29.06.25 காலை முரளி
ஓம் சாந்தி 31.12.2005 பாப்தாதா,
மதுபன்
புதிய வருடத்தில் தன்னுடைய பழைய சம்ஸ்காரங்களை யோக அக்னியில்
பஸ்மம் செய்து பிரம்மா பாபாவுக்கு சமமாக - தியாகம், தபஸ்யா
மற்றும் சேவையில் நம்பர் ஒன் ஆகுங்கள்
இன்று பாப்தாதா நாலா பக்கங்களிலும் உள்ள-முன்னால்
அமர்ந்திருந்தாலும் அல்லது தூரத்தில் இருப்பினும் உள்ளத்தால்
அருகாமையில் இருக்கக்கூடிய அனைவருக்கும் மூன்று விஷயங்களுக்
கான வாழ்த்துக்களை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்.
ஒன்று-புதிய வாழ்விற்கான வாழ்த்துக் கள், இரண்டாவது-புதிய
யுகத்திற்கான வாழ்த்துக்கள் மற்றும் மூன்றாவதாக- இன்றைய புது
வருட தினத்திற்கான வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் கூட புதிய
வருடத்திற்கான வாழ்த்துக்களை கொடுப்பதற்காகவும்,
எடுப்பதற்காகவும் வந்துள்ளீர்கள். சொல்லப் போனால், உண்மையான
உள்ளத்தின் குஷியினுடைய வாழ்த்துக்களை பிராமண ஆத்மாக்களாகிய
நீங்கள் எடுக்கவும் செய் கின்றீர்கள், கொடுக்கவும்
செய்கின்றீர்கள். இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. விடை
கொடுப்பதும் நடந்தேறுகிறது (பழையதிற்கான) மேலும் வரவேற்பதும் (புதியதிற்கான)
நடந்தேறு கிறது. விடை கொடுப்பது மற்றும் வரவேற்பதற்கான
சங்கமயுகம். இன்றைய தினம் சங்கமத் திற்கான தினம் என்று சொல்லப்
படுகின்றது. சங்கமத்தின் மதிப்பு மிகவும் உயர்ந்தது. சங்கமயுகத்
தின் மதிப்பின் காரணமாக இன்று இந்த பழைய மற்றும் புதிய
வருடத்திற்கான சங்கமத்தை எவ்வளவு ஆரவாரத்துடன்
கொண்டாடுகின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
சங்கமயுகத்தின் மகிமையின் (புகழின்) காரணத்தினால் மட்டுமே இந்த
பழைய மற்றும் புதிய வருடத்திற்கான சங்கமத்திற்கு மகிமை
இருக்கின்றது. எங்கே இரண்டு நதிகள் சந்திக்கின்றதோ அங்கே
சங்கமம் (சந்திப்பு) ஏற்படுகின்றது, அதற்கும் கூட மகிமை
இருக்கின்றது. எங்கே நதி மற்றும் கடலுக்கான சங்கமம்
ஏற்படுகின்றதோ, அதற்கும் கூட மகிமை இருக்கின்றது. ஆனால்
அனைத்தையும் விட மிகப்பெரிய மகிமை இந்த சங்கம யுகத்தினுடையது,
புருஷோத்தம யுகத்தினுடையது, அப்படிப்பட்ட (மகிமைக்குரிய) சங்கம
யுகத்தில் தாங்கள் பிராமண பாக்கியவான் ஆத்மாக்கள்
அமர்ந்துள்ளீர்கள். இந்த போதை இருக்கின்றது தானே. ஒருவேளை,
யாரேனும் உங்களிடம் வந்து நீங்கள் எப்படிப் பட்ட சமயத்தில் (காலகட்டத்தில்)
இருக்கின்றீர்கள் என்று கேட்டால் - கலியுகத்தில் இருப்பதாக
சொல்வீர்களா அல்லது சத்யுகத்தில் இருப்பதாக சொல்வீர்களா?
பெருமிதத்துடன் என்ன சொல்வீர்கள்? நாங்கள் இந்த நேரம்
புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கின்றோம். நீங்கள் கலியுக
வாசிகள் அல்ல, சங்கம யுகவாசிகள். மேலும் இந்த சங்கமயுகத்திற்கு
ஏன் விசேஷ மகிமை இருக்கின்றது? ஏனெனில் பகவான் மற்றும்
குழந்தைகளுக்கான சந்திப்பு ஏற்படுகின்றது. கொண்டாட்டம் நடைபெறு
கின்றது, சந்திப்பு நடைபெறுகின்றது, இது வேறு எந்த யுகத்திலும்
நடைபெறுவதில்லை. எனவே, அந்த கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்காக
வந்திருக்கின்றீர்கள். அந்த சந்திப்பின் கொண்டாட்டத்தை கொண்டாடு
வதற்காக எங்கெங்கிருந்தோ வந்துள்ளீர்கள். என்றாவது கனவிலாவது
யோசித்ததுன்டா - அதாவது ஆத்மாவகிய எனக்கு, டிராமாவில்
இப்படியும் கூட (பரமாத்மாவை சந்திக்கக்கூடிய) பாக்கியம்
நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது என்று. ஆத்மாவிற்கு, பரமாத்மாவை
சந்திக்கும் பாக்கியம் இருந்தது மேலும் இருக்கின்றது. தந்தையும்
ஒவ்வொரு குழந்தையின் பாக்கியத்தை பார்த்து மகிழ்ச்சி
அடைகின்றார். ஆஹா! பாக்கியவான் குழந்தைகளே, ஆஹா! தன்னுடைய
பாக்கியத்தை பார்த்து, உள்ளத்தில் தனக்காக - ஆஹா! நான் -ஆஹா!
ஆஹா! என்னுடைய பாக்கியம்- ஆஹா! ஆஹா! என்னுடைய பாபா -ஆஹா! ஆஹா!
என்னுடைய பிராமண பரிவாரம் - ஆஹா! இந்த -ஆஹா! ஆஹா! என்ற பாடலை
உள்ளத்தில் தானாகவே பாடிக்கொண்டு இருக்கின்றீர்கள் தானே!
இன்று, இந்த சங்கமத்தின் நேரத்தில் (ஆத்மா மற்றும் பரமாத்மாவின்
சந்திப்பின் நேரத்தில்)- எந்தெந்த விஷயங்களுக்கு விடை கொடுக்க
வேண்டும் என்று யோசித்து விட்டீர்களா? எல்லோரும் யோசித்தீர்களா?
சதா காலத்திற்காக விடை கொடுக்க வேண்டும், ஏனென்றால் சதா
காலத்திற்கு விடை கொடுக்கும் போது சதா காலத்திற்கான
வாழ்த்துக்களை கொண்டாட முடியும். அப்படிப்பட்ட வாழ்த்துக்களை
கொடுங்கள் அதாவது உங்களுடைய முகத்தை பார்த்து உங்கள் முன்னால்
வரக் கூடிய எந்தவொரு ஆத்மாவும் கூட வாழ்த்துக்களைப் பெற்று
மகிழ்ச்சியாகிவிட வேண்டும். யார் உள்ளத்தால் வாழ்த்துக்களை
கொடுத்து, வாழ்த்துக்களை பெறு கின்றார்களோ அவர்கள் சதா
காலத்திற்கு எப்படி தென்படுவார்கள்? சங்கமயுக பரிஸ்தாவாக
தென்படுவார்கள். எல்லோரும் இதற்கான புருஷார்த்தத்தை தானே
செய்கின்றீர்கள். பிராமணனிலிருந்து பரிஸ்தா மேலும்
பரிஸ்தாவிலிருந்து தேவதை! ஏனென்றால், தந்தையிடம் அனைத்து
விதமான எண்ணங்களையும் மேலும் இல்லறத்தை பற்றிய எண்ணங்களாக
இருப்பினும், கர்மத்தின் சுமையாக இருப்பினும், அவற்றையெல்லாம்
கொடுத்து விட்டீர்கள் தானே. சுமையை கொடுத்து விட்டீர்களா அல்லது
தங்களிடமே கொஞ்சம் சுமையானது இருந்து விட்டதா? ஏனெனில் சிறிதளவு
சுமை கூட பரிஸ்தாவாக ஆக விடாது மேலும் எப்பொழுது தந்தை
குழந்தைகளின் சுமைகளை பெறுவதற்காக வந்திருக்கின்றாரோ அப்பொழுது
சுமைகளை கொடுப்பதில் என்ன கஷ்டம்? கஷ்டமா அல்லது எளிமையா? யார்
சுமையை கொடுத்துவிட்டேன் என்று புரிந்துள்ளீர்களோ அவர்கள் கைகளை
உயர்த்துங்கள் (குழந்தைகள் கைகளை உயர்த்துகின்றார்கள்).
கொடுத்து விட்டீர்களா? நன்றாக யோசித்து, கைகளை உயர்த்துங்கள்.
சுமைகளை கொடுத்து விட்டீர்களா? நல்லது, கொடுத்து விட்டீர்கள்
என்றால் மிகுந்த நல்வாழ்த்துக்கள். மேலும் யார் கொடுக்கவில்லையோ
அவர்கள் (சுமையை) எதற்காக வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்?
சுமையின் மீது அன்பு கொண்டுள் ளீர்களா என்ன? சுமை நன்றாக
இருக்கின்றதா? பாருங்கள், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும்
என்னவென்று சொல்கின்றார்? ஓ! என்னுடைய கவலையற்ற ராஜா குழந்தைகளே!
சுமை என்பது கவலைக்குரியதாக உள்ளது தானே! எனவே சுமையை பெறுவதற்
காக தந்தை வந்திருக்கின்றார் ஏனெனில் 63 பிறவிகளாக தந்தை
பார்த்துக்கொண்டு இருக்கின்றார்-சுமையை தூக்கி தூக்கி
குழந்தைகள் மிகவும் பாரம் நிறைந்தவர்களாக ஆகிவிட்டீர்கள், எனவே
தந்தை இப்பொழுது அன்பாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார்- சுமையை
கொடுத்துவிடுங்கள் என்று. பிறகும் கூட ஏன் வைத்துக் கொண்டு
இருக்கின்றீர்கள்? என்ன, சுமை நன்றாக இருக்கின்றதா? அனைத்தையும்
விட சூட்சமமான சுமை-பழைய சம்ஸ்காரத்தினுடைய சுமை. பாப்தாதா
ஒவ்வொரு குழந்தையின் இந்த வருடத்திற்கான சார்ட்-ஜ ,வருடம்
முடிவடைந்து கொண்டு இருப்பதானல், பார்த்தார். நீங்கள்
ஒவ்வொருவரும் கூட தங்கள் தங்களுடைய வருடத்திற்கான சார்ட்-ஜ
சோதனை செய்து பார்த்தீர்களா? பாப்தாதா பார்த்தார் - அனேக
குழந்தைகளுக்கு இந்த பழைய உலகின் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துள்ளது,
பழைய சம்மந்தங்களின் (உறவுகளின்) மீதுள்ள ஈர்ப்பும் கூட
குறைந்துள்ளது. ஆனால் பழைய சம்ஸ்காரங்களின் சுமையானது அநேகரிடம்
அப்படியே இருக்கின்றது. ஏதேனும் ஒரு ரூபத்தில் - அதாவது மனதில்
அசுத்த எண்ணங்கள் இல்லை என்றாலும் வீணான எண்ணங் களுடைய
சம்ஸ்காரம் ஒர் குறிப்பிட்ட சதவீதத்தில் இப்பொழுதும்
தென்படுகின்றது. வார்த்தை யிலும் தென்படு கின்றது. சம்மந்தம்,
தொடர்பிலும் கூட ஏதேனும் சன்ஸ்காரம் இப்பொழுதும் கூட
தென்படுகின்றது. எனவே, இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும்
- வாழ்த்துக்களின் கூடவே சைகையும் கொடுக்கின்றார் அதாவது
நீங்கள் வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய சம்ஸ்காரம் (உங்களுக்கு)
சரியான நேரத்தில் ஏமாற்றத்தை கொடுக்கும் அதன் கூடவே கடைசி
நேரத்தில் ஏமாற்றம் அடைவதற்கான கருவியாகவும் இருக்கும் எனவே
இன்று சம்ஸ்காரத்தை சம்ஹாரம் (தகனம்) செய்யுங்கள். ஒவ்வொரும்
தன்னுடைய சம்ஸ்காரத்தை தெரிந்தும் வைத்துள்ளீர்கள், விடவும்
விரும்புகின்றீர்கள், தொந்தரவாகவும் இருக்கின்றது, ஆனால் சதா
காலத்திற்கு மாற்றத்தை கொண்டு வருவதில் தீவிர புருஷார்த்தியாக
ஆகவில்லை. புருஷார்த்தம் செய்கின்றீர்கள் ஆனால் தீவிர
புருஷார்த்தியாக ஆகவில்லை. காரணம்? ஏன் தீவிர புருஷார்த்தம்
என்பது ஏற்படாமல் உள்ளது? காரணம் இது தான் - எப்படி இராவணனை
கொன்றார்கள், கொன்ற தோடு நில்லாமல் கூடவே எரிக்கவும்
செய்தார்கள். அதே போல், கொல்வதற்கு (பழைய சம்ஸ்காரத்தை)
புருஷார்த்தம் செய்கின்றீர்கள், சற்று நேரத்திற்கு அதுவும்
மயக்க நிலையை அடைகின்றது ஆனால் நீங்கள் எரிப்பதில்லை, எனவே
மயக்க நிலையிலிருந்து அவ்வபோது எழுந்து வந்து விடுகின்றது.
எனவே பழைய சம்ஸ்காரத்தை சம்ஹாரம் (தகனம்) செய்வதற்காக, இந்த
புதிய வருடத்தில், யோக அக்னி மூலமாக எரிப்பதற்கான திட
சங்கல்பத்தில் கவனம் வையுங்கள். இந்த புதிய வருடத்தில் என்ன
செய்ய வேண்டும் என்று கேட்கின்றீர்கள் தானே? சேவைக்கான விஷயம்
என்பது தனி, முதலில் சுயத்திற்கான விஷயம் - யோகா
செய்விக்கின்றீர்கள், பாப்தாதா, குழந்தைகள் யோகத்தின் பயிற்சி
செய்வதை பார்க்கின்றார். அமிர்தவேளை கூட மிகுந்த புருஷார்த்தம்
செய்கின்றீர்கள் ஆனால் யோகாவை தபஸ்யாவாக, தவத்தின் ரூபத்தில்
செய்வதில்லை. நிச்சயமாக அன்போடு நினைவு செய்கின்றீர்கள்,
ஆன்மீக உரையாடலும் கூட நிறைய செய்கின்றீர்கள், சக்தியை
பெறுவதற்கான பயிற்சியும் கூட செய்கின்றீர்கள் ஆனால் நினைவை
இந்த அளவுக்கு சக்தி சாலியாக ஆக்கவில்லை அதாவது எந்தெந்த
எண்ணங்களுக்கு விடை கொடுக்கின்றீர்களோ, அது விடைபெற்று
போய்விட்டது (என்ற அளவுக்கு). நினைவை நினைவு அக்னி (யோக அக்னி)
ரூபத்தில் காரியத்தில் ஈடுபடுத்துவதில்லை எனவே நினைவை
சக்திசாலியாக ஆக்குங்கள். சம்ஸ்காரத்தை தகனம் செய்வதற்கு,
முக்கியமாக - ஒருநிலைப்பாட்டின் சக்தி அவசியமானதாக இருக்கின்றது.
எந்த சுவரூபத்தில் ஒருநிலைப்பட்டு இருக்க விரும்புகின்றீர்களோ,
எவ்வளவு நேரம் ஒருநிலைப்பட்டு இருக்க விரும்புகின்றீர்களோ,
அதற்கான ஒருநிலைப்பாட்டின் சங்கல்பத்தை செய்து மேலும் தகனம் (பழைய
சம்ஸ்காரத்தை) செய்வதையே யோக அக்னி என்று சொல்லப் படுகின்றது.
பெயர், அடையாளம் முதற்கொண்டு அழிந்துபோக வேண்டும். கொன்றாலும்
கூட சடலம் என்பது இருந்துவிடும் அல்லவா, தகனம் செய்த பிறகு தான்
பெயர், அடையாளம் அழிந்து போகின்றது. எனவே, இந்த புதிய
வருடத்தில் நினைவை சக்திசாலியான நிலைக்கு கொண்டு வாருங்கள்.
எந்த சொரூபத்தில் நீங்கள் இருக்க விரும்பினாலும் - மாஸ்டர்
சர்வசக்திவானாகிய நீங்கள் கட்டளையிட்டு சமாப்தம் செய்யக்கூடிய
சக்தி உங்களுடைய கட்டளையை ஏற்கவில்லை என்பது இருக்க முடியாது.
எஜமானர் அல்லவா. மாஸ்டர் என்று சொல்லப்படுகின்றது அல்லவா!
மாஸ்டர் கட்டளையிட்டு, சக்தி ஆஜர் ஆகவில்லை எனில், அவர்கள்
மாஸ்டர் என்று சொல்லப் படுவார்களா? எனவே, பாப்தாதா பார்த்தார்
அதாவது ஏதேனும் பழைய சம்ஸ்காரங்கள் அம்ச அளவிலாவது இப்பொழுதும்
கூட இருக்கின்றது மேலும் அந்த அம்சம் இடை இடையில் வம்சத்திற்கு
பிறப்பு கொடுத்து விடுகின்றது, செயல் வரை அது தன் காரியத்தை
செய்து விடு கின்றது. யுத்தம் செய்ய நேரிடுகின்றது. நேரத்தின்
அனுசாரம், குழந்தைகளின் யுத்த சொரூபத்தை பார்ப்பதில்
பாப்தாதாவிற்கு மகிழ்ச்சியில்லை. பாப்தாதா ஒவ்வொரு
குழந்தையையும் எஜமானர் ரூபத்தில் பார்க்க விரும்புகின்றார்.
கட்டளை யிட்டால், வந்தேன் ஜயா என்றிருத்தல் வேண்டும் (சக்திகள்).
எனவே, இந்த வருடத்தில் தனக்காக என்ன செய்ய வேண்டும் எனக்
கேட்டீர்கள் தானே? சக்திசாலியாக, கவலையற்ற ராஜாவாக ஆக வேண்டும்,
ஏனெனில் எல்லோரின் இலட்சியம் இதுவே. யாரேனும் உங்களிடம் (உங்களின்
இலட்சியம் என்ன என்று) கேட்டால், என்ன சொல்வீர்கள்? நாங்கள்
உலகத்தின் இராஜ்யத்தை பெறுவோம், இராஜ்ய அதிகாரிகளாக ஆகுவோம்
என்று சொல்வீர்கள். தன்னை இராஜயோகி என்று சொல்லிக்
கொள்கின்றீர்கள். பிரஜாயோகி இல்லை தானே? இந்த முழு சபையில்
யாரேனும் பிரஜாயோகி இருக்கின்றீர்களா? யார் இராஜ யோகி அல்லாது
பிரஜாயோகியாக இருக்கின்றீர்கள்? ஆசிரியர்கள் (டீச்சர்ஸ்)
யாரேனும் இருக்கின்றீர்களா? உங்களுடைய சென்டரில் பிரஜாயோகி
இருக்கின்றீர்களா? சொல்லும்போது எல்லோரும் இராஜயோகி என்று
சொல்கின்றீர்கள். பிரஜாயோகியா எனக் கேட்டால் யாரும் கை
உயர்த்துவதில்லை. நன்றாக இருப்பதில்லை தானே! (கையை
உயர்த்துவதில்). பாபாவிற்கும் கூட பெருமையாக இருக்கின்றது.
பாப்தாதா பெருமையுடன் சொல்கின்றார் - சங்கமயுகத்தில் கூட
ஒவ்வொரு குழந்தையும் ராஜா குழந்தை என்று. எந்தவொரு தந்தையும் (உலகில்)
என்னுடைய ஒவ்வொரு குழந்தையும் ராஜா குழந்தை என்று அத்தனை
பூரிப்புடன் கூற முடியாது. ஆனால் பாப்தாதா சொல்கின்றார் -
என்னுடைய ஒவ்வொரு குழந்தையும் சுயராஜ்ய அதிகாரி, ராஜா குழந்தை
என்று. பிரஜாயோகியா என்று கேட்கும்போது கைகளை உயர்த்தவில்லை
தானே, அப்படியென்றால் ராஜா தானே! ஆனால் சோம்பேறியான ராஜாவாக
ஆகிவிடாதீர்கள் அதாவது கட்டளையிடுகின்றீர்கள் ஆனால் (சக்திகள்)
கட்டளைக்கு கீழ்படியவில்லை. பலஹீனமான ராஜா வாக ஆகாதீர்கள்.
பின்னால் அமர்ந்துள்ளவர்கள் யார்? இராஜயோகி எனப்
புரிந்துள்ளவர்கள் கைகளை உயர்த்துங்கள். மேலேயும்
அமர்ந்துள்ளீர்கள் (மேல் தளத்தில் அமர்ந்துள்ளவர்கள் கைகளை
அசைக்கின்றார்கள், இன்று 18,000 சகோதரன், சகோதரிகள் கூடத்தில்
அமர்ந்துள்ளார் கள்) பாப்தாதா பார்த்துக்கொண்டு இருக்கின்றார்,
மேலே அமர்ந்துள்ளவர்கள் கைகளை தூக்குங்கள்.
இது கடைசி முறையில் (இவ்வருடத்திற்கான பாப்தாதாவின் கடைசி
சந்திப்பில்) ஆரம்பம் ஆகும். மூன்று மாத காலம் (புருஷார்த்தத்திற்கு)
பாப்தாதா தருகின்றார், சரிதானே? வீட்டுப்பாடம் (ஹோம்வொர்க்)
கொடுக்கின்றேன் ஏனெனில் இந்த இடை-இடையே செய்யப்படும் ஹோம்வொர்க்
கூட கடைசி நேர பேப்பரில் சேமிப்பாகும். எனவே, மூன்று மாத
காலத்தில் ஒவ்வொருவரும் தன்னுடைய சார்ட்-ஜ சோதனை செய்யுங்கள்
அதாவது நான் மாஸ்டர் சர்வ சக்திவானாக ஆகி எந்த ஒரு
கர்மேந்திரியம் அல்லது சக்தியை எப்பொழுது கட்டளையிடு கின்றேனோ,
என்ன கட்டளையிடுகின்றேனோ, அப்பொழுது அந்த கட்டளை நடைமுறையில்
நிறைவேற்றப்படு கின்றதா அல்லது இல்லையா? செய்ய முடியுமா? முதல்
வரிசையில் அமர்ந்துள்ளவர்கள் செய்ய முடியுமா? கைகளை
உயர்த்துங்கள். நல்லது! மூன்று மாத காலம் எந்தவொரு பழைய
சன்ஸ்காரமும் யுத்தம் செய்யக் கூடாது. சோம்பேறித்தனம் வேண்டாம்,
ராயலான சோம்பேறித் தனத்தை கொண்டு வராதீர்கள், நடந்துவிடும் . .
. பாப்தாதாவிடம் இனிமையிலும் இனிமையான உரையாடல் செய்கின்றார்கள்;
சொல்கின்றார்கள் - பாபா நீங்கள் கவலைப்படாதீர்கள், நடந்துவிடும்.
பாப்தாதா என்ன செய்வார் (குழந்தைகள் சொல்வதை கேட்டு)? கேட்டு
புன்சிரிக்கின்றார். ஆனால் இந்த மூன்று மாத காலம் அவ்வாறு
செய்வீர்களே என்றால், பாப்தாதா ஏற்றுக்கொள்ள மாட்டார்.
ஒப்புக்கொள்கின்றீர்கள் (சம்மதம்) எனில் கைகளை உயர்த்துங்கள்.
மனதார கைகளை உயர்த்துங் கள், சபையின் காரணமாக கைகளை
உயர்த்தாதீர்கள். செய்துதான் ஆக வேண்டும், எவ்வளவு
சகித்துக்கொள்ள நேரிட்டாலும், எதையேனும் விடவேண்டிய நிலை
ஏற்பட்டாலும்-என்னவாயினும் பரவாயில்லை. செய்துதான் ஆக வேண்டும்.
பக்கா (உறுதியாக இருக்கின்றீர்களா)? பக்கா? பக்கா? டீச்சர்ஸ்
செய்வீர்களா?
நல்லது! இந்த கிரீடம் அணிந்துள்ள குழந்தைகள் என்ன செய்வார்கள்?
(சின்ன குழந்தைகள் கிரீடம் அணிந்தவாறு முன்னால்
அமர்ந்துள்ளார்கள்) கிரீடம் என்னவோ நன்றாக அணிந்துள்ளீர்கள்.
செய்துதான் ஆகவேண்டும் (ஹோம்வொர்க்). நல்லது. பாருங்கள்
குழந்தைகள் கைகளை உயர்த்து கின்றார்கள். ஒருவேளை நீங்கள்
செய்யவில்லை என்றால் என்ன செய்வது? அதையும் நீங்களே
சொல்லிவிடுங்கள். பிறகு பாப்தாதாவின் ஒரு சீசனில் (மதுபன்
சந்திப்பில்) வர விடப்போவது இல்லை ஏனெனில் பாப்தாதா
பார்த்துக்கொண்டு இருக்கின்றார், நேரம் உங்களுக்காக அழைப்பு
விடுத்துக்கொண்டு இருக்கின்றது. நீங்கள் நேரத்திற்காக
காத்திருப்பவர்கள் அல்ல, நீங்கள் ஏற்பாடுகளை செய்யக்கூடியவர்கள்,
நேரம் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றது. இயற்கை கூட,
சதோபிரதானமான இயற்கை கூட உங்களுக்காக அழைப்பு விடுத்துக் கொண்டு
இருக்கின்றது. எனவே, மூன்று மாதத்தில் தன்னுடைய சக்திசாலியான
நிலையில் இருந்து மீதமுள்ள சன்ஸ்காரத்தை மாற்றம் செய்யுங்கள்.
ஒருவேளை மூன்று மாத காலம் கவனம் வைப்பீர்கள் என்றால், அதன்
பின்பும் கூட (கவனம் வைப்பது) பழக்கமாக ஆகிவிடும். ஒருமுறை
மாற்றம் செய்வதற்கான விதி (சூத்திரம்) தெரிந்துவிட்டால், அது
மிகவும் காரியத்தில் பயன்படக்கூடியதாக இருக்கும். நேரத்திற்காக
நீங்கள் காத்துக்கொண்டு இருக்காதீர்கள்-எப்பொழுது விநாசம்
ஏற்படும், எப்பொழுது விநாசம் ஏற்படும் என ஆன்மீக உரையாடலில்
அனைவரும் கேட்கின்றீர்கள். வெளிப்படையாக சொல்வதில்லை ஆனால்
தங்களுக்குள்ளேயே பேசிக்கொள் கின்றீர்கள் அதாவது எப்பொழுது
விநாசம் ஆகும் என தெரியவில்லை, 2 வருடங்களில் ஆகுமா, 10
வருடங்களில் ஆகுமா, எவ்வளவு வருடங்கள் ஆகும்? நீங்கள் ஏன்
நேரத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கின்றீர்கள், நேரம்
உங்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டு இருக்கின்றது. தந்தை யிடம்
கேட்கின்றார்கள்-தேதியை சொல்லுங்கள், கொஞ்சம் - வருடத்தை யேனும்
சொல்லுங்கள், 10 வருடங்கள் ஆகுமா, 20 வருடங்கள் ஆகுமா, எத்தனை
வருடங்கள் ஆகும்?
பாப்தாதா குழந்தைகளிடம் கேள்வி கேட்கின்றார் அதாவது நீங்கள்
அனைவரும் தந்தைக்கு சமமாக (பாப்சமான்) ஆகிவிட்டீர்களா?
திரைச்சீலையை திறக்க வேண்டும் எனில் திறந்து விடலாம் ஆனால் (திறந்த
பிறகு) சிலர் தலைவாரிக் கொண்டு இருக்கின்றார்கள், சிலர்
முகத்திற்கு க்ரீம் போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் எனில் (என்ன
செய்வது). ஒருவேளை நீங்கள் எவர்ரெடி (எப்பொழுதும் தயார்)
என்றால், திரைச்சீலையை திறப்பதில் பாப்தாதாவிற்கு என்ன நேரம்
ஆகிவிடப்போகின்றது. முதலில் எவர்ரெடியாக ஆகுங்கள். நடந்துவிடும்,
நடந்துவிடும் என்று சொல்லி, நீன்ட காலமாக தந்தையை
குஷிப்படுத்தினீர்கள். இப்பொழுது அவ்வாறு செய்யாதீர் கள்.
நடந்தே ஆக வேண்டும், செய்தே ஆக வேண்டும். பாப்சமான் ஆக வேண்டும்
என்று சொன்னால் எல்லோரும் கைகளை உயர்த்தி விடுவீர்கள்,
உயர்த்துவதற்கான அவசியம் இல்லை. பிரம்மா பாபாவை பாருங்கள்,
சாகாரத்தில் பிரம்மா பாபாவை பின்பற்ற வேண்டும் தானே! பிரம்மா
பாபா - தியாகம், தபஸ்யா மற்றும் சேவையை கடைசி நேரம் வரை
சாகாரத்தில் நடைமுறைப்படுத்தி காட்டியவர். தன்னுடைய கடமையை,
அதாவது சிவதந்தை தன் மூலம் மகாவாக்கியத்தை உச்சரிப் பதற்கான
கடமையை கடைசி நாள் வரை தொடர்வ தற்கான கடமையாற்றினார். கடைசி
முரளி நினைவில் இருக்கின்றது தானே? மூன்று சப்தங்களின் வரதானம்,
நினைவிருக்கின்றதா? (நிராகாரி, நிர்விகாரி மற்றும் நிர்அகங்காரி
ஆகுங்கள்) யாருக்கு நினைவிருக்கின்றதோ அவர்கள் கைகளை
உயர்த்துங்கள். (அனைவரும் கைகளை உயர்த்துகின்றார்கள்)
அனைவருக்கும் நினைவிருக் கின்றதா, நல்லது, வாழ்த்துக்கள்.
தியாகம் கூட கடைசி நாள் வரை செய்தார், தன்னுடைய பழைய அறையை
விடவில்லை. குழந்தைகள் எவ்வளவோ அன்போடு பிரம்மா பாபாவிடம்
சொல்லிப் பார்த்தார்கள் ஆனால் குழந்தை களுக்காக கட்டப்பட்டது
என்று கூறி, தான் பயன்படுத்தாமல் இருந்தார்.
மேலும் சதா 2.30 / 3.00 மணிக்கு எழுந்து தனக்காக தபஸ்யா
செய்தார், சம்ஸ்காரத்தை தகனம் செய்து கர்மாதீத் (கர்மத்தை
வென்ற நிலை), அவ்யக்தம் ஆகினார், பரிஸ்தாவாக ஆகினார். எதை
யோசித்தாரோ, அதை செய்து காட்டினார். சொல்வது, யோசிப்பது மற்றும்
செய்வது - மூன்றும் சமமாக இருந்தது. தந்தையை பின்பற்றுங்கள்.
கடைசி வரை தன்னுடைய கடமையை முழுமை யாக ஆற்றினார், கடிதங்களும்
கூட எழுதினார், எத்தனை கடிதங்கள் எழுதினார்? சேவையையும்
விடவில்லை. தந்தையை பின்பற்றுங்கள். அகண்ட (இடையீடு அல்லாத)
வள்ளலாக, வெறும் வள்ளலாக அல்ல, அகண்ட வள்ளலாக நடைமுறையில்,
கடைசி வரை தன் ரூபத்தில் வெளிப் படுத்தினார். கடைசி வரை எந்த
ஆதாரமும் இல்லாமல் தபஸ்வி ரூபத்தில் அமர்ந்தார். இப்பொழுது
குழந்தைகளோ, அமர்வதற்கு ஆதாரம் எடுக்கின்றீர்கள் இல்லையா. ஆனால்
பிரம்மா பாபா ஆதி யிலிருந்து அந்திமம் வரை தபஸ்வி ரூபத்தில்
இருந்தார். கண்களுக்கு கண்ணாடி அணியவில்லை. இது சூட்சம மான
சக்தி. நிராதாரம் (எதையும் சார்ந்து அல்லாத நிலை). சரீரம்
பழையது. நாளுக்கு நாள் இயற்கை, காற்று, நீர் ஆகியவை மாசுபட்டு
வருகின்றது. எனவே பாப்தாதா தங்களிடம் ஏன் ஆதாரத்தை
எடுக்கின்றீர்கள், ஏன் கண்ணாடி அணிகின்றீர்கள் என்று
கேட்பதில்லை. நன்றாக அணிந்து கொள்ளுங்கள். ஆனால் சக்திசாலியான
நிலையை அவசியம் உருவாக்குங்கள். முழு உலகிற்கான காரியத்தை
முடித்து விட்டீர்களா? பாப்தாதா தங்களிடம் கேள்வி கேட்கின்றார்
- விஸ்வ கல்யாண் காரியம் முடிவடைந்து விட்டது என்ற திருப்தி
உங்களுக்கு இருக் கின்றதா? யார் விஸ்வ கல்யாண் காரியம்
முடிவடைந்து விட்டது என்று புரிந்துள்ளீர்கள், அவர்கள் கைகளை
உயர்த்துங்கள். ஒருவர் கூட இல்லையா? (ஒருவர் கூட கைகளை
உயர்த்தவில்லை) பிறகு விநாசம் நடக்க வேண்டும் என்று எப்படி
சொல்கின்றீர்கள்? காரியத்தை முடிக்கவில்லை. நல்லது.
நாலா பக்கங்களிலும் உள்ள - சதா ஊக்கம், உற்சாகத்தின் மூலம்
முன்னேறி செல்லக்கூடிய, சதா தைரியத்தின் மூலம்
பாப்தாதாவிடமிருந்து பலமடங்கு உதவி பெறுவதற்கு பாத்திரமாக ஆகக்
கூடிய குழந்தை களுக்கு, சதா வெற்றி இரத்தினமாக
இருக்கக்கூடியவர்களுக்கு, ஒவ்வொரு கல்பத் திலும் வெற்றியாளராக
ஆகி இருந்தீர்கள், இப்பொழுதும் (வெற்றியாளராக) ஆகி
இருக்கின்றீர்கள் மேலும் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி
யாளர்களாகவே இருப்பீர்கள். அப்படிப்பட்ட வெற்றி யாளர்
குழந்தைகளுக்கு, சதா ஒரு தந்தை, இரண்டாவதாக யாரும் இல்லை என்று
இருக்கக்கூடிய, சன்ஸாரின் (உலகின் மீது) ஈர்ப்பு இல்லாமல்
மேலும் சன்ஸ்காரத்தின் மீது ஈர்ப்பு இல்லாமல், இரண்டு
ஈர்ப்புகளிடமிருந்து முக்தி பெற்று இருக்கக்கூடிய, சதா
பாப்சமான் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மேலும்
நமஸ்காரம்.
ஆசீர்வாதம்:
சதா காலத்திற்கான கவனம் என்பதன் மூலம் வெற்றி மாலையில் மணியாக
வரக்கூடிய, நீண்ட காலத்திற்கான வெற்றியாளர் ஆகுக.
நீண்ட காலத்திற்கான வெற்றியே, வெற்றி மாலையில் மணியாக
ஆக்குகின்றது. வெற்றியாளர் ஆகுவதற்கு சதா தந்தையை தன் முன்னால்
வையுங்கள் - எதை தந்தை செய்தாரோ அதையே நாம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அடியிலும், எது தந்தையின் சங்கல்பமோ, அதுவே குழந்தை
களின் சங்கல்பமாக இருக்க வேண்டும், எது தந்தையின் சொல்லாக
இருந்ததோ அதுவே குழந்தை களின் சொல்லாக இருக்க வேண்டும் -
அப்பொழுதே வெற்றியாளர் ஆகுவீர்கள். இதற்கான கவனம் சதா
காலத்திற்கு இருக்க வேண்டும் அப்பொழுதே சதா காலத்திற்கான
இராஜ்ஜிய பாக்கியம் பலனாக கிடைக்கும் ஏனெனில் எப்படி
புருஷார்த்தமோ (முயற்சியோ), அப்படியே பலன். சதா காலத்திற்கான
புருஷார்த்தம் எனில் சதா காலத்திற்கான இராஜ்ஜிய பாக்கியம்.
சுலோகன்:
சேவையில் சதா ஆஜர் ஆகுவது என்பது உண்மையான அன்பின் அடையாளம்
ஆகும்.
அவ்யக்த சமிக்கை: ஆத்மீக ஸ்திதியில் இருப்பதற்கான பயிற்சி
செய்யுங்கள், உள்நோக்கு முகம் உடையவர்களாக ஆகுங்கள்.
எப்படி ஒரு மனிதன் கண்ணாடி முன்னால் நின்ற உடனேயே அது சுயத்தை
(அந்த மனிதரை) பிரதி பலிக்கும் காரியத்தை செய்து விடுகின்றதோ,
அதே போல் உங்களுடைய ஆத்மீக ஸ்திதி, சக்தி என்ற கண்ணாடி முன்னால்
எந்தவொரு ஆத்மா வந்தாலும், ஒரு நொடியில் சுயத்தினுடைய (ஆத்மாவினுடைய)
சொரூபத்தின் தரிசனத்தை அல்லது சாட்சாத்காரத்தை பெற்று விட
வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு நடத்தையிலும்
ஆன்மீகத் தன்மையின் ஈர்ப்பு இருத்தல் வேண்டும். யார் தூய்மையான,
ஆத்மீக பலம் நிறைந்த ஆத்மாவாக இருக்கின்றார்களோ, அவர்கள்,
அனைவரையும் தன்பக்கம் அவசியம் ஈர்ப்பார்கள்.