29-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இது உங்களது விலைமதிக்க முடியாத பிறப்பாகும், இந்த பிறவியிலேயே நீங்கள் மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காக தூய்மையாவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

கேள்வி:
ஈஸ்வரிய குழந்தை என்று கூறிக் கொள்ளும் குழந்தைகளின் முக்கிய தாரணை என்னவாக இருக்கும்?

பதில்:
அவர்கள் தங்களுக்குள் மிக மிக இனிமையாக (பால் பாயசம் போன்று) இருப்பார்கள். ஒருபொழுதும் உப்பு நீராக இருக்க மாட்டார்கள். தேக அபிமானத்தில் உள்ள மனிதர்கள் தவறாக, தலைகீழாக பேசுவார்கள், சண்டையிட்டுக் கொள்வார்கள். குழந்தைகளாகிய உங்களிடத்தில் அந்த பழக்கம் இருக்க முடியாது. இங்கு நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும், கர்மாதீத நிலை அடைய வேண்டும்.

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளுக்கு முதன் முதலில் கூறுவது - ஆத்ம அபிமானியாக ஆகுங்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். கீதை போன்றவைகளில் என்ன வேண்டு மென்றாலும் கூறப் பட்டிருக்கலாம், ஆனால் அவைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங் கள் ஆகும். நான் ஞானக் கடல் என்று தந்தை கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கூறுகின்றேன். எந்த ஞானம் கூறுகின்றார்? சிருஷ்டியின் அதாவது நாடகத்தின் முதல், இடை, கடையின் ஞானத்தை கூறுகின்றார். இது படிப்பாகும். சரித்திரம், பூகோளம் அல்லவா! பக்தி மார்க்கத்தில் யாரும் சரித்திர, பூகோளம் படிப்பது கிடையாது. பெயரும் பயன்படுத்தமாட்டார்கள். சாது, சந்நியாசிகள் அமர்ந்து சாஸ்திரங்கள் படிக்கின்றனர். இந்த தந்தை எந்த சாஸ்திரங் களையும் படித்து கூறுவது கிடையாது. உங்களை இந்த படிப்பின் மூலம் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆக்குகின்றார். மனிதனிலிருந்து தேவதையாவதற்காகத் தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். அவர்களும் மனிதர்கள் தான், இவர்களும் மனிதர்கள் தான். ஆனால் பதீத பாவனனே வாருங்கள் என்று இவர்கள் தந்தையை அழைக்கின்றனர். தேவதைகள் தூய்மையானவர்கள் என்பதை அறிவீர்கள். மற்ற அனைவரும் அசுத்த மனிதர்கள் ஆவர், அவர்கள் தேவதைகளை நமஸ்கரிக் கின்றனர். அவர்களை பாவனமானவர்கள் என்றும், தன்னை தூய்மையில்லாதவர்களாகவும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் தேவதைகள் எவ்வாறு தூய்மையானவர்களாக ஆனார்கள்? ஆக்கியது யார்? என்பதை எந்த மனிதர்களும் அறிந்து கொள்ளவில்லை. ஆக தந்தை புரிய வைக்கின்றார் - தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்வதில் தான் முயற்சி யிருக்கிறது. தேக அபிமானம் இருக்கக் கூடாது. ஆத்மா அழிவற்றது, சன்ஸ்காரமும் ஆத்மாவில் தான் இருக்கிறது. ஆத்மா தான் நல்ல அல்லது தீய பழக்கங்களை எடுத்துச் செல்கிறது. ஆகையால் இப்பொழுது தந்தை கூறுகின்றார் - ஆத்ம அபிமானிகளாக ஆகுங்கள். தனது ஆத்மாவையும் யாரும் அறியவில்லை. எப்பொழுது இராவண இராஜ்யம் ஆரம்பமானதோ அப்பொழுது இருண்ட மார்க்கம் ஆரம்பமாகி விடுகிறது. தேக அபிமானிகளாக ஆகிவிடுகின்றனர் என்று தந்தை புரிய வைக்கின்றார்.

நீங்கள் இங்கு யாரிடத்தில் வந்திருக்கிறீர்கள். இவரிடம் அல்ல. நான் இவரிடம் பிரவேசம் ஆகியிருக்கிறேன். இவரது பல பிறவிகளின் கடைசியானது இந்த தூய்மையற்ற பிறப்பாகும். பல பிறவிகள் என்றால் என்ன? என்பதையும் கூறியிருக்கின்றார். அரைக்கல்பம் தூய்மையான பிறப்பு, அரைக்கல்பம் அசுத்த பிறப்பாகும். ஆக இவரும் தூய்மையில்லாதவர் ஆகிவிட்டார். பிரம்மா தன்னை தேவதை என்றும், ஈஸ்வரன் என்றும் கூறுவது கிடையாது. பிரஜாபிதா பிரம்மா தேவதை யாக இருந்தார் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். அதனால் தான் பிரம்ம தேவதாய நமஹ என்று கூறுகின்றனர். துயமையற்ற நிலையிலிருந்த பிரம்மா பல பிறவிகளின் கடைசியில் தூய்மையாகி தேவதையாக ஆகின்றார் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். நீங்கள் பி.கு வாக இருக்கிறீர்கள். நீங்களும் பிராமணர்கள் எனில் இந்த பிரம்மாவும் பிராமணன் ஆவார். இவரை தேவதை என்று கூறுவது யார்? பிரம்மா பிராமணன் என்று தான் கூறப்படுகிறாரே தவிர தேவதை அல்ல. பிரம்மா தூய்மையாக ஆகின்ற பொழுதும் இவரை தேவதை என்று கூறுவது கிடையாது. எதுவரை விஷ்ணுவாக (லெட்சுமி நாராயணன்) ஆகவில்லையோ அதுவரை தேவதை என்று கூற முடியாது. நீங்கள் பிராமண பிராமணிகளாக இருக்கிறீர்கள். உங்களை முதன் முதலில் சூத்திரனி லிருந்து பிராமணன், பிராமணனிலிருந்து தேவதைகளாக ஆக்குகின்றேன். இது உங்களது வைரத் திற்கு சமமான பிறப்பு என்று கூறப்படுகிறது. கர்ம கணக்குகள் இருக்கவே செய்கிறது. ஆக இப்பொழுது தந்தை கூறுகின்றார் - தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள். இந்த பயிற்சி இருக்கும் பொழுது தான் விகர்மம் விநாசம் ஆகும். தேகதாரி என்று புரிந்து கொண்டால் விகர்மம் விநாசம் ஆகாது. ஆத்மா பிராமணன் கிடையாது, சரீரத்துடன் இருக்கும் பொழுது தான் பிராமணன் பிறகு தேவதா ..... சூத்திரனாக ஆகிறது. ஆக இப்பொழுது தந்தையை நினைவு செய்வதில் முயற்சி இருக்கிறது. எளிய யோகா வாகவும் இருக்கிறது. எளிதிலும் எளிதாகவும் இருக்கிறது, சிலருக்கு மிகக் கடினமானதாகவும் தோன்றுகிறது என்று தந்தை கூறுகின்றார். அடிக்கடி தேக அபிமானத்தில் வந்து தந்தையை மறந்து விடுகிறீர்கள். ஆத்ம அபிமானி ஆவதற்கு நேரம் ஏற்படுகிறது அல்லவா! இப்பொழுது அனைவரும் ஏக்ரஸ் ஆகிவிடுவீர்கள், மேலும் ஒரு தந்தையின் நினைவு நிலையாக இருக்கும் என்பது கிடையாது. கர்மாதீத நிலை அடைந்து விட்டால் பிறகு இந்த சரீரமும் இருக்காது. தூய்மையான ஆத்மா லேசாக ஆகி முழுமையாக இந்த சரீரத்தை விட்டு விடும். தூய்மையான ஆத்மா அசுத்தமான உடலுடன் இருக்க முடியாது. இந்த தாதா வதனம் சென்று விட்டார் என்பது கிடை யாது. நினைவில் தான் அதிக முயற்சி இருக்கிறது என்று இவரும் கூறுகின்றார். தேக அபிமானத்தில் வருவதன் மூலம் தவறாக, தலைகீழாக பேசுவது, சண்டையிடுவது போன்றவைகள் நடக்கின்றன. நாம் அனைவரும் ஆத்மாக்கள் சகோதர, சகோதரர்களாக இருக்கிறோம். பிறகு ஆத்மாவிற்கு எதுவும் ஏற்படாது. தேக அபிமானத்தின் மூலம் தான் பெரும் சண்டைகள் ஏற்பட்டிருக்கின்றன. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். எவ்வாறு தேவதைகள் பாற்கடல் போன்று இருக்கிறார்களோ அதே போன்று நீங்களும் தங்களுக் குள் (பால் பாயசம் போல) மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருபொழுதும் உப்பு நீர் போன்று இருக்கக் கூடாது. தேக அபிமானி மனிதர்கள் தான் தவறாக, தலைகீழாக பேசுவர், சண்டையிட்டுக் கொள்வர். குழந்தைகளாகிய உங்களிடம் இந்த பழக்கங்கள் இருக்கக் கூடாது. இங்கு நீங்கள் தேவதை ஆவதற்காக தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். கர்மாதீத நிலை அடைய வேண்டும். இது சரீரம், இந்த உலகம் பழையது, தமோ பிரதானமானது என்பதை அறிவீர்கள். பழைய பொருள் மீது, பழைய சம்மந்தங்களின் மீது கோபப்பட வேண்டியிருக்கிறது. தேக அபிமானத்தின் விசயங்களை விட்டு விட்டு தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் பாவங்கள் அழியும். பல குழந்தைகள் நினைவில் தோல்வியடைகின்றனர். ஞானம் புரிய வைப்பதில் மிகத் தீவிரமாக செல்கின்றனர். ஆனால் நினைவிற் கான முயற்சி மிகவும் உயர்ந்தது. பெரிய தேர்வு ஆகும். அரைக் கல்பத்தின் பழைய பக்தர்கள் தான் புரிந்து கொள்ள முடியும். பக்தியில் யார் கடைசியில் வருகிறார்களோ அவர்கள் இந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடியாது.

தந்தை இந்த சரீரத்தில் வந்து கூறுகின்றார் - ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு வருகிறேன். எனக்கு நாடகத்தில் பாகம் இருக்கிறது, மேலும் நான் ஒரே ஒரு முறை தான் வருகிறேன். இது அதே சங்கமயுகமாகும். யுத்தமும் எதிரில் இருக்கிறது. இது நாடகம் 5 ஆயிரம் ஆண்டிற்கானது ஆகும். கலியுகத்தின் ஆயுள் இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் இருந்தால் என்ன நடக்கும் என்றே தெரியாது. பகவானே வந்தாலும் கூட நாம் சாஸ்திரங்களின் வழிமுறைகளை விடமாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் எந்த பகவான் வருவார்? என்பதும் அவர்களுக்கு தெரியாது. கிருஷ்ண பகவான் வருவார் என்று சிலர் நினைக் கின்றனர். சிறிது காலத்தில் உங்களது பெயர் வெளிப்படும். ஆனால் அப்படிப்பட்ட மனநிலை இருக்க வேண்டும். தங்களுக்குள் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள் அல்லவா! இறைவனின் உதவியாளர்கள் நீங்கள் என்று பாடப்பட்டிருக்கிறது. தூய்மை இழந்த விட்ட பாரதத்தை தூய்மை ஆக்குவதில் நாங்கள் பாபாவின் உதவியாளர்கள் என்று கூறுகிறீர்கள். பாபா, நாம் கல்ப கல்பத்திற்கும் ஆத்ம அபிமானியாகி தங்களது ஸ்ரீமத்படி நடந்து யோக பலத்தின் மூலம் எங்களது விகர்மங்களை விநாசம் செய்கின்றோம். யோக பலம் என்றால் அமைதி பலமாகும். அமைதி பலம் மற்றும் அறிவியல் பலத்திற்குமிடையே இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. நாட்கள் செல்லச்செல்ல உங்களுக்கு அதிக சாட்சாத்காரங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் எத்தனை குழந்தைகள் சாட்சாத்காரம் செய்தனர்! நடிப்பு நடித்தனர்! இன்று அவர்கள் இல்லை.. மாயை சாப்பிட்டு விட்டது. யோகாவில் இல்லாததால் மாயை சாப்பிட்டு விடுகிறது. பகவான் நமக்கு கற்பிக்கின்றார் என்று குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள் எனில் பிறகு நியமப்படி படிக்க வேண்டும். இல்லையெனில் மிகமிகக் குறைந்த பதவி அடைவீர்கள். அதிக தண்டனைகள் அடைவீர்கள். ஜென்ம ஜென்மங் களுக்கான பாவிகள் என்றும் பாடுகின்றனர் அல்லவா! அங்கு (சத்யுகத்தில்) இராவண இராஜ்யமே இல்லையெனில் விகாரத்தின் பெயரும் எப்படி இருக்க முடியும்! அது சம்பூர்ண நிர்விகாரி இராஜ்யமாகும். அது இராம இராஜ்யம், இது இராவண இராஜ்யமாகும். இந்த நேரத்தில் அனைவரும் தமோபிரதானமாக இருக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் தனது மனநிலையை சோதித்துக் கொள்ள வேண்டும் - நான் தந்தையின் நினைவில் எவ்வளவு நேரம் இருக்கிறேன்? தெய்வீக குணங்களை எந்த அளவிற்கு தாரணை செய்திருக்கிறேன்? தனக்குள் சோதிக்க வேண்டிய முக்கிய விசயம் - எனக்குள் எந்த அவகுணங்களும் கிடையாது தானே? எனது உணவு முறைகள் எப்படியிருக்கிறது? முழு நாளும் எந்த வீண் விசயம் அல்லது பொய் பேசவில்லை தானே? சரீர நிர்வாகத் திற்காகவும் பொய் பேச வேண்டியிருக்கிறது அல்லவா! பிறகு மனிதர்கள் தர்மம் செய்யும் பொழுது பாவங்கள் இலேசாகி விடுகிறது. நல்ல காரியம் செய்யும் பொழுது அதற்கான பலனும் கிடைக்கிறது. யாராவது மருத்துவமனை திறந்தால் அடுத்த பிறவியில் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். கல்லூரி திறந்தால் நன்றாக படிப்பார்கள். ஆனால் பாவத்திற்கான பிராயசித்தம் (பரிகாரம்) என்ன? அதற்காக கங்கை யில் குளிக்கச் செல்கின்றனர். மற்றபடி செல்வத்தை தானம் செய்பவர்களுக்கு அடுத்த பிறவியில் கிடைத்து விடுகிறது. அதில் பாவங்கள் அழிந்து போவதற்கான விசயம் கிடையாது. அது பணம் கொடுக்கல் வாங்கல் விசயமாகும், ஈஸ்வரனின் பொருட்டு கொடுக்கின்றனர். ஈஸ்வரன் அல்ப காலத்திற்காக கொடுத்து விடுகின்றார். இங்கு நீங்கள் தூய்மை ஆக வேண்டும் எனில் தந்தையின் நினைவு தவிர வேறு எந்த உபாயமும் கிடையாது. தூய்மையானவர்கள் பிறகு தூய்மை இல்லாத உலகில் இருக்கமாட்டார்கள். அவர்கள் ஈஸ்வரனின் பொருட்டு சுற்றி வளைத்து செய்கின்றனர். இப்பொழுது ஈஸ்வரன் கூறுகின்றார் - நான் தூய்மை ஆக்குவதற்காக நேரடியாக வந்திருக் கின்றேன். நான் வள்ளலாக இருக்கின்றேன், எனக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள் எனில் நான் திரும்பி கொடுத்து விடுகின்றேன். நான் என்னிடத்தில் வைத்துக் கொள்ளமாட்டேன். குழந்தைகளாகிய உங்களுக்காகத் தான் கட்டிடம் போன்றவைகள் கட்டப் பட்டிருக்கின்றன. சந்நியாசிகள் தங்களுக்காகவே பெரிய பெரிய மாளிகைகள் கட்டிக் கொள்கின்றனர். இங்கு சிவபாபா தனக்காக எதையும் உருவாக்கிக் கொள்வது கிடையாது. இதற்கு கைமாறாக உங்களுக்கு 21 பிறவிகளுக்கு புது உலகில் கிடைக்கும் என்று கூறுகின்றார். ஏனெனில் நீங்கள் நேரடியாக கொடுக்கல் வாங்கல் செய்கிறீர்கள். பணம் கொடுக்கிறீர்கள் எனில் அது உங்களது காரியத்திற்காகத் தான் பயன்படுகிறது. பக்தி மார்க்கத்திலும் வள்ளலாக இருக்கிறேன், இப்பொழுதும் வள்ளலாக இருக்கிறேன். அது மறைமுகமானது, இது நேரடியானது. எதுவெல்லாம் இருக்கிறதோ அதன் மூலம் சென்டர் திறங்கள் என்று பாபா கூறிவிடுகிறார். மற்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். நானும் சென்டர் திறக்கிறேன் அல்லவா! குழந்தைகளால் கொடுக்கப்பட்டதை குழந்தைகளின் உதவிக்கே பயன்படுத்துகிறேன். நான் வரும்பொழுது என்னுடன் பணம் கொண்டு வருவது கிடையாது. நான் வந்து இவரிடத்தில் பிரவேசம் செய்கின்றேன். இவர் மூலமாக காரியங்கள் செய்விக்கின்றேன். நான் சொர்க்கத்திற்கு வருவது கிடையாது. இவையனைத்தும் உங்களுக்காகத் தான், நான் எதையும் அனுபவிக்காதவன். எதையும் அடைவது கிடையாது. காலில் விழுங்கள் என்றும் கூறுவது கிடையாது. நான் குழந்தை களாகிய உங்களது மிகத் தாழ்மையான சேவகனாக இருக்கிறேன். அவரே தாய் தந்தையாக....... அனைத்துமாக இருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவர் நிராகாராக இருக்கின்றார். நீங்கள் எந்த குருவையும் நீங்கள் தான் தாய், தந்தை என்று கூறுவது கிடையாது. குருவை குரு என்றும், ஆசிரியரை ஆசிரியர் என்று தான் கூறுவீர்கள். இவரை தாய், தந்தை என்று கூறுகிறீர்கள். நான் கல்ப கல்பத்திற்கு ஒரே ஒரு முறை தான் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் தான் 12 மாதத்திற்குப் பிறகு ஜெயந்தி கொண்டாடுகிறீர்கள். ஆனால் சிவபாபா எப்பொழுது வந்தார்? என்ன செய்தார்? என்பது யாருக்கும் தெரியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரின் தொழிலையும் யாரும் அறியவில்லை. ஏனெனில் மேலே சிவனின் சித்திரத்தை நீக்கி விட்டனர். இல்லையெனில் சிவபாபா செய்பவர், செய்விப்பவராக இருக்கின்றார். பிரம்மாவின் மூலம் செய்விக்கின்றார். எவ்வாறு வந்து பிரவேசிக்கின்றார்? மேலும் செய்து காண்பிக்கின்றார்? என்பதையும் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். நீங்களும் இவ்வாறு செய்யுங்கள் என்று அவர் சுயம் கூறுகின்றார். ஒன்று நல்ல முறையில் படியுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள், தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். எவ்வாறு இவரது ஆத்மா கூறுகிறது! நான் பாபாவை நினைவு செய்கிறேன் என்று இவரும் கூறுகின்றார். பாபாவும் கூடவே இருக்கின்றார். நாம் புது உலகிற்கு எஜமானர்களாக ஆகக் கூடியவர்கள் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. ஆக நடத்தைகள், உணவு முறைகள் போன்ற அனைத்தும் மாற வேண்டும். விகாரங்களை விட வேண்டும். விழிப்படைய வேண்டும். எந்த அளவிற்கு விழிப்படைந்து பிறகு சரீரம் விடுவீர்களோ, உயர்ந்த குலத்தில் பிறப்பு எடுப்பீர்கள். குலமும் வரிசைக்கிரமமாக இருக்கும். இங்கும் மிக நல்ல நல்ல குலங்கள் உள்ளன. 4-5 சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றனர், எந்த சண்டை சச்சரவும் கிடையாது. நாம் அமரலோகம் செல்கிறோம், அங்கு மரணம் என்பதே கிடையாது, பயத்திற்கான விசயம் எதுவும் கிடையாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இங்கு நாளுக்கு நாள் பயம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெளியில் செல்லவே முடியாது. இந்த படிப்பு கோடியில் சிலர் மட்டுமே படிக்க முடியும் என்பதை அறிவீர்கள். சிலர் நல்ல முறையில் புரிந்து கொள்கின்றனர், மிக நன்றாக இருக்கிறது என்று எழுதவும் செய்கின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகளும் அவசியம் வருவார்கள். இராஜ்யம் ஸ்தாபனை ஆகியே தீர வேண்டும் அல்லவா! இன்னும் சில காலம் தான் பாக்கி இருக்கிறது.

யார் நினைவு யாத்திரையில் தீவிர வேகத்தில் செல்கிறார்களோ, அவ்வாறு முயற்சி செய்யும் குழந்தைகளின் மகிமையை தந்தை மிக மிக அதிகமாக பாடுகின்றார். முக்கிய விசயம் நினைவு ஆகும். இதன் மூலம் பழைய கணக்கு வழக்கு முடிவடைகிறது. பாபா, நான் தினமும் இவ்வளவு மணி நேரம் நினைவு செய்கிறேன் என்று சில குழந்தைகள் எழுதுகின்றனர், இவர் அதிக முயற்சியாளர் என்று தந்தை புரிந்து கொள்வார். முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! அதனால் தான் தந்தை கூறுகின்றார் - தங்களுக்குள் ஒருபொழுதும் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. இது மிருகங்களின் வேலையாகும். சண்டையிட்டுக் கொள்வது என்பது தேக அபிமானமாகும். தந்தையின் பெயரை கெடுத்து விடுவீர்கள். சத்குருவை நிந்திப்பவர்களால் நிலைத்து இருக்க (உயர்ந்த பதவி அடைய) முடியாது என்று தந்தையைப்பற்றித் தான் கூறப்பட்டிருக்கிறது. இதை சாதுக்கள் தனதாக ஆக்கிக் கொண்டனர். ஆக தாய்மார்கள் அவர்களிடத்தில் அதிகம் பயப்படு கின்றனர் - எந்த சாபமும் அடைந்து விடக் கூடாது. நாம் மனிதனிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். உண்மையிலும் உண்மையான அமரக் கதை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீ லெட்சுமி நாராயணன் பதவி அடைவதற்காகத் தான் நாம் இந்த பாடசாலைக்கு வருகிறோம் என்று கூறுகிறீர்கள். வேறு எங்கும் இவ்வாறு கூறுவது கிடையாது. இப்பொழுது நாம் நமது வீட்டிற்குச் செல்கிறோம். இதில் நினைவிற்கான முயற்சி முக்கியமானது ஆகும். அரைக் கல்பம் நினைவு செய்யவில்லை. இப்பொழுது இந்த ஒரே ஒரு பிறவியில் நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்ய வேண்டும், தெய்வீக குணங்களை கடைபிடிக்க வேண்டும். ஏரேதனும் பாவக் காரியங்கள் செய்தால் பல மடங்கு தண்டனை பெற வேண்டியிருக்கும். முயற்சி செய்து தன்னை முன்னேற்றமடைய செய்ய வேண்டும். ஆத்மா தான் சரீரம் மூலம் படித்து வக்கீல் அல்லது டாக்டர் போன்று ஆகின்றது அல்லவா! இந்த லெட்சுமி நாராயனன் பதவி மிகவும் உயர்ந்தது அல்லவா! நாளடைவில் உங்களுக்கு அதிக சாட்சாத்காரம் ஏற்படும். நீங்கள் சர்வோத்தம பிராமண குலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறீர்கள், சுயதரிசன சக்கரதாரிகளாக இருக்கிறீர்கள். கல்பத்திற்கு முன்பும் இந்த ஞானம் உங்களுக்கு கூறியிருந்தேன். மீண்டும் உங்களுக்கு கூறுகிறேன். நீங்கள் கேட்டு பதவி அடைகிறீர்கள். பிறகு இந்த ஞானம் மறைந்து போய் விடும். மற்றபடி இந்த சாஸ்திரம் போன்றவைகள் பக்தி மார்கத்தினுடையது ஆகும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தனக்குள் சோதித்துக் கொள்ள வேண்டும் - நான் தந்தையின் நினைவில் எவ்வளவு நேரம் இருக்கிறேன்? தெய்வீக குணங்களை எந்த அளவிற்கு தாரணை செய்திருக்கிறேன்? எனக்குள் எந்த அவகுணங்களும் கிடையாது தானே? எனது உணவு முறை, நடத்தைகள் ராயலாக இருக்கிறதா? வீண் விசயங்களை பேசுவதில்லை தானே? பொய் பேசுவது கிடையாது தானே?

2) நினைவு சார்ட்டை அதிகப்படுத்துவதற்கு பயிற்சி செய்ய வேண்டும் - நாம் அனைவரும் சகோதர, சகோதரர்கள். தேக அபிமானத்தி-ருந்து தூர விலகியிருக்க வேண்டும். தனது மன நிலையை ஒருமுகப்படுத்தி (ஸ்திதியை ஏக்ரஸாக) கொள்ள வேண்டும், இதற்கு நேரம் கொடுக்க வேண்டும்.

வரதானம்:
ஐந்து தத்துவங்கள் மற்றும் ஐந்து விகாரங்களை தங்களது சேவாதாரியாக ஆக்கி விடக்கூடிய மாயையை வென்ற சுயராஜ்ய அதிகாரி ஆவீர்களாக.

எப்படி சத்யுகத்தில் விஷ்வ மகாராஜா மற்றும் விஷ்வ மகாராணியின் ராஜ உடையை தாச தாசிகள் பின்னால் தூக்கி எடுத்து கொண்டு நடப்பார்கள். அதேபோல சங்கமயுகத்தில் குழந்தை களாகிய நீங்கள் மாயையை வென்ற சுயராஜ்ய அதிகாரி ஆகி பட்டங்கள் என்ற ஆடையினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தீர்கள் என்றால் இந்த 5 தத்துவங்கள் மற்றும் 5 விகாரங்கள் உங்கள் ஆடையை பின்னாலிருந்து தூக்குவார்கள். அதாவது அடிமையாக ஆகி நடப்பார்கள். இதற்காக திட சங்கல்பம் என்ற பெல்ட் மூலமாக பட்டங்கள் என்ற ஆடையை இறுக்கமாக ஆக்கி கொள்ளுங்கள். பல்வேறு ஆடைகள் மற்றும் அலங்காரத்தின் பொருட்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு தந்தையின் கூடவே இருந்தீர்கள் என்றால் இந்த விகாரங்கள் மற்றும் தத்துவங்கள் பரிவர்த்தனை ஆகி சகயோகி சேவாதாரி ஆகி விடுவார்கள்.

சுலோகன்:
எந்த குணங்கள் மற்றும் சக்திகளின் வர்ணனை செய்கிறீர்களோ அவற்றின் அனுபவங்களில் மூழ்கி விடுங்கள். அனுபவம் தான் எல்லாவற்றையும் விட பெரிய அத்தாரிட்டி ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: கம்பைண்டு ரூபத்தின் நினைவினால் எப்பொழுதும் வெற்றியாளர் ஆகுங்கள்.

சுயம் தங்களை தந்தையுடன் இணைந்து இருப்பதாக நினைக்கும் பொழுது அழியக் கூடிய துணை யாளர்களை அமைத்து கொண்டு விடுவதற்கான எண்ணம் முடிந்து போய் விடும். ஏனெனில் சர்வசக்திவான் பாபா துணையாளர் ஆவார். எப்படி சூரியனுக்கு முன்பு இருள் நிலைத்திருக்க முடியாதோ அதேபோல சர்வசக்திவானுக்கு முன்னால் மாயையின் எந்த ஒரு வீணான சங்கல்பம் கூட நிலைத்திருக்க முடியாது. எந்த ஒரு எதிரி கூட தாக்குவதற்கு முன்பு தனியாக ஆக்கி விடுவார். எனவே ஒருபொழுதும் தனியானவர் ஆகாதீர்கள்.