26-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞான மழை பொழிந்து இந்த பூமியை செழிப்பாக (புதியதாக) ஆக்குதவற்காக ஞானக் கடலான தந்தை வந்திருக்கின்றார். இப்பொழுது சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, அங்கு செல்வதற்காக தெய்வீக குழந்தைகளாக ஆக வேண்டும்.

கேள்வி:
சர்வ உத்தம குலத்தைச் சார்ந்த குழந்தைகளின் முக்கிய கடமை என்ன?

பதில்:
சதா உயர்ந்த ஆன்மீக சேவை செய்வதாகும். இங்கு அமர்ந்திருந்தாலும் அல்லது காரியங் கள் செய்து கொண்டிருந்தாலும் குறிப்பாக பாரதம் மற்றும் பொதுவாக முழு உலகையும் தூய்மை யாக்க வேண்டும். ஸ்ரீமத்படி தந்தைக்கு உதவியாளர்களாக ஆக வேண்டும் - இது தான் அனை வரிலும் உத்தமமான பிராமணர்களின் காரியமாகும்.

பாடல்:
யார் பகவானுடன் இருக்கிறார்களோ .......

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகளுக்கு அதாவது யார் ஆன்மீகத் தந்தை யின் கூடவே இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக் கொண்டிருக் கின்றார். ஏனெனில் தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார். எந்த தந்தை? சிவபாபா. பிரம்மா பாபாவை ஞானக் கடல் என்று கூறுவது கிடையாது. சிவபாபா, அவர் தான் பரம்பிதா பரமாத்மா என்று கூறப்படுகின்றார். ஒன்று லௌகீக உலகாய தந்தை, மற்றொன்று பரலௌகீக ஆன்மீக தந்தை. அவர் சரீரத்திற்கு தந்தை, இவர் ஆத்மாக்களுக்குத் தந்தை. இது மிகவும் நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். மேலும் இந்த ஞானம் கூறக் கூடியவர் ஞானக் கடலாவார். எவ்வாறு அனைவருக்கும் பகவான் ஒருவரோ, அதே போன்று ஞானமும் ஒரே ஒருவர் தான் கொடுக்க முடியும். மற்றபடி சாஸ்திரம், கீதை முதலானவற்றை படிப்பது, பக்தி செய்வது போன்ற வைகள் எதுவும் ஞானம் கிடையாது. அதி-ருந்து ஞான மழை பொழிவது கிடையாது. அதனால் தான் பாரதம் முற்றிலும் காய்ந்து விட்டது. ஏழையாக ஆகிவிட்டது. அந்த மழை பொழிய வில்லையென்றாலும் பூமி அனைத்தும் காய்ந்து விடுகிறது. அது பக்தி மார்க்கமாகும். அதை ஞான மார்க்கம் என்று கூறுவது கிடையாது. ஞானத்தின் மூலம் சொர்க்கம் ஸ்தாபனை ஆகிறது. அங்கு எப்பொழுதும் பூமி செழிப்பாக (பசுமையாக) இருக்கும், ஒருபொழுதும் காய்ந்து விடாது. இது ஞானப் படிப்பாகும். ஈஸ்வரனாகிய தந்தை ஞானம் கொடுத்து தெய்வீக குழந்தைகளாக ஆக்குகின்றார். நான் அனைத்து ஆத்மாக்களாகிய உங்களது தந்தையாக இருக்கிறேன் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். ஆனால் என்னை மற்றும் எனது காரியங்களை அறியாத காரணத்தினால் தான் மனிதர்கள் இந்த அளவிற்கு பதீதமாக (தூய்மையிழந்த), துக்கமானவர்களாக, செல்வமற்றவர் களாக ஆகி விட்டனர். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். தந்தை வீட்டில் இல்லாத பொழுது குழந்தைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர் எனில் உங்களது தந்தை இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்கின்றனர் அல்லவா! இந்த நேரத்தில் முழு உலகமும் தந்தையை அறியாமல் இருக்கின்றனர். அறியாத காரணத்தினால் இந்த அளவிற்கு துர்கதி ஏற்பட்டி ருக்கிறது. அறிந்து கொண்டால் சத்கதி ஏற்படும். அனைவருக்கும் சத்கதி கொடுப்பவர் ஒரே ஒருவர் ஆவார். அவர் பாபா என்று கூறப்படுகின்றார். அவரது பெயர் சிவன். அவரது பெயரை ஒரு பொழுதும் மாற்ற முடியாது. சந்நியாசம் செய்கின்ற பொழுது பெயர் மாற்றுகின்றனர் அல்லவா! திருமணத்தின் பொழுதும் கன்னியாவின் பெயரை மாற்றுகின்றனர். இங்கு பாரதத்தில் இந்த வழக்கம் இருக்கிறது. வெளி நாடுகளில் இவ்வாறு கிடையாது. இந்த சிவபாபா அனைவருக்கும் தாய், தந்தையாக இருக்கின்றார். நீங்கள் தான் தாய், தந்தையாக...... இருக்கிறீர்கள் என்றும் பாடுகின்றனர். உங்களது கருணையின் மூலம் சுகமான உலகம் ஏற்படும் என்று பாரதத்தில் தான் அழைக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் பகவான் கருணை காண்பித்து வருகின்றார் என்பது கிடையாது. கிடையாது, பக்தியில் சுகம் என்பதே கிடையாது. சொர்க்கத்தில் அதிக சுகம் இருக்கும் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அது புது உலகமாகும். பழைய உலகில் துக்கம் தான் இருக்கும். யார் உயிருடன் இருந்து கொண்டே நல்ல முறையில் இறந்திருக்கிறார்களோ அவர்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் மாயை வென்று விடும் பொழுது பிராமணனி-ருந்து மாறி சூத்திரனாக ஆகிவிடுகின்றனர். ஆகையால் பாபா பெயர் வைப்பது கிடையாது. பிராமணர்களின் மாலை உருவாவது கிடையாது. பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்கள். உயர்ந்த ஆன்மீக சேவை செய்கிறீர்கள். இங்கு அமர்ந்து கொண்டே அல்லது காரியங்கள் செய்து கொண்டே குறிப்பாக பாரதம், பொதுவாக முழு உலகிற்கும் சேவை செய்கிறீர் கள். உலகை நீங்கள் தூய்மையாக ஆக்குகிறீர்கள். நீங்கள் தந்தையின் உதவியாளர்கள். தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து நீங்கள் உதவி செய்கிறீர்கள். இந்த பாரதம் தான் தூய்மையடைய போகிறது. நாம் கல்ப கல்பத்திற்கும் இந்த பாரதத்தை தூய்மையாக்கி, தூய்மையான பாரதத்தில் இராஜ்யம் செய்வோம் என்று நீங்கள் கூறுவீர்கள். பிராமணனி-ருந்து பிறகு எதிர்காலத்தில் நாம் தேவி தேவதைகளாக ஆகிறோம். விராட ரூபத்தின் சித்திரமும் இருக்கிறது. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள் என்று தானே அழைக்கப்படுவர். எப்பொழுது பிரஜாபிதா எதிரில் இருக் கிறாரோ அப்பொழுது தான் பிராமணர்களும் இருப்பர். இப்பொழுது நீங்கள் அவர் எதிரில் இருக் கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தன்னைத் தான் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்று நினைக்கிறீர்கள். இது யுக்தியாகும். அவருடைய குழந்தை (சந்ததி) என்று நினைப்பதன் மூலம் சகோதர சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள். சகோதரன், சகோதரியிடத்தில் ஒருபொழுதும் கெட்டப் பார்வை இருக்காது. நீங்கள் 63 பிறவிகள் பதீதமாக இருந்தீர்கள், இப்பொழுது பாவன உலகமாகிய சொர்க்கத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள் எனில் தூய்மையாக ஆகுங்கள் என்று தந்தை கட்டளையிடுகின்றார். அங்கு பதீத ஆத்மா செல்ல முடியாது. அதனால் தான் எல்லையற்ற தந்தையாகிய என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். இந்த ஆத்மா சரீரத்தின் மூலம் உரையாடல் செய்கிறது. நான் இந்த சரீரத்தின் மூலம் பேசுகிறேன் என்று சிவபாபாவும் கூறுகின்றார். இல்லையெனில் நான் எப்படி வருவேன்? எனது பிறப்பு தெய்வீகமானது. சத்யுகத்தில் தெய்வீக குணமுடைய தேவதைகள் இருப்பர். இந்த நேரத்தில் அசுர குணமுடைய மனிதர்கள் இருக் கின்றனர். இங்கிருக்கும் மனிதர்களை தேவதைகள் என்று கூற முடியாது. யார் வேண்டு மென்றாலும் இருக்கட்டும், பெரிய பெரிய பெயரை வைத்துக் கொள்கின்றனர். சாதுக்கள் தங்களை ஸ்ரீ ஸ்ரீ என்று கூறிக் கொள்கின்றனர். மற்ற மனிதர்களை ஸ்ரீ என்று கூறுகின்றனர். ஏனெனில் சுயம் தூய்மையாக இருக்கின்றனர். அதனால் தான் ஸ்ரீ ஸ்ரீ என்று கூறிக் கொள்கின்றனர். அவர்களும் மனிதர்கள் தான். ஆனால் விகாரத்தில் செல்வது கிடையாது. ஆனாலும் விகார உலகில் இருக்கின்றனர் அல்லவா! நீங்கள் எதிர்காலத்தில் விகாரமற்ற தெய்வீக உலகில் இராஜ்யம் செய்வீர்கள். அங்கும் மனிதர்கள் தான் இருப்பர், ஆனால் தெய்வீக குணமுடையவர்களாக இருப்பர். இந்த நேரத்தில் மனிதர்கள் அசுர குணமுடையவர்களாக, பதீதமானவர்களாக இருக்கின்றனர். அழுக்கான ஆடைகளை துவைக்கின்றார்..... என்று குருநானக்கும் கூறியிருக்கின்றார். குரு நானக்கும் தந்தையின் மகிமை செய்கின்றார்.

ஸ்தாபனை மற்றும் விநாசம் செய்வதற்காக தந்தை இப்பொழுது வந்திருக்கின்றார். மற்ற தர்மங்களை ஸ்தாபனை செய்பவர்கள் தர்மத்தை மட்டுமே ஸ்தாபனை செய்கின்றனர், மற்ற தர்மங்களை விநாசம் செய்வது கிடையாது, (வளர்ச்சி) விருத்தியடைந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது தந்தை விருத்தியடைவதை நிறுத்துகின்றார். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் பல தர்மங்களின் விநாசம் செய்து விடுகின்றார். நாடகப்படி இது நடந்தே ஆக வேண்டும். நான் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்விக்கின்றேன், அதற்காகத் தான் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். சத்யுகத்தில் பல தர்மங்கள் இருக்கவே இருக்காது. நாடகத்தில் இவை அனைத்தும் திரும்பிச் செல்வது பதிவாகியிருக்கிறது. இந்த விநாசத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. எப்பொழுது விநாசம் ஏற்படுமோ அப்பொழுது தான் உலகில் அமைதி ஏற்படும். இந்த யுத்தத்தின் மூலம் தான் சொர்க்கத்தின் கதவு திறக்கப்படுகிறது. இந்த மகாபாரத யுத்தம் கல்பத்திற்கு முன்பும் நடை பெற்றது என்றும் நீங்கள் எழுத முடியும். நீங்கள் கண்காட்சியின் திறப்பு விழா செய்விக்கிறீர்கள் எனில் இதை எழுதுங்கள். சொர்க்கத்தின் திறப்பு விழா செய்வதற்காக தந்தை பரந்தாமத்தி-ருந்து வந்திருக்கின்றார். நான் சொர்க்கத்தை உருவாக்கும் தந்தை சொர்க்கத்தின் திறப்பு விழாவிற்காக வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். சொர்க்க வாசிகளாக ஆக்குவதற்காக குழந்தைகளின் உதவியைத் தான் நாடு கின்றார். இத்தனை ஆத்மாக்களை யார் தூய்மை ஆக்குவது? எண்ணற்ற ஆத்மாக்கள் உள்ளனர். வீட்டிற்கு வீடு நீங்கள் இதை புரிய வைக்க முடியும். பாரதவாசிகளாகிய நீங்கள் சதோ பிரதானமாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து தமோபிரதானம் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது மீண்டும் சதோ பிரதானமாக ஆகுங்கள். மன்மனாபவ. நாம் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்வது கிடையாது என்று கூறாதீர்கள். சாஸ்திரங்கள் மற்றும் பக்தி மார்க்கத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் இப்பொழுது இந்த பக்தி மார்க்கத்தின் இரவு முடிவடைகிறது, ஞானத்தின் மூலம் பகல் ஆரம்ப மாகிறது என்று கூறுங்கள். சத்கதி செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். புரிய வைப்பதற்கு மிகுந்த புத்தி கூர்மை தேவை. சிலர் நல்ல முறையில் தாரணை செய்கின்றனர், சிலர் குறைவாக செய்கின்றனர். யார் நல்ல நல்ல குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்கள் கண் காட்சிகளில் மிக நன்றாகப் புரிய வைக்கின்றனர். எவ்வாறு தந்தை ஆசிரியராக இருக்கின்றாரோ, அதே போன்று குழந்தைகளும் ஆசிரியராக ஆக வேண்டும். சத்குருவை நினையுங்கள் என்றும் பாடப்படுகிறது. சத்திய கண்டத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் சத்தியமான பாபா என்று தந்தைக்கு கூறப்படுகிறது. பொய்யான உலகை ஸ்தாபனை செய்யக் கூடியது இராவணன். இப்பொழுது சத்கதி செய்யக் கூடியவர் கிடைத்திருக்கும் பொழுது பிறகு நாம் எப்படி பக்தி செய்ய முடியும்? பக்தி கற்றுக் கொடுப்பதற்கு பல குருக்கள் உள்ளனர். சத்குரு ஒரே ஒருவர் ஆவார். அழிவற்ற சத்குரு ....... என்றும் கூறுகின்றனர். இருப்பினும் பல குருக்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர். சந்நியாசிகள், வைராக்கியம் உடையவர்கள் போன்று பல குருக்கள் உள்ளனர். சத்குரு அழிவற்றவர்....... என்று சீக்கியர்கள் சுயம் கூறுகின்றனர். அதாவது அவரை காலன் அழிக்க முடியாது. மனிதர்களை காலன் அழித்து விடுகிறது. மன்மனாபவ என்று தந்தை புரிய வைக் கின்றார். அவரை (தலைவனை) நினைத்தால் சுகம் கிடைக்கும் ...... முக்கியமான வார்த்தைகள் இரண்டு. எஜமானாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். எஜமானர் ஒரே ஒருவர் தான். குருநானக்கும் அவரை (தந்தையை) நினையுங்கள் என்று சைகைகளால் கூறினார். உண்மையில் நீங்கள் ஜெபிக்கக் கூடாது. நினைவு செய்ய வேண்டும். இது தான் நினைவு ஆகும். வாயினால் எதுவும் கூற வேண்டாம். சிவ சிவ என்றும் கூற வேண்டாம். நீங்கள் சாந்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள். ஒருவரைத் தான் நினைவு செய்ய வேண்டும், அதையும் தந்தை தான் கற்றுக் கொடுக்கின்றார். அவர்கள் எவ்வளவு மணியின் ஒலியை எழுப்புகின்றனர்! உரத்த ஓசைகள் எழுப்பு கின்றனர்! மகிமை செய் கின்றனர்! அச்சுவம் கேசவம் ...... என்று கூறுகின்றனர். (விஷ்ணுவின் பெயர்) ஆனால் ஒரு வார்த்தையைக் கூட புரிந்து கொள்வது கிடையாது. சுகம் கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். வியாசர் என்று அவரைத் தான் கூற முடியும். அவரிடத்தில் ஞானம் இருக்கிறது, அதை கொடுக்கின்றார். அவரே சுகமும் கொடுக்கின்றார். இப்பொழுது நமக்கு முன்னேறும் கலை ஏற்படுகிறது என்பதை குழந்கைதளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஏணிப்படி சித்திரத்தில் கலை களைப் பற்றியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் எந்த கலைகளும் கிடையாது. என்னிடத்தில் எந்த குணங்களும் இல்லை ...... நிர்குண் (கலைகள் இல்லாதவர்கள்) என்று ஒரு இயக்கமும் இருக்கிறது. குழந்தையிடம் குணம் இல்லையெனில் தந்தையிடத்திலும் இருக்காது. அனைவரிடத் திலும் அவகுணங்கள் உள்ளன. குணவான்களாக தேவதைகள் தான் ஆகின்றனர். முதலாவது அவகுணம் தந்தையை அறியாமல் இருப்பதாகும். அடுத்த அவகுணம் விஷக்கட-ல் மூழ்குவதாகும். அரைக் கல்பம் நீங்கள் மூழ்கி வந்தீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது ஞானக் கடலான நான் உங்களை பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறேன். பாற்கடலுக்கு அழைத்துச் செல்வதற்காக நான் உங்களுக்கு கல்வி கொடுக்கிறேன். நான் இவரது அருகாமையில் வந்து அமர்கிறேன். அங்கு தான் அவருடைய ஆத்மாவும் இருக்கிறது. நான் சுதந்திரமானவன். எங்கு வேண்டுமென்றாலும் செல்ல முடியும். நீங்கள் பித்துருக்களுக்கு உணவு படைக்கிறீர்கள் எனில் ஆத்மாக்களுக்கு கொடுக்கிறீர்கள் அல்லவா! சரீரம் அழிந்து விடுகிறது. அதை பார்க்கக் கூட முடியாது. இது இன்னாரது ஆத்மா என்று நினைக்கின்றனர், ஆத்மாவை அழைக்கின்றனர், இதுவும் நாடகத்தில் ஒரு பாகமாக இருக்கிறது. சில நேரங்களில் வருகிறது, சில நேரங்களில் வராமலும் இருந்து விடுகிறது. சில விசயங்களை கூறவும் செய்கின்றன, சில கூறாமல் இருந்து விடுகின்றன. இங்கும் ஆத்மா அழைக்கப்படுகிறது, வந்து பேசுகிறது. ஆனால் இந்த இடத்தில் பிறப்பு எடுத்திருக் கிறேன் என்று கூறுவது கிடையாது. நான் மிகவும் சுகமாக இருக்கிறேன், நல்ல வீட்டில் பிறந்திருக் கிறேன் என்று மட்டுமே கூறும். நல்ல ஞானம் உடைய குழந்தைகள் நல்ல வீட்டிற்குச் செல்வார் கள். குறைந்த ஞானமுடையவர்கள் குறைந்த பதவி அடைவார்கள். மற்றபடி சுகம் இருக்கவே செய்யும். இராஜா ஆவது நல்லதா? அல்லது வேலைக்காரன் ஆவது நல்லதா? இராஜா ஆக வேண்டு மெனில் இந்த படிப்பில் ஈடுபட்டு விடுங்கள். உலகம் மிகவும் மோசமாக இருக்கிறது. உலகத்தின் சகவாசம் தான் கெட்ட சகவாசம் என்று கூறப்படுகிறது. ஒரே ஒரு சத்திய சகவாசம் தான் அனைத்தையும் கடக்க வைக்கிறது. மற்ற அனைத்தும் மூழ்க வைக்கிறது. தந்தை அனைவரின் ஜாதகத்தையும் அறிவார் அல்லவா! இது பாவ உலகமாகும். அதனால் தான் வேறு எங்காவது அழைத்துச் செல்லுங்கள் என்று அழைக்கின்றனர். இப்பொழுது தந்தை கூறுகின்றார் – இனிமை யிலும் இனிய குழந்தைகளே! என்னுடையவர்களாகி எனது வழிப்படி நடங்கள். இது மிகவும் அசுத்தமான உலகமாகும். ஒழுக்கமற்ற உலகமாகும். இலட்சம், கோடிக்கணக்கில் ஏமாற்று கின்றனர். இப்பொழுது குழந்தைகளை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார் எனில் அளவற்ற குஷி ஏற்பட வேண்டும் அல்லவா! உண்மையில் இது தான் உண்மையான கீதை ஆகும். பிறகு இந்த ஞானம் மறைந்து விடும். இப்பொழுது உங்களிடம் இந்த ஞானம் இருக்கிறது, அடுத்த பிறவி எடுத்ததும் ஞானம் அழிந்து விடும். பிறகு பிராப்தி இருக்கும். உங்களை உயர்ந்த ஆத்மாவாக ஆக்குவதற்காக தந்தை படிப்பு கற்பிக்கின்றார். இப்பொழுது நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது அமர்நாத் யாத்திரை நடைபெறுகிறது. யாரை சூட்சும வதனத்தில் காண்பிக்கிறீர்களோ அவர் ஸ்தூல வதனத்திற்கு எங்கிருந்து வந்தார்? என்று கேளுங்கள். மலை போன்றவைகள் இங்கு தான் இருக்கிறது அல்லவா! அங்கு பதீதமானவர்கள் எப்படி இருக்க முடியும்? பார்வதிக்கு அமர்ந்து ஞானம் கொடுக்கிறார். பனிக்கட்டி -ங்கத்தை கைகளினால் உருவாக்குகின்றனர். அதை எங்கு வேண்டுமென்றாலும் உருவாக்கிட முடியும். மனிதர்கள் எவ்வளவு ஏமாறிக் கொண்டிருக்கின்றனர்! சங்கரிடத்தில் பார்வதி எங்கிருந்து வந்தார் தூய்மை ஆவதற்கு? என்று புரிந்து கொள்வது கிடையாது. சங்கர் பரமாத்மா கிடையாது. அவரும் தேவதை தான். மனிதர்களுக்கு எவ்வளவோ புரிய வைக்கிறோம், இருப்பினும் புரிந்து கொள்வது கிடையாது. தங்கப்புத்தியாக ஆவது கிடையாது. கண்காட்சிகளில் எவ்வளவு பேர் வருகின்றனர்! ஞானம் மிகவும் நன்றாக இருக்கிறது, அனைவரும் அடைய (தெரிந்து கொள்ள) வேண்டும் என்று கூறுவர். அரே, நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் நேரம் இல்லை என்று கூறுகின்றனர். இந்த யுத்தத்திற்கு முன்பு தந்தை சொர்க்கத்தின் திறப்பு விழா செய்து கொண்டிருக்கின்றார் என்பதையும் கண்காட்சியில் எழுத வேண்டும். விநாசத்திற்குப் பிறகு சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டு விடும். பரலௌகீக பரம்பிதா பரமாத்மா திரிமூர்த்தி சிவபகவானின் மகாவாக்கியம் என்று ஒவ்வொரு சித்திரத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பாபா கூறியிருக்கின்றார். திரிமூர்த்தி என்று எழுதவில்லையெனில் சிவன் நிராகாராக இருக்கின்றார் எனில் பிறகு எப்படி ஞானம் கொடுப்பார்? என்று கேட்பர். இவர் தான் முத-ல் தூய்மையாக இருந்தார், கிருஷ்ணராக இருந்தார், பிறகு இப்பொழுது அசுத்தமான மனிதராக ஆகிவிட்டார் என்பது புரிய வைக்கப்படுகிறது. இப்பொழுது உங்களை மனிதனி-ருந்து தேவதைகளாக ஆக்குகின்றார். சரித்திரம் திரும்பவும் நடைபெற வேண்டும். மனிதனை தேவதையாக ஆக்கினார்...... என்றும் பாடப்படுகிறது. பிறகு ஏணியில் இறங்கி மனிதர்களாக ஆகின்றனர். பிறகு தந்தை வந்து தேவதைகளாக ஆக்குகின்றார். நான் வர வேண்டியிருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். கல்ப கல்பத்திற்கு, கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். யுகத்திற்கு யுகம் என்று கூறுவது தவறாகும். நான் சங்கமயுகத்தில் வந்து உங்களை புண்ணிய ஆத்மாக்களாக ஆக்குகிறேன். பிறகு இராவணன் உங்களை பாவ ஆத்மாக்களாக ஆக்குகிறான். தந்தை தான் பழைய உலகை புதிய உலகமாக ஆக்குகின்றார். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தைக்குச் சமமாக ஆசிரியராக ஆக வேண்டும். மிகுந்த யுக்தியுடன் அனைவரையும் இந்த பொய்யான உலகி-ருந்து நீக்கி சத்திய கண்டம் செல்வதற்கு தகுதியானவர்களாக ஆக்க வேண்டும்.

2) இவ்வுலகத்தின் சகவாசம் கெட்ட சகவாசமாகும், ஆகையால் கெட்ட சகவாசத்தி-ருந்து விலகிஒரு சத்தியமான சகவாசத்தில் இருக்க வேண்டும். உயர்ந்த பதவிக்காக இந்த படிப்பில் ஈடுபட்டு விட வேண்டும். ஒரே ஒரு தந்தையின் வழிப்படி மட்டுமே நடக்க வேண்டும்.

வரதானம்:
தனது அனைத்தையும் சேவையில் அர்ப்பணம் செய்து விடக்கூடிய மறைமுகமாக தானம் செய்யும் புண்ணிய ஆத்மா ஆவீர்களாக.

எந்த ஒரு சேவை செய்கிறீர்கள் என்றாலும் அதை உலக நன்மைக்காக அர்ப்பணம் செய்து கொண்டே செல்லுங்கள். எப்படி பக்தியில் மறைமுகமாக தானம் செய்யும் புண்ணிய ஆத்மாக்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் நன்மை செய்யும் பொருட்டு இந்த தானம் செய் கிறேன் என்ற இதே சங்கல்பம் செய்கிறார்கள். அதேபோல உங்களுடைய ஒவ்வொரு சங்கல்பமும் சேவையில் அர்ப்பணம் ஆகி இருக்கட்டும். ஒருபொழுதும் தனக்கென்று எந்த இச்சையும் கொண்டு செய்யாதீர்கள். அனைவரின் பொருட்டு சேவை செய்யுங்கள். எந்த சேவை தடை ரூபம் ஆகிறதோ அதை உண்மையான சேவை என்று கூறமாட்டார்கள். எனவே தனது என்ற தன்மையை விடுத்து மறைமுகமான மற்றும் உண்மையான சேவாதாரி ஆகி சேவை மூலமாக உலக நன்மை செய்து கொண்டே செல்லுங்கள்.

சுலோகன்:
ஒவ்வொரு விசயத்தையும் பிரபு அர்ப்பணம் செய்து விட்டீர்கள் என்றால் வரப்போகும் கஷ்டங்கள் எளிதானதாக அனுபவம் ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவம் உடையவர்களாக.

ஆதி காலமாகிய அமிர்த வேளையில் தனது இதயத்தில் பரமாத்ம அன்பினை முழுமையான ரூபத்தில் தாரணை செய்து கொண்டு விடுங்கள். இதயத்தில் பரமாத்ம அன்பு, பரமாத்ம சக்திகள், பரமாத்ம ஞானம் நிறைந்து இருந்தது என்றால் ஒருபோதும் வேறு எந்த பக்கமும் பற்றுதல் அல்லது சினேகம் போக முடியாது. தந்தையிடம் உண்மையான அன்பு இருக்கிறது என்றால் அன்பின் அடையாளம் -சமானம் அல்லது கர்மாதீத நிலை. செய்விப்பவர் ஆகி கர்மம் செய்யுங்கள், செய்வியுங்கள். ஒருபொழுதும் மனம், புத்தி அல்லது சம்ஸ்காரங்களுக்கு வசப்பட்டு எந்த கர்மமும் செய்யாதீர்கள்.