27-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே - தன்னுடைய
சதோபிரதானமான அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்வதற்காக நினைவில்
இருப்பதற்கு தீவிர முயற்சி செய்யுங்கள். நான் ஆத்மா,
பாபாவிடமிருந்து முழுமையாக ஆஸ்தி அடைய வேண்டும் என்பது சதா
நினைவில் இருக்கட்டும்.
கேள்வி:
குழந்தைகளுக்கு நினைவின் சார்ட்
வைப்பதற்கு ஏன் கடினமாக உள்ளது?
பதில்:
ஏனென்றால் பல குழந்தைகள் நினைவின்
சரியான அர்த்தத்தைப் புரிந்துக் கொள்ள வில்லை. நினைவில்
அமர்கிறார்கள், புத்தி வெளியே அலைகிறது, சாந்தம் அடைவதில்லை.
அவர்கள் பின் வாயு மண்டலத்தைக் கெடுத்து விடுகிறார்கள்.
நினைக்கவே இல்லை என்றால் எப்படி சார்ட் எழுத முடியும். ஒரு வேளை
பொய்யாக எழுதினால் மிகுந்த தண்டனை கிடைக் கிறது. உண்மையான
தந்தைக்கு உண்மையை தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பி
வந்திருக்கிறேன்......
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு மீண்டும் ஆன்மீகத் தந்தை எவ்வளவு
முடியுமோ ஆத்ம அபிமானி ஆகுங்கள் என தினம் தினம் புரிய
வைக்கின்றார். தன்னை ஆத்மா என்று நிச்சயப் படுத்திக்
கொள்ளுங்கள் மற்றும் தந்தையை நினையுங்கள். ஏனென்னறால் நாம்
அந்த எல்லை யற்ற தந்தையிடம் எல்லையற்ற ஆஸ்தியை (சுகத்திற்கான
அதிர்ஷ்டத்தை) அடைவதற்காக வந்திருக்கிறோம் என நீங்கள்
அறிகிறீர்கள். நிச்சயமாக தந்தையை நினைக்க வேண்டியிருக்கிறது.
தூய்மையான சதோபிரதானமாக ஆகாமல், சதோபிரதானமான அதிர்ஷ்டத்தை
அடைய முடியாது, இதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமான விஷயம் இது ஒன்று தான். இதை தங்களிடம் எழுதி
வைத்துக் கொள்ளுங்கள். கையில் பெயர் (பச்சைக்குத்துதல்) எழுது
கிறார்கள். நீங்கள் கூட எழுதிக் கொள்ளுங்கள்- நாம் ஆத்மா,
எல்லையற்ற தந்தையிடம் நாம் ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் மாயை மறக்க வைக்கிறது. ஆகையால் எழுதி யிருந்தால்
அடிக்கடி நினைவு வரும். மனிதர்கள் ஓம் அல்லது கிருஷ்ணருடைய
சித்திரங்களை நினைவு செய்வதற்காக எழுதி வைக்கிறார்கள். இது
புதியதிலும் புதிய நினைவாகும். இதை எல்லையற்ற தந்தை மட்டுமே
புரியவைக்கின்றார். இதை புரிந்துக் கொள்வதால் நீங்கள்
சௌபாக்கியசாலி மட்டுமல்ல பல கோடி மடங்குபாக்கியசாலி ஆகிறீர்கள்.
பாபாவை அறியாத தால், நினைக்காததால் ஏழையாகி விட்டனர். ஒரே ஒரு
தந்தை சதா காலத்திற்கும் வாழ்க்கையை சுகமடைய வைக்க
வந்திருக்கிறார். நினைக்கிறார்கள். ஆனால் முற்றிலும் அறியவில்லை.
வெளி நாட்டவர்கள் கூட பாரதவாசிகளிடம் இருந்து சர்வவியாபி என்று
கூற கற்றிருக்கிறார்கள். பாரதம் தாழ்வடைந்துவிட்டது. எனவே
அனைவரும் தாழ்வடைந்து விட்டனர். பாரதமே தான் தாழ்வடை வதற்கும்
அனைவரும் தாழ்வதற்கும், பொறுப்பாக இருக்கிறது. நான் இங்கே தான்
வந்து பாரதத்தை சொர்க்கமாக உண்மையான கண்டமாக மாற்றுகிறேன் என
பாபா கூறுகிறார். இவ்வாறு சொர்க்கமாக மாற்றக் கூடியவருக்கு
எவ்வளவு நிந்தனைகள் இழைக்கப் பட்டிருக்கிறது. மறந்து விட்டதால்
யதா யதாஹி...... என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனுடைய பொருளை
தந்தை தான் வந்து புரிய வைக்கின்றார். ஒரு தந்தையிடம் அர்ப்பணம்
(பலி) ஆக வேண்டும். இப்போது நிச்சயமாக தந்தை வருகிறார்.
நிச்சயமாக சிவஜெயந்தி கொண்டாடுகிறோம் என நீங்கள் அறிகிறீர் கள்.
ஆனால் சிவ ஜெயந்திக்கு மதிப்பு ஒன்றும் இல்லை. ஒருவர் இருந்து
விட்டுச் சென்றால் அவர்களுடைய ஜெயந்தியை கொண்டாடுவார்கள் என
குழந்தைகள் அறிகிறீர்கள். சத்யுக ஆதி சனதான தேவி தேவதா
தர்மத்தின் ஸ்தாபனை அவர் தான் செய்கிறார். மற்ற அனைவரும்
தங்களுடைய தர்மம் இன்னாரால் இந்த நேரத்தில் ஸ்தாபிக்கபட்டது
என்பதை அறிகிறார்கள். அவர்களுக்கு முன்பு தான் தேவி தேவதா
தர்மம் இருந்தது. அந்த தர்மம் எங்கே மறைந்து விட்டது என்பதை
அவர்கள் முற்றிலும் அறியவில்லை. இப்போது தந்தையே எல்லோரையும்
விட உயர்ந்தவர் வேறு யாருக்கும் அந்த மகிமை இல்லை என்பதை பாபாவே
வந்து புரிய வைக்கிறார். தர்ம ஸ்தாபகர்களின் மகிமை என்ன
இருக்கும். தந்தை தான் தூய்மையான உலகத்தின் ஸ்தாபனை மற்றும்
பதீத உலகத்தை வினாசம் செய்கிறார். மேலும் உங்களை மாயாவின் மீது
வெற்றி அடைய வைக்கிறார். இது எல்லையற்ற விஷயம் ஆகும்.
இராவணனுடைய இராஜ்யம் எல்லையற்ற முழு உலகின் மீதும் இருக்கிறது.
எல்லைக்குட்பட்ட இலங்கையின் விஷயம் அல்ல. இந்த வெற்றி
தோல்வியின் கதை கூட முழு பாரதத்திற்கானது தான் மற்றவைகள்
பிரிந்து சென்றவை. எல்லைக்குட்பட்ட விஷயம் அல்ல. பாரதத்தில்
தான் டபுள் கிரீடம் மற்றும் சிங்கிள் கிரீடம் உடைய ராஜாக்கள்
ஆகிறார்கள். மேலும் தேவி தேவதைகளைத் தவிர யாரெல்லாம் பெரிய
பெரிய ராஜாக்கள் வாழ்ந்து விட்டு சென்றனரோ அவர்களுக்குக் கூட
ஒளி கிரீடம் இல்லை. தேவதைகள் சொர்க்கத்திற்கு அதிபதி அல்லவா?
இப்போது சிவபாபாவிற்கு பரம்பிதா, பதீதபாவனர், என்று
கூறப்படுகிறது. இவருக்கு ஒளி எதற்காகக் கொடுப்பார்கள்.
ஒளியிழந்து (வெளிச்சம்) துய்,மையற்று இருக்கும் போதுதான் ஒளி (வெளிச்சம்)
கொடுக்கப்படுகிறது. அவர் ஒருபோதும் ஒளியற்றவராவதில்லை.
பிந்துவின் மீது எப்படி ஒளி கொடுக்க முடியும்? கொடுக்க முடியாது.
ஒவ்வொரு நாளும் உங்களுக்கு யார் எவ்வளவு புத்தியில் வைத்துக்
கொள்ள முடியுமோ அவ்வளவு ஆழமான விஷயங்களைப் புரியவைத்துக்
கொண்டிருக்கிறார். முக்கியமானது நினைவு யாத்திரையாகும்! இதில்
மாயாவின் தடைகள் நிறைய ஏற்படுகிறது. சிலர் நினைவு சார்ட்டில்
50-60 சதவீதம் என்று கூட எழுதுகிறார்கள். ஆனால் நினைவு யாத்திரை
என்று எதற்கு கூறுகிறோம் என புரிந்துக் கொள்வதில்லை. இந்த
விஷயத்தை நினைவு என கூறலாமா என கேட்பார்கள். மிகவும் கடினமாகும்.
நீங்கள் இங்கே 10-15 நிமிடங்கள் அமர்கிறீர்கள். அதில் நினைவில்
நன்றாக (உறுதியான மனநிலையில்) இருக்கிறீர்களா என சோதியுங்கள்.
பலர் நினைவில் இருப்பதில்லை. பிறகு வாயுமண்டலத்தைக் கெடுத்து
விடுகிறார்கள். பலர் நினைவில் இல்லாததால் தடைகளை
ஏற்படுத்துகின்றனர். முழு நாளும் புத்தி வெளியே அலைந்துக்
கொண்டிருக் கிறது. இங்கே சாந்தமாக இருக்க முடியாது. ஆகையால்
நினைவின் சார்ட் கூட வைப்பதில்லை. பொய் எழுதுவ தால் இன்னும்
தண்டனை கிடைக்கிறது. பல குழந்தைகள் தவறு செய்கிறார்கள்.
மறைக்கிறார்கள். உண்மையைச் சொல்வதில்லை. உண்மையைக் கூறாவிட்டால்
எவ்வளவு குற்றம் என பாபா கூறுகிறார். எவ்வளவு பெரிய மோசமான
வேலையை செய்திருந்தால் உண்மையை சொல்வதில் வெட்கம் வரும்.
பெரும்பாலும் அனைவரும் பொய் சொல்வார்கள். பொய்யான மாயை,
பொய்யான உடல் அல்லவா! ஒரேயடியாக தேக அபிமானத்தில் வருகிறார்கள்.
உண்மையைக் கூறுவது நல்லது தான். மற்றவர்களும் கற்றுக்
கொள்வார்கள். இங்கே உண்மையைக்கூற வேண்டும். ஞானத்தின் கூடவே
நினைவு யாத்திரை கூட அவசியம் ஆகும். ஏனென்றால் நினைவு யாத்திரை
யினால் தான் தனக்கும் உலகத்திற்கும் நன்மை செய்ய முடியும்.
ஞானம் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். நினைவில் தான் முயற்சி
தேவைப்படுகிறது. மற்றபடி விதையிலிருந்து மரம் எவ்வாறு வளர்கிறது.
அது அனைவருக்கும் தெரிகிறது. புத்தியில் 84-பிறவியின் சக்கரம்,
விதை மற்றும் ஞானம் இருக்கிறது அல்லவா! பாபா சத்தியமானவர்,
சைத்தன்யமானவர், ஞானக்கடல் ஆவார். அவருக்குள் புரியவைப்பதற்கான
ஞானம் இருக்கிறது. இது முற்றிலும் தனிப்பட்ட விஷயமாகும். இது
மனித சிருஷ்டியின் மரமாகும். இதைக் கூட யாரும் அறியவில்லை.
அனைவரும் தெரியாது தெரியாது எனகூறி சென்று விட்டனர். கால அளவை
அறியவில்லை என்றால் வேறு என்ன அறிந்திருப்பார்கள். உங்களில்
கூட மிகச் சிலரே நன்றாகப் புரிந்துக் கொள்கிறீர்கள். ஆகையால்
செமினாருக்குக் கூட அழைக்கிறார்கள். அவரவருடைய ஆலோசனையை
வழங்குங்கள். யார் வேண்டுமானாலும் ஆலோசனை கொடுக்க முடியும்.
யாருடைய பெயர் இருக்கிறதோ, அவர்கள் தான் கொடுக்க வேண்டுமென்பது
கிடையாது. நமது பெயர் கிடையாது. நாம் எப்படி கொடுக்க முடியும்.
இல்லை, யார் வேண்டுமானாலும் சேவையின் பொருட்டு எந்த ஆலோசனையும்
அறிவுரையும் எழுதலாம். எந்த ஆலோசனை தோன்றினாலும் எழுத வேண்டும்
என பாபா கூறுகிறார். பாபா இந்த யுக்தியினால் சேவையை அதிகரிக்க
முடியும் இப்படி யார் வேண்டு மானாலும் ஆலோசனையை வழங்கலாம்.
எவ்வாறெல்லாம் ஆலோசனை கூறப்படுகிறது எனப்பார்க்கலாம். எந்த
வழியிலாவது நாம் பாரதத்திற்கு நன்மை செய்ய வேண்டும் அனை
வருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். என பாபா கூறிக்
கொண்டேயிருக்கிறார். தங்களுக் குள் விசாரம் (சிந்தனை)
செய்யுங்கள், எழுதி அனுப்புங்கள். மாயை அனைவரையும் தூங்க வைத்
திருக்கிறது. பாபா மரணம் எதிரில் வரும் போது (ஏற்படும்
தருவாயில்) தான் வருகிறார். இப்போது அனைவருக்கும் வானப்பிரஸ்த
நிலையாகும், படித்தாலும் சரி, படிக்கா விட்டாலும் சரி, அவசியம்
மரணம் நிகழும், தயாராக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி,
அவசியம் புது உலகம் ஸ்தாபனை ஆகும். . நல்ல நல்ல குழந்தைகள்
தங்களுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருக் கின்றனர். சுதாமா
விற்குக் கூட ஒரு பிடி அவல் எடுத்து வந்தார் என
காட்டப்பட்டிருக்கிறது. பாபா எங்களுக்கு கூட மாளிகை
கிடைத்திருக்க வேண்டும். அவர்களிடம் இருப்பதே ஒரு பிடி அவல்
என்றால் என்ன செய்வார்கள். மம்மா ஒரு பிடி அவல் கூட எடுத்து
வரவில்லை என பாபா மம்மாவின் எடுத்துக் காட்டை தெரிவிக்கிறார்.
பிறகு எவ்வளவு உயர்ந்த பதவி அடைந்து விட்டார். இதில் பணத்தின்
விஷயம் ஏதும் இல்லை. நினைவில் இருக்க வேண்டும். தனக்கு சமமாக
மாற்ற வேண்டும். பாபாவிடம் எந்த கட்டணமும் இல்லை. எங்களிடம்
பைசா இருந்தால் ஏன் யாகத்தில் அர்ப்பணம் செய்ய வேண்டும் என
நினைக்கிறார்கள். வினாசம் நடக்கத்தான் போகிறது. அனைத்தும்
வீணாகிவிடும். இதை விட கொஞ்சமாவது அர்ப்பணம் செய்யலாம். ஒவ்வொரு
மனிதரும் ஏதாவது தான புண்ணியங் களை நிச்சயமாக செய்கிறார்கள்.
அது பாவ ஆத்மாக்கள் பாவ ஆத்மாக்களுக்கு செய்யும் தான
புண்ணியமாகும். இருப்பினும் அதற்கு அல்ப காலத்திற்கான பலன்
கிடைக்கிறது. பாருங்கள், சிலர் யுனிவர்சிட்டி, கல்லூரி போன்ற
வைகளைக் கட்டுகின்றார்கள். பணம் அதிகமாக இருக்கிறது. தர்ம
சாலைகளைக் கட்டுகிறார்கள் என்றால் அவர்களுக்கு கட்டிடங் கள்
நன்றாகக் கிடைக்கும். ஆனால் நோய் போன்றவை இருக்கும் அல்லவா!
சிலர் மருத்துவ மனைகள் போன்றவைகளைக் கட்டுகின்றார்கள் என்றாலும்
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் அதனால் அனைத்து
விருப்பங்களும் நிறைவேறாது. இங்கே எல்லையற்ற தந்தை மூலமாக
உங்களுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகிறது.
நீங்கள் தூய்மையாகிறீர்கள் என்றால் அனைத்து பைசாவையும் உலகத்தை
தூய்மையாக்குவதில் ஈடுபடுத்துவது நல்லது அல்லவா! முக்தி ஜீவன்
முக்தி கொடுத்தாலும் அரைக் கல்பத்திற்காகவே. அனைவரும்
எங்களுக்கு சாந்தி எப்படி கிடைக்கும் என கூறுகிறார்கள். அது
சாந்திதாமத்தில் கிடைக்கிறது. பிறகு சத்யுகத்தில் ஒரு தர்மம்
மட்டுமே இருப்பதன் காரணமாக அங்கே அசாந்தி ஏற்படுவதில்லை. இராவண
இராஜ்யத்தில் தான் அசாந்தி ஏற்படுகிறது. இராமன் ராஜா, இராமன்
பிரஜா என பாடப்பட்டிருக்கிறது அல்லவா! அது அமர உலகம். அங்கே
அமர லோகத்தில் மரணம் என்ற சொல் கிடையாது. இங்கே அமர்ந்தபடியே
திடீரென்று இறந்து விடுகிறார்கள். இதை மரண உலகம் என்றும், அதை
அமர லோகம் என்றும் கூறப்படுகிறது. அங்கே மரணம் கிடையாது. பழைய
உடலை விட்டு விட்டு குழந்தையாகப் பிறக்கிறார்கள். நோய்
ஏற்படுவதில்லை. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. ஸ்ரீ ஸ்ரீயினுடைய
வழிப்படி நீங்கள் எவர்ஹெல்தி ஆகிறீர்கள். எனவே இது போன்ற
ஆன்மீக சென்டர்ஸ் எவ்வளவு திறக்க வேண்டும்! கொஞ்சம் பேர்
வந்தாலும் அது குறைவா என்ன? இந்த நேரத்தில் எந்த ஒரு மனிதரும்
நாடகத்தின் கால அளவை (ஆயுள்) அறியவில்லை. உங்களுக்கு இதை யார்
கற்றுக் கொடுத்தார்கள் என கேட்பார்கள். அட, எங்களுக்கு சொல்லிக்
கொடுப்பவர் தந்தையாவார்! இவ்வளவு பேர் பி.கே! இருக்கிறார்கள்
நீங்கள் கூட பி.கே.தான் சிவ பாபாவினுடைய குழந்தையாவீர்கள்.
பிரஜா பிதா பிரம்மாவிற்கும் குழந்தையாவீர்கள். இவர் மனித
நேயத்தின் கிரேட் கிரேட் கிராண்ட் பாதர் ஆவார். இவரிலிருந்து
நாம் பி.கே வந்திருக்கிறோம். வம்சம் இருக்கிறது அல்லவா!
உங்களுடைய தேவி தேவதா குலம் மிகவும் சுகம் கொடுக்கக் கூடியதாக
இருக்கிறது. இங்கே நீங்கள் உத்தமர் ஆகிறீர்கள். பிறகு அங்கே
இராஜ்யம் செய்கிறீர்கள். இது யாருடைய புத்தியிலும் இருக்காது.
தேவதைகளின் கால் இந்த தமோ பிரதானமான உலகத்தில் வைக்க முடியாது.
என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது ஜட சித்திரங்
களின் நிழல் படலாம். சைத்தன்யமானவர்களின் நிழல் பட முடியாது.
எனவே குழந்தைகளே ஒன்று நினைவு யாத்திரையில் இருங்கள், எந்தஒரு
விகர்மமும் செய்யாதீர்கள். மேலும் சேவைக்கான யுக்திகளைக் கண்டு
பிடியுங்கள் என புரியவைக்கின்றார். பாபா, நாங்கள் லஷ்மி
நாராயணனன் போல மாறுவோம் என குழந்தைகள் கூறுகிறார்கள். பாபா
உங்களுடைய வாயில் குலாப் ஜாமூன் எனக் கூறுகிறார். ஆனால்
அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். உயர்ந்த பதவி அடைய வேண்டும்
என்றால் தனக்குச் சமமாக மாற்றக்கூடிய சேவை செய்ய வேண்டும்.
நீங்கள் ஒரு நாள் பார்ப்பீர்கள்- ஒவ்வொரு வழிக்காட்டியும்
தன்னுடன் 100-200 யாத்ரீகர்களை அழைத்து வருவார்கள் இன்னும்
போகப்போக பார்க்கலாம். முதலிலேயே அனைத்தையும் சொல்ல முடியாது.
எது நடந்துக் கொண்டிருக்கிறதோ பார்த்துக் கொண்டே இருங்கள்.
இது எல்லையற்ற நாடகம் ஆகும். உங்களுடையது அனைவருடன் இருப்பதை
விட பாபாவுடன் இருப்பது முக்கியமான பாகம் ஆகும். நீங்கள் பழைய
உலகத்தைப் புதியதாக மாற்றுகிறீர்கள். இது புருஷோத்தம சங்கம
யுகம்ஆகும். இப்போது நீங்கள் சுக தாமத்தின் அதிபதியாகிறீர்கள்.
அங்கே துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்காது. பாபா தான்
துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர் ஆவார். துக்கத்திலிருந்து
விடுவிக்கிறார். பாரதவாசிகள் இவ்வளவு பணம் இருக்கிறது, பெரிய
பெரிய மாளிகை இருக்கிறது, மின்சாரம் இருக்கிறது, இதுவே
சொர்க்கம் ஆகும் என நினைக்கிறார்கள். இது மாயாவின் வெளிப்பகட்டு
ஆகும். சுகத்திற்கான சாதனம் நிறைய இருக்கின்றது. பெரிய பெரிய
மாளிகை, கட்டிடம் உருவாக்குகிறார்கள். பிறகு திடீரென்று மரணம்
ஏற்படுகின்றது. அங்கே மரணத்தின் பயம் இல்லை. இங்கே திடீரென்று
இறக்கிறார்கள் பிறகு எவ்வளவு சோகம் ஏற்படு கிறது. சமாதி
இருக்கும் இடத்திற்கு சென்று கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று பழக்க வழக்கம் இருக்கின்றது.
பல வழிகள் இருக்கிறது. சத்யுகத்தில் இவ்வாறு கிடையாது. அங்கே
ஒரு சரீரத்தை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுக்கிறார்கள்.
நீங்கள் எவ்வளவு சுகத்திற்குச் செல்கிறீர்கள். அதற்காக எவ்வளவு
முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு அடியிலும் வழி கேட்டு நடக்க
வேண்டும். குருவினுடைய அல்லது கணவருடைய வழியைக் கேட்கிறார்கள்
அல்லது தன்னுடைய வழிப்படி நடக்க வேண்டியுள்ளது. அசுர வழி என்ன
பயனை கொடுக்கும்? அசுரர்களின் பக்கம் தான் இழுத்துச் செல்லும்.
இப்போது உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைக்கிறது. ஸ்ரீமத் பகவான்
வாக்கு, உயர்ந்ததிலும் உயர்ந்தது என்று பாடப்பட்டிருக்கிறது.
குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்படி முழு உலகத்தையும்
சொர்க்கமாக்குகிறீர்கள். அந்த சொர்க்கத் திற்கு நீங்கள்
அதிபதியாகிறீர்கள். ஆகையால் நீங்கள் ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்
கேட்டு பெற வேண்டும். ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ
அவர்கள் ஸ்ரீமத்படி நடப்பதில்லை. யாருக்காவது தனக்கென்று ஏதாவது
ஞானமிருந்தால், ஆலோசனை இருந்தால் பாபாவிற்கு அனுப்புங்கள் என
பாபா புரியவைக்கின்றார். யார் யார் ஆலோசனை வழங்கத்
தகுதியானவர்கள் என பாபா அறிந்திருக்கிறார். புதிய புதிய
குழந்தைகள் தோன்றுகிறார்கள். யார் நல்ல நல்ல குழந்தைகள் என
பாபாவிற்கு தெரியும் அல்லவா! வியாபாரிகளுக்குக் கூட, எப்படி
முயற்சி செய்தால் அவர்களுக்கு பாபாவின் அறிமுகம் கிடைக்கும் என
கூறுவதற்கு வழிமுறையை யோசிக்க வேண்டும். கடையில் கூட
எல்லோருக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருங்கள். பாரதம்
சத்யுகமாக இருந்த போது ஒரு தர்மம் மட்டுமே இருந்தது. இதில்
கோபப்படுவதற்கு எந்த விஷயமும் இல்லை. அனைவருக்கும் தந்தை ஒருவரே.
என்னை மட்டும் நினைத்தால் உங்களுடைய விகர்மம் வினாசம் ஆகிவிடும்
என பாபா கூறுகின்றார். சொர்க்கத்திற்கு அதிபதி யாகிவிடலாம்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும்தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஸ்ரீமத் படி நடந்து முழு உலகத்தையும் சொர்க்கமாக மாற்றக்
கூடிய சேவை செய்ய வேண்டும். பலரை தனக்குச் சமமாக மாற்ற வேண்டும்.
அசுர வழியில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
2. நினைவின் முயற்சியினால் ஆத்மாவை சதோபிரதானமாக்க வேண்டும்.
சுதாமாவைப் போல இருக்கின்ற ஒரு பிடி அவலை அர்ப்பணித்து
தன்னுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
வரதானம்:
ஒரு பாபாவைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை - இந்த திட
சங்கல்பத்தின் மூலம் அவிநாசி, அமர் ஆகுக.
ஒரு பாபாவைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை எந்தக் குழந்தைகள்
இந்த திட சங்கல்பம் செய்கிறார்களோ, அவர்களின் ஸ்திதி தானாகவே
மற்றும் சகஜமாகவே ஏக்ரஸ் ஆகிவிடும். இந்த திட சங்கல்பத்தின்
மூலம் தான் சர்வ சம்பந்தங்களின் அவிநாசி நூலிழை இணைகின்றது.
மற்றும் அவர்களுக்கு சதா அவிநாசி பவ, அமர் பவ என்ற வரதானங்கள்
கிடைத்து விடுகின்றன. திட சங்கல்பம் செய்வதன் மூலம்
புருஷார்த்தத்தில் கூட விசேஷ ரூபத்தில் லிஃப்ட் கிடைக்கின்றது.
யாருக்கு ஒரு பாபாவுடன் சர்வ சம்பந்தங்கள் உள்ளனவோ, அவர்களுக்கு
சர்வ பிராப்திகளும் தாமாகவே கிடைத்து விடும்.
சுலோகன்:
யோசிப்பது, பேசுவது மற்றும் செய்வது, மூன்றையும் ஒரே சமமாக
ஆக்குங்கள் - அப்போது சர்வோத்தம புருஷார்த்தி எனச் சொல்வார்கள்.
அவ்யக்த இஷாரா: சகஜயோகி ஆக வேண்டுமானால் பரமாத்ம அன்பின் அனுபவி
ஆகுங்கள்
எந்தச் சமயம் எந்த சம்பந்தத்தின் தேவை உள்ளதோ, அந்த
சம்பந்தத்தின் மூலமே பகவானைத் தன்னுடையவராக ஆக்கிக் கொள்ளுங்கள்.
மனதார சொல்லுங்கள் - என்னுடைய பாபா, மற்றும் பாபா சொல்வார் -
என்னுடைய குழந்தைகளே, இந்த அன்புக் கடலிலேயே மூழ்கி விடுங்கள்.
இந்த அன்பு குடை நிழலின் காரியத்தைச் செய்யும்.