28-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அனைவருக்கும்
இப்போது மீண்டும் உலகத்தில் சாந்தி ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது, பாபா வந்துள்ளார், ஓர் ஆதி சநாதன தேவி-தேவதா
தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக என்ற இந்த மகிழ்ச்சி தரும்
செய்தியைக் கூறுங்கள்
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு
அடிக்கடி தந்தையின் நினைவில் இருப்பதற்கான சமிக்ஞை ஏன்
தரப்படுகின்றது?
பதில்:
ஏனென்றால் சதா ஆரோக்கியமாகவும்
மற்றும் சதா தூய்மையாகவும் ஆவதற்காக நினைவு. அவசியம். அதனால்
எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போது நினைவில் அமருங்கள்.
அதிகாலையில் குளியல் முதலியவற்றை முடித்துப் பிறகு தனிமையில்
நடைப் பயிற்சியில் வாருங்கள், அல்லது அமர்ந்து கொள்ளுங்கள்.
இங்கோ (மதுபனில்) வருமானத்துக்கு மேல் வருமானம். நினைவின் மூலம்
தான் உலகத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள்.
ஓம் சாந்தி.
இனிமையான குழந்தைகள் அறிவார்கள், இச்சமயம் அனைவரும் உலகத்தில்
சாந்தி வேண்டும் என விரும்புகின்றனர். இந்தக் குரல் கேட்டுக்
கொண்டே இருக்கிறது-உலகத்தில் சாந்தி எப்படி ஏற்படும்? ஆனால்
உலகத்தில் சாந்தி எப்போது இருந்தது, அதை மீண்டும் இப்போது ஏன்
விரும்புகின்றனர்? - இது யாருக்கும் தெரியாது. குழந்தைகள்
நீங்கள் தான் அறிவீர்கள், உலகத்தில் சாந்தி இந்த
லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் நடந்த போது தான் இருந்தது. இது
வரையிலும் கூட லட்சுமி-நாராயணரின் கோவில்களைக் கட்டிக் கொண்டே
இருக்கின்றனர். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இதைச்
சொல்லலாம்-உலகத்தில் சாந்தி 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது,
இப்போது மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. யார் ஸ்தாபனை
செய்கிறார்? இதை மனிதர்கள் அறிந்து கொள்ளவில்லை. குழந்தைகள்
உங்களுக்கு பாபா புரிய வைத்துள்ளார். நீங்கள் யாருக்கு
வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும். ஆனால் இது வரையிலும் கூட
யாருக்கும் எழுது வதற்கான தைரியம் இல்லை. செய்தித் தாளில்
செய்தி கேட்கவோ படிக்கின்றனர்-அனைவரும் கேட்கின்றனர், உலகத்தில்
சாந்தி வேண்டும் என்று.! யுத்தம் முதலியன நடக்கு மானால்
மனிதர்கள் உலகின் சாந்திக்காக யக்ஞத்தைப் படைப்பார்கள். எந்த
யக்ஞம்? ருத்ர யக்ஞத்தைப் படைப்பார்கள். இப்போது குழந்தைகள்
அறிவார்கள், யாரை ருத்ர சிவா என கூறுகின்றனரோ, அந்தத் தந்தை
ஞான யக்ஞத்தைப் படைத்துள்ளார். உலகத்தில் சாந்தி இப்போது
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சத்யுக புது உலகில் சாந்தி
இருந்தது, அங்கே நிச்சயமாக இராஜ்யம் செய்பவர்களும் இருப்பார்கள்.
நிராகாரி உலகத்தில் சாந்தி வேண்டும் எனச் சொல்ல மாட்டார்கள்.
அங்கே இருப்பதே சாந்தி தான். உலகம் என்பது மனிதர்கள்
வாழக்கூடியது. நிராகாரி உலகத்தை உலகம் எனச் சொல்ல மாட்டார்கள்.
அது சாந்திதாமம். பாபா அடிக்கடி புரிய வைத்துக் கொண்டே
இருக்கிறார். பிறகும் சிலர் மறந்து விடுகின்றனர். ஒரு சிலருடைய
புத்தியில் உள்ளது, அவர்கள் புரிய வைக்க முடியும். உலகத்தில்
சாந்தி எப்படி இருந்தது? இப்போது மீண்டும் எப்படி ஸ்தாபனை ஆகிக்
கொண்டுள்ளது? - இதை யாருக்காவது புரிய வைப்பது மிகவும் சுலபம்.
பாரதத்தில் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் இராஜ்யம் இருந்த
போது ஒரே ஒரு தர்மம் இருந்தது. உலகத்தில் சாந்தி இருந்தது. இது
மிகவும் சுலபமாகப் புரிய வைப்பதற்கான மற்றும் எழுதுவதற்கான
விஷயமாகும். பெரிய-பெரிய கோவில்கள் கட்டுபவர்களுக்கும் கூட
நீங்கள் எழுத முடியும் - உலகத்தில் சாந்தி இன்றிலிருந்து 5000
ஆண்டுகளுக்கு முன் இருந்தது. அப்போது இவர் களுடைய இராஜ்யம்
இருந்தது. அவர்களுக்குத் தான் நீங்கள் கோவில் கட்டுகிறீர்கள்.
பாரதத்தில் தான் இவர்களுடைய இராஜ்யம் இருந்தது. வேறு எந்த
மதமும் இருந்ததில்லை. இதுவோ சகஜமான மற்றும் அறிவார்ந்த
விஷயமாகும். டிராமா வின் அனுசாரம் இன்னும் போகப் போக
அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் இந்த மகிழ்ச்சி
தரும் விஷயத்தை அனைவருக்கும் சொல்ல முடியும். அழகான கார்டில்
அச்சடித்து வெளியிடவும் முடியும். உலகத்தில் சாந்தி இன்றி
லிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது - புது உலகம், புது
பாரதம் இருந்த போது லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது.
இப்போது மீண்டும் உலகத்தில் சாந்தி ஸ்தாபனை ஆகிக் கொண்டி
ருக்கிறது. இந்த விஷயங்களைச் சிந்தனை செய்வதன் மூலம் கூடக்
குழந்தைகள் உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். நீங்கள்
அறிவீர்கள், பாபாவை நினைவு செய்வதன் மூலம் தான் நாம் உலகத்தின்
எஜமானர் ஆவோம். அனைத்தும் குழந்தைகளாகிய உங்கள்
புருஷார்த்தத்தின் ஆதாரத்தில் தான் உள்ளது. பாபா புரிய
வைத்துள்ளார், நேரம் கிடைத்த போதெல்லாம் பாபாவின் நினைவில்
இருங்கள். அதிகாலையில் குளித்த பின் தனிமையில் நடந்து போய்
வாருங்கள் அல்லது ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இங்கோ
வருமானத்திற்கு மேல் வருமானம் சம்பாதிக்க வேண்டும். சதா
ஆரோக்கியமாக, சதா தூய்மையாக ஆவதற்காகத் தான் நினைவு. இங்கே
சந்நியாசிகள் பவித்திரமாக இருக்கலாம். ஆனாலும் நிச்சயமாக
அவர்களும் நோய்வாய்ப் படுகின்றனர். இந்த உலகமே நோய்களின் உலகம்.
அந்த உலகம் (சத்யுகம்) நோயற்ற உலகம். இதையும் நீங்கள்
அறிவீர்கள். சொர்க்கத்தில் அனைவரும் நோயின்றி இருப்பார்கள்
என்பது உலகத்தில் யாருக்குத் தெரியும்? சொர்க்கம் எனச்
சொல்லப்படுவது எது என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் இப்போது
அறிந்து கொண்டிருக்கிறீர்கள். பாபா சொல்கிறார் - யார்
சந்தித்தாலும் அவர்களுக்கு நீங்கள் புரிய வைக்க முடியும்.
யாராவது தங்களை ராஜா-ராணி எனச் சொல்லிக் கொள்கின்றனர் என
வைத்துக் கொள்வோம். இப்போது ராஜா- ராணியோ யாரும் கிடையாது.
சொல்லுங்கள், நீங்கள் இப்போது ராஜா-ராணி கிடையாது. இதை
புத்தியிலிருந்தே வெளியேற்ற வேண்டும். மகாராஜா-மகாராணி
ஸ்ரீலட்சுமி-நாராயணரின் ராஜதானியோ இப்போது ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. ஆக, நிச்சயமாக இங்கே எந்த ஒரு ராஜா-ராணியும்
இருக்க முடியாது. நாம் ராஜா- ராணி என்பதையும் மறந்து விடுங்கள்.
சாதாரண மனிதர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள். இவர்களிடம் கூட
பணம், தங்கம் முதலியன இருக்கவோ செய்கின்றன இல்லையா? இப்போது
விதிமுறைகள் உருவாகிக் கொண்டுள்ளன, இவையனைத்தையும் அரசாங்கம்
எடுத்துக் கொள்ளும். பிறகு சாதாரண மனிதர்கள் போல் ஆகி
விடுவார்கள். இந்த யுக்தி களையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
பாடலும் உள்ளது இல்லையா - சிலர் சேர்த்து வைத்த செல்வம் மண்ணோடு
மண்ணாகி விடும், சிலருடையதை அரசு அபகரித்துக் கொள்ளும்.......
இப்போது ராஜா என்று யாரும் சாப்பிடுவது இல்லை. ராஜாக்களோ
கிடையாது. பிரஜைகளே பிரஜைகளுடையதைச் சாப்பிட்டுக்
கொண்டிருக்கின்றனர். இப்போதைய இராஜ்யம் மிகவும் அதிசயமானது.
எப்போது முற்றிலும் ராஜாக்களின் பெயர் நீங்கி விடுகின்றதோ,
அப்போது மீண்டும் ராஜதானி ஸ்தாபனை ஆகின்றது. இப்போது நீங்கள்
அறிவீர்கள் - எங்கே உலகத்தில் சாந்தி நிறைந் திருக்குமோ, அங்கே
நாம் சென்று கொண்டிருக்கிறோம். அதுவே சுகமான உலகம், சதோபிரதான
உலகம். நாம் அங்கே செல்வதற்காகப் புருஷார்த்தம் செய்து
கொண்டிருக்கிறோம். பெண் குழந்தைகள் எழுச்சியுடன் (அத்தாரிட்டியுடன்)
அமர்ந்து புரிய வைக்க வேண்டும். வெறுமனே வெளிப்புற,
செயற்கையானதாக எழுச்சியாக இருக்கக் கூடாது. இப்போதோ
செயற்கையானவை அதிகமாக வெளியாகியுள்ளன இல்லையா? இங்கோ பக்கா
பிரம்மாகுமார்-குமாரிகள் வேண்டும்.
பிராமணர்களாகிய நீங்கள் பிரம்மா பாபாவுடன் கூடவே உலகத்தில்
சாந்தியை ஸ்தாபனை செய்கிற காரியத்தைச் செய்து
கொண்டிருக்கிறீர்கள். இதுபோல் சாந்தியை ஸ்தாபனை செய்கின்ற
குழந்தைகள் மிகவும் சாந்தமானவர்களாகவும் இனிமையாகவும் இருக்க
வேண்டும். ஏனென்றால், அறிந்திருக்கிறீர்கள் - நாம் உலகத்தில்
சாந்தியை ஸ்தாபனை செய்வதற்கு நிமித்தமாகி யிருக்கிறோம். ஆகவே
நமக்குள் மிகுந்த சாந்தி இருக்க வேண்டும். உரையாடுவதும் மிக
மெது-மெதுவாக மிகவும் ராயல்டியுடன் செய்ய வேண்டும். நீங்கள்
முற்றிலும் குப்தமாக இருக்கிறீர்கள். உங்கள் புத்தியில் அழியாத
ஞான ரத்தினங்களின் கஜானா நிரம்பியுள்ளது. பாபாவின் வாரிசு
இல்லையா நீங்கள்? பாபாவிடம் எவ்வளவு கஜானா உள்ளதோ, நீங்களும்
முழுமையாக நிரப்பிக் கொள்ள வேண்டும். ஆஸ்தி முழுவதும்
உங்களுடையது. ஆனால் அந்த தைரியம் இல்லை என்றால் அதைப் பெற்றுக்
கொள்ள முடியாது. பெற்றுக் கொள்பவர் தான் உயர்ந்த பதவி பெறுவார்.
யாருக்கும் புரிய வைப்பதற்கு மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும்.
நாம் பாரதத்தை மீண்டும் சொர்க்கமாக ஆக்க வேண்டும். தொழில்
முதலியவற்றைச் செய்து கொண்டே அதோடு இந்தச் சேவையையும் செய்ய
வேண்டும். அதனால் பாபா விரைவாக, வேகமாக செய்யச் சொல்கிறார்.
பிறகும் கூட டிராமா அனுசாரம் தான் நடைபெறுகின்றது. ஒவ்வொன்றும்
தன்னுடைய நேரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளையும் புருஷார்த்தத்தைச் செய்ய வைத்துக் கொண்டி
ருக்கிறார். குழந்தைகளுக்கு நிச்சயம் உள்ளது, இப்போது கொஞ்சம்
சமயம் மட்டுமே மிஞ்சியுள்ளது என்று. இது நமது கடைசி பிறவியாகும்.
பிறகு நாம் சொர்க்கத்தில் இருப்போம். இது துக்கதாமம், பிறகு
சுகதாமம் செல்வோம். தயாராவதற்கு நேரமோ பிடிக்கிறது இல்லையா?
இந்த விநாசம் சிறியது கிடையாது. எப்படி புது வீடு உருவாகிறது
என்றால் பிறகு புது வீட்டின் நினைவு தான் வரும். அது
எல்லைக்குட் பட்ட விஷயம். அதில் உறவினர் முதலானோர் மாறி
விடுவதில்லை. இதுவோ பழைய உலகமே மாற வேண்டும். பிறகு யார்
நன்றாகப் படிக் கின்றனரோ, அவர்கள் ராஜகுலத்தில் வருவார்கள்.
இல்லையென்றால் பிரஜைகளில் சென்று விடுவார்கள். குழந்தைகளுக்கு
மிகுந்த குஷி இருக்க வேண்டும். பாபா புரிய வைத்துள்ளார், 50-60
பிறவிகள் நீங்கள் சுகம் பெறுகிறீர்கள். துவாபர யுகத்திலும் கூட
உங்களிடம் நிறைய செல்வம் உள்ளது. துக்கமோ பின்னால் வருகின்றது.
ராஜாக்கள் எப்போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனரோ,
பிரிந்து விடு கின்றனரோ, அப்போது துக்கம் ஆரம்பமாகின்றது.
முதலிலோ தானியங்கள் முதலியனவும் மிகவும் மலிவாக இருக்கும்.
பஞ்சம் முதலியனவும் பின்னால் தான் ஏற்படுகின்றன. உங்களிடம்
மிகுந்த செல்வம் இருக்கும். சதோபிரதானத்திலிருந்து தமோபிர
தானமாக மெது-மெதுவாக வருகிறீர்கள். ஆக, குழந்தைகளாகிய
உங்களுக்கு உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். தனக்கே
குஷி இருக்காது, சாந்தி இருக்காது என்றால் அவர்கள் உலகத் தில்
சாந்தியை எப்படி ஸ்தாபனை செய்வார்கள்? அநேகருடைய புத்தியில்
அசாந்தி உள்ளது. பாபா வருவதே சாந்திக்கான வரதானத்தைக்
கொடுப்பதற்காக. அவர் சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால்,
தமோபிரதானமாக ஆன காரணத்தால் அசாந்தியாக ஆகிவிட்ட ஆத்மா
தந்தையின் நினைவினால் சதோபிர தானமாக, சாந்தமாக ஆகி விடும்.
ஆனால் குழந்தைகளிட மிருந்து நினைவின் முயற்சி சென்று சேர்வதே
இல்லை. நினைவில் இல்லாத காரணத்தால் தான் மீண்டும் மாயாவின்
புயல் வருகின்றது. நினைவில் இருந்து முழுத் தூய்மையாக ஆகவில்லை
என்றால், தண்டனை அடைய வேண்டியிருக்கும். பதவியும் தாழ்ந்ததாக
ஆகிவிடும். சொர்க்கத் திற்கோ போகத் தானே போகிறோம் என்று
நினைத்துவிடக் கூடாது. அட, அடி வாங்கிக் கொண்டு ஒன்றுக்கும்
உதவாத சுகம் பெறுவது நன்றாக இருக்கிறதா என்ன? மனிதர்கள்
உயர்ந்த பதவி பெறுவதற்காக எவ்வளவு முயற்சி செய்கின்றனர்! எது
கிடைக்கிறதோ, அது நல்லது என்று இருக்கக் கூடாது. முயற்சி
செய்யாதவர் என்று யாரும் இருக்க மாட்டார்கள். பிச்சை எடுக்கும்
பிச்சைக்காரர்களும் கூட தங்களிடம் பணம் சேர்த்து வைத்துள்ளனர்.
பணத்துக்கான பசி அனை வருக்குமே உள்ளது. குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், நாம் பாபாவிடமிருந்து அளவற்ற செல்வம் பெறுகிறோம்.
புருஷார்த்தம் குறைவாகச் செய்வீர்களானால் செல்வமும் குறைவாகக்
கிடைக்கும். பாபா செல்வத்தைக் கொடுக்கிறார் இல்லையா? சொல்லவும்
செய்கிறார் - செல்வம் இருக்கு மானால் அமெரிக்கா முதலான
இடங்களில் சுற்றி வாருங்கள். நீங்கள் எவ்வளவு பாபாவை நினைவு
செய்வீர்களோ, மற்றும் சேவை செய்வீர்களோ, அவ்வளவு சுகம்
பெறுவீர்கள். தந்தை ஒவ்வொரு விஷயத்திலும் முயற்சி செய்ய
வைக்கிறார், உயர்ந்தவராக ஆக்குகிறார். குழந்தைகள் நமது
குலத்தின் பெயரை மேன்மையடையச் செய்வார்கள் எனப்
புரிந்திருக்கிறார். குழந்தை களாகிய நீங்களும் கூட ஈஸ்வரிய
குலத்தின் மற்றும் பாபாவின் பெயரை புகழ் பெறச்செய்ய வேண்டும்.
இவர் சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்தியமான குரு
ஆகிறார். உயர்ந்த வரிலும் உயர்ந்த தந்தை, உண்மையான
சத்குருவாகவும் இருக்கிறார். இதுவும் புரிய வைத்துள்ளார், குரு
ஒருவர் தான், வேறு யாரும் கிடையாது. அனைவருக்கும் சத்கதி
அளிப்பவர் ஒருவர். இதையும் நீங்கள் அறிவீர்கள். இப்போது நீங்கள்
பாரஸ் (தங்க புத்தி) புத்தி உள்ளவர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். பாரஸ்புரியின் பாரஸ்நாத் ராஜா-ராணி
ஆகிறீர்கள். எவ்வளவு சுலபமான விஷயம்! பாரதம் பொன்யுகமாக
இருந்தது. உலகத்தில் சாந்தி எப்படி இருந்தது-இதை நீங்கள் இந்த
லட்சுமி-நாராயணரின் சித்திரத்தை வைத்துப் புரிய வைக்க முடியும்.
சொர்க்கத்தில் சாந்தி இருந்தது. இது நரகம். இதில் அசாந்தி
உள்ளது. சொர்க்கத்தில் இந்த லட்சுமி-நாராயணர் வசிக்கின்றனர்
இல்லையா? கிருஷ்ணரை லார்டு கிருஷ்ணா என்றும் சொல்கின்றனர்.
கிருஷ்ண பகவான் என்றும் சொல்கின்றனர். இப்போது லார்டுகளோ அநேகர்
உள்ளனர். யாரிடம் லேண்ட் (நிலம்) அதிகம் உள்ளதோ அவரை லேண்ட்
லார்டு எனச் சொல்கின்றனர். கிருஷ்ணரோ உலகத் தின் இளவரசராக
இருந்தார். அந்த உலகத்தில் சாந்தி இருந்தது. இதுவும் யாருக்கும்
தெரியாது - ராதை-கிருஷ்ணர் தான் லட்சுமி- நாராயணராக ஆகின்றனர்.
உங்களைப் பற்றி மக்கள் எவ்வளவு விஷயங்களை உருவாக்கிச்
சொல்கின்றனர்! தொந்தரவுகளை ஏற்படுத்து கின்றனர். இவர்கள்
சகோதர-சகோதரி ஆக்குகின்றனர் என்று புகார் சொல்கின்றனர். புரிய
வைக்கப் படுகின்றது- பிரஜாபிதா பிரம்மாவின் முகவம்சாவளி
பிராமணர்களுக்காகத் தான் பாடப் படுகின்றது , பிராமண் தேவதாய
நமஹ! என்று. பிராமணர்களும் அவர்களுக்கு நமஸ்காரம் செய்கின்றனர்.
ஏனென்றால் அவர்கள் உண்மையான சகோதர-சகோதரிகள். பவித்திரமாக
இருக்கின்றனர். ஆக, பவித்திரமானவர்களுக்கு ஏன் கௌரவம் தர
மாட்டார்கள்? கன்யா பவித்திர மாக இருப்பதால் அவர்களுடைய கூட
காலில் கூட விழுந்து வணங்குகின்றனர். வெளியிலிருந்து யாராவது
பார்க்க வந்தாலும் அவர்களும் வணங்குவார்கள். இச்சமயம்
கன்யாவுக்கு இவ்வளவு மரியாதை ஏன் தரப்படுகிறது? ஏனென்றால்
நீங்கள் பிரம்மாகுமார்-குமாரிகள் இல்லையா? கன்யாக்கள் நீங்கள்
பெரும்பான்மையாக இருக்கிறீர்கள். சிவசக்தி பாண்டவ சேனை எனப்
பாடப் பட்டுள்ளது. இதில் ஆண்களும் உள்ளனர். மாதாக்கள்
பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் பாடப்படுகின்றது. ஆக, யார்
நன்றாகப் படிக்கின்றனரோ, அவர்கள் உயர்ந்தவர்களாக ஆகின்றனர்.
இப்போது நீங்கள் முழு உலகத்தின் சரித்திர-பூகோளத்தை அறிந்து
கொண்டு விட்டீர்கள். சக்கரத்தைப் பற்றிப் புரிய வைப்பதும்
மிகவும் சுலபம். பாரதம் பாரஸ் (தங்கம்) புரியாக இருந்தது.
இப்போது பத்தர் (கல்) புரி. ஆக, அனைவரும் பத்தர்நாத் (கல்போன்று)
ஆகின்றனர் இல்லையா? குழந்தைகள் நீங்கள் இந்த 84 பிறவிச்
சக்கரத்தைப் பற்றியும் அறிந்திருக்கிறீர்கள். இப்போது
வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால், பாபாவையும் நினைவு செய்ய
வேண்டும். இதன் மூலம் பாவங்கள் நீங்கும். ஆனால் குழந்தைகளிடம்
நினைவின் முயற்சி இருப்பதில்லை. ஏனென்றால் கவனக்குறைவாக உள்ளனர்.
அதிகாலையில் எழுவதில்லை. எழுந்திருக்கின்றனர் என்றாலும் அந்த
மஜா வருவதில்லை. உறக்கம் வரத் தொடங்குகிறது என்றால் தூங்கி
விடுகின்றனர். நம்பிக்கை இழந்தவராகி விடுகின்றனர். பாபா
சொல்கிறார் - குழந்தைகளே, இது யுத்த மைதானம் இல்லையா? இதில்
நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. நினைவின் பலத்தினால் தான் மாயா
மீது வெற்றி கொள்ள வேண்டும். இதில் முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல-நல்ல குழந்தைகள் கூட யதார்த்த ரீதியில் நினைவு செய்வதில்லை.
சார்ட் வைப்பார்களானால் லாபம்-நஷ்டம் பற்றித் தெரிந்து விடும்.
சார்ட்டோ எனது மன நிலையில் (நடத்தையில்) அற்புதம் செய்துள்ளது
எனச் சொல்கின்றனர். அதுபோல் அபூர்வமாகச் சிலர் தான் சார்ட்
வைக்கின்றனர். இதுவும் பெரிய முயற்சி யாகும். அநேக சென்டர்களில்
பொய்யானவர்களும் போய் அமர்ந்து கொள்கின்றனர். பாவ கர்மங்களைச்
செய்து கொண்டே இருக்கின்றனர். பாபாவின் கட்டளைகளை நடைமுறைப்
படுத்தாததால் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். நிராகார்
சொல்கிறாரா, சாகார் பாபா சொல்கிறாரா என்று குழந்தைகளுக்குத்
தெரிவதில்லை. குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிப் புரிய
வைக்கப்படுகிறது- எப்போதுமே சிவபாபா தான் வழிகாட்டுதல்
தருகிறார் எனப்புரிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் புத்தி
அங்கே ஈடுபட்டிருக்கும். தற்போது நிச்சயதார்த்தம் நடை பெறுகிறது
என்றால் சித்திரத்தைக் (போட்டோ) காட்டுகின்றனர், செய்தித்
தாள்களிலும் போடு கின்றனர் - இவர்களுக்காக இப்படி-இப்படி நல்ல
வீட்டிலுள்ளவர்களாக வேண்டும் என்று. உலகத்தின் நிலைமை என்னவாக
ஆகி விட்டது! என்ன ஆகப்போகிறது! குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள்,
அநேக விதமான வழிமுறைகள் உள்ளன. பிராமணர்களாகிய உங்களுடையது ஒரே
வழி முறை. உலகத்தில் சாந்தி ஸ்தாபனை செய்வதற்கான வழிமுறை.
நீங்கள் ஸ்ரீமத்படி உலகத்தில் சாந்தி ஸ்தாபனை செய்கிறீர்கள்
என்றால், குழந்தைகளும் சாந்தியில் இருக்க வேண்டும். யார்
சொல்படி செய்கிறார்களோ, அவர்கள் அடைவார்கள். இல்லையென்றால்
மிகவும் நஷ்டமாகி விடும். பல பிறவிகளுக்கு நஷ்டம். குழந்தை
களுக்குச் சொல்கிறார் - தன்னுடைய நஷ்டம் மற்றும் லாபத்தைப்
பாருங்கள். சார்ட்டைப் பாருங்கள், நாம் யாருக்கும் துக்கமோ
கொடுக்காமல் இருந்தோமா? பாபா சொல்கிறார், உங்களுடைய இந்தச்
சமயம், ஒவ்வொரு விநாடியும் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.
தண்டனை அடைந்து குறைவான பதவி பெறுவது என்ன பெரிய விஷயம்?
நீங்களோ, பெரிய தனவான் ஆக விரும்புகிறீர்கள் இல்லையா? முதன் -முதலில்
யார் பூஜைக்குரியவர் களோ, அவர்கள் தான் பூஜாரி ஆவார்கள்.
இவ்வளவு செல்வம் இருக்கும், சோமநாதர் ஆலயத்தைக் கட்ட வேண்டும்,
அப்போது தான் பூஜை செய்யலாம். இதுவும் கணக்கு தான்.
குழந்தைகளுக்குப் பிறகும் கூட புரிய வைக்கிறார், சார்ட்
வைப்பீர்களானால் மிகுந்த நன்மை ஏற்படும். குறித்து வைக்க
வேண்டும். அனைவருக்கும் செய்தி கொடுத்துக் கொண்டே செல்லுங்கள்.
சும்மா அமர்ந்திருக்காதீர்கள். இரயிலிலும் கூட நீங்கள் புரிய
வைத்துப் புத்தகம் கொடுங்கள். சொல்லுங்கள், இது கோடி
பெறுமானமுள்ள ஆஸ்தியாகும். லட்சுமி-நாராயணரின் இராஜ்யம்
பாரதத்தில் எப்போது இருந்ததோ, அப்போது உலகத்தில் சாந்தி
இருந்தது. இப்போது பாபா மீண்டும் அந்த ராஜதானியை ஸ்தாபனை
செய்வதற்காக வந்துள்ளார். நீங்கள் பாபாவை நினைவு
செய்வீர்களானால் விகாமங்கள் விநாசமாகும். உலகத்தில் சாந்தி
ஏற்படும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நாம் உலகத்தில் சாந்தி ஸ்தாபனை செய்வதற்கு நிமித்தமாக உள்ள
பிராமணர்கள். நாம் மிக-மிக சாந்தமாக இருக்க வேண்டும்.
உரையாடல்கள் மிகவும் மெதுவாக அல்லது ராயல்டியுடன் செய்ய
வேண்டும்.
2) கவனக்குறைவை விட்டுவிட்டு நினைவின் முயற்சி செய்ய வேண்டும்.
ஒருபோதும் நம்பிக்கையற்றவர்களாக ஆகக் கூடாது.
வரதானம்:
சோதனையைக் கண்டு பயப்படுவதற்கு பதிலாக முற்றுப்புள்ளி வைத்து
விட்டு முழுமையாக வெற்றி பெறும் வெற்றி மூர்த்தி ஆகுக
ஏதேனும் சோதனை வரும்பொழுது பயப்படாதீர்கள். இது ஏன் வந்தது?
என்று கேள்வியை எழுப்பாதீர்கள். இவ்வாறு யோசித்து நேரத்தை
வீணாக்காதீர்கள். கேள்வியை முடித்து முற்றுப் புள்ளி வையுங்கள்,
அப்போதே வகுப்பு மாறுவீர்கள். அதாவது பேப்பரில் வெற்றி (சோதனையில்)
அடைவீர்கள். ஏனெனில் முற்றுப்புள்ளி என்பது பிந்து நிலை.
பார்த்தும் பாராது கேட்டும் கேளாது இருங்கள். தந்தை சொல்வதையே
கேளுங்கள், தந்தை கொடுத்ததையே பாருங்கள். அப்போதே முழு வெற்றி
அடைவீர்கள். வெற்றியின் அடையாளம் எப்போதும் ஏறும் கலையை அனுபவம்
செய்து வெற்றி நட்சத்திரம் ஆவீர்கள்.
சுலோகன்:
சுய முன்னேற்றம் அடைய கேள்வி, திருத்துதல், ஆச்சரியம்
இவையனைத்தையும் தியாகம் செய்து தனது தொடர்பினை சரிவர வையுங்கள்.
அவ்யக்த இஷாரா: எண்ணங்களின் சக்தியை சேமியுங்கள், உயர்ந்த
சேவைக்கு நிமித்தமாகுங்கள்
இறுதி நேரத்தில் தனது பாதுகாப்பிற்காக மனோசக்தியே சாதனமாகும்.
மனோ சக்தி மூலமாகவேப தனது இறுதி நேரத்தை நலமாக்க நிமித்தமாவோம்.
அந்த நேரத்தில் மனோ சக்தி எனும் உயர்ந்த சங்கல்ப சக்தி
ஒருவருடன் தெளிவாக இணைந்திருக்க வேண்டும். எல்லையில்லா
சேவைக்காக, சுய பாதுகாப்பிற்காக மனோ சக்தியும் பயமின்மையையும்
சேமியுங்கள்.