29-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தங்களுடைய பாதுகாப்பிற்காக விகாரங்கள் என்ற மாயையின் பிடியிலிருந்து தப்பித்து இருக்க வேண்டும். தேக அபிமானத்தில் ஒரு பொழுதும் வரக் கூடாது.

கேள்வி:
புண்ணிய ஆத்மா ஆவதற்காக தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் எந்த ஒரு முக்கிய அறிவுரை அளிக்கிறார்?

பதில்:
பாபா கூறுகிறார் - குழந்தைகளே புண்ணிய ஆத்மா ஆக வேண்டும் என்றால் (1) ஸ்ரீமத்படி சதா நடந்து கொண்டே இருங்கள். நினைவு யாத்திரையில் கவனக் குறைவாக இருக்காதீர்கள். (2) ஆத்ம உணர்வுடையவராக (ஆத்ம அபிமானி) இருப்பதற்கான முழுமையான புருஷார்த்தம் (முயற்சி) செய்து காமம் என்ற மகா எதிரியின் மீது வெற்றி அடையுங்கள். புண்ணிய ஆத்மா ஆகி இந்த துக்க தாமத்தைக் கடந்து சுக தாமம் செல்வதற்கான நேரம் இதுவே ஆகும்.

ஓம் சாந்தி.
தந்தை தான் தினமும் குழந்தைகளிடம் கேட்கிறார். சிவபாபாவிற்கு குழந்தை குட்டிகள் உடையவர் என்று கூற மாட்டார்கள். ஆத்மாக்களோ அனாதியாக இருக்கவே இருக்கிறார்கள். தந்தையும் இருக்கிறார். தந்தை (பாப்) மற்றும் மூத்த சகோதரர் (தாதா) இருவரும் இச்சமயத்தில் இருக்கும் பொழுது தான் குழந்தைகளுக்கு பராமரிப்பு செய்ய வேண்டி இருக்கிறது. எத்தனை குழந்தைகளை பராமரிக்க வேண்டி உள்ளது. ஒவ்வொருவருடைய கணக்கும் வைக்க வேண்டி உள்ளது. எப்படி லௌகீக தந்தைக்கு கூட கவலை இருக்கிறது அல்லவா? நம்முடைய குழந்தை கூட இந்த பிராமண குலத்தில் வந்து விட்டால் நன்றாக இருக்குமே என்று நினைப்பார். நம்முடைய குழந்தை கூட தூய்மையாக ஆகி தூய்மையான உலகத்திற்குச் செல்லட்டுமே! எங்காவது இந்த பழைய மாயையின் வாய்க்காலில் விழுந்து விடாமல் இருக்க வேண்டுமே. எல்லையில்லாத தந்தைக்கு குழந்தைகள் பற்றிய கவலை இருக்கிறது. எத்தனை சென்டர்கள் உள்ளன. எந்த குழந்தையை எந்த சென்டருக்கு அனுப்பினால் பாதுகாப்பாக இருக்க முடியும். தற்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது கூட கடினமாக உள்ளது. உலகத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. சொர்க்கத்திலோ ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு உள்ளது. இங்கு ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை. எங்கேயாவது விகாரங்கள் என்ற மாயையின் பிடியில் சிக்கி விடுகிறார்கள். இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களுக்கு பாதுகாப்பு உள்ளது. சத்தியமானவரின் தொடர்பு கூட இங்கு உள்ளது. இங்கேயே தான் துக்கதாமத்தைக் கடந்து சுதாமத்திற்குச் செல்ல வேண்டும். ஏனெனில் துக்கதாமம் என்பது என்ன, சுகதாமம் என்பது என்ன, என்பது இப்பொழுது குழந்தை களாகிய உங்களுக்குத் தெரிய வந்துள்ளது. உண்மையில் இப்பொழுது இருப்பது துக்கதாமம் ஆகும். நாம் நிறைய பாவங்கள் செய்துள்ளோம். மேலும் அங்கு புண்ணிய ஆத்மாக்கள் தான் இருப்பார்கள். நாம் இப்பொழுது புண்ணிய ஆத்மா ஆக வேண்டும். இப்பொழுது நீங்கள் ஒவ்வொரு வரும் தங்கள் 84 பிறவிகளின் சரித்திரம் பூகோளத்தை அறிந்து கொண்டு விட்டுள்ளீர்கள். உலகத்தில் யாருமே 84 பிறவிகளின் சரித்திரம் பூகோளத்தை அறியாமல் உள்ளார்கள். இப்பொழுது தந்தை வந்து முழு வாழ்க்கை சரித்திரம் பற்றி புரிய வைத்துள்ளார். இப்பொழுது நாம் நினைவு யாத்திரை மூலமாக முழுமையாக புண்ணிய ஆத்மா ஆக வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதில் தான் நிறைய பேர் கவனக் குறைவாக இருப்பதால் ஏமாந்து போகிறார்கள். இச்சமயத்தில் கவனக் குறைவாக இருப்பது நன்றாக இல்லை என்று தந்தை கூறுகிறார். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். அதில் கூட முக்கியமான விஷயம் கூறுகிறார்: ஒன்று நினைவு யாத்திரையில் இருங்கள். இன்னொன்று காமம் என்ற மகா எதிரி மீது வெற்றி அடையவேண்டும். தந்தையை எல்லோரும் அழைக்கிறார்கள். ஏனெனில் அவரிடமிருந்து சாந்தி மற்றும் சுகத்தின் ஆஸ்தி ஆத்மாக்களுக்கு கிடைக்கிறது. இதற்கு முன்பு தேக அபிமானியாக (தேக உணர்வுடையவராக) இருந்தீர்கள். அப்பொழுது எதுவுமே தெரியாமல் இருந்தது. இப்பொழுது குழந்தைகளை ஆத்ம அபிமானியாக ஆக்கப்படுகிறது. புதியவர்களுக்கு முதன் முதலில் ஒன்று எல்லைக்குட்பட்ட மற்றும் இரண்டாவது எல்லையில்லாத தந்தையின் அறிமுகம் அளிக்க வேண்டும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் (பஹிஷ்த்) அதிர்ஷ்டம் கிடைக் கிறது. எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து நரகத்தின் (தோஜக்) அதிர்ஷ்டம் கிடைக்கிறது. குழந்தை வாலிபனாக ஆகி விடும் பொழுது சொத்திற்கு அதிகாரி (உரிமையுள்ள) ஆகிறார். அறிவு வந்த பிறகு மெல்ல மெல்ல மாயைக்கு அடிமையாகி விடுகிறார்கள். இவை எல்லாமே இராவண ராஜ்யத்தின் (விகாரி உலகம்) பழக்க வழக்கங்கள். இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த பழைய உலகத்தின் விநாசம் ஆகி கொண்டிருக்கிறது. ஒரு கீதையில் தான் விநாசத்தின் வர்ணனை உள்ளது. வேறு எந்த சாஸ்திரத்திலும் மகாபாரத போரின் வர்ணனை இல்லை. கீதையினுடையதே இந்த புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். கீதையின் யுகம் என்றால் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை. கீதை இருப்பதே தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரமாக.எனவே இது கீதையின் யுகம் ஆகும். இப்பொழுது புது உலகத்தின் ஸ்தாபனை ஆகி கொண்டிருக்கிறது. மனிதர்களும் மாற வேண்டி உள்ளது. மனிதனிலிருந்து தேவதை ஆக வேண்டும். புது உலகத்தில் அவசியம் தெய்வீக குணங்கள் உடைய மனிதர்கள் வேண்டும் அல்லவா? இந்த விஷயங்களை உலகம் அறியாமல் உள்ளது. அவர்கள் கல்பத்தின் ஆயுளுக்கு நிறைய காலத்தை (வருடங்கள்) கொடுத்து விட்டுள்ளார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை புரிய வைத்து கொண்டிருக்கிறார் - உண்மையில் பாபா நமக்கு கற்பிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். கிருஷ்ணரை ஒரு பொழுதும் தந்தை ஆசிரியர் அல்லது குரு என்று கூற முடியாது. கிருஷ்ணர் ஆசிரியராக இருந்திருந்தால் எங்கிருந்து கற்றுக் கொண்டி ருப்பார்? அவரை ஞானக் கடல் என்று கூற முடியாது.

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மிகப் பெரியவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். சேவையை (விருத்தி) எப்படி விரிவுபடுத்தலாம் என்பதை தங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். வேகமான பாதையின் சேவை எவ்வாறு ஆகலாம். பிரம்மா குமாரி களுக்காக இப்பொழுது இவ்வளவு குழப்பம் செய்கிறார்கள். இவர்களோ உண்மையானவர்கள் என்று பின்னால் புரிந்து கொள்வார்கள். மற்றபடி உலகம் இருப்பதே பொய்யாக. எனவே உண்மை யின் படகை அசைய வைத்து கொண்டே இருப்பார்கள். புயல்களோ வருகின்றன அல்லவா? நீங்கள் கடந்து செல்லும் படகு ஆவீர்கள். நாம் இந்த மாயாவி உலகத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லாவற்றையும் விட முதல் நம்பரில் வரும் புயல் தேக அபிமானத் தினுடையது ஆகும். அது எல்லாவற்றையும் விட தீயதாகும். அது தான் அனை வரையும் (பதீதமாக) தூய்மை யற்றதாக ஆக்கி உள்ளது. அதனால் தான் காமம் மகா எதிரி ஆகும் என்று தந்தை கூறுகிறார். இது மிகவுமே பலத்த புயலைப் போலாகும். ஒரு சிலர் இதன் மீது வெற்றி அடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இல்லற வாழ்க்கையில் சென்றுள்ளார்கள். பிறகு த்ன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். குமார் குமாரிகளுக்கோ மிகவும் சுலபம் ஆகும். எனவே பெயர் கூட கன்னையா(கன்னிகைகளினுடையவர்) என்று பாடப்பட்டுள்ளது. இத்தனை கன்னிகைகள் அவசியம். சிவபாபாவினுடையவராக இருப்பார்கள். தேகதாரி கிருஷ்ணருக்கோ இத்தனை கன்னிகைகள் இருக்க முடியாது. இப்பொழுது நீங்கள் இந்த படிப்பின் மூலம் பட்டத்து ராணி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இதில் தூய்மை கூட முக்கியமாக இருக்க வேண்டும். நினைவின் சார்ட் சரியாக உள்ளதா என்று நம்மை நாமே பார்க்க வேண்டும். பாபா விடம் ஒரு சிலருடையது 5 மணியின், ஒரு சிலருடையது 2-3 மணியின் சார்ட் கூட வருகிறது. ஒரு சிலரோ எழுதுவதே இல்லை. மிகவும் குறைவாக நினைவு செய்கிறார்கள். எல்லோருடைய நினைவும் ஒரே சீரானதாக இருக்க முடியாது. இனியும் ஏராளமான குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள். நான் எந்த அளவிற்கு பதவி அடைய முடியும் என்று ஒவ்வொருவரும் தங்களது சார்ட்டைப்பார்க்க வேண்டும். எந்த அளவிற்கு குஷி இருக்கிறது? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை யினுடையவராக ஆகி இருக்கும் பொழுது நமக்கு ஏன் எப்பொழுதும் குஷி இருக்கக் கூடாது. நாடகப்படி நீங்கள் நிறைய பக்தி செய்துள்ளீர்கள். பக்தர்களுக்கு பலன் அளிப்பதற்காகவே தந்தை வந்துள்ளார். இராவண ராஜ்யத்திலோ விகர்மங்கள் ஆகிக் கொண்டு தான் இருக்கும். நீங்கள் சதோபிரதான உலகத்திற்குச் செல்வதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். யார் முழுமை யாக புருஷார்த்தம் செய்வதில்லையோ அவர்கள் சதோவில் வருவார்கள். எல்லோருமே இவ்வளவு ஞானம் எடுப்பார்களா என்ன? பாபாவின் செய்தியை (சந்தேஷ்) அவசியம் கேட்பார்கள். பிறகு எங்கு இருந்தாலும் சரி. எனவே ஒவ்வொரு மூலைக்கும் செல்ல வேண்டும். வெளி நாடு களில் கூட மிஷன் (சேவை செய்யும் குழு) செல்ல வேண்டும். எப்படி பௌத்தியர்களின், கிறித்தவர் களின் மிஷன் இங்கு உள்ளது அல்லவா? மற்ற தர்மத்தினரை தங்களுடைய தர்மத்தில் கொண்டு வருவதற்கான மிஷன் இருக்கிறது. நாங்கள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தினராக இருந்தோம் என்பதை நீங்கள் புரிய வைக்கிறீர்கள். இப்பொழுது இந்து தர்மத்தினராக ஆகி விட்டுள்ளீர்கள். உங்களிடம் பெரும்பாலும் இந்து தர்மத்தினர் தான் வருவார்கள். சிவனுடைய, தேவதைகளினுடைய பூசாரிகளாக யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் வருவார்கள். எப்படி பாபா ராஜாக்களுக்கு சேவை செய்யுங்கள் என்று கூறினார். அவர்கள் பெரும்பாலும் தேவதைகளின் பூசாரிகளாக இருப்பார்கள். அவர் களுடைய வீடுகளில் கோவில்கள் இருக்கும். அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். நாங்கள் தந்தையுடன் கூட தூர தேசத்திலிருந்து வந்துள்ளோம் என்று நீங்கள் உணர்ந்திருங்கள். தந்தை வந்திருப்பதே புதிய உலகத்தின் ஸ்தாபனை செய்ய ! நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள். யார் ஸ்தாபனை செய்கிறார்களோ அவர்கள் பாலனையும் செய்வார் கள். நாம் தெய்வீக ராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக, முழு உலகத்தை சொர்க்கமாக ஆக்கு வதற்காக சிவபாபாவுடன் கூட வந்துள்ளோம் என்ற போதை உள்ளுக்குள் இருக்க வேண்டும். இந்த தேசத்தில் என்னவெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியம் ஏற்படுகிறது. பூஜை எப்படி செய்கிறார்கள்? நவராத்திரியில் தேவிகளுக்கு பூஜை ஆகிறது அல்லவா? இரவு உள்ளது என்றால் பகல் கூட இருக்கிறது. என்ன ஒரு குதூகலத்தைப் பார்த்தேன்.. என்று உங்களுடைய ஒரு பாடல் கூட உள்ளது அல்லவா? மண்ணில் பொம்மை செய்து அலங்கரித்து அதற்கு பூஜை செய்கிறார்கள். பிறகு அதன் மீது எவ்வளவு மனம் ஈடுபட்டு விடுகிறது என்றால், அதை மூழ்கடிக்க செல்லும் பொழுது அழ முற்படுகிறார்கள். மனிதர்கள் இறக்கும் பொழுது பாடையையும் எடுத்துச் செல்கிறார்கள். ஹரி ஹரி என்று சொல்லுங்கள், ஹரி ஹரி என்று சொல்லுங்கள் என்று கூறிக்கொண்டே மூழ்கடித்து விடுகிறார்கள். போகிறவர்களோ நிறைய பேர் ஆவார்கள் அல்லவா? நதியோ எப்பொழுதுமே இருக்கிறது. இந்த யமுனை கரை யோரம் இருந்தது. அங்கு நடனம், விளையாட்டுக்கள், லீலைகள் ஆகியவை நிகழ்த்துவார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கோ பெரிய பெரிய அரண்மனைகள் இருக்கும். நீங்கள் தான் போய் அமைக்க வேண்டி இருக்கும். யாராவது பெரிய தேர்வில் தேர்ச்சி பெறும் பொழுது நாங்கள் தேர்ச்சி பெற்ற பிறகு இது செய்வோம், வீடு கட்டுவோம் என்பது அவர்கள் புத்தியில் ஓடும். குழந்தைகளாகிய நீங்கள் கூட சிந்தனை செய்ய வேண்டும் - நாம் தேவதை ஆகிறோம். நாம் இப்பொழுது நமது வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு தான் பிறவிகள் எடுத்திருந் தோம், ஆத்மாக் களாகிய நம்முடையது வீடு மூலவதனம் ஆகும். எவ்வளவு குஷி ஆகிறது. மனிதர்கள் இவ்வளவு பக்தி செய்வதே முக்திக்காக. ஆனால் நாடகத்தில் பாகம் எப்படி இருக்கிறது என்றால் யாருக்குமே திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பது இல்லை. அவர்கள் அரைக்கல்பம் அவசியம் பாகத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நம்முடைய 84 பிறவிகள் இப்பொழுது முடிவடைகிறது. இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். அதற்கு பிறகு இராஜ தானியில் வருவோம். அவ்வளவே. வீடு மற்றும் ராஜதானி நினைவில் உள்ளது. இங்கு அமர்ந்திருக்கும் பொழுதும் ஒரு சிலருக்கு தங்கள் தொழிற்சாலை ஆகியவை நினைவில் இருக்கிறது. எப்படி பாருங்கள் பிர்லா இருக்கிறார். அவருக்கு எவ்வளவு தொழிற்சாலைகள் ஆகியவை உள்ளன. நாள் முழுவதும் அவருக்கு சிந்தனை இருக்கக்கூடும். அவரிடம் பாபாவை நினைவு செய்யுங்கள் என்று கூறினால் அவருக்கு எவ்வளவு சிக்கல் ஏற்படும். அடிக்கடி தொழில் நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் விட தாய்மார்களுக்கு சுலபம். அவர்களை விட கன்னிகைகளுக்கு இன்னுமே சுலபம். உயிருடன் இருந்துக்க் கொண்டே இறக்க வேண்டும். முழு உலகத்தை மறந்து விட வேண்டும். நீங்கள் தன்னை ஆத்மா என்றுணர்ந்து சிவபாபாவினுடையவராக ஆகிறீர்கள். இதற்கு உயிருடனிருந்தே இறப்பது என்று கூறப்படுகிறது. தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என்று உணர்ந்து சிவபாபாவினுடையவராக ஆகி விட வேண்டும். சிவபாபாவையே நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் பாவங்களின் சுமை தலை மீது நிறைய உள்ளது. நாம் உயிருடனிருந்தே சிவபாபாவினுடையவராக ஆகி விட வேண்டும் என்ற மனமோ எல்லோருக்கும் இருக்கிறது. சரீர உணர்வு இல்லாதிருக்க வேண்டும். நாம் அசரீரியாக வந்திருந்தோம். பிறகு அசரீரி ஆகி போக வேண்டும். தந்தை யினுடையவர் ஆகி உள்ளோம் என்றால் தந்தையைத் தவிர வேறு எதுவும் நினைவில் இருக்கக் கூடாது. இது போல சீக்கிரமாக ஆகி விட்டால் பின் யுத்தமும் சீக்கிரம் ஏற்பட்டு விடும். பாபா எவ்வளவு புரிய வைக்கிறார்? நாமோ சிவபாபாவினுடையவர் ஆவோம் அல்லவா? நாம் அங்கு இருப்பவர்கள் ஆவோம். இங்கோ எவ்வளவு துக்கம் இருக்கிறது. இப்பொழுது இது கடைசி பிறவி ஆகும். நீங்கள் சதோபிர தானமாக இருக்கும் பொழுது வேறு யாருமே இருக்கவில்லை என்று தந்தை கூறி உள்ளார். நீங்கள் எவ்வளவு செல்வந்தராக இருந்தீர்கள். இப்பொழுது சோழி போல பைசா இருக்கிறது தான். ஆனால் இதுவோ ஒன்றுமே இல்லை. சோழிகள் ஆகும். இவை எல்லாமே அற்ப காலத்தின் சுகத்திற்காக உள்ளது. கடந்த காலத்தில் தான புண்ணியம் செய்திருந்தீர்கள் என்றால் பைசா கூட நிறைய கிடைக்கிறது என்று தந்தை புரிய வைத்துள்ளார். பிறகு தானம் செய்கிறார்கள். ஆனால் இது ஒரு பிறவியின் விஷயம் ஆகும். இங்கோ பல பிறவிகளுக்கு செல்வந்தர் ஆகிறீர்கள். எவ்வளவு ஆசைகளோ அவ்வளவு பெரிய துக்கம் அடைய வேண்டும், யாரிடம் நிறைய செல்வம் இருக்கிறதோ அவர்கள் பின்னர் அதில் மிகவுமே சிக்கி இருக்கிறார்கள். ஒரு பொழுதும் அவர்களால் நிலைத்திருக்க முடியாது. சாதாரண ஏழைகள் தான் சமர்ப்பணம் ஆகிறார்கள். செல்வந்தர்கள் ஒரு பொழுதும் ஆக மாட்டார்கள். அவர்கள் சம்பாதிப்பதே புத்திரர்கள், பேரன்களுக்காக. தங்களது குலம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக. சுயம் அவர்கள் அந்த வீட்டில் வரப் போகிறவர்கள் இல்லை. நல்ல கர்மம் செய்திருந்த புத்திரர்கள் பேரன்கள் வருவார்கள். எப்படி நிறைய தானம் யார் செய்கிறார்களோ அவர்கள் இராஜா ஆகிறார்கள். ஆனால் எவர் ஹெல்தி என்றும் ஆரோக்கிய மானவர்களாகவோ ஒன்றும் இல்லை. ஆட்சி புரிந்தார்கள் என்றால் என்ன ஆகியது? அழியாத (அவினாஷி) சுகம் ஒன்றும் இல்லையே ! இங்கு ஒவ்வொரு அடியிலும் அநேகவிதமான துக்கங்கள் ஏற்படுகின்றது. அங்கு இந்த எல்லா துக்கமும் விலகிப் போய் விடுகின்றது. எங்களது துக்கத்தை நீக்குங்கள் என்று தந்தையை அழைக்கிறார்கள். எல்லா துக்கங்களும் நீங்கப் போகிறது என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தையை நினைவு மட்டும் செய்து கொண்டே இருங்கள். ஒரு தந்தையைத் தவிர வேறு யாரிடமிருந்தும் ஆஸ்தி கிடைக்க முடியாது. தந்தை முழு உலகத்தின் துக்கத்தை நீக்கி விடுகிறார். இச்சமயத்திலோ மிருகங்கள் ஆகியவை கூட எவ்வளவு துக்கமுற்று இருக்கின்றன. இது இருப்பதே துக்கதாமமாக. துக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. தமோபிர தானமாக ஆகிக் கொண்டே போகிறார்கள். இப்பொழுது நாம் சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளோம். அவர்கள் எல்லோரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். இது புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். பாபா நம்மை புருஷோத்தமராக ஆக்கி கொண்டிருக்கிறார். இது நினைவில் இருந்தால் கூட குஷி இருக்கும். பகவான் கற்பிக்கிறார். உலகின் அதிபதியாக ஆக்குகிறார். இதையாவது நினைவு செய்யுங்கள். அவருடைய குழந்தைகள் படிப்பின் மூலம் பகவான் பகவதி ஆக வேண்டும் அல்லவா? பகவானோ சுகம் அளிப்பவர் ஆவார். பிறகு துக்கம் எப்படி கிடைக்கிறது. அதுவும் தந்தை வந்து புரிய வைக்கிறார். பகவானுடைய குழந்தைகள் பின் துக்கத்தில் ஏன் இருக்கிறார்கள்? பகவான் துக்க ஹர்த்தா சுக கர்த்தா (துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர்) ஆவார். எனவே அவசியம் துக்கத்தின் பொழுது வருகிறார். அதனால் தான் பாடுகிறார்கள். தந்தை நமக்கு இராஜயோகம் கற்பித்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாம் புருஷார்த்தம்- முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதில் சந்தேகம் ஏற்பட முடியுமா என்ன? நாம் பி.கே. இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். பொய் பேசுவோமா என்ன? யாருக்காவது இந்த சந்தேகம் வந்தது என்றால் இதுவோ படிப்பு ஆகும் என்பதைப் புரிய வைக்க வேண்டும். விநாசம் எதிரிலேயே உள்ளது. நாம் சங்கமயுகத்தினர், பிராமணர் குடுமி (உயர்ந்தவர்கள்) ஆவோம். பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார் என்றால் அவசியம் பிராமணர்கள் கூட இருக்க வேண்டும். உங்களுக்குக் கூட புரிய வைத்துள்ளார். அதனால் தானே நிச்சயம் செய்துள்ளீர்கள். மற்றபடி முக்கியமான விஷயம் நினைவு யாத்திரை ஆகும். இதில் தான் தடைகள் ஏற்படுகின்றன. உங்களது சார்ட்டைப் பார்த்துக் கொண்டே இருங்கள். எந்த அளவிற்கு பாபாவை நினைவு செய்கிறோம். எந்த அளவிற்கு குஷியின் பாதரஸம் ஏறுகிறது? நமக்கு தோட்டத்திற்கு எஜமானன் துய்மையிழந்தவர்களை தூய்மையாக்கும் சிவபாபாவின் கை கிடைத்துள்ளது. நாங்கள் சிவபாபாவுடன் பிரம்மா மூலமாக கை குலுக்குகிறோம் என்ற உள்ளூர குஷி இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தங்களது வீடு மற்றும் ராஜதானியை நினைவு செய்து அளவற்ற குஷியில் இருக்க வேண்டும். இப்பொழுது நம்முடைய பிரயாணம் முடிந்து விட்டது. நாம் நமது வீடு செல்கிறோம். பிறகுராஜதானியில் வருவோம் என்பது எப்பொழுதும் நினைவிலிருக்கட்டும்.

2. நாம் சிவபாபாவுடன் பிரம்மா மூலமாக (ஹேண்டு ஷேக்) கை குலுக்குகிறோம் (இணைகிறோம்). அந்த தோட்டத்திற்கு எஜமானன் நம்மை பதீதமான (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். நாம் இந்த படிப்பினால் சொர்க்கத்தின் பட்டத்து ராணி ஆகிறோம். இதே உள்ளூர குஷியில் இருக்க வேண்டும்.

வரதானம்:
மூன்று விதமான வெற்றி மெடல் அடையக் கூடிய சதா வெற்றியாளர் ஆகுக.

வெற்றி மாலையில் நம்பர் அடைவதற்கு முத-ல் சுயத்தின் மீது வெற்றி, பிறகு அனைவரின் மீது வெற்றி, பிறகு இயற்கையின் மீது வெற்றி அடையுங்கள். எப்போது இந்த மூன்று விதமான வெற்றி மெடல் அடைவீர்களோ, அப்போது வெற்றி மாலையில் மணி ஆக முடியும். சுயத்தின் மீது வெற்றி அடைவது என்றால் தனது வீண் உணர்வுகள், சுபாவங்களை சிரேஷ்ட உணர்வுகள், சுப பாவனையின் மூலம் மாற்ற வேண்டும். யார் இவ்வாறு சுயத்தின் மீது வெற்றி அடைகிறார்களோ அவர்களே மற்றவர்களின் மீது வெற்றியை பிராப்தியாக அடைகிறார்கள். இயற்கை மீது வெற்றி அடைவது என்றால் வாயுமண்டலம், அதிர்வலைகள் மற்றும் ஸ்தூல இயற்கையின் பிரச்சனைகளின் மீது வெற்றி அடைவதாகும்.

சுலோகன்:
தனது கர்மேந்திரியங்களின் மீது முழு இராஜ்யம் செய்பவர்கள் தான் உண்மையான இராஜயோகிகள் ஆவர்.

அவ்யக்த இஷாரே: சகஜயோகி ஆக வேண்டுமென்றால் பரமாத்ம அன்பின் அனுபவியாக ஆகுங்கள்.

குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் கூடவே உண்மையான ஆன்மிக அன்பு கிடைத் திருக்கிறது. அந்த ஆன்மிக அன்பு தான் பிரபுவினுடையவர்களாக ஆக்கியிருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் இரட்டை அன்பு கிடைத்திருக்கிறது - ஒன்று தந்தையின் அன்பு மற்றொன்று தெய்வீக குடும்பத்தின் அன்பு. எனவே அன்பின் அனுபவம் விட்டில் பூச்சியாக ஆக்கி விட்டது. அன்பு தான் காந்தம் போன்று வேலை செய்கிறது. பிறகு கேட்பதற்கும், இறப்பதற்கும் தயாராகி விடுகிறீர்கள். சங்கமத்தில் யார் உண்மையான அன்பில் உயிருடன் இருந்து இறந்து விடுகிறார் களோ, அவர்களே சொர்க்கத்திற்கு செல்கிறார்கள்.