01-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! முழு
உலகத்திற்கும் அமைதியை அளித்தல் ஒரு பாபாவின் கடமையாகும்.
ஆகையால் தான் ஓ, சாந்தி தேவா ! என கூறுகிறார்கள். எனவே, பரிசும்
ஒரு பாபாவிற்குத் தான் கிடைக்க வேண்டும்.
கேள்வி:
எப்படிப்பட்ட குழந்தைகள் பாபாவை
முழுமையாகப் பின்பற்றுவார்கள்?
பதில்:
யார் பாபாவிற்குச் சமமாக
தூய்மையாகிறார்களோ அவர்களே முழுமையாகப் பின்பற்ற முடியும். 2.
யார் பக்குவமான மணப்பெண்கள் ஆகிறார்களோ அவர்களே மணவாளனாகிய
என்னைப் பின்பற்ற முடியும். இப்படிப்பட்ட மணப்பெண்களைத் தான்
நான் உடன் அழைத்து செல்கிறேன். ஆகவே, சாஸ்திரங்களில் பசுவின்
வாலைப் பிடித்துக் கொண்டு கடந்து சென்று விடலாம் என காண்பித்து
இருக்கிறார்கள். இங்கே இப்போது பசுவோ அல்லது வாலின் விஷயமோ
கிடையாது.
பாடல்:
நீங்கள் அன்புக் கடல்.....
ஓம் சாந்தி.
பாப்தாதா இருவரும் இருக்கிறார்கள் அல்லவா? இப்போது ஆத்மாக்களின்
தந்தை சிவபாபா என குழந்தைகள் அறிந்துள்ளார்கள். நான் பதீத
பாவனன், நான் நிராகாரன் என்பது கூட உங்களுக்குத் தெரியும்.
நீங்களும் நிராகாரமானவர், சாந்தி சொரூபமானவர். நிராகார
தந்தையும் சாந்த சொரூபமாக இருக்கிறார். ஆத்மாவும் சாந்த
சொரூபமாக இருக்கிறது. ஆத்மாவின் சுய தர்மமே அமைதியாகும்.
உங்களுடைய இருப்பிடம் சாந்திதாமம் ஆகும். யாகம் போன்றவைகளைப்
படைக்கும் போது சாந்தி தேவா (அமைதியை அளிப்பவரே!) என்று கூறு
கிறார்கள். ஏனென்றால் அமைதியின் கடல் அந்த பரமாத்மா ஆவார். முழு
உலகிற்கும் அமைதியை அளிப்பவர் அந்த தந்தையே ஆவார். இப்படி
பலருக்கு அமைதிக்கான பரிசு கிடைக்கிறது. யாருக்காவது எப்போதாவது
பரிசு கிடைத்தால் இவர்கள் அமைதி நிலவ கருவியாக இருந்தார்கள்
என்று கூறுவார்கள். இதில் மிகப் பெரிய பெரியவர்களின் பெயரை
எடுக்கிறார்கள். இப்போது முழு உலகிலும் அமைதி வேண்டும். இல்லை
என்றால் அசாந்தியில் இருப்பவர்கள் மற்றவர்களையும் அசாந்தி
அடையச் செய்வார்கள். இது இராவணனின் இராஜ்யம் ஆகும். இராவணன்
எதிரி அல்லவா ! இராமரை எதிரி என கூற மாட்டார்கள். இராமரின்
கொடும்பாவியை செய்து ஒரு போதும் எரிப்பது கிடையாது.
திரேதாயுகத்தின் இராம ருடையதையும் எரிக்கவில்லை. பரம்பிதா
பரமாத்மாவினுடையதையும் எரிக்கவில்லை. அனை வரும் இராம இராஜ்யம்
வேண்டும் எனறு விரும்புகின்றனர். ஆனால் இராம இராஜ்யம் என எதற்கு
கூறப்படுகிறது என்பதை யாரும் அறியவில்லை. புது உலகம் ஆக
வேண்டும். புது டில்லியில் இராம இராஜ்யம் வேண்டும் எனறு மட்டும்
கூறுகிறார்கள். புது டில்லி என்கிறார்கள். இப்படி பல பெயர்களை
வைக்கிறார்கள். டில்லி அனைத்திற்கும் தலை நகரமாக இருக்கிறது.
டில்லி தான் சொர்க்கமாக இருந்தது. இராதா கிருஷ்ணரைக் கூட அங்கே
தான் காண்பிக் கிறார்கள். இவர்கள் இருவரும் தான் முக்கியமான
இளவரசன் இளவரசி ஆவார். இரண்டு பேரும் மட்டும் அல்ல. நிச்சயம்
மற்றவர்களும் இருந்திருப் பார்கள். 8 தலைமுறை என்று
பாடப்பட்டிருக்கிறது. புத்தியினால் புரிந்துக் கொள்ள வேண்டும்.
சத்யுகத்தில் நிச்சயம் இராஜ்யம் வேறு இருக்கும். இங்கே கூட
பாருங்கள் எவ்வளவு இராஜ்யம் இருக்கிறது. வளர்ந்து கொண்டே நிறைய
பெருகி விடுகிறது. இதோ இவர் இந்த ஊரின் மகாராஜா, சிறிய சிறிய
கிராமங்கள் என்று நிறைய இருக்கிறது அல்லவா? சத்யுகத்தில் இத்தனை
இருக்காது. அங்கே லஷ்மி நாராயணனின் பெயர் தான் புகழ் வாய்ந்தது.
2500 வருடங்கள் அவர்களின் இராஜ்யம் நடந்தது. மனிதர்கள்
லட்சக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன என கூறுகிறார்கள்.
சிந்திக்க வேண்டிய விசயமாகும். இது ஆத்மாவிற்கான உணவாகும். பாபா
இந்த ஆன்மீக உணவை உங்களுடைய புத்திக்கு, ஆத்மாவிற்கு
அளிக்கிறார். உங்களுடைய புத்தியின் பூட்டு இப்போது
திறந்திருக்கிறது. ரிஷி முனி போன்ற அனைவரும் படைப்பவர் மற்றும்
படைப்பினை அறியவில்லை என்று கூறினர். இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் இவ்வாறு கூற மாட்டீர்கள். நீங்கள் படைப்பவர் மற்றும்
படைப்பின் முதல், இடை, இறுதியினை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள்
உங்களுடைய 84ன் சக்கரத்தைப் புரிந்துக் கொண்டீர்கள்.
ஆரம்பத்தில் நீங்கள் தேவி தேவதையாக இருந்தீர்கள். பிறகு இடையில்
இராவணன் நுழைந்த மையால் விகாரி ஆகி விட்டீர்கள். இப்போது
முடிவாகி விடும், இப்போது பழைய உலகம் அழிந்து மீண்டும் ஆரம்பம்
ஆகும் என நீங்கள் அறிகிறீர்கள். ஆரம்பத்தில் இராம இராஜ்யம்
வேண்டும். இடையில் இராவணனின் இராஜ்யம் ஆரம்பம் ஆகிறது. இப்போது
இராவண இராஜ்யம் முடிவடைந்து மீண்டும் இராம இராஜ்யம் ஆரம்பம்
ஆகும். நரனிலிருந்து நாராயணன் ஆகிறீர்கள் அல்லவா? இதுவே சத்திய
நாராயணனின் கதை யாகும். அனைத்து சாஸ்திரங்களின் தாய் சிரோன்மணி
ஸ்ரீமத் கீதை என நீங்கள் அறிகிறீர்கள். சிரேஷ்ட மாவதற்காக
ஸ்ரீமத் கிடைக்கிறது. சிரேஷ்டமாவதற்காக ஸ்ரீமத் கிடைக்கிறது.
சிரேஷ்ட மானவர்களை ஸ்ரீ என்று கூறுகிறார்கள். ஒரேயொரு கீதையின்
சாஸ்திரமே தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் என கூறப்படுகிறது
என குழந்தைகள் அறிகிறீர்கள். இதன் மூலமாக தேவதா தர்மம்
சங்கமத்தில் ஸ்தாபனை ஆகிறது. சத்யுகத்தில் தூய்மையாக்கு வதற்கு
யாரும் அழுக்காக இருப்பதில்லை. இப்போது கீதையை பதீத பாவனி என்று
கூற முடியாது என உங்களுக்கு பாபா புரிய வைக்கிறார். கீதையின்
மூலமாக தூய்மையாக முடியாது. கீதையின் பகவானைத் தான் பதீத பாவனன்
என்கிறார்கள். இதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீதை
என்பது ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஆகும்.
கீதையின் நேரத்தில் மிகப் பெரிய மகா பாரத போர் நடந்தது. அதன்
மூலமாக பல தர்மங்கள் அழிந்து ஒரு தர்மம் ஸ்தாபனை ஆகியது. தேவி
தேவதா தர்மத்தின் சாஸ்திரம் என கீதையைக் கூறுகிறார்கள்.
பிராமணர்களின் சாஸ்திரம் என்று கூறுவதில்லை. பிராமணர்களின்
பெயர் கீதையில் இல்லை. பரம்பிதா பரமாத்மா தான் வந்து பிரம்மா
மூலமாக இந்த அனைத்து வேத சாஸ்திரங் களின் சாரத்தை
தெரிவிக்கின்றார். இப்போது சத்யுகத்தில் பிராமணர்கள்
இருப்பதில்லை என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். அங்கே லஷ்மி
நாராயணன், தேவதைகள் இருக்கிறார்கள். பிரம்மாவிற்குப் பிறகு
விஷ்ணு ஆவார். பிரம்மா மூலமாக விஷ்ணுபுரி உருவாகியதாக
சித்திரங்களில் கூட காண்பிக்கப்பட்டுள்ளது. பிரம்மா விஷ்ணு
ஒன்றாக இணைந்திருக்க மாட்டார்கள். பிரம்மா மூலமாக தேவி தேவதா
தர்மத்தின் ஸ்தாபனை யாகும். இது தெளிவாகப் புரிந்துக் கொள்ள
வேண்டிய விசயம் ஆகும். குழந்தை களாகிய நீங்கள்
சிவபாபாவிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைகிறீர்கள்.
உரிமையாளர்கள் ஆகி விட்டீர்கள் அல்லவா? முக்கிய தர்ம
சாஸ்திரங்கள் 4 ஆகும். ஸ்ரீமத் பகவத் கீதை நம்பர் ஒன் சாஸ்திரம்
ஆகும். இதன் மூலம் நம்பர் ஒன் தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. பிறகு
இஸ்லாம், பௌத்த தர்மம் வருகிறது. ஒரு கீதையில் தான் ஸ்ரீமத்
பகவத் கீதை என்று எழுதப் பட்டிருக்கிறது. மற்ற சாஸ்திரங்களில்
ஸ்ரீமத் என்று எழுதப்படவில்லை. ஸ்ரீமத் இஸ்லாம் அல்லது ஸ்ரீமத்
பௌத்த சாஸ்திரம் என்று பாடப்படவில்லை. ஸ்ரீமத் பகவத் கீதை ஒன்று
தான் அதிலிருந்து எந்த தர்மம் ஸ்தாபனை ஆகியது. ஆதி சனாதன தேவி
தேவதா தர்மம் தான் ஸ்தாபனை ஆகியது. முடிவில் மற்றவை ஸ்தாபனை
ஆகிறது. இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். இப்போது பாபா
டீச்சர் ரூபத்தில் நம்மை படிக்க வைக்கிறார். இது புத்தியில்
இருக்க வேண்டும், பாபா நமக்குத் தந்தையாகவும், ஆசிரியராகவும்
இருக்கிறார். பாபா படிப்பினால் அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார்
என்றால், சத்குருவாகவும் இருக்கிறார். பாபாவை அனைவரும்
நினைக்கிறார்கள். இப்போது கீதையில் கிருஷ்ணரின் பெயர் போடப்
பட்டு விட்டது. அவர் ஞானக் கடல் கிடையாது. அவரே ஞானக்கடல் தந்தை
இவ்வாறு (கிருஷ்ணராக) மாற்றி இருக் கிறார் என்றால், அவர்
ஆசிரியராகவும் இருக்கிறார். இங்கே நீங்கள் புது விஷயங்களைக்
கேட்கிறீர்கள். சாஸ்திரம் போன்றவைகளை நிறைய படித்து, கேட்டு
வந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் அப்பா மூலமாக நேரடியாக
கேட்கிறீர்கள். முன்பு அனைத்தை யும் சரீரத்தை உடைய மனிதர்கள்
மூலமாகக் கேட்டீர்கள். ஆத்மாக் களாகிய நாம் உண்மை யில்
அசிரீரியாக இருந்தோம் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள்.
பிறகு சரீரத்தை எடுக் கிறீர்கள். பாபாவும் அசரீரியாக
இருக்கிறார். சிவலிங்கம் போன்றவைகளை உருவாக்கு கிறார்கள். ஆத்மா
சரீரத்தின் மூலமாக அவரை பூஜிக்கிறது. பரம்பிதா பரமாத்மாவே வந்து
அழுக்கான எங்களை தூய்மையாக்குங்கள் என அழைக்கிறார் கள்.
லிங்கத்தை பூஜை செய் கிறார்கள். ஆனால் பதீத பாவனர் பாபா அவரைத்
தான் நாம் அழைக்கின்றோம் என்று புரிந்துக் கொள்ளவில்லை. சிவன்
பகவான், ஈஸ்வர் ஆவார். அவ்வளவு தான், இப்படித்தான் நினைக்
கிறார்கள். அவரை அப்பா என்று அழைக்கிறோம் என்றால், புத்தியில்
தந்தையிடமிருந்து சொத்து கிடைக்க வேண்டும் என்பது நினைவில் வர
வேண்டும். நமக்கு சொத்து கிடைக்கிறது. அப்போது தான் நாம்
பூஜிக்கின்றோம். பாரதவாசிகளுக்கு நிச்சயமாக சொத்து கிடைத்திருக்
கிறது. எப்போது கிடைத்தது என்பதை மறந்து விட்டார்கள். இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள், நாம்
பாபாவிடம் வந்து விட்டோம் என குழந்தைகள் கூறுகின்றார்கள்.
சிவபாபா பிரம்மா உடலில் வந்து புரிய வைக்கின்றார். திரி
மூர்த்தியின் பெயர் பிரசித்தமாக இருக்கிறது. திரிமூர்த்தி
மார்க்கம் என்று கூட பெயர் வைக்கப்படுகிறது. பாபா விற்கு நிறைய
மகிமைகள் உள்ளது. அன்புக் கடல்..... என பாட்டில் கூட
கேட்டீர்கள். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஆவார்.
அனைவருக்கும் சுகம் சாந்தி அளிப்பவர் ஆவார். அனைவரின்
துக்கத்தையும் நீக்கி சுகத்தை அளிப்பவர் ஆவார். மிகவும்
அன்பானவர் அல்லவா? அவரை விட அன்பான விஷயம் வேறு எதுவும் இல்லை.
எந்த தந்தை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்று கின்றாரோ அவர்
நிச்சயமாக அன்பாக இருப்பார் அல்லவா? அவர் எல்லையற்ற தந்தையாவார்.
குழந்தைகளே ! என்னிடம் இருந்து சொர்க்கத்தின் இராஜ்ய பதவி
கிடைக்கிறது அல்லவா? என கூறுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள்
சகோதரர்கள் ஆவீர்கள். இப்போது பாபா மூலமாகக் கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள். அனைத்து ஆத்மாக்களும் பாபா வந்து எங்களை
தூய்மை யாக்குங்கள் என பாபாவை நினைக்கிறார்கள்.
தூய்மையாக்குவதற்காக பாபா வந்து விட்டார் என ஆத்மா இப்போது
கூறுகிறது. குழந்தைகளே 5000 வருடத்திற்கு முன்பு உங்களை
தூய்மையாக மாற்றுவதற்கு வந்தேன் என்று கூறுகின்றார். இப்போது
தந்தையாகிய என்னை நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழியும்.
மேலும் உங்களுடைய அனைத்து துக்கங் களும் விலகிப் போகும். பதீத
பாவனா வாருங்கள்! என அழைக்கிறார்கள். மேலும் கைகளைத் தட்டிக்
கொண்டே இருக்கிறார்கள். பதீத பாவன சீதாராம்..... என்றும் பஜனை
பாடிக் கொண்டிருக் கிறார்கள் என்றால், தாங்களே அழுக்காக
இருக்கிறார்கள் அல்லவா? இதுவே நரகம் ஆகும். இதற்கு மிகக் கொடிய
நரகம் என கூறப்படுகிறது. கருட புராணத்தில் சுவையான விசயங்கள்
நிறைய எழுதி விட்டார்கள். இதை செய்தால் இப்படி ஆவீர்கள், இது
நடக்கும்...... பிறகு பசுவின் வாலை பிடித்தால்
சொர்க்கத்திற்குச் சென்று விடுவோம் என்று கூறுகிறார்கள். இவ்வா
றெல்லாம் சிறிது எழுதப்பட்டிருக்கிறது. இப்போது விலங்கின்
விசயம் எதுவும் கிடையாது. நீங்கள் கோமாதா அல்லவா? உங்களுடைய
வால் மற்றும் உங்கள் முதுகை எதுவரை யாரும் பிடிக்கவில்லையோ
அதுவரை வழி கிடைக்காது. வால் இல்லை. உங்களுடைய வாலை பிடித்துக்
கொண்டு சென்று விடலாம் என்று கூறிவிடுகிறார்கள். இப்போது
இங்கேயோ வாலை பிடித்துக் கொள்வது கிடையாது. ஆனால் பின்பற்ற
வேண்டும். சன்னியாசிகளைப் பின்பற்று கிறவர்கள் பலர்
இருக்கிறார்கள். ஆனால் பின்பற்றுதல் என்றால் தூய்யைமாகுதல்
ஆகும். நீங்கள் தான் உண்மையிலும் உண்மையாகப் பின்பற்றுபவர்கள்.
நான் வந்திருக்கிறேன் உங்கள் அனைவரையும் திரும்ப அழைத்துச்
செல்வதற்காக என்று சிவபாபா கூறுகின்றார். நீங்கள் என்னை நினைவு
செய்தால் உங்களுடைய பாவங்கள் எரிந்து போகும். தூய்மை யாகாமல்
பின்பற்ற முடியாது. சிவபாபாவை முழுமையாகப் பின்பற்றுங்கள்.
நீங்கள் இங்கே பின்பற்று வதற்காக அமர்ந்திருக்கிறீர்கள். பக்தி
மார்க்கத்தில் கூட என்னை நினைத்துக் கொண்டே வந்தீர்கள்.
ஆத்மாக்கள் மணப்பெண்கள், பரமாத்மா மணவாளன் என நீங்கள்
அறிகிறீர்கள். ஆத்மாக்கள் அவரை நினைக்கின்றது. அவர் அழைத்துச்
செல்வதற்காக வந்திருக்கிறார். என்னைப் பின்பற்றினால் உங்களை
உடன் அழைத்துச் செல்வேன் என கூறுகிறார். எப்படி பின்பற்றுவது,
அதையும் புரிய வைக்கின்றார். நான் பரிசுத்தமானவன், நீங்கள்
அழுக்காக இருக்கிறீர்கள். எனவே நிச்சயம் தூய்மையாக வேண்டும்
என்றால் நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும். விகாரிகள் பின்பற்ற
முடியாது. பின்பற்றுவதற்காக எனக்கு சமமாக தூய்மையாக மாறுங்கள்.
நான் அழுக்கானவர்களை என்னுடன் சாந்தி தாமத்திற்கு அழைத்துச்
செல்வேனா? இத்தனை மனிதர்கள் அனைவரும் பக்தி, தவம், தான
புண்ணியம் போன்றவைகளை முக்தி அடைவதற்காகச் செய்கிறார்கள்.
ஏனென்றால் இங்கே துக்கம் இருக்கிறது. மேலும் நாம் நம்முடைய
வீட்டிற்குத் திரும்ப போக வேண்டும் என விரும்புகிறார்கள்.
நிச்சயம் தூய்மையாக வேண்டும் என பாபா கூறுகின்றார். நான்
தூய்மையானவன். அதனால் தான் உங்களை தூய்மை யாக மாற்றுகிறேன்.
வருவதும் கூட பிரம்மாவின் உடலில்,, நான் படைப்பவன், நான் இந்த
பிரம்மாவின் உடலில் வருகிறேன். பிரம்மா மூலமாக பாபா தேவி தேவதா
தர்மத்தை உருவாக்குகின்றார் என்று கூட காட்டுகிறார்கள். நீங்கள்
பி.கே. இப்போது சிவபாபாவைப் பின்பற்ற வேண்டும் என அறிகிறீர்கள்.
என்னை நினைத்தால் நான் பரிசுத்தமான உலகத்திற்கு அழைத்துச்
செல்வேன் என உறுதி அளிக்கிறேன் என பாபா கூறுகின்றார். வேறு
எந்த வழியும் இல்லை. பதீத பாவனா..... என்கிறார்கள். அல்லது
பார்வை மேலே செல்கிறது. அல்லது தண்ணீரின் பக்கம்
பார்க்கிறார்கள். கங்கை பதீத பாவனி கிடையாது. இது கடலிலிருந்து
வந்த நதிகளாகும். இப்போது உங்களுடைய வாலைப் (நீங்கள்) பிடிக்க
வேண்டும். நீங்கள் பரிசுத்தமாக வேண்டும். என்னைப்
பின்பற்றுங்கள், அப்போது தான் உடன் செல்ல முடியும் என பாபா
கூறுகின்றார். நீங்கள் என்னுடன் வசித்தவர்கள், இப்போது 84 பிறவி
களில் சுழன்று அழுக்காகி விட்டீர்கள் என பாபா கூறுகின்றார்.
இப்போது மீண்டும் என்னை நினைத்தால் தூய்மை யாவீர்கள். சன்னியாசி
கூட குடும்பத்தில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டும் என்றால் வீடு
வாசலை விட்டு விடுங்கள் என்று கூறுகிறார். நான் பரந்தாமத்தில்
இருக்கிறேன் நீங்களும் வருகிறீர்களா அல்லது இங்கேயே விஷக்கடலில்
இருப்பது நன்றாக இருக்கிறதா என பாபா கேட்கின்றார். ஓ, பதீத
பாவனா வாருங்கள் என நீங்கள் அழைத்துக் கொண்டே வந்தீர்கள்.
இப்போது பாபா உடன் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார்.
கல்ப கல்பமாக வந்து உங்களை உடன் அழைத்து செல்கிறேன். பிறகு
சத்யுகத்தில் நீங்கள் மிகவும் சுகமாக இருக் கிறீர்கள். இந்த
லஷ்மி நாராயணன் சொர்க்கத்திற்கே அதிபதி அல்லவா? இவர்களுக்கு
இவ்வளவு சுகத்தை அளிப்பவர் யார்? சொர்க்கத்தின் இறை தந்தை.
நீங்கள் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறீர்கள் என பாபா
நினைவு படுத்துகிறார். பரம்பிதா பரமாத்மாவின் பிறந்த நாளை
அனைத்து பாரத வாசிகளும் கொண்டாடுகிறார்கள். இது என்னுடைய
பிறப்பிடம் ஆகும். கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அவர்களோ கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்கள். பாரதவாசிகள்
சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இது அனை வரையும் தூய்மைபடுத்தக்
கூடிய பாபாவின் பிறப்பிடம் ஆகும். பாபா அனைவருக்கும் சுகம்
அளிப்பவர் ஆவார். அனைவரையும் விடுவிப்பவர் ஆவார். எனவே, பாரதம்
எவ்வளவு உயர்வாக இருக்கிறது.
நாடகத்தின் படி என்னுடைய குழந்தைகள் மிகவும் துக்கத்தில்
இருக்கும் போது ஆஸ்தியை அளிப்பதற்காக நான் வருகிறேன் என
பாபாவிற்குத் தெரியும். பாபா ஞானக் கடல், சுகக் கடல்.....
குழந்தைகளுக்கு ஆஸ்தியை அளித்துக் கொண்டிருக்கிறார். என்னைப்
பின்பற்றுங்கள் என கூறுகிறார். ஆத்மாக்களாகிய நாம் விகாரி. ஆகவே
இந்த உடலும் விகாரியாக இருக்கிறது என அறிகிறீர்கள்.
சத்யுகத்தில் ஆத்மா தூய்மையாக இருக்கிறது என்றால், சரீரம் கூட
தூய்மையாக கிடைக்கிறது. இப்போது குழந்தைகளே! தூய்மையாகுங்கள்
என பாபா கூறுகின்றார். நினைவினால் தான் தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானம் ஆகலாம். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி அடைய நான் ஆத்மா
சகோதரன் சகோதரன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மிகவும் அன்போடு இருக்க வேண்டும். பாபா எப்படி அன்பிலும்
அன்பானவராக இருக்கிறாரோ அப்படியே அன்பானவராக மாற வேண்டும்.
2. பாபாவிற்குச் சமமாக தூய்மையாகி, பாபாவை முழுமையாகப்
பின்பற்ற வேண்டும். பாபாவுடன் திரும்ப மீண்டும் சாந்தி
தாமத்திற்குச் செல்ல நிச்சயம் தூய்மையாக வேண்டும்.
வரதானம்:
பலமற்ற ஆத்மாக்களுக்குள் சக்திகளை வேகமாக
நிரப்பக் கூடிய ஞான வள்ளல் மற்றும் வரம் தரும் வள்ளல் ஆகுக.
தற்சமயம் பலமற்ற ஆத்மாக்களுக்குள் தாவிச் செல்லும் அளவுக்கு
சக்தி இல்லை. அவர் களுக்கு அதிகப்படியான உந்துசக்தி தேவை. எனவே
வி ஆத்மாக்களாகிய நீங்கள் தனக்குள் விசேˆ சக்தியை நிரப்பி,
அவர்களைத் தாவிச் செல்ல வைக்க வேண்டும். இதற்காக ஞான-வள்ளலோடு
கூடவே வரங்களை வழங்கும் வள்ளலாகுங்கள். படைப்பவரின் பிரபாவம்
படைப்பின் மீது படுகிறது. எனவே வரதானி ஆகி, தமது படைப்புக்கு
சர்வசக்திகளின் வரதானம் கொடுங்கள். இப்போது இந்த சேவை தான்
அவசியமாக உள்ளது.
சுலோகன்:
சாட்சியாகி ஒவ்வொரு விளையாட்டையும் பார்ப்பீர்களானால்
பாதுகாப்பாகவும் இருப்பீர்கள், மகிழ்ச்சியும் வரும்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
மகான் தபஸ்வி ஆத்மாக்களாகிய நீங்கள் ஜூவாலா ரூப சக்திசாலி
நினைவின் மூலம் பிராப்தி யின் கிரணங்களை மற்றவர்களுக்குக்
கொடுப்பதற்கான சொரூபம் ஆவீர்கள். எப்படி சூரியன் உலகத்துக்கு
ஒளி கொடுப்பதற்கான மற்றும் அநேக விநாசி பிராப்திகளின் அனுபவம்
செய்விக்கிறதோ, அதே போல் நீங்களும் கூட தங்களின் தபஸ்வி
சொரூபத்தின் மூலம் சாந்தி மற்றும் சக்தியின் கிரணங்களைக்
கொடுத்துக் கொண்டே இருங்கள்.