27.04.25    காலை முரளி            ஓம் சாந்தி  03.02.2005      பாப்தாதா,   மதுபன்


சேவை செய்தாலும் உபராம் அதாவது விடுபட்ட மற்றும் எல்லையற்ற விருத்தி (உள்ளுணர்வின்) மூலம் எவரெடி ஆகி பிரம்மா பாபாவுக்கு சமமாக சம்பன்னம் ஆகுங்கள்

இன்று கிரேட் கிரேட் கிராண்ட் ஃபாதர் தன்னுடைய நாலாபுறத்திலும் இருக்கக்கூடிய கோடியில் சிலர் மற்றும் அந்த சிலரிலும் சில குழந்தைகளின் பாக்கியத்தை பார்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை விசேஷமான பாக்கியம் மற்றும் வேறு யாருக்கும் கிடைக்கவும் முடியாது. ஒவ்வொரு குழந்தைகளின் விசேஷத் தன்மையை பார்த்து புன்முறுவல் பூக்கின்றார். எந்த குழந்தை பாப்தாதாவிடம் உள்ளத்தினால் சம்பந்தத்தை இணைத்து இருக்கிறதோ அந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஏதாவது விசேஷத்தன்மை கட்டாயமாக இருக்கின்றது. அனைத்தைக் காட்டிலும் முதல் விசேஷத்தன்மை யாதெனில் சாதாரண ரூபத்தில் வந்திருக்கும் தந்தையை அடையாளம் காண்பது, எனது பாபா (மேரா பாபா) ஏற்றுக் கொண்டதாகும். இந்த அறிமுகம் அனைத்தைக் காட்டிலும் மிகப்பெரிய விசேஷத் தன்மையாகும். மேரா பாபா என உள்ளத்தினால் ஏற்றுக் கொண்டோம். பாபாவும் எனது குழந்தை (மேரா பச்சே) என ஏற்றுக் கொண்டார். பெரிய பெரிய தத்துவ ஞானிகள், அறிவியல் அறிஞர்கள், தர்மாத்மாக்கள் கூட அறிந்து கொள்ள முடியவில்லை, இந்த சாதாரண குழந்தைகள் அறிந்து தன்னுடைய அதிகாரத்தை எடுத்து விட்டார்கள். யாரேனும் வந்து இந்த சபையின் அமர்ந்திருக்கும் குழந்தைகளை பார்த்து, இவர்கள் கள்ளங் கடமற்ற தாய்மார்கள், இந்த சாதாரண குழந்தைகள் எத்தனை பெரிய தந்தையை அறிந்து விட்டார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது. விசேஷத்தன்மை என்பது அடையாளம் காணுவது, தந்தையை அடையாளம் கண்டு தன்னுடையவராக ஆக்குவது என்பது கோடியிலும் சில குழந்தை களுக்கான பாக்கியமாகும். எதிரிலேயே அமர்ந்திருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் தூரத்தில் அமர்ந்திருந்தாலும் அருகாமையின் அனுபவம் செய்து கொண்டிருக்க கூடியவர்கள் அனைத்து குழந்தைகளுமே உள்ளத்தினால் அடையாளம் கண்டுவிட்டீர்கள்கள். அறிந்து விட்டீர்களா? அல்லது அறிந்து கொண்டிருக்கிறீர்களா? யார் அடையாளம் கண்டுவிட்டீர்களோ அவர்கள் கையை உயர்த்துங்கள். அனைவரும் அடையாளம் கண்டு விட்டீர்களா நல்லது. அடையாளம் கண்டதற் கான விசேஷத் தன்மையை உடைய ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்த்துக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆஹா பாக்கியவான் குழந்தைகளே! அடையாளம் காணும் மூன்றாவது கண் அதை அடைந்து விட்டீர்கள்! குழந்தைகளின் உள்ளத்தினால் பாடும் பாடலை பாபா கேட்டுக் கொண்டும் இருக்கிறார். என்ன பாடல்? எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம்! ஓ செல்லமான குழந்தைகளே தந்தையிடமிருந்து வாங்க வேண்டியதை எடுத்து விட்டீர்கள் என்று பாபாவும் கூறுகின்றார். ஒவ்வொரு குழந்தைகளும் அனேக ஆன்மீக கஜானாக்களுக்கான பாலகனாகவும் எஜமானனாகவும் ஆகிவிட்டீர்கள்.

இன்று பாப்தாதா கஜானாக்களுக்கு எஜமானனான குழந்தைகளின் கஜானாக்களின் கணக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார். பாபா கஜானாக்கள் என்னவோ அனைவருக்கும் ஒரே விதமாகத் தான் கொடுத்திருக்கின்றார். யாருக்கேனும் பல கோடி மடங்கு, சிலருக்கு லட்சம் என்று கொடுக்க வில்லை. ஆனால் கஜானாக்களை அறிந்து கொள்வது, அடைந்திருப்பது, வாழ்க்கையில் நிறைத்து இருப்பதில் நம்பர்வாராக இருக்கிறது. இன்றைய காலங்களில் அடிக்கடி விதவிதமாக குழந்தை களுக்கு கவன ஈர்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், என்னவெனில் சமயத்தினுடைய நெருக்கத்தை பார்த்து தனக்குத்தானே சூட்சமமாக விசால புத்தியுடன் சோதனை செய்யுங்கள். என்ன கிடைத்திருக்கிறது என்ன எடுத்து இருக்கிறோம் மற்றும் நிரந்தரமாக அந்த கஜானாக்களால் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பதற்கான சோதனை மிக அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் மாயை நிகழ்கால சமயத்தில் விதவிதமான இராயலான சோம்பேறித்தனத்தையும் இராயலான அலட்சியத்தின் ரூபத்திலும் பரிசோதித்து கொண்டிருக்கிறது. ஆகையால் தன்னுடைய சோதனையை (செக்கிங்) சதா செய்து கொண்டே இருங்கள். அந்த அளவுக்கு கவனம், சோம்பேறித் தமான ரூபத்தில் செக்கிங் கூடாது. என்னவென்றால் தீயதை செய்யவில்லை, துக்கம் கொடுக்க வில்லை, தீய பார்வை செல்லவில்லை, இந்த சோதனையை செய்து விட்டோம். ஆனால், நல்லதிலும் நல்லது என்ன செய்தோம்? சதா ஆத்மீக திருஷ்டி இயல்பாக இருந்ததா? அல்லது மறதி - நினைவுக்கான விளையாட்டு இருந்ததா? எத்தனை பேருக்கு சுப பாவனை, சுபமான விருப்பம் மற்றும் ஆசிர்வாதம் கொடுத்தோம்? இப்படி சேமிப்புக் கணக்கு எத்தனை மற்றும் எப்படி இருந்தது? ஏனென்றால் நல்லவிதத்தில் சேமிப்பு கணக்கை இப்போது மட்டுமே செய்ய முடியும் என்பதை அறிந்துள்ளீர்கள். இந்த சமயம், முழு சீசனும் கணக்கை சேமிப்பதற்கானதாகும். பிறகு முழு சமயமும் சேமிப்பின் அடிப்படையில் இராஜ்ய பாக்கியம் மற்றும் பூஜ்ஜிய தேவி தேவதையாக ஆவதற்கானதாகும். சேமிப்பு குறைந்ததெனில் இராஜ்ய பாக்கியமும் குறையும், பூஜைக்குரியவர் ஆவதும் வரிசைக்கிரமமே. சேமிப்பு குறைந்தால் பூஜையும் குறையும், விதிப்பூர்வமான சேமிப்பு இல்லை என்றால் பூஜையும் விதிப்பூர்மாக இராது. அவ்வப்பொழுது விதி பூர்வமாக இருந்தது எனில் பூஜையும் மற்றும் பதவியும் அவ்வப்பொழுதே இருக்கும். ஆகையினால் பாப்தாதா ஒவ்வொரு குழந்தைகளிடமும் மிக அன்போடு இதைத்தான் விரும்புகின்றார் - ஒவ்வொரு குழந்தைகளும் சம்பன்னமாக வேண்டும், சமமாக வேண்டும். சேவை செய்யுங்கள் ஆனால் சேவையிலும் விடுபட்ட எல்லைக்கப்பார்பட்ட நிலை வேண்டும்.

பாப்தாதா பார்த்தார் அதிகபட்சமாக குழந்தைகளின் யோகம் அதாவது நினைவுக்கான பாடத்தில் (சப்ஜெக்ட்டில்) ஆர்வம் மற்றும் கவனம் குறைவாக இருக்கிறது. சேவையில் அதிகமாக இருக்கிறது. ஆனால், நினைவின்றி சேவையில் அதிகமாக இருக்கிறது எனில் அதில் எல்லைக் குட்பட்டது வந்து விடுகிறது, விடுபட்ட விருத்தி இருப்ப தில்லை, பெயர், புகழுக்கான மற்றும் பதவிக்கான விஷயங்கள் கலந்து விடுகிறது. எல்லைக்கப்பாற்பட்ட விருத்தி குறைந்து விடுகிறது. எனவே, பாப்தாதா விரும்புகின்றார் அதாவது கோடியில் சில அந்த சிலரிலும் சில எனது குழந்தைகள் இப்பொழுது எவரெடி ஆக வேண்டும். சமயம் வந்த பிறகு எல்லாமே சரியாகிவிடும் என்று அநேக பேர் யோசிக்கிறார்கள். ஆனால் சமயம் உங்களுடைய படைப்பு, படைப்பை தனது டீச்சராக ஆக்குவீர்களா என்ன? இரண்டாவது விஷயம் அறிந்திருப்பீர்கள் அதாவது நீண்ட காலத்துக்கான கணக்கு, நீண்ட காலத்திற்கான சம்பன்னதன்மை (முழுமைத்தன்மை) நீண்ட காலத்திற்கான பிராப்தியை செய்விக்கின்றது. எனவே இப்பொழுது சமயத்தின் நெருக்கத்தின் அடிப்படையில் நீண்ட காலத்துக்கான சேமிப்பு இருப்பது அவசியம், பிறகு, நாங்கள் நீண்ட காலம் உள்ளது என்று புரிந்துள்ளோம் என்ற புகார் கொடுக்க வேண்டாம். இப்பொழுது இருந்து நீண்ட காலத்துக்கான கவனம் வையுங்கள், புரிந்ததா? அட்டென்ஷன் ப்ளீஸ்!

பாப்தாதா இதையே விரும்புகின்றார்கள், அதாவது ஒரு குழந்தையிடமும் எந்த விதமான ஒரு பாடத்திலும் குறைவு இருந்து விடக்கூடாது. பிரம்மா பாபாவிடம் அன்பு இருக்கிறது அல்லவா! அன்பிற்கு கைமாறு (ரிட்டன்) கொடுக்க வேண்டும் அல்லவா! அன்புக்கு ரிட்டன் தன்னுடைய குறையை சோதனை செய்யுங்கள் மற்றும் ரிட்டன் கொடுங்கள், மாற்றிக் (டர்ன்) கொள்ளுங்கள். தனக்குத்தானே மாற்றிக் கொள்ள வேண்டும் இதுதான் கைமாறு ரிட்டர்ன். எனவே கைமாறு கொடுப்பதற்கான தைரியம் இருக்கிறது அல்லவா! கைகளை உயர்த்தி விடுகிறீர்கள், மிகவும் மகிழ வைத்து விடுகிறீர்கள், கையை பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைந்துவிடுகின்றார். இப்பொழுது உள்ளத்தில் மிக உறுதியாக (பக்கா) ஒரு சதவீதம் கூட (கச்சா) காய் என்பது இருக்கக் கூடாது. பக்காவான உறுதியான விரதம் எடுங்கள். ரிட்டன் கொடுத்தே ஆக வேண்டும். கைமாறு செய்தே ஆக வேண்டும். தனக்கு தானே தன்னைத்தானே திருத்திக் (டர்ன்) கொள்ள வேண்டும்.

இப்பொழுது சிவராத்திரி வந்து கொண்டிருக்கிறது அல்லவா எனவே அனைத்து குழந்தைகளும் தந்தையின் ஜெயந்தி தான் தனது ஜெயந்தி என்று கொண்டாடுவதற்கான ஊக்கத்துடனும் அன்போடும் வந்திருக்கிறீர்கள். நல்ல நல்ல நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறீர்கள், சேவைக்கான திட்டம் மிகவும் நன்றாக உருவாகி இருக்கிறது. ஆனால்.... ஆனால் சொல்வது நன்றாக இல்லை. ஜெகதாம்பா தாயின் ஆனால் (லேக்கின்) சப்தத்திற்கான அர்த்தம் சிந்தி பாஷை யில் கின் என்று கூறும் பொழுது குப்பையை கூறப்படுகிறது. எனவே லேக்கின் என்று கூறுவது என்றாலே குப்பை எடுப்பதாகும். எனவே லேக்கின் சொல்வது நன்றாக இல்லை. ஆனால் கூற வேண்டியதாக இருக்கிறது. எப்படி மற்ற சேவைகளில் திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபடு கின்றீர்கள், உருவாக்கவும் செய்கிறீர்கள் ஆனால் இந்த விரதத்தை எடுப்பதற்கான திட்டத்தையும் உருவாக்க வேண்டும். ரிட்டர்ன் -கைமாறு செய்துதான் ஆக வேண்டும், ஏனென்றால் ரிட்டன் எப்படி கொடுப்பது? என்று எப்பொழுதேனும் பாப்தாதாவோ அல்லது யாரேனும் கேட்கிறார்கள் என்றால், அதிகபட்சமாக இந்த பதிலை தான் தருகிறார்கள் ஆமாம், மிகவும் நல்லது, முடிவில் ஆனால் எவ்வளவு பாபா கூறுகிறாரோ அவ்வளவு இல்லை என்பதாகும். இப்பொழுது இந்த பதில் இருக்க வேண்டும் - என்ன பாபா விரும்புகிறாரோ அதை கொடுக்க வேண்டும். குறிப்பு எடுங்கள், பாப்தாதா என்ன விரும்புகின்றாரோ அந்த பட்டியலை (லிஸ்ட்டை) உருவாக்குங்கள், பட்டியலை எடுங்கள் மற்றும் சோதனை செய்யுங்கள். பாப்தாதா எதை விரும்புகிறாரோ அது இருக்கிறதா? இல்லையா? உலகத்தார்கள் நீங்கள் (பூர்வ) மூதாதையர் மூலமாக முக்தியை விரும்புகிறார்கள், முக்தியை கொடு முக்தியை கொடு என்று அலறிக் கொண்டும் இருக்கிறார்கள், எப்பொழுதுவரை அதிக பட்சமான குழந்தைகள் தன்னுடைய பழைய சம்ஸ்காரம் அதை நாம் இயற்கை நேச்சர் என்று கூறுகிறோம், இயல்பு அல்ல, இயற்கை ஆகிவிட்டது. அதில் ஏதேனும் இருந்து கொண்டி ருக்கிறது, முக்தி அடையவில்லை எனில் அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தி கிடைக்காது, எனவே பாப்தாதா கூறுகின்றார் ஹே முக்தியை வழங்கும் குழந்தைகளே! மாஸ்டர் முக்தியின் வள்ளல் களே! இப்பொழுது தன்னைத்தான் முக்தி செய்தீர்கள் எனில் அனைத்து ஆத்மாக்களுக்கான முக்திக்கான வாயிற் கதவு திறந்துவிடும் அல்லவா! கதவுக்கான சாவி என்ன - எல்லைக்கப்பார்பட்ட வைராக்கியமாகும். காரியங்கள் அனைத்தும் செய்யுங்கள் ஆனால் எப்படி சொற்பொழிவில் கூறுகிறீர்களோ அதாவது இல்லறவாசிகளுக்கு தாமரை மலருக்கு சமமாக ஆகுங்கள் என்பது போன்று அனைத்தும் செய்தாலும் காரியத்தில் மூழ்கி இருந்தாலும் முக்தி - விடுபட்ட நிலை சாதனத்திற்கும் வசம் இல்லை, பதவிக்கும் வசமற்ற நிலை, ஏதாவது கிடைத்து விடுகிறது பொசிஷன் அல்ல, மாயாவின் ஆப்போசிட் (எதிர்ப்பு) ஏற்பட்டு விடுகிறது, நியாரா மற்றும் பாபாவிற்கு பியாரா, என்ன கடினமா? அன்பாகவும் விடுபட்ட நிலையும் அடைவது கடினமா? யாருக்கு கஷ்டமாக இருக்கிறதோ அவர்கள் கை உயர்த்துங்கள், (யாரும் கையை உயர்த்த வில்லை) யாருக்கும் கடினமில்லை என்றால் பிறகு சிவராத்திரிக்குள் சம்பன்னமாகிவிடலாம். கஷ்டம் இல்லை என்றால் ஆகித்தான் தீரவேண்டும். பிரம்மா பாபாவுக்கு சமமாக ஆகியே தீர வேண்டும், எண்ணத்திலும், வார்த்தையிலும், சேவையிலும், சம்பந்தம் தொடர்பிலும், அனைத்திலும் பிரம்மா பாபாவுக்கு சமமாக ஆக வேண்டும்.

நல்லது பாபா மற்றும் தாதா கிரேட் கிரேட் கிராண்ட் பாதர் இவர்களிடம் மிகவும் 100% விடவும் அதிகமான அன்பு இருக்கிறது என்று யாரெல்லாம் புரிந்திருக்கிறீர்களோ அவர்கள் கை உயர்த்துங் கள். இப்பொழுது மகிழ்ச்சி படுத்த வேண்டாம், அனைவரும் கை உயர்த்தினார்கள். டிவியிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லவா! சிவராத்திரியில் இந்த டிவி பார்க்கப்படும் மற்றும் கணக்கு எடுக்கப்படும் சரிதானே! ஏதேனும் முழுமை நிலையில் வித்தியாசம் இருக்கக் கூடாது. அன்பிற்கு பின்னே பலியாக வேண்டும். என்ன இது பெரிய விஷயமா! உலகத்தார்கள் கூட அசுத்த அன்பிற்கு பின்னே வாழ்க்கையே(உயிரையே) கொடுப்பதற்கு தயாராகிறார்கள் . பாபா வெறும் இதைத் தான் கூறுகிறார் அதாவது குப்பையை கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான். நல்ல பொருளைக் கொடுக்க வேண்டாம், குப்பையை கொடுத்து விடுங்கள். பலகீனங்கள் குறைகள் என்னென்ன இருக்கிறதோ அவை குப்பைகள் தானே! குப்பையை தியாகம் செய்வது - பலி செய்வது என்ன பெரிய விஷயம். பிரச்சனைகள் சமாப்தியாக வேண்டும், சுய முன்னேற்றம் உயர்ந்ததாக ஆக வேண்டும். என்ன செய்வது பிரச்சனை அப்படி இருக்கின்றது என்பதை தானே கூறுகிறீர்கள். எனவே அசைக்க கூடிய மற்ற விஷயங்கள், பிரச்சனைக்கான பெயரும் இருக்கக் கூடாது, அப்படி சுய மனோநிலையை (ஸ்தியை) சக்திசாலியாக ஆக்குங்கள். சமாப்திக்கான திரையை திறக்கும் போது என்ன தென்படும், பரிஸ்தாவின் ஜொலிப்பு தென்பட்டுக் கொண்டிருக்கும். அனைத்து குழந்தைகளும் ஜோலித்துக் கொண்டே இருப்பதாக தென்படுவார்கள். ஆகையால் இப்பொழுது திரையை திறக்கும் காரியம் நின்று கொண்டிருக்கிறது, உலகத்தார்கள் திரையை விலக்குங்கள், திரையை விலக்குங்கள் என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தன்னுடைய திட்டத்தை தானே உருவாக்குங்கள். உருவாக்கப்பட்ட திட்டம் கொடுக்கிறீர்கள் அல்லவா பிறகு அதில் அநேக விஷயங்கள் வந்து விடுகிறது. தனது திட்டத்தை தைரியமுடன் உருவாக்குங்கள். உறுதி என்ற சாவியை போடுங்கள், அப்பொழுது வெற்றி என்பது கிடைத்தே தீரும். திடமான சங்கல்பம் செய்யுங்கள் மற்றும் பாப்தாதா மகிழ்ச்சியுடன் ஆஹா குழந்தாய், ஆஹா என கூறுவார். உறுதியான எண்ணங்களை எழுப்பினீர்கள் ஆனால் உறுதியில் பிறகு சிறிது சிறிது சோம்பேறித் தனம் கலந்து ஆகி விடுகிறது. ஆகையால் வெற்றியும் எப்பொழுதாவது பாதியாக, கால் பகுதியாக ஆகிவிடுகிறது. எப்படி அன்பில் 100% இருக்கிறது அதே போன்று முயற்சியிலும் முழுமை சம்பன்னம் என்பது 100 சதவீதம் இருக்க வேண்டும். அதைவிட அதிகமாக இருக்கலாம் ஆனால் குறையக் கூடாது. விருப்பமா? விருப்பமா? என்ன சிவராத்திரியில் பிரகாசத்தை காட்ட வேண்டும் அல்லவா? ஆகித்தான் தீரவேண்டும் அல்லவா! நாம் ஆகவில்லை என்றால் யார் ஆவர்கள். இந்த நம்பிக்கையை வையுங்கள். நான் தான் இருந்தேன் நாம் தான் இருக்கிறோம் மேலும் பிறகும் நாம் தான் இருப்போம், இந்த நம்பிக்கை வெற்றியை உருவாக்கித் தரும். (பரதர்சன்) மற்றவர்களை பற்றி யோசிக்க வேண்டாம். மற்றவர்களை பார்க்க வேண்டாம், தன்னையே பார்க்க வேண்டும். அநேக குழந்தைகள் உரையாடலில் கூறுகிறார்கள் - வெறும் இவர்களை சிறிது சரி செய்து விடுங்கள் போதும் பிறகு நான் சரியாகி விடுவேன், வெறும் இவர்களை மாற்றி விடுங்கள் போதும் நானும் மாறிவிடுவேன். ஆனால் அவர்களும் மாற மாட்டார்கள், நீங்களும் மாறமாட்டீர்கள். தன்னை மாற்றினால் அவர்களும் மாறிவிடுவார்கள். இது இருந்தால் இது இருக்கும் என்று எந்த ஆதாரமும் வைக்க வேண்டாம்., நீங்கள் செய்தே ஆக வேண்டும். நல்லது யார் முதல் முறையாக வந்திருக்கிறீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். முதல் முறை வந்திருப்பவர்களின் சிறப்பை பாப்தாதா கூறுகின்றார், அதாவது எப்பொழுது சமயம் மிகவும் குறைவாக இருக்கிறதோ அந்த சமயத்தில் வந்திருக்கிறீர்கள் ஆகையால் முயற்சி அவ்வளவு தீவிரமாக செய்யுங்கள் - யார் கடைசியோ அவர்கள் வேகமாகவும் (ஃபாஸ்ட்), ஃபாஸ்டா சென்றால் முதலாவதாகவும் (ஃபஸ்ட்) வர முடியும், வாருங்கள். ஏனென்றால் இப்பொழுது நாற்காலிக்கான விளையாட்டு (ச்சேயர் கேம்) நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது யாருக்கு வெற்றி, யாரும் அவுட்டில்லை. லேட்டாக வந்திருக்கிறீர்கள் ஆனால் ஃபாஸ்ட்டாக செல்வதன் மூலமாக சென்றடைந்து விடலாம். வெறும் தனக்குத்தானே அமிர்தவேளை சமயத்தில் அமர்பவ என்ற வரதானத்தை நினைவு கூறுங்கள். நல்லது! அனைவரும் மிக தூரத்தில் இருந்தும் சில பேர் நெருக்கத்திலிருந்தும் வந்திருக்கிறீர்கள். தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். இந்த குழு மிக நன்றாக இருக்கிறது. டிவியிலும் பார்க்கின்றார்கள் அல்லவா! சபை நிறைந்து இருப்பதினால் எத்தனை நன்றாக தோன்றுகிறது. நல்லது! எனவே எவரெடியாக இருக்கிறீர்களா? எவரெடிக்கான பாடம் படிக்கிறீர்கள் தானே! நல்லது!

மதுபன் நிவாசிகளுக்காக: மதுவனத்தை சேர்ந்தவர்கள் கை உயர்த்துங்கள். அதிகமாக இருக்கிறீர்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் விருந்தளிப்பவர்கள், மற்றவர்கள் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள், திரும்பி சென்று விடுவார்கள். ஆனால் மதுவனத்தை சேர்ந்தவர்கள் விருந்தளிப்பவர்கள் (கோஸ்ட்). அது மட்டுமல்ல பாபாவுக்கு நெருக்க மானவர்களும் (நியரஸ்ட்) பாபாவுக்கு பிரியமானவர்களாகவும் (டியரெஸ்ட்) இருக்கிறார்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் அல்லவா! எந்த இடத்திற்கு மதுபன்வாசிகள் சென்றாலும் எந்த பார்வையுடன் பார்க்கிறார்கள்? ஆஹா மதுவனத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். ஏனென்றால் மதுவனம் என்ற பெயர் கேட்டதுமே மதுவனத்திற்கான தந்தை பாபா நினைவு வந்து விடுகிறார். ஆகையினால் மதுபன்வாசிகளின் மகத்துவம் இருக்கிறது. மகத்துவம் இருக்கிறதா? மகிழ்ச்சி அடைகிறார்கள் தானே! இப்படியாக அன்பின் வடிவமாக பாலனைக்கான இடம் கோடியிலும் சிலருக்குதான் தான் கிடைக்கிறது, எல்லாருமே மதுபன் வாசியாக இருப்பதற்கு விரும்புகிறார்கள், முடிகிறதா என்ன! நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள். எனவே நல்லது! மதுபன்வாசிகள் மறப்பதில்லை. நாங்கள் கேட்கவில்லை ஆனால் பாப்தாதா சதா உள்ளத்தில் கேட்கின்றார் என்று புரிந்து இருக்கிறீர்கள். முதலில் மதுபன்வாசிகள் இல்லை என்றால் வருபவர்கள் எங்கு செல்வார்கள். சேவைக்கு நிமித்தமானவர்கள் அல்லவா! சேவாதாரிகள் எத்தனைதான் கிடைத்தாலும், அடித்தளம் (பவுண்டேஷன்) மதுபன் வாசிகளே எனவே ஞான சரோவரிலிருந்தும், பாண்டவ பவனிலிருந்தும் வந்திருக்கும் அனைவருக்கும் பாப்தாதா உளமாற ஆசீர்வாதத்தையும் அன்பு நினைவையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இங்கு என்ன டோலி கிடைக்கிறதோ அது மேலே மதுபனில் கிடைக்கிறதா? எனவே மதுபன்வாசிகளுக்கு டோலியும் கிடைக்கிறது பாபாவுடைய இனிமை யான ஞானமும் (போலி) கிடைக்கிறது. இரண்டும் கிடைக்கிறது.

குளோபல் ஹாஸ்பிடலைச் சேர்ந்தவர்களிடம்:- அனைத்து ஹாஸ்பிடல் சேர்ந்தவர்கள் நலமாக இருக்கிறீர்களா? ஏனென்றால் ஹாஸ்பிடலுக்கானதும் விசேஷமான பாகமாக இருக்கிறது அல்லவா! கீழே வந்திருக்கிறீர்கள் குறைவான நபரே வந்திருக்கிறீர்கள், ஹாஸ்பிடலைச் சேர்ந்தவர் களும் நன்றாக சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். தீவிர வேகத்திலும் அதே நேரத்தில் ஹாஸ்பிடலிலும் எமர்ஜென்சிக்கான காரியமாக இருந்தால் இங்கு தானே வருவார்கள். எப்பொழுது இந்த ஹாஸ்பிடல் திறந்தது அப்பொழுது இருந்து அனைவருடைய பார்வையிலும் இது வந்து விட்டது, அதாவது பிரம்மா குமாரிகள் வெறும் ஞானம் கொடுப்பவர்கள் மட்டுமல்ல, ஆனால், சமயத்தில் உதவியும் செய்கிறார்கள். சமுதாய (சோசியல்) சேவையும் செய்கிறார்கள். எனவே ஹாஸ்பிடலை வைத்து அபுவில் இந்த வாயுமண்டலம் மாறிவிட்டது, முதலில் எந்த பார்வையுடன் பார்த்திருந்தார்களோ இப்பொழுது அப்படிப்பட்ட பார்வையில் பார்ப்பதில்லை. இப்பொழுது சகயோகிக்கான பார்வையுடன் பார்க்கின்றார்கள். ஞானத்தை ஏற்றுக் கொள்கிறார் களோ இல்லையோ ஆனால் சகயோகத்தின் பார்வையுடன் பார்க்கிறார்கள் எனவே ஹாஸ் பிடலைச் சேர்ந்தவர்களுடைய சேவையும் இருக்கிறது. அல்லவா! நல்லது .!

நல்லது இன்றைய விஷயங்கள் என்னென்ன சம்பன்னமாகியே தீர வேண்டும். என்னவானாலும் சரி முழுமை நிலையைப் பெற வேண்டும். இந்த ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சமமாக வேண்டும் நல்லது !

நாலா புறத்திலும் இருக்கக்கூடிய கோடியிலும் சில அந்த சிலரிலும் சிலர் பாக்கியவான்களுக்கு, பகவான் உடைய குழந்தைகள் சிரேஷ்டமான ஆத்மாக்களுக்கு, சதா தீவிர முயற்சியின் மூலமாக என்ன யோசித்தோமோ அதை செய்யக்கூடிய உயர்ந்ததாக யோசிக்க கூடிய சிரேஷ்டமாக செய்யக்கூடிய லட்சியம் மற்றும் இலட்சணங்களை சமமாக ஆக்கக்கூடிய அப்படிப்பட்ட விசேஷமான ஆத்மாக்களுக்கு, சதா நீண்ட காலத்துக்கான முயற்சியின் மூலமாக இராஜ்ய பாக்கியம் மற்றும் பூஜ்ஜிய நிலையை அடையக்கூடிய சிரேஷ்டமான ஆத்மாக்களுக்கு, சதா பாபாவுடைய அன்பிற்கு கைமாறாக தன்னை மாற்றம் செய்யக்கூடிய நம்பர் ஒன் ஆக இருக்கக் கூடிய, வெற்றியை (வின்) அடையக்கூடிய பாக்கியவான் குழந்தைகளுக்கு பாப்தாதாவினுடைய அன்பு நினைவு மற்றும் நமஸ்தே

வரதானம்:
விஷ்வ கல்யாணகாரிக்கான உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து வினாச லீலைகளைப் பார்க்கக்கூடிய சாட்சி பார்வையாளர் ஆகுக!

இறுதி வினாச லீலை பார்ப்பதற்காக விஷ்வ கல்யாணகாரியின் உயர்ந்த நிலை தேவை. இந்த நிலையில் நிலைத்திருப்பதால் தேகத்தினுடைய அனைத்து கவர்ச்சி அதாவது சம்பந்தம், பதார்த்தம், சமஸ்காரம், இயற்கை யினுடைய குழப்பத்தினுடைய கவர்ச்சி அனைத்தும் முடிந்து போய்விடும். எப்பொழுது அப்படிப்பட்ட நிலை இருக்குமோ அப்பொழுது சாட்சி பார்வை உருவாக்கி, உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து சாந்திக்கான, சக்திக்கான கிரகணங்களை அனைத்து ஆத்மாக்களுக்கும் கொடுக்க முடியும்.

சுலோகன்:
பலவான் ஆகுங்கள் அப்பொழுது மாயையினுடைய வேகம் (போர்ஸ்) முடிந்து போய்விடும்.

அவ்யக்த பிரேரணை: கம்பயிண்ட் ரூபத்தின் நினைவின் மூலம் சதா விஜயன் ஆகுங்கள்.

வரத்தை வழங்கும் வள்ளல் தந்தை மற்றும் வரதானி ஆத்மாக்கள் நாம் இருவரும் இணைந்து இருக்கிறோம் என்ற இந்த நினைவு சதா இருந்தது என்றால் பவித்திரதாவினுடைய குடை நிழல் தானாக இருக்கும். ஏனென்றால் எங்கு சர்வ சக்திவான் தந்தை இருக்கிறாரோ அங்கு தூய்மையற்ற நிலை கனவிலும் வரவே முடியாது. சதா தந்தை மற்றும் நீங்கள் தம்பதியினர் ரூபத்தில்(யுகல்) இருங்கள் தனியாக(சிங்கிளாக) இருக்க வேண்டாம். சிங்கிளாக இருந்தீர்கள் என்றால் பவித்தர மெனும் சுமங்கலித் தன்மை போயிவிடும்.