31-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே, நீங்கள் அதிகாலை எழுந்து, மிகுந்த அன்புடன் - பாபா குட்மார்னிங் (காலை வணக்கம்) என்று சொல்லுங்கள், இந்த நினைவின் மூலம் தான் நீங்கள் சதோபிரதானம் ஆகுவீர்கள்.

கேள்வி:
துல்லியமான நினைவின் மூலம் தந்தையிடமிருந்து கரண்ட் (சக்தி) பெறுவதற்கு, முக்கியமாக எந்த குணங்கள் அவசியமாக இருக்கின்றது?

பதில்:
நிறைய பொறுமை வேண்டும், புரிதல் மற்றும் கம்பீரத்துடன் (கண்ணியத்துடன் கூடிய தீவிரத்தன்மை) - தன்னை ஆத்மா என்று புரிந்து நினைவு செய்வதன் மூலம் தந்தையிடமிருந்து கரண்ட் கிடைக்கின்றது மேலும் ஆத்மா சதோபிரதானம் ஆகிக்கொண்டே செல்கின்றது. இப்பொழுது, தந்தையின் நினைவு என்பது - உங்களை தொந்தரவு செய்ய வேண்டும். ஏனெனில், தந்தையிடமிருந்து பெரிய அளவிலான ஆஸ்தி கிடைக் கின்றது, நீங்கள் முள்ளிலிருந்து மலர் ஆகுகின்றீர்கள், அனைத்து தெய்வீக குணங்களும் (தந்தையை நினைவு செய்வதனால்) வந்து விடுகின்றது.

ஓம் சாந்தி.
தந்தை சொல்கின்றார் - இனிமையான குழந்தைகளே- தத்வம் என்பதன் அர்த்தம் - ஆத்மாக் களாகிய நீங்கள் சாந்த சூவரூபமானவர்கள் என்று அர்த்தம். ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரின் சுய தர்மம் சாந்தி ஆகும். சாந்தி தாமத்திலிருந்து இங்கு வந்து பேசுபவர்களாக ஆகுகின்றீர்கள். இந்த கர்மேந்திரியங்கள் உங்களுடைய நடிப்பை நடிப்பதற்காக உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஆத்மாவில் - சிறியது, பெரியது என்பது கிடையாது, சரீரம் என்பது சிறியதாக வும், பெரியதாகவும் இருக்கின்றது. தந்தை கூறுகின்றார் - நானோ சரீரதாரி அல்ல. குழந்தைகளை சந்திப்பதற்காக அவர்கள் முன்னால் நான் வரவேண்டியதாக இருக்கின்றது. (இவ்வுலகில்) ஓர் தந்தைக்கு பிறக்கக்கூடிய குழந்தையானது - நான் பரந்தாமத்திலிருந்து வந்து ஜென்மம் எடுத்துள்ளேன், தாய் தந்தையை சந்திப்பதற்காக வந்துள்ளேன் என்று கூறாது. ஓர் புதிய ஆத்மா யாருடைய சரீரத்திலாவது வருகின்றது எனில் அல்லது பழைய ஆத்மா இன்னொருவரின் சரீரத்தில் பிரவேசம் ஆகுகின்றது எனில் - அப்பொழுது அந்த ஆத்மாவானது - நான் என் தாய் தந்தையை சந்திக்க வந்துள்ளேன் என்று சொல்லலாம், அந்த ஆத்மாக்களுக்கு, தாய் தந்தை தானாகவே கிடைத்து விடுகின்றார்கள். இங்கே இது புது விஷயமாகும். தந்தை சொல்கின்றார் - நான் பரந்தாமத்திலிருந்து வந்து குழந்தைகளாகிய உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். உங்களுக்கு ஞானம் கொடுக்கின்றேன், ஏனெனில் நான் ஞானம் நிறைந்தவன், ஞானத்தின் கடல். பாபா கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்களை படிப்பிப்பதற்காக, இராஜயோகத்கை கற்பிப்பதற் காக நான் வருகின்றேன் .

நீங்கள் குழந்தைகள் இப்பொழுது சங்கமத்தில் இருக்கின்றீர்கள், பிறகு வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும், எனவே கண்டிப்பாக பாவனமாக ஆக வேண்டும். உள்ளே மிகவும் குஷி இருக்க வேண்டும். ஓஹோ! எல்லை யற்ற தந்தை கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள் அப்பொழுது நீங்கள் சதோபிரதானமாக, விஷ்வத் திற்கு எஜமானராக ஆகி விடுவீர்கள். தந்தை குழந்தைகளை எவ்வளவு அன்பு செய்கின்றார். அவர் வெறும் ஆசிரியராக மட்டும் இருந்து உங்களுக்கு படிப்பித்து உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வில்லை. தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார். உங்களுக்கு படிப்பிக்கின்றார். நினைவு யாத்திரையையும் கற்றுக்கொடுக்கின்றார். எனவே, விஷ்வத்திற்கு எஜமானராக ஆக்கக் கூடிய, பதீதத்திலிருந்து பாவனமாக்கக்கூடிய தந்தை மீது மிகுந்த அன்பு இருத்தல் வேண்டும். அதிகாலை எழுந்து, முதலில் சிவபாபாவிற்கு காலை வணக்கம் (குட்மார்னிங்) சொல்ல வேண்டும். குழந்தைகள், தங்களுடைய உள்ளத்தை கேட்க வேண்டும் - அதாவது நாம் அதிகாலை எழுந்து, எல்லையற்ற தந்தையை எந்த அளவுக்கு நினைவு செய் கின்றோம். அதிகாலை எழுந்து பாபாவுக்கு குட்மார்னிங் சொன்னால், ஞானத்தினுடைய சிந்தனையை செய்தால், குஷியினுடைய அளவு அதிகரிக்கும். முக்கியமானதே நினைவு என்பதாகும்; இதன் மூலம் எதிர் காலத்திற்கான மிகப்பெரிய வருமானம் என்பது ஏற்படுகின்றது. கல்ப கல்பத்திற்கு (ஒவ்வொரு கல்பத்திலும்) இந்த வருமானம் காரியத்திற்கு உதவும். நீங்கள் மிகுந்த பொறுமையுடன், கம்பீரத்தா மற்றும் புரிதலுடன் நினைவு செய்யுங்கள். மேலோட்டமாக, நான் பாபாவை மிகவும் நினைவு செய்கின்றேன் என்று சொல்கின்றீர்கள், ஆனால் துல்லியமாக நினைவு செய்வதில் உழைப்பு என்பது இருக்கின்றது. யார் தந்தையை அதிகமாக நினைவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அதிகமாக கரண்ட் கிடைக்கின்றது, ஏனெனில் நினைவின் மூலமாக நினைவு கிடைக்கின்றது. யோகம் மற்றும் ஞானம் என்பது இரண்டு விஷயங்கள். யோகம் என்பது மிகப்பெரிய பாடமாக இருக்கின்றது. யோகத்தின் மூலமே ஆத்மா சதோபிர தானமாக ஆகுகின்றது. நினைவு செய்யாமல் சதோபிரதானம் ஆகுவது என்பது முடியாத ஒன்றாகும். நல்ல முறையில் அன்போடு தந்தையை நினைவு செய்யுங்கள், அப்பொழுது தானாகவே கரண்ட் கிடைக்கும். ஆரோக்கியமாக ஆகி விடுவீர்கள். கரண்ட் மூலமாக ஆயுளும் அதிகமாகின்றது. குழந்தைகள் நினைவு செய்கின்றார்கள், தந்தையும் சக்திவாய்ந்த ஒளிக்கதிர் களைக் கொடுக்கின்றார். இனிமையான குழந்தைகள், இதை உறுதியாக நினைவில் வைக்க வேண்டும் - அதாவது சிவபாபா நமக்கு படிப்பிக்கின்றார். சிவபாபா பதீத பாவனராகவும் இருக் கின்றார். சத்கதியை கொடுக்கும் வள்ளலாகவும் இருக்கின்றார். சத்கதி என்றால் சுவர்கத்திற்கான இராஜாங்கத்தை கொடுக்கின்றார். பாபா எவ்வளவு இனிமையானவர். எவ்வளவு அன்பாக, குழந்தைகளுக்கு அமர்ந்து படிப்பிக்கின்றார். தந்தை, தாதாவின் (பிரம்மா-மூத்த சகோதரர்) மூலமாக நமக்கு படிப்பிக்கின்றார். பாபா, குழந்தைகளை எவ்வளவு அன்பு செய்கின்றார், எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. என்னை நினைவு செய்யுங்கள், சக்கரத்தை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே கூறுகின்றார். தந்தையினுடைய நினைவில் உள்ளம் முற்றிலும் உறைந்து போக வேணடும். ஒரு தந்தையின் நினைவு மட்டுமே உங்களை தொந்தரவு செய்ய வேண்டும் ஏனெனில் தந்தையிடமிருந்து எத்தனை பெரிய ஆஸ்தி கிடைக்கின்றது. நம்முடைய தந்தை மீது நமக்கு எந்த அளவிற்கு அன்பு இருக்கின்றது என்று நம்மிடத்தில் பார்க்க வேண்டும். எந்த அளவிற்கு என்னிடம் தெய்வீக குணங்கள் இருக்கின்றது! ஏனெனில் இப்பொழுது குழந்தைகள் நீங்கள் முள்ளிலிருந்து மலர்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றீர்கள். எந்த அளவிற்கு யோகத்தில் இருக்கின்றீர்களோ அந்த அளவிற்கு முள்ளிலிருந்து மலர்களாக, சதோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்வீர்கள். யார் அநேக முட்களை மலர்களாக ஆக்குகின்றார்களோ அவர்களே உண்மையான வாசனை நிறைந்த மலர்கள் என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் யாரிடமும் முள் போன்று நடந்து கொள்ள மாட்டார்கள். கோபம் என்பது மிகப்பெரிய முள். அநேகருக்கு துக்கத்தை கொடுக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முட்கள் நிறைந்த உலகிலிருந்து விலகி கரையோரம் வந்துள்ளீர்கள், நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். எப்படி ஓர் தோட்டக்காரர் செடிகளை தனியாக எடுத்து தொட்டியில் வைப்பாரோ அதே போல் மலர்களாகிய நீங்களும் கூட இப்பொழுது சங்கமயுகம் என்ற தொட்டியில் தனியாக வைக்கப்பட்டுள்ளீர்கள். பிறகு மலர்களாகிய நீங்கள் சத்யுகத்திற்கு சென்று விடுவீர்கள். கலியுகம் என்ற முள் நெருப்பிற்கு இரையாகிவிடும். தந்தை சொல்கின்றார் - அதாவது எந்த அளவிற்கு நீங்கள் அநேகருக்கு நன்மை செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு அதற்கான பலன் தங்களுக்குத் தான் கிடைக்கும். அநேகருக்கு பாதையை சொல்கின்றீர்கள் எனில், அநேகரின் ஆசிர்வாதம் என்பது கிடைக்கும். ஞான இரத்தினங்களால் தன் பையை நிரப்பிக்கொண்டு பிறகு தானம் செய்யுங்கள். ஞானக் கடலானவர் தங்களுக்கு இரத்தினங் களை தட்டுக்கள் நிரப்பி நிரப்பி கொடுக்கின்றார். யார் அதை தானம் செய்கின்றார்களோ அவர்கள் அனைவராலும் அன்பு செய்யப்படுவார்கள். குழந்தைகளுக்கு - தனக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும். விவேகமான குழந்தைகளாக இருப்பவர்கள் - தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி யையுமே எடுப்பேன் என்று சொல்வார்கள். முற்றிலும் துரிதமாக ஈடுபடுவார்கள். தந்தையிடம் மிகுந்த அன்பு இருக்கும் ஏனெனில், பிராணத்தை (உயிரை) கொடுக்கக்கூடிய தந்தை கிடைத்துள் ளார் என்பதை அவர்கள் தெரிந்துள்ளார்கள். ஞானத்தினுடைய வரதானத்தை அந்த அளவிற்கு கொடுக்கின்றார் - அதன் மூலம், எதிலிருந்து எதுவாக நாம் ஆகியுள்ளோம். திவாலான நிலை யிலிருந்து செல்வந்தர்களாக ஆகிவிட்டோம். அவ்வளவு பண்டாராவை நிரப்பி விட்டார். எவ்வளவு தந்தையை நினைக்கின்றோமா, அவ்வளவு தந்தையிடத்தில் அன்பு இருக்கும், ஈர்ப்பு ஏற்படும். ஊசி சுத்தமாக இருந்தால் காந்தத்தின் பக்கம் ஈர்க்கப்படும் தானே. தந்தையின் நினைவின் மூலமாக துரு நீங்கிக்கொண்டே செல்லும். ஒரு தந்தையின் நினைவைத் தவிர வேறு எந்த நினைவும் கூடாது. தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தைகளே, கவனக்குறைவாக இருத்தல் கூடாது. சுவதர்சன சக்கரதாரியாக ஆகுங்கள், லைட் ஹவுஸ்-ஆக(கலங்கரை விளக்கமாக) ஆகுங்கள்.

சுவதர்சன சக்கரதாரியாக ஆகக்கூடிய பயிற்சியை நல்ல முறையில் செய்தால், நீங்கள் ஞானக் கடல் போல ஆகிவிடுவீர்கள். எப்படி மாணவர்கள் படித்து ஆசிரியர்களாக ஆகுகின்றார்கள் இல்லையா. உங்களுடைய தொழிலே இது தான். அனைவரையும் சுவதர்சன சக்கரதாரியாக ஆக்குங்கள் அப்பொழுதே சக்கரவர்த்தி ராஜா, ராணியாக ஆவீர்கள். தந்தை சொல்கின்றார் - குழந்தைகள் நீங்கள் இல்லாமல் எனக்கு கூட ஓய்வற்றவர் (அமைதியற்றவர்) போன்ற நிலை ஏற்படுகின்றது. எப்பொழுது நேரம் வருகின்றதோ,(பரந்தாமத்திலிருந்து தந்தை கீழே வருவதற்கான நேரம்) அப்பொழுது ஓய்வற்றவராக ஆகிவிடுகின்றேன்; போதும், இப்பொழுது கீழே செல்வோம் என்றாகி விடுகின்றது. குழந்தைகள் மிகவும் கூக்குரல் இடுகின்றார்கள், மிகவும் துக்கத்தில் இருக் கின்றார்கள். இரக்கம் வருகின்றது, எனவே குழந்தைகளாகிய உங்களது அனைத்து துக்கங்களி லிருந்தும் விடுவிப்பதற்காக வருகின்றேன். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் வீடு செல்ல வேண்டும், பிறகு அங்கிருந்து நீங்கள் தானாகவே சுகதாமம் சென்று விடுவீர்கள். அங்கே நான் உங்களுடைய துணையாக ஆகுவதில்லை. தன்னுடைய மனோநிலையின் அனுசாரம் உங்களுடைய ஆத்மா அங்கே (சத்யுகத்திற்கு) சென்று விடும்.

இனிமையிலும் இனிமையான, காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) தந்தையிடமிருந்து தானாகவே கரண்ட் கிடைப்பதற்காக, மிகுந்த அன்புடன் தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த நினைவு தான் ஆரோக்கியமானவராக ஆக்கும். கரண்ட் பெறுவதன் மூலமே ஆயுள் அதிகரிக்கும். நினைவின் மூலமே தந்தையிடமிருந்து ஒளிக்கதிர்கள் கிடைக்கின்றது.

(2) கவனக்குறைவினை விட்டு விட்டு சுவதர்சன சக்கரதாரியாக ஆகுங்கள். இதன் மூலமே ஞான கடலாகி சக்கரவர்த்தி ராஜா ராணியாக ஆகுவீர்கள்.

வரதானம்:
எல்லோருக்கும் குஷி நிறைந்த செய்தியை சொல்லக்கூடிய, குஷியினுடைய கஜானாவால் நிரம்பிய பண்டாராவாக ஆகுக.

சதா தன்னுடைய இந்த சொரூபத்தை தன் முன்னால் வையுங்கள்- அதாவது குஷியினுடைய கஜானாக்களால் நிரம்பிய பண்டாரா நான். கணக்கில் அடங்கா மேலும் அழியாத கஜானாக்கள் என்ன கிடைத்திருக்கின்றதோ, அந்த கஜானாக்களை நினைவில் கொண்டு வாருங்கள். கஜானாக் களை நினைவில் கொண்டு வருவதனால் குஷி என்பது ஏற்படும் மேலும் எங்கே குஷி இருக் கின்றதோ அங்கே சதாகாலத்திற்காக துக்கம் தூரமாக சென்று விடும். கஜானாக்களின் நினைவின் மூலமாக ஆத்மா சக்திசாலியாக ஆகி விடுகின்றது, வீணானது முடிவுக்கு வருகின்றது. நிறைந்த ஆத்மா ஒருபோதும் தடுமாற்றம் அடைவதில்லை, அந்த ஆத்மா தானும் குஷியாக இருந்து, மற்றவர்களுக்கும் குஷி நிறைந்த செய்தியை சொல்கின்றது.

சுலோகன்:
யோக்கியமானவராக ஆக வேண்டும் என்றால், கர்மம் மேலும் யோகத்தில் சமநிலை வையுங்கள்.

அவ்யக்த சமிக்கை: சங்கல்ப சக்தியை (எண்ணங்களின் சக்தியை) சேமிப்பதன் மூலமாக உயர்ந்த சேவைக்கு நிமித்தமாக (கருவியாக) ஆகுங்கள்.

வாய் மூலமாக செய்தி கொடுக்கக்கூடிய சேவையில் உங்களுடைய நேரத்தை ஈடுபடுத்து கின்றீர்கள், செல்வத்தையும் ஈடுபடுத்துகின்றீர்கள், தடுமாற்றத்திலும் வருகின்றீர்கள், களைப் படையவும் செய்கின்றீர்கள்... ஆனால் உயர்ந்த சங்கல்பத்தினுடைய சேவையில் இவை அனைத்தும் சேமிப்பாக ஆகி விடுகின்றது. எனவே இந்த சங்கல்ப சக்தியை அதிகரியுங்கள். உறுதி நிறைந்த சங்கல்பம் செய்யுங்கள், அப்பொழுது ப்ரத்யக்ஷம் விரைவில் ஏற்பட்டு விடும்.

டிராமாவின் சில ஆழமான இரகசியங்கள் (டிரான்ஸில் (ஆழ்நிலை தியானத்தில்) செல்லக்கூடிய குழந்தைகள் மூலம் பெறப்பட்டவை)

(1) இந்த விராட பிலிம் (மிகப்பெரிய டிராமா)-ல் ஒவ்வொரு மனித ஆத்மாவிலும் தங்கள் தங்களுடைய நிலையின் அனுசாரம், முழு வாழ்க்கைக்கான அறிவு அதாவது நடிப்பானது முன்கூட்டியே பதிவு செய்யப் பட்டுள்ளது (மெர்ஜ் ஆகியுள்ளது). ஜீவ ஆத்மாவில் முழு வாழ்க் கைக்கான அடையாளம் பதிவு செய்யப் பட்டுள்ளதால், நேரத்தின் அனுசாரம் அது வெளிப்படு கின்றது (எமெர்ஜ் ஆகுகின்றது). ஓவ்வொரு ஆத்மா விற்குள்ளும் தங்கள் தங்களுடைய சம்பூர்ண நிலையின் அனுசாரம் தகவலானது அதாவது பதிவாகியுள்ள நடிப்பானது நேரத்தின் அனுசாரம் வெளிப்படுகின்றது இதன் மூலமாக நீங்கள் ஒவ்வொருவரும் அனைத்தும் அறிந்தவர்களாக ஆகிவிடுகின்றீர்கள்.

(2) இந்த விராட பிலிம் (மிகப்பெரிய டிராமா)-ல் ஒவ்வொரு நொடிக்கான நடிப்பும் (ஆத்மாவில் பதிவாகியுள்ள நடிப்பு) புதிதானதாக இருப்பதால், நீங்கள் இப்பொழுதுதான் இங்கே புதிதாக வந்துள்ளோம் என்பது போல் புரிந்து கொள்வீர்கள். ஒவ்வொரு நொடிக்கான நடிப்பு தனிப்பட்டதாக இருக்கின்றது, செயலை செய்த பிறகு கல்பத்திற்கு முன்பு போலே அடுத்த நொடியானது ரிப்பீட் ஆகின்றது (மீண்டும் நடைபெறுகின்றது) ஆனால் எந்த நொடியில் நடைமுறை வாழ்க்கைக்கு செல்கின்றீர்களோ, அந்த நேரம் (பதிவாகியுள்ள நடிப்பு) புதியதாக அனுபவம் ஆகுகின்றது. இந்த புரிதலுடன் முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். எனக்கு ஞானம் கிடைத்து விட்டது எனவே நான் இப்பொழுது செல்கின்றேன் என்று எவரும் கூற முடியாது. எது வரை விநாசம் ஏற்பட வில்லையோ அதுவரை முழு நடிப்பு மற்றும் முழு ஞானம் என்பது புதியதாக இருக்கும்.

(3) இந்த விராட டிராமா-ல் எந்தவொரு விதியானது உருவாக்கப்பட்டுள்ளதோ... அது நிச்சயத்தின் மூலமே உருவாக்கப்பட்டுள்ளது. விதியை விலக்குவதும் (தடுத்தலும்) அல்லது உருவாக்குவதும் உங்கள் ஒவ்வொருவரின் கையில் உள்ளது. என்னுடைய எதிரியும், என்னுடைய நன்பனும் எனக்கு நானே. இப்பொழுது நீங்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்களாக (ரமணீகரமாக), இனிமையானவர்களாக ஆகுங்கள் மேலும் ஆக்குங்கள்.

(4) இந்த விராட பிலிம்-ல், சகித்துக் கொள்வது என்பது கூட கல்பத்திற்கு முன்பான ஓர் இனிமையான பிரதிபலிப்பாகும் (போன கல்பத்தின் போலவே இப்பொழுதும் சகித்துக் கொள்கின்றீர் கள்). ஏனெனில் மீண்டும் கூட இப்பொழுது உங்களுக்கு எதுவும் நடந்துவிட போவதில்லை (சகித்துக்கொள்வதனால் பாதிப்பு என்பது இல்லை). யார் உங்களை தொந்தரவு செய்தார்களோ அவர்களும் கூட சொல்வார்கள், அதாவது - நான் இவர் களுக்கு இவ்வளவு தொந்தரவு கொடுத்தேன், துக்கம் கொடுத்தேன் ஆனாலும் இவர்கள் தெய்வீக ஒற்றுமையுடன் (டிவைன் யுனிட்டி), உயர்ந்த ஒற்றுமையுடன் (சப்ரீம் யுனிட்டி) வெற்றி பெற்ற பாண்டவர்களாக இருக்கின்றார் கள். இந்த நிச்சயிக்கப்படட விதியை (சகிப்புத்தன்மைக்கான வெற்றி) யாரும் தடுக்க முடியாது.

(5) இந்த விராட பிலிம்-ல், ஆச்சரியத்தை பாருங்கள், அதாவது - பிரத்யஷமான (உயிரோட்டமுள்ள) பாண்டவர்களும் இங்கே வந்து சேர்ந்து விட்டீர்கள் மேலும் உங்களுடைய பழைய சித்திரம் மற்றும் அடையாளங் களும் கூட இந்த நேரம் வரை நிலையாக இருக்கின்றது. எப்படி பழைய காகிதம், பழைய சாஸ்திரம், பழைய புத்தகம் ஆகியவற்றை பாதுகாத்து வைக் கின்றார்கள். பிறகு அதற்கு நிறைய மதிப்பு என்பது இருக்கின்றது. அவ்வாறே பழைய பொருட் களை நிலையாக வைத்துக்கொண்டு புதிய பொருளுக்கான கண்டுபிடிப்பு என்பது ஏற்படுகின்றது. பழைய கீதை என்பது நடைமுறையில் உள்ளது, புதிய கீதைக்கான கண்டுபிடிப்பு ஏற்பட்டுள்ளது. எப்பொழுது புதிய கண்டுபிடிப்பு நிலைநாட்டப்படுகின்றதோ அப்பொழுதே பழையதற்கு முடிவு என்பது ஏற்படுகின்றது. இப்பொழுது நீங்கள் நடைமுறையில் ஞானத்தை தன் வாழ்க்கையில் தாரணை செய்வதன் மூலம் துர்கா, காளியாக ஆகுகின்றீர்கள். பிறகு பழைய ஸ்தூல (கண்களுக்கு புலப்படக்கூடிய) ஜட சித்திரங்களுக்கு (உயிரற்ற சித்திரங்களுக்கு) விநாசம் ஏற்படும் பிறகு புதிய உயிரோட்டம் உடைய சொரூபத்தின் (தேவி தேவதா) நிலைப்பாடு ஏற்படும்.

(6) இந்த விராட பிலிம்-ன் திட்டத்தின் அனுசாரம் - சங்கமத்தின் இனிமையான நேரத்தில் ஒப்பற்ற தெய்வீக குழந்தைகளே விகாரத்தின் மீது வெற்றி பெற்று வைகுண்டத்தின் இனிமையான லாட்டரியை பெறு கின்றீர்கள். தங்களுடைய இந்த விதி (தலையெழுத்து) எத்தனை அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கின்றது. இந்த நேரம் ஆண் மற்றும் பெண்-ஆக இருக்கக்கூடிய நீங்கள் அழிவற்ற ஞானத்தின் மூலமாக தகுதிமிக்க தேவதா பதவியை பெறுகின்றீர்கள், இதுவே இந்த இனிமையான சங்கமத்தின் ஆச்சர்யமான நேரத்தின் ஆச்சர்யமான வழக்கம் ஆகும்.

(7) ஈஸ்வர்(இறைவன்), சாட்சியாளராக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றார் அதாவது - நான் எந்த நடிகர்களுக்கு அநேக நகைகள் போட்டு அலங்காரம் செய்து, இந்த சிருஷ்டி என்ற மேடைக்கு நடனமாட அனுப்பியிருந்தேனோ அவர்கள் எவ்வாறு நடித்துக்கொண்டு இருக்கின்றார் கள். நான் என்னுடைய தெய்வீக குழந்தைகளுக்கு - தங்க மணி, வெள்ளி மணி கொடுத்து சொல்லி யிருந்தேன், அதாவது - இந்த தங்க ஆபரணங்களை அணிந்து, மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன், சாட்சியாளராகி நடிக்கவும் செய்யுங்கள் மேலும் சாட்சியாளராகி இந்த விளையாட்டையும் பாருங்கள். மாட்டிக்கொள்ளாதீர்கள் (என்று சொல்லியிருந்தேன்). ஆனால் அரைக்கல்பம் ராஜ்ய பாக்கியத்தினை அனுபவம் செய்து விட்டு பிறகு தன்னுடைய படைப்பான மாயையிடம் மாட்டிக்கொண்டு விட்டார்கள். இப்பொழுது மீண்டும் நான் உங்களுக்கு கூறுகின்றேன் - இந்த மாயையை விட்டு விடுங்கள். இந்த ஞான மார்க்கத்தின் மூலம் விகாரி காரியங்களிலிருந்து முற்றிலும் மாறுதல் அடைந்து நிர்விகாரியாக ஆகுவதன் மூலம் ஆதி, மத்திய, அந்திம துக்கங் களிலிருந்து விடுபட்டு பல பிறவிகளுக்கு சுகத்தை பலனாக பெறுவீர்கள்.

(8) உங்களுக்கு - உயர்ந்த மனோநிலையில் இருக்கக்கூடிய யாரிடமிருந்தாவது எச்சரிக்கை (கவனமாக இருக்கும் பொருட்டு) கிடைக்கின்றது எனில் அதை இரகசியம் நிறைந்ததாக புரிந்து கொண்டு, எடுத்துக்கொள்வதில் தான் நன்மை நிறைந்துள்ளது. அதில் (அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையில்) உள்ள இரகசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் - அதாவது அவசியம் அதில் ஏதோ நன்மை அடங்கியுள்ளது. எனக்கு இவரிடமிருந்து என்ன பாயின்ட்ஸ் கிடைத்திருக்கின்றதோ அவை முற்றிலும் சரியே என்று மிகுந்த குஷியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவேளை என் மூலம் ஏதேனும் தவறு நடக்கின்றது எனில், அந்த பாயின்ட்ஸ் நினைவுக்கு வருவதன் மூலம் தன்னை திருத்திக் கொள்வேன். எனவே எந்த ஒரு எச்சரிக்கையாக வேண்டு மானாலும் இருக்கட்டும், மிகுந்து விசால புத்தியுடன் தாரணை செய்வதனால் நீங்கள் முன்னேற்றத்தை அடைய முடியும்.

(9) இப்பொழுது நீங்கள் தினமும் அந்தர்முகியாக ஆகி நினைவில் இருக்க வேண்டும் ஏனெனில் அந்தர் முகியாக ஆகுவதன் மூலம் தன்னை (தான் யார் என்பதை) பார்க்க முடியும். பார்ப்பது மட்டுமல்ல, மாற்றமும் செய்ய முடியும். இது தான் மிக உயர்ந்த மனோநிலை (சர்வோத்தம அவஸ்தா) என்பதாகும். ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைக்கு ஏற்ப புருஷார்த்தம் செய்பவர் கள் என்பது - எப்பொழுது (உங்களுக்கு) தெரிந்து விட்டதோ - அப்பொழுது எந்த ஒரு புருஷார்த் தியை பற்றியும் வாக்குவாதம் என்பது நடத்தப்பட முடியாது ஏனெனில் அவர்கள் தங்களுடைய நிலைக்கு ஏற்றபடியான புருஷார்த்தியாக இருக்கின்றார்கள். அவர்களுடைய நிலையை பார்த்து அவர்களிடமிருந்து குணங்களை எடுங்கள். ஒருவேளை குணங்களை எடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள்.

(10) நீங்கள் சதா தன்னுடைய சர்வோத்தம லட்சியத்தை (மிக உயர்ந்த லட்சியத்தை) தன் முன்னால் வைத்து கொண்டு, அந்த லட்சியத்தை பாருங்கள் மேலும் தங்களையும் பாருங்கள் (லட்சியம் மற்றும் லட்சணத்தை பாருங்கள்). நீங்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கே உரிய (தனித் தன்மையான) புருஷார்த்திகள். நீங்கள் தன் மீது. தன் பார்வையை வைத்து -முன்னேறி ஓடிக் கொண்டே இருங்கள். யார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ஆனால் நான் என்னுடைய சுவரூபத்தில் நிலைத்து இருப்பேன், மற்றவர்கள் யாரையும் பார்க்க மாட்டேன். என்னுடைய புத்தியின் யோக பலத்தின் மூலம். நான் அவர்களுடைய நிலையை தெரிந்து கொள்வேன். உள்நோக்கு முகம் என்பதன் நிலையின் (அந்தர்முக்தாவின் நிலை) மூலமே நீங்கள் அனேக பரீட்ச்சைகளில் வெற்றி பெற முடியும். நல்லது. ஓம் சாந்தி.