29-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்போது
வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதனால் தேகத்துடன் கூடவே
தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் மறந்து என் ஒருவனை மட்டும்
நினைவு செய்யுங்கள் மேலும் தூய்மையாகுங்கள்.
கேள்வி:
ஆத்மாவின் சம்மந்தத்தில் எந்த ஒரு
நுட்பமான விஷயத்தை நுட்பமான புத்தி உள்ளவர் மட்டுமே புரிந்து
கொள்ள முடியும்?
பதில்:
ஆத்மா மீது ஊசியைப் போல்
கொஞ்சம்-கொஞ்சமாகத் துரு ஏறிக் கொண்டே இருக்கிறது. நினைவில்
இருப்பதன் மூலம் அந்த துரு விலகிக் கொண்டே செல்லும். எப்போது
துரு நீங்குகிறதோ, அதாவது ஆத்மா தமோபிரதானிலிருந்து
சதோபிரதானமாகி விடுகிறதோ, அப்போது பாபாவின் ஈர்ப்பு ஏற்படும்.
மேலும் அவர்கள் பாபா கூடவே வீட்டுக்குத் திரும்பிச் செல்ல
முடியும். 2. எவ்வளவு துரு நீங்குகிறதோ, அவ்வளவு
மற்றவர்களுக்குப் புரிய வைப்பதில் ஈர்ப்பு ஏற்படும்.
இவ்விஷயங்கள் மிகவும் நுட்பமானவை. மந்த புத்தி உள்ளவர்கள்
புரிந்து கொள்ள முடியாது.
ஓம் சாந்தி.
பகவான் வாக்கு. இப்போது புத்தியில் யார் வந்தார்? அந்த கீதா
பாடசாலைகளில் உள்ளவர்களுக்கு பகவான் வாக்கு என்றால்
கிருஷ்ணர்தான் நினைவு வரும். இங்கே குழந்தை களாகிய உங்களுக்கோ
உயர்ந்த வரிலும் உயர்ந்தவரான தந்தை தான் நினைவுக்கு வருவார்.
இச்சமயம் இது சங்கமயுகம், புருஷோத்தம் ஆவதற்கான யுகம். பாபா
குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார் - தேகத்துடன் கூட
தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் நீக்கி தன்னை ஆத்மா என
உணருங்கள். இது மிகவும் அவசியமான விசயமாகும். இதை இந்த
சங்கமயுகத்தில் பாபா புரிய வைக்கிறார். ஆத்மா தான்
தூய்மையில்லாமல் ஆகியுள்ளது. மீண்டும் ஆத்மா தூய்மை யாகி
வீட்டிற்குச் செல்ல வேண்டும். பதித-பாவனரை நினைவு செய்தே
வந்துள்ளனர். ஆனால் எதையும் தெரிந்து கொள்ளவில்லை. பாரதவாசிகள்
முற்றிலும் பயங்கர இருளில் உள்ளனர். பக்தி என்பது இரவு, ஞானம்
என்பது பகல். இரவில் இருள், பகலில் ஒளிப்பிரகாசம் இருக்கும்.
பகல் என்பது சத்யுகம். இரவு என்பது கலியுகம். இப்போது நீங்கள்
கலியுகத்தில் இருக்கிறீர்கள். சத்யுகத் திற்குச் செல்ல வேண்டும்.
தூய்மையான உலகில் தூய்மையின்மை பற்றிய கேள்வியே கிடை யாது.
தூய்மை இல்லாமல் இருக்கும் போது தான் தூய்மை யாவதற்கான கேள்வி
எழுகின்றது. தூய்மையாக இருக்கும் போது தூய்மையில்லாத உலகத்தின்
நினைவே இருக்காது. இப்போது தூய்மை இல்லாத உலகம் இருக்கிறது
என்றால் தூய்மையான உலகின் நினைவு வருகிறது. தூய்மையற்ற உலகம்
கல்பத்தின் பின் பாதியில் உள்ள பாகம். தூய்மையான உலகம்
கல்பத்தின் முதல் அரை பாகம். அங்கே தூய்மையில்லாதவர் யாரும்
இருக்க முடியாது. யார் தூய்மையாக இருந்தார்களோ, அவர்கள்
தூய்மையில்லாமல் ஆகி விட்டுள்ளனர். 84 பிறவிகளும் அவர்களுக்கு
என்பது புரிய வைக்கப் படுகின்றது. இந்த மிக ஆழமான விசயங்கள்
புரிந்து கொள்ள வேண்டிய வையாகும். அரைக்கல்பம் பக்தி
செய்துள்ளனர். அது அவ்வளவு விரைவாக விடுபடாது. மனிதர்கள்
முற்றிலும் பயங்கர இருளில் உள்ளனர். கோடியில் சிலர் தான்
வெளிப்படுகின்றனர். அபூர்வமாக யாராவது ஒருவரின் புத்தியில்
பதியும். முக்கியமான விசயமோ, பாபா சொல்கிறார்-தேகத்தின் அனைத்து
சம்மந்தங்களையும் மறந்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்.
ஆத்மா தான் தூய்மை இழந்ததாக ஆகியுள்ளது. அது தூய்மையாக வேண்டும்.
இந்தப் புரிதலையும் பாபா தான் தருகிறார். ஏனென்றால் இந்தத்
தந்தை பிரின்ஸிபல் (ஈஸ்வரிய கல்லூரியின் முதல்வர்), பொற்
கொல்லர், வக்கீல் என்று அனைவருமாக உள்ளார். இந்தப் பெயர்கள்
அங்கே இருக்காது. அங்கே இந்தப் படிப்பும் கூட இருக்காது. இங்கே
வேலைக்காகப் படிக்கின்றனர். முன்பு பெண்கள் இந்த அளவு
படிக்கவில்லை. இவர்கள் எல்லாம் பிற்காலத்தில் கற்றுக்
கொண்டுள்ளனர். கணவர் இறந்து போனால் யார் காப்பாற்றுவார்? அதனால்
பெண்கள் அனைவரும் கூட கற்றுக் கொண்டுள்ளனர். சத்யுகத்திலோ இது
போன்ற விஷயங்கள் இருப்பதில்லை, சிந்தனை செய்வதற்கு. இங்கே
மனிதர்கள் செல்வம் முதலிய வற்றைச் சேர்த்து வைக்கின்றனர், அந்த
மாதிரி சமயத்திற்காக. அங்கோ கவலை கொள்கிற மாதிரி எந்த ஒரு
சிந்தனையும் இருக்காது. பாபா குழந்தைகளாகிய உங்களை எவ்வளவு
செல்வந்தர்களாக ஆக்கி விடுகிறார்! சொர்க்கத்தில் அதிகக்
கஜானாக்கள் இருக்கும். வைரம்-வைடூரியங்களின் சுரங்கங்கள்
நிரம்பி விடும். இங்கே சரளை பூமி (தரிசு நிலம்) ஆகி விடுகிறது
என்றால் அந்த சக்தி கிடையாது. அங்கே உள்ள பூக்கள் மற்றும் இங்கே
உள்ள பூக்களுக்கிடையில் இரவு- பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது.
இங்கோ அனைத்துப் பொருள்களில் இருந்தும் சக்தியே வெளியேறி
விட்டது. எவ்வளவு தான் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து விதை
பொருட்களை எடுத்து வந்தாலும் சக்தி வெளியேறிக் கொண்டே தான்
உள்ளது. பூமியே அவ்வாறு உள்ளது. இதில் அதிக உடல் உழைப்பு செய்ய
வேண்டியுள்ளது. அங்கோ ஒவ்வொரு பொருளும் சதோபிரதானமாக உள்ளது.
இயற்கையும் சதோபிரதானம் என்றால் அனைத்துமே சதோபிரதானமாக உள்ளன.
இங்கோ அனைத்துப் பொருட்களும் தமோபிரதானமாக உள்ளன. எந்த ஒரு
பொருளிலும் சக்தி இல்லை. இந்த வேறுபாட்டையோ நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். சதோபிர தான் பொருட்களை நீங்கள் தியானத்தில் தான்
பார்க்கிறீர்கள். அங்குள்ள பூக்கள் முதலியவை எவ்வளவு நன்றாக
உள்ளன! அங்குள்ள தானியங்கள் முதலிய அனைத்தும் நீங்கள் பார்க்கக்
கூடியவை யாக ஆகலாம். புத்தி மூலம் புரிந்து கொள்ள முடியும்.
அங்குள்ள ஒவ்வொரு பொருளிலும் எவ்வளவு சக்தி உள்ளது! புது உலகம்
யாருடைய புத்தியிலும் வருவதில்லை. இந்தப் பழைய உலகத்தைப்
பற்றியோ கேட்கவே வேண்டாம். ஆக, மனிதர்கள் முற்றிலும் இருளில்
உறங்கிப் போயுள்ள காரணத்தால் பொய்யை நீட்டி முழக்கி
கூறுகின்றனர். இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது என நீங்கள்
சொல்கிறீர்கள் என்றால் உங்களைப் பார்த்து சிலர் சிரிக்கவும்
செய் கின்றனர். உண்மையில் தங்களை பிராமணர் எனப் புரிந்து
கொண்டவர்கள் தான் புரிந்து கொள் கின்றனர். இது புதிய மொழி,
புதிய படிப்பு இல்லையா? எது வரை ஆன்மிகத் தந்தை வரவில்லையோ, அது
வரை யாரும் புரிநதுக் கொள்ள மாட்டார்கள். ஆன்மிகத் தந்தையைக்
குழந்தைகள் நீங்கள் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த
மனிதர்கள் வெளிநாடு போய் யோகா முதலியவற்றைக் கற்றுக்
கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு யார் கற்றுத் தந்தார்?
ஆன்மிகத் தந்தை கற்றுக் கொடுத்தார் என்றோ சொல்ல மாட்டார்கள்.
பாபாவோ ஆன்மிகக் குழந்தைகளுக்குத் தான் கற்றுத் தருகிறார்.
சங்கமயுக பிராமணர்கள் நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள்.
யார் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்கள்
தான் பிராமணர்களாகவும் ஆவார் கள். பிராமணர்களாகிய நீங்கள்
எவ்வளவு குறைந்த எண்ணிக்கையாக இருக்கிறீர்கள்! உலகத் திலோ
வித-விதமான ஏராளமான ஜாதிகள் உள்ளன. உலகத்தில் எத்தனை தர்மங்கள்,
எத்தனை மொழிகள் உள்ளன என்பதைத் தெரியப் படுத்துகிற புத்தகம்
ஒன்று நிச்சயம் இருக்கும். நீங்கள் அறிவீர்கள், அனைவரும்
இங்கேயே இருக்கப் போவதில்லை. சத்யுகத்திலோ ஒரு தர்மம், ஒரு மொழி
மட்டுமே இருந்தது. சிருஷ்டிச் சக்கரத்தை நீங்கள் அறிந்து
கொண்டீர்கள். ஆக, மொழி களையும் கூட நீங்கள் அறிந்து கொள்ள
முடியும், அதாவது இவை அனைத்தும் இனி இருக்கப் போவதில்லை.
இவ்வளவு பேரும் சாந்திதாமம் சென்று விடுவார்கள். இந்த சிருஷ்டி
பற்றிய ஞானம் இப்போது உங்களுக்குக் கிடைத்துள்ளது. நீங்கள்
மனிதர்களுக்குச் சொல்கிறீர்கள் ஆனாலும் அவர்கள் புரிந்து
கொள்வதில்லை. யாரேனும் பெரிய மனிதர்கள் மூலம் கண்காட்சி
போன்றவற்றை திறந்து வைப்பது இதனால் தான். ஏனென்றால் அவர்கள்
புகழ் பெற்றவர்கள். இதன் மூலம் விசயம் பரவும் - ஆஹா! குடியரசுத்
தலைவர், பிரதம மந்திரி திறந்து வைத்துள்ளனர். இந்த பிரம்மா பாபா
போனால் பரமபிதா பரமாத்மா திறந்து வைத்துள்ளார் என்று மனிதர்கள்
புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
யாரேனும் பெரிய மனிதர்கள், கமிஷ்னர் போன்றவர்கள் வருவார்களானால்
அவர்களின் பின்னால் மற்றவர்களும் ஓடி வருவார்கள். இப்போது
பிராமணக் குழந்தைகளாகிய நீங்களோ, மிகச் சிலர் தான்
இருக்கிறீர்கள். எப்போது பெரும்பான்மை ஆகிறீர்களோ, அப்போது
புரிந்து கொள்வார்கள். இப்போதே புரிந்து கொள்வார் களானால் ஓடி
வருவார்கள். ஒரு பெண் குழந்தையிடம் ஒருவர் சொன்னார், யார்
உங்களுக்குக் கற்றுக் கொடுத்தாரோ, அவர் களிடம் நாங்கள்
நேரடியாகச் செல்வோம் என்று. ஆனால் ஊசியில் துரு ஏறியிருக்கிறது
என்றால் காந்தத்தின் கவர்ச்சி எப்படி ஏற்படும். துரு எப்போது
முழுமையாக நீங்குகிறதோ, அப்போது காந்தத்தைக் கவர முடியும்.
ஊசியின் ஒரு முனையில் துரு ஏறியிருந் தாலும் கூட அவ்வளவு கவராது.
துரு முழுவதுமாக நீங்க வேண்டும். அதுவும் கடைசியில் எப்போது
அதுபோல் ஆகிறார்களோ, அப்போது தந்தையுடன் கூடவே திரும்பிச்
செல்வார் கள். இப்போதோ நாம் தமோபிரதானமாக உள்ளோம், கறை
படிந்துள்ளது என்ற கவலை உள்ளது. எவ்வளவு நினைவு செய்வீர்களோ,
அவ்வளவு தூய்மையாகிக் கொண்டே செல்வீர்கள். மெது மெதுவாக துரு
நீங்கிக் கொண்டே போகும். துரு ஏறியதும் கூட சிறிது-சிறிதாகத்
தான் இல்லையா? பிறகு நீங்குவதும் அதுபோலத் தான். எப்படித் துரு
ஏறியதோ, அப்படியே தூய்மையாவதும் இருக்கும். அதற்காக பாபாவை
நினைவு செய்யவும் வேண்டும். நினைவினால் சிலருக்கு அதிக மாகக்
கறை நீங்கியுள்ளது, சிலருக்குக் குறைவாக ஆகியுள்ளது. எவ்வளவு
அதிகமாகக் கறை நீங்கி யுள்ளதோ, அவ்வளவு அவர்கள்
மற்றவர்களுக்குப் புரிய வைப்பதில் கவர் வார்கள். இவை மிகவும்
நுட்பமான விசயங்களாகும். மந்த புத்தி உள்ளவர்கள் புரிந்து
கொள்ள முடியாது. நீங்கள் அறிவீர்கள், இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. புரிய வைப்பதற்காகவும் தினந் தோறும் யுக்திகள்
வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. கண்காட்சி, அருங்காட்சியகம்
முதலிய வற்றை உருவாக்குவோம் என்பது முன்பு தெரியாமல் தான்
இருந்தது. இன்னும் போனால் வேறு ஏதாவது வெளிப்படலாம். இப்போது
நேரமோ உள்ளது. ஸ்தாபனை ஆக வேண்டும். மனமுடைந்து போகவும் கூடாது.
கர்மேந்திரியங்களை வசப்படுத்த முடியவில்லை என்றால் கீழே
விழுந்து விடு கின்றனர். விகாரத்தில் போனால் பிறகு ஊசியில்
அதிகத் துரு ஏறி விடும். சத்யுக-திரேதாவில் கொஞ்சம், பிறகு
அரைக்கல்பத்தில் வெகுவிரைவாகக் கறை படிந்து விடுகின்றது. கீழே
விழுந்து விடுகின்றனர். அதனால் நிர்விகாரி மற்றும் விகாரி எனப்
பாடப்படுகின்றது. நிர்விகாரி தேவதை களின் அடையாளம் உள்ளது
இல்லையா? பாபா சொல்கிறார், தேவி-தேவதா தர்மம் மறைந்து
விட்டுள்ளது. ஆனால் அடையாளங்களோ உள்ளன இல்லையா? அனைத்திலும்
நல்ல அடையாளம் இந்தச் சித்திரம். நீங்கள் இந்த
லட்சுமி-நாராயணரின் சித்திரத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம்.
ஏனென்றால் நீங்கள் இதுபோல் ஆகிறீர்கள் இல்லையா? இராவண
இராஜ்யத்தின் விநாசம், இராம ராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகின்றது. இது
இராவண இராஜ்யம், அது இராமராஜ்யம். இப்போது சங்கமயுகம். ஏராளமான
கருத்துகள் உள்ளன. டாக்டர்களின் புத்தியில் எவ்வளவு மருந்துகள்
நினைவில் உள்ளன! வக்கீலின் புத்தியிலும் அநேக விதமான சட்ட
சம்மந்த கருத்துகள் உள்ளன. ஏராளமான தலைப்புகளில் மிக நல்ல
புத்தகங்கள் உருவாக்க முடியும். பிறகு சொற்பொழிவு செய்வதற்காகச்
செல்லும் போது பாயின்ட்டுகளைப் பார்வை மூலம் வெளிப்படுத்தி
திருப்தி அடைய வைக்கவும். நுட்பமான புத்தி உள்ளவர்கள் உடனே
பார்ப்பார்கள். முதலிலோ எழுத வேண்டும் - நாம் இப்படி-இப்படிப்
புரிய வைக்க வேண்டும். சொற்பொழிவு செய்த பிறகும் கூட நினைவு
வருகிறது இல்லையா? இப்படிப் புரிய வைத்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும் என்பதாக! இந்த கருத்துகளை மற்றவர்களுக்குப்
புரிய வைப்பதன் மூலம் புத்தியில் பதியும். தலைப்புகளின்
பட்டியல் தயார் செய்து வைக்க வேண்டும். பிறகு ஒரு தலைப்பை
எடுத்துக் கொண்டு உள்ளுக்குள் சொற்பொழிவு செய்து ஒத்திகை
பார்க்க வேண்டும். அல்லது எழுத வேண்டும். பிறகு அனைத்துக்
கருத்துகளையும் எழுதி விட்டோமா என்று பார்க்க வேண்டும். எவ்வளவு
சிரமம் எடுத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு நல்லது. பாபாவோ
புரிந்து கொண்டுள்ளார் இல்லையா, இவர் நல்ல சர்ஜன், இவருடைய
புத்தியில் அதிக கருத்துகள் உள்ளன என்று? நிறைவாகி
விட்டீர்களானால் சேவை இல்லாமல் மகிழ்ச்சி என்பது இருக்காது.
நீங்கள் கண்காட்சி நடத்துகிறீர்கள் என்றால் சில இடங்களிலிருந்து
2-4 பேர், இன்னும் சில இடங்களிலிருந்து 6-8 பேர்
வெளிப்படுவார்கள். சில இடங்களிலோ ஒருவர் கூட வருவதில்லை.
ஆயிரக்கணக்கான பேர் பார்த்துள்ளனர். எவ்வளவு கொஞ்சம் பேர்
வெளிப் பட்டுள்ளனர்! அதனால் இப்போது பெரிய-பெரிய சித்திரங்களை
உருவாக்கிக் கொண்டுள்ளனர். நீங்கள் திறமைசாலிகளாக ஆகிக் கொண்டே
போகிறீர்கள். பெரிய-பெரிய மனிதர் களின் நிலை என்னவாக
ஆகியிருக்கிறது! அதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். பாபா புரிய
வைத்துள்ளார், இந்த ஞானத்தை யாருக்குக் கொடுப்பது என்று
சோதித்துப் பார்க்க வேண்டும். யார் என்னுடைய பக்தர்கள் என்று
நாடி பிடித்துப் பார்க்க வேண்டும். கீதை சொல்பவர்களுக்கு ஒரே
ஒரு முக்கிய விஷயம் சொல்லுங்கள் - பகவான் என்று உயர்ந்த வரிலும்
உயர்ந்தவர் தான் சொல்லப்படுகிறார். அவர் நிராகார். எந்த ஒரு
தேகதாரி மனிதரையும் பகவான் எனச் சொல்ல முடியாது. குழந்தைகளாகிய
உங்களுக்கு இப்போழுது முழு ஞானமும் வந்து விட்டது.
சந்நியாசிகளும் வீட்டை சந்நியாசம் செய்து விட்டு ஓடிப்
போகின்றனர். பிரம்மச்சாரிகள் சிலரும் கூட சென்று விடுகின்றனர்.
பிறகு அடுத்த பிறவியிலும் கூட அது போலவே ஆகின்றது. பிறவியோ
மாதாவின் கர்ப்பத்தில் தான் எடுக்கின்றனர். எது வரை திருமணம்
செய்து கொள்ளவில்லையோ, பந்தனங்களில் இருந்து விடுபட்ட வராகவே
உள்ளனர். இவ்வளவு உறவினர் முதலானவர்களின் நினைவு வராது.
திருமணம் செய்து விட்டால் பிறகு உறவினர் நினைவு வரும். நேரம்
பிடிக்கின்றது. விரைவாக பந்தன் முக்த் ஆக முடிவதில்லை. தனது
வாழ்க்கை வரலாறு பற்றியோ அனைவருக்குமே தெரியும். சந்நியாசிகள்,
புரிந்து கொண்டிருப்பார்கள், முதலில் நாம் இல்லறவாசியாக
இருந்தோம், பிறகு சந்நியாசம் செய்தோம் என்று. உங்களுடையது
பெரிய சந்நியாசம். அதனால் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அந்த
சந்நியாசிகள் திருநீறு அணிகின்றனர். தலைமுடியை மழித்துக்
கொள்கின்றனர். வேடத்தை மாற்றிக் கொள்கின்றனர். நீங்களோ அதுபோல்
செய்வதற்கான தேவை கிடையாது. இங்கோ ஆடையை மாற்றிக் கொள்வதற்கான
தேவை கூடக் கிடையாது. நீங்கள் வெள்ளைப் புடவை கட்டவில்லை
என்றாலும் கூட நஷ்டமில்லை. இதுவோ புத்தியின் ஞானமாகும். நாம்
ஆத்மா, தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதன் மூலம் தான் கறை
நீங்கும். நாம் சதோபிரதான் ஆகி விடுவோம். அனைவருமே திரும்பிச்
சென்றாக வேண்டும். சிலர் யோகபலத்தினால் தூய்மை யாகி விடுவார்கள்.
சிலர் தண்டனை பெற்றுச் செல்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள்
கறையை நீக்குவதற்காகத் தான் முயற்சி மேற்கொள்ள வேண்டி உள்ளது.
அதனால் இதை யோக அக்னி என்றும் சொல்கின்றனர். அக்னியினால்
பாவங்கள் பஸ்மமாகின்றன. நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள்.
காமசிதையையும் அக்னி எனச் சொல்கின்றனர். காம அக்னியில் எரிந்து
கருப்பாகி விட்டுள்ளனர். இப்போது பாபா சொல்கிறார், வெள்ளையாக
ஆகுங்கள். இவ்விஷயங் கள் பிராமணர் களாகிய உங்களைத் தவிர
யாருடைய புத்தியிலும் பதியாது. இந்த விசயங்களே தனிப்பட்டவை.
உங்களைப் பற்றிச் சொல்கின்றனர், இவர்களோ சாஸ்திரங்களைக் கூட
ஏற்றுக் கொள்வதில்லை, நாஸ்திகராகி விட்டுள்ளனர் என்பதாக.
நீங்கள் சொல்லுங்கள், சாஸ்திரங்களையோ நாங்கள் படித்துள்ளோம்.
பிறகு பாபா ஞானம் தந்துள்ளார். ஞானத்தின் மூலம் சத்கதி
கிடைக்கிறது. பகவான் வாக்கு - வேத-உபநிடதங்கள் முதலானவற்றைப்
படிப்பதால், தான-புண்ணியம் முதலிய வற்றைச் செய்வதால் யாரும்
என்னை அடைய மாட்டார்கள். என் மூலமாகத் தான் என்னை அடைய முடியும்.
பாபா தான் வந்து தகுதி உள்ளவர்களாக ஆக்குகிறார். ஆத்மா மீது கறை
படிகின்றது. அதனால் தான் தந்தையை அழைக்கின்றனர் - வந்து
எங்களைப் தூய்மை யாக்குங்கள் என்று. தமோபிரதான் ஆகி விட்டுள்ள
ஆத்மா இப்போது சதோபிரதான் ஆக வேண்டும். தமோபிரதானில் இருந்து
தமோ, ரஜோ, சதோ, பிறகு சதோபிரதான் ஆக வேண்டும். இடையில் குழப்பம்
ஏற்பட்டால் கறை படிந்து விடும்.
பாபா நம்மை இவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக்குகிறார் என்றால் அந்தக்
குஷி இருக்க வேண்டும் இல்லையா? வெளிநாட்டுக்குப் படிப்பதற்காக
மிகுந்த குஷியோடு செல்கின்றனர் இல்லையா? இப்போது நீங்கள்
எவ்வளவு புத்திசாலியாக ஆகிறீர்கள்! கலியுகத்தில் எவ்வளவு
தமோபிரதான், புத்தியற்றவர்களாக ஆகி விட்டுள்ளனர்! எவ்வளவு அன்பு
காட்டுகிறீர்களோ, அதைவிட அதிக மாகவே எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.
குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டி ருக்கிறீர்கள், நமது
ராஜதானி ஸ்தாபனை ஆகின்றது. யார் நல்லபடியாகப் படிக்கின்றனரோ,
நினைவில் இருக் கின்றனரோ, அவர்கள் நல்ல பதவி பெறுவார்கள்.
நாற்று பாரதத்தில் இருந்து தான் நடப்படுகின்றது. நாளுக்கு நாள்
செய்தித்தாள் முதலியவற்றின் மூலம் உங்களுடைய பெயர் புகழ்
அடைந்துக் கொண்டே போகும். செய்தித்தாளோ எல்லாரிடமும்
செல்கின்றது. அதே செய்தித்தாள் காரர்கள் சில நேரம்
பார்ப்பீர்களானால் நல்லதைப் போடுவார்கள், சில நேரம் கெட்ட
செய்தி போடுவார்கள். அவர்களும் கேள்விப்பட்டதை வைத்து
நடக்கின்றனர் இல்லையா? யார் எதைச் சொல்கின்றனரோ அதை எழுதி
விடுவார்கள். கேள்விப்பட்ட விஷயத்தின்படி அநேகர் செல்கின்றனர்.
அது பரமத் எனச் சொல்லப் படுகின்றது. பரமத் அசுர மத் ஆகி
விடுகின்றது. பாபாவுடையது ஸ்ரீமத். யாராவது தலைகீழான விஷயத்தைப்
பேசினால் அவ்வளவு தான், வருவதையே நிறுத்தி விடுகின்றனர்.
சேவையில் இருப்பவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது. இங்கே
நீங்கள் என்னென்ன சேவை செய்கிறீர்களோ, இது உங்களுடைய முதல்
தரமான (நெம்பர் ஒன்) சேவை. இங்கே நீங்கள் சேவை செய்கிறீர்கள்,
அங்கே சத்யுகத்தில் பலன் கிடைக்கின்றது. காரியமோ இங்கே
பாபாவுடன் கூடவே செய்கிறீர்கள் இல்லையா? நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஆத்மா என்ற ஊசியில் துரு ஏறியுள்ளது. அதை யோக பலத்தினால்
நீக்கி சதோபிரதான் ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஒரு போதும்
மற்றவர்கள் மூலம் கேள்விப்பட்ட விசயங்கள் படி நடந்து படிப்பை
விட்டுவிடக் கூடாது.
2) புத்தியை ஞானத்தின் கருத்துகளால் நிரப்பி வைத்துக் கொண்டு
சேவை செய்ய வேண்டும். விசயத்தைப் பார்த்து ஞானத்தைக் கொடுக்க
வேண்டும். மிகவும் கூர்மையான புத்தி உள்ளவர்களாக ஆக வேண்டும்.
வரதானம்:
கலியுகத்தின் அமைதியற்ற துக்கமயமான காட்சிகளை பார்த்த போதும்
சதா பார்வையாளராக வைராக்கியமுள்ளவர் ஆகுக !
இந்த கலியுகத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்கு எப்போதும்
முன்னேற்றமே உலகிற்கு கோர முழக்கம் உங்களுக்கோ வெற்றி முழக்கம்.
நீங்கள் எந்த இன்னலிலும் பயப்படமாட்டீர்கள், முன்னதாகவே தயார்
நிலைல் உள்ளீர்கள் பார்வையாளராகி ஒவ்வொரு விளையாட்டையும்
பார்க்கின்றீர்கள். சிலர் அழுவார், சில கதறுவார் சாட்சியாக
பார்த்தால் ஆனந்தமே யாரொருவர் கலியுகத்தின் துக்கம், வேதனை
அமைதின்மை போன்ற காட்சிகளை பார்வையாளராக பார்ப்பதோ அவர்
சுலபமாகவே எல்லையில்லா (மாபெரும்) வைராக்கியம் அடைகின்றார்.
சுலோகன்:
எப்படிப்பட்ட மண்ணையும் தயார் செய்ய வார்த்தயோடு மட்டுமின்றி
உள்ளுணர்வுடன் சேவை செய்யுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்..
எந்த ஒரு எந்திரத்தையும் ஒருமுறை சீராக வடிவமைத்து விட்டால்
பிறகு தன்னில்தானாகவே இயங்கிக் கொண்டிருக்கும். அவ்வாறே தனது
சம்பூர்ண நிலையெனும் பாப்சமான், கர்மாதீத் நிலையை ஒருமுறை
சீராக வடிவமைத்து விடுங்கள். பிறகு எண்ணம் சொல், செயல் யாவும்
தன்னில் தானாகவே செட்டிங் செய்தபடியே இயங்கும்.
|
|
|
|