27-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய நேரம் மிகவும் மதிப்புமிக்கது, ஆகையினால் வீணான விஷயங்களில் உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்

கேள்வி:
மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கான எந்தவொரு ஸ்ரீமத் பாபாவிடமிருந்து கிடைத்திருக்கிறது?

பதில்:
குழந்தைகளே, நீங்கள் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகின்றீர்கள் எனும்போது எந்த அசுர சுபாவமும் இருக்கக் கூடாது, 2. யார் மீதும் கோபப்படக் கூடாது, 3. யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது, 4. எந்தவொரு வீணான விஷயங்களையும் காதுகளின் மூலம் கேட்கக் கூடாது. பாபாவினுடைய ஸ்ரீமத் தீயதை கேட்காதீர்கள்...........

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அமருவது சாதாரணமாக இருக்க வேண்டும். எங்கு வேண்டு மானாலும் நினைவில் அமரலாம். காட்டில் வேண்டுமானாலும் அமருங்கள், மலை மீது அமருங் கள், வீட்டில் அமருங்கள் அல்லது குடிசையில் அமருங்கள், எங்கு வேண்டுமானாலும் அமரலாம். இப்படி அமருவதின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் மாறுகிறீர்கள். இப்போது நாம் மனிதர்கள், வருங்காலத்து தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாம் முள்ளிலிருந்து மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். பாபா தோட்டக்கா ரராகவும் இருக்கின்றார், எஜமானராகவும் இருக்கின்றார். நாம் பாபாவை நினைவு செய்வதின் மூலமும் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றுவதின் மூலமாகவும் மாறிக் கொண்டிருக் கிறோம். இங்கு அமருங்கள், எங்கு வேண்டுமானாலும் அமருங்கள், நீங்கள் மாற்றம் அடைந்து - அடைந்து மனிதனிலிருந்து தேவதையாக மாறிக் கொண்டே செல்கிறீர்கள். நாம் இப்படி (இலஷ்மி நாராயணனாக) ஆகின்றோம் என்பது புத்தியில் குறிக்கோள் இருக்கிறது. எந்த காரியம் வேண்டு மானாலும் செய்யுங்கள், ரொட்டி சுடுங்கள், புத்தியில் பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள். நடக்கும்போதும் சுற்றும்போதும் அனைத்தையும் செய்து கொண்டே நினைவில் மட்டும் இருங்கள் என்று குழந்தைகளுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. பாபாவின் நினைவின் மூலம் ஆஸ்தியும் நினைவு வருகிறது, 84 பிறவிகளின் சக்கரமும் நினைவு வருகிறது. இதில் வேறு என்ன கஷ்டம் இருக்கிறது, எதுவுமே இல்லை. நாம் தேவதைகளாக ஆகின்றோம் எனும்போது எந்த அசுர சுபாவமும் இருக்கக் கூடாது. யார் மீதும் கோபப்படக் கூடாது, யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது, எந்தவொரு வீணான விஷயங்களையும் காதுகளின் மூலம் கேட்கக்கூடாது. பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள். மற்றபடி வெளி உலக வீணான விஷயங்களை நிறைய கேட்டிருக்கிறோம். அரைக் கல்பமாக இதைக் கேட்டு-கேட்டு நீங்கள் கீழே இறங்கி வந்துள்ளீர்கள். இப்போது பாபா கூறு கின்றார், இந்த வீணானவற்றைப் பேசாதீர்கள். இன்னார் இப்படி இருக்கிறார், இவரிடத்தில் இந்த குணம் இருக்கிறது. போன்ற எந்தவொரு வீணான விஷயங் களையும் பேசக்கூடாது. இது உங்களுடைய நேரத்தை வீணாக்குவதாகும். உங்களுடைய நேரம் மிகவும் மதிப்புமிக்கதாகும். படிப்பில் தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது இதன் மூலம் தான் பதவியை அடைவீர்கள். பாபா ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், ஒருவர் மற்றவர் முன்னால் அமரச் செய்கிறார்கள், என்றாலும் கூட பாபாவின் நினைவில் இருங்கள். நினைவில் அமர்ந்து-அமர்ந்து நீங்கள் முள்ளி லிருந்து மலராக ஆகின்றீர்கள். எவ்வளவு நல்ல யுக்தியாக இருக்கிறது! எனவே பாபாவினுடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வியாதியாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு வியாதிக்கும் மருத்துவர் இருக்கின்றனர். பெரிய-பெரிய மனிதர்களுக்கு தனியாக மருத்துவர்கள் இருக்கிறார்கள் அல்லவா! உங்களுக்கு மருத்துவராக ஆகியிருப்பது யார்? பகவான். அவர் அழிவற்ற மருத்துவர் ஆவார். நான் உங்களை அரைக்கல்பத்திற்கு நோயற்றவர்களாக மாற்றுகின்றேன் என்று கூறுகின்றார். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் பாவகர்மங்கள் அழிந்து விடும். நீங்கள் 21 பிறவி களுக்கு நோயற்றவர்களாக ஆகி விடுவீர்கள். இந்த கங்கணத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும். நினைவின் மூலம் தான் நோயற்றவர்களாக ஆவீர்கள். பிறகு 21 பிறவிகளுக்கு எந்த நோயும் இருக்காது. ஆத்மா என்னவோ அழிவற்றது தான், சரீரம் தான் நோயுற்றதாக ஆகின்றது. ஆனால் அனுபவிப்பது ஆத்மா தான் அல்லவா! அங்கே அரைக் கல்பத்திற்கு நீங்கள் ஒருபோதும் நோயுற்றவர்களாக ஆக மாட்டீர்கள். நினைவில் மட்டும் ஈடுபட்டிருங்கள். சேவை என்னவோ குழந்தைகள் செய்யத் தான் வேண்டும். கண்காட்சியில் சேவை செய்து-செய்து குழந்தைகளுக்கு தொண்டை கட்டிக் கொள்கிறது. நாம் சேவை செய்து-செய்து பாபாவிடம் சென்று விடுவோம் என்று நிறைய குழந்தைகள் எண்ணுகிறார்கள். இது கூட மிகவும் நல்ல வழியாக இருக்கிறது, சேவைக்கான நல்ல முறையாக இருக்கிறது. குழந்தைகள் கண்காட்சியில் கூட புரிய வைக்க வேண்டும். கண்காட்சியில் முதலில் இந்த இலஷ்மி- நாராயணனுடைய சித்திரத்தைக் காட்ட வேண்டும். இது முதல்தரமான சித்திரமாகும். பாரதத்தில் இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சரியாக இவர்களுடைய இராஜ்யம் இருந்தது. குறைவற்ற செல்வம் இருந்தது. தூய்மை-சுகம்-அமைதி அனைத்தும் இருந்தது. ஆனால் பக்திமார்க்கத்தில் சத்யுகத்திற்கு இலட்சக் கணக்கான ஆண்டுகளைக் கொடுத்து விட்டார்கள் எனும்போது எந்தவொரு விஷயமும் எப்படி நினைவுக்கு வரும்? இது இலஷ்மி-நாராயணனுடைய முதல்தரமான சித்திரமாகும். சத்யுகத்தில் 1250 ஆண்டுகள் இந்த வம்சம் இராஜ்யம் செய்தது. முன்பு நீங்களும் இதை தெரிந்திருக்கவில்லை. இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டியுள்ளார், நீங்கள் முழு உலகத்தின் மீதும் இராஜ்யம் செய்திருந்தீர்கள், நீங்கள் மறந்து விட்டீர்களா என்ன? நீங்கள் தான் 84 பிறவிகள் கூட எடுத்திருந்தீர்கள். நீங்கள் சூரியவம்சத்தவர்களாக இருந்தீர்கள். மறுபிறவி எடுக்கத்தான் செய்கிறீர்கள். நீங்கள் எப்படி 84 பிறவிகள் எடுத்தீர்கள் என்பது புரிந்து கொள்வதற்கு மிகவும் சுலபமான விசயமாகும். கீழே இறங்கியே வந்தீர்கள், இப்போது மீண்டும் பாபா ஏறும் மார்க்கத்தில் கொண்டு செல்கின்றார். உங்களுடைய உயரும் கலையினால் அனைவருக்கும் நன்மை என்று பாடப்பட்டுள்ளது. பிறகு சங்கு போன்றவைகளை ஊதுகிறார்கள். குழப்பங்கள் ஏற்படும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள், பாகிஸ்தானில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பார்த்தீர்கள்- அனைவருடைய வாயிலிருந்தும் ஹே பகவான் என்று தான் வந்தது, ஐயோ ராமா இப்போது என்ன நடக்குமோ என்று தான் வந்தது. இப்போது இந்த விநாசம் மிகப் பெரியதாகும், பின்னால் வெற்றி முழக்கம் நடக்கப் போகிறது. பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - இந்த எல்லையற்ற உலகம் இப்போது அழிய வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஞானத்தை உங்களுக்குக் கூறுகின்றார். எல்லைக்குட்பட்ட விஷயங் களின் வரலாறு-புவியியலை கேட்டு வந்துள்ளீர்கள். லஷ்மி-நாராயணன் எப்படி இராஜ்யம் செய்தார்கள் என்பது யாருக்கும் தெரிய வில்லை. இவர்களுடைய வரலாறு-புவியியலை யாரும் தெரிந்திருக்க வில்லை. நீங்கள் நல்ல விதத்தில் தெரிந்துள்ளீர்கள் - இத்தனை பிறவிகள் இராஜ்யம் செய்தார்கள் பிறகு இந்த தர்மம் வருகிறது, இதை ஆன்மீக ஞானம் என்று சொல்லப்படுகிறது, இதை ஆன்மீகத் தந்தை வந்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார். அங்கே மனிதர்கள் மனிதர்களுக்குப் படிப்பிக் கிறார்கள், இங்கே ஆத்மாக்களாகிய நம்மை பரமாத்மா தனக்கு சமமாக மாற்றிக் கொண்டி ருக்கிறார். ஆசிரியர் கண்டிப்பாக தனக்கு சமமாக மாற்றுவார்.

நான் உங்களை என்னைவிடவும் உயர்ந்த இரட்டை கிரீடதாரியாக மாற்றுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். நினைவின் மூலம் ஒளியின் கிரீடம் கிடைக்கிறது, 84 பிறவிகளின் சக்கரத்தை தெரிந்து கொள்வதின் மூலம் சக்கரவர்த்தியாக ஆகின்றீர்கள், இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் நிலை களையும் புரிய வைத்திருக்கின்றேன். சத்யுகத் தில் கர்மம் அகர்மமாக இருக்கிறது. இராவண இராஜ்யத்தில் தான் கர்மம் விகர்மமாக இருக்கிறது. படி இறங்கிக் கொண்டே வருகிறீர்கள், கலைகள் குறைந்து-குறைந்து இறங்கத்தான் வேண்டும். எவ்வளவு மோசமானவர்களாக ஆகி விடுகிறீர்கள். பிறகு தந்தை வந்து பக்தர்களுக்கு பலனைக் கொடுக்கின்றார். உலகத்தில் அனைவருமே பக்தர்களே ஆவர். சத்யுகத்தில் பக்தர்கள் யாரும் இருப்பதில்லை. பக்தி மார்க்கம் இங்கே இருக்கிறது. அங்கே ஞானத்தின் பலன் இருக்கிறது. இப்போது நாம் பாபாவிடமிருந்து எல்லையற்ற பலனை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். யாருக்குமே முதலில் இந்த இலஷ்மி-நாராயணனுடைய சித்திரத்தைப் பற்றி புரிய வையுங்கள். இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுடைய இராஜ்யம் இருந்தது, உலகத்தில் சுகம்-அமைதி-தூய்மை அனைத்தும் இருந்தது, வேறு எந்த தர்மமும் இல்லை. தற்சமயத்தில் அநேக தர்மங்கள் இருக்கின்றன, அந்த முதல் தர்மம் இல்லை பிறகு இந்த தர்மம் மீண்டும் கண்டிப்பாக வர வேண்டும். பாபா எவ்வளவு அன்போடு படிப்பிக் கின்றார்! சண்டையின் விசயம் ஏதும் இல்லை, எளிமையான வாழ்க்கை, மாற்றானுடைய இராஜ்ய மாக இருக்கிறது, நம்முடையது அனைத்தும் மறைமுகமானதாகும். பாபாவும் மறைமுகமாக வந்திருக்கின்றார். வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார். ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது. சரீரத்தின் மூலம் நடிப்பை நடிக்கிறது. ஆத்மா இப்போது தேக-அபிமானத்தில் வந்திருக்கிறது. இப்போது பாபா கூறுகின்றார், ஆத்ம- அபிமானிகளாக ஆகுங்கள். பாபா வேறு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. பாபா மறைமுகமாக வரும்போது குழந்தைகளாகிய உங்களுக்கு மறைமுகமான தானமாக உலகத்தின் இராஜ்யத்தைக் கொடுக்கின்றார். உங்களுடைய அனைத்தும் மறைமுகமானது ஆகையினால் வழக்கமாக கன்னியர்களுக்கு வரதட்சணை கொடுக்கிறார்கள் என்றால் மறைமுகமாகத் தான் கொடுக்கிறார்கள். உண்மையில் மறைமுகமான தானம் மகா புண்ணியம் என்று பாடப்பட்டுள்ளது, இரண்டு-நான்கு பேருக்கு தெரிந்தது என்றால் கூட சக்தி குறைந்து விடுகிறது.

பாபா கூறுகின்றார் குழந்தைகளே, நீங்கள் கண்காட்சியில் முதல்-முதலில் இந்த இலஷ்மி-நாராயணனுடைய சித்திரத்தைப் பற்றி அனைவருக்கும் புரிய வையுங்கள். நீங்கள் உலகத்தில் அமைதி வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அல்லவா! ஆனால் அது எப்போது இருந்தது, என்பது யாருடைய புத்தியிலும் இல்லை. சத்யுகத்தில் தூய்மை, சுகம், அமைதி அனைத்தும் இருந்தது என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள், இன்னார் சொர்க்கவாசியாகி விட்டார் என்று நினைவு கூட செய்கிறார்கள், எதையும் புரிந்து கொள்வதில்லை. யாருக்கு வாயில் என்ன வந்ததோ அதைச் சொல்லி விடுகிறார்கள், அர்த்தம் எதுவுமே இல்லை. இது நாடகமாகும். இனிமையிலும் இனிமை யான குழந்தைகளுக்கு நாம் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுகிறோம் என்ற ஞானம் புத்தியில் இருக்கிறது. இப்போது தூய்மையற்ற உலகத்திலிருந்து தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்ல பாபா வந்திருக்கின்றார். பாபாவின் நினைவில் இருந்து மாற்றமாகிக் கொண்டே இருக்கிறார்கள். முட்களிலிருந்து மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு நாம் சக்கர வர்த்தி இராஜாவாக ஆவோம். அப்படி மாற்றக் கூடியவர் பாபா ஆவார். அந்த பரம் ஆத்மா எப்போதும் தூய்மையாக இருக்கின்றார். அவர் தான் தூய்மையாக்க வருகின்றார். சத்யுகத்தில் நீங்கள் அழகாக ஆகி விடுவீர்கள். அங்கே இயற்கையான அழகு இருக்கிறது. இன்றைக்கு செயற்கையான அலங்காரம் செய்கிறார்கள் அல்லவா. என்னென்ன ஃபேஷன் வந்திருக்கிறது. எப்படி-எப்படியெல்லாம ஆடை அணிகிறார்கள்! முன்பெல்லாம் பெண்கள் அதிகம் பர்தாவுக்குள் இருந்தார்கள், யாருடைய கண்ணும் படக்கூடாதென்று இருந்தார்கள். இப்போது இன்னும் வெளிப் படையாகி விட்டார்கள் எனும்போது ஆங்காங்கே தீமை அதிகரித்து விட்டது. தீயதைக் கேட்காதீர்கள் என்று பாபா கூறுகின்றார்.

இராஜாவிடம் சக்தி இருக்கிறது. ஈஸ்வரனுக்காக என்று தானம் செய்கிறார்கள் என்றால் அதில் சக்தி இருக்கிறது. இங்கே எந்த சக்தியும் இல்லை, யாருக்கு என்ன வந்ததோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். மிகவும் மோசமான மனிதர்களாக இருக்கிறார்கள். நீங்கள் மிகவும் சௌபாக்கியசாலிகள், உங்களுடைய கையை படகோட்டி பிடித்திருக்கின்றார். நீங்கள் தான் கல்பம்-கல்பமாக கருவியாக ஆகின்றீர்கள். முதலில் முக்கியமானது தேக-அபிமானம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், பிறகு மற்ற பூதங்கள் வருகின்றன. தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்ய உழைக்க வேண்டும், இது ஒன்றும் கசப்பு மருந்து இல்லை. தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் தான் சொல்கின்றார். பிறகு எவ்வளவு தான் பாபாவின் நினைவில் நடந்து சென்று கொண்டே இருந்தாலும் கால்கள் களைப் படையாது. இலேசாகி விடுவீர்கள். நிறைய உதவி கிடைக்கிறது. நீங்கள் சர்வசக்திவானின் குழந்தையாகி விடுகின்றீர்கள். நான் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், பாபாவிடம் வந்துள்ளோம். வேறு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. தீயதைக் கேட்காதீர்கள் என்று மட்டும் குழந்தைகளுக்குக் கூறுகின்றார். யார் சேவாதாரிக் குழந்தைகளாக இருப்பார்களோ அவர்களுடைய வாயிலிருந்து எப்போதும் ஞான இரத்தினங்கள் தான் வரும். ஞானத்தின் விஷயங்களைத் தவிர வேறு எந்த விஷயமும் வாயிலிருந்து வர முடியாது. நீங்கள் வெளியில் நடக்கும் வீண் விஷயங்களை ஒருபோதும் கேட்கக் கூடாது. சேவை செய்யக் கூடியவர் களின் வாயிலிருந்து எப்போதும் இரத்தினங்கள் தான் வருகிறது. ஞானத்தின் விஷயங்களைத் தவிர மற்றவை கற்களை வீசுவது போலாகும். கற்களை வீசவில்லை என்றால் கண்டிப்பாக ஞான இரத்தினங்களைத் தான் கொடுக்கிறார்கள், ஒன்று கற்களை வீசுவார்கள் அல்லது அழிவற்ற ஞான இரத்தினங்களை கொடுப்பார்கள், அதனுடைய மதிப்பை சொல்லவே முடியாது. பாபா வந்து உங்களுக்கு ஞான இரத்தினக்களைக் கொடுக்கின்றார். அவர்கள் கற்களைத் தான் வீசிக்கொண்டி ருக்கிறார்கள், அது பக்தியாகும்.

பாபா மிக-மிக இனிமையானவர் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள், அரைக்கல்பம் பாடிக் கொண்டு வருகிறார்கள், நீங்கள் தான் தாயும்-தந்தையும்......... ஆனால் அர்த்தம் எதையும் புரிந்து கொள்ளவில்லை. கிளிப் பிள்ளையைப் போல் பாடிக் கொண்டே இருந்தார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! பாபா நமக்கு எல்லையற்ற ஆஸ்தி உலகத்தின் இராஜ்யத்தையே கொடுக்கின்றார். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் உலகத்திற்கு எஜமானர் களாக இருந்தோம். இப்போது இல்லை, மீண்டும் உலகத்திற்கு எஜமானர்களாக ஆவோம். சிவபாபா பிரம்மாவின் மூலம் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். பிராமண குலம் வேண்டும் அல்லவா! பாக்கியரதம் என்று சொன்னால் கூட புரிந்து கொள்ள முடியாது ஆகையினால் பிரம்மா மற்றும் அவருடைய பிராமண குலம் ஆகும். பிரம்மாவின் உடலில் பிரவேசிக்கின்றார் ஆகையினால் அவரை பாக்கியரதம் என்று சொல்லப்படுகிறது. பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்களாவர். பிராமணர்கள் உச்சிக் குடுமியை போன்றவர்கள் (உயர்ந்தவர்கள்). விராட ரூபம் கூட அப்படி இருக்கிறது, மேலே பாபா பிறகு சங்கமயுகத்து பிராமணர்கள், யார் ஈஸ்வரிய குழந்தைகளாக ஆகிறார்களோ அவர்கள். நாம் இப்போது ஈஸ்வரிய குழந்தைகளாக இருக்கின்றோம் பிறகு தேவதைகளுடைய குழந்தைகளாக ஆவோம் எனும்போது நிலை குறைந்து விடும் என்பதைத் தெரிந்துள்ளீர்கள். இந்த இலஷ்மி-நாராயணன் கூட நிலை குறைவானவர்களே, ஏனென்றால் இவர் களிடத்தில் ஞானம் இல்லை. பிராமணர்களிடத்தில் ஞானம் இருக்கிறது. ஆனால் இலஷ்மி-நாராயணனை அஞ்ஞானி என்று சொல்ல முடியாது. இவர்கள் ஞானத்தின் மூலம் இந்தப் பதவியை அடைந்திருக்கிறார்கள். பிராமணர்களாகிய நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருக்கின்றீர்கள்! பிறகு தேவதைகளாக ஆகின்றீர்கள் எனும்போது ஞானம் எதுவும் இருப்பதில்லை, தேவதைகளிடத்தில் ஞானம் இருந்தது என்றால் தேவதா வம்சம் பரம்பரையாக இருந்து வந்திருக்கும். இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளுக்கு அனைத்து இரகசியங் களையும், அனைத்து யுக்திகளையும் கூறுகின்றேன். ரயிலில் அமர்ந்து கொண்டு கூட நீங்கள் சேவை செய்ய முடியும். ஒரு சித்திரத்தை வைத்துக் கொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டி ருந்தீர்கள் என்றால் நிறைய பேர் வந்து ஒன்று சேருவார்கள். யார் இந்த குலத்தைச் சேர்ந்தவர் களாக இருப்பார்களோ, அவர்கள் நல்ல விதத்தில் தாரணை செய்து பிரஜையாக ஆகி விடுவார்கள். சேவை செய்வதற்கு மிகவும் நல்ல-நல்ல படங்களாக இருக்கின்றன. பாரதவாசிகளாகிய நாம் முதலில் தேவி-தேவதைகளாக இருந்தோம், இப்போது ஒன்றுமே இல்லை. பிறகு வரலாறு திரும்பு கிறது. இடையில் இது சங்கமயுகமாகும், இதில் நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகின்றீர்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஞானத்தின் விஷயங்களைத் தவிர வேறு எந்த விஷயமும் வாயிலிருந்து வரக்கூடாது. வீணான விஷயங்களை ஒருபோதும் கேட்கக் கூடாது. வாயிலிருந்து எப்போதும் இரத்தினங்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும், கற்கள் அல்ல.

2) சேவையின் கூடவே நினைவு யாத்திரையில் இருந்து தங்களை நோயற்றவர்களாக மாற்ற வேண்டும். 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக்க அழிவற்ற மருத்துவர் சுயம் பகவான் நமக்கு கிடைத்திருக்கின்றார்............... என்ற போதை அல்லது குஷியில் இருக்க வேண்டும்.

வரதானம்:
ஒவ்வொரு காரியத்திலும் தந்தையை பின்பற்றி அன்பிற்கு கைமாறு செய்யக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.

யார் மீது அன்பு இருக்கிறதோ அவரை தானாகவே பின்பற்றி விடுகிறோம். சதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் - நான் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேனோ, அது தந்தையைப் போன்று இருக்கிறதா? ஒருவேளை இல்லையெனில் நிறுத்தி விடுங்கள். தந்தையை நகல் செய்து தந்தைக்குச் சமம் ஆகுங்கள். நகல் எடுப்பதற்கு கார்பன் பேப்பர் வைத்துக் கொள்வர். அதே போன்று கவனம் (அடேன்சன்) என்ற பேப்பர் வைத்துக் கொண்டால் நகல் ஆகிவிடும். ஏனெனில் இப்பொழுதே தீவிர முயற்சியாளர் ஆகி தன்னை ஒவ்வொரு சக்தியிலும் சம்பன்னம் ஆக்கக் கூடிய நேரமாகும். தன்னை தன்னால் சம்பன்னம் ஆக்க முடியவில்லையெனில் சகயோகம் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் நாளடைவில் மிகவும் தாமதம் (டூ லேட்) ஆகிவிடும்.

சுலோகன்:
திருப்தியின் பலன் மகிழ்ச்சியாகும். மகிழ்ச்சியாக ஆகின்ற பொழுது கேள்விகள் சமாப்தியாகி விடும்.

அவ்யக்த இஷாரே: ஆன்மிக ஸ்திதியின் இருப்பதற்கான பயிற்சி செய்யுங்கள், உள்நோக்கு முகமுடையவர் ஆகுங்கள்.

எந்த ஒரு பலவீன ஆத்மாவின் பலவீனத்தையும் பார்க்காதீர்கள். விதவிதமான ஆத்மாக்கள் இருக்கின்றனர் என்ற நினைவு இருக்க வேண்டும். அனைவரின் மீதும் ஆன்மிக திருஷ்டி இருக்க வேண்டும். ஆத்மாவின் ரூபத்தில் அதை நினைவில் கொண்டு வருவதன் மூலம் சக்தி கொடுக்க முடியும். ஆத்மா பேசிக் கொண்டிருக்கிறது, இது ஆத்மாவின் சன்ஸ்காரமாகும். இந்த பாடம் பக்கா செய்தால் அனைவரின் மீதும் தானாகவே சுபபாவனை ஏற்படும்.