01-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் இராவணனின்
வழிப்படி நடந்து பாபாவை நிந்தித்ததால் பாரதம் சோழியைப் போன்று
ஆகிவிட்டது. இப்போது அதை தெரிந்துக் கொண்டு நினைவு செய்தால்
செல்வந்தர் ஆகிவிடுவீர்கள்.
கேள்வி:
ஏணிப்படத்தில் எந்த ஒரு அதிசயமான
ரகசியம் அடங்கி இருக்கிறது?
பதில்:
அரைக் கல்பம் பக்தியின் நடனமாகும்.
பிறகு அரைக் கல்பம் ஞானத்தின் நடனம் ஆகும். பக்தியின் நடனம்
நடக்கும் போது ஞானம் கிடையாது. ஞானத்தினுடையது நடக்கும் போது
பக்தி கிடையாது. அரைக் கல்பம் இராவணனின் பிராப்தி நடக்கிறது.
மேலும் அரைக் கல்பம் குழந்தை களாகிய நீங்கள் பிராப்தியை
அனுபவிக்கிறீர்கள். இந்த ஆழமான இரகசியம் ஏணிப்படியின் படத்தில்
அடங்கி இருக்கிறது.
பாடல்:
ஓம் நமச்சிவாய.....
ஓம் சாந்தி.
பாபா வந்து புரிய வைக்கின்றார். பக்தி மார்க்கத்தில் நிறைய
பக்தியின் நடனம் ஆடினீர் கள், ஞானத்தின் நடனம் ஆடவில்லை.
பக்தியின் நடனம் எப்போது இருக்கிறதோ அப்போது ஞானத்தினுடையது
இருக்காது. ஞானத்தினுடையது இருக்கும் போது பக்தியினுடையது
இருக்காது. ஏனென்றால், பக்தியின் நடனம் இறங்கும் கலையில் கொண்டு
செல்கிறது. சத்யுகம் திரேதாவில் பக்தி இல்லை. பக்தி
துவாபரயுகத்தில் இருந்து ஆரம்பம் ஆகிறது. பக்தி ஆரம்பம் ஆனதும்
ஞானத்தின் பலன் நிறைவடைகிறது. பிறகு இறங்கும் கலை ஏற்படுகிறது.
எப்படி இறங்கு கிறார்கள் என்பதை பாபா புரிய வைக்கின்றார்.
குழந்தைகளாகிய நீங்கள் என்னை மிகவும் நிந்தித்து விட்டீர்கள்
என நான் கல்ப கல்பமாக வந்து குழந்தைகளுக்குக் கூறுகிறேன்.
எப்போதெல்லாம் பாரதத்தில் இந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின்
நிந்தனைகள் அதிகம் நடக்கிறதோ அப்போது நான் வருகிறேன். அந்த
நிந்தனை என்று எதற்கு சொல்லப் படுகிறது.. இதையும் புரிய
வைக்கிறார். நான் வந்து விகாரி நரகவாசி பாரத்தை கல்ப கல்பமாக
சொர்க்கவாசியாக மாற்று கிறேன். நீங்கள் அசுர வழிப்படி என்னை
நிந்தனை செய்த காரணத்தினால் எவ்வளவு ஏழைகளாகி விட்டீர்கள்.
இராம இராஜ்யம் இருந்தது, இப்போது இராவண இராஜ்யம் ஆகும். அதற்கு
தோல்வி மற்றும் வெற்றி, பகல் மற்றும் இரவு என்று கூறப்படுகிறது.
நான் எப்போது வருவேன் என்று இப்போது சிந்தியுங்கள். யாருக்கு
இராஜ்யத்தை அளித்தேனோ அவர்களே இராஜ்யத்தை இழந்து
அமர்திருக்கிறார்கள். கணக்கு வழக்கு முற்றிலும் புரிய வைக்கப்
பட்டிருக்கிறது. நான் வந்து ஆஸ்தி அளிக்கிறேன். பிறகு இராவணன்
வந்து உங்களுக்கு முக்கியமாக பாரதம், உலகம் முழுவதற்கும் சாபம்
அளிக்கிறான். பாரதத்தின் மகிமையைப் பற்றி யாருக்கும்
தெரியவில்லை. முதன் முதலில் பாரதம் தான் இருந்தது. எப்போது
இருந்தது, எப்படி இருந்தது, யார் இராஜ்யம் செய்தனர், யாருக்கும்
எதுவும் தெரியவில்லை, எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. தேவதை
களாக இருந்தவர்களின் முகம் மனிதர்களைப் போன்றும் நடத்தை
தேவதைகளைப் போன்றும் இருந்தது. இப்போது முகம் மனிதர்களைப்
போன்று தான் இருக்கிறது. நடத்தை அசுரர்களைப் போன்று இருக்கிறது.
யாருக்காவது புரிய வைக்கின்றோம் என்றாலும், அவர்கள் புரிந்துக்
கொள்வதில்லை. ஏனென்றால் பரலௌகீக தந்தையைப் பற்றி அறியவில்லை.
மேலும் நிந்தனை செய்து விட்டனர், பாபாவை நிந்தனை செய்து செய்து
சோழி போன்று ஆகி விட்டனர். பாரதம் வீழ்ச்சி அடைந்து விட்டது.
இந்த நிலை ஏற்படும் போது தான் நான் வருகிறேன் என பாபா
கூறுகிறார். தற்சமயம் குழந்தைகளின் எதிரில் அமர்ந்து புரிய
வைக்கிறேன். போன கல்பத்திலும் இவ்வாறு தான் புரிய வைத்தேன்.
இப்போது தெய்வீக சம்பிரதாயத்தின் ஸ்தாபனை நடந்துக்
கொண்டிருக்கிறது. மனிதனிலிருந்து தேவதையாகிக்
கொண்டிருக்கிறார்கள். பாபா எப்போது வருகின்றார் என்பது
மனிதர்களுக்கு தெரிய வில்லை. சத்யுகம் திரேதாவில் நீங்கள்
மிகவும் குஷி யோடு பலனை அனுபவிக்கிறீர்கள் என்பதும்
மனிதர்களுக்குத் தெரியவில்லை. பிறகு துவாபர யுகத்திலிருந்து
இராவணனின் சாபத்தை அடைந்து முற்றிலும் அழிந்து போகிறார்கள்.
எப்படி தேவதைகள் பலனை அனுபவித்து அனுபவித்து திரேதாவின்
முடிவில் முடிந்து போகிறார்கள். பிறகு இராவணனின் அசுரபிராப்தி
ஆரம்பமாகிறது. பக்தி கூட முதலில் தூய்மையானதாக இருந்தது. பிறகு
தூய்மையற்றதாக ஆகிறது. ஏணிப்படி சரியாக
உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பொருளும் சதோபிரதானம், சதோ,
ரஜோ தமோவாகிறது. துரு ஏறிக் கொண்டே போகிறது. குழந்தைகளாகிய
உங்களுக்கு மிகவும் நன்கு புரிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்
தாரணை குறைவாக இருக்கிறது. சிலருக்கு புரிய வைப்பதற்கான அறிவு
முற்றிலும் இல்லை. சிலர் நல்ல அனுபவியாக இருக்கிறார்கள்.
அவர்களுடைய தாரணை மிகவும் நன்றாக இருக்கிறது. வரிசைக்கிரமத்தில்
இருக்கிறார்கள் அல்லவா? மாணவர்கள் ஒன்று போல இருக்க மாட்டார்கள்.
ஏதாவது ஒரு நம்பரில் நிச்சயம் இருப்பார்கள். யாருக்கு
வேண்டுமனாலும் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். என்னை
நினையுங்கள் என பாபா கூறுகின்றார். நான் உங்களுடைய எல்லையற்ற
தந்தை, சிருஷ்டியை படைக்கக் கூடியவன். என்னை நினைப்பதால்
உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறது. நினைவினால் தான் துரு
நீங்குகிறது. பாரதவாசிகளாகிய நீங்கள் சத்யுகத் தில்
சதோபிரானமாக இருந்தீர்கள். இப்போது கலியுகத்தில் தமோபிரதானமாகி
விட்டீர்கள் என்பதை மட்டும் புரிய வையுங்கள். ஆத்மாவில்
துருபிடித்து விட்டது. தூய்மையாகாமல் யாரும் அங்கே போக முடியாது.
புது உலகத்தில் சதோபிரதானமாக இருக்கிறார்கள். உடை புதியதாக
இருந்தால் சதோபிரதானம் என்பார்கள். பிறகு பழையதாக தமோபிரதானம்
ஆகிவிடுகிறது. இப்போது அனைவரின் ஆடையும் கிழிகின்ற நிலையில்
இருக்கிறது. அனைத்தும் இற்றுப் போன நிலையை அடைந்திருக்கிறது.
உலகத்திற்கே அதிபதியாக இருந்தவர்கள் முற்றிலும் ஏழைகளாகி
இருக்கிறார்கள். அவர்கள் தான் செல்வந்தர்களாக ஆக வேண்டும்.
இந்த விஷயங்களை மனிதர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. பாரதம்
சொர்க்கமாக இருந்தது. இந்த லஷ்மி நாராணனின் இராஜ்யம் இருந்தது.
மற்ற தர்மத்தினர் பிறகு தான் வந்தார்கள். பாபா உங்களுக்கு
உண்மையான விஷயத்தைப் புரிய வைக்கின்றார். கீதைக்கு எவ்வளவு
மரியாதை இருக்கிறது பாருங்கள். படித்து படித்து முற்றிலும் கீழே
விழுந்து விட்டார்கள். ஓ, பதீத பாவனா வாருங்கள் என அப்போது
அழைக் கிறார்கள். நாம் கீழானவர்கள் ஆகிவிட்டோம், பகவான் மட்டுமே
சத்கதி கொடுக்க முடியும். மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி
மார்க்கத்தினுடையது வழி ஆகும். நாம் பாபாவின் ஞானத்தால்
தேவதையாகிறோம் என்பது உங்களுடைய புத்தியில் பதிந்திருக்கிறது.
இப்போது முழு உலகின் மீதும் வைராக்கியம் வர வேண்டும்.
சன்னியாசிகள் கூட பக்தி செய்கிறார்கள். கங்கையில் நீராடு
கிறார்கள் அல்லவா? பக்தி கூட சதோபிரதானம், பிறகு இரஜோ, தமோவை
அடைகிறது. இதுவும் இவ்வாறே ஆகும். அரைக் கல்பம் பகல், அரைக்
கல்பம் இரவு என பாடப்பட்டிருக்கிறது. பிரம்மா வுடன் நிச்சயம்
பிராமணர்களுடையதும் இருக்கும். இப்போது நீங்கள் பகலுக்குச்
செல்கிறீர்கள். பக்தி என்ற இரவு முடிவடைகிறது. பக்தியில்
துக்கம் நிறைந்திருக்கிறது. அதற்கு இரவு என்று பெயர். இருளில்
பகவானை சந்திப்பதற்காக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். பக்தி
மார்க்கத்தில் சத்கதியைக் கொடுக்கக் கூடியவர் எவரும் இல்லை.
உங்களைத் தவிர யாருமே யதார்த்தமாக பகவானைப் புரிந்துக்
கொள்ளவில்லை. ஆத்மாவும் புள்ளி பரமாத்மாவும் புள்ளி. இந்த
விஷயங் களை யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. பரமாத்மாவே சுயம்
வந்து பிரம்மாவின் உடல் மூலம் புரிய வைக்கிறார். அவர்கள் பிறகு
பாக்கியரதன், காளையின் வடிவத்தில் காண்பித்து விட்டனர். இப்போது
காளை மாட்டின் விஷயம் எதுவும் இல்லை. பாபா அனைத்து
விஷயங்களையும் நன்கு புரிய வைக்கின்றார். ஆனால் யாருடைய
புத்தியிலும் முழுமையாகப் பதியவில்லை. குழந்தை களே, நான்
ஆத்மாக்களாகிய உங்களின் தந்தையாக இருக்கிறேன் என பாபா புரிய
வைக்கிறார். நீங்கள் என்னையும் ஆஸ்தியையும் நினைத்தால்
உங்களுடைய விகர்மம் அழிந்து போகும். இருப்பினும் மறந்து
போய்விட்டோம் என்று கூறுகிறீர்கள். ஆஹா, இப்படிப்பட்ட மணவாளன்
அல்லது தந்தையை எப்படி மறக்க முடியும். மனைவி கணவனை அல்லது
குழந்தைகள் தந்தையை எப்போதாவது மறக்கிறார்களா? இங்கே நீங்கள்
மறந்து போகிறீர்கள். பாபா நீங்கள் எங்களை சொர்க்கத்திற்கு
அதிபதி ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இருப்பினும் மறந்து
போகிறேன் என்கிறீர்கள். நினைக்க வில்லை என்றால் உள்ளுக்குள்
இருக்கும் துரு எப்படி நீங்கும் என பாபா கூறுகிறார்.
முக்கியமான விஷயம் நினைவினுடையதாகும். நமக்கு மற்ற தர்மங்களுடன்
தொடர்பு இல்லை. பள்ளிக் கூடத்தில் வரலாறு புவியியலை புரிய
வைக்கிறார்கள். சிலர் முற்றிலும் புரிந்துக் கொள்வதில்லை. தந்தை
படிக்க வைக்கிறார். இது புத்தியில் பதிவதில்லை. சரி, அப்பா
மற்றும் ஆஸ்தியை நினையுங்கள். இதையும் மறந்து போகிறீர்கள்.
எதற்காக அரைக் கல்பமாக பக்தி செய்து வந்தீர்களோ அந்த தந்தையை
நினைப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்கிறது,
இப்போது இந்த உடலை விட்டு விட்டு இராஜ்யத்திற்கு போவாம்.
சூட்சும வதனத்தில் அவருடைய அதே தோற்றத்தைப் பார்க்கிறீர்கள்.
வைகுண்டத்தில் கூட பார்க்கிறீர்கள். இந்த மம்மா பாபா தான் லஷ்மி
நாராயணன் ஆகிறார்கள் என உங்களுக்குத் தெரிகிறது. நீங்கள்
சத்யுகத்தில் இருக்கும் போது ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை
எடுக்க வேண்டும். என புரிந்துக் கொள்கிறீர்கள். அங்கே
அவர்களுக்கு சத்யுகத்திற்கு பிறகு திரேதாயுகம் வரும், துவாபர்
வரும், நாம் இறங்கிக் கொண்டே செல்வோம் என்பது தெரியாது.
ஞானத்தின் விஷயங்கள் கிடையாது. மறுபிறவி எடுத்துக் கொண்டே
போகிறார்கள். அங்கே ஆத்ம உணர்வில் இருக்கிறார்கள். பிறகு ஆத்ம
உணர்வில் இருந்து தேக உணர்வுடையவர்கள் ஆகிறார்கள். இந்த ஞானம்
பிராமணர் களாகிய உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. வேறு
யாருக்கும் இல்லை. ஞான ஞானேஸ்வர், ஞானக்கடல் தந்தை அவரே
கூறுகின்றார். நிச்சயம் பிரம்மாவின் குழந்தைகள்,
பிராமணர்களுக்குத் தான் கூறுவார். பிரம்மாவின் குழந்தைகள் தான்
பிராமண சம்பிரதாயத்தினர் ஆவர். இரவு பகல் வித்தியாசம்
இருக்கிறது. நீங்கள் முயற்சி செய்து சம்பூரண குணவான் ஆகிறீர்கள்.
சம்பூரண நிர்விகாரி, குடும்ப விவகாரத்தில் இருந்தாலும் நீங்கள்
தந்தையை நினைவு செய்யுங்கள். கர்மம் செய்துதான் ஆக வேண்டும்.
புத்தியின் தொடர்பு பாபாவுடன் இணைந்திருக்கட்டும். எந்த செயலை
வேண்டுமானாலும் செய்யுங்கள். தச்சு வேலை வேண்டுமானாலும்
செய்யுங்கள் அல்லது இராஜ்யத்தை ஆளும் வேலை வேண்டுமானாலும்
செய்யுங்கள். ஜனக இராஜாவின் பெருமைகள் இருக்கிறது அல்லவா?
இராஜ்யம் செய்துக் கொண்டே இருங்கள், ஆனால் புத்தியின் தொடர்பை
பாபாவுடன் இணைத்தால் சொத்து கிடைக்கும் மன்மனாபவ, என்னை மட்டும்
நினையுங்கள் என பாபா கூறுகின்றார். சிவன் என்று கூறுவதால்
லிங்கம் மட்டும் தான் நினைவிற்கு வரும் என்று சிவபாபா
கூறுகின்றார். மற்ற அனைவருக்கும் சரீரத்தின் பெயர்
கூறப்படுகிறது. சரீரத்தின் மூலமாகத்தான் நடிப்பை நடிக்கிறார்கள்.
இப்போது உங்களை ஆத்ம உணர்வுடையவராக மாற்றப் படுகிறது. அது
அரைக்கல்பத்திற்கு இருக்கிறது. இச்சமயம் அனைவரும் தேக உணர்வில்
இருக்கிறார்கள். அங்கே ஆத்ம உணர்வில் இருப்பார்கள். ராஜா
ராணியைப் போன்று பிரஜைகள். அனைவருக்கும் நீண்ட ஆயுள் இருக்கும்.
இங்கே அனைவரின் ஆயுளும் குறைவாகும்.. பாபா எதிரில் வந்து
குழந்தைகளுக்கு எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார். ஓ
ஆத்மாக்களே என்கிறார், ஏனென்றால், ஆத்மா தான் ஞானத்தை
எடுக்கிறது. ஆத்மாவில் தான் தாரணை ஆகிறது. பாபாவிற்கு சரீரம்
இல்லை. ஆத்மாவில் முழு ஞானமும் இருக்கிறது. ஆத்மாவும்
நட்சத்திரம் போன்று இருக்கிறது. பாபாவும் நட்சத்திரம் போன்று
இருக்கிறார். அவர் மறுபிறவி எடுப்பதில்லை. ஆத்மாக்கள் மறுபிறவி
எடுக்கிறது. ஆகையால் தான் பாபா பரமாத்மாவின் மகிமை மற்றும்
குழந்தைகளின் மகிமையை எழுதிக் கொண்டு வாருங்கள் என வேலை
கொடுத்தார். இருவரின் மகிமைகள் தனித்தனியாகும். கிருஷ்ணரின்
மகிமை தனியாகும். அவர் சாகாரத்தில் (பௌதீக உடல்) இருக்கிறார்.
அவர் நிராகாரத்தில் இருக்கிறார். இவ்வளவு குணவானாக யார்
மாற்றியது. நிச்சயம் பரமாத்மா தான் மாற்றினார் என கூறுவார்கள்.
இச்சமயம் நீங்கள் ஈஸ்வரிய சம்பிரதாயத்தினர் உங்களுக்கு பபா
வந்து கற்பித்துக் கொண்டி ருக்கிறார். பிறகு பின்னால் பலனை
அனுபவிக்கிறார்கள். சத்யுகத்தில் யாரும் கற்றுக் கொடுக்க
மாட்டார்கள். பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் முடிந்து போகிறது.
இந்த உலகத்தின் மீது வைராக்கியம் வேண்டும். அதாவது தேகம் உட்பட
தேகத்தின் அனைத்து உறவுகளையும் விட்டு விட்டு தன்னை அசரீரியான
ஆத்மா என புரிந்துக் கொள்ள வேண்டும். தனியாக வந்தீர்கள் தனியாக
போக வேண்டும். இந்த பழைய உலகம் அழியப் போகிறது. நாம் அனைவரும்
புது உலகிற்குச் செல்வோம். அவ்வளவு தான் ! இதை நினைவில்
வைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதில் தான் தோல்வி
அடைகிறார்கள். நினைப்பதில்லை. யார் புரிந்துக் கொள்வதற் காக
வந்தாலும் அவர்களுக்கு சிவபாபா பிரம்மா மூலமாக என்னை
நினையுங்கள், நினைவினால் தான் உங்களுடைய துரு நீங்கும், நீங்கள்
விஷ்ணுபுரிக்கு அதிபதியாகி விடுவீர்கள் என கூறுகின்றார் என்பதை
புரிய வைக்க வேண்டும. விஷ்ணுபுரி தான் சொர்க்க புரியாகும்.
எவ்வளவு முடியுமோ தந்தையை நினையுங்கள். எந்த தந்தையை அரைக்
கல்பமாக நினைவு செய்தீர்களோ இப்போது அவர் நம்முன்
வந்திருக்கிறார். என்னை நினையுங்கள், என்னை யாரும் அறியவில்லை
என கூறுகிறார். அவரே வந்து அவருடைய அறிமுகத்தை வழங்குகிறார்.
நான் யார், எப்படி இருக்கிறேன் என்பதை ஒரு சிலரே அறிகிறார்கள்.
நிச்சயம் வைக்கிறார்கள். நிச்சயம் வைத்துவிட்டார்கள் என்றால்
முயற்சி செய்து சொத்து அடைவார்கள். என்னை நினைவு செய்தால் தான்
உங்களுடைய விகர்மங்கள் அழியும். மேலும் நீங்கள் தூய்மையாகி
தூய்யைமான உலகத்திற்கு அதிபதி ஆவீர்கள் என சிவபாபா கூறுகிறார்.
எந்த விகர்மமும் செய்யக் கூடாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. முயற்சி செய்து சம்பூரண குணவான் ஆக வேண்டும். கர்மம் (தொழில்)
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் பாபாவின் நினைவில்
இருந்து செய்ய வேண்டும். எந்த விகர்மமும் செய்யக் கூடாது.
2. இந்த பழைய ஆடை(உடல்) இற்றுப் போய் விட்டது. இதன் மீது
பற்றுதலை நீக்க வேண்டும். ஆத்மாவை சதோபிரதானமாக மாற்ற
முழுமையாக முயற்சிக்க வேண்டும்.
வரதானம்:
சதா அதீந்திரிய சுகம் அனுபவம் செய்யக் கூடிய
ஆடாத, அகண்ட சுவராஜ்ய அதிகாரி ஆகுக.
எந்தக் குழந்தைகள் சங்கமயுகத்தில் அதீந்திரிய சுகத்தின் ஆஸ்தியை
சதா காலத்திற்கும் பிராப்தி யாக அடைந்து விடுகிறார்களோ அதாவது
யாருக்கு தந்தையின் உயில் மீது முழு அதிகாரம் இருக்கிறதோ,
அவர்கள் மனோ பலம் (வில் பவர்) உடையவர்களாக இருப்பர்.
அவர்களுக்கு உறுதி யான, நிலையான அதீந்திரிய சுகத்தின் அனுபவம்
ஏற்படும். இப்படிப்பட்ட வாரிசு அதாவது சம்பூர்ண ஆஸ்திக்கு
அதிகாரிகள் தான் எதிர்காலத்தில் ஆடாத, அகண்ட சுவராஜ்யத்தை
அதிகார மாக அடைகின்றனர்.
சுலோகன்:
எங்கு என்னுடையது என்பது வருகிறதோ, அங்கு புத்தி திரும்பி
விடுகிறது.
அவ்யக்த இஷாரா - சதா ஆடாத, அசையாத, ஒரே சமநிலையின்
ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
நேரத்தின் அனுசாரம் இப்பொழுது சதா ஆடாத, அசையாத, அனைத்து
பொக்கிஷங்களிலும் நிறைந்தவராக ஆகுங்கள். சிறிது ஏற்றத்தாழ்வு
ஏற்பட்டாலும் அனைத்து பொக்கிஷங்களின் அனுபவம் ஏற்படாது.
தந்தையின் மூலம் கிடைத்திருக்கும் பொக்கிஷங்களை நிலையாக
வைத்துக் கொள்வதற்கான சாதனம் சதா ஆடாத, அசையாத நிலையில் இருக்க
வேண்டும். ஆடாத நிலையில் இருப்பதன் மூலம் சதா குஷியின் அனுபவம்
ஏற்பட்டு கொண்டே இருக்கும். அழியக் கூடிய செல்வம்,
பெயர்-புகழ்-பெருமை, பதவி கிடைப்பதனால் குஷி அடைகின்றனர் அல்லவா!
இது அழிவற்ற குஷியாகும். ஆனால் இந்த குஷி ஆடாத, அசையாத, ஏக்ரஸ்
ஸ்திதியில் இருப்பவர் களிடம் இருக்கும்.
மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியம்:
முன்னேறும் கலை மற்றும் இறங்கும் கலையின் முக்கிய வேர் என்ன?
இந்தளவு முயற்சி செய்து ஜீவன் முக்தியின் பதவியை அடைகிறார்கள்,
ஆனால் மீண்டும் அங்கு என்ன காரணத்தினால் (காரியம் செய்வதினால்)
நாம் கீழே இறங்குகிறோம்? என்று பல மனிதர்கள் இந்த கேள்வியை
கேட்கிறார்கள். இது வெற்றி மற்றும் தோல்வியின் விளையாட்டு என்று
நாம் சொல்லாம், ஆனாலும் இதில் முன்னேறும் கலை மற்றும் இறங்கும்
கலை ஏற்படுவதற்கான ஏதாவது காரணம் அவசியம் இருக்கும். இந்த ஒரு
காரணத்தின் ஆதாரத்தினால் தான் இந்த விளையாட்டு நடைபெறுகிறது,
முயற்சியின் மூலம் எப்படி நாம் முன்னேறுகிறோமோ, அது போன்று
இறங்குவதற்கும் கூட ஏதாவது காரணம் அவசியம் இருக்கும். இப்பொழுது
காரணம் ஒன்றும் மிகப்பெரிய தில்லை, சின்னஞ்சிறிய தவறு
செய்வதினால் என்று பரமாத்மா கூறுகிறார் - என்னை நினைவு
செய்தீர்கள் என்றால் நான் உங்களுக்கு முக்தி ஜீவன் முக்தி என்ற
பதவியைக் கொடுக்கிறேன், அதுபோல தேக அபிமானத்தின் காரணத்தினால்
பரமாத்மாவை மறப்பதால் கீழே இறங்கிவிடுகிறோம். பிறகு தவறான
பாதையில் சென்று 5 விகாரங்களில் சிக்கிக் கொள்வதினால்
துக்கத்தில் வந்துவிடுகிறோம், இது நம்முடைய தவறு தானே தவிர,
படைப்பவரின் தோˆம் (தவறு) கிடையாது. உலகத்தினர் துக்கம் சுகத்தை
கொடுப்பது பரமாத்மா தான் என்று கூறுகிறார்கள், இவ்வாறு சொல்வது
முற்றிலும் தவறானது. பாபா சுகத்தை உருவாக்குகிறாரே தவிர
துக்கத்தை அல்ல. மற்றப்படி உயர்ந்த செயலினால் நாம் சுகத்தை
பெறுகிறோம், மேலும் கீழான (தவறான) செயலினால் துக்கத்தை
அடைகிறோம், மற்றப்படி நல்ல செயலுக்கான பலன் மற்றும் தவறான
செயலுக்கான தண்டனை அவசியம் பரமாத்மா மூலம் கிடைக்கிறது. ஆனால்
சுகம்-துக்கம் இரண்டுமே பரமாத்மா தான் தருகிறார் என்று சொல்ல
முடியாது. பரமாத்மா முன்னேறும் கலையில் நம்மோடு இருக்கிறார்,
மற்றப்படி இறங்கும் கலையில் மாயா இருக்கிறது. பொதுவாக
சுகத்திற்காக தான் மற்றவர்களின் துணையை மற்றும் உதவியை
பெறுகிறார்கள். மற்றப்படி துக்கத்தை பெறும்பொழுது எந்தவொரு
நண்பனும் உடன் இருப்பதில்லை. மற்றப்படி எவ்வாறு செயல்
செய்கிறோமோ, அதற்கேற்ற பலன் முடிவாகிறது. எனவே இந்த
நாடகத்திற்குள் துக்கம் மற்றும் சுகத்தின் விளையாட்டு தனது
செயலில் இருக்கிறது, ஆனால் கீழான புத்தியுடைய மனிதர்கள் இந்த
இரகசியத்தை தெரிந்துக்கொள்வதில்லை. நல்லது. ஒம்சாந்தி.