30-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! பாபா உங்களை
புருúˆôத்தமர்களாக மாற்றுவதற்காக கற்பித்துக்
கொண்டிருக்கின்றார், நீங்கள் இப்போது கீழான நிலையிலிருந்து
உத்தம (மிக சிறந்த) ஆத்மாவாக ஆகின்றீர்கள், தேவதைகள் அனைவரையும்
விட உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எந்தவொரு
உழைப்பை (பயிற்சி) இங்கே செய்கிறீர்கள் அது சத்யுகத்தில்
இருக்காது?
பதில்:
இங்கே தேகம் உட்பட தேகத்தின்
அனைத்து சம்மந்தங்களையும் மறந்து ஆத்ம-அபிமானி யாக ஆகி சரீரத்தை
விடுவதற்கு அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. சத்யுகத்தில்
சிரமமின்றி சரீரத்தை விட்டு விடுவார்கள். இப்போது நாம்
ஆத்மாக்கள், நாம் இந்த பழைய உலகம் பழைய சரீரத்தை விட வேண்டும்,
புதியதை எடுக்க வேண்டும் என்ற உழைப்பு அல்லது பயிற்சியை
செய்கிறீர்கள். சத்யுகத்தில் இந்த பயிற்சிக்கு அவசியம் இல்லை.
பாடல்:
தூர தேசத்தில் இருப்பவரே........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள், மீண்டும்
அதாவது கல்ப- கல்பத்திற்குப் பிறகும். மீண்டும் தூர தேசத்தில்
இருக்கக் கூடியவர் மாற்றானுடைய தேசத்திற்கு வந்திருக்கின்றார்
என்று சொல்லப்படுகிறது. இது அந்த ஒருவருடைய புகழ் மட்டுமே ஆகும்,
அவரைத் தான் அனைவரும் நினைவு செய்கிறார்கள், அவர்
விசித்திரமானவராக(சரீரம் இல்லாத வராக) இருக்கின்றார். அவருக்கு
எந்த சித்திரமும் இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரை தேவதை கள்
என்று சொல்லப்படுகிறது. சிவபகவானுடைய மகாவாக்கியம் என்று
சொல்லப்படுகிறது, அவர் பரந்தாமத்தில் இருக்கின்றார். அவரை
ஒருபோதும் சுகதாமத்தில் அழைப்பதில்லை, துக்கதாமத் தில் தான்
அழைக்கிறார்கள். அவர் வருவதும் கூட சங்கமயுகத்தில் தான்.
சத்யுகத்தில் முழு உலகத்திலும் புருúˆôத்தமர்களாகிய நீங்கள்
இருக்கின்றீர்கள் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர் கள்.
மத்திய காலத்தினர்களும், கீழானவர்களும் அங்கே இருப்பதில்லை.
இந்த லஷ்மி-நாராயணன் உத்தமரிலும் உத்தம புருˆர்கள் அல்லவா.
இவர்களை அப்படி மாற்றக் கூடியவர் ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா என்று
சொல்வார்கள். ஸ்ரீ ஸ்ரீ என்று அந்த சிவபாபாவைத் தான்
சொல்லப்படுகிறது. இன்றைக்கு சன்னியாசிகள் போன்றவர்களும் கூட
தங்களை ஸ்ரீ ஸ்ரீ என்று சொல்லி விடுகிறார்கள். ஆக பாபா வந்து
தான் இந்த உலகத்தை மேன்மையுடையதாக மாற்றுகின்றார். சத்யுகத்தில்
முழு உலகத் திலும் உத்தமத்திலும் உத்தம புருசர்கள்
இருக்கிறார்கள். உத்தமத்திலும் உத்தமம் மற்றும் கீழான திலும்
கீழான வித்தியாசத்தை இந்த சமயத்தில் நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். கீழான மனிதர்கள் தங்களுடைய தரக்குறைவை
காட்டுகிறார்கள். நாம் என்னவாக இருந்தோம், இப்போது மீண்டும்
நாம் சொர்க்கவாசிகள் புருúˆôத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம்
என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது சங்கமயுகம்
ஆகும். இந்த பழைய உலகம் புதியதாக ஆகிறது என்ற எதிர் பார்ப்பு (விருப்பம்)
உங்களுக்கு இருக்கிறது. பழையதிலிருந்து புதியதாக,
புதியதிலிருந்து பழையதாக கண்டிப்பாக ஆகிறது. புதியதை சத்யுகம்
என்றும், பழையதை கலியுகம் என்றும் சொல்லப்படுகிறது. பாபா தான்
உண்மையான தங்கமாவார், உண்மையை சொல்லக்கூடியவர். அவரை சத்தியம்
என்று சொல்கிறார்கள். அனைத்தையும் சத்தியமாக கூறுகின்றார்.
ஈஸ்வரன் சர்வவியாபி என்று சொல்கிறார்களே, இது பொய்யாகும்.
பொய்யானதை கேட்காதீர்கள் என்று இப்போது பாபா கூறுகின்றார்.
தீயதை கேட்காதீர்கள், தீயதை பார்க்காதீர்கள்.......
ராஜ-கல்வியின் விˆயம் தனிப்பட்டதாகும். அது அல்பகால
சுகத்திற்கானதாகும். அடுத்த பிறவி எடுத்தால் மீண்டும் புதிதாக
படிக்க வேண்டியிருக்கும். அது அல்பகால சுகமாகும். இது 21
பிறவிகளுக்கு, 21 தலை முறை களுக்காகும். தலைமுறை என்று
சந்ததியைச் சொல்லப்படுகிறது. அங்கே ஒருபோதும் அகால மரணம்
நடப்பதில்லை. இங்கே பாருங்கள் எப்படி அகால மரணங்கள் நடந்து
கொண்டி ருக்கிறது. ஞானத்தில் கூட இறந்து விடுகிறார்கள். நீங்கள்
இப்போது காலனிடம் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். அது
அமரலோகம், இது மரணலோகம் என்பதை தெரிந்துள்ளீர் கள். அங்கே
முதுமை அடையும்போது நாம் இந்த சரீரத்தை விட்டு விட்டுச் சென்று
குழந்தையாக ஆவோம் என்று காட்சி ஏற்படுகிறது. இங்கே சரீரத்தை
விடுவதற்கு உழைப்பு தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள். இங்கே
உழைக்கும் விˆயம் அங்கே சாதாரணமாகி விடுகிறது. இங்கே தேகம்
உட்பட என்னவெல்லாம் இருக்கிறதோ அனைத்தையும் மறந்து விட வேண்டும்.
தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும், இந்த பழைய உலகத்தை
விட வேண்டும். புதிய சரீரத்தை எடுக்க வேண்டும். ஆத்மா
சதோபிரதானமாக இருந்த போது அழகான சரீரம் கிடைத்தது. பிறகு காம
சிதையில் அமர்ந்ததின் மூலம் கருப்பாக தமோபிரதானமாக ஆகி
விட்டீர்கள், எனவே சரீரமும் கூட கருப்பாக கிடைக்கிறது,
அழகானவரிலிருந்து அழகற்றவராக (ஷியாமாக) ஆகி விட்டீர்கள்.
கிருஷ்ணருடைய பெயர் கிருஷ்ணரே ஆகும் பிறகு அவரை ஏன் ஷியாம்
சுந்தர் என்று சொல்கிறீர்கள்? சித்திரங்களில் கூட கிருஷ்ணருடைய
சித்திரத்தை கருப்பாக உருவாக்கி விடுகிறார்கள் ஆனால்
அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. சதோபிரதானமாக இருந்தபோது
சுந்தராக (அழகாக) இருந்தார் என்று இப்போது புரிந்து
கொள்கிறீர்கள். இப்போது தமோபிரதான ஷியாமாக (கருமையாக)
ஆகியுள்ளார். சதோபிரதான மானவர்களை புருúˆôத்தம் (உயர்ந்தவர்கள்)
என்றும், தமோ பிரதானமானவர்களை தாழ்வானவர்கள் என்று
சொல்லப்படுகிறது. பாபா எப்போதும் தூய்மையானவராக இருக்கின்றார்.
அவர் அழகானவர்களாக மாற்றத் தான் வரு கின்றார். வழிபோக்கர்
அல்லவா. கல்பம்-கல்பமாக வருகின்றார், இல்லையென்றால் பழைய
உலகத்தை யார் புதியதாக மாற்றுவார்கள்! இது தூய்மையற்ற மோசமான
உலகமாகும். இந்த வியங்களை உலகத்தில் யாரும் தெரிந்திருக்கவில்லை.
பாபா நம்மை புருசோத்தமர்களாக மாற்றுவதற்காக கற்பித்துக்
கொண்டிருக்கின்றார் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
மீண்டும் தேவதைகளாக ஆவதற்கு நாம் மீண்டும் பிராமணர்களாக ஆகி
யுள்ளோம். நீங்கள் சங்கமயுக பிராமணர்களாவீர்கள். இப்போது
சங்கமயுகம் என்பதை உலகம் தெரிந்திருக்க வில்லை. சாஸ்திரங்களில்
கல்பத்தின் ஆயுளை லட்சக்கணக்கான ஆண்டுகள் என்று எழுதிவிட்டதால்
கலியுகம் இன்னும் குழந்தையாக (பல ஆண்டுகள்) இருக்கிறது என்று
புரிந்து கொள்கிறார்கள். நாம் இங்கே உத்தமரிலும் உத்தமமாக,
கலியுக தூய்மையற்ற நிலையிலிருந்து சத்யுக தூய்மை யானவர்களாக,
மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்காக வந்திருக்கின்றோம் என்பதை
இப்போது நீங்கள் மனதில் புரிந்து கொள்கிறீர்கள். கிரந்தத்திலும்
மகிமை இருக்கிறது - அழுக்கு துணியை துவைத்தார். ஆனால் கிரந்தம்
படிப்பவர்கள் கூட அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இந்த
சமயத்தில் பாபா வந்து முழு உலகத்திலும் உள்ள மனிதர்கள்
அனைவரையும் தூய்மை யாக்குகின்றார். நீங்கள் அந்த தந்தையின்
முன்னால் அமர்ந்துள்ளீர்கள். பாபா தான் குழந்தை களுக்குப்
புரிய வைக்கின்றார். இந்த படைப்பவர் மற்றும் படைப்பினுடைய
ஞானத்தை வேறு யாரும் தெரிந்திருக்கவே இல்லை. பாபா தான்
ஞானக்கடல் ஆவார். அவர் சத்தியமானவராக இருக்கின்றார்,
உயிரோட்டமானவராக இருக்கின்றார், மறுபிறவி அற்றவராக
இருக்கின்றார். அமைதிக்கடல், சுகக்கடல், தூய்மையின் கடலாக
இருக்கின்றார். வந்து இந்த ஆஸ்தியை கொடுங் கள் என்று அவரைத்
தான் அழைக்கின்றார்கள். உங்களுக்கு பாபா இப்போது 21
பிறவிகளுக்கு ஆஸ்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது
அழிவற்ற படிப்பாகும். கற்றுத்தர கூடியவரும் அழிவற்ற தந்தையாவார்.
நீங்கள் அரைக்கல்பம் இராஜ்யத்தை அடைகிறீர்கள் பிறகு இராவண
இராஜ்யமாகி விடுகிறது. அரைக்கல்பம் இராம இராஜ்யம், அரைக்கல்பம்
இராவண இராஜ்யமாகும்.
உயிரினும் மேலானவர் ஒரு பாபாவே ஆவார் ஏனென்றால் குழந்தைகளாகிய
உங்கள் அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவித்து அளவற்ற
சுகத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அவர் எங்களுடைய உயிரினும்
மேலான அன்பான பரலௌகீக தந்தை என்று நீங்கள் நிச்சயத்தோடு
சொல்கிறீர்கள். பிராணன் என்று ஆத்மாவை சொல்லப்படுகிறது.
மனிதர்கள் அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள், ஏனென்றால்
அரைக்கல்பத்திற்கு துக்கத்திலிருந்து விடுவித்து அமைதி மற்றும்
சுகத்தை கொடுப்பவர் தந்தையே ஆவார். எனவே உயிரினும் மேலானவர்
ஆகிவிட்டார் அல்லவா. நாம் சத்யுகத்தில் எப்போதும்
சுகமுடையவர்களாக இருக்கின்றோம் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். மற்றவர்கள் அனைவரும் சாந்திதாமத்திற்குச்
சென்று விடுவார்கள். பிறகு இராவண இராஜ்யத்தில் துக்கம்
ஆரம்பிக்கிறது. துக்கம் மற்றும் சுகத்தின் விளையாட்டாக
இருக்கிறது. இங்கேயே தான் அவ்வப்போது சுகம், அவ்வப்போது துக்கம்
இருக்கிறது என்று மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால்
கிடையாது, சொர்க்கம் தனிப்பட்டது, நரகம் தனிப் பட்டது என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சொர்க்கத்தை தந்தை இராமர் ஸ்தாபனை
செய் கின்றார், நரகத்தை இராவணன் ஸ்தாபனை செய்கின்றான், அவனை
வருடா- வருடம் எரிக் கிறார்கள். ஆனால் ஏன் எரிக்கிறார்கள்? அவன்
என்ன பொருள்? போன்ற எதையும் தெரிந்திருக்க வில்லை. எவ்வளவு
செலவு செய்கிறார்கள். இராமனுடைய சீதா-பகவதியை இராவணன் கவர்ந்து
சென்று விட்டான் என்று எவ்வளவு கதைகளை அமர்ந்து சொல்கிறார்கள்.
மனிதர்கள் அப்படி நடந்திருக்கும் என்று புரிந்து கொள்கிறார்கள்.
இப்போது நீங்கள் அனைவருடைய தொழிலையும் தெரிந்துள்ளீர்கள். இந்த
ஞானம் உங்களுடைய புத்தியில் இருக்கிறது. முழு உலகத்தின்
வரலாறு-புவியியலை எந்தவொரு மனிதனும் தெரிந்திருக்கவில்லை.. பாபா
தான் தெரிந்திருக்கிறார். அவரை உலகத்தை படைத்தவர் என்றும்
சொல்ல முடியாது. உலகம் இருக்கவே இருக்கிறது, பாபா வந்து இந்த
சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற ஞானத்தை மட்டும் தான்
கொடுக்கிறார். பாரதத்தில் இந்த லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம்
இருந்தது, பிறகு என்ன ஆனது? தேவதைகள் யாருடனாவது சண்டை
யிட்டார்களா என்ன? எதுவும் இல்லை. அரைக்கல்பத்திற்கு பிறகு
இராவண இராஜ்யம் ஆரம்பமானதின் மூலம் தேவதைகள் இறங்கும்
மார்க்கத்தில் சென்று விடுகிறார்கள். மற்றபடி யாரோ யுத்தத்தில்
தோற்கடித்தார்கள் என்பதெல்லாம் இல்லை. படை போன்றவற்றின் விˆயம்
எதுவும் இல்லை. சண்டையின் மூலம் இராஜ்யத்தை அடையவும் இல்லை,
இழக்கவும் இல்லை. யோகத்தில் இருந்து தூய்மையாக ஆகி தூய்மையான
இராஜ்யத்தை நீங்கள் ஸ்தாபனை செய்கிறீர்கள். மற்றபடி கைகளில்
எந்த பொருளும் இல்லை. இது இரட்டை அஹிம்சையாகும். ஒன்று
தூய்மையின் அஹிம்சை மற்றொன்று நீங்கள் யாருக்கும் துக்கம்
கொடுப்பதில்லை. அனைத்திலும் கடுமையான ஹிம்சை காமக்கோடாரி
வீசுவதாகும். அது தான் முதல்-இடை-கடைசி வரை துக்கம் கொடுக்
கிறது. இராவண இராஜ்யத்தில் தான் துக்கம் ஆரம்பம் ஆகிறது.
வியாதிகள் ஆரம்பமாகி விடு கிறது. எவ்வளவு அதிக வியாதிகள்
இருக்கின்றன. அனேக விதமான மருந்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
நோயுற்றவர்களாக ஆகி விட்டார்கள் அல்லவா. நீங்கள் இந்த யோகபலத்
தின் மூலம் 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக ஆகி விடுகிறீர்கள்.
அங்கே துக்கம் அல்லது வியாதியின் பெயர்-அடையாளம் இருப்பதில்லை.
அதற்காகவே படித்துக் கொண்டிருக் கிறீர்கள். பகவான் நமக்கு
கற்பித்து நம்மை பகவான் பகவதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்
என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளனர். படிப்பும் கூட எவ்வளவு
சகஜமானதாக இருக்கிறது. அரை முக்கால் மணி நேரத்தில் முழு
சக்கரத்தின் ஞானத்தைப் புரிய வைத்து விடுகிறார். யார்-யார் 84
பிறவிகளை எடுக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
பகவான் நமக்கு கற்பிக்கின்றார், அவர் நிராகாரமானவராக
இருக்கின்றார். அவருடைய உண்மையிலும் உண்மையான பெயர் சிவன் ஆகும்.
நன்மை செய்பவர் அல்லவா. அனைவருக்கும் நன்மை செய்பவர்,
அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளலாக இருக்கின்றார்
உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை. உயர்ந்ததிலும் உயர்ந்த
மனிதர்களாக மாற்றுகின்றார். பாபா கற்றுக்கொடுத்து
புத்திசாலிகளாக்கி வெளியில் சென்று கற்றுக்கொடுங்கள் என்று
கூறுகின்றார். இந்த பிரம்மாகுமார்-குமாரிகளுக்கு கற்பிப்பவர்
சிவபாபா ஆவார். பிரம்மாவின் மூலம் உங்களை தத்தெடுத்திருக்
கின்றேன். பிரஜாபிதா பிரம்மா எங்கிருந்து வந்தார்? இந்த
விˆயத்தில் தான் குழப்ப மடைய கிறார்கள். பல பிறவிகளின்
கடைசியில். இவரை (பிரம்மாவை) தத்தெடுத்திருக்கின்றேன், என்று
கூறுகின்றார். நிறைய பிறவிகள் யார் எடுத்தது? இந்த லஷ்மி -
நாராயணன் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுத்திருக்கிறார்கள்
ஆகையினால் கிருஷ்ணரை ஷியாம் சுந்தர் என்று சொல்லி விடுகிறார்கள்.
நாம் தான் சுந்தராக இருந்தோம் பிறகு 2 கலைகள் குறைந்தது. கலைகள்
குறைந்து குறைந்து இப்போது எந்த கலையுமே இல்லாதவர்களாக ஆகி
விட்டோம். இப்போது தமோபிரதானத்திலிருந்து மீண்டும் எப்படி
சதோபிரதானமாக ஆவது? பாபா கூறுகின்றார், என்னை நினைவு
செய்தீர்கள் என்றால் தூய்மையாகி விடுவீர்கள். இது ருத்ர ஞான
யக்ஞம் என்பதையும் தெரிந்துள்ளீர்கள். யக்ஞத்தில் பிராமணர்கள்
வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் உண்மையான பிராமணர்கள்
உண்மையான கீதை சொல்லக்கூடியவர்கள் ஆகையினால் தான் நீங்கள் உண்மை
யான கீதா பாடசாலை என்று எழுதுகிறீர்கள். அந்த கீதையில் பெயரையே
மாற்றி விட்டார்கள். யார் எப்படி கல்பத்திற்கு முன்னால் ஆஸ்தி
எடுத்திருந்தார்களோ அவர்கள் தான் வந்து எடுப்பார் கள்.
தங்களுடைய மனதில் கேளுங்கள் - நாம் முழுமையான ஆஸ்தியை அடைய
முடியுமா? மனிதர்கள் சரீரத்தை விடுகிறார்கள் என்றால் வெறும்
கையோடு செல்கிறார்கள், அந்த அழியக்கூடிய வருமானம் உடன்
செல்லப்போவது இல்லை. நீங்கள் சரீரத்தை விட்டீர்கள் என்றால் கை
நிறைந்திருக்கும் ஏனென்றால் நீங்கள் 21 பிறவிகளுக்கு தங்களுடைய
வருமானத்தை சேமித்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களுடைய
வருமானங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். இதை விட நாம்
ஏன் மாற்றி பாபாவிடம் கொடுத்து விடக்கூடாது. யார் அதிகம் தானம்
செய்கிறார்களோ அவர்கள் அடுத்த பிறவியில் செல்வந்தர்களாக
ஆகிறார்கள், மாற்றிக் கொள்கிறார்கள் அல்லவா. இப்போது நீங்கள்
21 பிறவிகளுக்கு புதிய உலகத்திற்கு மாற்று கின்றீர்கள். அதற்கு
பதிலாக உங்களுக்கு 21 பிறவிகளுக்கு கிடைக்கிறது. அவர்கள் ஒரு
பிறவிக்கு அல்பகாலத்திற்கு மாற்றுகிறார்கள். நீங்களோ 21
பிறவிகளுக்கு மாற்றுகிறீர்கள். பாபா வள்ளல் ஆவார். இது
நாடகத்தில் பதிவாகியுள்ளது. யார் எவ்வளவு செய்கிறார்களோ,
அதற்கேற்றபடி பலனை அடைகிறார்கள். அவர்கள் மறைமுகமாக
தானம்-புண்ணியம் செய்கிறார்கள் என்றால் அல்பகாலத்திற்கு பலன்
கிடைக்கிறது. இது நேரடியானதாகும். இப்போது அனைத்தையும் புதிய
உலத்திற்கு மாற்ற வேண்டும். பிரம்மாவைப் பாருங்கள் எவ்வளவு
துணிச்சலான காரியத்தை செய்தார். அனைத்தையும் ஈஸ்வரன் கொடுத்தார்
என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இவையனைத் தையும் எனக்கு
கொடுங்கள் என்று பாபா இப்போது கூறுகின்றார். நான் உங்களுக்கு
விஷ்வ இராஜ்யத்தை கொடுக்கின்றேன். பாபா உடனே கொடுத்து விட்டார்,
யோசிக்கவே இல்லை. முழு அதிகாரத்தையும் கொடுத்து விட்டார்.
எனக்கு விஷ்வ இராஜ்யம் கிடைக்கிறது, அந்த போதை ஏறி விட்டது.
லௌகீக குழந்தைகள் போன்ற எதைப்பற்றியும் சிந்தனை செய்ய வில்லை.
கொடுக்கக் கூடியவர் ஈஸ்வரன் எனும்போது பிறகு யாருக்காவது
பொறுப்பு இருக்குமா என்ன. எப்படி 21 பிறவிகளுக்கு மாற்ற
வேண்டும் என்று இந்த பிரம்மா பாபாவை பாருங்கள், தந்தையைப்
பின்பற்றுங்கள். பிரஜாபிதா பிரம்மா செய்தார் அல்லவா. ஈஸ்வரன்
வள்ளல் ஆவார். அவர் இவர் மூலம் செய்ய வைத்தார். நாம் பாபாவிடம்
இராஜ்யத்தை பெற வந்துள்ளோம் என்பதை நீங்களும் தெரிந்துள்ளீர்கள்.
நாளுக்கு நாள் நேரம் குறைந்து கொண்டே செல்கிறது. அப்படிப்பட்ட
சங்கடங்கள் வரும் கேட்கவே கேட்காதீர்கள். அப்படி ஏதேனும் நமக்கு
நேர்ந்து விடக்கூடாது என்று வியாபாரி களின் சுவாசத்தை தன்
பிடியில் வைத்துள்ளனர்.. போர் வீரர்களின் முகத்தை பார்த்து
மனிதர்கள் மயங்கி விடுகிறார்கள். இன்னும் போகப்போக அதிகம்
துன்புறுத்துவார்கள். தங்கம் போன்ற எதையும் வைத்துக் கொள்ள விட
மாட்டார்கள். மீதம் உங்களிடம் என்ன இருக்கும்! எதையும்
வாங்குவதற்கு பணமே இருக்காது. காகித பணம் போன்றவையும் உதவாது.
இராஜ்யம் மாறி விடுகிறது. கடைசியில் மிகுந்த துக்கமுடையவர்களாகி
இறக்கிறார்கள். மிகுந்த துக்கத்திற்கு பிறகு சுகம் ஏற்படும்.
இது இரத்த விளையாட்டாகும். இயற்கைச் சீற்றங்களும் ஏற்படும்.
அதற்கு முன்னால் பாபாவிடமிருந்து முழுமையான ஆஸ்தியை எடுக்க
வேண்டும். சுற்றுங்கள் திரியுங்கள், பாபாவை மட்டும் நினைவு
செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் தூய்மையாக ஆகி விடுவீர்கள்.
மற்றபடி நிறைய சங்கடங்கள் வரும். அதிகம் ஐயோ-ஐயோ என்று சொல்லிக்
கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒரு சிவபாபா மட்டுமே நினைவு
இருக்கும் அளவிற்கு குழந்தைகளாகிய நீங்கள் பயிற்சி செய்ய
வேண்டும். அவருடைய நினைவில் இருந்து கொண்டே தான் சரீரத்தை விட
வேண்டும் வேறு எந்த நண்பர்கள்-உறவினர்கள் போன்றவர் களின் நினைவு
வரக்கூடாது. இந்த பயிற்சியை செய்ய வேண்டும். பாபாவையே நினைவு
செய்ய வேண்டும் மற்றும் நாராயணனாக ஆக வேண்டும். இந்த பயிற்சியை
அதிகம் செய்ய வேண்டும். இல்லை யென்றால் அதிகம் பச்சாதாபப் பட
வேண்டியிருக்கும். வேறு யாருடைய நினைவும் வந்தது என்றால்
தோற்றதைப் போலாகும். யார் தேர்ச்சி பெறுகிறார்களோ, அவர்கள் தான்
வெற்றி மாலையில் கோர்க்கப்படுவார்கள். பாபாவை எந்தளவிற்கு
நினைவு செய்கிறோம் என்று தங்களுக் குள் கேட்க வேண்டும்? கைகளில்
ஏதாவது இருந்தது என்றால் அது கடைசி காலத்தில் நினை விற்கு வரும்.
கைகளில் ஏதும் இல்லை என்றால் நினைவிற்கும் வராது. என்னிடத்தில்
எதுவும் இல்லை என்று பாபா கூறுகின்றார். இது நம்முடைய பொருள்
இல்லை. அந்த உலக ஞானத்திற்குப் பதிலாக இதை (பாபா சொல்லும்
ஞானத்தை) எடுத்தீர்கள் என்றால் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைத்து
விடும். இல்லையென்றால் சொர்க்கத்தின் இராஜ்யத்தை இழந்து
விடுவீர்கள். நீங்கள் இங்கே பாபாவிடம் ஆஸ்தியை எடுக்கத் தான்
வருகின்றீர்கள். கண்டிப்பாக தூய்மையாக ஆகத் தான் வேண்டும்.
இல்லையென்றால் தண்டனை அனுபவித்து கணக்கு-வழக்கை முடித்து விட்டு
செல்வீர்கள். பதவி எதுவும் கிடைக்காது. ஸ்ரீமத்படி நடந்தீர்கள்
என்றால் கிருஷ்ணரை மடியில் ஏந்துவீர்கள். சொல்கிறார்கள் அல்லவா,
கிருஷ்ணரைப் போல் கணவன் கிடைக்க வேண்டும் அல்லது குழந்தை
கிடைக்க வேண்டும் என்று. சிலர் நல்ல விதத்தில் புரிந்து
கொள்கிறார்கள், சிலர் தலைகீழாக பேசி விடுகிறார்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எப்படி பிரம்மா பாபா தன்னுடைய அனைத்தையும் மாற்றி முழு
அதிகாரத்தையும் பாபா விற்கு கொடுத்து விட்டார், யோசிக்கவில்லை,
அப்படி பாபாவை பின்பற்றி 21 பிறவிகளுக்கான பலனை சேமிக்க
வேண்டும்.
2) கடைசி காலத்தில் ஒரு பாபாவைத் தவிர வேறு எந்த பொருளும்
நினைவு வராமல் இருப்ப தற்கு பயிற்சி செய்ய வேண்டும். நம்முடையது
எதுவும் இல்லை, அனைத்தும் பாபாவினுடையது. அல்ஃப் மற்றும் பே (அல்லா
மற்றும் ஆஸ்தி), இந்த நினைவின் மூலம் தேர்ச்சி பெற்று வெற்றி
மாலையில் வர வேண்டும்.
வரதானம்:
மனதின் மீது முழு கவனம் செலுத்தக் கூடிய, உயரும் கலையின் அனுபவி,
உலகை மாற்றுபவர் ஆகுக.
இப்போது கடைசி நேரத்தில் மனதின் மூலம் தான் உலக மாற்றத்திற்கான
நிமித்தம் ஆக வேண்டும். எனவே இப்போது மனதின் ஒரு சங்கல்பம் கூட
வீணாகிப் போகுமானால் அதிகம் இழந்து விட்டீர்கள் என்றாகி விடும்.
ஒரு சங்கல்பத்தையும் கூட சாதாரணமான விˆயம் என நினைக்காதீர்கள்.
தற்போதைய சமயம் சங்கல்பத்தின் குழப்பம் கூட பெரிய குழப்பமாக
எண்ணப்படும். ஏனென்றால் இப்போது சமயம் மாறி விட்டது.
புருˆôர்த்தத்தின் வேகமும் கூட மாறி விட்டது என்றால்
சங்கல்பத்தில் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எப்போது
மனதின் மீது இவ்வளவு கவனம் வைக்கப்படுகிறதோ, அப்போது உயரும் கலை
மூலம் உலகை மாற்றுபவராக ஆக முடியும்.
சுலோகன்:
கர்மத்தில் யோகத்தின் அனுபவம் ஏற்படுவது என்றால் கர்மயோகி
ஆவதாகும்.
அவ்யக்த இசாரா: இணைந்த ரூபத்தின் நினைவு மூலம் சதா வெற்றியாளர்
ஆகுங்கள்
நீங்கள் மற்றும் பாபா - இந்த இணைந்த ரூபத்தை அனுபவம் செய்து
கொண்டு, சதா சுப பாவனை, சிரேஷ்ட விருப்பம், சிரேஷ்ட வார்த்தை,
சிரேஷ்ட திருஷ்டி, சிரேஷ்ட கர்மத்தின் மூலமாக விஷ்வ கல்யாண்காரி
(உலக நன்மை செய்பவர்) சொரூபத்தை அனுபவம் செய்வீர்களானால், ஒரு
விநாடியில் அனைத்துப் பிரச்சினை களுக்கும் தீர்வு காண முடியும்.
சதா ஒரு ஸ்லோகன் நினைவு வைக்க வேண்டும் - பிரச்சினையை
உருவாக்கவும் மாட்டேன், பிரச்சினையைப் பார்த்து தடுமாற வும்
மாட்டேன். நானும் தீர்வு சொரூபமாக இருப்பேன், மற்றவர்களுக்கும்
கூட தீர்வு தருவேன். இந்த ஸ்மிருதியானது உங்களை வெற்றி
சொரூபமாக ஆக்கி விடும்