28-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! இப்போது உங்களுடைய வழக்கு விசாரிக்கப் பட்டிருக்கிறது. கடைசியில் அந்த நாள் வந்து விட்டது. நீங்கள் இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த புருஷராக மாறிக் கொண்டிருக்கிறீர்கள்.

கேள்வி:
வெற்றி மற்றும் தோல்வியுடன் தொடர்புடைய எந்த ஒரு கீழான செயல் மனிதர்களுக்கு துக்கம் அளிக்கிறது?

பதில்:
சூதாட்டம். பல மனிதர்களுக்கு சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருக்கிறது. இது கீழான செயலாகும். ஏனென்றால் தோல்வி அடைவதால் துக்கம், வெற்றி அடைவதால் குஷி ஏற்படும். குழந்தைகளே, தெய்வீக கர்மங்களை செய்யுங்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா கட்டளை இடுகிறார். நேரம் வீணாகும்படி எந்த ஒரு வேலையும் செய்யக் கூடாது. எப்போதும் எல்லையற்ற வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள்.

பாடல்:
கடைசியில் அந்த நாள் வந்தது இன்று.....

ஓம் சாந்தி.
டபுள் ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் ஓம் சாந்தி என்று சொல்லலாம். ஆனால் இங்கே டபுள் ஓம் சாந்தி. யாரை தந்தை (சிவபாபா) என்கிறோமோ அவர் சுப்ரீம் ஆத்மா கூறுகிறார் ஒம்சாந்தி, இரண்டாவதாக தாதா (பிரம்மா பாபா) சொல்கிறார் ஒம்சாந்தி.. குழந்தைகளும் கூறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்களும், நாங்களும் ஆத்மா சாந்த சொரூபம் என்கிறீர்கள். சாந்தி தேசத்தில் வசிக்கக் கூடியவர்கள். இங்கே ஸ்தூல தேசத்தில் நடிப்பதற்காக வந்துள்ளீர்கள். இந்த விஷயங்களை ஆத்மாக்கள் மறந்து விட்டனர். பிறகு கடைசியில் விசாரணை நடக்கும் அந்த நாள் வந்து விட்டது. என்ன விசாரணை? பாபா துக்கத்தை நீக்கி சுகம் கொடு என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் சுகம் அமைதியை தான் விரும்புகிறார்கள். பாபா ஏழை பங்காளன் ஆவார். இச்சமயம் பாரதம் முற்றிலும் ஏழையாக இருக்கிறது. நாம் முற்றிலும் பணக்காரர்களாக இருந்தோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். இது கூட பிராமண குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் தெரியும். மற்ற அனைவரும் காட்டில் இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குக் கூட வரிசைக்கிரமத்தில் தான் நிச்சயம் இருக்கிறது. இவர் தான் ஸ்ரீஸ்ரீ. அவருடைய வழியும் உயர்ந்த திலும் உயர்ந்தது என உங்களுக்கு தெரியும் பகவானின் மகா வாக்கியம் அல்லவா!. மனிதர்களோ ராம் ராம் என இசைக் கருவி வாசிப்பது போல சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ராமரோ திரேதாவின் ராஜாவாக இருந்தார். அவருக்கு நிறைய மகிமைகள் இருந்தது. ஆனால் 14 கலைகள் நிறைந்தவர், இரண்டு கலைகள் குறைவு. அவருக்காகத் தான் ராம் ராஜா, ராம் பிரஜா..... என பாடுகிறார்கள். நீங்கள் பணக்காரர்களாக மாறுகிறீர்கள் அல்லவா? இராமரை விட பெரிய பணக்காரர் லஷ்மி நாராயணன் ஆவார். இராமர் ராஜா, இராமர் பிரஜா...... ராஜாவிற்கு வள்ளல் என கூறுகிறார்கள் அல்லவா? அன்ன தாதா எனவும் கூறுகிறார்கள். தந்தையும் வள்ளலாக இருக்கிறார். அனைத்தையும் கொடுக்கிறார். குழந்தைகளை உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகின்றார். அங்கே கிடைக்காத பொருள் என்று எதுவும் இல்லை. அதனால் பாவச் செயல் ஏற்படுவதில்லை, அங்கே பாவம் என்ற பெயரே இருக்காது. அரைக் கல்பம் தெய்வீக இôôஜ்யம், பிறகு அரைக் கல்பம் அசுர இராஜ்யம் ஆகும். அரசு இராஜ்யம் என்றால் அதில் தேக உணர்வு, 5 விகாரங்கள் நிறைந்திருக்கிறது.

இப்போது நீங்கள் படகோட்டி அதாவது தோட்டக்காரரிடம் வந்துள்ளீர்கள். நாம் நேரடியாக அருகில் அமர்ந்திருக்கிறோம் என உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் கூட இருந்துக் கொண்டே மறந்து போகிறீர்கள். பகவான் கொடுக்கும் கட்டளையை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா. முதலில் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக மாறுவதற்காக அவர் ஸ்ரீமத் கொடுக்கிறார். எனவே அந்த வழிப்படி நடக்க வேண்டும் அல்லவா. முதன் முதலில் ஆத்ம அபிமானி ஆகுங்கள் என வழி கூறுகிறார். பாபா ஆத்மாக்களாகிய நம்மை படிக்க வைக்கிறார். இதை உறுதியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வார்த்தைகள் நினைவிருந்தால் படகு கரையேறி விடும். நீங்கள் தான் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக் கிறது. நீங்கள் தான் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாகிறீர்கள். இந்த உலகம் பதீதமான துக்கமுடையது ஆகும். சொர்க்கத்திற்கு சுகதாமம் என கூறப்படுகிறது. சிவபாபா பகவான் நம்மை படிக்க வைக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். நாம் அவருடைய மாணவர்கள். அவர் தந்தையாகவும் இருக்கிறார். ஆசிரியராகவும் இருக்கிறார். எனவே நன்கு படிக்க வேண்டும். தெய்வீக கர்மங்களையும் செய்ய வேண்டும். எந்த ஒரு கீழான செயல்களையும் செய்யக் கூடாது. சூதாட்டம் கூட கீழான கர்மத்தில் வருகிறது. இதுவும் துக்கம் அளிக்கிறது. தோல்வி அடைந்தால் துக்கம் ஏற்படும். வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி ஏற்படும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் மாயாவிடம் எல்லையற்ற தோல்வி அடைந்துள்ளீர்கள். இது எல்லையற்ற வெற்றி தோல்வியின் விளையாட்டாகும். 5 விகாரங்கள் என்ற இராவணனனிடம் தோற்பதே தோல்வி. அதன் மீது வெற்றி அடைவதில் வேண்டும். மாயாவிடம் தோற்றால் தோல்வி ஆகும். இப்போது குழந்தை களாகிய நீங்கள் வெற்றி அடைய வேண்டும். இப்போது நீங்கள் கூட சூதாட்டம் போன்ற அனைத் தையும் விட்டு விட வேண்டும். இப்போது எல்லையற்ற வெற்றி அடைய முழு கவனம் கொடுக்க வேண்டும். நேரம் வீணாகும்படி எந்த செயலையும் செய்யக் கூடாது. எல்லையற்ற வெற்றி யடைவதற்காக முயற்சி செய்ய வேண்டும். செய்விக்கக் கூடிய தந்தை சக்திசாலியாக இருக்கிறார். அவரே சர்வ சக்திவான் ஆவார். பாபா மட்டும் சர்வ சக்திவான் அல்ல, இராவணன் கூட சர்வ சக்திவான் என புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அரைக் கல்பம் இராவணனின் இராஜ்யம், அரைக் கல்பம் இராம இராஜ்யம் நடக்கிறது. இப்போது நீங்கள் இராவணனின் மீது வெற்றி அடைகிறீர்கள். இப்போது அந்த எல்லைக்குட்பட்ட விசயங்களை விட்டு விட்டு எல்லையற்றதில் போக வேண்டும். படகோட்டி வந்துள்ளார். கடைசியில் அந்த நாளும் வந்து விட்டது அல்லவா? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையிடம் வழக்கு விசாரிக்கப் படுகிறது. குழந்தைகளே நீங்கள் அரைக் கல்பமாக மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளீர் கள் என பாபா கூறுகிறார். பதீதமாகி உள்ளீர்கள். பாவனமான பாரதம் சிவாலயமாக இருந்தது. நீங்கள் சிவாலயத்தில் இருந்தீர்கள். இப்போது நீங்கள் வைசியால யத்தில் உள்ளீர்கள். நீங்கள் சிவாலயத்தில் இருக்கக் கூடியவர்களை பூஜிக்கிறீர்கள். இங்கே பல தர்மங்களின் எவ்வளவு குழப்பம் இருக்கிறது. இவை அனைத்தையும் நான் அழித்து விடுகிறேன் என பாபா கூறுகின்றார். அனைத்தும் அழிய வேண்டும். மேலும் தர்ம ஸ்தாபகர்கள் அழிக்க மாட்டார்கள். அவர்கள் சத்கதி அளிக்கக் கூடிய குரு கிடையாது. சத்கதி ஞானத்தினால் தான் கிடைக்கிறது. அனைவருக்கும் சத்கதியை அளிக்கும் வள்ளல் ஞானக் கடல் பாபா தான் இந்த வார்த்தைகளை நன்கு குறித்துக் கொள்ளுங்கள். பலர் இங்கே கேட்டு விட்டு வெளியில் சென்றதும் இங்கே கேட்டது இங்கேயே இருந்து விடுகிறது. கர்ப சிறையில் நாங்கள் பாவம் செய்ய மாட்டோம் என்று கூறுகிறார்கள். பிறகு வெளியில் வந்ததும் அவ்வளவு தான், அங்கே சொன்னது அங்கேயே இருந்து விடுகிறது. அது போன்று தான். சிறிது பெரியவர்கள் ஆனதும் பாவம் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். காம விகாரத்தில் ஈடுபடுகிறார்கள். சத்யுகத்திலோ கர்பம் கூட மாளிகையாக இருக்கிறது. எனவே கடைசியில் அந்த நாள் இன்று வந்து விட்டது என பாபா புரிய வைக்கின்றார். அது எந்த நாள் புருஷோத்தம சங்கமயுகம். அதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. நாம் புருஷோத்தமர்களாக மாறிக் கொண்டி ருக்கிறோம் என குழந்தைகள் உணருகிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த புருஷர்களாக நாம் தான் இருந்தோம். சிரேஷ்டத்திலும் சிரேஷ்ட தர்மம் இருந்தது. கர்மமும் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமாக இருந்தது. இராவண இராஜ்யமே இல்லை. கடைசியில் பாபா படிக்க வைப்பதற்காக வரக் கூடிய அந்த நாள் வந்து விட்டது. அவரே பதீத பாவனர். எனவே இப்படிப் பட்ட தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும் அல்லவா? இப்போது கலியுகத்தின் கடைசியாகும். சிறிது நேரமாவது தூய்மையாவதற்கு வேண்டும் அல்லவா? 60 வயதுக்குப் பின் வானபிரஸ்தம் என்று கூறுகிறார்கள். 60 என்றால் ஊன்று கோல் வேண்டும் என்பர். இப்போதோ 80 வயதானலும் விகாரங்களை விடுவதில்லை. நான் இவருடைய வான பிரஸ்த நிலையில் பிரவேசமாகி இவருக்குப் புரிய வைக்கின்றேன் என பாபா கூறுகின்றார். ஆத்மா தான் தூய்மையாகி கடந்து போகிறது. ஆத்மா தான் பறக்கிறது. இப்போது ஆத்மாவின் சிறகுகள் துண்டிக்கப் பட்டிருக்கிறது. பறக்க முடியாது. இராவணன் சிறகுகளைத் துண்டித்து விட்டான். பதீதமாகி விட்டனர். ஒருவர் கூட திரும்பிப் போக முடியாது. முதலில் சுப்ரீம் தந்தை போக வேண்டும். சிவனுடைய ஊர்வலம் என்கிறார்கள் அல்லவா? சங்கரின் ஊர்வலம் என்று கூறுவ தில்லை. பாபா விற்குப் பின்னால் நாம் அனைத்து குழந்தைகளும் செல்வோம். பாபா அழைத்துச் செல்வதற்காக வந்தருக்கிறார். சரீரத்துடன் அழைத்துப் போக மாட்டார் அல்லவா? அனைத்து ஆத்மாக்களும் பதீதமாக இருக்கின்றனர். தூய்மையாகாதவரை திரும்பிப் போக முடியாது. தூய்மை இருந்த போது அமைதி சுகம் இருந்தது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினராகிய நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். இப்போது மற்ற அனைத்து தர்மத்தினரும் இருக்கிறார்கள். தேவதா தர்மம் இல்லை. இதற்கு கல்ப விருட்சம் என்று கூறப்படுகிறது. ஆல மரத்தோடு இது ஒப்பிடப் படுகிறது. வேர் பகுதி இல்லை. மற்ற மரம் முழுவதும் நிற்கிறது. அது போல இந்த தேவி தேவதா தர்மத்தின் அடித்தளம் இல்லை. மற்ற முழு மரமும் இருக்கிறது. நிச்சயம் இருந்தது. ஆனால் மறைந்து போய் விட்டது. மீண்டும் திரும்ப வரும். நான் ஒரு தர்மத்தை உருவாக்குவதற்காக மீண்டும் வருகிறேன் என பாபா கூறுகிறார். மற்ற அனைத்து தர்மங்களும் அழிந்து போகிறது. இல்லை என்றால் சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுழலும். உலகத்தின் வரலாறு புவியியல் திரும்ப நடக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது பழைய உலகமாக இருக்கிறது. பிறகு புது உலகம் திரும்ப வரும். இந்த பழைய உலகம் மாறி புது உலகம் உருவாகும். இதே பாரதம் புதியதிலிருந்து பழையதாகிறது. யமுனை ஆற்றங்கரையில் சொர்க்கம் இருந்தது என கூறுகிறார்கள். நீங்கள் காமச் சிதையில் அமர்ந்து சுடுகாட்டில் வசிப்பவர்களாக மாறியிருக்கிறீர்கள் என பாபா கூறுகிறார். மீண்டும் உங்களை சொர்க்கத்தை சார்ந்தவர்களாக மாற்றுகிறார். ஸ்ரீகிருஷ்ணரை சியாம் சுந்தர் என ஏன் கூறுகிறார்கள்? யாருடைய புத்தியிலும் இல்லை. பெயர் நன்றாக இருக்கிறது அல்லவா. ராதை மற்றும் கிருஷ்ணர். இவர்கள் புது உலகின் இளவரசன் இளவரசி. காமச் சிதையில் அமர்ந்த தால் கலியுகத்தில் இருக்கின்றனர் என பாபா கூறுகிறார். கடலின் குழந்தைகள் காமச்சிதையில் எரிந்து இறந்தனர் என பாடப்பட்டிருக்கிறது. இப்போது அனைவர் மீதும் பாபா ஞான மழை பொழிகிறார். பிறகு அனைவரும் சத்யுகத்திற்குச் சென்று விடுவார்கள். இப்போது சங்கமயுகம் ஆகும். உங்களுக்கு அழிவற்ற ஞான ரத்தினங்களின் தானம் கிடைக்கிறது. இதனால் நீங்கள் பணக்காரர் ஆகிறீர்கள். இந்த ஒவ்வொரு இரத்தினமும் லட்சக் கணக்கான ரூபாய் ஆகும். அவர்களோ சாஸ்திரங்களின் வார்த்தைகளை லட்சக் கணக்கான ரூபாய் என நினைக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த படிப்பினால் பலகோடிகளுக்கு அதிபதி ஆகிறீர்கள். வருமானத் திற்கு மூலதனம் அல்லவா? ஞான ரத்தினங்களை நீங்கள் தாரணை செய்கிறீர்கள். பையை நிரப்புகிறீர்கள். பிறகு அவர்கள் சங்கரரைப் பார்த்து ஓ, பம்பம் மகாதேவ் பையை நிரப்புங்கள் என கூறுகிறார்கள். சங்கர் மீது எவ்வளவு குற்றம் சாட்டுகின்றனர். பிரம்மா மற்றும் விஷ்ணு வினுடைய நடிப்பு இங்கே தான் ! 84 பிறவிகள் விஷ்ணுவிற்கு என்று கூறுவார்கள். லஷ்மி நாராயணனுக்கு என்றும் கூறுவார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் பிரம்மாவிற்கும் என்று கூட கூறுவீர்கள். சரி என்ன?, தவறு என்ன? பிரம்மா மற்றும் விஷ்ணுவின் பாகம் என்ன? என்பதை பாபா புரிய வைக்கிறார். நீங்களே தேவதைகளாக இருந்தீர்கள். சக்கரத்தில சுழன்று பிராமணன் ஆகி இப்போது மீண்டும் தேவதை ஆகிறீர்கள். இங்கே தான் அனைத்து பாகமும் நடிக்கப் படுகிறது. வைகுண்டத்தின் விளையாட்டுகளை பார்க்கிறார்கள். இங்கே வைகுண்டம் கிடையாது. மீரா நடன மாடினார். அது அனைத்தும் காட்சிகள் என்பார்கள். எவ்வளவு அவருக்கு மரியாதை இருக்கிறது. காட்சி கிடைத்தது. கிருஷ்ணரோடு நடனமாடினார். அதனால் என்ன? சொர்க்கத்திற்குப் போக வில்லை அல்லவா? கதி சத்கதி சங்கமத்தில் தான் கிடைக்கிறது. இந்த புருஷோத்தம சங்கம யுகத்தை நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது பாபா மூலமாக நாம் மனிதனிலிருந்து தேவதையாக மாறிக் கொண்டிருக்கிறோம். விராட ரூபத்தின் ஞானம் கூட வேண்டும் அல்லவா? சித்திரத்தை வைக்கிறார்கள். எதையும் புரிந்துக் கொள்வதில்லை. அகாசூரன்-பகாசூரன் என்பது சங்கம யுகத்தின் பெயர்கள் ஆகும். பஸ்மாசூரன் கூட பெயராகும். காமச்சிதையில் அமர்ந்து பஸ்மமாகி விட்டான். நான் அனைவரையும் மீண்டும் ஞானச் சிதையில் அமர வைத்து இப்போது அழைத்துச் செல்கிறேன் என பாபா கூறுகின்றார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். இந்த, சீனர் சகோதரர்கள், இந்த முஸ்லீம் சகோதரர்கள் என்று கூறுகிறார்கள். இப்போது சகோதரர்கள் கூட தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஆத்மாதான் கர்மத்தை செய்கிறது அல்லவா? ஆத்மா சரீரத்தின் மூலமாக சண்டையிடுகிறது. ஆத்மாவில் தான் பாவம் சேர்கிறது. ஆகவே தான் பாவ ஆத்மா என்று கூறப்படுகிறது. பாபா எவ்வளவு அன்போடு புரிய வைக்கின்றார். சிவபாபா மற்றும் பிரம்மா பாபா இருவருக்கும் குழந்தைகளே! குழந்தைகளே ! என்று கூற உரிமை இருக் கிறது. பாபா தாதா மூலமாக ஓ, குழந்தைகளே ! புரிந்துக் கொள்கிறீர்கள் அல்லவா ! ஆத்மாவாகிய நாம் இங்கே வந்து நடிக்கின்றோம் என கூறுகின்றார். பிறகு கடைசியில் பாபா வந்து அனைவரை யும் தூய்மையாக்கி உடன் அழைத்துச் செல்கிறார். தந்தை தான் வந்து ஞானம் அளிக்கிறார். இங்கே தான் வருகிறார். சிவ ஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். சிவ ஜெயந்திக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் தான் பிறகு ஸ்ரீநாராயணன் ஆகிறார். பிறகு சுழற்சியில் வந்து கடைசியில் கருப்பாக (பதீதமாக) ஆகிறார். பிறகு பாபா வந்து வெள்ளையாக மாற்றுகிறார். நீங்கள் பிராமணனிலிருந்து தேவதையாகிறீர்கள். பிறகு படியில் இறங்குவார்கள். இந்த 84 பிறவிகளின் கணக்கு வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. தந்தை தான் வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். கடைசியில் பக்தர்களின் வழக்கு குறித்து கேட்கப் படுகிறது. பாடல் கூட கேட்டீர்கள் அல்லவா? ஓ பகவான் எங்களுக்கு பக்தியின் பலனை வந்து கொடுங்கள் என அழைக்கிறார்கள். பக்தி பலன் கொடுப்பதில்லை, பகவான் தான் பலனை அளிக்கிறார். பக்தர் களை தேவதையாக மாற்றுகிறார். நீங்கள் நிறைய பக்தி செய்துள்ளீர்கள். முதன் முதலில் நீங்கள் தான் சிவனை பக்தி செய்தீர்கள். யார் நன்கு இந்த விஷயங்களைப் புரிந்துக் கொள்கிறார்களோ அவர்கள் நம்முடைய குலத்தவர் என நீங்கள் உணர்வீர்கள். யாருடைய புத்தியில் பதிய வில்லையோ அவர்கள் நிறைய பக்தி செய்யவில்லை. கடைசியில் வந்துள்ளனர் என புரிந்துக் கொள்ளுங்கள். இங்கே கூட முதலில் வர மாட்டார்கள். இந்த கணக்கு இருக்கிறது. யார் நிறைய பக்தி செய்துள்ளனரோ அவர்களுக்கு நிறைய பலன் கிடைக்கும். குறைந்த பக்தி என்றால் குறைந்த பலன் தான். அவர்கள் சொர்க்கத்தின் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் ஆரம்பத்தில் சிவனின் பக்தி குறைவாகத் தான் செய்துள்ளனர். இப்போது உங்களுடைய புத்தி வேலை செய்கிறது. பாபா பல்வேறு வழிமுறைகளை நிறைய புரிய வைக்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒவ்வொரு அழிவற்ற ஞான ரத்தினமும் பலகோடிக்குச் சமமாகும். இதனால் தனது பையை நிரப்பிக் கொண்டு புத்தியில் பதிய வைத்த பிறகு தானம் செய்ய வேண்டும்.

2. ஸ்ரீஸ்ரீ யின் சிரேஷ்டமான வழிப்படி முழுமையாக நடக்க வேண்டும். ஆத்மாவை தூய்மையாக (சதோபிரதானமாக) மாற்றுவதற்காக ஆத்ம அபிமானி ஆவதற்கு முழுமை யான முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
அனைவருக்காகவும் சுப பாவ் (நன்மை பயக்கும் எண்ணங்கள்) மற்றும் சிரேஷ்ட பாவனையை (உயர்ந்த சிந்தனையை) தாரணை செய்யக்கூடிய அன்னபட்சியின் புத்தியை கொண்ட தூய்மையான அன்னபட்சி ஆகுக.

அன்னபட்சியின் புத்தி என்பதன் அர்த்தம் - சதா ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் உயர்ந்த மற்றும் நன்மை பயக்கும் எண்ணங்களை உருவாக்குவது. முதலில் ஒவ்வொரு ஆத்மாவின் மனோ நிலையை புரிந்து கொண்டு பிறகு தாரணை செய்வது. ஒருபோதும் புத்தியில் - எந்த ஒரு ஆத்மா விற்காகவும் அசுபமான (நன்மையற்ற) மற்றும் சாதாரணமான எண்ணங்கள் கூடாது. சதா சுப பாவ் மற்றும் சிரேஷ்ட பாவனையை வைக்கக் கூடியவர்களே தூய்மையான அன்னபட்சி. அவர்கள் எந்த ஒரு ஆத்மாவின் அமங்கலமான விஷயங் களை கேட்டாலும், பார்த்தாலும் கூட அதை நன்மை நிறைந்த உள்ளுணர்வின் மூலம் மாற்றி விடுவார்கள். அவர்களுடைய திருஷ்டி ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் - உயர்ந்ததாக, தூய்மையான அன்பு கொண்டதாக இருக்கும்.

சுலோகன்:
அன்பால் நிரம்பிய அப்படிப்பட்ட கங்கையாக ஆகி விடுங்கள், இதனால் உங்கள் மூலம் அன்பின் கடலாகிய தந்தை தென்படுவார்.

அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

நிறைய பக்த ஆத்மாக்கள் பிரபுவின் அன்பில் ஐக்கியம் ஆக விரும்புகின்றார்கள். மேலும் பலர் ஜோதியிடம் ஐக்கியம் ஆக விரும்புகின்றார்கள். அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு ஒரு நொடியில் தந்தையின் அறிமுகம், தந்தையின் மகிமை மற்றும் பலன்களை சொல்லி சம்மந்தத்தின் லவ்லீன் நிலையை (அன்பில் மூழ்கிய நிலையை) அனுபவம் செய்வியுங்கள். லவ்லீன் ஆனார்கள் எனில் சகஜமாகவே லீன் (ஐக்கியம்) ஆகுவதன் இரகசியத்தையும் கூட புரிந்து கொள்வார்கள்.