26-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இந்த சங்கமயுகம்
விகர்மங்களை (பாவ செயல்களை) அழிப்பதற்கான யுகமாகும், இந்த
யுகத்தில் நீங்கள் எந்தவொரு பாவ கர்மங்களையும் செய்யக்கூடாது,
கண்டிப்பாக தூய்மையாக வேண்டும்
கேள்வி:
எந்த குழந்தைகளுக்கு அதீந்திரிய
சுகத்தின் அனுபவம் ஏற்படும்?
பதில்:
யார் அழிவற்ற ஞான ரத்தினங்களினால்
நிரம்பியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் அதீந்திரிய
சுகத்தின் அனுபவம் ஏற்படும். யார் எந்தளவிற்கு ஞானத்தை
வாழ்க்கையில் தாரணை செய்கிறார்களோ அந்தளவிற்கு செல்வந்தர்களாக
ஆகிறார்கள், ஒருவேளை ஞான ரத்தினங்களை தாரணை செய்யவில்லை என்றால்
ஏழைகளாவர். பாபா உங்களுக்கு கடந்த காலம், நிகழ்காலம் மற்றும்
எதிர்காலத்தின் ஞானத்தைக் கொடுத்து திரிகாலதரிசியாக மாற்றிக்
கொண்டிருக்கின்றார்.
பாடல்:
ஓம் நமோ சிவாய....................
ஓம் சாந்தி.
எது கடந்ததோ அது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது பிறகு
எது இப்போது நிகழ் காலமாக இருக்கிறதோ, அது கடந்த காலமாகி விடும்.
கடந்த காலத்தின் மகிமை பாடுகிறார் கள். நீங்கள் இப்போது
புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். புருஷோத்தம் என்ற
வார்த்தையை கண்டிப்பாக போட வேண்டும். நீங்கள் நிகழ்காலத்தை
பார்த்துக் கொண்டிருக்கிறீர் கள், கடந்த காலத்தின் மகிமை என்ன
பாடப்பட்டுள்ளதோ, அது இப்போது நடைமுறையில் நடந்து
கொண்டிருக்கிறது, இதில் எந்த சந்தேகத்தையும் கொண்டு வரக்கூடாது.
இது சங்கமயுகமாகவும் இருக்கிறது, கலியுகத்தின் கடைசியாகவும்
இருக்கிறது என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். உண்மையில்
சங்கமயுகம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடந்து விட்டது,
இப்போது இது நிகழ்காலமாகும். இப்போது பாபா வந்துள்ளார், எது
கடந்து விட்டதோ, அது தான் எதிர்காலமாகவும் இருக்கும்..தந்தை
இராஜயோகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், பிறகு நீங்கள்
சத்யுகத்தில் இராஜ்யத்தை அடைவீர்கள். இப்போது சங்கமயுகமாகும்.
இந்த விசயத்தை குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும்
தெரிந்திருக்கவில்லை. நீங்கள் நடைமுறையில் இராஜயோகம் கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள். இது மிகவும் சகஜமானதாகும். சிறிய மற்றும்
பெரிய குழந்தைகள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அனைவருக்கும்
பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் வினாசம் ஆகும்
என்ற ஒரு முக்கியமான விசயத்தை கண்டிப்பாகப் புரிய வைக்க
வேண்டும். பாவ கர்மங்கள் அழியக்கூடிய சமயத்தில் பாவ கர்மங்களை
செய்பவர்கள் யார் இருப் பார்கள். ஆனால் மாயை பாவ கர்மங்களை
செய்ய வைத்து விடுகிறது, எங்களின் மூலம் இந்த பெரிய தவறு நடந்து
விட்டது, அறை (அடி) விழுந்தது என்று புரிந்து கொள்கிறார்கள்.
அப்போது தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள்
என்று அழைக்கிறார்கள். இப்போது பாபா தூய்மையாக்க வந்துள்ளார்
எனும்போது தூய்மையாக வேண்டும் அல்லவா. ஈஸ்வரனுடை யவர்களாக ஆகி
விட்டு பிறகு தூய்மையற்றவர்களாக ஆகக்கூடாது. சத்யுகத்தில்
அனைவரும் தூய்மையாக இருந்தார்கள். இந்த பாரதமே தூய்மையாக
இருந்தது. நிர்விகார உலகம் மற்றும் விகார உலகம் என்று
பாடுகிறார்கள். தேவதைகள் முழுமையாக விகாரமற்றவர்கள், நாம்
விகாரி களாக இருக்கின்றோம் ஏனென்றால் நாம் விகாரத்தில்
செல்கின்றோம். விகாரம் என்ற பெயரே விஷத்தினுடையதாகும்.
தூய்மையற்றவர்கள் தான் வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று
அழைக்கிறார்கள். கோபக்காரர்கள் அழைப்பதில்லை. பிறகு பாபாவும்
நாடகத்தின் திட்டப்படி வருகின்றார். கொஞ்சம் கூட அவர் வரும்
சமயம் வித்தியாசப்படுவதில்லை. எது கடந்து விட்டதோ அது
நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்தகாலம், நிகழ்காலம்
மற்றும் எதிர் காலத்தை யார் தெரிந்திருக்கிறார்களோ அவர்களைத்
தான் திரிகாலதரிசி என்று சொல்லப் படுகிறது. இதை நினைவில் வைக்க
வேண்டும். இது அதிகம் முயற்சி செய்ய வேண்டிய விசய மாகும்.
அடிக்கடி மறந்து விடுகிறார்கள். இல்லையென்றால் குழந்தைகளுக்கு
எவ்வளவு அதீந்திரிய சுகம் இருக்க வேண்டும். நீங்கள் இங்கே
அழிவற்ற ஞான ரத்தினங்களின் மூலம் மிக-மிக செல்வந்தர் களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். யாருக்கு எந்தளவிற்கு தாரணை இருக் கிறதோ,
அந்தளவிற்கு அவர்கள் அதிகம் செல்வந்தர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறார்கள், புதிய உலகத்திற்காக. நாம் என்னவெல்லாம்
செய்கிறோமோ அவையெல்லாம் எதிர்கால புதிய உலகத்திற்காக என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா புதிய உலகத்தை ஸ்தாபனை
செய்வதற் காகவும் பழைய உலகத்தை அழிக்கவும் தான்
வந்திருக்கின்றார். அப்படியே கல்பத்திற்கு முன் போலவே தான்
நடக்கும். குழந்தைகளாகிய நீங்களும் பார்ப்பீர்கள். இயற்கை
சீற்றங்களும் நடக்க வேண்டும். பூகம்பம் வந்தது என்றால்
முடிந்தது. பாரதத்தில் எத்தனை பூகம்பங்கள் ஏற்படும். இது
நடக்கத்தான் வேண்டும் என்று நான் கூறுகின்றேன். கல்பத்திற்கு
முன்பு கூட நடந்தது ஆகை யினால் தான் தங்க துவாரகை கீழே சென்று
விட்டது என்று கூறுகின்றார்கள். நாம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு கூட இந்த ஞானத்தை பெற்றிருந்தோம் என்பதை புத்தியில்
நல்ல விதத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதில் கொஞ்சம் கூட
வித்தியாசம் இல்லை. பாபா 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட
நாங்கள் தங்களிடமிருந்து ஆஸ்தியை பெற்றிருந்தோம். நாங்கள் அனேக
முறை தங்களிடமிருந்து ஆஸ்தியை எடுத்திருந்தோம். அதை கணக்கிடவே
முடியாது. எத்தனை முறை நீங்கள் உலகத்திற்கு எஜமானர்களாக
ஆகின்றீர்கள், பிறகு எதுவுமில்லாதவர்களாக ஆகின்றீர்கள். இந்த
சமயத்தில் பாரதம் முழுமையாக எதுவுமற்றதாக இருக்கின்றது. நீங்கள்
நாடகத்தின் திட்டப் படி என்று எழுதவும் செய்கிறீர்கள். அவர்கள்
நாடகம் என்ற வார்த்தையை சொல்வதில்லை. அவர்களுடைய திட்டமே
தனிப்பட்டதாகும்.
நாடகத்தின் திட்டப்படி நாங்கள் மீண்டும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்போலவே ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள்
கூறுகின்றீர்கள். கல்பத்திற்கு முன்னால் என்ன காரியத்தை
செய்தீர்களோ, அதை இப்போதும் ஸ்ரீமத்படி செய்கின்றீர்கள்.
ஸ்ரீமத் மூலம் தான் சக்தியை அடைகிறீர்கள். சிவசக்தி என்ற பெயர்
கூட இருக்கிறது அல்லவா. எனவே நீங்கள் சிவ சக்திகள்
தேவிகளாவீர்கள், உங்களுடைய கோயில்களில் பூஜைகள் கூட நடக்கின்றன.
நீங்கள் தான் தேவிகளாவீர்கள் பிறகு நீங்கள் உலக இராஜ்யத்தை
அடைகிறீர்கள். நீங்களும் கூட உலகத்தை சொர்க்கமாக்குகின்றீர்கள்
எனவே உங்களுடைய பூஜை நடக்கிறது. அனேக தேவிகள் இருக்கிறார்கள்,
லக்ஷ்மிக்கு எவ்வளவு பூஜை செய்கிறார்கள். தீபாவளி நாளில்
மகாலக்ஷ்மியின் பூஜை செய்கிறார்கள். அவர் தான் தலைவி ஆவார்,
செல்வம் சேர்ந்தால் மகாலக்ஷ்மியின் கிருபை என்று நினைத்துக்
கொள்வார்கள். அவ்வளவு தான் வருடா-வருடம் பூஜை செய்கிறார்கள்.
நல்லது, அவரிடம் செல்வம் கேட்கிறார்கள், தேவியிடம் என்ன கேட்பது?
சங்கமயுக தேவிகளாகிய நீங்கள் சொர்க்கத்தை அடையும் வரத்தை
வழங்கக் கூடியவர்களாவீர்கள். அனைத்து மன ஆசைகளும்
பூர்த்தியாகிறது என்பது மனிதர்களுக்குத் தெரிவ தில்லை. நீங்கள்
தேவிகள் அல்லவா. மனிதர் களுக்கு ஞானத்தை தானம் செய்கிறீர்கள்,
அதன்மூலம் அனைத்து மன ஆசைகளையும் பூர்த்தி செய்து விடுகிறீர்கள்.
நோய் போன்றவைகள் வருகிறது என்றால் சரி செய்து விடு, காப்பாற்று
என்று தேவிகளிடம் கேட்பார்கள். அனேக விதமான தேவிகள்
இருக்கிறார்கள். நீங்கள் சங்கமயுக சிவசக்தி தேவிகளாவீர்கள்.
நீங்கள் தான் சொர்க்கத்தின் வரத்தை கொடுக்கின்றீர்கள். பாபாவும்
கொடுக்கின்றார், குழந்தைகளாகிய நீங்களும் கொடுக்கிறீர்கள்.
மகாலக்ஷ்மியை காட்டுகிறார்கள். நாராயணனை மறைத்து விட்டார்கள்.
பாபா குழந்தைகளாகிய உங்களுடைய செல்வாக்கை எவ்வளவு
உயர்த்துகின்றார். தேவிகள் 21 பிறவிகளுக்கு அனைத்து சுகத்தின்
ஆசைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். ஸ்ரீலக்ஷ்மியிடம் செல்வத்தை
கேட்கிறார்கள். செல்வத்திற்காகத் தான் மனிதர்கள் நல்ல தொழில்
போன்றவைகளை செய்கிறார்கள். பாபா வந்து உங்களை முழு
உலகத்திற்கும் எஜமானர்களாக்குகின்றார், அளவற்ற செல்வத்தை
கொடுக்கின்றார். ஸ்ரீ லக்ஷ்மி - நாராயணன் உலகத்திற்கு
எஜமானர்களாக இருந்தார்கள். இப்போது ஏழைகளாக இருக்கிறார்கள்.
இராஜ்யம் செய்தார்கள், பிறகு எப்படி மெது-மெதுவாக இறங்கும் கலை
ஏற்படுகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
மறுபிறவி எடுத்து-எடுத்து கலைகள் குறைந்து - குறைந்து இப்போது
எப்படிப்பட்ட நிலை வந்து சேர்ந்திருக்கிறது என்பதை பாருங்கள்!
இது கூட புதிய விசயம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு 5 ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
இப்போது பாரதம் எவ்வளவு ஏழையாகி விட்டது. இராவண இராஜ்யமாக
இருக்கிறது. எவ்வளவு உயர்ந்ததாக நம்பர் ஒன்னாக இருந்தது,
இப்போது கடைசி நம்பரில் வந்து விட்டது. கடைசியில் வரவில்லை
என்றால் பிறகு எப்படி முதல் நம்பரில் வருவது. கணக்கு இருக்கிறது
அல்லவா. பொறுமையாக ஞானத்தை சிந்தனை செய்து பார்த்தால் அனைத்து
விசயங் களும் தானாகவே புத்தியில் வந்து விடும். எவ்வளவு
இனிமையிலும் இனிமையான விசயங்களாக இருக்கிறது. இப்போது நீங்கள்
முழு சிருஷ்டி சக்கரத்தையும் தெரிந்து கொண்டீர்கள். படிப்பு
பள்ளியில் மட்டும் படிக்கப்படுவதில்லை. ஆசிரியர் வீட்டில்
படிப்பதற்கு பாடம் கொடுக்கின்றார், அதை வீட்டுப்பாடம் என்று
சொல்கிறார்கள். பாபாவும் கூட உங்களுக்கு வீட்டிற்காக படிப்பை
கொடுக்கின்றார். பகலில் தொழில் போன்றவற்றை செய்யுங்கள், சரீர
நிர்வாகம் என்னவோ செய்யத்தான் வேண்டும். அமிர்தவேளையில்
அனைவருக்கும் நேரம் இருக்கிறது. அதிகாலை இரண்டு மூன்று மணிக்கு
நேரம் மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த சமயத்தில் எழுந்து
பாபாவை அன்போடு நினைவு செய்யுங்கள். மற்றபடி இந்த விகாரங்கள்
தான் உங்களை முதல்-இடை-கடைசியில் துக்கமுடையவர்களாக
மாற்றியுள்ளது. இராவணனை எரிக்கிறார்கள் ஆனால் இதனுடைய அர்த்தம்
எதையும் தெரிந்திருக்கவில்லை. பரம்பரை பரம்பரையாக இராவணனை
எரிக்கும் வழக்கம் நடந்து வருகிறது அவ்வளவு தான். நாடகத்தின்படி
இது பதிவாகியிருக்கிறது. இராவணனை எரித்துக் கொண்டே
வந்துள்ளார்கள் ஆனால் இராவணன் இறப்பதே இல்லை. இந்த இராவணனை
எரிப்பது எப்போது நிற்கும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
இப்போது தெரிந்துள்ளீர்கள். நீங்கள் இப்போது உண்மையிலும்
உண்மையான சத்திய நாராயணனுடைய கதையை கேட்கிறீர்கள். நமக்கு
இப்போது தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். தந்தையை தெரியாத காரணத்தினால் தான் அனைவரும்
அனாதை களாக இருக்கிறார்கள். பாரதத்தை சொர்க்க மாக்கும் தந்தையை
கூட தெரிந்திருக்கவில்லை. இதுவும் கூட நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது. ஏணிப்படி இறங்கி தமோபிரதானமாக ஆகி
யுள்ளார்கள் அப்போது தான் பாபா வருகின்றார். ஆனால் தங்களை
தமோபிர தானமானவர் களாக புரிந்து கொள்கிறார்களா என்ன! இந்த
சமயத்தில் மரம் முழுவதும் இற்றுப் போன நிலையை அடைந் திருக்கிறது
என்று பாபா கூறுகின்றார். ஒருவர் கூட சதோபிரதானமானவர்களாக இல்லை.
சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தில் தான் சதோபிரதானமாக
இருக்கிறார்கள். இப்போது தமோபிர தானமாகும். பாபா தான் வந்து
குழந்தைகளாகிய உங்களை அஞ்ஞான உறக்கத்திலிருந்து விழிக்கச்
செய்கின்றார். பிறகு நீங்கள் மற்றவர்களை விழிக்கச்
செய்கிறீர்கள். விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள்
இறக்கும்போது வெளிச்சத் திற்காக தீபம் ஏற்றுகிறார்கள். இச்சமயம்
காரிருளாக இருக்கிறது, ஆத்மாக்கள் தங்களுடைய வீட்டிற்கு
திரும்பிச் செல்ல முடியாது. துக்கத்திலிருந்து விடுபட வேண்டும்
என்று மனம் விரும்புகிறது. ஆனால் ஒருவர் கூட விடுபட முடியாது.
எந்த குழந்தைகளுக்கு புருஷோத்தம சங்கமயுகத்தின் நினைவு
இருக்கிறதோ அவர்கள் ஞான ரத்தினங்களை தானம் செய்யாமல் இருக்க
முடியாது. எப்படி மனிதர்கள் புருஷோத்தம மாதத்தில் நிறைய
தானம்-புண்ணியம் செய்கிறார்களோ அதுபோல் இந்த புருஷோத்தம
சங்கமயுகத்தில் நீங்கள் ஞான ரத்தினங்களை தானம் செய்ய வேண்டும்.
சுயம் பரமபிதா பரமாத்மா படிப்பிக் கின்றார், கிருஷ்ணர் அல்ல
என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். கிருஷ்ணர் சத்யுகத்தின்
முதல் இளவரசர் ஆவார், பிறகு அவர் மறுபிறவி எடுத்துக் கொண்டே
வருகின்றார். பாபா கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தின்
ரகசியத்தையும் புரிய வைத்துள்ளார். நீங்கள் திரிகாலதரிசியாக
ஆகின்றீர்கள், பாபாவைத் தவிர வேறு யாரும் திரிகாலதரிசியாக
மாற்ற முடியாது. உலகத்தின் முதல்-இடை- கடைசியின் ஞானம்
பாபாவிற்குத் தான் இருக்கிறது, அவரைத் தான் ஞானக்கடல் என்று
சொல்லப்படுகிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று பகவானைத் தான்
சொல்லப்படு கிறது, அவர் தான் படைப்பவர் ஆவார். சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்யும் இறை தந்தை என்ற வார்த்தை மிகவும் தெளிவாக
இருக்கிறது. சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள் ஆனால் அவர்
எப்போது வந்தார், என்ன செய்தார் போன்ற எதையும்
தெரிந்திருக்கவில்லை. ஜெயந்தி என்பதின் அர்த்தம் கூட
தெரியவில்லை என்றால் பிறகு கொண்டாடி என்ன செய்யப் போகிறார்கள்,
இவை யனைத்தும் கூட நாடகத்தில் இருக்கிறது. இந்த சமயத்தில் தான்
குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் முதல்-இடை-கடைசியை
தெரிந்துள்ளீர்கள் வேறு எப்போதும் இல்லை. பிறகு பாபா எப்போது
வருகிறாரோ, அப்போது தான் தெரிந்து கொள்வீர்கள். இந்த 84
பிறவிகளின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற நினைவு இப்போது
உங்களுக்கு வந்துள்ளது. பக்தி மார்க்கத்தில் என்ன இருக்கிறது,
அதன்மூலம் எதுவுமே கிடைப்பதில்லை. எவ்வளவு பக்தர்கள்
கூட்டத்தில் அலை மோதுகிறார்கள், பாபா உங்களை அதிலிருந்து
விடுவித்து விட்டார். இப்போது நாம் ஸ்ரீமத்படி மீண்டும்
பாரதத்தை உயர்ந்ததாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். ஸ்ரீமத் மூலம் தான் உயர்ந்தவர்களாக
ஆகின்றீர்கள். சங்கமயுகத்தில் தான் ஸ்ரீமத் கிடைக்கிறது. நாம்
யாராக இருந்தோம் பிறகு எப்படி இந்த தேவதைகளைப் போல் ஆகினோம்
என்பதை நீங்கள் யதார்த்தமான முறையில் தெரிந்துள்ளீர்கள்,
இப்போது மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். முயற்சி
செய்து-செய்து ஒருவேளை குழந்தைகள் எப்போதாவது தோல்வியடைந்து
விட்டால் பாபாவிற்கு செய்தி அனுப்புங்கள், மீண்டும் எழுந்து
நிற்க பாபா எச்சரிக்கை அளிப்பார். ஒருபோதும் தோல்வியடைந்து
அமர்ந்து விடக் கூடாது. மீண்டும் எழுந்து நில்லுங்கள்,
மருத்துவம் செய்து கொள்ளுங்கள். டாக்டர் அமர்ந்திருக்கிறார்
அல்லவா. ஐந்தாவது மாடியிலிருந்து விழுவதற் கும் இரண்டாவது
மாடியிலிருந்து விழுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.
காம விகாரம் என்பது ஐந்தாவது மாடியாகும். ஆகையினால் தான் காமம்
மிகப்பெரிய எதிரி என்று பாபா கூறியுள்ளார், அது உங்களை
தூய்மையற்றவர்களாக மாற்றி விட்டது, இப்போது தூய்மையாக ஆகுங்கள்.
தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் தந்தை தான் வந்து தூய்மையாக
மாற்றுகின்றார். கண்டிப்பாக சங்கமயுகத்தில் தான் மாற்றுவார்.
இது கலியுகத்தின் கடைசி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பத்தின்
சங்கமமாகும்.
பாபா இப்போது நாற்று நட்டுக் கொண்டிருக்கிறார் பிறகு முழு
மரமும் இங்கே வளர்ந்து விடும் என்பதை குழந்தைகள்
தெரிந்துள்ளார்கள். பிராமணர்களின் மரம் வளரும் பிறகு
சூரியவம்சம்-சந்திரவம்சத்தில் சென்று சுகத்தை அனுபவிப்பார்கள்.
எவ்வளவு சுலபமாகப் புரியவைக்கப் படுகிறது. நல்லது, முரளி
கிடைக்கவில்லை என்றால் பாபாவை நினைவு செய்யுங்கள். சிவபாபா
பிரம்மாவின் உடலின் மூலம் கூறுகின்றார், என்னை நினைவு
செய்தீர்கள் என்றால் விஷ்ணு வம்சத்திற்கு சென்று விடுவீர்கள்
என்பதை புத்தியில் உறுதியாக்குங்கள். அனைத்தும் முயற்சி யில்
தான் ஆதாரப்பட்டிருக்கிறது. கல்பம்-கல்பமாக என்ன முயற்சி
செய்துள்ளீர்களோ, அப்படியே அது தான் நடக்கும். அரைக்கல்பம்
தேக-அபிமானிகளாக ஆகியுள்ளீர்கள், இப்போது ஆத்ம- அபிமானியாக
ஆவதற்கான முயற்சி செய்யுங்கள், இதில் தான் உழைப்பு இருக்கிறது.
படிப்பு என்னவோ சகஜ மானதாகும், முக்கியமானது தூய்மையாவதற்கான
விசயமாகும். பாபாவை மறப்பது என்பது மிகப்பெரிய தவறாகும்.
தேக-அபிமானத்தில் வருவதினால் தான் மறக்கின்றீர்கள். சரீர
நிர்வாகத்திற்காக தொழில் போன்றவற்றை 8 மணி நேரம் செய்யுங்கள்,
மீதி 8 மணி நேரம் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
அந்த நிலை விரைவாக வந்து விடாது. கடைசியில் இந்த நிலை எப்போது
ஏற்படுமோ அப்போது வினாசம் நடக்கும். கர்மாதீத் நிலை ஏற்பட்டது
என்றால் பிறகு இந்த சரீரம் இருக்க முடியாது, விடுபட்டு விடும்
ஏனென்றால் ஆத்மா தூய்மையாகி விட்டது அல்லவா. எப்போது
வரிசைக்கிரமமாக கர்மாதீத் நிலை உருவாகி விடுமோ அப்போது சண்டை
ஆரம்பிக்கும், அதுவரை ஒத்திகை நடந்து கொண்டே இருக்கும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த புருஷோத்தம மாதத்தில் அழிவற்ற ஞான ரத்தினங்களின் தானம்
செய்ய வேண்டும். அமிர்தவேளையில் எழுந்து ஞானத்தை சிந்தனை செய்ய
வேண்டும். ஸ்ரீமத்படி சரீர நிர்வாகத்தை செய்து கொண்டே பாபா
கொடுத்திருக்கக் கூடிய வீட்டுப் பாடத்தையும் கூட கண்டிப்பாக
செய்ய வேண்டும்.
2) முயற்சியில் எப்போதாவது தடை வந்தது என்றால் பாபாவிற்கு
செய்தியை கொடுத்து ஸ்ரீமத்தை பெற வேண்டும். டாக்டரிடம்
அனைத்தையும் சொல்ல வேண்டும். பாவ கர்மங்களை அழிக்கும் நேரத்தில்
எந்தவொரு பாவ கர்மத்தையும் செய்யக் கூடாது.
வரதானம்:
துண்டிக்கப்படாத யோகம் என்ற விதி மூலம் இடைவிடாத பூஜைக்குரியவர்
ஆகக்கூடிய சிரேஷ்டமான மகான் ஆத்மா ஆகுக.
தற்காலத்தில் யாரெல்லாம் மகான் ஆத்மாக்கள் என்று
அழைக்கப்படுகின்றார்களோ, அவர்கள் அகண்டானந்தம் போன்ற பெயர்
வைக்கின்றார்கள், ஆனால், அனைத்திலும் அகண்ட (துண்டிக்கப் படாத)
சொரூபமானவர்கள் நீங்கள் தான் - ஆனந்தத்திலும்
துண்டிக்கப்படாதவர்கள், சுகத்திலும் துண்டிக்கப்படாதவர்கள் . .
. தீயசகவாசத்தில் மட்டும் வராதீர்கள், பிறருடைய அவகுணங்களைப்
பார்க்கும்பொழுதும், கேட்கும்பொழுதும் டோன்ட்கேர் (கண்டுகொள்ளாதவர்)
ஆகுங்கள், இந்த விசேஷத்தன்மையின் மூலம் அகண்ட யோகி ஆகிவிடு
வீர்கள். யார் அகண்ட யோகியாக இருக்கின்றார்களோ, அவர்களே அகண்ட
பூஜைக்குரியவர்களாக ஆகின்றார்கள். நீங்கள் அப்பேற்பட்ட மகான்
ஆதமாக்கள், நீங்கள் சுயம் அரைகல்பத்திற்கு பூஜ்ய சொரூபத்தில்
இருக் கின்றீர்கள் மற்றும் அரைகல்பத்திற்கு உங்களுடைய
ஜடசித்திரங்களுக்கு பூஜை நடைபெறுகின்றது.
சுலோகன்:
திவ்ய புத்தி தான் அமைதி சக்திக்கான ஆதாரம் ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை : சங்கல்பங்களின் சக்தியை சேமிப்பு செய்து
சிரேஷ்ட சேவைக்கு நிமித்தம் ஆகுங்கள்
யாரால் தன்னுடைய சூட்சும சக்திகளை (மனம், புத்தி) கையாள
முடிகிறதோ, அவர்களால் பிறரையும் கூட கையாள முடியும், ஆகையினால்,
சுயத்தின் மீது கட்டுப்படுத்தும் சக்தி, ஆட்சி புரியும் சக்தி
இருக்க வேண்டும், இதுவே யதார்த்தமான கையாளும் சக்தி
ஆகிவிடுகிறது. அஞ்ஞானி ஆத்மாக்களை சேவை மூலம் கையாள்வது,
பிராமண பரிவாரத்தில் அன்பு நிறைந்த, திருப்தி நிறைந்த உறவு
வைத்துக்கொள்வது - இரண்டிலுமே வெற்றி அடைந்து விடுவீர்கள்.