28.06.26    காலை முரளி            ஓம் சாந்தி 30.11.2010      பாப்தாதா,   மதுபன்


ஒவ்வொரு மணிநேரமும் - 5 ஸ்வரூபங்களின் பயிற்சியை செய்து மனதை சக்திசாலியானதாக ஆக்குங்கள், பாபா தான் தம் உலகம் (சன்ஸார்) என்றால்,
தமது சன்ஸ்காரங்களையும் தந்தைக்கு சமமானதாக ஆக்குங்கள்

இன்று பாப்தாதா ஒரே தேசத்தை சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் சந்திக்க வந்துள்ளார், அது தான் உங்கள் அனைவருடைய உண்மையான தேசம். அந்த ஒரு தேசம் எத்தனை இனிமையானது என்று உங்களுக்குத் தெரியும் தானே! பாப்தாதாவும் அந்த தேசத்திலிருந்து தான் அனைத்துக் குழந்தைகளையும் சந்திக்க வந்துள்ளார். குழந்தைகளுக்குத் தந்தையைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, தந்தைக்குக் குழந்தைகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று பாப்தாதா குழந்தைகளின் அனைத்து ரூபங்களையும், விசேஷமாக 5 ரூபங்களை பார்த்துக் கொண்டிருக்கின்றார், அதனால் தான் 5 முகங்களைக் கொண்ட பிரம்மா பற்றிய பாடல்களும் உள்ளன. உங்களுடைய 5 ரூபங்களை யும் நீங்கள் அறிவீர்கள் தானே! முதலாவது, அனைவரின் ஜோதி பிந்து ரூபம், அது உங்கள் முன்னே வந்துவிட்டது! எத்தனை பிரகாசிக்கக்கூடிய, அன்பான ரூபம் அது. இரண்டாவது, தேவதை ரூபம், அந்த ரூபமும் கூட எத்தனை அன்பானது மற்றும் தனித்துவமானது. மூன்றாவது, மத்தியத்தின் பூஜைக்குரிய ரூபம். நான்காவது, சங்கமயுக பிராமண ரூபம், அதுவும் கூட எத்தனை மகத்தானது. ஐந்தாவது, ஃபரிஸ்தா ரூபம். இந்த 5 ரூபங்களும் எத்தனை இனிமையானவை. இன்று பாப்தாதா குழந்தைகளுக்கு மனதிற்கான பயிற்சியைக் கற்பிக்கின்றார், ஏனெனில் மனம் அவ்வப் போது (ஆத்மாவை) தன் பக்கம் இழுத்துக் கொள்கின்றது. எனவே இன்று பாப்தாதா மனதை ஏகரஸ் (ஒரே சீரான) நிலைக்குக் கொண்டு வரும் பயிற்சியைக்கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். நாள் முழுவதும் இந்த 5 ரூபங்களின் பயிற்சியைச் செய்யுங்கள் மேலும் அனுபவம் செய்யுங்கள்; எந்த ரூபத்தை நினைக்கின்றீர்களோ அதை மனதில் அனுபவம் செய்யுங்கள். எப்படி ஜோதி பிந்து என்று சொன்னவுடனேயே அந்தப் பிரகாசமான ரூபம் முன்னே வந்து விடுகின்றதோ, அப்படி இந்த 5 ரூபங்களையும் முன்னே கொண்டு வாருங்கள் மேலும் அந்த ரூபத்தை அனுபவம் செய்யுங்கள். ஒவ்வொரு மணிநேரமும் 5 வினாடிகள் இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள். வினாடிகள் இல்லை யென்றால் 5 நிமிடங்கள் செலவிடுங்கள். ஒவ்வொரு ரூபத்தையும் முன்னே கொண்டு வாருங்கள், அனுபவம் செய்யுங்கள். மனதை இந்த ஆன்மீகப் பயிற்சியில் பிஸியாக வைத்திருங்கள், அப்போது மனம் பயிற்சியின் மூலமாக சதா சரியானதாக இருக்கும். எப்படி உடலுக்கான உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைக்கின்றதோ அப்படி இந்தப் பயிற்சி மனதை சக்திசாலியானதாக வைக்கும். ஒரு வினாடி கூட மனதிற்குள் அந்த ரூபத்தைக் கொண்டு வாருங்கள், இது எளிதானது என்று புரிகின்றது தானே, அல்லது கடினமாகத் தோன்றுகின்றதா? இது உங்களுக்குக் கடினமாக இருக்காது, ஏனெனில் இந்தப் பயிற்சியை நீங்கள் பலமுறை செய்திருக்கின்றீர்கள்; ஒவ்வொரு கல்பத்திலும் செய்திருக்கின்றீர்கள். தனது சொந்த ரூபத்தை முன்னே கொண்டு வருவது கடினம் அல்ல. ஒவ்வொரு ரூபமும் முன்னால் வரும்போதே அந்த ரூபத்தின் சிறப்பு என்பது அனுபவம் ஆகும். சில நேரங்களில் சில குழந்தைகள் தாங்கள் இந்த ரூபங்களை அனுபவிக்க விரும்பு வதாகவும், ஆனால் மனம் வேறு பக்கம் சென்று விடுவதாகவும் கூறுகின்றார்கள். எந்த இடத்தில் எவ்வளவு நேரம் மனதை நிலைநிறுத்த விரும்புகின்றீர்களோ அதற்குப் பதிலாக வீணான, தேவையற்ற எண்ணங்களும் வந்துவிடுகின்றன. சிலநேரம் மனதில் ஒருவித அஜாக்கிரதை உணர்வும் வந்துவிடுகின்றது, எனவே பாப்தாதா ஒவ்வொரு மணிநேரமும் 5 வினாடிகள் அல்லது 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியின் அனுபவத்தை செய்விக்க விரும்புகின்றார். 5 நிமிடங்கள் ஒதுக்கி மனதை இந்தப் பக்கம் செலுத்துங்கள். இவ்வாறு செய்வது நன்றாக இருக்கின்றது தானே! (5 வினாடிகள் அல்லது நொடிகள் செய்துவிட்டு) பிறகு உங்கள் வேலையில் ஈடுபடுங்கள், ஏனெனில் காரியம் என்பதை செய்து தான் ஆக வேண்டும். காரியம் செய்யாமல் இருக்க முடியாது; யக்ஞ சேவை, உலக சேவை என அனைத்தையும் அனைவரும் செய்து கொண்டுதான் இருக்கின்றீர்கள், செய்யவும் வேண்டும். இந்த 5 நிமிடப் பயிற்சியைச் செய்த பிறகு உங்கள் காரியங்களில் ஈடுபடுங்கள். 5 வினாடிகளோ அல்லது 5 நிமிடங்களோ செலவிடுங்கள், இதற்குக் கூட நேரமில்லாத வர்கள் யாராவது இருக்கின்றீர்களா? 5 நிமிடம் கூட இல்லாதவர்கள் யாராவது இருந்தால் கைகளைத் தூக்குங்கள். யாரும் இல்லையா? யாராவது இருக்கின்றீர்களா? எல்லோராலும் நேரம் ஒதுக்க முடியும். அப்படியெனில் மீண்டும் மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள் அப்போது காரியம் செய்தாலும் கூட இந்த (5 ரூபங்களின்) நஷா இருக்கும் ஏனெனில் தந்தையின் மந்திரம் கூட மன்மனாபவ என்பதாகும். மனதின் இந்த அனுபவம் மாயையை வெல்வதற்கு (மாயாஜீத்) ஒரு கருவியாக அமையும், ஏனெனில் காலம் செல்லச் செல்ல ஒரு வினாடியில் 'ஸ்டாப்' (முற்றுப்புள்ளி) வைக்க வேண்டியிருக்கும் என்று பாப்தாதா கூறியுள்ளார். எனவே இந்தப் பயிற்சியை செய்வதன் மூலம் 'மன்மனாபவ' நிலை ஏற்பட உதவி கிடைக்கும், ஏனெனில் பாப்தாதா பார்த்தார் - நீங்கள் சொற்பொழிவு ஆற்றும்போதோ அல்லது யாருக்காவது செய்தி சொல்லும் போதோ என்ன சொல்கின்றீர்கள்? "நாங்கள் உலகை மாற்றக் கூடியவர்கள்" என்று. எனவே உலகை மாற்ற வேண்டும் என்றால், முதலில் உங்கள் மனதை எந்த நேரத்தில் எந்த எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அதே எண்ணத்தை உருவாக்கும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக ஆக்குங்கள். ஒரு வினாடியில் கட்டளையிடுங்கள், எப்படி இந்த உடலின் கர்மேந்திரியங்களுக்கு கட்டளையிடுகின்றீர்கள் - (கைகளை) மேலே தூக்க வேண்டும், இறக்க வேண்டும் என்றால் அது கட்டுப்படுகின்றது தானே. அப்படி மனதை வீணான மற்றும் தேவையற்ற எண்ணங்களிலிருந்து தப்பிக்க வையுங்கள்; நீங்கள் மனதின் எஜமானர்கள், 'எனது மனம்' என்று சொல்கினறீர்கள் தானே! எனது மனம் என்றால் அது கட்டளைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த மனதிற்கான பயிற்சி (5 ரூபங்களில் நிலைப்பது) கூறப்பட்டது.

ஒவ்வொரு குழந்தையும் - தான் மனதை வென்று உலகை வெல்ல வேண்டும் (மனஜீத் ஜகத்ஜீத் ஆகவேண்டும்) என்று விரும்புவதை பாப்தாதா பார்த்தார், எனவே வரக்கூடிய சமயத்திற்கு முன்னரே, மனதை எங்கே விருப்பமோ அங்கே சகஜமாக நிலைபெறச் செய்வதற்கு இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது எண்ணத்திற்கேற்ப - மனம், புத்தி, சன்ஸ்காரங்கள் அனைத்தும் தனது கட்டளைக்குக் கீழ்படிந்து இருக்கும் அளவிற்கு சக்திசாலி யானதாக ஆக்க வேண்டும் என்று பாப்தாதா விரும்புகின்றார். யாருக்கு இந்தப் பயிற்சி இருக் கின்றதோ, அவர்கள் நிச்சயமாக உலகை வென்றவர்களாக (ஜகத்ஜீத்) ஆகுவார்கள். பாப்தாதா விடமும் குடும்பத்திடமும் (அதாவது பிராமண பரிவாரத்திடமும்) அனைவருக்கும் அன்பு இருக் கின்றது. குழந்தைகளுக்குத் தந்தை மீது இருக்கும் அன்பை விட, தந்தைக்குக் குழந்தைகள் மீது இருக்கும் அன்பு அதிகமானதாக இருக்கின்றது. எனவே குழந்தைகள் புத்திசாலித்தனமாக ஒரு வேலையை நன்றாகச் செய்துள்ளீர்கள் - அதாவது 'எனது பாபா, எனது பாபா' என்று சொல்லி எனதாக (பாபாவை தன்னுடையவராக) ஆக்கிவிட்டீர்கள். ஒவ்வொரு குழந்தையும் "எனது பாபா" என்று நிச்சயத்துடன் கூறுகின்றீர்கள். தந்தையும் "எனது குழந்தை" என்று கூறுகின்றார். இந்த 'எனது' என்ற சொல் ஒரு அதிசயத்தைச் செய்துவிட்டது. 'எனது பாபா, அன்பான பாபா' என்று சொல்லும்போது இதயத்தில் எத்தனை உற்சாகம் ஏற்படுகின்றது, தந்தையும் மீண்டும் மீண்டும் "எனது குழந்தைகளே" என்று கூறுகின்றார். யாருக்கேனும் மாயையுடன் யுத்தம் நடக்கின்றது எனில் அதற்கான காரணம், அரை கல்பமாக மாயையை நீங்கள் உங்களுடையதாக ஆக்கிக் கொண்டீர்கள் அல்லவா!. அப்படியெனில் மாயைக்கும் உங்கள் மீது அன்பு இருக்கும் தானே! அதனால் அது அடிக்கடி வருவதற்கு முயற்சி செய்கின்றது ஆனால் யார் மனதார என்னுடைய பாபா என்று சொல்கின்றார்களோ அவர்களுக்கு தந்தையின் சகயோகம் கிடைக்கின்றது. ஒரு முறை மனதார என்னுடைய பாபா என்று சொல்லும்போது ஆயிரம் மடங்கு சக்திசாலியான சகயோகம் (உதவி) செய்வதற்கு தந்தை கட்டுப்பட்டவராக ஆகுகின்றார். அனுபவம் இருக்கின்றது தானே! சரியான நேரத்தில் இந்த அனுபவத்தை மட்டும் நடைமுறையில் கொண்டு வாருங்கள்.

பாப்தாதா குழந்தைகளின் ஒரு விஷயத்தைப் பார்த்து மனதிற்குள் புன்னகைக்கின்றார். அது எந்த விஷயம் என்று தெரியுமா? அனைவரும் "பாபா தான் என் உலகம்(சன்ஸார்)" என்று சொல்கின்றீர்கள், "தந்தை தான் என் உலகம்" என்று சொல்கின்றீர்கள் தானே! யார் "தந்தையே என் உலகம்" என்று சொல்கின்றீர்களோ அவர்கள் கைகளைத் தூக்குங்கள். நல்லது, தந்தை தான் உலகம். வேறு உலகம் எதுவும் இல்லை தானே! வேறு உலகம் (சன்ஸார்) கிடையாது, ஆனால் வேறு ஒன்று இருக்கின்றது அது என்ன? அதுதான் சன்ஸ்காரம் (குணம்). எப்பொழுது தந்தை தான் உலகம், இரண்டாவதாக எனக்கு எந்தவொரு உலகமும் கிடையாது என்று இருக்கின்றீர்களோ அப்பொழுது சன்ஸ்காரம் என்பது எப்படி பிறப்பு எடுக்கின்றது? தற்போது பாப்தாதா காலத்தின் தேவைக்கேற்ப "சன்ஸ்காரம்" என்ற வார்த்தையை நீக்க விரும்புகிறார். அதை நீக்க முடியுமா? சன்ஸ்காரங்கள் ஒரு தடை ரூபமாக ஆக முடியாது என்று யார் கருதுகின்றீர்களோ, அவர்கள் உறுதியான சங்கல்பம் செய்து, தீவிர புருஷார்தத்தின் மூலமாக இப்போதே அதை முடிவுக்குக் கொண்டு வர முடியும். "செய்வோம், யோசிப்போம், பார்ப்போம்..." என்பது வேண்டாம், "செய்தே ஆக வேண்டும்" என்றிருக்க வேண்டும். வருவது சன்ஸ்காரத்தின் வேலை வருவது மேலும் குழந்தை களின் வேலை அதை சமாப்தி செய்வது (முடிவுக்குக் கொண்டு வருவது) . தைரியம் இருக்கின்றதா? தைரியம் இருக்கின்றதா? முன்னரும் கைகளைத் தூக்கினீர்கள், ஆனால் நீங்கள் என்ன சங்கல்பம் செய்தீர்களோ அது நடந்து கொண்டு இருக்கின்றதா என்பதை சோதனை செய்யுங்கள். தந்தை (குழந்தைகளுக்குச்) சொன்னார், தந்தையின் காரியம் - லட்சியத்தை கொடுப்பது மேலும் குழந்தைகளின் காரியம் - தந்தை என்ன சொல்கின்றாரோ அதைச் செய்தே ஆகவேண்டும் என்பது- இவ்வாறு யார் புரிந்துள்ளீர்கள்? அவர்கள் இதற்கான (சன்ஸ்காரங்கள் மீது வெற்றி பெறுவதற்கான) தேதியை முடிவு செய்யுங்கள். பக்தர்கள் சிவராத்திரியைக் கொண்டாட ஒரு தேதியை முடிவு செய்வது போல, நீங்களும் இதற்கான ஒரு தேதியை முடிவு செய்யுங்கள். அனைவருக்கும் சேர்த்து ஒரே தேதியை முடிவு செய்ய முடியாவிட்டாலும், ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தேதியை முடிவு செய்ய முடியும் தானே! செய்ய முடியுமா? செய்ய முடியும் என்றால் கைகளைத் தூக்குங்கள். செய்து விட்டீர்களா! செய்ய முடியுமா அல்லது செய்துவிட்டீர்களா! இரட்டை வெளி நாட்டினர் தேதியை முடிவு செய்துவிட்டீர்களா! நல்லது, முன்னால் அமர்ந்திருப்பவர்கள் முடிவு செய்துவிட்டீர்களா! தேதியை முடிவு செய்துவிட்டீர்கள் தானே, அதை பாப்தாதாவிற்கு எழுதிக் கொடுங்கள். பாப்தாதாவும் கூட குழந்தைகளுக்கு பரீட்ச்சையில் தேர்ச்சி பெறுவதற்கான தைரியத்தை கொடுப்பார் தானே! பின்னர் "ஆஹா குழந்தை களே ஆஹா!" என்ற பாடல்கள் பாடப்படும். யார் சங்கல்பம் செய்து அதன்படி நடைமுறையில் செயல் படுகின்றார்களோ அவர்களுக்கு ஒரு விழா கொண்டாடப்படும். ஏனெனில் வித்தியாசம் தெரியத்தானே செய்யும்! தேதியை முடிவு செய்பவர்கள் முன்னேறுவதில் நெருக்கமானவர்களாக மாறுவார்கள். அந்த மாற்றம் தெரியத் தொடங்கும். யாருடைய நிலை (எழுதிக்கொடுத்த) தேதிக்கேற்ப முழுமை அடைகின்றதோ அவர்களுக்கு பாப்தாதா விழா கொண்டாடுவார். உள்ளுக்குள் மாற்றம் செய்பவர்களைப் பார்ப்பவர்களும் அதை உறுதிப் படுத்துவார்கள், ஏனெனில் நீங்கள் அவர்களுடைய தொடர்பில் வருவீர்கள் தானே! (மாற்றத்தின்) சன்ஸ்காரம் என்பது யாருடைய தொடர்பிலாவது வரும்போது வெளிப்படத்தானே செய்யும். ஏனெனில் "நான் மாஸ்டர் சர்வ சக்திவான்" என்ற தூய்மையான நஷா ஒவ்வொரு குழந்தையிடமும் இருப்பதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் மாஸ்டர் தானே? எப்பொழுது சர்வ சக்திவானாக இருக்கின்றீர்களோ அப்பொழுது செய்யக்கூடிய சங்கல்பம் பூர்த்தி ஆகவேண்டும், இதுவும் கூட சக்தி தானே! நல்லது.

இன்று முதல் முறையாக வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். பாருங்கள், எத்தனை பேர் வந்திருக் கின்றார்கள்! பாப்தாதா வாழ்த்துகளை கொடுக்கின்றார். மதுபன் வந்ததற்கு வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள். காலம் கடந்துவிட்டது என்ற (டூ-லேட்) போர்டு போடப்படுவதற்கு முன்பே நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று பாப்தாதா கருதுகின்றார், எனவே முழு (பிராமண) குடும்பத்தினர்களுக்கும் உங்கள் மீது இந்த ஒரு சுப ஆசை இருக்கின்றது அதாவது லாஸ்டாக (கடைசியாக) வந்திருந்தாலும் சதா இரட்டை புருஷார்த்தம் செய்து பாஸ்டாக (விரைவாக) செல்ல வேண்டும்; பாப்தாதாவிற்கோ இந்த சுப ஆசை இருக்கத்தான் செய்கின்றது; இது முழு குடும்பத் தினருடைய சுப ஆசை. தைரியம் இருக்கின்றதா(சதா இரட்டை புருஷார்த்தம் செய்வதற்கு)! இன்று யார் வந்திருக்கின்றார்களோ, அவர்களுக்கு இந்த தைரியம் இருக்கின்றது. லாஸ்டாக (கடைசியாக) வந்திருந்தாலும் கூட பாஸ்டாக(விரைவாக) சென்று ஃபஸ்டில் (முதலாவதாக) வாருங்கள். முதல் நம்பரில் வாருங்கள். முதலிடம் மட்டுமல்ல, முதல்தரமான முறையில் முதலிடம் பிடியுங்கள், அது சாத்தியம்தான்! எங்களால் வேகமாகச் சென்று முதலிடம் பிடிக்க முடியும் என்று கருதுபவர்கள் கைகளை உயர்த்துங்கள். தங்கள் மீது நம்பிக்கை இருக்கின்றதா? நல்லது. பின் வரிசையில் இருப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள், உங்களால் முடியுமா? நல்லது. (கைகளை உயர்த்தியவர்கள்) குறைவாக இருக்கின்றீர்கள். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், முழு குடும்பமும் பாப்தாதாவும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உங்களை முன்னேற்ற விரும்பு கின்றார்கள், எனவே நீங்கள் எந்த மையத்திலிருந்து (சென்டர்) வந்தீர்களோ அந்த மையத்தில் உங்களுடைய இந்த உறுதிமொழியை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். இது சாத்தியமே, அசாத்தியமானது அல்ல; சாத்தியம்தான் ஆனால் அதற்கு இரட்டிப்பு கவனம் (டபுள் அட்டென்ஷன்) தேவை. நீங்கள் கடைசியாக வந்து முதலிடம் பிடித்துக் காட்டினால், அந்த மையத்தில் உங்களது தீவிர முயற்சியின் தினமாக (திவீர புருஷார்த்த தினமாக) அதைக் கொண்டாடுவார்கள். விழா எடுப்பார்கள். மிக விரைவில் தந்தைக்குச் சமமாக ஆகியே காட்ட வேண்டும் என்ற ஆர்வம் அனைவரது இதயத்திலும் இருக்கின்றது. குழந்தைகள் அமிர்த வேளையில் தந்தையிடம் பேசும் போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார். "ஆஹா குழந்தைகளே ஆஹா!" பழைய குழந்தைகளாக இருந்தாலும் சரி, புதியவர்களாக இருந்தாலும் சரி, தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் தனது இதயப்பூர்வமான ஆசிர்வாதங்களை கொடுக்கின்றார். நீங்கள் எடுத்து வைக்கும் ஒரு அடிக்கு ஈடாக, தந்தை ஆயிரம் அடிகள் உதவி செய்வார், ஏனெனில் இப்போது காலத்தின் மாற்றம் மிகத் தீவிர வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. நல்லது.

சேவைக்கான முறை (டர்ன்) டெல்லி மற்றும் ஆக்ரா மண்டலத்திற்குரியது:- டெல்லி ஆரம்பத்திலிருந்தே சேவையில் புதிய புதிய விஷயங்களைச் செய்து வருகின்றது என்று பாப்தாதா கேள்விப்பட்டார். செய்திருக்கின்றீர்கள் தானே! டெல்லி செய்திருக்கின்றது. எனவே இப்போது சேவையில் ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குங் கள். இப்போது நீங்கள் நடத்தும் சொற்பொழிவுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நன்றாகத்தான் இருக்கின்றது, ஏனெனில் அதன் மூலம் வளர்ச்சி ஏற்படுகின்றது மற்றும் புதிய உறவுகள் உருவாகுகின்றன. இப்போது நடந்து கொண்டி ருக்கும் சேவையின் முறைகளும் நன்றாகத்தான் இருக்கின்றது, ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. இப்போது ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கொண்டு வாருங்கள், அது சேவை செய்பவர்களுக்குப் புதிய ஆர்வத்தையும், புதிய உற்சாகத்தையும் தர வேண்டும். செய்வீர்கள் தானே! நல்லது. அனைவரையும் உற்சாகத்தில் கொண்டு வந்து அனை வரையும் அதில் பிஸியாக்குங்கள். இத்தகைய பெரிய நிகழ்ச்சிகளில் சொற்பொழிவு ஆற்றுபவர் கள் என்னவோ பிஸியாகிவிடுகின்றார்கள், ஆனால் மற்றவர்கள் வெறும் துணையாக மட்டுமே இருக்கின்றார்கள். அதுவும் அவசியம் தான், ஆனால் அப்படிப்பட்ட ஒரு சேவைக்கான கண்டு பிடிப்பை உருவாக்குங்கள் அதாவது அந்த சேவையில் தரம் வாய்ந்த ஒவ்வொரு ஆத்மாவும் தாங்களாகவே எதையாவது செய்து பிஸியாக இருக்க வேண்டும். ஏனெனில் டெல்லியைத் தான் தலைநகராக ஆக்க வேண்டும். எனவே டெல்லிவாசிகள் அத்தகைய ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும். சரிதானே! சரியா, அனைவரும் செய்வீர்களா? கைகளைத் தூக்குங்கள். நல்லது, யார் வேண்டுமானாலும் இதை உருவாக்க முடியும். புதியவர்களும் கூட உருவாக்க முடியும். மற்ற எவருக்காவது ஏதேனும் சங்கல்பம் (எண்ணம்) வந்தால் அவர்களும் இங்குள்ள தலைமை அலுவலகத்திற்கு, மதுபன் அலுவலகத்திற்கு எழுதலாம். அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. நல்லது. டெல்லிவாசிகள் ஆன்மீக முயற்சியிலும் (புருஷார்த்தம்) முதலிடம் பெற வேண்டும். எந்த ஒரு மையமாக (சென்டராக) இருந்தாலும் - அது உள்நாடாட்டின் சென்டராகவோ அல்லது வெளிநாட்டின் சென்டராகவோ இருக்கலாம் - அந்த மையமும் அதனுடன் தொடர்புடைய கிளை மையங்களும் 6 மாதங்கள் எந்தத் தடையும் இன்றி (நிர்விக்னமாக) இருந்து காட்ட வேண்டும் என்று பாப்தாதா நீண்ட காலமாகச் சொல்லி வருகின்றார். எந்தத் தடையும் வராமல், நிர்விக்னமாக இருக்க வேண்டும். இதில் எவர் முதலிடம் பெறுகிறாரோ, அவரது 'நிர்விக்ன பவ' தினத்தைக் கொண்டாடுவோம். இப்போது 6 மாதங்கள் என்று சொல்கிறோம், 6 மாதங்கள் பயிற்சி செய்தால் பின்னர் அது பழக்கமாகிவிடும். ஆனால் பரிசைப் பெறுவதற்காக 6 மாத கால அவகாசம் தருகின்றோம். இதில் டெல்லி எந்த இடத்தை பிடிக்கும்? முதல் இடம். பாப்தாதா மகிழ்ச்சியாக இருக்கின்றார். முழு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. திருப்தியான நிலையின் புகழ் ஓங்கட்டும். சேவையாக இருந்தாலும் சரி அல்லது உருவாக்கப்பட்ட விதிகளாக (நியமம்) இருந்தாலும் சரி, பாப்தாதா கவனிப்பார். இதுவரை (சிறந்த மையம் என்று) எந்தப் பெயரும் வரவில்லை. மண்டலமாக இல்லாவிட்டாலும், பெரிய மையங்கள் மற்றும் அவற்றின் கிளை மையங்கள் இத்தகைய முயற்சியைச் செய்தாலும் பாப்தாதா கவனிப்பார். சீக்கிரம் உங்கள் அடிகளை முன்னோக்கி வையுங்கள், ஏனெனில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. தேதியைக் குறிப்பிட மாட்டோம். நல்லது.

ஆக்ரா மண்டலம் :- அரசாங்கத்தின் பட்டியலில் ஆக்ரா எப்படிப் புகழ்பெற்றதோ, அதுபோல ஆக்ரா வாசிகள் ஏதேனும் ஒரு சேவையைக் கண்டறிந்து 'ஆல்மைட்டி கவர்மெண்ட்' (இறைவனின் அரசாங்கம்) முன்னிலையிலும் புகழ்பெற வேண்டும். ஆக்ராவில் 'தாஜ்' (தாஜ்மஹால்) இருப்பது போல, ஏதேனும் விசேஷமாகச் செய்யுங்கள். நம்பிக்கை இருக்கின்றதா! நம்பிக்கை இருக்கின்றது, அதற்கான வாழ்த்துக்கள். என்ன செய்வீர்கள்? ஆனால் எவ்வளவு காலத்தில் செய்வீர்கள்?. (மேளா (திருவிழா), மெகா புரோகிராம் (பெரிய நிகழ்ச்சிகள்) செய்வோம் என குழந்தைகள் பதில் அளிக்கின்றார்கள்). மேளா, மெகா புரோகிராம் என அனைவரும் செய்து கொண்டுதான் இருக்கின்றீர்கள், ஆனால் எந்த மண்டலமும் செய்யாத ஒரு புதிய கண்டுபிடிப்பை ஆக்ரா உருவாக்க வேண்டும், ஏனெனில் ஆக்ரா அனைவரும் பார்ப்பதற்கு தகுதிபெற்ற இடம். அரசாங்கத் திற்கு 'தாஜ்' இருப்பது போல, நீங்களும் ஏதேனும் விசேஷமாகச் செய்யுங்கள். இதைப் பற்றிச் சிந்தியுங்கள், அமிர்தவேளையில் அமர்ந்து யோசித்தால் ஏதேனும் ஒரு தூண்டுதல் கிடைக்கும். சரி, ஆசிரியர்கள் கைகளைத் தூக்குங்கள். நிறைய பேர் இருக்கின்றீர்கள். எனவே ஏதேனும் அதிசயம் (கமால்) செய்யுங்கள். மற்றபடி பாப்தாதா அனைத்துக் குழந்தை களிடமும் இதையே கூறுகின்றார் -அதாவது இப்போதே ஏதேனும் ஒரு புதுமையைக் கொண்டு வாருங்கள். எந்த சேவை நடந்து கொண்டிருக்கின்றதோ அவை காலத்திற்கு ஏற்பப் புதுமையாகத்தான் இருக்கின்றன, ஆனால் இப்போது புதிய கண்டுபிடிப்பைச் செய்யுங்கள். எந்த மண்டலமாக இருந்தாலும் புதியதைக் கண்டறியுங்கள். மற்றபடி ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கு அன்பாவர்கள், காணாமல் போய் கண்டெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் எப்போதும் பறந்து கொண்டே இருக்க வேண்டும், மற்றவர் களையும் பறக்க வைக்க வேண்டும் என்பது தான் தந்தையின் விருப்பம். நல்லது

நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகள் தந்தையின் இதயத்திற்கு நெருக்கமானவர்கள், ஒவ்வொரு குழந்தையும் "நாம் தீவிர புருஷார்த்தி ஆகி தந்தையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்" என்ற லட்சியத்தை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வர வேண்டும். "அனைவரின் இதயமும் 'எனது பாபா வந்துவிட்டார்' என்று சொல்ல வேண்டும்" என்ற அத்தகைய ஆர்வம் மற்றும் உற்சாகம் கொண்ட சங்கல்பம் இப்போது பாப்தாதாவை வந்தடைகின்றது. இந்த ஆர்வம் மற்றும் உற்சாகம் பெரும்பான்மையானவர்களின் இதயத்தில் வந்துவிட்டது. அனைவருக்கும் மிக விரைவாக இந்தச் செய்தியைச் சென்றடையச் செய்ய வேண்டும், யாரும் வஞ்சிக்கப்படக்கூடாது என்பது தான் பாப்தாதாவின் ஆசை. அனைவரும் ஏதோ ஒரு ஆஸ்தியைப் பெறட்டும். ஜீவன்முக்தி இல்லையென்றாலும், அன்பின் மூலம் முக்தி என்ற ஆஸ்தியையாவது பெறட்டும், ஏனெனில் தந்தை அனைவருக்கும் ஆஸ்தி வழங்க விரும்புகின்றார். நீங்கள் எத்தனை பேருக்கு ஆஸ்தி பெற்றுத் தருகின்றீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கும்- உங்களுடைய ராஜ்யத்தில் ராஜ்ய அதிகாரி என்ற ஆஸ்தி கிடைக்கும். அனைத்துத் திசைகளிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பாப்தாதாவின் அளவற்ற அன்பையும் ஆசிர்வாதங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
தியாகம் மற்றும் தபஸ்யாவின் மூலம் சேவையில் வெற்றி பெறக்கூடிய மேலும் அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியவர் (கல்யாண்காரி) ஆகுக.

பௌதிக நெருப்பு எப்படித் தூரத்திலிருந்தே தன்னுடைய அனுபவத்தை செய்விக்கின்றதோ, அதுபோல உங்கள் தபஸ்யா மற்றும் தியாகத்தினுடைய ஜொலிப்பு தூரத்திலிருந்தே அனைவரை யும் கவர வேண்டும். சேவாதாரியுடன் சேர்த்து தியாகியாகவும், தபஸ்வி மூர்த்தியாகவும் மாறும் போதுதான் சேவையின் உடனடி பலன் வெளிப்படையாகத் தெரியும். தியாகி என்றால் எந்தவொரு பழைய சங்கல்பமோ அல்லது சன்ஸ்காரமோ தெரியக்கூடாது. தபஸ்வி என்றால் புத்தியின் நினைவு அல்லது பார்வையில் ஆத்மீக ரூபத்தைத் தவிர வேறு எதுவும் தெரியக்கூடாது. எந்த எண்ணம் எழுந்தாலும் அதில் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் நன்மை அடங்கியிருக்கும் போதுதான் 'அனைவருக்கும் நலன் செய்யக்கூடியவர்' (கல்யாண்காரி) என்று சொல்ல முடியும்.

சுலோகன்:
உடல் உணர்வைக் கடந்து செல்ல, உருவத்தைப் (சித்திரத்தை) பார்க்காமல் சைதன்யத்தையும் (ஆத்மாவையும்), சரித்திரத்தையும் (குணத்தையும்) பாருங்கள்.


அவ்யக்த சமிக்ஞை: சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தங்களது
சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள், சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.

நீங்கள் அனைவரும் 'மாஸ்டர் உலகை உருவாக்குபவர்' (மாஸ்டர் விஷ்வ நிர்மாதா) ஆகுவீர்கள். இந்த நினைவின் மூலம் பணிவு (நிர்மாணதா) என்ற குணம் மிக எளிதாக வந்துவிடும். மேலும் எங்கே பணிவு அதாவது சரளத்தன்மை என்பது இயற்கையான ரூபத்தில் இருக்கின்றதோ, அங்கே மற்ற குணங்களும் தானாகவே வந்துவிடும். எனவே எப்போதும் இந்த நினைவு ரூபத்தில் நிலைத்து நின்று பின்னர் ஒவ்வொரு சங்கல்பம் அல்லது செயலைச் செய்யுங்கள். அப்போது எதிர்கொள்ள வரும் சிறிய விஷயங்கள் அனைத்தும், ஒரு பெரியவர் முன்னால் சிறிய குழந்தைகள் விளையாடும் விளையாட்டைப் போலத் தோன்றும். அது உங்கள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.