27.07.25    காலை முரளி            ஓம் சாந்தி  14.03.2006      பாப்தாதா,   மதுபன்


பரமாத்ம சந்திப்பை அனுபவம் செய்வதற்காக தலைகீழான நான் என்பதை எரிக்கும் ஹோலி கொண்டாடுங்கள், திருஷ்டியினுடைய பீச்சாங்குழல் மூலம் அனைத்து ஆத்மாக்களுக்கும் சுகம், சாந்தி, அன்பு, ஆனந்தத்தின் நிறத்தைப் பூசுங்கள்

இன்று ஹோலியஸ்ட் (புனிதத்திலும் புனிதமான) தந்தை தன்னுடைய ஹோலி (புனிதமான) குழந்தைகளுடன் சந்திப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார். நாலாபுறங்களிலும் உள்ள ஹோலி குழந்தைகள் தொலைவில் அமர்ந்திருந்தாலும் அருகாமையில் உள்ளனர். பாப்தாதா அப்பேற்பட்ட ஹோலி அதாவது மகான் தூய்மையான குழந்தைகளுடைய நெற்றியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பாக்கிய நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அப்பேற்பட்ட மகான் பவித்ரமானவர்களாக முழு கல்பத்திலும் வேறு எவரும் ஆகுவதில்லை. இந்த சங்கம யுகத்தில் தூய்மைக்கான விரதம் எடுக்கக்கூடிய பாக்கியவான் குழந்தைகள், எதிர்காலத்தில் இரட்டை தூய்மையானவர்களாக ஆகின்றார்கள், சரீரத்தாலும் தூய்மையாக மற்றும் ஆத்மாவும் தூய்மையாக ஆகின்றது. முழு கல்பத்தை சுற்றிவாருங்கள், எத்தனை மகான் ஆத்மாக்கள் வந்திருக்கின்றார்கள், ஆனால், சரீரமும் தூய்மையாக மற்றும் ஆத்மாவும் தூய்மையாக இருக்கும் படியாக, அப்பேற்பட்ட தூய்மையானவராக எந்தவொரு தர்மாத்மாவும் ஆகவில்லை, மகான் ஆத்மாவும் ஆகவில்லை. ஆஹா! என்னுடைய மகான் பவித்ர குழந்தைகள் ஆஹா! என்று பாப்தாதாவிற்கு குழந்தைகளாகிய உங்கள் மீது பெருமிதம் உள்ளது. இரட்டை தூய்மையான வராகவும், இரட்டை கிரீடதாரியாகவும் எவரும் ஆகவில்லை, இரட்டை கிரீடதாரியாகவும் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்களே ஆகின்றீர்கள். தன்னுடைய அந்த இரட்டை தூய்மை, இரட்டை கிரீடதாரி சொரூபம் முன்னால் வந்து கொண்டிருக்கின்றது அல்லவா! ஆகையினால், இந்த சங்கம யுகத்தில் குழந்தைகளாகிய உங்களுடைய நடைமுறை வாழ்க்கை என்ன உருவாகி உள்ளதோ, அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு விசேஷத்தன்மையினுடைய நினைவார்த்தத்தை உலகத்தினர் உற்சவமாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இன்றும் நீங்கள் அனைவரும் அன்பு என்ற விமானத்தில் ஹோலியைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள். ஹோலி கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள் அல்லவா! நீங்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தூய்மையின் ஹோலியைக் கொண்டாடி இருக்கின்றீர்கள், ஒவ்வொரு ஆன்மிக இரகசியத்தை உலகத்தினர் ஸ்தூலமாகக் காண்பித் துள்ளனர், ஏனென்றால், தேக உணர்வுடையவர்கள் அல்லவா! நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள், ஆன்மிக வாழ்க்கை வாழ்பவர்கள் மற்றும் அவர்கள் தேக உணர்வுடையவர்கள். எனவே, அனைத்தையும் ஸ்தூலமாக எடுத்துக் கொண்டார்கள். நீங்கள் யோக அக்னி மூலம் தங்களுடைய பழைய சமஸ்காரம், சுபாவத்தை பஸ்பம் செய்து விட்டீர்கள், எரித்து விட்டீர்கள் மற்றும் உலகத்தினர் ஸ்தூல நெருப்பில் எரிக்கின்றனர். ஏன்? பழைய சமஸ்காரத்தை எரிக்காமல் பரமாத்ம தொடர்பின் சாயம் ஒட்டாது, பரமாத்ம சந்திப்பின் அனுபவம் செய்ய முடியாது. எனவே, உங்களுடைய வாழ்க்கைக்கு அந்தளவு மதிப்பு உள்ளது, உங்கள் ஒவ்வொரு அடியும் உற்சவமாகக் கொண்டாடப்படுகின்றது. ஏன்? நீங்கள் சங்கமயுகம் முழுவதும் உற்சாகம், ஊக்கம் நிறைந்த வாழ்க்கையை உருவாக்கி யுள்ளீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் நினைவுச் சின்னத்தை ஒரு நாள் உற்சவமாகக் கொண்டாடு கின்றனர். அனைவருக்கும் அப்படிப்பட்ட சதா உற்சாகம், ஊக்கம், குஷி நிறைந்த வாழ்க்கை உள்ளது அல்லவா! உள்ளதா அல்லது அவ்வப்பொழுது உள்ளதா? சதா உற்சாகம் உள்ளதா அல்லது அவ்வப்பொழுது உள்ளதா? சதா உற்சாகத்தில் இருக்கின்றீர்கள், குஷியில் இருக்கின்றீர்கள், குஷி நம்முடைய வாழ்க்கையில் விசேஷமாகக் கிடைத்துள்ள பரமாத்ம பரிசு ஆகும், எது வேண்டு மானாலும் நடக்கட்டும், ஆனால், பிராமண வாழ்க்கையின் குஷி, உற்சாகம், ஊக்கம் செல்ல முடியாது என்று யார் நினைக்கின்றீர்கள்? யாருக்கு அப்பேற்பட்ட அனுபவம் உள்ளதோ, அவர்கள் கை உயர்த்துங்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் முகம் சதா மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்க விரும்புகின்றார்கள், ஏனென்றால், உங்களைப் போன்ற அதிர்ஷ்டசாலியாக வேறு எவரும் ஆகவில்லை, ஆகமுடியாது. வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் அமர்ந்துள்ளீர்கள், தனக்காக, அனுபவி மூர்த்தி ஆகுவதற்கான திட்டத்தை உருவாக்கி இருக்கின்றீர்களா?

பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்கள், இன்று இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள், இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர், நல்வரவு. வந்திருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். சேவைக்கான ஊக்கம் உற்சாகம் நன்றாக உள்ளது. ஆனால், முதலில் சுயத்திற்கான திட்டத்தை உருவாக்குங்கள், அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் ஒருவரை விட ஒருவர் நன்றாக திட்டங்களை உருவாக்குகின்றனர் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். கூடவே, சுய முன்னேற்றத் திற்கான திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசியமானது ஆகும். ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர் களும் சுயமுன்னேற்றத்திற்கான நடைமுறை திட்டத்தை உருவாக்க வேண்டும் மற்றும் நம்பர் பெற வேண்டும் என்ற இதைத் தான் பாப்தாதா விரும்புகின்றார்கள். எவ்வாறு குழுவில் ஒன்றிணைந்து இருக்கின்றீர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களோ, உள்நாட்டைச் சேர்ந்தவர்களோ மீட்டிங் செய்கின்றீர்கள், திட்டத்தை உருவாக்குகின்றீர்கள், பாப்தாதா அதிலும் கூட மகிழ்ச்சி அடை கின்றார்கள், ஆனால், எவ்வாறு ஊக்கம், உற்சாகத்துடன் குழுவாகச் சேர்ந்து, சேவைக்கான திட்டத்தை உருவாக்குகின்றீர்களோ, அவ்வாறே அதே அளவு ஊக்கம், உற்சாகத்துடன் சுய முன்னேற்றத் திற்கான நம்பரை இன்னும் அதிகமான கவனம் கொடுத்து உருவாக்க வேண்டும். இந்த மாதத்தில், இந்தத் துறையினர் சுயமுன்னேற்றத்திற்கான திட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்துள்ளார்களா? என்ற விவரத்தை பாப்தாதா கேட்க விரும்புகின்றார்கள். எந்தத் துறையைச் சேர்ந்தவர்களெல்லாம் வந்திருக்கின்றீர்களோ, அந்த அனைத்து துறையைச் சேர்ந்தவர் களும் கை உயர்த்துங்கள். நல்லது, இத்தனை பேர் வந்துள்ளீர்கள், நிறைய பேர் வந்துள்ளீர்கள். கேட்டீர்களா 5-6 துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கின்றீர்கள். வந்திருக்கின்றீர்கள், ரொம்ப நல்லது. இப்பொழுது ஒரு கடைசி டர்ன் (முறை) மீதம் உள்ளது, பாப்தாதா வீட்டுப்பாடமோ கொடுத்தும் விட்டார்கள். பாப்தாதாவோ தினமும் முடிவு (ரிசல்ட்) பார்க்கின்றார்கள், பாப்தாதா கடைசி டர்னில் கணக்கை எடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள், ஆனால், பாப்தாதா தினமும் பார்க்கின்றார்கள், இப்பொழுது கூட மேலும் 15 தினங்கள் உள்ளன. இந்த 15 தினங்களில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்கள் யாரெல்லாம் வந்திருக்கின்றீர்களோ அவர்களும் மற்றும் யார் வரவில்லையோ, அந்தத் துறையில் நிமித்தம் ஆகியிருக்கும் குழந்தைகளுக்கும், பாப்தாதா இந்த சமிக்ஞையை கொடுக்கின்றார்கள் - ஒவ்வொரு துறையினரும் தங்களுடைய சுயமுன்னேற் றத்திற்காக ஏதாவதொரு திட்டத்தை உருவாக்குங்கள். விசேஷமாக ஏதாவதொரு சக்தி சொரூபம் ஆகுவதற்கான அல்லது விசேஷமாக ஏதாவதொரு குணத்தின் மூர்த்தி ஆகுவதற்கான அல்லது உலக நன்மைக்காக ஏதாவதொரு லைட் (ஒளி) மற்றும் மைட் (சக்தி) கொடுப்பதற்கு ஒவ்வொரு துறையினரும் தங்களுக்குள் நிர்ணயம் செய்யுங்கள். மேலும் பிறகு சோதனை செய்யுங்கள் - எந்தத் துறையைச் சேர்ந்த உறுப்பினராக வேண்டுமானாலும் இருக்கட்டும், உறுப்பினராகி இருக் கின்றீர்கள், இதுவே மிகவும் நல்லது செய்துள்ளீர்கள், ஆனால், ஒவ்வொரு உறுப்பினரும் நம்பர் ஒன் ஆகவேண்டும். இந்தத் துறையைச் சேர்ந்த உறுப்பினராக இருக்கின்றார் என்று வெறும் பெயர் மட்டும் குறிப்பிடக் கூடாது, இந்தத் துறையினரின் சுயமுன்னேற்றத்திற்கான உறுப்பினராக இருக் கின்றார் என்பது இருக்க வேண்டும். இது முடியுமா? துறையின் நிமித்தமானவர்கள் யாரோ, அந்த நிமித்தமானவர்கள் எழுந்திருங்கள். வெளிநாட்டிலும் கூட 4-5 பேர் யார் நிமித்தமாக இருக்கின்றீர் களோ, அவர்களும் எழுந்திருங்கள். பாப்தாதாவிற்கு அனைவரும் மிகவும் சக்திசாலியான மூர்த்திகளாகத் தெரிகின்றீர்கள். மிகவும் நல்ல மூர்த்திகள் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் 15 தினங்களுக்குள் ஏதாவது செய்து காண்பிப்போம் என்று நினைக்கின்றீர்களா? கூறுங்கள், இது சாத்தியமா? (முழு முயற்சி செய்வோம்) மற்றவர்கள் கூறுங்கள், செய்ய முடியுமா என்ன? (யாரும் கோபப்பட மாட்டோம் என்று நிர்வாகத் துறை திட்டம் போட்டுள்ளது) அதனுடைய விசாரணையும் செய்கின்றீர்களா? சகோதரிகளாகிய நீங்கள் (டீச்சர்களிடம்) 15 தினங்களில் விசாரணை செய்து முடிவைச் சொல்ல முடியும் என்ற தைரியம் கொண்டிருக்கின்றீர்களா? வெளி நாட்டினர் ஆம் என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், முடியுமா? பாரதத்தினர் சொல்லுங்கள், முடியுமா? பாப்தாதாவிற்கு உங்கள் அனைவருடைய முகத்தைப் பார்த்து ரிசல்ட் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், ஒருவேளை, 15 தினங்களுக்கு மட்டும் கவனம் கொடுப்பதற்கான முயற்சி செய்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சி வருங்காலத்திலும் பயன்படும். இப்பொழுது இப்படிப்பட்ட மீட்டிங் போட வேண்டும் - அதில் ஏதாவது ஒரு குணம், ஏதாவது ஒரு சக்திக்கான இலட்சியம் வைக்க வேண்டும், யார் வைக்கின்றீர்களோ, அவர்களுக்கு அதற்கான நம்பர் பாப்தாதா கொடுப்பார்கள். சுயசேவையில் நம்பர் ஒன்னில் வரும் துறை யார் யார்? என்பதை பாப்தாதாவோ பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஏனெனில், திட்டம் மிகவும் நன்றாகப் போடு கின்றீர்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள், ஆனால், சேவை மற்றும் சுயமுன்னேற்றம் ஆகிய இரண்டும் ஒருவேளை இணைந்திருக்கவில்லை என்றால் சேவையின் திட்டத்தில் எந்தளவு வெற்றி தேவையோ, அந்தளவு இருக்காது. ஆகையினால், சமயத்தின் அருகாமையை முன்னால் பார்த்துக் கொண்டே சேவை மற்றும் சுயமுன்னேற்றத்தை இணைத்து செய்யுங்கள். சுயமுன்னேற்றம் மட்டும் இருப்பது கூடாது, சேவையும் தேவை, ஆனால், சுயமுன்னேற்றத்தின் ஸ்திதியினால் சேவையில் வெற்றி அதிகமாகக் கிடைக்கும். சேவை மற்றும் சுயமுன்னேற்றத் தினுடைய வெற்றியின் அடையாளம் - இரண்டிலும் சுயம் தானும் தன்னால் திருப்தியாக இருக்க வேண்டும் மற்றும் யாருக்கு சேவை செய்கின்றீர்களோ, அவர்களுக்கும் சேவை மூலம் திருப்தியின் அனுபவம் ஏற்பட வேண்டும். ஒருவேளை, தனக்கும் மற்றும் யாருடைய சேவைக்கு நிமித்தமாக இருக்கின்றீர்களோ அவர் களுக்கும் திருப்தியின் அனுபவம் ஏற்படவில்லை என்றால் வெற்றி குறைவாகவும், உழைப்பு அதிகமாகவும் உள்ளது என்று அர்த்தம்.

சேவையில் மற்றும் சுயமுன்னேற்றத்தில் எளிதாக வெற்றி அடைவதற்கான தங்கச்சாவி எது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்களா? அனுபவமோ அனைவருக்கும் உள்ளது. நடத்தை, முகம், சம்பந்தம், தொடர்பில் நிமித்த உணர்வு, பணிவு உணர்வு, அப்பழுக்கற்ற பேச்சு ஆகிய இவையே தங்கச்சாவி ஆகும். பிரம்மா பாபா மற்றும் ஜெகதம்பாவை பார்த்திருக்கின்றீர்கள். ஆனால், இப்பொழுது ஆங்காங்கே சேவையின் வெற்றியில் சதவிகிதம் உள்ளது. என்ன விரும்பு கின்றீர்களோ, எவ்வளவு செய்கின்றீர்களோ, எந்தளவு திட்டத்தை உருவாக்குகின்றீர்களோ, அதில் சதவிகிதம் ஏன் ஏற்படுகிறது? பாப்தாதா பெரும்பான்மையாகப் பார்த்த காரணம் என்னவென்றால், வெற்றியில் குறைபாட்டிற்கான காரணம் ஒரு வார்த்தை, அது என்ன? நான். நான் என்ற வார்த்தை மூன்று விதத்தில் பயன் படுகிறது. நான் ஆத்மா என்ற ஆத்ம அபிமானி நிலையில் கூட நான் என்ற வார்த்தை வருகிறது. தேக அபிமானத்திலும் நான் என்ன சொல்கின்றேனோ, செய் கின்றேனோ, அது சரியே, நான் புத்திவான், இது எல்லைக்குட்பட்ட நான், நான், இந்த தேக அபிமானத் திலும் நான் என்பது வருகிறது மற்றும் மூன்றாவது ஒருவர் உள்ளச்சோர்வு அடையும்பொழுதும் நான் என்பது வருகிறது. நான் இதை செய்யமுடியாது, எனக்குள் தைரியம் இல்லை. நான் இதைக் கேட்க முடியாது, நான் இதை கரைத்துக் கொள்ள முடியாது, . . . ஆக, பாப்தாதா மூன்று விதமான நான், நான் என்ற பாடலை அதிகமாகக் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். பிரம்மா பாபா, ஜெகதம்பா நம்பர் பெற்றிருக்கின்றார்கள் என்றால் அவர்களிடம் - தலைகீழான நான் என்ற உணர்வே இல்லாத நிலை, அதைப் பற்றிய ஞானமே இல்லாத நிலை என்ற விசேஷத்தன்மை இருந்தது. நான் ஆலோசனை கொடுக்கின்றேன், நான் சரி என்று ஒருபோதும் பிரம்மா பாபா கூறியதே இல்லை. பாபா, பாபா . . .பாபா செய்வித்துக் கொண்டு இருக்கின்றார், நான் செய்ய வில்லை. நான் புத்திசாலி அல்ல, குழந்தைகள் புத்திசாலிகள் என்று கூறினார். ஜெகதம்பா வினுடைய சுலோகன் நினைவு உள்ளதா? பழையவர்களுக்கு நினைவு இருக்கும் கட்டளை கொடுப்பவர் கட்டளைப்படி நடத்திக் கொண்டிருக்கின்றார், நான் என்பது இல்லை, இயக்கும் பாபா இயக்கிக் கொண்டிருக்கின்றார், செய்விக்கக் கூடிய தந்தை செய்வித்துக் கொண்டு இருக்கின்றார் - ஜெகதம்பா இதையே கூறினார்கள். எனவே, முதலில் அனைவரும் தனது உள்ளத்தில் இருந்து இந்த அபிமானம் மற்றும் அவமானத்தின் நான் என்பதை சமாப்தி செய்து முன்னேறுங்கள். ஒவ்வொரு விசயத்திலும் பாபா, பாபா என்பது இயல்பாக வெளிப்பட வேண்டும். இயற்கையாக வெளிப்பட வேண்டும், ஏனெனில், தந்தைக்கு சமம் ஆகுவதற்கான சங்கல்பமோ அனைவரும் செய்திருக்கின்றீர்கள். சமமாக ஆகுவதில் இந்த ஒரு இராயலான நான் என்பதை மட்டும் எரித்து விடுங்கள். நல்லது, கோபமும் படமாட்டீர்கள். கோபம் ஏன் வருகிறது? ஏனெனில், நான் என்பது வருகிறது.

ஹோலி கொண்டாட வந்திருக்கின்றீர்கள் அல்லவா? முதலில் எந்த ஹோலி கொண்டாடுகின்றீர் கள்? எரிக்கக்கூடிய ஹோலி. உண்மையில் நீங்கள் மிகவும் நல்லவர்கள், மிகவும் தகுதியானவர்கள். தந்தையினுடைய ஆசைகளின் தீபம் ஆவீர்கள், இந்த சிறிதளவு நான் என்பதை மட்டும் வெட்டிவிடுங்கள். இரண்டு நான் என்பதை வெட்டிவிடுங்கள், ஒரு நான் என்பதை வைத்துக் கொள்ளுங்கள். ஏன்? உங்களுடைய அனேக சகோதர, சகோதரிகள், பிராமணர்கள் அல்ல அஞ்ஞானி ஆத்மாக்கள், தன்னுடைய வாழ்க்கையில் தைரியத்தை இழந்துவிட்டார்கள் என்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். இப்பொழுது அவர்களுக்கு தைரியத்தினுடைய இறக்கை களைக் கொடுக்க வேண்டும். முற்றிலும் ஆதரவற்றவர்களாக ஆகிவிட்டனர், நம்பிக்கை அற்றவர் களாக ஆகிவிட்டனர். ஹே, கருணை உள்ளம் உடைய, கிருபை, தயை காட்டக்கூடிய, விஷ்வத்தின் ஆத்மாக்களுடைய இஷ்ட தேவ ஆத்மாக்களே! தங்களுடைய சுபபாவனை, கருணை பாவனை, ஆத்ம பாவனை மூலம் அவர்களுடைய பாவனையைப் பூர்த்தி செய்யுங்கள். உங்களுக்கு அவர் களுடைய துக்கம், அசாந்தியின் அதிர்வலைகள் வரவில்லையா? நீங்கள் நிமித்த ஆத்மாக்கள் ஆவீர்கள், பூர்வஜ், பூஜைக்குரியவர்கள் ஆவீர்கள், விருட்சத்தின் தண்டு ஆவீர்கள், அஸ்திவாரம் ஆவீர்கள். நம்முடைய இரட்சகர்கள் எங்கே சென்றுவிட்டனர்! நம்முடைய இஷ்ட தேவதைகள் எங்கே சென்று விட்டனர்! என்று அனைவரும் உங்களை தேடிக் கொண்டு இருக்கின்றனர். தந்தைக்கு கூக்குரல்கள் அதிகமாகக் கேட்கின்றன. இப்பொழுது சுயமுன்னேற்றத்தின் மூலம் வெவ்வேறு சக்திகளுடைய சகாஷ் கொடுங்கள். தைரியம் என்ற இறக்கைகள் கொடுங்கள். தன்னுடைய திருஷ்டி மூலம், திருஷ்டி தான் உங்களுடைய பீச்சாங்குழல் ஆகும், எனவே, தன்னுடைய திருஷ்டி என்ற பீச்சாங்குழல் மூலம் சுகத்தின் வர்ணத்தைப் பூசுங்கள், சாந்தியின் வர்ணத்தைப் பூசுங்கள், அன்பின் வர்ணத்தைப் பூசுங்கள், ஆனந்தத்தின் வர்ணத்தைப் பூசுங்கள். நீங்களோ பரமாத்ம தொடர்பு என்ற வர்ணம் பூசப்பட்டுவிட்டீர்கள். மற்ற ஆத்மாக்களுக்கும் கொஞ்சம் ஆன்மிக வர்ணத்தின் அனுபவத்தை செய்வியுங்கள். பரமாத்ம சந்திப்பினுடைய, மங்கல மான திருவிழாவினுடைய அனுபவத்தை ஏற்படுத்துங்கள். அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக் களுக்கு புகலிடத்திற்கான வழி சொல்லுங்கள்.

சுயமுன்னேற்றத்திற்கான திட்டத்தை உருவாக்குவீர்கள் தானே, இதில் சுயத்தினுடைய சோதனையாளராகி, இந்த இராயலான நான் என்பதோ வரவில்லை தானே என்று சோதனை செய்ய வேண்டும், ஏனெனில், இன்று ஹோலி கொண்டாட வந்துள்ளீர்கள். இன்று தேக அபிமானம் மற்றும் அவமானத்தின் நான் என்பது என்ன வருகிறதோ, மனமுடைந்து போவதின் நான் என்பது என்ன வருகிறதோ, இதை எரித்துவிட்டுத் தான் செல்ல வேண்டும், கூடவே எடுத்துச் செல்ல வேண்டாம் என்ற இந்த சங்கல்பத்தை பாப்தாதா கொடுக்கின்றார்கள். கொஞ்சம் எரித்துவிடுவீர்கள் அல்லவா. நெருப்பு மூட்டுவீர்களா என்ன? ஜுவாலாமுகி (எரிமலை) யோக அக்னியை எரியச்செய்யுங்கள். எரிக்க வருகின்றதா? ஜுவாலாமுகி யோகம் வருகிறதா அல்லது சாதாரண யோகம் வருகிறதா? ஜுவாலாமுகி ஆகுங்கள். லைட் மைட் ஹவுஸ் ஆகுங்கள். இது பிடித்திருக்கின்றதா? அட்டென்ஷன் ப்ளீஸ், நான் என்பதை எரித்துவிடுங்கள்.

பாப்தாதா எப்பொழுது நான், நான் என்ற பாடலைக் கேட்கின்றார்களோ, அப்பொழுது சுவிட்சை அணைத்து விடுகின்றார்கள். ஆஹா! ஆஹா! என்ற பாடல் ஒலிக்கும்பொழுது சத்தத்தை அதிகப் படுத்துகின்றார்கள், ஏனெனில், நான், நான் என்பதின் ஈர்ப்பு அதிகமாக உள்ளது. இது இல்லை, இது இல்லை, இவ்வாறு இல்லை, அவ்வாறு இல்லை என்று ஒவ்வொரு விசயத்தையும் இழுப்பார்கள். இழுப்பதன் காரணத்தினால் பதற்றம் உருவாகிவிடுகின்றது. பாப்தாதாவிற்கு பற்று, பதற்றம் மற்றும் சுபாவம், தலைகீழான சுபாவம் பிடிப்பதில்லை. உண்மையில், சுபாவம் என்ற வார்த்தை மிகவும் நன்றாக உள்ளது. சுபாவம், என்றால் சுயத்தின் உணர்வு (பாவ்). ஆனால், அதை தலை கீழானதாக ஆக்கிவிட்டீர்கள். விசயத்தை இழுக்காதீர்கள், தன் பக்கம் எவரையும் ஈர்க்காதீர்கள். அதுவும் மிகவும் குழப்பமடையச் செய்கிறது. எவரேனும், எவ்வளவு வேண்டுமானாலும் உங்களைச் சொல்லட்டும், ஆனால், தன் பக்கம் ஈர்க்காதீர்கள். விசயத்தை ஈர்க்காதீர்கள், தன் பக்கம் ஈர்க்கா தீர்கள், ஈர்ப்பது முடிந்துவிட வேண்டும். பாபா, பாபா மற்றும் பாபா. இது பிடித்திருக்கின்றது அல்லவா! ஆகவே, தலைகீழான நான் என்பதை இங்கேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும், கூடவே எடுத்துச் செல்ல வேண்டாம், இரயிலில் சுமை ஏறிவிடும். நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர் என்ற உங்களுடைய பாடல் உள்ளது அல்லவா. உள்ளது அல்லவா! ஒரு நான் என்பதை வைத்துக் கொள்ளுங்கள், இரண்டு நான் என்பதை அழித்துவிடுங்கள். ஹோலி கொண்டாடி விட்டீர்களா, சங்கல்பத்தில் எரித்துவிட்டீர்களா? இப்பொழுதோ சங்கல்பம் செய்யுங்கள். சங்கல்பம் செய்தீர்களா? கை உயர்த்துங்கள். செய்துவிட்டீர்களா அல்லது கொஞ்சம் கொஞ்சம் வைத்துள்ளீர்களா? கொஞ்சம் கொஞ்சம் அனுமதி கொடுக்கலாமா? கொஞ்சம் கொஞ்சம் அனுமதி வேண்டும் என்று யார் நினைக்கின்றீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். கொஞ்சமோ இருக்கும் அல்லவா, இருக்காதா? நீங்களோ மிகவும் துணிச்சலானவர்கள். வாழ்த்துக்கள். குஷியில் நடன மாடுங்கள், பாடுங்கள். பதற்றத்தில் அல்ல. இழுபறியில் அல்ல. நல்லது.

இப்பொழுது ஒரு நொடியில் தங்களுடைய மனதில் இருந்து அனைத்து சங்கல்பங்களையும் சமாப்தி செய்து, ஒரு நொடியில் தந்தையுடன் பரந்தாமத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த இடத்தில், உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையுடன், உயர்ந்த ஸ்திதியில் அமர்ந்து விடுங்கள். மேலும், பாப்சமான் மாஸ்டர் சர்வசக்திவான் ஆகி உலகத்தின் ஆத்மாக்களுக்கு சக்திகளின் கிரணங்களைக் கொடுங்கள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள புனிதமான (ஹோலியஸ்ட்), உயர்வான (ஹையஸ்ட்) குழந்தைகளுக்கு, சர்வ விஷ்வ கல்யாணகாரி விசேஷ ஆத்மாக்களுக்கு, அனைத்து பூர்வஜ் (மூதாதையர்), பூஜைக் குரிய ஆத்மாக்களுக்கு, தந்தையின் அனைத்து இதய சிம்மாசனதாரி குழந்தைகளுக்கு பாப்தாதா வின் அன்பு நினைவுகள் மற்றும் உள்ளத்தின் ஆசீர்வாதங் கள் சகிதமாக, உள்ளத்தின் அன்பு மற்றும் நமஸ்காரம்.

தூர தூரத்தில் இருந்து வந்துள்ள கடிதங்கள், கார்டுகள், ஈமெயில், கம்ப்யூட்டர் மூலம் செய்திகள் பாப்தாதாவிடம் வந்துவிட்டன மற்றும் பாப்தாதா அந்தக் குழந்தைகளை முன்னால் பார்த்து பல கோடி மடங்கு அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்

ஆசீர்வாதம்:
தன்னுடைய பூர்வஜ் சொரூபத்தின் நினைவு மூலம் அனைத்து ஆத்மாக்களையும் சக்திசாலி ஆக்கக்கூடிய ஆதார, உத்தாரமூர்த்தி ஆகுக.

இந்த சிருஷ்டி விருட்சத்தின் மூல தண்டு, அனைவரின் பூர்வஜ் (மூதாதையர்) ஆகிய நீங்கள் பிராமணரிலிருந்து தேவதை ஆகுபவர்கள். ஒவ்வொரு கர்மத்தின் ஆதாரமான, குல மரியாதை களின் ஆதாரமான, பழக்க வழக்கங்களின் ஆதாரமான பூர்வஜ் ஆகிய நீங்கள் அனைத்து ஆத்மாக் களினுடைய ஆதார மற்றும் உத்தாரமூர்த்தி (சங்கடங்களில் இருந்து விடுவிப்பவர்) ஆவீர்கள். தண்டாகிய உங்கள் மூலம் தான் அனைத்து ஆத்மாக்களுக்கும் சிரேஷ்ட சங்கல்பங்களின் சக்தி மற்றும் சர்வசக்திகளும் கிடைக்கின்றன. அனைவரும் உங்களை பின்பற்றிக் கொண்டு இருக் கின்றார்கள், ஆகையினால், இந்தளவு பெரிய பொறுப்பு இருப்பதை புரிந்துகொண்டு ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் கர்மம் செய்யுங்கள், ஏனெனில், பூர்வஜ் ஆத்மாக்களாகிய உங்களுடைய ஆதாரத்தில் தான் சிருஷ்டியின் சமயம் மற்றும் ஸ்திதியின் ஆதாரம் உள்ளது.

சுலோகன்:
யார் சர்வ சக்திகளின் கிரணங்களை நாலாபுறங்களிலும் பரப்புகின்றார்களோ, அவர்களே மாஸ்டர் ஞான சூரியன் ஆவார்கள்.


அவ்யக்த சமிக்ஞை - சங்கல்பங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிரேஷ்ட சேவைக்கு நிமித்தம் ஆகுங்கள்

மூன்று வார்த்தைகளின் காரணத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி, ஆட்சி புரியும் சக்தி குறைந்து விடுகிறது. அந்த மூன்று வார்த்தைகள் - 1. ஏன், (Why) 2. என்ன, (What) 3. வேண்டும் ( Want). இந்த மூன்று வார்த்தைகளை முடித்துவிட்டு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள். ஆஹா (Wah) என்று கூறுங்கள். அப்பொழுது கட்டுப்படுத்தும் சக்தி வந்துவிடும், பிறகு சங்கல்ப சக்தி மூலம் எல்லை யற்ற சேவைக்கு நிமித்தம் ஆகமுடியும்.