26-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனது உண்மையிலும்
உண்மையான சார்ட் வைக்கும் போது மனநிலை நன்றாக இருக்கும், சார்ட்
வைப்பதன் மூலம் நன்மை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
கேள்வி:
எந்த நினைவானது பழைய உலகிலிருந்து
எளிதாகவே விடுபட விடும்?
பதில்:
நாம் கல்ப கல்பமாக
தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைகிறோம், இப்போது மீண்டும்
பெறுவதற்காக சிவபாபாவின் மடியில் வந்திருக்கிறோம். பாபா நம்மை
தத்தெடுத் திருக்கின்றார், நாம் உண்மையிலும் உண்மையான
பிராமணர்களாக ஆகியிருக்கிறோம், சிவபாபா நமக்கு கீதை கூறிக்
கொண்டிருக்கின்றார் என்ற நினைவு இருந்தால் இது பழைய
உலகிலிருந்து விடுபடச் செய்து விடும்.
ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இங்கு சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்
கிறீர்கள், அவர் மீண்டும் நம்மை சுகதாமத்திற்கு எஜமானர்களாக
ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்கள். ஆக குழந்தைகளின்
புத்தியில் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! இங்கு
அமர்ந்திருக்கும் போது குழந்தைகளுக்கு பொக்கிஷம் கிடைக்கிறது
அல்லவா! எந்த கல்லூரி யிலும் அல்லது பல்கலைக்கழகத்திலும்
யாருடைய புத்தியிலும் இந்த விசயங்கள் இருப்பது கிடையாது. பாபா
நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கிக் கொண்டிருக் கின்றார்
என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இந்த குஷி இருக்க வேண்டும்
அல்லவா! இந்த நேரத்தில் மற்ற அனைத்து எண்ணங்களையும் நீக்கி
விட்டு ஒரே ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். இங்கு
அமரும் போது நாம் இப்போது சுகதாமத்திற்கு எஜமானர் களாக ஆகிக்
கொண்டிருக்கிறோம் என்ற போதை புத்தியில் இருக்க வேண்டும். சுகம்
மற்றும் அமைதிக்கான ஆஸ்தியை நாம் கல்ப கல்பமாக அடைகிறோம்.
மனிதர்கள் எதையும் அறிய வில்லை. கல்பத்திற்கு முன்பும் நிறைய
மனிதர்கள் அஞ்ஞான உறக்கத்தில் கும்பகர்ணன் போன்று தூங்கி
அழிந்து போய் விட்டனர். மீண்டும் (ஈஸ்வரிய தர்மத்திற்கு)
அவ்வாறே நிகழும். தந்தை நம்மை தத்தெடுத்திருக்கின்றார் அல்லது
நாம் சிவபாபாவின் தர்ம மடியில் வந்திருக்கிறோம் என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். அவர் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். இப்போது நாம் பிராமணர்
களாக இருக்கிறோம். நாம் உண்மையிலும் உண்மையான கீதையின் பாடம்
கேட்டுக் கொண்டிருக் கிறோம். நாம் பாபாவிடமிருந்து மீண்டும்
இராஜயோகம் மற்றும் ஞான பலத்தின் மூலம் ஆஸ்தி அடைகிறோம்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் உள்ளுக்குள் வர வேண்டும் அல்லவா!
தந்தையும் வந்து குஷிக்கான விசயங்கள் கூறுகிறார் அல்லவா!
குழந்தைகள் காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி பஸ்மமாகி (எரிந்து
சாம்பலாகி) விட்டனர், அதனால் தான் அமரலோகத் திலிருந்து
மரணலோகத்திற்கு வருகிறேன். பிறகு மரணலோகத்திலிருந்து அமரலோகத்
திற்குச் செல்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை
கூறுகின்றார் - நான் மரணலோகத்திற்குச் செல்கிறேன், அங்கு
அனைவருக்கும் மரணம் ஏற்பட்டு விட்டது, அவர்களை மீண்டும் அமர
லோகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். சாஸ்திரங்களில் என்னென்னவோ
எழுதி வைத்து விட்டனர்! அவர் சர்வசக்தி வாய்ந்தவர், அவர் என்ன
விரும்பினாலும் செய்து விட முடியும். என்பது போன்று. ஆனால் ஹே
பதீத பாவனனே! வாருங்கள், வந்து நம்மை தூய்மையற்ற நிலையிலிருந்து
தூய்மை ஆக்குங்கள் என்று தான் அவர் அழைக்கப்படுகின்றார்,
துக்கம் நீக்கி சுகம் கொடுங்கள் என்பதை குழந்தைகள் அறிவீர்கள்.
இதில் மாயாஜாலத்திற்கான விசயம் எதுவும் கிடையாது.
முள்ளிலிருந்து மலர் ஆக்குவதற்காகவே தந்தை வருகின்றார்.
நாம் தான் சுகதாமத்தின் தேவதைகளாக இருந்தோம், சதோ பிரதானமாக
இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொருவரும்
சதோபிரதானத்திலிருந்து தமோபிர தானத்திற்கு வந்தே ஆக வேண்டும்.
குழந்தைகள் இங்கு அமர்ந்திருக்கும் பொழுது போதை மேலும்
அதிகரிக்க வேண்டும். நினைவு வர வேண்டும். தந்தையைத் தான் முழு
உலகமும் நினைவு செய்கிறது. ஹே விடுவிக்கக் கூடியவரே (லிபரேட்டர்),
வழிகாட்டியே, ஹே பதீத பாவனனே ! வாருங்கள். எப்போது இராவண
இராஜ்யமோ அப்போது தான் அழைக் கின்றனர். சத்யுகத்தில் அழைப்பதே
கிடையாது. இந்த விசயங்கள் புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிய
விசயமாகும். இதை கூறியது யார்? தந்தையின் மகிமையும் செய்வார்கள்,
ஆசிரியர், சத்குருவின் மகிமையும் செய்வார்கள் - மூவரும் ஒருவர்
தான். இது உங்களது புத்தியில் இருக்கிறது. இவர் தந்தை, ஆசிரியர்,
சத்குருவாகவும் இருக்கின்றார். தூய்மையற்றவர் களை தூய்மை
ஆக்குவது தான் சிவபாபாவின் தொழிலாகும். தூய்மையை இழந்தவர்கள்
அவசியம் துக்கமாக இருப்பார்கள். சதோபிரதானமானவர்கள் சுகமாகவும்,
தமோபிரதான மானவர்கள் துக்கமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த
தேவதைகளின் சுபாவம் எவ்வளவு சதோபிரதானமாக இருக்கிறது! இங்கு
மனிதர்களின் சுபாவம் கலியுக, தமோபிரதானமானது ஆகும். ஆம்,
மனிதர்கள் வரிசைக்கிரமமாக நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும்
இருக் கின்றனர். இவர்கள் கெட்டவர்கள், இன்னார் இவ்வாறு
இருக்கின்றனர் என்று சத்யுகத்தில் ஒருபோதும் கூறமாட்டார்கள்.
அங்கு எந்த கெட்ட இலட்சணங்களின் அறிகுறியே இருக்காது. அது
தெய்வீக வம்சமாகும். ஆம், செல்வந்தர் மற்றும் ஏழைகள்
இருப்பார்கள். மற்றபடி நல்லவர் மற்றும் கெட்டவர் என்ற வேறுபாடு
அங்கு இருக்காது. அனைவரும் சுகமாக இருப்பார்கள்.
துக்கத்திற்கான விசயம் கிடையாது, பெயரே சுகதாமம் ஆகும். ஆக
குழந்தைகள் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி அடைவதற்கான முயற்சி
செய்ய வேண்டும். தனது சித்திரம் மற்றும் லெட்சுமி நாராயணன்
சித்திரத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு யாரோ
கற்றுக் கொடுப்பவர் இருக்கக் கூடும் என்று சொல்வார்கள். இது
பகவானின் மகாவாக்கியம் அல்லவா! பகவானுக்கு தனக்கென்று சரீரம்
கிடையாது. அவர் வந்து லோனாக எடுக்கின்றார். பகீரதன் (பாக்ய ரதம்)
என்றும் பாடப்பட்டிருக்கிறது எனில் அவசியம் ரதத்தில்
வந்திருக்க வேண்டும். காளையின் மீது வரமாட்டார். சிவன் மற்றும்
சங்கரை ஒன்றாக ஆக்கி விட்டனர். அதனால் தான் காளை வாகனத்தைக்
கொடுத்து விட்டனர். ஆக தந்தை கூறுகின்றார் - உங்களுக்கு எவ்வளவு
குஷி ஏற்பட வேண்டும்! நாம் தந்தை யினுடையவராக ஆகிவிட்டோம். நான்
உங்களுடையவன் என்று தந்தையும் கூறுகின்றார். பதவி அடையும் குஷி
தந்தையிடம் கிடையாது. ஆசிரியர் ஆசிரியர் தான், அவர் கற்பிக்க
வேண்டும். தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! நான் சுகக்
கடலானவன். நான் உங்களை தத்தெடுத்தபடியால் இப்போது நீங்கள்
அதீந்திரிய சுகம் அடைகிறீர்கள். ஒவ்வொரு விதத்திலும்
தத்தெடுப்பு என்பது நடைபெறுகிறது. ஆண்கள் கன்னியாவை
தத்தெடுக்கின்றனர். இவர் எனது கணவன் என்று அவள் நினைக்கிறாள்.
சிவபாபா நம்மை தத்தெடுத்திருக்கின்றார் என்பதை இப்போது நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். உலகத்தினர் இந்த விசயங்களை புரிந்துக்
கொள்வது கிடையாது. அவர்களது அந்த தத்தெடுப்பு ஒருவருக்கொருவர்
காமத்தில் செல்வதற்கான தத்தெடுப்பாகும். யாராவது அரசர்
குழந்தைளைத் தத்தெடுக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,
சுகத்திற்காக தத்தெடுக்கின்றனர், ஆனால் அது அல்ப கால சுகமாகும்.
சந்நியாசி களும் தத்தெடுக்கின்றனர் அல்லவா! இவர் என்னுடைய குரு
என்று அவர்கள் கூறுவர். இவர்கள் எனது சிஷ்யர்கள் என்று அவர்
கூறுவார். பலவித தத்தெடுப்பு நடைபெறுகிறது! உலகாயத தந்தை
குழந்தைகளை தத்தெடுக்கின்றார். அவர்களுக்கு சுகம்
கொடுக்கின்றார், பிறகு திருமணம் செய்து வைப்பபதன் மூலம்
துக்கத்திற்கான ஆஸ்தியை கொடுத்து விடுகின்றார். குருவின் (சிவபாபா)
தத்தெடுப்பு எவ்வளவு முதல் தரமானதாக இருக்கிறது! இது ஈஸ்வரிய
தத்தெடுப்பாகும், ஆத்மாக்களை தன்னுடையவராக ஆக்கும் தத்தெடுப்
பாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அனைத்து
தத்தெடுப்புகளைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். சந்நியாசி களாக
இருந்தாலும் ஹே பதீத பாவனனே வாருங்கள், வந்து நம்மை தத்தெடுத்து
தூய்மை யாக்குங்கள் என்று பாடுகின்றனர். அனைவரும் சகோதரர்கள்.
ஆனால் அவர் வந்து தன்னுடையவர்களாக ஆக்க வேண்டும் அல்லவா! பாபா,
நாம் துக்கமானவர்களாக ஆகி விட்டோம் என்று கூறுகின்றனர். இராவண
இராஜ்யத்தின் பொருளையும் புரிந்து கொள்வது கிடையாது. உருவ
பொம்மை உருவாக்கி எரித்துக் கொண்டே இருக்கின்றனர். யாராவது
துக்கம் கொடுக்கின்றனர் எனில் இவர் மீது வழக்கு போட வேண்டும்
என்று நினைப்பர். ஆனால் இவர் எப்போதிலிருந்து எதிரியாக ஆனார்?
இந்த எதிரி இறப்பாரா? இல்லையா? இந்த எதிரி பற்றி உங்களுக்குத்
தெரியும். அவர் மீது வெற்றியடைவதற்காக நீங்கள்
தத்தெடுக்கப்பபட்டிருக் கிறீர்கள். விநாசம் ஆகிவிடும்,
அணுகுண்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குழந்தை கள்
நீங்கள் அறிவீர்கள். இந்த ஞான யக்ஞத்தின் மூலம் தான் விநாச
நெருப்பு ஏற்பட்டிருக்கிறது. இராவணன் மீது வெற்றியடைந்து பிறகு
புது உலகில் இராஜ்யம் செய்வோம் என்பதை இப்போது நீங்கள்
அறிவீர்கள். மற்ற அனைத்தும் பொம்மை விளையாட்டாகும். இராவணனின்
பொம்மை அதிக செலவு ஏற்படுத்துகிறது. மனிதர்கள் அதிக செல்வத்தை
தவறாக செலவழிக் கின்றனர். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது.
அவர்கள் அலைந்து துக்கமானவர்களாக, ஏமாற்றம் அடைந்து கொண்டே
இருக்கின்றனர். ஆனால் நாம் இப்போது ஸ்ரீமத்படி நடந்து, சத்யுக
சுயராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். உயர்ந்ததிலும் உயர்ந்த
சத்யுகத்தை ஸ்தாபனை செய்யக் கூடிய சிவபாபா நம்மை உயர்ந்த
தேவதைகளாக, உலகிற்கு எஜமானர் களாக ஆக்குகின்றார். ஸ்ரீ ஸ்ரீ
சிவபாபா நம்மை ஸ்ரீ ஆக ஆக்குகின்றார். ஸ்ரீ ஸ்ரீ என்று ஒரே
ஒருவர் தான் கூறப்படுகின்றார். தேவதைகள் ஸ்ரீ என்று
அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் மறுபிறவிகளில்
வருகின்றனர் அல்லவா! உண்மையில் விகாரி அரசர்களையும் ஸ்ரீ என்று
கூற முடியாது.
இப்போது உங்களது புத்தி எவ்வளவு விசாலமானதாக (சக்திசாலி)
ஆகவேண்டும். நாம் இந்த படிப்பின் மூலம் இரட்டை கிரீடதாரிகளாக
ஆகிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். நாம் தான் இரட்டை
கிரீடதாரிகளாக இருந்தோம், இப்போது ஒரு கிரீடமும் கூட கிடையாது.
தூய்மை இல்லை அல்லவா! இங்கு யாருக்கும் ஒளிக்கிரீடம் கொடுக்க
முடியாது. இந்த சித்திரங்களில் எங்கு எந்த நிலையில் நீங்கள்
தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்களோ அதில் ஒளிக்கிரீடம்
கொடுக்கக் கூடாது. நீங்கள் இரட்டை கிரீடதாரி களாக
எதிர்காலத்தில் ஆக வேண்டும். நாம் பாபாவிடமிருந்து இரட்டை
கிரீடதாரி மகாராஜா, மகாராணி ஆவதற்காக வந்திருக்கிறோம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த குஷி இருக்க வேண்டும்.
சிவபாபாவை நினைவு செய்யும் போது தூய்மை இல்லாத நிலையிலிருந்து
தூய்மையாகி சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். இதில்
கஷ்டப்படுவதற்கான விசயம் எதுவும் கிடையாது. இங்கு நீங்கள்
மாணவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள். அங்கு வெளியில் உற்றார்,
உறவினர்களிடம் செல்கின்ற பொழுது மாணவ வாழ்க்கையை மறந்து
விடுகிறீர்கள். பிறகு உற்றார், உறவினர்களின் நினைவு வந்து
விடுகிறது. மாயையின் அழுத்தம் இருக்கிறது அல்லவா!
மருத்துவமனையில் இருந்தாலும் படிப்பது நல்லதாகும். வெளியில்
சென்று வருவதன் மூலம் கெட்ட தொடர்பின் மூலம் கெட்டு
விடுகின்றனர். இங்கிருந்து வெளியில் சென்றதும் மாணவ
வாழ்க்கையின் போதை மறைந்து விடுகிறது. படிப்பு கற்பிக்கும்
பிராமணிகளுக்கும் இங்கு எந்த அளவு போதை இருக்குமோ அந்த அளவு
அங்கு வெளியில் இருப்பது கிடையாது. இது தலைமை நிலையம், மதுவன
மாகும். மாணவர்கள் ஆசிரியரின் எதிரில் இருப்பர். எந்த கடினமான
தொழிலும் கிடையாது. இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. சிலர்
முழு நாளும் சிவபாபாவை நினைவு செய்வதே கிடையாது. சிவபாபாவிற்கு
உதவி யாளர்களாக ஆவது கிடையாது. சிவபாபாவின் குழந்தைகளாக
ஆகியிருக்கிறீர்கள் எனில் சேவை செய்யுங்கள். ஒருவேளை சேவை
செய்யவில்லை யெனில் அவர்கள் பக்குவமற்ற குழந்தைகள் ஆவர். பாபா
புரிய வைக்கின்றார் அல்லவா! என்னை நினைவு செய்யுங்கள் என்று
கூறுவது இவரது கடமையாகும். பின்பற்றினால் அதிக நன்மை ஏற்படும்.
விகார சம்மந்தங்கள் மிகவும் கீழானது. அதை விட்டுக் கொண்டே
செல்லுங்கள், அவர்களிடம் சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள். தந்தை
புரிய வைக்கின்றார், ஆனால் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் அல்லவா!
சார்ட் வையுங்கள், இதன் மூலமும் அதிக நன்மை ஏற்படும் என்று பாபா
கூறுகின்றார். ஒரு மணி நேரம் நினைவில் இருப்பதும் சிலருக்கு
கடினமாக இருக்கிறது. 8 மணி நேரம் கடைசி யில் அடைவீர்கள்.
கர்மயோகிகளாக இருக்கிறீர்கள் அல்லவா! சிலருக்கு அவ்வபோது ஆர்வம்
ஏற்படும் போது சார்ட் வைக் கின்றனர். இது நல்லதாகும். எந்த
அளவிற்கு நினைவு செய்வீர் களோ நன்மையே ஆகும். கடைசி நேரத்தில்
யார் ஹரியை நினைக்கிறார்களோ ....... என்றும்
பாடப்பட்டிருக்கிறது. அடிக்கடி என்பதன் பொருள் என்ன? யார் நல்ல
முறையில் நினைவு செய்யவில்லையோ அதாவது அவர்களுடைய ஜென்ம
ஜென்மங்களுக்கான எவ்வளவு சுமைகள் இருக்கின்றனவோ அவை மீண்டும்
மீண்டும் பிறவியைக் கொடுத்து சாட்சாத்காரம் செய்வித்து தண்டனை
கொடுக்கும். எவ்வாறு காசியில் பலியாகின்ற போது உடனேயே
பாவங்களின் சாட்சாத்காரம் ஏற்பட்டு விடுகிறது. நான் பாவங்களின்
தண்டனை அனுபவிக் கிறேன் என்று உணருவார்கள். அதிக தண்டனை அடையக்
கூடியவர்கள் இருக்கிறார்கள். பாபாவின் சேவையில் யார் தடை
போடுகிறார்களோ அவர்கள் தண்டனை அடைவதற்கு தகுதி யானவர்கள் ஆவர்.
தந்தையின் சேவையில் தடை போடுகின்றனர். தந்தையின் வலது கரமாக
தர்மராஜர் இருக்கின்றார். தந்தை கூறுகின்றார் - தனக்குள்ளேயே
உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் தந்தையின் நினைவின்
மூலம் தான் நீங்கள் தூய்மை அடைவீர்கள். இல்லையெனில்
ஆகமாட்டீர்கள். தந்தை உறுதிமொழி எடுக்க வைக்கின்றார், செய்வது
செய்யாதது உங்களது விருப்பமாகும். யார் செய்கிறார்களோ அவர்கள்
அதன் பலனை அடைவார்கள். பலர் உறுதிமொழியும் செய்கின்றனர்,
இருப்பினும் கெட்ட காரியங்கள் செய்து கொண்டே இருக்கின்றனர்.
எனக்கு ஒருவரைத் தவிர வேறு யாரும் கிடையாது என்று பக்தி
மார்க்கத்திலும் பாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆத்மா ஏன்
அவ்வாறு கூறி வந்தது? என்ற விசயம் இப்போது புத்தியில் வருகிறது.
எனக்கு ஒரே ஒரு கிரீதரன் கோபால் ...... என்று முழு நாளும்
பாடிக் கொண்டே இருக் கின்றனர். சங்கமத்தில் தந்தை வரும் போது
தான் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார், கிருஷ்ணபுரி
செல்வதற்காக நீங்கள் படிக்கிறீர்கள் அல்லவா! இளவரசர்களுக்காக
தனி கல்லூரி இருக்கிறது, அங்கு இளவரசர், இளவரசி படிப்பர். அது
எல்லைக்குட்பட்ட விசயமாகும். சில நேரங்களில் வியாதி வந்து
விடுகிறது, சில நேரம் இறந்து விடுகின்றனர். இது இளவரசர், இளவரசி
ஆவதற்கான இறை தந்தையின் பல்கலைக்கழகமாகும். இராஜயோகம் அல்லவா!
நீங்கள் நரனிலிருந்து நாராயணனாக ஆகிறீர்கள். நீங்கள் தந்தையிடம்
ஆஸ்தி அடைந்து இளவரசர், இளவரசியாக ஆகிறீர்கள். தந்தை எவ்வளவு
போதைக்கான விசயத்தை அமர்ந்து கூறுகின்றார். நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டும் அல்லவா! சிலர் இங்கிருந்து வெளியில் சென்றதும்
வலையில் மாட்டிக் கொள்கின்றனர். தந்தையை வரிசைக் கிரமமாக நினைவு
செய்கின்றனர். யார் அதிகமாக நினைவு செய்வார்களோ அவர்கள்
மற்றவர்களையும் அதிகம் நினைவு செய்ய வைப்பார்கள். பலருக்கு
எப்படி நன்மை செய்வது? என்பது புத்தியில் இருக்க வேண்டும்.
வெளியில் உள்ளவர்கள் பிரஜைகளுக்கு வேலைக் காரர்களாக வும்,
இங்கிருப்பவர்கள் இராஜாக்களுக்கு வேலைக்காரர்களாக ஆவார்கள்.
நாள் செல்ல செல்ல அனைத்தும் சாட்சாத்காரம் ஏற்படும். நான்
முழுமையான முயற்சி செய்ய வில்லை என்று நீங்களும் உணர்வீர்கள்,
அதிக அற்புதங்களைக் காண்பீர்கள். யார் நன்றாக படிக் கிறார்களோ
அவர்கள் நவாப் (எஜமானர்) ஆவார்கள். சென்டர்களில்
கண்காட்சிக்கான படங்களை கொடுக்கிறேன் எனில் குழந்தைகளுக்கு
கற்பித்து புத்திசாலிகளாக ஆக்க வேண்டும் என்று தந்தை எவ்வளவு
முறை கூறிக் கொண்டே இருக்கிறார். அப்போது தான் பி.கு சேவை
செய்ய கற்றிருக்கிறார்கள் என்பதை பாபா புரிந்து கொள்வார். சேவை
செய்தால் உயர்ந்த பதவி அடைவீர்கள், அதனால் தான் கண்காட்சிக்கான
படங்களை உருவாக்குவதற்காக பாபா வலியுறுத்திக் கூறுகின்றார்.
இந்த சித்திரங்களை உருவாக்குவது மிகவும் பொதுவான விசய மாகும்.
தைரியம் வைத்து கண்காட்சிக்கான சித்திரங்களை உருவாக்கு வதில்
உதவி செய்தால் புரிய வைப்பதில் குழந்தைகளுக்கு எளிதாகி விடும்.
ஆசிரியர்கள், மேனேஜர்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கின்றனர்
என்பதை பாபா புரிந்திருக்கிறார். சில பிராமணிகள் மேனேஜர் களாக
ஆகிவிடும் போது தேக அபிமானம் வந்து விடுகிறது. தன்னைத் தான்
அதிபுத்திசாலி என்று நினைக்கின்றனர். நான் மிகவும் நன்றாக
நடந்து கொள்கிறேன், (அவர்களைப் பற்றி) மற்றவர்களிடம் கேட்டால்
10 விசயங் களை கூறுவர். மாயை மிகப் பெரிய சங்கடத்தில் ஆழ்த்தி
விடுகிறது. குழந்தைகள் சேவை, சேவை என்று இருக்க வேண்டும். தந்தை
கருணை உள்ளமுடையவராக, துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவர் எனில்
குழந்தைகளும் அப்படி ஆக வேண்டும். தந்தையின் அறிமுகம்
கொடுத்தால் போதும். என் ஒருவனை நினைவு செய்தால்
நரகவாசியிலிருந்து சொர்க்க வாசியாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை
கூறுகின்றார். எவ்வளவு எளிதாக இருக்கிறது! என்னை நினைவு
செய்தால் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் களாகி நீங்கள்
சாந்திôமம், சுகதாமத்திற்கு வந்து விடுவீர்கள் என்று தந்தை
கூறுகின்றார். நிச்சயம் இருக்கிறது எனில் உடனே எழுதி வாங்கி
விட வேண்டும். பிரம்மா குமார், குமாரிகள் சிவபாபாவிடமிருந்து
ஆஸ்தி அடைகின்றனர் என்று எழுதவும் செய் கின்றனர். ஆக
அப்படிப்பட்ட தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும்.
பாதுகாப்பில் வந்து விட வேண்டும். நீங்கள் தந்தையின்
பாதுகாப்பில் வந்து விட்டீர்கள் அல்லவா, அதாவது மடியில் வந்து
விட்டீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தைக்கு சமமாக கருணையுள்ளம் உடையவராக, துக்கம் நீக்கி
சுகம் கொடுப்பவராக ஆக வேண்டும்.
2) கெட்ட சகவாசத்திலிருந்து தன்னை மிகவும் பாதுகாத்துக் கொள்ள
வேண்டும். ஒரே ஒரு தந்தையை மட்டுமே பின்பற்ற வேண்டும். பலருக்கு
நன்மை செய்யும் சேவை செய்ய வேண்டும். ஒருபோதும் அகங்காரத்தில்
வந்து அதிபுத்திசாலி என்று எண்ணி விடக் கூடாது.
வரதானம்:
உள்நோக்குமுகம் உடையவராகி தனது நேரம் மற்றும்
எண்ணங்களை சேமிக்கக்கூடிய தடைகளை வெல்பவர் ஆகுக
ஏதேனும் புதிய சக்திவாய்ந்த கண்டுபிடிப்பைச் செய்யும்போது, அதை
பூமிக்கு அடியில் (அண்டர் கிரவுண்டில்) செய்கிறார்கள்.
நீங்களும் எந்தளவிற்கு அந்தர்முகி அதாவது அண்டர்கிரவுண்டில்
இருப்பீர்களோ, அந்தளவிற்கு சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பு
கிடைக்கும், சிந்தனை சக்தி அதிகரிக்கும் மற்றும் மாயையின்
தடைகளிலிருந்தும் பாதுகாப்பாக ஆகிவிடுவீர்கள். வெளி நோக்கு
முகத்தில் வந்தாலும் அந்தர்முகியாகவும், மகிழ்ச்சி நிறைந்த
முகத்துடனும் கவர்ச்சி கரமான மூர்த்தியாகவும் இருங்கள். கர்மம்
செய்யும் போதும் இந்த பயிற்சியைச் செய்தால் நேரம்
சேமிக்கப்படும், மேலும் அதிக வெற்றியையும் அனுபவம் செய்வீர்கள்.
சுலோகன்:
நோயைக் கண்டு பயப்படாதீர்கள், அதற்கு மருந்து என்னும்
பழத்தைக் கொடுத்து விடை கொடுத்து அனுப்புங்கள்.
அவ்யக்த இஷாரே: இப்பொழுது தனது வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்
குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஆத்மாவிடமிருந்தும் எதையும் பெறக்
கூடாது. ஒரு தந்தை யிடமிருந்து மட்டுமே பெற வேண்டும் மற்றும்
பெற்றதை அனைவருக்கும் வழங்கிட வேண்டும். எங்கு வழங்க வேண்டுமோ,
அங்கு பெறுவதற்கான விருப்பம் வைக்கக் கூடாது. ஒருவேளை, ஆத்மா,
மற்றொரு ஆத்மாவிடம் எதையேனும் பெற விருப்பம் வைத்தால்,
அவர்களுக்கு அல்பஞானிகளான ஆத்மாக்களிடம் இருந்து அற்பகால
பிராப்தி மட்டுமே கிடைக்கும். எல்லாம் அறிந்த ஒரே
தந்தையிடமிருந்து மட்டுமே சதாகாலத்திற்கான பிராப்தி கிடைக்கும்.
எந்தவொரு பொருளையும் பெற வேண்டும் என்ற ஆசை, உங்களை உங்களது
சுவமானத்தில் இருந்து வீழ்த்திவிடும்.