25-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஒவ்வொரு அடியிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதில் நன்மை அடங்கியிருக்கின்றது, இந்த நாடகத்தில் யார் தந்தையின் நினைவில் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதிகமாக நன்மை ஏற்படுகின்றது ”

கேள்வி:
நாடகத்தின் எந்தவொரு பதிவினை புரிந்து கொண்ட குழந்தைகள் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்க முடியும்?

பதில்:
நாடக அனுசாரப்படி இப்பொழுது இந்த பழைய உலகம் வினாசம் ஆகும், இயற்கையின் சீற்றங்களும் ஏற்படும், ஆனாலும் நம்முடைய இராஜ்யம் உருவாகியே தீரும், இதனை யாரும் தடுக்க முடியாது, இதனை புரிந்து கொண்ட குழந்தைகள் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள். மற்றபடி மனநிலையில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும், சில நேரம் உற்சாகமாகவும், சில நேரம் சோர்வு ஏற்பட்டாலும் கூட இதில் எந்த விதமான குழப்பமும் அடையக்கூடாது. அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பகவான் நமக்கு கற்பிக்கின்றார், இந்த மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்.

பாடல்:
சபையின் நடுவே எழுந்த ஒளி (நட்சத்திரம்) ....

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான வரிசைப்படி முயற்சியின் அனுசாரப்படி சைத்தன்ய மான விட்டில் பூச்சி போன்ற குழந்தைகளுக்கு பாபா அன்பு நினைவுகளைத் தருகின்றார். நீங்கள் அனைவரும் சைத்தன்யமான விட்டில் பூச்சிகள், தந்தையை தீபம் என்று கூறப்படுகின்றது, ஆனால் அவரை முற்றிலும் யாரும் அறியவில்லை. பாபா பெரிய தீபமாக இல்லை, அவர் ஒரு புள்ளியாக இருக்கின்றார். நாம் ஆத்மாக்கள் புள்ளியாக இருக்கின்றோம் என்பது கூட யாருடைய புத்தியிலும் இல்லை. நம்முடைய ஆத்மாவில் முழு பங்கும் அடங்கியிருக்கின்றது. ஆத்மா மற்றும் பரமாத்மா வின் ஞானம் வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. குழந்தைகள் உங்களுக்கு மட்டுமே தந்தை வந்து புரியவைக்கின்றார், ஆத்மாவைப் பற்றி உணரவைக்கின்றார். ஆத்மா என்றால் என்ன, பரமாத்மா என்றால் என்ன என்பதைப் பற்றி இதற்கு முன் உங்களுக்குத் தெரியாது. எனவே தேக அபிமானத்தின் காரணமாக குழந்தைகள் மீது பற்றுதலும் இருக்கின்றது, நிறைய விகாரங்களும் இருக்கின்றது. பாரதம் விகாரங்கள் என்ற பெயர் கூட இல்லாமல் எவ்வளவு உயர்வாக இருந்தது! அது தான் விகாரமற்ற பாரதம், இப்பொழுது விகாரமான பாரதமாக இருக்கின்றது. தந்தை புரிய வைப்பது போன்று வேறு எந்த மனிதர்களும் கூறமுடியாது. 5000 ஆண்டுகளுக்கு முன்பாக நான் இந்த பாரதத்தை சிவாலயமாக ஆக்கியிருந்தேன். நான் தான் சிவாலயத்தை உருவாக்கினேன். எவ்வாறு என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஒவ்வொரு அடியிலும் நடந்து கொண்டி ருப்பதில் நன்மை மட்டுமே இருக்கின்றது என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். யார் தந்தையை மிகவும் நல்ல முறையில் நினைவு செய்கின்றார்களோ அவர்கள் தனக்குத்தான் நன்மை செய் கின்றனர், ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு அதிகமாக நன்மை ஏற்படுகின்றது. இதுதான் கல்யாணகாரி புருஷோத்தமமாக ஆவதற்கான யுகமாகும். தந்தைக்கு எவ்வளவு மகிமை இருக் கின்றது! இப்பொழுது உண்மையிலும் உண்மையான பாகவதத்தின் நிலை நடந்து கொண்டு இருக் கின்றது. துவாபர யுகத்தில் பக்தி ஆரம்பமான பொழுது முதன்முதலில் வைரத்தால் செய்த லிங்கத்திற்கு பூஜை நடந்தது. இப்பொழுது உங்களுக்கு நினைவு வந்துவிட்டது, அதாவது நாம் பூசாரியாக இருந்த பொழுது கோவில்களை உருவாக்கினோம், வைரங்களால் உருவாக்கி யிருந்தோம், அப்படிப்பட்ட சித்திரங்கள் இப்பொழுது கிடைக்க முடியாது. இப்பொழுது மனிதர்கள் வெள்ளியால் சிலைகளை உருவாக்கி பூஜை செய்கின்றனர். ஆக பூசாரிகளுக்கும் எவ்வளவு மரியாதையிருக்கின்றது பாருங்கள்! சிவனுக்கு அனைவரும் பூஜை செய்தாலும் மிகவும் முறைப்படி பூஜை நடப்பதில்லை.

வினாசம் அவசியம் வரும், அதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன, மற்றொரு பக்கம் இயற்கையின் சீற்றங்களும் நாடகத்தில் பதிவாகியிருக்கின்றது என்பதை குழந்தைகள் புரிந்துள்ளனர். யார் என்ன செய்தாலும், உங்களுடைய இராஜ்யம் நிச்சயமாக உருவாகியே தீரும், யாராலும் இதனைத் தடுக்க முடியாது. மற்றபடி மனநிலையில் ஏற்றமும், இறக்கமும் ஏற்ப்படத்தான் செய்கின்றது. இங்கு மிகப் பெரிய வருமானம் கிடைக்கின்றது, சில நேரம் குழந்தைகள் மிகுந்த மகிழச்சியில் நல்ல சிந்தனை களோடு இருக்கின்றனர், சில நேரம் சோர்ந்து விடுகின்றனர். யாத்திரையில் ஏற்றம், இறக்கம் ஏற்படுவது போன்று இந்த முயற்சியிலும் அவ்வாறே ஏற்படுகின்றது. சில நேரம் அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்து ஆஹா ! என்று கூறும் அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆஹா என்ன அதிசயம்! பாபா நமக்கு கற்பிக்கின்றார், என கூறுகின்றனர். அனைத்து ஆத்மாக்களின் தந்தை பகவான் நமக்கு படிப்பிக்கின்றார், உலகத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணரை பகவான் என புரிந்துள்ளனர். முழு உலகத்திலும் கீதைக்கு மிகவும் மரியாதை செய் கின்றனர், ஏனென்றால் பகவான் வாக்கியம் அல்லவா! ஆனாலும் பகவான் என்று யாரைக் கூற முடியும் என்பது தெரியவில்லை. எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருக்க கூடிய வித்வான்கள், பண்டிதர்கள் போன்றவர்களும் இறை தந்தையை நினைவு செய்கின்றோம் என கூறுகின்றனர், ஆனால் அவர் எப்பொழுது வந்தார், என்ன செய்தார் என்பதை மறந்து விட்டனர். தந்தை அனைத்து விசயங்களையும் புரிய வைக்கின்றார். நாடகத்தில் இவை அனைத்தும் பதிவாகியுள்ளது. இந்த இராவண இராஜ்யம் மீண்டும் ஏற்படும் பிறகு நான் வரவேண்டியதாக இருக்கும். உங்களை இராவணன் தான் அறியாமையின் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்க வைத்துவிட்டான். இந்த ஞானத்தை ஒரேயொரு ஞானக்கடல் மட்டுமே கூறமுடியும், இதன் மூலம் சத்கதி ஏற்படும். ஒரு தந்தையைத் தவிர வேறு யாராலும் சத்கதி கொடுக்க முடியாது, அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒருவர் மட்டுமே. எந்தவொரு கீதை ஞானத்தை தந்தை கூறினாரோ அது மறைந்து விட்டது, ஆக இந்த ஞானம் பரம்பரையாக தொடர்ச்சியாக வருவதில்லை. மற்றபடி குரான், பைபிள் இவை அனைத்தும் தொடர்ச்சியாக வருகின்றது, முடிந்து போவதில்லை. உங்களுக்கு கொடுக்கக்கூடிய இந்த ஞானம் சாஸ்திரமாக உருவாகாது, அதாவது இந்த ஞானம் பரம்பரையாக வரமுடியாது. நீங்கள் எழுதும் இந்த ஞானமும் பிறகு முடிந்து போய்விடும். இவை யனைத்தும் இயற்கை யாகவே எரிந்து விடும். இந்த ஞானம் இப்பொழுது கிடைக்கின்றது, பிறகு இதனுடைய பலனை அடைவீர்கள், அதன்பிறகு இந்த ஞானத்திற்கு அவசியம் ஏற்படாது என தந்தை கல்பத்திற்கு முன்பாகக் கூறியது போன்று இப்பொழுதும் கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில் எல்லா சாஸ்திரங் களும் இருக்கின்றது. பாபா உங்களுக்கு கீதையைப் படித்து கூறவில்லை. அவர் இராஜயோகத்தின் கல்வியைக் கொடுக்கின்றார், பிறகு பக்தி மார்க்கத்தில் சாஸ்திரங்களை உருவாக்கி பல விசயங்களை கலந்துவிட்டனர். மிக முக்கியமான விசயம் கீதை ஞானத்தைக் கொடுத்தது யார்? இதனுடைய பெயரை மாற்றிவிட்டனர். மற்றபடி வேறு யாருடைய பெயரையும் மாற்றவில்லை. அனைத்து தர்மத்திற்கும் முக்கியமான சாஸ்திரங்கள் இருக்கின்றதல்லவா! இதில் முக்கியமானது தேவதா தர்மம், இஸ்லாம் தர்மம் மற்றும் புத்த தர்மமாகும். சிலர் கூறுகின்றனர் முதலாவது புத்த தர்மம் பிறகு இஸ்லாம் தர்மம், இந்த விசயங்களுக்கும் கீதைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென நீங்கள் கூறுங்கள். நம்முடைய வேலை தந்தையிடமிருந்து பிராப்தியைப் பெறுவ தாகும். இது மிகப்பெரிய தர்மங்களின் மரமாக இருக்கின்றது, என தந்தை மிகவும் நன்றாகப் புரிய வைக்கின்றார். பார்க்கும் பொழுது பூந்தொட்டி போன்றுள்ளது. மூன்று கிளைகள் வெளி வந்துள்ளது, எவ்வளவு நல்ல முறையில் இந்த மரம் உருவாகியிருக்கின்றது, இந்த சித்திரத்தைப் பார்த்தால் நாம் எந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என புரிந்து கொள்வார்கள். நம்முடைய தர்மத்தை உருவாக்கி யவர் யார்? தயானந்தர், அரவிந்தர் போன்றவர்கள் வந்துவிட்டு சென்றனர், அவர்களும் யோகத்தைக் கற்றுத் தருகின்றனர், அவையனைத்தும் பக்திக்கு உரியதாகும், அதில் ஞானத்தின் பெயர், அடையாளம் ஏதுமில்லை. எவ்வளவு பெரிய பெரிய பட்டங்களைப் பெறுகின்றனர், இதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது, 5000 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் நடக்கும். ஆரம்பத்தில் இருந்து இந்த காலசக்கரம் எவ்வாறு சுழல்கிறது, பிறகு மீண்டும் எப்படி திரும்பச் சுழலும் என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்போதைய நிகழ்காலம் பிறகு கடந்த காலமாகி பிறகு எதிர்காலமாகவும் மாறும். எது கடந்த காலமாகிவிட்டதோ அதுவே மீண்டும் எதிர்காலமாக ஆகும். இந்த நேரம் உங்களுக்கு ஞானம் கிடைக்கின்றது, பிறகு நீங்கள் இராஜ்யத்தை அடைவீர்கள், இந்த தேவாத்மாக் களின் இராஜ்யம் இருந்தது அல்லவா! அந்த நேரம் வேறு யாருடைய இராஜ்யமும் இல்லை, இதனை ஒரு கதையைப் போன்று கூறுங்கள், இது அழகான கதையாக ஆகிவிடும். முன்னொரு காலத்தில் அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன் இந்த பாரதம் சத்யுகமாக இருந்தது, தேவி தேவதைகளின் இராஜ்யம் மட்டுமே இருந்தது, வேறு எந்த தர்மமும் இல்லை. அதனை சூரியவம்ச இராஜ்யம் என அழைக்கப்படுகின்றது. இலட்சுமி-நாராயணருடைய இராஜ்யம் 1250 ஆண்டுகள் நடந்தது, பிறகு அவர்கள் இராஜ்யத்தை தன்னுடைய சகோதரர்களாகிய சத்திரியர்களுக்குக் கொடுத்து அவர்கள் இராஜ்யம் செய்தனர். தந்தை வந்து கற்பித்தார் என நீங்கள் புரிய வைக்க முடியும். யார் நன்றாகப் படிக்கின்றார்களோ அவர்கள் சூரியவம்சியாக ஆனார்கள். யார் படிப்பில் தோல்வி அடைந்தார்களோ அவர்களுக்கு சந்திரவம்சி என்ற பட்டம் கொடுக்கப்படுகின்றது, மற்றபடி சண்டைபோடுவதற்கான விசயம் இல்லை. குழந்தைகளே என்னை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய பாவங்கள் அழிந்துவிடும் என தந்தை கூறுகின்றார். நீங்கள் பாவங்களின் மீது வெற்றி பெற வேண்டும். யார் காம விகாரத்தின் மீது வெற்றி பெறுகின்றார்களோ அவர்களே உலகத்தின் மீதும் வெற்றி பெறுவார்கள் என தந்தை அறிவுறுத்துகின்றார். அரைக் கல்பத்திற்குப் பிறகு கீழே இறங்கும் மார்க்கம் வருகின்றது, அதற்கான சித்திரங்களும் இருக்கின்றது, தோற்றத்தை தேவாத்மாக்களின் ரூபத்தில் உருவாக்கியுள்ளனர். இராம இராஜ்ஜியமும், இராவண இராஜ்யமும் பாதிப்பாதி காலங்களில் நடக்கின்றது. பிறகு என்ன நடந்தது என கேள்விகளை எழுப்பி, இதனை கதை போன்று உருவாக்க வேண்டும். இது தான் சத்ய நாராயணரின் கதையாகும். சத்யமானவர் ஒரு தந்தை மட்டுமே, அவரே இந்த நேரம் வந்து முழு உலகத்தின் மூன்று கால ஞானத்தைத் தருகின்றார், இதனை வேறு யாரும் தரமுடியாது. மனிதர்கள் தந்தையை அறியாமல் இருக்கின்றனர். எந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்களோ அதனுடைய படைப்பவர், டைரக்டரை தெரியாமல் இருக்கின்றனர், பிறகு மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள். நாடக அனுசாரப்படி இவையெல்லாம் மீண்டும் நடக்கத்தான் செய்யும் என தந்தை கூறுகின்றார். தந்தை வந்து மீண்டும் குழந்தைகளுக்கு கல்வியைக் கற்றுக் கொடுப்பார். இங்கு வேறு யாரும் வர முடியாது. நான் குழந்தைகளுக்கு மட்டுமே கற்பிக்கின்றேன், புதியவர்களை இங்கு அமர்த்த முடியாது. இந்திரபிரஸ்தம் பற்றிய கதையும் இருக்கின்றதல்லவா! நீலாம்பரி, காதம்பரி (மரகதம்) என்ற பெயரும் இருக்கின்றது. குழந்தைகளில் கூட சிலர் வைரம் போன்று இருக்கின்றனர். ரமேஷ் குழந்தையைப் பாருங்கள், அவர் கண்காட்சிக்கான சித்திரத்தை மிகவும் சிந்தனை செய்து உருவாக்கினார், ஆக இது வைரம்போன்ற காரியமல்லவா! சிலர் (மரகதம் போன்ற) எப்படியெல்லாம் இருக்கின்றனர், எதையும் புரியாமலே இருக்கின்றனர். இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதையும் அறிந்துள்ளீர்கள், அந்த இராஜ்யத்தில் இராஜா, இராணி உட்பட அனைவரும் தேவை. நாம் பிராமண குழந்தைகள் ஸ்ரீமத்படி நடந்து படித்து உலகத்திற்கு அதிபதியாக ஆகின்றோம், ஆகவே எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். இந்த மரண உலகம் முடியத்தான் வேண்டும். நான் அடுத்தபடியாக குழந்தையாக ஆகப்போகின்றேன் என இந்த பிரம்மா பாபாவும் அறிந்துள்ளார், அந்த குழந்தைப் பருவத்திற்கான விசயங்கள் இப்பொழுதே பாபாவின் கண்முன் தென்படுகின்றது, இதன் மூலம் நடைமுறை பழக்கங்களே மாறிவிடுகிறது. இதே போன்று அங்கு வயோதிக நிலை அடைந்த பிறகு இந்த வானப்பிரஸ்தமான உடலை விட்டு விட்டு குழந்தைப் பருவத்திற்குச் சென்றுவிடுவோம் என புரிந்துகொள்வார்கள். குழந்தைப்பருவம் என்பது சதோபிர தானமான நிலையாகும். இலட்சுமி-நாராயணரின் நிலை வாலிப நிலையாகும், திருமணமும் ஏற்பட்டுவிடும், எனவே, அதனை குழந்தைப் பருவநிலை என கூறமுடியாது. வாலிப நிலையை இரஜோ என்றும், வயோதிக நிலையை தமோ என்றும் கூறப்படுகின்றது. எனவே கிருஷ்ணர் மீது அனைவருக்கும் அதிகமாக அன்பு இருக்கின்றது, ஆனாலும் அவர்தான் இலட்சுமி-நாராயணருடைய ஆத்மாவாக இருப்பார். ஆனாலும் மனிதர்களுக்கு இந்த விசயம் தெரியாது. கிருஷ்ணரை துவாபரயுகத்திலும், இலட்சுமி-நாராயணரை சத்யுகத்திலும் கொண்டு வந்து விட்டனர். நீங்கள் இப்பொழுது தேவதைகளாக ஆவதற்கான முயற்சி செய்கின்றீர்கள்.

குமாரிகள் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என தந்தை கூறுகின்றார், அதர்குமாரி, பாலகுமாரி, மேலும் தில்வாடா போன்ற கோவில்கள் உங்களுடைய சரியான நினைவுச் சின்ன மாகும். அங்கு ஜடமாக இருக்கின்றனர், இங்கு நீங்கள் சைத்தன்யமாக இருக்கின்றீர்கள், பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றீர்கள். சொர்க்கம் என்பது இங்கு தான் உருவாகின்றது. மூலவதனம், சூட்சுமவதனம் எங்கு இருக்கின்றது என்பதும் குழந்தைகள் உங்களுக்குத் தெரியும். முழு நாடகத்தையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். எது கடந்த காலமோ அதுவே மீண்டும் எதிர்காலமாகி பிறகு கடந்தகாலமாகும். உங்களுக்கு கற்றுத் தருவது யார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு பகவான் கற்பிக்கின்றார் என்ற மகிழ்ச்சியில் தாளம் போட வேண்டும். தந்தையின் நினைவு மூலமாக அனைத்து கஷ்டங்களும் நீங்கிவிடும். பாபா நம்முடைய தந்தை யாகவும், நமக்கு படிப்புத் தருபவராகவும் மேலும் நம்மை தன்னோடு அழைத்துச் செல்பவராகவும் இருக்கின்றார். தன்னைத்தான் ஆத்மா என புரிந்து கொண்டு பரமாத்ம தந்தையோடு இப்படிப்பட்ட விசயங்களைப் பேச வேண்டும். பாபா எங்களுக்கு இப்பொழுது அனைத்தும் தெரிந்து விட்டது, பிரம்மா மற்றும் விஷ்ணு பற்றியும் தெரிந்துவிட்டது, விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வெளிப் பட்டதாகவும், விஷ்ணுவை பாற்கடலில் இருப்ப தாகவும் காட்டப்படுகின்றது. பிரம்மாவை சூட்சும உலகத்தில் காட்டப்பட்டாலும் அவர் இங்குதான் இருக்கின்றார். விஷ்ணு உலக இராஜ்யம் செய்பவராவார். விஷ்ணுவிலிருந்து பிரம்மா வெளிப்பட்டால் பிரம்மாவும் இராஜ்யம் செய்பவராக ஆகிவிடுவார். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றினால் அவர் விஷ்ணுவின் குழந்தை யாக ஆகிவிடுவார். இந்த விசயங்களை சிலர் முழுமையாக புரிந்து கொள்ளாததால் அந்தளவிற்கு மகிழ்ச்சி நிறைந்திருப்பதில்லை. கோபிவல்லபரின் கோபியர்கள் நீங்கள் தான், சத்யுகத்தில் இவ்வாறு இருப்பதில்லை. அங்கு நீங்கள் இளவரசனாக, இளவரசியாக இருப்பீர்கள். இப்பொழுது கோபியர்களின் தலைவன் கோபிவல்லபர் அல்லவா! பிரஜாபிதா பிரம்மா அனைவருக்கும் தந்தையாகவும் மற்றும் நிராகாரமான சிவதந்தை அனைத்து ஆத்மாக்களின் தந்தையாகவும் இருக்கின்றார்கள். இங்கு அனைவரும் முகவம்சாவளியாக இருக்கின்றனர். நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார், குமாரிகளாக, சகோதரன்-சகோதரிகளாக ஆகிவிட்டீர்கள். எனவே குற்றமான பார்வை இருக்கமுடியாது, இதில் தான் மாயா தோல்வி ஏற்படுத்துகின்றது. இதுவரை என்ன படித்தீர்களோ அதனை புத்தி மூலம் மறந்துவிடுங்கள், நான் சொல்வதை மட்டும் படியுங்கள். ஏணிப்படி சித்திரம் மிகவும் நல்லது, கீதையின் பகவான் யார்? இந்த ஒரு விசயம் தான் முக்கிய மான ஆதாரமாகும். கிருஷ்ணரை பகவான் எனக் கூற முடியாது, அவர் சர்வகுணங்களும் நிறைந்த தேவாத்மா. அவர் பெயரை கீதையில் எழுதிவிட்டார்கள். கிருஷ்ணரையும், இலட்சுமி-நாராயணரை யும் ஒரே மாதிரி கருப்பாகக் காட்டிவிட்டார்கள், எந்தவிதமான தெளிவும் இல்லை. இராமச் சந்திரனை கருப்பாக ஆக்கிவிட்டார்கள். காமச்சிதையில் ஈடுபட்டதால் கருப்பானதாக ஆகி விட்டார்கள் என தந்தை கூறுகின்றார். அடையாளமாக ஒருவரை எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நீங்கள் அனைவரும் பிராமணர்கள், இப்பொழுது நீங்கள் ஞானச்சிதையில் அமர்ந்துள்ளீர்கள். சூத்திரர்கள் காமச்சிதையில் அமர்ந்துள்ளனர். மிகவும் நன்றாக சிந்தனை செய்து மற்றவர்களை விழிப்படையவைப்பதற்கான யுத்திகளை உருவாக்க வேண்டும் என தந்தை கூறுகின்றார். நாடகத்தின் பதிவின் படி விழிப்படைவார்கள். நாடகம் மிகவும் மெதுவாக சுழல்கின்றது. நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தை களுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் கோபிவல்லவரின் கோப, கோபியர்கள் என்ற நினைவில் சதா இருக்க வேண்டும். இதே நினைவின் மூலம் சதா மகிழ்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்.

2. இதற்குமுன் நீங்கள் படித்ததை புத்தியின் மூலம் மறந்து தந்தை சொல்வதை மட்டும் படிக்க வேண்டும். நாம் அனைவரும் சகோதரன்-சகோதரிகள் என்ற இந்த நினைவின் மூலமாக குற்றமான பார்வையை நீக்க வேண்டும். மாயாவிடம் தோல்வியடையக் கூடாது.

வரதானம்:
சேவை மூலமாக ஒன்றிணைந்த நினைவின் மனநிலையை அனுபவம் செய்யக்கூடிய ஆன்மீக சேவாதாரி ஆகுக

பிராமண வாழ்க்கை சேவையின் வாழ்க்கையாகும். மாயையிடமிருந்து உயிரோடு இருப்பதற்கான உயர்ந்த சாதனம் சேவை ஆகும். சேவை ஒன்றிணைந்த நினைவின் சொரூபமாக மாற்றுகிறது ஆனால் வெறுமனே வாயின் (வார்த்தைகளின்) சேவை கிடையாது, கேட்டிருக்கும் (ஞானத்தின்) இனிமையான வார்த்தைகளின் சொரூபமாக மாறி சேவை செய்யுங்கள், சுயநலமற்ற சேவை செய்யுங்கள், தியாகம், தபஸ்யா வின் சொரூபம் மூலம் சேவை செய்யுங்கள், எல்லைக்குட்பட்ட ஆசைகளிலிருந்து விடுபட்டு ஆசையற்ற மனநிலையில் இருந்து சேவை செய்யுங்கள் - இதற்கு தான் கூறப்படுகிறது ஈஸ்வரிய மற்றும் ஆன்மீக சேவை என்று. வாயின் (வார்த்தைகளின்) கூடவே மனம் மூலமாக சேவை செய்வது என்றால் மன்மனாபவ மனநிலையில் நிலைத்திருப்பது ஆகும்.

சுலோகன்:
வடிவத்தை (பௌதீக உடலை) பார்க்காமல் நிராகார (பௌதீக உடலற்ற) தந்தையை பார்த்தீர்கள் என்றால் அப்பொழுது ஆகர்ஷண மூர்த்தியாக மாறிவிடுவீர்கள்.

அவ்யக்த சமிக்க்ஷை: சகஜயோகியாக ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவம் நிறைந்தவர் ஆகுங்கள்

பாப்தாதாவுக்கு தன்னுடைய ஒவ்வொரு குழந்தையும் தன்னைவிட மேலாக முன்னேற வேண்டும் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு குழந்தைகளிடம் அன்பு இருக்கிறது. உலகில், யார் மீது அதிகமாக அன்பு இருக்கிறதோ அவரை தன்னை காட்டிலும் மேலாக முன்னேற்றி விடுகிறார்கள். இதுதான் அன்பின் அடையாள மாகும். எனவே பாப்தாதாவும் கூறுகிறார் - என்னுடைய குழந்தை களிடம் இப்பொழுது எந்த ஒரு குறையும் இருக்க கூடாது, அனைவரும் சம்பூர்ண, சம்பன்ன மற்றும் (தந்தைக்கு) சமமானவர் ஆகி விட வேண்டும். இந்த பரமாத்ம அன்புதான் சகஜயோகியாக மாற்றி விடுகிறது.