28-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுடைய அன்பு அழியக் கூடிய சரீரங்களின் மீது இருக்கக் கூடாது. ஒரு தேகமற்றவரிடம் அன்பு வையுங்கள். தேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் பார்க்காதீர்கள்.

கேள்வி:
புத்தியை சுத்தப் படுத்துவதற்கான முயற்சி எது? சுத்தமான புத்தியின் அடையாளம் என்ன?

பதில்:
ஆத்ம அபிமானி ஆவதன் மூலமே புத்தி சுத்தமடைகிறது. இப்படிப்பட்ட ஆத்ம அபிமானி குழந்தைகள் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு ஒரு தந்தை மீது அன்பு செலுத்துவார்கள். ஆனால் யார் மூட புத்தியுள்ளவர்களோ அவர்கள் தேகத்தின் மீது அன்பு செலுத்துவார்கள். தேகத்தையே அலங்கரித்தபடி இருப்பார்கள்.

ஓம் சாந்தி.
 ஓம் சாந்தி என்று யார் சொன்னது? யார் கேட்டது? மற்ற சத்சங்கங்களில் மாணவர்கள் கேட்பார்கள். மகாத்மா அல்லது குரு முதலானவர்கள் சொன்னது என்று சொல்வார்கள். இங்கே பரமாத்மா கூறினார், ஆத்மா கேட்டது. புதிய விஷயம் அல்லவா. ஆத்ம அபிமானி ஆக வேண்டி யுள்ளது. பலர் இங்கும் கூட தேக அபிமானிகளாகி அமர்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானி ஆகி அமர வேண்டும். ஆத்மாவாகிய நான் இந்த சரீரத்தில் வீற்றிருக்கிறேன். சிவபாபா நமக்கு புரிய வைக்கிறார். இது நல்ல விதமாக புத்தியில் நினைவிருக்க வேண்டும். ஆத்மாவாகிய என்னுடைய தொடர்பு பரமாத்மாவுடன் உள்ளது. பரமாத்மா வந்து இந்த சரீரத்தின் மூலம் சொல்கிறார், இவர் (பிரம்மா) இடைத் தரகர் ஆகிவிட்டார். உங்களுக்குப் புரிய வைப்பவர் அவர் (பரமாத்மா) ஆவார். இவருக்கும் கூட ஆஸ்தியை அவர் தான் கொடுக்கிறார். எனவே புத்தி அந்தப் பக்கம் செல்ல வேண்டும். ஒரு தந்தைக்கு 5-7 குழந்தைகள் இருக்கிறார்கள் என்று வையுங் கள், அவர்களின் புத்தியின் தொடர்பு தந்தையின் பக்கமாக இருக்கும் ஏனென்றால் தந்தை யிடமிருந்து ஆஸ்தி கிடைக்க வேண்டியுள்ளது. சகோதரனிடமிருந்து ஆஸ்தி கிடைக்காது. ஆஸ்தி எப்போதும் தந்தையிடமிருந்து கிடைக்கிறது. ஆத்மாவுக்கு ஆத்மாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்காது. ஆத்மாவின் ரூபத்தில் நாம் அனைவரும் சகோதர-சகோதரனாக இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நம் அனைவரின் தொடர்பும் ஒரு பரமபிதா பரமாத்மாவுடன் இருக்கிறது. அவர் சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். என்னுடன் மட்டும் அன்பு வையுங்கள். படைப்பின் மீது வைக்காதீர்கள். ஆத்ம அபிமானி ஆகுங்கள். என்னைத் தவிர வேறு எந்த தேகதாரியை நினைத்தாலும் அதனை தேக அபிமானம் என சொல்லப்படும். இந்த தேகதாரி உங்கள் முன்னால் இருக்கலாம், ஆனால் நீங்கள் இவரைப் பார்க்காதீர்கள். புத்தியில்! அவருடைய நினைவு தான் (சிவபாபா) இருக்க வேண்டும். அவர்கள் வெறுமனே சகோதரன் - சகோதரன் என பேச்சளவில் மட்டும் சொல்லி விடுகின்றனர், இப்போது ஆத்மாக்களாகிய நாம் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆஸ்தி பரமாத்ம தந்தையிடமிருந்து கிடைக்கிறது. அந்த தந்தை சொல்கிறார் - உங்களுடைய அன்பு என் மீது மட்டும் இருக்க வேண்டும். நானே வந்து ஆத்மாக்களாகிய உங்களை என்னுடன் நிச்சயதார்த்தம் செய்விக்கிறேன். தேகதாரியுடன் நிச்சயதார்த்தம் அல்ல. மற்ற சம்மந்தங்கள் தேகத்தினுடையது, இங்கே இருக்கக் கூடிய சம்மந்தங்கள் ஆகும். இந்த சமயம் நீங்கள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் தந்தையிடம் ஞானத்தை கேட்கிறோம். புத்தி தந்தையின் பக்கம் செல்ல வேண்டும். தந்தை இவர் பக்கத்தில் அமர்ந்து நமக்கு ஞானம் கொடுக் கிறார். அவர் சரீரத்தை கடனாகப் பெற்றிருக்கிறார். ஆத்மா இந்த சரீரம் என்ற வீட்டில் வந்து நடிப்பை நடிக்கிறது. நடிப்பை நடிப்பதற்காக தன்னை வீட்டோடு கைது செய்ததைப் போல இருக் கிறது. சுதந்திரமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் பிரவேசமாகி தன்னை இந்த வீட்டில் வைத்து பூட்டி நடிப்பை நடிக்கிறது. ஆத்மாதான் ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கிறது, நடிப்பை நடிக்கிறது. இந்த சமயத்தில் யார் எந்த அளவு ஆத்ம அபிமானியாகி இருப்பார்களோ அவர்கள் உயர் பதவியை அடைவார்கள். பாபாவின் சரீரத்தின் மீதும் கூட உங்களுடைய அன்பு இருக்கக் கூடாது. ஒரு துளியளவும் இருக்கக் கூடாது. இந்த சரீரம் எதற்கும் உதவாதது. நான் இந்த சரீரத்தில் பிரவேசம் ஆகிறேன் - உங்களுக்குப் புரிய வைப்பதற்காக மட்டுமே. இது இராவண இராஜ்யம், பிறருடைய தேசம். இராவணனை எரிக்கின்றனர், ஆனால் புரிந்து கொள்வதில்லை. படங்கள் முதலானவைகளை உருவாக்குகின்றனர், அவர்களைப் பற்றி தெரியாது. முழுக்க முழுக்க மூட மதியுள்ளவர்களாக உள்ளனர். இராவண இராஜ்யத்தில் அனைவரும் மூட மதியுள்ளவராக ஆகிவிடுகின்றனர். தேக அபிமானம் உள்ளதல்லவா. துச்ச புத்தியாக ஆகி உள்ளனர். மூட மதியுள்ளவர்கள் தேகத்தை நினைத்தபடி இருப்பார்கள், தேகத்தின் மீது அன்பு வைப்பார்கள் என்று தந்தை கூறுகிறார். சுத்த புத்தியுள்ளவர்கள் தம்மை ஆத்மா என புரிந்து கொண்டு பரமாத்மாவை நினைவு செய்து பரமாத்மா கூறுவதை கேட்டபடி இருப்பார்கள், இதில்தான் முயற்சி தேவைப்படு கிறது. இவர் தந்தையின் ரதமாக உள்ளார். பலருக்கும் இவர் மீது அன்பு ஏற்பட்டு விடுகிறது. ஹூசைனின் குதிரையை எவ்வளவு அலங்காரம் செய்கின்றனர், அது போல. இப்போது மகிமை ஹுசைனுடையதல்லவா. குதிரை யினுடையதல்ல, கண்டிப்பாக மனிதரின் உடலில் ஹுசைனின் (பாபாவின்) ஆத்மா வந்திருக்கும் அல்லவா. அவர்கள் இந்த விஷயங்களை புரிந்து கொள்வதில்லை. இப்போது இது ராஜஸ்வ அஷ்வமேத அவினாசி ருத்ர ஞான யக்ஞமாக உள்ளது. அஷ்வ என்ற பெயரைக் கேட்டு அவர்கள் குதிரை என்று புரிந்து கொண்டு விட்டார்கள், அவைகளை ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்கின்றனர். இந்த கதைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையது ஆகும். இப்போது உங்களை அழகானவராக ஆக்கக் கூடிய பிரயாணி இவர் அல்லவா.

நாம் முன்னர் வெள்ளையாக இருந்தோம், பிறகு கருப்பாகி விட்டோம் என்று இப்போது நீங்கள் அறிவீர்கள். முதன் முதலில் வரக்கூடிய ஆத்மாக்கள் முதலில் சதோபிரதானமாக இருப்பார்கள், பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருகின்றனர். தந்தை வந்து அனைவரையும் அழகாக ஆக்கிவிடு கின்றார். தர்ம ஸ்தாபனை செய்ய வரும் ஆத்மாக்கள் அனைவரும் அழகான ஆத்மாக் களாக வருகின்றனர், பின்னர் காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி விடுகின்றனர். முதலில் அழகானவராக (சுந்தர்) பிறகு கருப்பாக(சியாம்) ஆகின்றனர். இவர்கள் முதல் நம்பரில் முதன் முதலாக வரும்போது அனைவரையும் விட அதிகமாக அழகாக ஆகின்றனர். இவர்களைப் (லட்சுமி நாராயணர்) போன்ற இயற்கையான அழகுள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. இது ஞானத்தின் விஷயமாகும். கிறிஸ்தவர்கள் பாரதவாசிகளை விட அழகாக (வெள்ளையாக) இருக்கின்றனர், ஏனென்றால் அந்தப் பக்கத்தில் வசிப்பவர்கள் ஆவார்கள், ஆனால் சத்யுகத்தில் இயற்கையான அழகு இருக்கும். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் அழகாக இருக்கும். இந்த சமயத்தில் அனைவரும் தூய்மையற்றவர்களாக, கருப்பாக இருக்கின்றனர், பிறகு தந்தை வந்து அனை வரையும் அழகாக ஆக்குகிறார். முதலில் சதோபிரதானமாக தூய்மையாக இருப்பார்கள், பிறகு படியில் இறங்கி, இறங்கி காமச்சிதையில் அமர்ந்து கருப்பாகி விடுகின்றனர். இப்போது தந்தை அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக்குவதற்காக வந்திருக்கிறார். தந்தையை நினைவு செய்வதன் முலமே நீங்கள் தூய்மையடைந்து விடுவீர்கள். ஆக ஒருவரை நினைவு செய்ய வேண்டும். தேகதாரியிடம் அன்பு வைக்கக் கூடாது. நாம் ஒரு தந்தையுடையவர்கள், அவர்தான் அனைத்துமே என்பது புத்தியில் இருக்க வேண்டும். இந்த கண்களால் பார்க்கக்கூடிய அனைவரும் வினாசமடைந்து விடுவார்கள். இந்த கண்களும் அழிந்து விடப்போகின்றன. பரமபிதா பரமாத்மா திரிநேத்ரி என சொல்லப்படுகிறார். அவருக்கு ஞானத்தின் மூன்றாம் கண் உள்ளது. திரிநேத்ரி, திரிகாலதரிசி, திரிலோகநாதர் எனும் பெயர்கள் அவருக்கு கிடைத்துள்ளன. இப்போது உங்களுக்கு மூன்று உலகங்களின் ஞானமும் உள்ளது, பிறகு இது மறைந்து விடு கின்றது, யாருக்குள் ஞானம் இருக்கிறதோ அவர் வந்து ஞானத்தைக் கொடுக்கிறார். உங்களுக்கு தந்தை 84 பிறவிகளின் ஞானத்தை கூறுகிறார். தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள் என தந்தை கூறுகிறார். உங்களை தூய்மையாக்குவதற்காக நான் இந்த சரீரத்தில் பிரவேசமாகி வந்துள்ளேன். என்னை நினைவு செய்வதன் மூலம்தான் தூய்மையடைவீர்கள், வேறு யாரை நினைவு செய்தாலும் சதோபிரதானம் ஆக முடியாது. பாவங்கள் நீங்கவில்லை என்றால் வினாச காலத்தில் விபரீத புத்தி அழிவைத் தரும் என்று சொல்வார்கள். மனிதர்கள் மிகவும் குருட்டு நம்பிக்கையில் இருக் கின்றனர். தேகதாரிகளின் மீதே பற்று வைக்கின்றனர். இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். ஒருவர் மீது மட்டுமே பற்று வைக்க வேண்டும். வேறு யார் மீதாவது பற்று இருக் கிறது என்றால் தந்தையிடம் விபரீத புத்தி (அன்பற்ற புத்தி) உள்ளது என அர்த்தம். தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், இதில்தான் முயற்சி தேவை என தந்தை எவ்வளவு புரிய வைக்கிறார். தூய்மையற்றவர்களாகிய எங்களை தூய்மையானவராக்குங்கள் என்று நீங்கள் சொல்லவும் செய்கிறீர்கள். தந்தைதான் தூய்மைப்படுத்துகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு 84 பிறவிகளின் வரலாறு புவியியலை தந்தைதான் புரிய வைக்கிறார். அது சகஜம் தானே. மற்றபடி நினைவினுடைய பாடம்தான் கஷ்டத்திலும் கஷ்ட மாக உள்ளது. தந்தையுடன் நினைவின் தொடர்பு வைப்பதில் யாருமே புத்திசாலி இல்லை.

நினைவில் புத்திசாலியாக (எச்சரிக்கையாக) இல்லாதவர்கள் பண்டிதர் போன்றவர்கள்..ஞானத்தில் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும், நினைவில் இல்லாவிட்டால் அவர்கள் பண்டிதர்கள் தான். பாபா ஒரு பண்டிதரின் கதையை சொல்கிறார் அல்லவா. யாருக்கு சொன்னாரோ அவர்கள் பரமாத்மாவை நினைவு செய்து அக்கரைக்குச் சென்று விட்டனர். பண்டிதரின் உதாரணம் கூட உங்களுக்காகத்தான். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் அக்கரைக்குச் சென்று விடுவீர்கள். முரளியில் கூர்மை மிக்கவராக இருந்தால் மட்டும் அக்கரைக்குச் செல்ல முடியாது. நினைவு செய்யாமல் பாவகர்மங்கள் அழியாது. இவை யனைத்தும் உதாரணங்களாக உருவாக்கப் பட்டுள்ளன. தந்தை வந்து சரியான விதத்தில் புரிய வைக்கிறார். அவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டு விடுகிறது. ஒரு விஷயத்தை மட்டும் பிடித்துக் கொண்டு விட்டனர் - பரமாத்மாவை நினைவு செய்வதன் மூலம் அக்கரை சேர்ந்து விடுவீர்கள். ஞானம் மட்டும் இருக்கும், நினைவு இருக்காது என்றால் உயர் பதவி அடைய முடியாது. நினைவு செய்யாதவர்கள் பலர் இருக்கின்றனர். முக்கிய மான விஷயமே நினைவுதான். மிகவும் நல்ல நல்ல சேவை செய்பவர்கள் இருக்கின்றனர், ஆனால் புத்தியின் தொடர்பு சரியாக இல்லாவிட்டால் மாட்டிக் கொள்வார்கள். நினைவு செய்பவர்கள் ஒரு போதும் தேக அபிமானத்தில் சிக்க மாட்டார்கள். அசுத்தமான சங்கல்பங்கள் வராது. நினைவில் பக்குவம் இல்லாவிட்டால் புயல் காற்றுகள் வீசும். நினைவின் மூலம் கர்மேந்திரியங்கள் முழுமையாக வசப்பட்டு விடும். தந்தை சரியானது மற்றும் தவறானது எது என்று புரிந்து கொள்ளும் புத்தியையும் கொடுக்கிறார். பிறர் தேகத்தின் பக்கமாக புத்தி செல்வதன் மூலம் விபரீத புத்தியால் (அன்பற்ற புத்தி) வினாசத்தை அடைந்து விடுவார்கள். ஞானம் வேறு யோகம் (நினைவு) வேறு. யோகத்தின் மூலம் ஆரோக்கியம், ஞானத்தின் மூலம் செல்வம் கிடைக்கிறது. யோகத்தின் மூலம் ஆயுள் அதிகரிக் கிறது, ஆத்மா பெரிது சிறிதாக ஆவதில்லை. எனது சரீரத்தின் ஆயுள் அதிகரிக்கிறது. என ஆத்மா சொல்கிறது. இப்போது ஆயுள் குறைவு, பிறகு அரைக்கல்ப காலத்திற்கு சரீரத்தின் ஆயுள் அதிகமாகி விடும். நாம் தமோபிர தானத்திலிருந்து சதோபிரதானமாகி விடுவோம். ஆத்மா தூய்மையடைந்து விடுகிறது, ஆத்மாவை தூய்மைப் படுத்துவதில்தான் முழு ஆதாரமும் உள்ளது. தூய்மையாகாவிட்டால் பதவியும் அடைய மாட்டீர்கள்.

சார்ட் (நினைவின் அட்டவணை) வைப்பதில் மாயை சோம்பேறிதனத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் நினைவின் யாத்திரையின் அட்டவணையை மிகவும் ஆர்வத்துடன் வைக்க வேண்டும். நாம் தந்தையை நினைவு செய்கிறோமா அல்லது வேறு நண்பர்கள், உறவினர்கள் பக்கமாக புத்தி செல்கிறதா என பார்க்க வேண்டும். முழு நாளில் யாருடைய நினைவு இருந்தது, அல்லது அன்பு யாருடன் இருந்தது, எவ்வளவு நேரத்தை வீணாக்கினேன்? தனது சார்ட்டை வைக்க வேண்டும். ஆனால் சார்ட்டை தவறாமல் வைக்கக் கூடிய சக்தி யாருக்கும் இல்லை. அபூர்வமாக சிலரால் தான் வைக்க முடிகிறது. மாயை முழுமையாக சார்ட் வைப்பதற்கு விடுவதில்லை. ஒரேயடியாக சோம்பேறி ஆக்கிவிடுகிறது. சுறுசுறுப்பு போய் விடுகிறது. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று தந்தை சொல்கிறார். நான் அனைத்து பிரியதர்ஷினிகளின் பிரியதர்ஷன் ஆவேன். ஆக, பிரியதர்ஷனை நினைவு செய்ய வேண்டும் அல்லவா. பிரியதர்ஷனாகிய தந்தை சொல் கிறார் - நீங்கள் அரைக் கல்பம் நினைவு செய்தீர்கள், இப்போது நான் சொல்கிறேன், என்னை நினைவு செய்தால் பாவ கர்மங்கள் அழிந்து போய் விடும். சுகத்தை கொடுக்கக் கூடிய தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும். மற்ற அனைவரும் துக்கத்தைக் கொடுப்பவர்கள். அவர்கள் எதற்கும் பயன்படப் போவதில்லை. இறுதி சமயத்தில் ஒரு பரமாத்மா தந்தைதான் உதவி செய்வார். இறுதி சமயத்தில் ஒருவர் எல்லைக்குட்பட்டவர், ஒருவர் எல்லைக்கப்பாற்பட்டவர்.

நல்ல விதமாக நினைவு செய்தபடி இருந்தீர்கள் என்றால் அகால மரணம் ஏற்படாது என தந்தை புரிய வைக்கிறார். உங்களை அமரர்களாக்கி விடுகிறார். முதலில் தந்தை மீது அன்பு நிறைந்த புத்தி தேவை. யாருடைய சரீரத்தின் மீதாவது அன்பு ஏற்பட்டது என்றால் விழுந்து விடுவீர்கள். தோற்று விடுவீர்கள். சந்திர வம்சத்தில் சென்று விடுவீர்கள். சத்யுகத்தின் சூரிய வம்சத்தின் இராஜ்யம்தான் சொர்க்கம் என சொல்லப்படுகிறது. திரேதாவைக் கூட சொர்க்கம் என சொல்ல மாட்டோம். துவாபர யுகம் மற்றும் கலியுகம் இதில் கலியுகத்தை கொடுமையான நரகம், தமோபிர தானம் என்று சொல்வது போல. துவாபர யுகத்தைப் பற்றி இந்த அளவு சொல்வதில்லை. பிறகு தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாவதற்கு நினைவு செய்ய வேண்டும். நம்முடைய அன்பு இன்னார் மீது உள்ளது, அவரின் ஆதாரமின்றி எமக்கு நன்மை ஏற்படாது என தானே புரிந்து கொள் வார்கள். இப்போது அப்படிப்பட்ட நிலையில் இறக்க நேரிட்டால் என்ன ஆகும்? விநாச காலத்தில் விபரீத புத்தி விநாசமாவார்கள். தூசுக்கு சமமான பதவியை அடைவார்கள்.

இன்றைய நாட்களில் உலகில் ஃபேஷன் செய்யும் தொல்லையும் அதிகமாக உள்ளது. தன் மீது காதலை ஏற்படுத்துவதற்காக சரீரத்தை எவ்வளவு டிப் டாப் - ஆக ஆக்குகின்றனர். குழந்தைகளே யாருடைய பெயர் உருவத்திலும் சிக்காதீர்கள் என்று தந்தை இப்போது சொல்கிறார். லட்சுமி நாராயணரின் உடைகளைப் பாருங்கள் எவ்வளவு ராயலாக உள்ளது. அது சிவாலயம், இது வேசிகளின் (விஷம் நிறைந்த) உலகம் என சொல்லப்படுகிறது. இந்த தேவதைகளின் முன் சென்று நாங்கள் வேசிகளின் ஆலயத்தில் இருப்பவர்கள் என சொல்கின்றனர். இன்றைய நாட்களில் ஃபேஷன் செய்யும் தொல்லையால் அனைவரின் பார்வையும் அவர்கள் மீது சென்று விடுகிறது, பிறகு பிடித்து இழுத்துக் கொண்டு ஓடி விடுகின்றனர். சத்யுகத்திலோ சட்டப்படி நடத்தை இருக்கும். அங்கே இயற்கையான அழகு இருக்கும் அல்லவா. குருட்டு நம்பிக்கையின் விஷயம் இல்லை. இங்கேயோ பார்ப்பதற்கு மனதிற்கு பிடித்திருந்தால் பிறகு வேற்று தர்மத்தவர்களுடன் கூட திருமணம் செய்து கொண்டு விடுகின்றனர். இப்போது உங்களுடையது ஈஸ்வரிய புத்தி, கல்புத்தியிலிருந்து தங்க புத்தியாக தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க முடியாது. அது இராவண சம்பிரதாயம் ஆகும். நீங்கள் இப்போது இராம சம்பிரதாயத்தினராக ஆகி உள்ளீர்கள். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஒரே சம்பிரதாயத்தவர்களாக இருந்தனர், மற்றபடி யாதவர்கள் என்பவர்கள் ஐரோப்பியர்கள் ஆவார்கள். யாதவர்கள் ஐரோப்பியர்கள் என கீதையின் மூலம் யாரும் புரிந்து கொள்வதில்லை. அதனை யாதவ சம்பிரதாயம் என்றே இங்கே சொல்லி விடுகின்றனர். யாதவர்கள் என்பவர்கள் ஐரோப்பியர்கள், அவர்கள் தமது விநாசத்திற்காக இந்த ஆயுதங்கள் முதலானவைகளை உருவாக்கியுள்ளனர். பாண்டவர்களுக்கு வெற்றி ஏற்படப் போகிறது, அவர்கள் சென்று சொர்க்கத்தின் எஜமானன் ஆகப் போகின்றனர். பரமாத்மாதான் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். பாண்டவர்கள் கரைந்து போய் இறந்து விட்டனர் என்று சாஸ்திரங்களில் காட்டுகின்றனர், பிறகு என்ன ஆயிற்று? கொஞ்சமும் புரிவதில்லை. கல்புத்தியல்லவா. நாடகத்தின் ரகசியத்தை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. பாபாவிடம் குழந்தைகள் வரு கின்றனர், ஆபரணங்களை வேண்டுமானால் அணிந்து கொள்ளுங்கள் என சொல்கிறேன், பாபா இங்கே நகைகள் அணிந்து கொள்வது அவ்வளவாக நன்றாக இல்லை என்கின்றனர். தூய்மை இழந்த ஆத்மா, தூய்மை இல்லாத சரீரத்திற்கு நகைகள் எங்கே அழகாக இருக்கப் போகிறது! அங்கே நாம் இந்த ஆபரணங்கள் முதலானவற்றால் அலங்கரிக்கப் பட்டிருப்போம். அளவற்ற செல்வம் இருக்கும். அனைவருமே சுகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அங்கே இவர் ராஜா, நான் பிரஜை என உணர்ந்து கொள்வார்கள். ஆனால் துக்கத்தின் விஷயம் இருக்காது. இங்கே தானியங்கள் முதலானவைகள் கிடைப்பதில்லை எனும்போது மனிதர்கள் துக்கமிக்கவர்களாக ஆகின்றனர். அங்கேயோ அனைத்தும் கிடைக்கும். துக்கம் என்ற வார்த்தை வாயிலிருந்து வெளிவராது. பெயரே சொர்க்கம் எனப்படுவது. ஐரோப்பியர்கள் அதனை பாரடைஸ் என சொல்கின்றனர். தேவி தேவதைகள் இருந்தனர் என புரிந்து கொள்கின்றனர், ஆகையால் அவர் களின் படங்களைக் கூட அதிக அளவில் வாங்குகின்றனர். ஆனால் அந்த சொர்க்கம் எங்கே சென்றது என யாருக்கும் தெரியாது. இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது என நீங்கள் அறிவீர்கள். புதியதிலிருந்து பழையதாக, பழையதிலிருந்து பிறகு புதிய உலகமாக ஆகிறது. ஆத்ம அபிமானி ஆவதில் மிகவும் முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் ஆத்ம அபிமானி ஆவதால் இந்த பல வியாதிகள் முதலானவற்றிலிருந்து விடுபட முடியும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உயர்ந்த பதவி பெறுவீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. எந்த தேகதாரியையும் தனது ஆதாரமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. சரீரங்களின் மீது அன்பு வைக்கக் கூடாது. இதய பூர்வமான அன்பை ஒரு தந்தையிடம் வைக்க வேண்டும். யாருடைய பெயர் உருவத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது.

2. நினைவின் சார்ட்டை ஆர்வத்துடன் வைக்க வேண்டும், இதில் சோம்பேறித்தனம் கூடாது. சார்ட்டில் பார்க்க வேண்டும் - எனது புத்தி எந்தப் பக்கம் செல்கிறது? எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறேன்? சுகத்தைக் கொடுக்கும் தந்தையின் நினைவு எவ்வளவு நேரம் இருக்கிறது?

வரதானம்:
இல்லற காரியங்கள், ஈஸ்வரிய காரியங்கள் இரண்டின் சமநிலை மூலமாக எப்போதும் இலகுவாக வெற்றயியளராகுக

குழந்தைகள் அனைவருக்கும் உடல் நிர்வாகம், உயிர் நிர்வாகம் எனும் இரு சேவை கிடைத் துள்ளது. இருப்பினும் இரு சேவையிலும் நேரம், சக்திகளில் சமமான கவனம் வேண்டும். ஸ்ரீமத் எனும் முள்சரிவர இருந்தால் இருபுறமும் சமநிலைபெறும். ஆனால் இல்லறம் என்று சொன்ன மாத்திரமே இல்லறவாசியாகி விட்டால் சாக்குபோக்குகள் ஆரம்பமாகிவிடும். எனவே இல்லறம் அல்ல டிரஸ்டி. இந்த நினைவால் இல்லற காரியம் ஈஸ்வரிய காரியங்களில் சமநிலையிருந்தால் எப்போதும் இலகுவாக வெற்றியடைவீர்கள்.

சுலோகன்:
முதல் டிவிசனில் வருவதற்காக கர்மேந்திரியங்களையும், மாயையினையும் வென்றவராகுக

அவ்யக்த சமிக்ஞை - இணைந்த ரூபத்தின் நினைவினால் சதா வெற்றியாளர் ஆகுங்கள்.

எவ்வாறு சிவசக்தியின் இணைந்த ரூபம் உள்ளதோ, அதுபோல் பாண்டவபதி மற்றம் பாண்டவர் என்பதும் சதா காலத்திற்கான இணைந்த ரூபம் ஆகும். பாண்டவபதியால் பாண்டவர் கள் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. யார் அவ்வாறு இணைந்த ரூபத்தில் எப்பொழுதும் இருக்கின்றார்களோ, அவர்கள் முன்னால் பாப்தாதா சாகரத்தில் அனைத்து சம்பந்தங்களிலும் முன்னால் இருக்கின்றார். எங்கே அழைத்தாலும் அங்கே நொடியில் ஆஜர் ஆகிவிடுவார், ஆகையினால் இறைவன் எங்கும் நிறைந்து இருக்கின்றார் என்று கூறுகின்