25-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் வெகு
காலத்திற்குப் பிறகு மீண்டும் தந்தையை சந்திக்கின்றீர்கள்,
ஆகையால் நீங்கள் மிக மிக செல்லமானவர்கள்.
கேள்வி:
தனது ஸ்திதியை (மனநிலை) ஒரே
ரசனையில் (ஏக்ரஸ்) வைத்திருப்பதற்கான சாதனம் என்ன?
பதில்:
எந்த விநாடி கடந்து முடிந்ததோ அது
நாடகம் என்பதை சதா நினைவில் வையுங்கள். கல்பத்திற்கு முன்பும்
இவ்வாறு நடந்திருந்தது. இப்பொழுது புகழ்-இகழ், மானம்-அவமானம்
அனைத்தும் எதிரில் வரயிருக்கிறது. ஆகையால் தனது ஸ்திதியை ஏக்ரஸ்
ஆக ஆக்குவதற்கு கடந்தவைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக்
கொண்டிருக்கின்றார். ஆன்மீகத் தந்தையின் பெயர் என்ன? சிவபாபா.
அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். அனைத்து ஆன்மீகக்
குழந்தைகளின் பெயர் என்ன? ஆத்மா. தேகத்திற்குப் பெயர்
வைக்கப்படுகிறது, ஆத்மாவிற்கு பெயர் அது தான். பல சத்சங்கங்கள்
உள்ளன என்பதையும் குழந்தைகள் அறிவீர்கள். இது தான் உண்மையிலும்
உண்மையான சத்தியமானவரின் சங்கமாகும், இங்கு சத்திய தந்தை
இராஜயோகம் கற்பித்து நம்மை சத்யுகத் திற்கு அழைத்துச்
செல்கிறார். இந்த மாதிரி வேறு எந்த சத்சங்கமோ அல்லது பாடசாலையோ
இருக்க முடியாது. இதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
முழு சிருஷ்டிச் சக்கரமும் குழந்தைகளாகிய உங்களது புத்தியில்
இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாக
இருக்கிறீர்கள். இந்த சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது?
என்பதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். சக்கரத்தின் (படத்தின்)
முன் அழைத்துச் சென்று நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும்
புரிய வைக்கலாம். இப்பொழுது நீங்கள் இந்த பக்கம் செல்வீர்கள்.
தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று
ஜீவாத்மாக்களுக்கு தந்தை கூறுகின்றார். இது புதிய விசயமல்ல.
கல்ப கல்பமாக கேட்கிறோம், இப்பொழுது மீண்டும் கேட்டுக்
கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள். உங்களது புத்தியில் எந்த
ஒரு தேகதாரி தந்தை, ஆசிரியர், குரு கிடையாது. தேகமற்ற சிவபாபா
தான் நமது ஆசிரியர், குரு என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு
எந்த சத்சங்கம் போன்றவைகளின் இந்த மாதிரியான விசயங்கள் பேச
மாட்டார் கள். மதுவனம் என்பது இது ஒன்று தான். நாம் சத்யுகம்,
திரேதாவி-ருந்து மறுபிறப்பு எடுத்து எடுத்து இப்பொழுது
சங்கமத்தில் புருஷோத்தம் ஆவதற்காக நின்று கொண்டிருக்கிறோம்
என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. தந்தை வந்து நமக்கு
நினைவுபடுத்தியிருக்கின்றார். 84 பிறவிகள் யார்? எப்படி
எடுக்கின்றனர்? என்பதையும் நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் கூறத்
தான் செய்கின்றனர், ஆனால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது.
தந்தை நல்ல முறையில் புரிய வைக்கின்றார். சத்யுகத்தில் சதோ
பிரதான ஆத்மாக்கள் இருந்தனர், சரீரமும் சதோ பிரதானமாக இருந்தது.
இந்த கால கட்டம் சத்யுகம் கிடையாது, இது க-யுகமாகும்.
தங்கயுகத்தில் நாம் இருந்தோம். பிறகு சக்கரத்தில் வந்து
மறுபிறவி எடுத்து எடுத்து நாம் இரும்பு யுகத்திற்கு வந்து
விட்டோம். பிறகு சக்கரத்தில் மீண்டும் அவசியம் வர வேண்டும்.
இப்பொழுது நமது வீட்டிற்குத் திரும்ப வேண்டும். நீங்கள்
செல்லமான குழந்தைகள் அல்லவா! யார் காணாமல் போய், வெகு
காலத்திற்குப் பிறகு கிடைக்கிறார்களோ அவர்கள் தான்
செல்லமானவர்கள். நீங்கள் 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு
கிடைத்திருக்கிறீர்கள். 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு இந்த
சிருஷ்டிச் சக்கரத் தின் ஞானம் கொடுத்திருந்த தந்தை இவர் தான்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். சுயதரிசன
சக்கரதாரிகளாக ஆக்கியிருந்தார். இப்பொழுது மீண்டும் தந்தை
கிடைத் திருக்கின்றார். பிறப்புரிமை கொடுப்பதற்காக. இங்கு தந்தை
தன்னை யார் என உணர வைக் கின்றார். இதில் ஆத்மாவின் 84
பிறவிகளைப் பற்றியும் உணர வைத்து விடுகின்றார். இவை அனைத்தையும்
தந்தை வந்து புரிய வைக்கின்றார். எவ்வாறு 5 ஆயிரம் ஆண்டிற்கு
முன்பும் புரிய வைத்திருந்தார் - மனிதனை தேவதையாக அல்லது ஏழைகளை
செல்வந்தர்களாக ஆக்குவதற்காக! நாம் 84 பிறப்புகளை
எடுத்திருக்கிறோம், யார் எடுக்கவில்லையோ அவர்கள் இங்கு கற்றுக்
கொள்ள வர மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்.
சிலர் குறைவாகப் புரிந்து கொள்வர். வரிசைக்கிரமம் இருக்கிறது
அல்லவா! அவரவர்களது இல்லறத்தில், வீட்டில் இருக்க வேண்டும்.
அனைவரும் இங்கு வந்து அமர்ந்து விட்டாôர்கள். யார் மிக நல்ல
பதவியடைய வேண்டுமோ அவர்கள் புத்துணர்வு அடைவதற்காக இங்கு
வருவார்கள். குறைந்த பதவி யடையக் கூடியவர்கள் அதிகம் முயற்சி
செய்யமாட்டார்கள். இந்த ஞானம் அப்படிப்பட்டது, அதாவது சிறிது
முயற்சி செய்தாலும் அது வீண் போகாது. தண்டனை அடைந்து வந்து
விடுவார்கள். நன்றாக முயற்சி செய்தால் தண்டனையும் குறைந்து
விடும். நினைவு யாத்திரையின்றி விகர்மங்கள் விநாசம் ஆகாது.
இந்த நினைவை அடிக்கடி தனக்குள் கொண்டு வாருங்கள். எந்த மனிதனை
சந்தித்தாலும் முத-ல் தன்னை ஆத்மா என உணருங்கள் என்று
அவர்களுக்குப் புரிய வையுங்கள். இந்த பெயர்கள் சரீரத்திற்குத்
தான் கிடைக்கிறது, சரீரத்தின் பெயரை வைத்து தான் யாரையாவது
அழைக்க முடியும். இந்த உலகிற்குத் தான் எல்லையற்ற தந்தையை
ஆன்மீகக் குழந்தைகள் அழைக் கின்றனர். ஆன்மீகத் தந்தை
வந்திருக்கின்றார் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆன்மீகக்
குழந்தைகளே என்று தந்தை கூறுவார். முத-ல் ஆத்மா, பிறகு தான்
குழந்தைகளின் பெயரை பயன்படுத்துகின்றார். ஆன்மீகத் தந்தை என்ன
புரிய வைக்கின்றார்? என்பதை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். சிவபாபா இந்த பாக்கிய ரதத்தில்
அமர்ந்திருக் கின்றார், நமக்கு அதே இராஜ யோகத்தைக் கற்பித்துக்
கொண்டிருக்கின்றார் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. வேறு
எந்த மனிதனிடத்திலும் தந்தை வந்து இராஜயோகம் கற்பிப்பது
கிடையாது. அந்த தந்தை வருவதே புருஷோத்தம சங்கமயுகத்தில், வேறு
எந்த மனிதனும் இவ்வாறு கூற முடியாது, புரிய வைக்கவும் முடியாது.
இந்த போதனைகள் இந்த தந்தையினுடையது (பிரம்மா பாபாவினுடையது)
அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். க-யுகம் அழிந்து சத்யுகம்
வரும் என்பது இவருக்கும் தெரியாது. இவருக்கு இப்பொழுது எந்த
தேகதாரி குருக்களும் கிடையாது, எனக்கு இன்னார் குருவாக
இருக்கின்றார் என்று மற்ற மனிதர்கள் அனைவரும் கூறுவர். இன்னார்
ஜோதி ஜோதியுடன் ஐக்கியமாகி விட்டார் என்று கூறுவர்.
அனைவருக்கும் தேகதாரி குருக் கள் உள்ளனர். தர்ம ஸ்தாபகர்களும்
தேகதாரிகள் ஆவர். இந்த தர்மத்தை ஸ்தாபனை செய்தது யார்? பரம்பிதா
பரமாத்மா திரிமூர்த்தி சிவபாபா பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை
செய்திருக்கின்றார். இவரது சரீரத்தின் பெயர் பிரம்மா. கிறிஸ்து
இந்த தர்மத்தை ஸ்தாபனை செய்தார் என்று கிறிஸ்தவர்கள் கூறுவர்.
அவர் தேகதாரி ஆவார். சித்திரமும் இருக்கிறது. இந்த தர்ம
ஸ்தாபகரைப் பற்றி எந்த சித்திரம் காண்பிப்பீர்கள்? சிவனின்
சித்திரத்தையும் சிலர் பெரிதாகவும், சிலர் சிறிதாகவும்
உருவாக்குகின்றனர். அவர் பிந்து அல்லவா! பெயர், உருவமும்
இருக்கிறது, ஆனால் அவ்யக்தமாக (சரீரமின்றி) இருக்கின்றார்.
இந்த கண்களினால் பார்க்க முடியாது. சிவபாபா குழந்தைகளாகிய
உங்களுக்கு இராஜ்ய பாக்கியத்தைக் கொடுத்துச் சென்றிருந்தார்,
அதனால் தான் நினைவு செய்கிறீர் கள் அல்லவா! சிவபாபா
கூறுகின்றார் - மன்மனாபவ! ஒரு தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள். யாருடைய புகழையும் பாடாதீர்கள். ஆத்மாவின்
புத்தியில் எந்த தேகத்தின் நினைவும் வரக்கூடாது. இது நல்ல
முறையில் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நமக்கு சிவபாபா
கற்பிக்கின்றார். முழு நாளும் இதை திரும்பத் திரும்ப படித்துக்
கொண்டே இருங்கள். சிவபகவானின் மகாவாக்கியம் - முதன் முத-ல்
அல்லாவைத் தான் புரிந்துக் கொள்ள வேண்டும். இதை பக்கா செய்யாமல்
ஆஸ்தியைப் பற்றி கூறினால் எதுவும் புத்தியில் அமராது. இந்த
விசயம் சரியானது தான் என்று சிலர் கூறுகின்றனர். இதைப்
புரிந்துக் கொள்வதற்கு நேரம் தேவை என்று சிலர் கூறுகின்றனர்.
யோசிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். பலதரப்பட்டவர் கள்
வருகின்றனர். இது புது விசயமாகும். பரம்பிதா பரமாத்மா சிவன்
ஆத்மாக்களுக்கு வந்து கற்பிக்கின்றார். மனிதர் களுக்குப் புரிய
வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற சிந்தனை தோன்றுகிறது.
சிவன் தான் ஞானக் கடல் ஆவார். ஆத்மாவை ஞானக்கடல் என்று எப்படி
கூற முடியும்? அவருக் கென்று சரீரமே கிடையாது. ஞானக்கடல்
என்றால் எப்பொழுதாவது அவசியம் ஞானம் கூறியிருக்க வேண்டும்.
அதனால் தான் அவரை ஞானக்கடல் என்று கூறுகிறோம். அப்படியே
கூறிவிடுவது கிடையாது. யாராவது அதிகம் படித்திருக்கின்றனர்
எனில் இவர் நிறைய வேதம், சாஸ்திரங்களைப் படித்திருக்கின்றார்
என்று கூறுவர். அதனால் தான் சாஸ்திரி அல்லது வித்வான் என்று
கூறப்படு கின்றனர். தந்தை ஞானக் கடல் என்று கூறப்படுகின்றார்.
அவசியம் இருந்து சென்றிருக்கின்றார். இப்பொழுது க-யுகமா? அல்லது
சத்யுகமா? புது உலகமா? அல்லது பழைய உலகமா? என்று முத-ல் கேட்க
வேண்டும். இலட்சியம் உங்கள் முன்பு இருக்கிறது. இந்த லெட்சுமி
நாராயணன் இருந்திருந் தால் அவர்களது இராஜ்யம் இருந்திருக்கும்.
இந்த பழைய உலகம், ஏழை உலகில் இருக்க முடியாது. இப்பொழுது
அவர்களது சிலைகள் மட்டுமே உள்ளன. கோயில்களில் மாதிரி களைக்
காண்பிக்கின்றனர். அவர்களது மாளிகை, பூந்தோட்டம் போன்றவைகள்
எவ்வளவு பெரிது பெரிதாக இருக்கும்! கோயில்களில் மட்டுமே இருந்து
விடமாட்டார்கள். ஜானாதி பதியின் மாளிகை எவ்வளவு பெரிதாக
இருக்கிறது! தேவி தேவதைகள் பெரிய பெரிய மாளிகைகளில்
இருப்பார்கள். அதிக நிலங்கள் இருக்கும். அங்கு பயம் போன்ற
விசயங்களே இருக்காது. சதா நந்தவனமாக இருக்கும். முட்கள்
இருக்கவே இருக்காது. அது பூந்தோட்ட மாகும். அங்கு விறகு போன்றவை
களை எரிக்க மாட்டார்கள். விறகு எரிக்கும் பொழுது புகை வரும்,
அதனால் துக்கம் ஏற்படும். அங்கு நாம் மிகக் குறைவாகத் தான்
இருப்போம். பின் நாட்களில் விருத்தியடைந்து கொண்டே செல்லும்.
மிக நல்ல நல்ல தோட்டங்கள் இருக்கும், நறுமணம் வந்து கொண்டே
இருக்கும். முட்களின் காடு இருக்கவே இருக்காது. இப்பொழுது அதைப்
பார்க்கவில்லை, ஆனால் உணர முடிகிறது. நீங்கள் தியானத்தின்
பொழுது பெரிய பெரிய மாளிகை போன்றவைகளை பார்த்து வருகிறீர்கள்,
அது போல் இங்கு உருவாக்க முடியாது. சாட்சாத்காரம் ஏற்படும்,
பிறகு மறைந்து விடும். சாட்சாத்காரம் செய்திருக்கிறீர்கள்
அல்லவா! அரசர்கள், இளவரசர், இளவரசி இருப்பர். மிகவும்
ரமணீகரமான சொர்க்கம் ஆகும். எவ்வாறு இங்கு மைசூர் போன்றவைகள்
ரமணீகரமாக இருக்கிறதோ, அதே போன்று அங்கு மிக நன்றாக தென்றல்
வீசிக் கொண்டிருக்கும். நீரோடைகள் ஒடிக் கொண்டே இருக்கும். நாம்
நல்ல நல்ல உணவுகளை உருவாக்குவோம் என்று ஆத்மா புரிந்திருக்கிறது.
ஆத்மாவிற்கு சொர்க்கத்தின் நினைவு வருகிறது அல்லவா!
அங்கே என்ன என்ன இருக்கும்? நாம் எப்படி இருப்போம்? போன்ற
நினைவுகள் குழந்தைகளாகிய உங்களால் உணர முடிகிறது. இந்த
நேரத்தில் இந்த நினைவு இருக்கிறது. சித்திரங்களைப் பாருங்கள் -
நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள்! அங்கு
துக்கத்திற்கான எந்த விசயமும் இருக்காது. நாம் சொர்க்கத்தில்
இருந்தோம், பிறகு கீழே இறங்கினோம். இப்பொழுது மீண்டும்
சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். எப்படிச் செல்வது? கயிற்றால்
கட்டிக் கொண்டு செல்வீர்களா என்ன? ஆத்மாக்களாகிய நாம்
வசிக்கக்கூடிய இடம் சாந்திதாமம் ஆகும். நீங்கள் இப்பொழுது
தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களையும் ஆக்கிக்
கொண்டிருக் கிறீர்கள் என்ற நினைவை தந்தை ஏற்படுத்தி
யிருக்கின்றார். எத்தனையோ பேர் வீட்டில் அமர்ந்தபடியே
சாட்சாத்காரம் செய்கின்றனர்! பந்தனமுள்ள தாய்மார்கள்
ஒருபொழுதும் பார்த்தது கூட கிடையாது. ஆத்மாவிற்கு ஆர்வம்
ஏற்படுகிறது. தனது வீடு நெருக்கத்தில் வருகின்ற பொழுது
ஆத்மாவிற்கு குஷி ஏற்படும். பாபா நமக்கு ஞானம் கொடுத்து
அலங்கரிக்க வந்திருக்கின்றார் என்பதைப் புரிந்திருக் கிறீர்கள்.
செய்தித்தாள்களில் செய்தி வரக்கூடிய நாளும் வரும். இப்பொழுது
புகழ்-இகழ், மானம்-அவமானம் அனைத்தும் எதிரில் வருகின்றன.
கல்பத்திற்கு முன்பும் இவ்வாறு நடந்திருந்தது என்பதை அறிவீர்கள்.
எந்த விநாடி கடந்து முடிந்ததோ அதைப் பற்றிய சிந்தனை செய்யக்
கூடாது. செய்திதாள்களில் கல்பத்திற்கு முன்பும் இம்மாதிரியான
செய்திகள் வந்திருந்தன. பிறகு முயற்சியும் செய்ய
வேண்டியிருக்கிறது. என்ன குழப்பங்கள் ஏற்பட்டதோ அது ஏற்பட்டு
விட்டது. பெயர் ஏற்பட்டு விட்டது அல்லவா! பிறகு நீங்கள் பதிலும்
அளிக்கிறீர்கள். சிலர் படிக்கின்றனர், சிலர் படிப்பது கிடையாது.
நேரம் கிடைப்பது கிடையாது. மற்ற காரியங்களில் ஈடுபட்டு
விடுகின்றனர். இது எல்லையற்ற மிகப் பெரிய நாடகம் என்பது
இப்பொழுது உங்களது புத்தியில் இருக்கிறது. டிக் டிக் என்று
சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு விநாடியில் எது கடந்து
முடிந்ததோ அது மீண்டும் 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு திரும்பவும்
நடைபெறும். எது நடந்து விட்டதோ, ஒரு விநாடிக்குப் பிறகு
நினைவிற்கு வருகிறது. இந்த தவறு ஏற்பட்டு விட்டது, நாடகத்தில்
பதிவாகி விட்டது. கல்பத்திற்கு முன்பும் இவ்வாறு தவறு ஏற்பட்டு
இருந்தது, கடந்து முடிந்து விட்டது. இப்பொழுது எதிர்காலத்தில்
இவ்வாறு செய்யக் கூடாது. முயற்சி செய்து கொண்டே இருக்கிறீர்கள்.
அடிக்கடி இம்மாதிரியான தவறுகள் செய்வது நல்லதல்ல, இந்த காரியம்
நல்ல காரியம் அல்ல என்று நீங்கள் புரிய வைக்கப்படுகிறீர்கள்.
நான் கெட்ட காரியம் செய்து விட்டேன் என்று உள்ளம் உருத்திக்
கொண்டே இருக்கும். இவ்வாறு செய்யாதீர்கள், யாருக்கும் துக்கம்
கொடுக்காதீர்கள் என்று தந்தை எச்சரிக்கை செய்கின்றார்.
கேட்காமல் பொருட்களை எடுத்துக் கொள்வது என்பது திருட்டு என்று
கூறப்படுகிறது, இப்படிப்பட்ட காரியங்கள் செய்யா தீர்கள் என்று
தந்தை கூறுகின்றார். கடுமையான வார்த்தைகள் பேசாதீர்கள். இன்றைய
உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கிறீர்கள் - எந்த
வேலைக்காரன் மீதும் கோபப்பட்டால் அவர் எதிர்ப்பு தெரிவிக்க
ஆரம்பித்து விடுகின்றார். அங்கு சிங்கம்-பசு தங்களுக்குள்
அன்பாக இருக்கும். உப்புத் தண்ணீர் மற்றும் அன்பாக இருப்பது
எவ்வளவு வித்தியாசம். சத்யுகத்தில் அனைத்து மனித ஆத்மாக்களும்
தங்களுக்குள் அன்பாôக இருப்பார்கள். மேலும் இந்த இராவண உலகில்
அனைத்து மனிதர்களும் உப்புத் தண்ணீர் போன்று இருக்கின்றனர்.
தந்தை, குழந்தையும் உப்புத் தண்ணீராக இருக்கின்றனர். காமம்
மிகப் பெரிய எதிரி அல்லவா! காமத்தில் சென்று ஒருவருக் கொருவர்
துக்கம் கொடுத்துக் கொள்கின்றனர். இந்த முழு உலகமும் உப்புத்
தண்ணீராக இருக்கிறது. சத்யுக உலகம் அன்பானது (பாற்கடல் போன்றது).
இந்த விசயங்களை உலகத்தினர் எப்படி அறிந்து கொள்ள முடியும்?
மனிதர்கள் சொர்க்கத்தை இலட்சம் ஆண்டுகள் என்று கூறிவிட்டனர்.
ஆக எந்த விசயமும் புத்தியில் வர முடியாது. யார் தேவதைகளாக
இருந்தார்களோ அவர்களுக்குத் தான் நினைவிற்கு வரும். இந்த
தேவதைகள் சத்யுகத்தில் இருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
யார் 84 பிறவிகள் எடுத்திருக் கிறார்களோ அவர்களே மீண்டும் வந்து
படிப்பார்கள் மற்றும் முள்ளி-ருந்து மலர்களாக ஆவார்கள். இது
தந்தையின் ஒரே ஒரு பல்கலைக்கழகமாகும், இதன் கிளைகள் உருவாகிக்
கொண்டே இருக்கின்றன. எப்பொழுது இறைவன் வருகின்றாரோ அப்பொழுது
அவருக்கு உதவியாளர் களாக ஆவீர்கள், உங்கள் மூலமாக சுயம் இறைவன்
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வார். நாம் இறைவனின் உதவியாளர்கள்
என்பதை நீங்கள் புரிந்திருக் கிறீர்கள். அவர்கள் பௌதீக உதவி
செய்கின்றனர், இது ஆன்மீகமாகும். ஆத்மாக்களாகிய நமக்கு பாபா
ஆன்மீக சேவை செய்ய கற்றுக் கொடுக்கின்றார், ஏனெனில் ஆத்மா தான்
தமோ பிரதானமாக ஆகிவிட்டது. மீண்டும் பாபா சதோ பிரதானமாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றார். என் ஒருவனை நினைவு செய்தால் விகர்மங்கள்
விநாசம் ஆகிவிடும் என்று பாபா கூறுகின்றார். இது யோக அக்னி
யாகும். பாரதத்தின் பழமையான யோகா என்று பாடப்பட்டிருக்கிறது
அல்லவா! செயற்கை யோகா அதிகரித்து விட்டன. ஆகையால் நினைவு
யாத்திரை என்று கூறுவது சரியானது என்று பாபா கூறுகின்றார்.
சிவபாபாவை நினைவு செய்து செய்து நீங்கள் சிவபுரிக்குச் சென்று
விடுவீர்கள். அது சிவபுரி ஆகும், அது விஷ்ணுபுரி ஆகும். இது
இராவணபுரி ஆகும். விஷ்ணுபுரிக்கு பின்பு இராமபுரி ஆகும்.
சூரியவம்சிக்கு பின் சந்திரவம்சி ஆகும். இது பொதுவான விசயமாகும்.
அரைக் கல்பம் சத்யுகம்-,திரேதா யுகம், அரைக் கல்பம்
துவாபர-க-யுகமாகும். இப்பொழுது நீங்கள் சங்கமத்தில்
இருக்கிறீர்கள். இதையும் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். யார்
நல்ல முறையில் தாரணை செய்கிறார்களோ அவர்கள் தான்
மற்றவர்களுக்கும் புரிய வைக்கின்றனர். நாம் புருஷோத்தம
சங்கமயுகத்தில் இருக்கின்றோம். இது புத்தியில் இருந்தாலே முழு
நாடகமும் புத்தியில் வந்து விடும். ஆனால் க-யுக தேக
சம்மந்தங்களின் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. தந்தை கூறு
கின்றார் - நீங்கள் ஒரே ஒருவரை அதாவது தந்தையை மட்டுமே நினைவு
செய்ய வேண்டும். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல்,
இராஜயோகம் கற்பிக்கக் கூடியவர் ஒரே ஒருவர் ஆவார், அதனால் தான்
சிவபாபாவின் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, அவர் முழு உலகையும்
மாற்றி விடுகின்றார். இதை பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே
அறிவீர்கள், இப்பொழுது நாம் புருஷோத்தம சங்கமயுகத்தில்
இருக்கிறோம். யார் பிராமணர்களோ அவர்களது புத்தியில் தான்
படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மற்றவர்களுக்கு துக்கம் ஏற்படும் படியான எந்த காரியமும்
செய்யக் கூடாது. கசப்பான வார்த்தைகள் பேசக் கூடாது. மிகவும்
இனிமையாக இருக்க வேண்டும்.
2) எந்த தேகதாரியின் மகிமையும் செய்யக் கூடாது. நமக்கு சிவபாபா
கற்பிக்கின்றார், அந்த ஒருவரை மட்டும் தான் மகிமை செய்ய
வேண்டும், ஆன்மீக உதவியாளர்களாக ஆக வேண்டும் என்பது புத்தியில்
இருக்க வேண்டும்.
வரதானம்:
சுத்தமான எண்ணங்களின் விரதம் (திடதன்மை) மூலம் விருத்தியை (உள்ளுணர்வை)
மாற்றம் செய்யக் கூடிய மனம் என்னும் சிம்மாசனத்தில் அமர்பவர்
ஆகுக.
பாப்தாதாவினுடைய மன-சிம்மாசனம் அத்தனை அன்பானது அதாவது யார் சதா
அன்பான ஆத்மாக்களோ அவர்களே அதில் அமர முடியும். எண்ணத்தின்
அளவில் கூட யாருக்கு அபவித்ரதா அல்லது மரியாதைக்கு விரோதமானவை
வந்து விடுகின்றதோ- அவர்கள் சிம்மாசனதாரி ஆகு வதற்கு பதிலாக
இறங்கும் கலையில் கீழே வந்து விடுகின்றார்கள். எனவே சுத்தமான
எண்ணங்களை மட்டுமே எழுப்புவேன் என்ற விரதத்தின் மூலமாக முதலில்
தன்னுடைய விருத்தியை மாற்றம் செய்யுங்கள். விருத்தி மாறுவதன்
மூலமாக எதிர்கால வாழ்க்கை ரூபமான சிருஷ்டி (உலகம்) மாறிவிடும்.
சுத்தமான எண்ணங்களை மற்றும் திடமான எண்ணங்களை மட்டும்
எழுப்பக்கூடிய விரதத்தின் நேரடி பலன் தான் சதா காலத்திற்கும்
பாப்தாதாவின் மன சிம்மாசனம்.
சுலோகன்:
எங்கே சர்வ சக்திகள் இருக்கின்றதோ அங்கே தடைகளற்ற வெற்றி
இருந்தே தீரும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
இறுதிவாகன மனோநிலை (ஆத்மாவிற்கான) என்பதன் அர்த்தம் -கர்மபந்தனங்களிலிருந்து
விடுபட்ட, கர்மாதீத் மனோநிலை என்ற வாகனம் அதாவது கடைசி வாகனம்,
இதன் மூலம் தான் வினாடியில் கூடவே பறக்க முடியும். இதற்காக
அனைத்து எல்லைக்கு உட்பட்டதிலிருந்தும் கடந்து எல்லைக்கு
அப்பாற்பட்ட சொரூபத்தில், எல்லைக்கு அப்பாற்பட்ட சேவாதாரியாக,
அனைத்து எல்லைக்கு உட்பட்டதன் மீதும் வெற்றியை பெறக்கூடிய
வெற்றி இரத்தினம் ஆகுங்கள், அப்பொழுது தான் கடைசி நேர கர்மாதீத்
சொரூபத்தின் அனுபவி சொரூபம் ஆகுவீர்கள்.
|
|
|
|