29-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த சரீரத்தில்
ஆத்மா பிரவேசம் ஆகும்போது இதற்கு (சரீரத்திற்கு) மதிப்பு
இருக்கும், ஆனால் அலங்காரம் சரீரத்திற்குத்தான், ஆத்மாவிற்கு
அல்ல.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்கள் கடமை என்ன?
நீங்கள் என்ன சேவை செய்ய வேண்டும்?
பதில்:
தன்னைப் போன்றவர்களுக்கு
நரனிலிருந்து நாராயணனாக, நாரியிலிருந்து லட்சுமியாக ஆவதற்கான
யுக்தியைச் சொல்வதே உங்கள் கடமையாகும். நீங்கள் இப்போது
பாரதத்தின் உண்மையான ஆன்மீக சேவை செய்ய வேண்டும். உங்களுக்கு
ஞானத்தின் மூன்றாம் கண் கிடைத் திருக்கிறது எனும்போது உங்களின்
புத்தி மற்றும் நடத்தை மிகவும் தெளிவானதாக இருக்க வேண்டும்.
யார் மீதும் சிறிதளவும் பற்று இருக்கக் கூடாது.
ஓம் சாந்தி.
இரட்டை சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் ஓம் சாந்தி என
பதிலுக்குச் சொல்ல வேண்டும். நம்முடைய சுயதர்மம் சாந்தி.
நீங்கள் இப்போது அமைதிக்காக எங்கும் செல்வதில்லை. மனிதர்கள் மன
அமைதிக்காக சாது சன்னியாசிகளிடம் கூட செல்கின்றனர் இல்லையா!.
இப்போது மனமும் புத்தியும் ஆத்மாவின் இந்திரியங்களாகும். இந்த
சரீரத்துக்கு கர்மேந்திரியங்கள் இருப்பது போல மனம், புத்தி
மற்றும் கண். இந்த (ஸ்தூல) கண்கள் இருப்பது போல அந்த கண் அல்ல.
ஓ பிரபு, கண்ணில்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் என சொல்கின்றனர்.
இப்போது பிரபு என்றோ ஈஸ்வரன் என்றோ சொல்லும்போது தந்தையின்
அன்பு பிரதிபலிப் பதில்லை. தந்தை யிடமிருந்து குழந்தைகளுக்கு
ஆஸ்தி கிடைக்கிறது. இங்கே நீங்கள் தந்தைக்கு முன்பாக
அமர்ந்துள்ளீர்கள். படிக்கவும் செய்கிறீர்கள். உங்களை யார்
படிப்பிப்பது? பரமாத்மா அல்லது பிரபு படிப்பிக் கிறார் என
நீங்கள் சொல்வதில்லை. சிவபாபா கற்பிக்கிறார் என நீங்கள்
சொல்வீர்கள். பாபா எனும் வார்த்தை முற்றிலும் எளிமையானது.
பாப்தாதாவாக இருக்கிறார். ஆத்மாவை ஆத்மா என்றுதான்
சொல்லப்படுகிறது, அது போல அவர் பரம ஆத்மா ஆவார். நான் பரம ஆத்மா
அதாவது பரமாத்மா, உங்களுடைய தந்தை என அவர் சொல்கிறார். மேலும்
பரமாத்மாவாகிய எனக்கு நாடகத்தின்படி சிவன் என
பெயரிடப்பட்டுள்ளது. நாடகத்தில் அனைவருக்கும் பெயர் தேவை அல்லவா?
சிவனுடைய கோவில்களும் இருக்கின்றன. பக்தி மார்க்கத்தவர்கள்
ஒன்றுக்குப் பதிலாக பல பெயர்களை வைத்து விட்டனர். மேலும்
அளவற்ற கோவில்களைக் கட்டியபடி இருக் கின்றனர். பொருள்
ஒன்றுதானாகும். சோம்நாத் கோவில் எவ்வளவு பெரியது, எவ்வளவு
அலங்கரிக்கின்றனர். மாளிகைகள் முதலானவைகளுக்கும் கூட எவ்வளவு
அலங்காரத்தை செய் கின்றனர். ஆத்மாவுக்கு எந்த அலங்கார மும்
கிடையாது, அப்படியே பரம ஆத்மாவுக்கும் கூட எந்த அலங்காரமும்
கிடையாது. அவர் புள்ளியாக இருக்கிறார். மற்றபடி அலங்காரங்கள்
சரீரங்களுக் கானதாகும். தந்தை கூறுகிறார் - எனக்கும் அலங்காரம்
கிடையாது, ஆத்மாக்களுக்கும் அலங்காரம் கிடையாது. ஆத்மா
புள்ளியாகத்தான் இருக்கிறது. இவ்வளவு சிறிய புள்ளி நடிப்பை
நடிக்க முடியாது. அந்த சின்னஞ்சிறிய புள்ளி சரீரத்தில் பிரவேசம்
செய்தது என்றால் எத்தனை விதமான அலங்காரங்கள் ஏற்படுகின்றன.
மனிதர்களின் பெயர்கள் எத்தனை இருக்கின்றன. ராஜா, ராணியின்
அலங்காரங்கள் எப்படி நடக்கின்றன, ஆத்மாவோ எளிமையான புள்ளியாக
உள்ளது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இதைக் கூட
புரிந்துள்ளீர்கள். ஆத்மாதான் ஞானத்தை தாரணை செய்கிறது.
எனக்குள்ளும் ஞானம் இருக்கிறது அல்லவா என்று தந்தை கூறுகிறார்.
சரீரத்தில் ஞானம் இருப்பதில்லை. ஆத்மாவாகிய எனக்குள் ஞானம்
இருக்கிறது. உங்களுக்கு ஞானம் சொல்வதற்காக நான் சரீரம் எடுக்க
(பிரவேசிக்க) வேண்டியுள்ளது. சரீரம் இன்றி நீங்கள் கேட்க
முடியாது. கண்ணிழந்தவர்களுக்கு வழி காட்டுங்கள். . . என இந்த
பாடலை உருவாக்கியுள்ளனர் - சரீரத்துக்கு வழி காட்ட வேண்டுமா?
இல்லை. ஆத்மாவுக்குத்தான். ஆத்மாதான் கூப்பிடுகிறது.
சரீரத்துக்கு இரண்டு கண்கள் உள்ளன. மூன்று இருக்க முடியாது.
மூன்றாம் கண் என்ற திலகத்தையும் இங்கே நெற்றியில்
கொடுக்கின்றனர். சிலர் புள்ளி போல் மட்டும் கொடுக்கின்றனர்,
சிலர் கோடு இழுக்கின்றனர். ஆத்மா புள்ளியாக இருக்கிறது. மற்றபடி
ஞானத்தின் மூன்றாம் கண் கிடைக்கிறது. ஆத்மாவுக்கு முன்னர் இந்த
ஞானத்தின் மூன்றாம் கண் இருக்கவில்லை. எந்த மனிதரிடத்திலும்
இந்த ஞானம் இல்லை, இதனால் ஞானக்கண்ணற்றவர் (ஞானமில்லாதவர்) என
சொல்லப்படுகின்றனர். மற்றபடி இந்த ஸ்தூல கண்களோ அனைவருக்கும்
உள்ளது. முழு உலகிலும் யாருக்கும் இந்த மூன்றாம் கண் இல்லை.
நீங்கள் அனைத்திலும் உத்தமமான பிராமண குலத்தினர். பக்தி
மார்க்கத்திற்கும் ஞான மார்க்கத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்
உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் படைப்பவர் மற்றும்
படைப்பின் முதல்-இடை-கடைசியைப் பற்றி அறிந்து சக்ரவர்த்தி
இராஜாவாக ஆகிறீர்கள் - ஐ.சி.எஸ் படித்தவர்கள் மிகவும் உயர்ந்த
பதவி அடைவது போல. ஆனால் இங்கே படிப்பின் மூலம் யாரும்
பாராளுமன்ற உறுப்பினராக எதுவும் ஆவது இல்லை. இங்கே தேர்தல்
நடக்கிறது, வாக்குகளின் அடிப்படையில் எம்.பி முதலானவர்களாக
ஆகின்றனர். இப்போது ஆத்மாக்களாகிய உங்களுக்கு தந்தையின் ஸ்ரீமத்
கிடைக்கிறது. வேறு யாரும் நான் ஆத்மாக்களுக்கு வழி கொடுக்கிறேன்
என சொல்வதில்லை. அவர்கள் அனைவரும் தேக அபிமானிகள். தந்தைதான்
வந்து ஆத்ம அபிமானி ஆவதற்காகக் கற்றுத் தருகிறார். அனைவரும்
தேக அபிமானிகள். மனிதர்கள் சரீரத்திற்கு எவ்வளவு பகட்டாக
அலங்காரம் கொடுக்கிறார்கள். இங்கேயோ தந்தை ஆத்மாக்களைத்தான்
பார்க்கிறார். சரீரம் அழியக்கூடியது, ஒரு பைசாவுக்குக்கூட
பயனில்லாதது. ஆனாலும் மிருகங்களின் தோல் விற்கப் படுகிறது.
மனிதர்களின் சரீரம் எதற்கும் பயனற்றதாக உள்ளது. இப்போது தந்தை
வந்து மதிப்பு மிக்கவர்களாக ஆக்குகிறார்.
நாம் இப்போது தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் எனும்போது அந்த போதை ஏறி
இருக்க வேண்டும். ஆனால் இந்த போதை கூட வரிசைக்கிரமமான
முயற்சியின் அடிப்படையில்தான் இருக்கிறது. செல்வத்தைக் குறித்த
போதை கூட இருக்கிறதல்லவா? இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
மிகவும் செல்வந்தர்களாக ஆகிறீர்கள். உங்களின் வருமானம்
அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. உங்களின் மகிமையும் பல
விதமானதாக இருக்கிறது. நீங்கள் மலர்த்தோட்டத்தை உருவாக்கு
கிறீர்கள். சத்யுகம் மலர்த் தோட்டம் எனப்படுகிறது. இதனுடைய
நாற்று எப்போது நடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
உங்களுக்கு பாபா புரிய வைக்கிறார். ஹே பகவானே! வாருங்கள், என்று
அழைக்கவும் செய் கிறார்கள். அவரை தோட்டக்காரன் என்று சொல்ல
முடியாது. செண்டர்களைப் பராமரிக்கக் கூடிய குழந்தைகளாகிய
நீங்கள் தான் தோட்டக்காரர்களாவீர்கள். அனேக விதமான
தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். எஜமானன் ஒருவரே ஆவார். முகலாய
தோட்டத்தின் தோட்டக்காரருக்கு சம்பளம் கூட அதிகமாக கிடைக்கும்
அல்லவா?. அனைவரும் வந்து பார்க்கக்கூடிய அளவிற்கு அழகாக
தோட்டத்தை உருவாக்குகிறார்கள். முகலாயர்கள் மிகவும் ஆர்வமாக
இருந்தார்கள், அவருடைய மனைவி இறந்ததும் தாஜ்மகாலை கட்டினார்.
அவருடைய பெயர் புகழடைகிறது. எவ்வளவு நல்ல - நல்ல நினைவுச்
சின்னங்களை உருவாக்கியுள்ளார்கள். ஆக மனிதர்களுக்கு எவ்வளவு
மகிமை ஏற்படுகிறது என்று பாபா புரிய வைக்கிறார். மனிதர்களோ
மனிதர்கள் தான். சண்டையில் ஏராளமான மனிதர்கள் இறந்து
போகிறார்கள். பிறகு என்ன செய்கிறார்கள்? பெட்ரோல் ஊற்றி எரித்து
விடுகிறார்கள். சில உடல்கள் அப்படியே விழுந்து கிடக்கும், தகனம்
செய்வதில்லை. சிறிதளவு கூட மதிப்பில்லை. இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு நாராயண போதை எவ்வளவு ஏற வேண்டும். இது உலகத்தின்
எஜமானன் ஆவதற்கான போதையாகும். சத்ய நாராயணனின் கதை எனும்போது
கண்டிப்பாக நாராயணனாக ஆவார்கள். அத்மாவிற்கு ஞானத்தின்
மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. மூன்றாவது கண்ணைக் கொடுக்கக்
கூடியவர் தந்தையாவார். மூன்றாவது கண்ணின் கதை கூட உள்ளது. இந்த
அனைத்து கதைகளின் அர்த்தத்தை தந்தை புரிய வைக்கிறார். இந்த
கதைகளை சொல்லக் கூடியவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. அமரகதை
கூட சொல்கிறார்கள். அமர்நாத் போன்ற தூர-தூரமான இடங்களுக்குச்
செல்கிறார்கள். தந்தை இங்கே வந்து சொல்கிறார். சூட்சுமவதனத்தில்
இருந்து கொண்டு சொல்வ தில்லை. அங்கே அமர்ந்து பார்வதிக்கு
அமரகதை சொல்ல முடியுமா என்ன? இதுபோன்ற கதைகள்
உருவாக்கப்பட்டதும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது, மீண்டும்
நடக்கும். தந்தை குழந்தை களாகிய உங்களுக்கு பக்தி மற்றும்
ஞானத்தின் வேறுபாட்டைச் சொல்கிறார். இப்போது உங்களுக்கு
ஞானத்தின் மூன்றாம் கண் கிடைத்துவிட்டது. ஹே பிரபு !
குருடர்களாகிய எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று அழைக்கிறார்கள்.
பக்தி மார்க்கத்தில் அழைக்கிறார்கள். தந்தை வந்து மூன்றாவது
கண்ணைக் கொடுக்கிறார் என்பது உங்களைத் தவிர வேறு யாருக்கும்
தெரியாது. ஞானத்தின் மூன்றாவது கண் இல்லை யென்றால் அவர்களை
குருடர், இருட்டில் இருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. கண்கள்
கூட சிலருக்கு அப்படியும், சிலருக்கு இப்படியுமாக இருக்கிறது.
சிலருக்கு அழகான கண்களாக இருக்கிறது. அதை வைத்து பரிசும்
கொடுக்கப்படுகிறது, மிஸ் இந்தியா, மிஸ் இன்னார் என்று பெயரும்
வைக்கிறார்கள். இப்போது குழந்தை களாகிய உங்களை தந்தை எந்த
நிலையிலிருந்து என்னவாக மாற்றுகின்றார். அங்கே இயற்கையான அழகு
இருக்கும். கிருஷ்ணருக்கு ஏன் இவ்வளவு மகிமை? ஏனெனில்
அனைவரையும் விட மிகவும் அழகான வராக ஆகின்றார். நம்பர் ஒன்
கர்மாதீத நிலையை அடைகின்றார், ஆகையினால் நம்பர் ஒன் மகிமை பாடப்
பட்டுள்ளது. இதைக் கூட தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். பாபா
மீண்டும்-மீண்டும் சொல் கிறார் - குழந்தைகளே, மன்மனாபவ. ஹே
ஆத்மாக்களே! தன்னுடைய தந்தையை நினைவு செய்யுங்கள்.
குழந்தைகளிலும் வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா?. லௌகீக
தந்தைக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், அதில் யார்
மிகவும் புத்திசாலியோ அவர்களை நம்பர் ஒன்னில் வைப்பார்கள்
அல்லவா?. மாலையில் மணிகள் இருக்கிறது அல்லவா?. இவர் இரண்டாம்
எண், மூன்றாம் எண் என்று சொல்கிறார்கள். ஒருபோதும் ஒரே
மாதிரியாக இருப்பதில்லை. தந்தை யின் அன்பும் கூட
வரிசைக்கிரமமாக இருக்கிறது. அது எல்லைக்குட்பட்ட விசயம் இது
எல்லைக் கப்பாற்பட்ட விசயமாகும்.
எந்த குழந்தைகளுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறதோ,
அவர்களின் புத்தி மற்றும் நடத்தை மிகவும் நன்றாக இருக்கும்.
மலர்களின் ராஜா இருப்பது போல, இந்த பிரம்மா மற்றும் சரஸ்வதி
ராஜா மற்றும் ராணி மலர்களாக இருக்கிறார்கள். ஞானம் மற்றும்
நினைவு இரண்டிலும் தீவிரமாக இருக்கிறார்கள். நாம்
தேவதையாகின்றோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர் கள்.
முக்கியமானவர்கள் 8 ரத்தினங்களாக ஆகிறார்கள். முதல்-முதலில்
பூ, பிறகு ஜோடி பிரம்மா-சரஸ்வதி. மாலை உருட்டுகிறார்கள் அல்லவா?
உண்மையில் உங்களுடைய பூஜை அல்ல, நினைவு செய்யப்படுகிறீர்கள்.
உங்களின் மீது மலர்களை அர்ச்சிக்க முடியாது. எப்போது சரீரம்
தூய்மையாக ஆகுமோ அப்போது தான் மலர்களால் அர்ச்சிக்க முடியும்.
இங்கே யாருடைய சரீரமும் தூய்மையாக இல்லை. அனைவரும் விஷத்தால்
உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகையினால் விகாரிகள்
என்றழைக்கப்படுகிறார்கள். இந்த லஷ்மி-நாராயணரை சம்பூரண
நிர்விகாரிகள் என்று சொல்லப்படுகிறது. அங்கேயும் குழந்தைகள்
பிறக்கிறார்கள் அல்லவா?. ஏதோ சோதனைக்குழாயில் குழந்தை உருவாகும்
என்று அர்த்தமல்ல. இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய
விசயங்களாகும். குழந்தைகளாகிய உங்களை இங்கே ஏழு நாள் பட்டியில்
அமர்த்தப் படுகிறது. பட்டியில் சில செங்கற்கள் நன்றாக
பக்குவமடைகிறது, சில கற்கள் வேகாமலேயே இருந்து விடுகிறது.
சூளையின் உதாரணம் காட்டப்படுகிறது. செங்கற்களின் சூளையைப் பற்றி
சாஸ்திரங்களில் வர்ணனை செய்யப்படவில்லை. பிறகு அதில் பூனையின்
விசயம் கூட இருக் கிறது. குலேபகாவலி கதையில் கூட பூனையை
காட்டியுள்ளார்கள். தீபத்தை அணைத்து விட்டது. உங்களுடைய
நிலையும் கூட அப்படி ஆகிறது அல்லவா?. மாயை எனும் பூனை தடையை
ஏற்படுத்துகிறது. உங்களுடைய நிலையை கீழே தள்ளி விடுகிறது.
தேக-அபிமானம் முதல் நம்பர் தடை, பிறகு மற்ற விகாரங்களும் வந்து
விடுகிறது. மோகம் கூட அதிகமாக ஏற்படுகிறது. நான் பாரதத்தை
சொர்க்கமாக்கக் கூடிய ஆன்மீக சேவை செய்வேன் என்று குழந்தைகள்
சொல் கின்றனர், ஆனால் மோகத்திற்கு வசமாகி, நாங்கள் அனுமதிக்க
மாட்டோம் என்று தாய்- தந்தையர் சொல்கிறார்கள். இது கூட எவ்வளவு
மோகமாக இருக்கிறது. நீங்கள் மோகம் எனும் பூனையாக ஆகக்கூடாது.
உங்களுடைய குறிக்கோளே இது தான்(லஷ்மி நாராயணன்). தந்தை வந்து
மனிதனி லிருந்து தேவதையாக, நரனிலிருந்து நாராயணனாக
மாற்றுகின்றார். உங்களுடைய கடமை தன்னைப் போன்றவர்களுக்கு சேவை
செய்வது, பாரதத்திற்கு சேவை செய்வதாகும். நாம் எப்படி இருந்தோம்,
எப்படி ஆகி விட்டோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது
மீண்டும் இராஜாவுக்கெல்லாம் இராஜாவாக ஆவதற்கு முயற்சி
செய்யுங்கள். நாம் நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றோம்
என்பதை தெரிந்துள்ளீர்கள். இதில் கஷ்டப்படுவதற்கான விஷயம்
எதுவும் இல்லை. வினாசத்திற்காக நாடகத்தில் யுக்திகள்
உருவாக்கப்பட்டுள்ளன.. முன்பு கூட ஆயுதங்களினால் சண்டை நடந்தது.
எப்போது நீங்கள் முழுமையாக தயாராகி விடுவீர்களோ, அனைவரும்
மலர்களாக ஆகி விடுவீர்களோ, அப்போது வினாசம் நடக்கும். சிலர்
மலர்களின் ராஜா வாக இருக்கிறார்கள், சிலர் ரோஜாவாகவும், சிலர்
மல்லிகைப் பூக்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களை
நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் - நான் எருக்கம் பூவாக
இருக்கிறேனா அல்லது எந்த மலராக இருக்கிறேன்? பலருக்கு ஞானத்தின்
தாரணை எதுவுமே ஏற்படுவதில்லை. வரிசைக்கிரமமாகத்தான் ஆவார்கள்
அல்லவா. ஒன்று முற்றிலும் உயர்ந்தவர் களாக, அல்லது முற்றிலும்
தாழ்ந்தவர்களாக ஆவார்கள். இங்கே தான் இராஜ்யம் உருவாகிறது.
பாண்டவர்கள் கரைந்து போனார்கள் என்று சாஸ்திரத்தில்
காட்டப்பட்டுள்ளது, பிறகு என்ன ஆனார்கள் போன்ற எதுவும்
தெரிவதில்லை. நிறைய கதைகளை உருவாக்கியுள்ளார்கள். ஆனால்
அதுபோன்ற எந்த விசயமும் நடக்கவில்லை. இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் எவ்வளவு தூய்மையான புத்தியுடையவர்களாக ஆகின்றீர்கள்.
பாபா உங்களுக்கு பலவிதமாக புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார்,
எவ்வளவு சகஜமானது. தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்ய
வேண்டும். நான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவன் என்று பாபா
சொல்கின்றார். உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும்
தூய்மையற்றதாக உள்ளது, இப்போது தூய்மை யாக வேண்டும். ஆத்மா
தூய்மையாகும்போது சரீரமும் தூய்மையாகிறது. இப்போது நீங்கள்
அதிகம் உழைக்க வேண்டும். குழந்தைகள் மிகவும் பலவீனமாக
இருக்கிறார்கள், என்று பாபா கூறுகிறார். நினைவு மறந்து போகிறது.
பாபா அவரே தன்னுடைய அனுபவத்தை சொல்கின்றார். சிவபாபா எனக்கு
உணவு ஊட்டுகிறார் என்று சாப்பிடும்போது நினைக்கிறேன். ஆனால்
மறந்து போய்விடுகிறது, பிறகு மீண்டும் நினைவுக்கு வருகிறது.
உங்களிலும் கூட முயற்சியின்படி வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள்.
சிலர் பந்தன முக்தர்களாக இருந்தும் கூட பந்தனத்தில் மாட்டிக்
கொள்கிறார்கள். தர்மத்திற்காகவும் கூட குழந்தைகளை தத்தெடுத்துக்
கொள்கிறார்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின்
மூன்றாவது கண்ணை கொடுக்கக் கூடிய தந்தை கிடைத்து விட்டார்.
இதற்கு மூன்றாம் கண்ணின் கதை அதாவது முன்றவது கண் கிடைக்கக்
கூடிய கதை என்று பெயரிட்டுள்ளார்கள். இப்போது நீங்கள்
நாத்திகர்களிலிருந்து ஆஸ்திகர்களாக ஆகிறீர்கள். தந்தை
புள்ளியாக இருக்கிறார், ஞானக்கடலாக இருக்கிறார் என்பதை
குழந்தைகள் தெரிந்துள்ளனர். அவர்களோ பெயர் ரூபத்திலிருந்து
தனிப்பட்டவர் என்று சொல்லி விடுகிறார்கள். அட ஞானக்கடல் என்றால்
ஞானம் சொல்பவராக இருப்பார் அல்லவா. அவருடைய ரூபமாக லிங்கத்தைக்
காட்டுகிறார்கள், பிறகு ஏன் அவரை பெயர் ரூபத்திலிருந்து
தனிப்பட்டவர் என்று சொல் கிறார்கள்? ஆயிரக்கணக்கான பெயர்களை
வைத்து விட்டார்கள். குழந்தைகளின் புத்தியில் இந்த முழு ஞானமும்
நன்றாகப் பதிய வேண்டும். பரமாத்மாவை ஞானக்கடல் என்று
சொல்கிறார்கள். முழு காட்டையும் பேனாவாக்கி எழுதினாலும் இதற்கு
முடிவு கிடையாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இப்போது நாம் தந்தையின் மூலமாக மதிப்புமிக்கவர்களாக
ஆகின்றோம், நாம் தான் தேவதைகளாக ஆகப்போகிறவர்கள், என்ற நாராயண
போதையிலேயே இருக்க வேண்டும், பந்தனத்திலிருந்து விடுதலையாகி
சேவை செய்ய வேண்டும். பந்தனங்களில் போய் மாட்டிக் கொள்ளக்
கூடாது.
2) ஞானம்-யோகத்தில் தீவிரமானவராகி தாய்-தந்தைக்குச் சமமாக
மலர்களின் ராஜாவாக ஆக வேண்டும் மற்றும் தன்னைப்
போன்றவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:
தனது அனைத்து பொக்கிஷங்களையும் மற்ற ஆத்மாக்களின் சேவையில்
ஈடுபடுத்தி ஒத்துழைப்பாளர் ஆகி விடக்கூடிய சகஜயோகி ஆவீர்களாக.
சகஜயோகி ஆவதற்கான சாதனமாவது- சதா தங்களது எண்ணங்கள் மூலமாக,
வார்த்தைகள் மூலமாக, ஒவ்வொரு காரியத்தின் மூலமாக உலகத்தின்
அனைத்து ஆத்மாக்களின் பொருட்டு சேவாதாரி என்று புரிந்து
சேவையிலேயே அனைத்தையும் ஈடுபடுத்துவது. பிராமண வாழ்க்கை யில்
என்னவெல்லாம் சக்திகளின், குணங்களின், ஞானத்தின் மற்றும்
சிறந்த சம்பாத்தியத்திற்கான காலத்தின் பொக்கிஷங்கள் தந்தை
மூலமாக பிராப்தி ஆகி உள்ளதோ அவற்றை சேவையில் ஈடுபடுத்துங்கள்.
அதாவது சகயோகி ஆனீர்கள் என்றால் சகஜயோகி ஆகியே விடுவீர்கள்.
ஆனால் யார் சம்பன்னமாகி இருக்கிறார்களோ அவர்களே சகயோகி ஆக
முடியும். சகயோகி ஆவது என்றால் மகாதானி ஆவதாகும்.
சுலோகன்:
எல்லையில்லாத வைராகி ஆனீர்கள் என்றால் கவர்ச்சி செய்யக்கூடிய
அனைத்து சம்ஸ்காரங்களும் எளிதாகவே முடிந்து போய் விடும்.
அவ்யக்த சமிக்ஞை: சங்கல்பங்களின் சக்தியை சேமிப்பு செய்து
சிறந்த சேவைக்கு கருவி ஆகுங்கள்.
எப்படி தங்களது ஸ்தூல காரியத்தின் நிகழ்ச்சி நிரலை அன்றாட
தினசரிக்கேற்ப அமைத்து கொள்கிறீர்களோ அதே போல மனசா சக்தி
வாய்ந்த ஸ்திதியின் புரோகிராம் செட் செய்தீர்கள் என்றால்
சங்கல்ப சக்தி சேமிப்பு ஆகி கொண்டே போகும். தங்களது மனதை சக்தி
வாய்ந்த சங்கல்பங்களில் பிஸியாக வைத்தீர்கள் என்றால் மனம்
நிலைகுலைந்து போவதற்கான நேரமே கிடைக்காது. மனம் எப்பொழுதும்
செட் அதாவது ஒருமுகப்பட்டு இருந்தது என்றால் இயல்பாகவே நல்ல
அதிர்வலைகள் பரவும் சேவை நடக்கும்.