர்ந்திருக்கின்றீர்கள். எவ்வாறு
அன்பு என்ற பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கின்றீர்களோ, அதுபோல்,
சமமாகும் பாடத்தில் கூட மதிப்புடன் தேர்ச்சி பெற்றுக்
காட்டுங்கள் - இப்பொழுது இந்த அதிசயத்தை செய்யுங்கள். விருப்பமா?
சமமாகுவது பிடித்துள்ளதா? விருப்பம் தான், ஆனால், ஆகுவதற்கு
கொஞ்சம் கடினமாக உள்ளதா? சமம் ஆகிவிடுங்கள், அப்பொழுது சமாப்தி
முன்னால் வரும். ஆனால், அவ்வப்போது உள்ளத்தில் ஆகியே
தீரவேண்டும் என்ற உறுதிமொழி என்ன செய்கின்றீர்களோ, அந்த உறுதி
மொழியானது பலவீனம் ஆகிவிடுகிறது மற்றும் பிரச்சனை
வலுவாகிவிடுகிறது. அனைவரும் விரும்புகின்றீர்கள், ஆனால்,
விருப்பம் ஒன்றாக உள்ளது, நடைமுறை மற்றொன்றாக உள்ளது, ஏனெனில்,
உறுதிமொழி செய்கின்றீர்கள், ஆனால், உறுதித்தன்மையின் குறைபாடு
ஏற்பட்டு விடுகிறது. சமமான நிலை தூரமாகிவிடுகிறது, பிரச்சனை
பலவான் ஆகிவிடுகிறது. எனவே, இப்பொழுது என்ன செய்யப்போகிறீர்கள்?
பாப்தாதாவிற்கு ஒரு விசயத்தில் மிகுந்த சிரிப்பு வந்துகொண்டு
இருக்கின்றது. எந்த விசயம்? நீங்கள் மகாவீரர்கள், ஆனால்,
எவ்வாறு சாஸ்திரங்களில் ஹனுமாரை மகாவீரர் என்றும்
கூறியிருக்கின்றார்கள், ஆனால், வாலும்
காண்பித்திருக்கின்றார்கள். இந்த நான் என்பதையே வாலாகக்
காண்பித்து இருக்கின்றார்கள். எதுவரை மகாவீரர் இந்த வாலை
எரிக்கவில்லையோ, அதுவரை இலங்கை அதாவது பழைய உலகம் கூட சமாப்தி
ஆகாது. ஆகவே, இப்பொழுது இந்த நான், நான் என்ற வாலை
எரித்துவிடுங்கள், அப்பொழுது சமாப்தி சமீபத்தில் வரும்.
எரிப்பதற்காக ஜுவாலாமுகி தபஸ்யா, சாதாரண நினைவு அல்ல,
ஜுவாலாமுகி நினைவு அவசியமாக உள்ளது. ஆகையினால், ஜுவாலா தேவியின்
ஞாபகார்த்தமும் உள்ளது. சக்திசாலியான நினைவு. என்ன செய்ய
வேண்டும் என்பதைக் கேட்டீர்களா? சமம் ஆகியே தீரவேண்டும்,
சமாப்தியை அருகாமை யில் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற இந்த
ஈடுபாடு இப்பொழுது மனதில் இருக்க வேண்டும். சங்கமயுகம் மிகவும்
நன்றாக உள்ளது அல்லவா, பிறகு சமாப்தி ஏன்? என்று நீங்கள்
கேட்பீர்கள். ஆனால், நீங்கள் பாப்சமான் இரக்கமுள்ள, கிருபை
காட்டக்கூடிய, கருணை உள்ளம் கொண்ட ஆத்மாக்கள் ஆவீர்கள். எனவே,
இன்றைய துக்கமான ஆத்மாக்கள் மீது, பக்த ஆத்மாக்கள் மீது ஹே!
இரக்க உள்ளம் உடைய ஆத்மாக்களே இரக்கம் காட்டுங்கள். கருணை
நிறைந்தவர்கள் ஆகுங்கள். துக்கம் அதிகரித்துக்
கொண்டிருக்கின்றது, துக்கமானவர்கள் மீது இரக்கம் காட்டி, அவர்
களை முக்தி தாமத்திற்கு அனுப்பி வைத்திடுங்கள். வார்த்தையின்
சேவை மட்டுமல்ல, ஆனால், இப்பொழுது மனம் மற்றும் வார்த்தையின்
சேவை இணைந்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஒரே நேரத்தில்
இரண்டு சேவையும் சேர்த்து செய்ய வேண்டும். சேவைக்கான வாய்ப்பு
மட்டும் கிடைக்கட்டும் என்று யோசிக்காதீர்கள், நடமாடிக் கொண்டே
தன்னுடைய முகம் மற்றும் நடத்தை மூலம் தந்தையின் அறிமுகத்தைக்
கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். உங்களுடைய முகம் தந்தையின்
அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். உங்களுடைய நடத்தை தந்தையைப்
பிரத்யட்சம் செய்யட்டும். அப்பேற்பட்ட சதா சேவாதாரி ஆகுங்கள்!
நல்லது.
பாப்தாதாவிற்கு முன்னால் ஸ்தூலத்திலோ நீங்கள் அனைவரும்
அமர்ந்திருக்கின்றீர்கள், ஆனால், சூட்சும சொரூபத்தில்
நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகள் உள்ளத்தில் இருக்கின்றனர்.
பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர், கேட்டுக் கொண்டும்
இருக்கின்றனர். உள்நாடு, வெளிநாட்டில் உள்ள அனேக குழந்தைகள்
இமெயில் மூலம், கடிதங்கள் மூலம், செய்திகள் மூலம் அன்பு
நினைவுகள் அனுப்பியுள்ளனர். பெயர் சகிதமாக அனைவருடைய நினைவும்
பாப்தாதாவிற்குக் கிடைத்துவிட்டது மற்றும் பாப்தாதா அனைத்து
குழந்தைகளையும் முன்னால் பார்த்து ஆஹா! குழந்தைகளே ஆஹா! என்ற
பாடலை உள்ளத்தில் பாடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு
வரும் இந்த சமயத்தில் வெளிப்படையாக நினைவில் வருகின்றனர்.
அனைத்து தூதர்களும் தனித்தனியாக, இன்னார் நினைவு
அனுப்பியிருக்கின்றார், இன்னார் நினைவு அனுப்பியிருக்கின்றார்
என்று கூறுகின்றனர். தந்தையிடமோ எப்பொழுது சங்கல்பம்
செய்கின்றீர்களோ, சாதனத்தின் மூலம் பின்னால் கிடைக்கின்றது,
ஆனால், அன்பான சங்கல்பம் சாதனத்தை விட முன்னதாக வந்தடைந்து
விடுகிறது என்று தந்தை கூறுகின்றார். சரி தானே! சிலருக்கு
நினைவு கிடைத்திருக்கிறது அல்லவா! நல்லது.
நல்லது. யார் முதல் முறையாக வந்திருக்கின்றீர்களோ, அவர்கள்
முதலில் கை உயர்த்துங்கள். இவர்கள் சேவைக்காகவும் முதல்
முறையாக வந்திருக்கின்றனர். நல்லது. உங்களை வரவேற்கின்றோம்,
நீங்கள் வரவேண்டிய சமயம் இது என்று பாப்தாதா கூறுகின்றார்கள்.
நல்லது.
இந்தூர் ஜோன்:-
(அனைவருடைய கைகளில் உள்ளத்தின் வடிவத்தில் என்னுடைய பாபா (மேரா
பாபா) என்ற அடையாளச் சின்னம் உள்ளது) கையை மிகவும் நன்றாக
அசைத்துக் கொண்டு இருக்கின்றனர், ஆனால், உள்ளத்தையும் அசைக்க
வேண்டும். எப்பொழுதும் நினைவில் வைத்திடுங்கள், என்னுடையது
என்பதை மறக்கக் கூடாது. நன்றாக வாய்ப்பை பயன்படுத்தி
இருக்கின்றீர்கள், தைரியம் வைப்பவர்களுக்கு பாப்தாதா கோடி
மடங்கு உதவி செய்கின்றார்கள் என்று பாப்தாதா எப்பொழுதும்
கூறுகின்றார்கள். தைரியம் வைத்திருக்கின்றீர்கள் அல்லவா! நல்லது
செய்துள்ளீர்கள். இந்தூர் ஜோன் ஆகும். நல்லது, இந்தூர் ஜோன்
சாகார பாபாவினுடைய நினைவினுடைய இறுதியான இடம் ஆகும். (பிரம்மா
பாபா சாகாரத்தில் இந்தூரில் சென்று சேவை செய்து விட்டு மதுபன்
வந்து பிறகு வேறு எங்கும் சேவைக்காக வெளி செல்லவில்லை. ஆகையால்
இந்தூர் பிரம்மா பாபாவின் நினைவு இடமாக கூறப்படுகிறது) ஆகும்.
நல்லது. அனைவரும் மிகுந்த குஷி அடைந்து கொண்டிருக்கின்றீர்கள்
தானே! பொன்னான லாட்டரி கிடைத்துள்ளது. ஜோனினுடைய சேவை
கிடைப்பதனால், அனைத்து சேவாதாரிகளுக்கும் அனுமதி
கிடைத்துவிடுகின்றது மற்றும் இத்தனை பேரை அழைத்து வாருங்கள்
என்று எண்ணிக்கை கூறப்படுகிறது மேலும், இப்பொழுது பாருங்கள்
இத்தனை பேர் வந்துள்ளீர்கள். இது கூட ஜோன் ஜோனிற்கு நல்ல
வாய்ப்பாக உள்ளது அல்லவா! எத்தனை பேரை அழைத்து வரவேண்டுமோ,
அழைத்து வாருங்கள். கொஞ்ச சமயத்தில் உங்கள் அனைவருடைய புண்ணியத்
தின் கணக்கு எவ்வளவு அதிகமாக சேமிப்பாகிவிட்டது. யக்ஞ சேவையை
உளமார செய்வது என்றால் தன்னுடைய புண்ணியத்தின் கணக்கை தீவிர
வேகத்தில் அதிகரிப்பதாகும், ஏனென்றால், சங்கல்பம், சமயம்
மற்றும் சரீரம் ஆகிய மூன்றையும் வெற்றியுடையதாக
ஆக்கிவிட்டீர்கள். சங்கல்பம் எழுவது கூட யக்ஞ சேவையைப் பற்றி,
சமயம் கூட யக்ஞ சேவையில் செலவழிக் கப்பட்டது மற்றும் சரீரத்தைக்
கூட யக்ஞ சேவையில் அர்ப்பணம் செய்துவிட்டீர்கள். எனவே, சேவை
செய்துள்ளீர்களா அல்லது பலன் கிடைத்துள்ளதா? பிரத்யட்ச பலனாக
யக்ஞ சேவை செய்யும்பொழுது யாரிடமாவது ஏதாவது வீணான சங்கல்பம்
வந்ததா? யாரிடமாவது வந்ததா? மகிழ்ச்சியாக இருந்தீர்கள் மற்றும்
மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். இங்கே பொன்னான அனுபவம் என்ன
செய்தீர்களோ, இந்த அனுபவத்தை அங்கும் எமர்ஜ் செய்து
அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருபொழுதும் ஏதாவது
மாயாவின் சங்கல்பம் கூட வந்தது என்றால் மனதின் விமானத்தின்
மூலம் சாந்திவனத்திற்கு வந்துவிட வேண்டும். மனதின் விமானமோ
இருக்கின்றது அல்லவா! அனைவரிடமும் மனம் என்ற விமானம்
இருக்கின்றது. பாப்தாதா ஒவ்வொரு பிராமணருக்கும் சிரேஷ்டமான மனம்
என்ற விமானத்தை பிறப்பினுடைய பரிசாகக் கொடுத் திருக்கின்றார்கள்.
இந்த விமானத்தில் அதிகமான உழைப்பு செய்ய வேண்டியதிருக்காது.
ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால் மேரா பாபா (என்னுடைய பாபா),
அவ்வளவு தான். விமானம் ஓட்டத் தெரிகிறது அல்லவா!
எப்பொழுதெல்லாம் ஏதாவது நடக்கிறதோ, அப்பொழுது மதுவனத்திற்கு
வந்துவிடுங்கள். பக்திமார்க்கத்தில் நான்கு தாமத்திற்கு செல்லக்
கூடியவர்கள் தங்களை மிகுந்த பாக்கியவான் எனப்
புரிந்திருக்கின்றனர். மதுவனத்தில் கூட நான்கு தாமங்கள் உள்ளன,
ஆகையினால், நான்கு தாமங்களையும் வலம் வந்தீர்களா? பாண்டவ பவனில்
பாருங்கள், நான்கு தாமங்கள் உள்ளன. யாரெல்லாம் வருகின்றீர்களோ,
அவர்கள் பாண்டவ பவன் செல்கின்றீர்கள் தானே, முதலாவது சாந்தி
ஸ்தம்பம் மகாதாமம் ஆகும். இரண்டாவது பாப்தாதாவினுடைய அறை, இது
அன்பிற்கான தாமம் ஆகும். மேலும், மூன்றாவது குடில், இது அன்பான
சந்திப்பிற்கான தாமம் மற்றும் நான்காவது - ஹிஸ்டரி ஹால், எனவே,
நீங்கள் அனைவரும் நான்கு தாமங்களுக்கும் சென்றுவந்தீர்களா? எனவே,
மகான் பாக்கியவானக ஆகியேவிட்டீர்கள். இப்பொழுது எந்த தாமத்தை
வேண்டுமானாலும் நினைவு செய்ய முடியும், எப்பொழுதாவது
துயரப்படும்பொழுது குடிலில் ஆன்மிக உரையாடல் செய்வதற்கு
வந்துவிட வேண்டும். சக்திசாலி ஆகுவதற்கான அவசியம்
ஏற்படுகிறதென்றால் சாந்தி ஸ்தம்பத்திற்கு வந்துவிட வேண்டும்
மற்றும் வீண் எண்ணங்கள் மிகவும் தீவிரமாக வருகிறது, மிகவும்
வேகமாக வருகிறது என்றால் ஹிஸ்டரி ஹாலிற்கு வந்துவிட வேண்டும்.
சமமாக ஆகுவதற்கான திடசங்கல்பம் வருகிறது என்றால் பாப்தாதா
வினுடைய அறைக்கு வந்துவிட வேண்டும். நன்றாக உள்ளது, அனைவரும்
பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டீர்கள், ஆனால், அங்கே
இருந்தாலும் சதா பொன்னான வாய்ப்பை எடுத்துக் கொண்டே இருக்க
வேண்டும். நல்லது. நல்ல தைரியமுள்ளவர்களாக இருக்கின்றீர்கள்.
கேட் குரூப் (இதயத்தில் வீற்றிருப்பவர்கள்
அமர்ந்திருக்கின்றீர்கள், மிகவும் நல்லவிதமாக மாநாட்டை அனைவரும்
ஒன்றிணைந்து செய்துள்ளீர்கள்):- நல்லது செய்துள்ளீர்கள்,
தங்களுக்குள் மீட்டிங்கும் செய்துள்ளீர்கள் மற்றும் யார்
பிரெசிடென்ட்டோ, அவருக்கும் இந்த காரியம் நடைபெற வேண்டும் என்ற
விருப்பம் உள்ளது. அவருக்கும் விருப்பம் உள்ளது, ஆகையினால்,
அவரையும் கூடவே ஒன்றாக இணைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டே
இருங்கள். மேலும், இதன் கூடவே பிராமணர்களின் மீட்டிங் என்ன
நடைபெறுமோ, அதிலும் கூட தங்களுடைய நிகழ்ச்சியின் செய்தியைச்
சொல்லி ஆலோசனை பெற வேண்டும். அனைத்து பிராமணர்களின் ஆலோசனை
யினால் இன்னும் அதிகமான சக்தி நிறைந்துவிடுகிறது. மற்றபடி
காரியம் நன்றாக உள்ளது, செய்து கொண்டே இருங்கள், பரப்பிக்
கொண்டே செல்லுங்கள் மற்றும் பாரதத்தின் விசேஷத்தன்மையை
வெளிப்படுத்துங்கள். நன்றாக உழைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
நிகழ்ச்சியும் நன்றாக செய்துள்ளீர்கள், மேலும், இதயத்தில்
வீற்றிருப்பவர்கள் தங்களுடைய பரந்த உள்ளத்தைக்
காண்பித்துள்ளீர்கள், அதற்கான வாழ்த்துக்கள். நல்லது.
இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகள்:-
நன்றாக உள்ளது, ஒவ்வொரு டர்னிலும் (முறை யிலும்) இரட்டை
வெளிநாட்டினர் வருவது இந்தக் குழுவின் சிறப்பை மேம்படுத்துகிறது.
இரட்டை வெளிநாட்டினரைப் பார்க்கும்பொழுது அனைவருக்கும் ஊக்கமும்
வருகின்றது, அனைத்து இரட்டை வெளிநாட்டினரும் இரட்டை ஊக்கம்,
உற்சாகத்தோடு முன்னேறி பறந்துகொண்டிருக் கின்றனர், நடந்து
கொண்டிருக்கவில்லை, பறந்து கொண்டிருக்கின்றனர், அவ்வாறு
இருக்கின்றீர்கள் தானே! பறப்பவர்களா? அல்லது நடப்பவர்களா? யார்
சதா பறந்து கொண்டு இருக்கின்றீர்களோ, நடப்பதில்லையோ, அவர்கள்
கை உயர்த்துங்கள். நல்லது. பாருங்கள், விமானத்தில் பறந்து தான்
வரவேண்டியதாக உள்ளது. எனவே, பறப்பதற்கான பயிற்சி ஏற்கனவே உள்ளது.
அது சரீரத்தால் பறப்பது, இது மனதால் பறப்பது, தைரியம் கூட
நன்றாக வைத்துள்ளீர்கள். பாருங்கள், எங்கோ மூலை மூலையில்
இருந்து தன்னுடைய குழந்தைகளை பாப்தாதா தேடிக்
கண்டெடுத்துள்ளார்கள் தானே! மிகவும் நல்லது, கூறும்பொழுது
இரட்டை வெளிநாட்டினர் என்கின்றனர், அவர்களோ உண்மையில்
பாரதத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், இராஜ்யம் கூட எங்கு செய்ய
வேண்டும்? பாரதத்தில் செய்ய வேண்டும் அல்லவா! ஆனால், சேவைக்காக
ஐந்து கண்டங்களுக்குச் சென்றுள்ளீர்கள். மேலும், ஐந்து
கண்டங்களிலும் வெவ்வேறு இடங்களில் சேவை கூட நன்றாக ஊக்கம்,
உற்சாகத்துடன் செய்து கொண்டிருக்கின்றீர்கள். விக்ன விநாசக்
ஆவீர்கள் தானே! என்ன தடை வந்தாலும் பயப்படுபவர்கள் இல்லை தானே,
இது ஏன் நடந்து கொண்டிருக்கின்றது, இது என்ன நடந்து
கொண்டிருக்கின்றது, இவ்வாறு அல்ல. எது நடக்கின்றதோ, அது
நம்முடைய தைரியத்தை மேலும் அதிகப்படுத்துவதற்கான சாதனம் ஆகும்.
பயம் ஏற்படுத்துவதற்கானது அல்ல, ஊக்கம், உற்சாகத்தை
அதிகப்படுத்துவதற்கான சாதனம் ஆகும். அவ்வாறு உறுதியாக (பக்கா)
இருக்கின்றீர்கள் அல்லவா! பக்காவாக இருக்கின்றீர்களா? அல்லது
கொஞ்சம் கொஞ்சம் உறுதியற்றவர்களா? இல்லை, உறுதியற்றவர் என்ற
வார்த்தை நன்றாக இல்லை. பக்காவாக இருக்கின்றீர்கள், பக்காவாக
இருப்பீர்கள், பக்காவாகி கூடவே செல்வீர்கள். நல்லது.
தாதி ஜானகி அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்று
வந்திருக்கின்றார்கள், அவர்கள் மிகுந்த அன்பு நினைவு
கொடுத்திருக்கின்றார்கள்:- பாப்தாதாவிடம் இமெயிலிலும் செய்திகள்
வந்திருக்கின்றன மற்றும் தற்சமயத்தில் பெரிய நிகழ்ச்சிகள் கூட
ஏற்கனவே நடந்தது போல அவ்வளவு எளிதாக நடந்துவிட்டன என்பதை
பாப்தாதா பார்க்கின்றார்கள். அனைவரும் கற்றுக் கொண்டனர். சேவைக்
கான சாதனங்களை காரியத்தில் ஈடுபடுத்துவதற்கு நன்றாக பழகிவிட்டது.
பாப்தாதாவிற்கு ஆஸ்திரேலியா நம்பர் ஒன்னாகக் தெரிகின்றது, ஆனால்,
இப்பொழுது யூ.கே.யின் (இங்கிலாந்து) நம்பர் கொஞ்சம் முன்னால்
சென்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா முதன்முதலில் நம்பர் ஒன்
பெற்றிருந்தது, இப்பொழுது ஆஸ்திரேலியா முதல் எண்ணில் வந்துதான்
ஆகவேண்டும். யூ.கே இரண்டாவது நம்பராக ஆகாது, அவர்களும் கூட
நம்பர் ஒன்னாகத் தான் இருப்பார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த
பழைய குழந்தைகள் பாப்தாதாவிற்கு நினைவு உள்ளனர். மேலும்,
பாப்தாதாவினுடைய செல்லமான நிர்மல் ஆஸ்ரம், நீங்களோ நிர்மலா தீதி
என்று அழைக் கின்றீர்கள், தீதி என்று கூறுகின்றீர்கள் அல்லவா,
ஆனால், பாப்தாதா ஆரம்பத்தில் இருந்தே அவர் களுக்கு நிர்மல்
ஆஸ்ரம் என்ற பட்டம் கொடுத்துள்ளார்கள், அந்த ஆஸ்ரமத்தில் அனேக
ஆத்மாக் கள் ஆதரவைப் பெற்றுள்ளனர் மற்றும் தந்தையினுடையவர்களாக
ஆகியுள்ளனர் மற்றும் ஆகிக் கொண்டிருக்கின்றனர், ஆகிக்கொண்டே
இருப்பார்கள். ஆகவே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒவ்வொரு
குழந்தைக்கும் விசேஷமான நினைவு உரித்தாகுக. முன்னால்
அமர்ந்துள்ள இவர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் தானே!
ஆஸ்திரேலியா வைச் சேர்ந்தவர்கள் எழுந்திருங்கள். மிகவும்
நல்லவர்கள். இவர்களுக்கு எந்தளவு நன்றாக ஊக்கம் வந்துகொண்டி
ருக்கின்றது, உலக சேவைக்காக நன்றாக ஏற்பாடுகள் செய்து
கொண்டிருக்கின்றனர். பாப்தாதாவின் உதவி உள்ளது மற்றும்
வெற்றியும் உள்ளது தானே.
நல்லது - இப்பொழுது என்ன திடசங்கல்பம் செய்து கொண்டு
இருக்கின்றீர்கள்? இப்பொழுது வெற்றி நமது பிறப்பதிகாரம் என்ற
இதே திடசங்கல்பத்தில் அமருங்கள். வெற்றி நம்முடைய கழுத்தின்
மாலை ஆகும். இந்த நம்பிக்கை மற்றும் ஆன்மிக போதையில் அனுபவி
சொரூபமாகி அமருங்கள். நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள கவலையில் இருந்து விடுபட்ட கவலையற்ற
சக்கரவர்த்திகளுக்கு, சதா கவலையற்ற உலகத்தின் சக்கரவர்த்தி
சொரூபத்தில் நிலைத்திருக்கக் கூடிய குழந்தைகளுக்கு, சர்வ
பொக்கிஷங்களில் சம்பன்னமான உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தராக
இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கு, சதா ஊக்கம், உற்சாகத்தின்
இறக்கைகளினால் பறக்கும் கலையில் பறக்கக்கூடிய குழந்தைகளுக்கு,
சதா சமாப்தியை சமீபத்தில் கொண்டு வரக் கூடிய பாப்தாதா விற்கு
சமமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள், உள்ளத்தின்
ஆசீர்வாதங்கள், வரதாதாவின் வரதானம் மற்றும் நமஸ்காரம்.
ஆசீர்வாதம்:
சுயத்தின் அனைத்து பலவீனங்களையும் தானத்தின் விதியினால் சமாப்தி
செய்யக்கூடிய வள்ளல், விதியை உருவாக்கக்கூடியவர் (விதாதா) ஆகுக.
எப்பொழுது ஏதாவதொரு பொருளின் குறை இருக்கிறது என்றால் தானம்
செய்யுங்கள் என்று கூறுவார்கள், பக்தியில் இந்த நியமம்
இருக்கின்றது. தானம் செய்வதினால் கொடுப்பதென்பது
பெறுவதாகிவிடுகிறது. எனவே, எந்தவொரு பலவீனத்தையும் சமாப்தி
செய்வதற்காக வள்ளல் (தாதா) மற்றும் விதியை உருவாக்குபவர் (விதாதா)
ஆகுங்கள். ஒருவேளை, நீங்கள் பிறருக்கு தந்தையினுடைய
பொக்கிஷத்தைக் கொடுப்பதற்கு நிமித்த ஆதரவாளர் ஆனீர்கள் என்றால்
பலவீனங்கள் தானாகவே விலகிவிடும். தன்னுடைய வள்ளல் தன்மை, விதியை
உருவாக்கும் நிலையினுடைய சக்திசாலி சமஸ்காரத்தை எமர்ஜ்
செய்தீர்கள் என்றால் பலவீனமான சமஸ்காரம் தானாகவே சமாப்தி
ஆகிவிடும்.
சுலோகன்:
தன்னுடைய சிரேஷ்ட பாக்கியத்தின் மகிமையைப் பா டிக்கொண்டே
இருங்கள், பலவீனங்களினுடையதை அல்ல.
அவ்யக்த சமிக்ஞை - சகஜயோகி ஆகவேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
யார் மீது அன்பு இருக்கிறதோ, அவருக்கு எது பிடிக்கிறதோ, அதுவே
செய்யப்படுகிறது. தந்தைக்கு குழந்தைகள் அப்செட் ஆகுவது
பிடிப்பதில்லை, ஆகையினால், என்ன செய்வேன், விசயமே அவ்வாறு
இருந்தது, ஆகையினால் அப்செட் ஆகிவிட்டேன் . . . என்று
ஒருபொழுதும் கூறாதீர்கள், ஒருவேளை, அப்செட் ஆக்கும்படியான
விசயம் வந்தாலும் கூட நீங்கள் அப்செட் ஸ்திதியில் வராதீர்கள்.
உளமார பாபா என்று கூறுங்கள் மற்றும் அந்த அன்பில்
மூழ்கிவிடுங்கள்.