26.07.26 காலை முரளி
ஓம் சாந்தி 02.02.2011 பாப்தாதா,
மதுபன்
தனது பாக்கியம் மற்றும் பிராப்திகளை நினைவில் வைத்து, சதா
மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருங்கள். பார்வை, எண்ணம்
மற்றும் செயல்கள் மூலம் திருப்தியை உணரச் செய்யுங்கள்.
இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் பார்த்து
மகிழ்ச்சியடைந்து கொண்டே யிருக்கிறார். ஒவ்வொரு குழந்தையும்
பரமாத்மாவின் அன்பினால் வந்து சேர்ந்துள்ளனர். எனவே இன்று
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பாக்கியத்தின்
ரேகைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த முழு கல்பத்திலும்
இத்தகைய இவ்வளவு பெரிய பாக்கியம் யாருக்கும் கிடைக்கவில்லை,
ஏனென்றால் உங்களுக்கு பாக்கியத்தை வழங்குபவரே சுயம் பாக்கியம்
வழங்கும் வள்ளல் ஆவார். ஒவ்வொருவரின் நெற்றியிலும் முதலில்
ஒளிரும் நட்சத்திரத்தின் பாக்கியம் பிரகாசித்துக்
கொண்டிருக்கிறது. வாயில் இனிமையான வாணியின் (வார்த்தைகளின்)
ரேகை பிரகாசிக் கொண்டிருக்கிறது. உதடுகளில் இனிமையான
புன்னகையின் ரேகை பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதயத்தில்
இதயத்தை கொள்ளை கொண்ட (திலாராம்) பாபாவின் அன்பில்
லயித்திருக்கும் ரேகை பிரகாசித்துக் கொண்டிருக் கிறது. கைகளில்
அனைத்து பொக்கிஷங்களின் மேன்மையின் ரேகை பிரகாசிக்
கொண்டிருக்கிறது. கால்களில் ஒவ்வொரு அடியிலும் பதத்தின் (லட்சக்கணக்கான
நன்மைகளின்) ரேகை பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இப்போது
யோசித்துப் பாருங்கள், இத்தகைய பாக்கியம் வேறு யாருக்குக்
கிடைத்துள்ளது! அதனால் தான் உங்கள் நினைவுச் சித்திரத்திலும்
பாக்கியத்தின் வர்ணனை செய்யப்பட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த
பாக்கியத்தை சுயம் பாக்கியவிதாதா (பாக்கியத்தை உருவாக்குபவர்)
ஒவ்வொரு குழந்தைக்கும் உருவாக்கியுள்ளார்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் பாக்கியத்தையும் பார்த்து ஒவ்வொரு
குழந்தைக்கும் சபாஷ் குழந்தைகளே சபாஷ்! என்று வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த பாக்கியம் இந்த
சங்கமயுகத்தில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் தொடர்கிறது.
சங்கமயுகத்தின் சுகம் அனைத்து யுகங்களையும் விட சிரேஷ்டமானது.
சத்தியயுகத்தின் பாக்கியமும் சங்கமயுகத்தின் புருஷார்த்தத்தின்
பலனாகும், எனவே சங்கமயுகத்தின் பிராப்திகள் சத்திய யுகத்தின்
பலனை விட அதிகம். உங்கள் பாக்கியத்தில் மூழ்கிவிடுங்கள். எது
நடந்தாலும், உங்கள் பாக்கியத்தை நினைவில் கொண்டு வாருங்கள்,
அப்போது என்ன வெளிப் படும்? ஆஹா எனது பாக்கியம்! ஏனென்றால்
சுயம் பாக்கியம் தரும் வள்ளலே உங்களது தந்தை யாவார். எனவே
பாக்கியத்தின் வள்ளலால் ஒவ்வொருவருக்கும் அவரவர் பாக்கியம்
கிடைத் துள்ளது. நாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது
உங்களுக்குத் தெரியுமா அல்லது சில நேரங்களில் மட்டுமே தெரியுமா,
எப்போதும் இந்த போதை இருக்கிறதா? உலகத்தவர்கள் பார்த்து
உங்களுக்கு என்ன கிடைத்தது என்று கேட்கிறார்கள்? மற்றும்
நீங்கள் என்ன பதில் சொல் கிறீர்கள்? எதை அடைய வேண்டுமோ அதை
அடைந்துவிட்டோம். அடைந்துவிட்டோம் என்பவர் கள் கையை
உயர்த்துங்கள். அடைந்துவிட்டோம், நல்லது. பெற்றுவிட்டோமா?
பெருமையுடன் சொல்கிறீர்கள், கிடைக்கவில்லை என்ற பொருளே எதுவும்
இல்லை, இல்லையா? பெருமிதமாக இருக்கிறது அல்லவா? அது எப்படிக்
கிடைத்தது? பாபாவை அறிந்தோம், ஏற்றுக் கொண்டோம்,
நம்முடையவராக்கிக் கொண்டோம், அதனால் பாக்கியம் கிடைத்தது.
இந்தப் பாக்கியத்தை எந்த அளவுக்கு நினைவில் கொண்டு வருகிறீர்களோ
அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பாக்கியசாலி
ஆத்மாவின் முகம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். இருக்கும்
என்பதல்ல, இருக்கவே செய்கிறது. அவர்களின் பார்வை, அவர்களின்
உள்ளுணர்வு மற்றும் அவர்களின் செயல் சதா திருப்தி யான ஆத்மாவாக
மாறி தானும் திருப்தியடைவார்கள், மற்றவர்களையும்
திருப்திப்படுத்துவார்கள். எனவே உங்கள் அனைவருக்கும்
திருப்தியின் போதை இருக்கிறதா? ஏனென்றால் திருப்தியின்
ஆதாரத்திலேயே அனைத்து பிராப்தியும் அமைகிறது. அபிராப்தி என்பது
அதிருப்தியின் ஆதாரமாகும். எனவே நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
கிடைக்காத பொருள் ஏதேனும் இருக்கிறதா அல்லது எல்லாவற்றையும்
அடைந்துவிட்டீர்களா? பிராப்தியின் போதை இருக்கிறதா? இருக்கிறது,
எப்போதும் இருக்கிறதா? அல்லது சில நேரங்களில் மட்டும்
இருக்கிறதா? பொதுவாக எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டோம்
என்று தான் சொல்கிறீர்கள். எனவே எங்கு அனைத்து பிராப்திகளும்
இருக்கிறதோ அங்கு அதிருப்திக்கான பெயருக்கு கூட இடமில்லை.
எனவே இன்று பாப்தாதா உள்நாடு, வெளிநாடு என எத்தனை நாடுகளில்
இருந்தெல்லாம் அனைத்துக் குழந்தைகளும் வந்து கூடியுள்ளீர்கள்,
ஆனால் எல்லாவற்றையும் விட வெகு தொலைவிலிருந்து வந்தவர் யார்?
என்ன, அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் தொலை விலிருந்து
வந்தவர்களா? அமெரிக்காவிலிருந்து வந்தவர் கள் தொலைவிலிருந்து
வந்தவர்கள் தானே! ஆனால் பாபா எங்கிருந்து வந்திருக்கிறார்?
அமெரிக்கா இதே உலகில் தான் உள்ளது, ஆனால் பாப்தாதா எங்கிருந்து
வந்திருக்கிறார்? பரந்தாமத்திலிருந்து, பிரம்மா பாபாவும்
சூட்சும வதனத்திலிருந்து வந்திருக்கிறார். அப்படியானால் எவர்
தொலைவிலிருந்து வந்தவர்கள்? எல்லோரையும் விட தொலைவில் இருப்பவர்
யார்? இதுவே பாபா மற்றும் குழந்தைகளின் அன்பின் காட்சி. நீங்கள்
என்னுடைய பாபா என்றீர்கள், பாபா எனது குழந்தாய் என்றார். ஒருவரை
மட்டுமே அறிந்துகொண்டதால் எவ்வளவு பெரிய ஆஸ்தி கிடைத்துவிட்டது.
உலக மக்கள் சுகம், சாந்திக்காக, எங்கு சாந்தி கிடைக்கும், எங்கு
சுகம் கிடைக்கும் என்று தேடிக் கொண்டேருக்கிறார்கள். ஆனால்
உங்கள் வாழ்க்கையே சுகம் மற்றும் சாந்தியால் நிறைந்து விட்டது.
பாபா என்ன விரும்புகிறார் என்று பாப்தாதாவிடம் கேட்கிறீர்கள்
அல்லவா? எனவே பாப்தாதா ஒவ்வொரு குழந்தையிடமிருந்தும்
விரும்புவது என்னவென்றால், ஒவ்வொரு குழந்தை யும் சதா சுயராஜ்ய
அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதே. சில நேரங்களில் அல்ல,
ஏனென்றால் இப்போதுள்ள சுயராஜ்ய அதிகாரத்தின் வரதானத்தை பாபா
இந்த சங்கம யுகத்திற்காக முழுமையாக வழங்கியுள்ளார், சிறிதளவு
அல்ல, சில நேரங்களில் என்பதல்ல, சதா. எனவே யோசித்துப் பாருங்கள்,
சதா சுயராஜ்ய அதிகாரியாக இருக்கிறீர்களா? ஏனென்றால் இந்த
அனைத்து கர்மேந்திரியங்களுக்கும், மனம், புத்தி,
சமஸ்காரத்திற்கும் நீங்களே எஜமானர் என்று பாப்தாதா கூறினார்.
அனைத்திற்கும் என்னுடையது என்ற வார்த்தையைப் பயன்படுத்து
கிறீர்கள், நான் என்று சொல்வதில்லை, என்னுடையது என்று
சொல்கிறீர்கள். ஆக மனம், புத்தி, சமஸ்காரம் என்னுடையது என்றால்,
என்னுடையதின் மீது சதா காலமும் அதிகாரம் இருக்கும். இவ்வாறு
மனம், புத்தி, சமஸ்காரத்தின் மீது முழு அதிகாரம் கொண்டி
ருப்பவரைத் தான் சுயராஜ்ய அதிகாரி என்று கூறுவார்கள். நீங்கள்
என்ன கட்டளையிடுகிறீர்களோ அதன்படி செயல்படவே இவை
நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்காக நடமாடும்போதும், காரியங்கள்
செய்யும்போதும் எஜமானர் என்ற போதை இருக்க வேண்டும். நிச்சயம்
மற்றும் போதை தேவை.
இப்போது ஆத்மாக்களுக்கு மனதின் மூலமாகவும் சேவை செய்யும் நேரம்
வந்துவிட்டது. ஓ மூதாதையர்களே (பூர்வஜ்) எங்களுக்குச் சிறிதளவு
சுகம் மற்றும் சாந்தியின் கிரணங்களைக் கொடுங்கள் என்று அவர்கள்
கதறிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, மூதாதையர்களே துக்கமானவர்
களின் கூக்குரல் கேட்கிறது அல்லவா! ஏதேனும் ஆபத்து திடீரென
வரலாம், இதற்காக ஒரு நொடியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
என்று பாப்தாதா பிரேரணை (சைகை காட்டி யுள்ளார்) கொடுத்துள்ளார்.
அந்தப் பயிற்சியையும் செய்து கொண்டிருக்கிறீர்களா, ஏனென்றால்
அந்த நேரத்தில் முயற்சி செய்வதற்கான நேரம் இருக்காது, பயிற்சி
செய்யுங்கள், முற்றுப்புள்ளி வையுங்கள், அது ஆச்சரியக்குறியாக
மாறிவிடக்கூடாது, எனவே முயற்சி செய்வதற்கான நேரம் இப்போது
கிடைத்துள்ளது. அந்த நேரமே நடைமுறையில் செய்வதற்கான நேரமாகும்,
எனவே இப்பொழுதிலிருந்தே இந்தப் பயிற்சியையும் செய்து
கொண்டிருக்கிறீர்கள், பாப்தாதா முடிவைப் பார்க்கிறார், கவனம்
உள்ளது, செய்தும் வருகிறீர்கள், ஆனால் அதிக கவனம் என்பதற்கு
அடிக் கோடிடுங்கள். பாருங்கள் முயற்சி எவ்வளவு எளிதானது, நானும்
ஒரு புள்ளி, வைக்க வேண்டியதும் ஒரு புள்ளி, வெறும் கவனம்
மட்டும் கொடுக்க வேண்டும்.
பாப்தாதா விசேஷமான குழந்தைகளுக்கு பரிசளிக்கிறார், குழந்தைகளே
நான் சதா உங்களுடனே இருக்கிறேன். பாபா என்று கூறியதும்
குழந்தைகளுக்காக பாபா சதா ஆஜராகிறார். எஜமானன் ஆஜராகிறார் என்று
கூறப்படுகிறதே, அவர் எங்கும் நிறைந்திருக்கவில்லை, ஆனால்
குழந்தை களுக்கு முன்னே எஜமானன் ஆஜராகிறார். எனவே சதா
வெற்றியாளராக (விஜயன்) ஆகுங்கள், எங்கு பகவான் உடன் இருக்கிறாரோ
அங்கு வெற்றியாளராக ஆவது என்ன கஷ்டம். வெற்றி உங்கள்
பிறப்புரிமை. என்னுடைய பாபா என்று கூறினால் வெற்றி நிச்சயம்,
எனவே சதா வெற்றியாளராக (விஜயி) ஆகுங்கள், நினைவில்
இருப்பவருக்கு இது மிகவும் எளிதானது. கஷ்டம் இல்லை. பகவான்
எங்கு இருக்கிறாரோ அங்கு வெற்றி உள்ளது. இன்று பாப்தாதா அனைத்து
குழந்தைகளையும் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருகிறார்,
எவ்வளவு அன்போடு, எந்த வாகனத்தின் மூலம் வந்துள்ளீர்கள்?
இரயிலிலா அல்லது விமானத்திலா, உடலின் மூலம் தான் வந்து
சேர்ந்திருக்கிறீர்கள், ஆனால் உள்ளத்தின் அன்பு உங்களை இங்கு
வரவைத்துள்ளது. தைரியம் உங்களுடையது என்றால் உதவி பாபாவுடையது
தான். இப்போது பாப்தாதா விரும்புவது என்னவென்றால், ஒவ்வொரு
குழந்தையும் ஒவ்வொரு செயலிலும் தனது சுயராஜ்யம் என்ற
இருக்கையில் நிலைத்திருக்க வேண்டும். நல்லது.
இன்று முதல் முறையாக வந்தவர்கள் யார், அவர்கள் கையை
உயர்த்துங்கள். எழுந்து நில்லுங்கள். நிறைய பேர் இருக்கிறார்கள்.
நல்லது, எப்படி முதல் முறையாக வந்தீர்களோ அதே போல முதல்
நம்பரில் வரவேண்டும் அல்லவா. செல்ல வேண்டுமா? தைரியம்
வைத்திருப் பவருக்கு பாபாவின் உதவியும் கிட்டும் என்பது
பாபாவின் வரதானம், மேலும் தைரியத்துடன் எவ்வளவு தூரம் முன்னேற
விரும்புகிறீர்களோ அவ்வளவு வாய்ப்பும் உள்ளது, ஏனென்றால் டூ-லெட்
(முடிந்து விட்டது) என்ற போர்டு இன்னும் வைக்கப்படவில்லை.
நினைவில் இருங்கள் மற்றும் எதை அடைந்தீர்களோ அதை வைத்து
மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். எவ்வளவு சேவை செய்கிறீர்களோ
அவ்வளவு ஆசீர்வாதங்களும் கிடைக்கும், அந்த ஆசீர்வாதங் கள்
உங்களை முன்னேற்றிச் செல்லும். செய்தியைக் கொடுத்துக் கொண்டே
இருங்கள், மற்றபடி ஒவ்வொருவரின் அதிர்ஷ்டம். ஆனால் நீங்கள்
செய்தியைக் கொடுத்துவிடுங்கள். உங்களுக் கான புண்ணியத்தைச்
சேர்த்துக் கொண்டே இருங்கள். அப்போது புண்ணியம் உங்களை
முன்னேற்றிக் கொண்டே இருக்கும். நல்லது.
பாப்தாதா அமிர்த வேளையில் எல்லா திசைகளிலும் சுற்றி வருகிறார்,
அவருக்கு சுற்றி வருவது என்ன பெரிய கடினம். நான்கு மணி
சந்திப்பின் சிறப்பு என்னவென்றால், காலை 4 மணிக்கு பாப்தாதா
அனைத்து குழந்தைகளுக்கும் மிக எளிதாக வரதானங்களை அளிக்கிறார்
என்பதை யும் பாப்தாதா கூறியுள்ளார். வரதானம் அளிப்பவரின்
விசேஷமான பாகமே அமிர்தவேளை நேரம் தான். என்ன வரதானம் வேண்டுமோ
அதை பாப்தாதா தந்து விடுகிறார். முயற்சி செய்து பாருங்கள்.
ஆனால் வரதானத்தைப் பெற நீங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
விழிப்புடன் இல்லாவிட்டால் பாப்தாதா சுற்றி வந்து திரும்பிச்
சென்றுவிடுவார், நீங்கள் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள், எனவே
அமிர்தவேளைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், ஆனால் இன்னும்
அதிக கவனம் கொடுங்கள். காலத்திற்கு ஏற்ப சேவையும் அதிகரித்து
வருகிறது என்பதையும், சேவையின் காரணமாக பாபாவிடமிருந்து வரதானம்
பெறுவதில் இருந்து விலகி இருக்க முடியாது என்பதையும் பாப்தாதா
பார்த்துள்ளார். மற்றபடி இரட்டை வெளிநாட்டவர்கள்
பெரும்பான்மையோர் முயற்சி செய்கிறார்கள் என்றாலும் கவனத்தை
அடிக்கோடிட வேண்டும். மற்றபடி மதுபனுக்கு எப்படியாவது வந்து
விடுகிறீர்கள், பாப்தாதா அதற்காக விசேஷமாக அனைத்து
குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கொண்டிருகிறார்.
பாப்தாதா சமஸ்காரத்தின் மீது கொடுத்த சைகையை (சமிஞ்ஞை),
கட்டாயம் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டு, அதைச்
செய்வதற்காக தினமும் அமிர்தவேளையில் எப்படி சுவமானத்தை வைத்துக்
கொள்கிறீர்களோ, அதனோடு விதவிதமான வழிகளில் ஏதாவது ஒரு
சமஸ்காரத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று பாப்தாதா
கேள்விப்பட்டார், இன்றைய தினம் அந்த சமஸ்காரத்தின் மீது விசேஷ
கவனம் செலுத்த வேண்டும், பின்னர் இரவில் பாப்தாதாவிற்கு
உங்களின் தினசரியத்தின் முழு சார்ட்டை (அறிக்கையை)
கொடுக்கும்போது, அந்த சமஸ்காரத்தின் முடிவையும் விசேஷமாகக்
கூறுங்கள், அப்போது விசேஷ கவனம் வந்து விடும். ஏதாவது ஒரு
சமஸ்காரத்தின் மீது கவனம் வைக்க வேண்டும். எனவே நினைவின் மீது
எப்படி கவனம் செலுத்துகிறீர்களோ, அதோடு இந்த முடிவையும்
பாப்தாதாவிற்குக் கொடுங்கள். நீங்கள் விரும்பியிருந்தும், அந்த
நாளில் உங்கள் முன்னால் எந்த சமஸ்காரத் தையும் அழிப்பதற்கான
காரியம் நடைபெறவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே பாபாவின்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள், மேலும் தினமும்
இதுபோல தந்தையின் வாழ்த்துக்களை இந்த சமஸ்காரத்திற்காகப்
பெற்றுக் கொண்டே இருங்கள், அப்போது சமஸ்காரம் செயலில்
வெளிப்படுவது குறைந்து விடும். எனவே யோகத்தைப் பற்றி எப்படிச்
சோதனையிடுகிறீர்களோ அதே போல சமஸ்காரத்திற்காகவும் சோதிக்கவும்.
சமஸ்காரம் தினமும் வருவதில்லை, சில நேரங்களில் மட்டுமே வருகிறது,
முயற்சியாளர்களுக்கு தற் செயலாகத் தேர்வு வருகிறது, மற்றபடி
தினமும் வருவதில்லை. ஆனால் தினமும் பரிசோதனை நடக்கும் போது,
இந்தக் கவனமும்(அட்டென்சன்) டென்ஷனை முடிவுக்குக் கொண்டு
வந்துவிடும், ஏனென்றால் வெளி நாட்டவர்களில் சிலர் ஏதாவது ஒரு
காரியத்தைத் தொடங்கினாலும் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை
பாப்தாதா பார்த்துள்ளார். எனவே கவனம் செலுத்துபவர்கள் தான்
முக்தியை அடைய முடியும். இது பாபாவின் வரதானமும் ஆகும்.
புரிந்ததா! இப்போது இந்த முயற்சியிலேயே இருப்பீர்கள் அல்லவா,
தினமும் முடிவு களைச் சோதனை செய்வீர்கள் அல்லவா, அப்போது
சமஸ்காரம் தானாகவே தளர்ந்து விடும். சமஸ்காரத்தின் பாடத்தில்
நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார்,
என்ன சமஸ்காரத்தை விரும்புகிறீர்களோ அதுவே செயலில் வெளிப்படும்.
நடந்துவிடும். கவனத்தில் வந்துள்ளது அல்லவா, எனவே நடந்துவிடும்.
ஆனால் அப்படியே தானாக நடந்து விடாது, கவனம் செலுத்த வேண்டும்.
குழுவின் மத்தியில் தான் இந்த சமஸ்காரங்கள் வெளிப்படுகின்றன,
ஏன்? உங்கள் சித்திரங்களுக்கு பூஜை செய்பவர்கள் உங்களின்
சமஸ்காரங் களை எவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள். அப்படி
ஆகியிருப்பதால் தானே வர்ணிக்கப் படுகின்றார்கள். உங்களின்
தெய்வீக மூர்த்தியை எதிரில் கொண்டு வாருங்கள், அவர்கள் என்ன
பாடுகிறார்கள்? அத்தகைய தேவதையாக நாம் ஆக வேண்டும் அல்லவா.
நல்லது.
மற்ற அனைத்து இரட்டை வெளிநாட்டவர்களும் புருஷார்த்தத்தில்
வெற்றியின் அனுபவத்தை செய்து கொண்டு தானே இருக்கிறீர்கள்!
செய்கிறீர்களா? வெற்றியை அனுபவிப்பவர்கள் கையை உயர்த்துங்கள்.
ஆஹா! நன்றாகவே கையை உயர்த்துகிறீர்கள். எனவே இப்போது இதில்
கவனம் செலுத்த வேண்டும் என்று இலக்கு வைப்பீர்கள் அல்லவா.
இதிலும் நம்பர் அடைந்தே தீர வேண்டும். உங்களைப் பார்த்து
மற்றவர்களுக்கும் உற்சாகம் வரும், ஏனென்றால் நீங்கள் நிமித்த
மானவர்கள் அல்லவா. மேலும் நிமித்தமானவர்களுக்கு பாப்தாதாவின்
விசேஷ உதவியும் கிடைக்கிறது. மற்றபடி மையங்கள் (சென்டர்கள்)
வளர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதில் பாபா மகிழ்ச்சியடைகிறார்.
புருஷார்த்தத்தின் பக்கம் கவனம் உள்ளது, ஆனால் இப்போது
மாற்றத்திற்கு நிமித்தம் ஆகுங்கள், அப்போது உங்களைப் பார்த்து
மற்றவர்களுக்கும் பரிவர்த்தனை சக்திக்கான உற்சாகம் வரும்.
மற்றபடி புருஷார்த்தத்தில் நம்பர்வார் தான் இருப்பார்கள்
என்பதில் பாப்தாதா மகிழ்ச்சியடைகிறார், அது புரிந்துகொள்ளக்
கூடியதே, ஆனால் முயற்சியின் பக்கம் கவனம் உள்ளது, அதை இன்னும்
அதிகரிக்க வேண்டும். மற்றபடி பாப்தாதா விடமிருந்து தினசரி அன்பு
நினைவுகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பாருங்கள், வீட்டில்
அமர்ந்தபடியே கூட பாப்தாதாவின் அன்பு நினைவுகள் ஒரு நாள் கூடத்
தவறுவதில்லை, தினமும் முறைப்படி முரளியைப் படித்தால் ஒரு நாள்
கூட அன்பு நினைவு தவறவிடு வதில்லை. கிடைக்கிறது அல்லவா!
கிடைக்கிறதா? தினமும் அன்பு நினைவுகள் கிடைக்கிறது.
அனைவருக்கும் கிடைக்கிறது அல்லவா? இதுவே பாப்தாதாவின் அன்பின்
அடையாளம். முரளியைத் தவறவிட்டால் அன்புநினைவுகள் தவறிவிடுகிறது.
முரளியை மட்டும் தவறவிட வில்லை, பாப்தாதாவின் அன்புநினைவு,
வரதானம் போன்ற எல்லாவற்றையுமே தவறவிடு வீர்கள். முரளியை
வேண்டுமானால் படித்து விடுவீர்கள், ஆனால் பாப்தாதாவின் அன்பு
நினைவு பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம், அது தவறிவிட்டது
அல்லவா. எனவே உற்சாகம் உள்ளது, இதற்காக பாப்தாதா மகிழ்ச்சியும்
அடைகிறார். நல்லது, முரளியைத் தவறவிடுபவர்கள் இருக்கிறார்களா?
இரட்டை வெளிநாட்டவர்களில் இருக்கிறார்களா, யாராவது முரளியைத்
தவறவிடுபவர் இருக்கிறாரா? ஏதாவது காரணத்தினால்? இல்லை. தவற
விடுவதில்லை. ஒருவர் கையை உயர்த்தியுள்ளார். இனிமேல்
தவறவிடக்கூடாது, முரளியைத் தவறவிடக்கூடாது. போனிலாவது கேளுங்கள்.
படிக்க முடியவில்லை என்றால் எப்படியாவது கண்டிப்பாகக் கேளுங்கள்.
கண்டிப்பாக ஆஜராகுங்கள். நல்லது. மற்றபடி சபைக்கு வந்துள்ள
புதியவர்கள், பழையவர்கள் என யாராக இருந்தாலும் சரி, இதை
உறுதியாக உறுதியாக உறுதியாக (பக்கா...) குறித்துக் கொள்ளுங்கள்,
முரளியைத் தவறவிடக்கூடாது, ஏனென்றால் பாபா தினமும்
பரந்தாமத்திலிருந்து வருகிறார், எவ்வளவு தூரத்திலிருந்து
வருகிறார், குழந்தை களுக்காகத் தானே வருகிறார்! பாபா எப்படி
முரளியைத் தவறவிடுவதில்லையோ, அதே போல குழந்தை களும் முரளியைத்
தவறவிடக்கூடாது. நல்லது.
இப்போது மதுபனுக்கு வருகிறீர்கள் அல்லவா, அப்போது படிவம்
நிரப்புவது போல, அதில் தினமும் முரளி கேட்டீர்களா அல்லது எத்தனை
நாட்கள் தவறவிட்டீர்கள் என்பதையும் எழுதுங் கள். சம்மதமா? சரி
என்பவர்கள் கையை உயர்த்துங்கள். மதுபனில் உள்ளவர்களும் கையை
உயர்த்துங்கள். எந்தக் காரணத்திற்காகவும் முரளியைத்
தவறவிடக்கூடாது. எப்படிச் சாப்பாட்டைத் தவறவிடுவதில்லையோ அதே
போல இதுவும் உணவு தானே. அது உடலின் உணவு, இது ஆத்மாவிற்கான உணவு.
நன்றாக இருந்தது. புதிதாக வந்தவர்களுக்கும், வந்தவர் களுக்கு
கிடைத்திருக்கிறது அல்லவா. அவர்களும் இந்த விதியைப் பின்பற்ற
வேண்டும். மற்ற விதிகள் இருப்பது போல இதுவும் ஒரு விதி.
பிராமணன் என்றால் முரளி கேட்பவர், சேவை செய்பவர். நல்லது.
இப்போது எல்லா திசைகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா அன்பு
நினைவைச் சேர்த்து வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். சதா
ஊக்கம் உற்சாகத்தில் முன்னேறிக் கொண்டும் இருக்கிறீர்கள்,
தொடர்ந்து முன்னேறுங்கள். ஒருபோதும் உங்களின் ஊக்கம் மற்றும்
உற்சாகத்தை எந்தக் காரணத்தினாலும், எந்த விஷயத் தினாலும்
குறைத்துக்கொள்ளக் கூடாது. விஷயங்கள் நடக்கும், ஆனால்
புருஷார்த்தமும் பாபாவின் அன்பும் நம்முடையது, அதனால்தான்
ஒருபோதும் உங்கள் புத்தியை பாபாவைத் தவிர வேறு எந்த
விஷயங்களிலும் ஈடுபடுத்தக் கூடாது. பாபாவும் முரளியும் மற்றும்
பாபா மூலம் கிடைத்த சேவையையும் செய்து கொண்டே இருங்கள். நல்லது.
இப்போது என்ன சொல்வது, உடனே இருக்க வேண்டும் அல்லவா. எனவே
விடைபெறுகிறோம் என்று கூட சொல்ல முடியாது. உடன் இருப்போம், உடன்
செல்வோம், உடன் வருவோம். நல்லது. இப்போது நிறைவு (சமாப்தி).
ஆசீர்வாதம்:
சக்தி ரூபத்தின் நினைவின் மூலம் தூய்மையற்ற
சமஸ்காரங்களை அழிக்கும் காளி சொரூபம் ஆகுக.
நான் அனைத்து ஆயுதங்களையும் தாங்கிய சக்தி என்ற இந்த ரூபம் சதா
நினைவில் இருக்க வேண்டும், தூய்மையாக்குபவனாகிய (பதீதபாவனி) என்
மீது எந்தவொரு தூய்மையற்ற ஆத்மாவின் பார்வையின் நிழல் கூடப் பட
முடியாது. தூய்மையற்ற ஆத்மாவின் தூய்மையற்ற எண்ணங்கள் கூடச்
செயல்படக்கூடாது- அத்தகைய சக்தி வாய்ந்த பிரேக் நமக்கு வேண்டும்.
ஏதேனும் ஒரு பதீத ஆத்மாவின் தாக்கம் ஏற்படுகிறது என்றால்-
அதற்கு நீங்கள் சக்திவாய்ந்த வராக இல்லை என்று அர்த்தம்.
அழிப்பவராகவே இருக்கும் ஒருவர் ஒருபோதும் யாருக்கும் பலியாக
முடியாது. எனவே உங்கள் முன் யாராவது அப்படிப்பட்ட எண்ணத்தைக்
கூடச் செய்தால், அவர்களின் எண்ணம் மயக்கமடையும்படி அத்தகைய காளி
ரூபமாக மாறுங்கள்.
சுலோகன்:
ராயலான ஆசையின் சொரூபம் பெயர், புகழ் மற்றும் பெருமை ஆகும்.
அவ்யக்த சமிஞ்ஞைகள் (பிரேரணை) - ஜூவாலா சொரூப நிலையில் இருந்து
சக்திசாலியான நினைவை அனுபவம் செய்யுங்கள்.
சாரதி என்றால் ஆத்ம-அபிமானி ஏனென்றால் ஆத்மாவே சாரதி.
பிரம்மாபாபா இந்த முறையின் மூலம் நம்பர் ஒன் வெற்றியைப்
பெற்றார். எனவே பாபாவைப் பின்பற்றுங்கள். எப்படித் பாபா உடலை
வசப்படுத்திப் பிரவேசிக்கிறாரோ அதாவது சாரதி ஆகிறாரோ, உடலுக்கு
அடிமை ஆவதில்லையோ, அதனால் தான் தனிப்பட்டவராகவும் (நியாரா)
அன்பானவராகவும் (பியாரா) இருக்கிறார். அதேபோல நீங்கள் அனைத்து
பிராமண ஆத்மாக்களும் பாபாவிற்குச் சமமாக சாரதி ஸ்திதியில்
இருங்கள். சாரதி தானும் சாட்சியாக இருந்து எதைச் செய்தாலும்,
பார்த் தாலும், கேட்டாலும் மற்றும் எல்லாவற்றையும் செய்தாலும்
மாயையின் பிடிப்பிலிருந்து விடுபட்டவராக (நிர்லேப்பாக)
இருப்பார்.