01-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தர்மம் செய்வது வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஞானம் சொல்லுங்கள், தன்னை (இனத்தைச் - தர்மத்தை) சேர்ந்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

கேள்வி:
எந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றி நடக்கும் குழந்தைகள் தங்களின் (மன நிலையை) ஒரே சமநிலை (ஏக்ரஸ்) உள்ளதாக ஆக்க முடியும்?

பதில்:
மன நிலையை ஏக்ரஸ் ஆக்குவதற்காக பாபாவின் ஸ்ரீமத் - குழந்தைகளே, தினந்தோறும் அதிகாலை எழுந்து மிகுந்த அன்போடு தந்தையை நினைவு செய்யுங்கள். தன்னை ஆத்மா என உணருங்கள் என்பதாகும். மேலும் தந்தை என்ன சொல்கிறாரோ, அதைக் கேளுங்கள். நினைவு செய்யவில்லை என்றால் வீண் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும். வீணான சங்கல்பங்கள் வரும், ஆகையால் பாபா அறிவுரை தருகிறார்-குழந்தைகளே, நாள்தோறும் அதிகாலையில் எழுந்து தனக்குத்தானே இவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்- நடமாடும் போதும் உண்ணும் போதும்...... உணவு சமைக்கும் போதும் ஒரு பாபாவை மட்டுமே நினைவு செய்வேன்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் அறிவார்கள், ஆன்மிகத் தந்தை, அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். அவர் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். அவருக்குத் தான் சிவாய நமஹ எனச் சொல்கின்றனர். தந்தை என்றும் சொல்கின்றனர், அந்தத் தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர். அவர் தான் பதீத-பாவனர், ஞானக் கடல் எனச் சொல்லப்படுகின்றார். இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் அவரோடு கூடவே அமர்ந்திருக்கிறோம். இதைக் குழந்தைகள் நீங்கள் புரிய வைக்க வேண்டும். எப்படி எங்கோ ஒரு கீதா பாடசாலையில் கிருஷ்ணரின் ஒரு பெரிய சித்திரம் ஆறடி உயரத்தில் இருந்தது. இப்போது கிருஷ்ணரை உண்மையில் சிறியதாகத் தான் காட்டுகின்றனர். பிறகு அவர் கீதையின் பகவானாக இருந்தார் எனச் சொல்கின்றனர். அப்படியானால் அவர் கீதையை எப்போது சொன்னார்? குழந்தைப் பருவத்திலா, அல்லது ஆறடி உயரம் இருக்கும் போதா? இராதை மற்றும் கிருஷ்ணரின் ஜோடி இருந்தது. இராதை, கிருஷ்ணருக்கு என்ன உறவு? இராதையை பகவதி என்றும் கிருஷ்ணரை பகவான் என்றும் சொல்கின்றனர். இவர்கள் இருவருக்கும் என்ன சம்மந்தம்? இது யாருக்கும் தெரியாது. கிருஷ்ணர் கீதை உபதேசம் செய்தார். ஆனால் எப்போது? நீங்கள் இது போல் கேள்விகள் கேட்கும் போது மனிதர்கள் புரிந்து கொள்வார்கள், இதை பிரம்மா குமார்-குமாரிகளைத் தவிர வேறு யாரும் கேட்க முடியாது. பெரிய-பெரிய ராஜாக்கள் யாராக இருந்தாலும் சந்நியாசிகளைப் பார்த்தால் அவர்கள் காலில் விழுவார்கள். யாருக்குமே கேட்பதற் கான தைரியம் கிடையாது. நீங்களோ தைரியம் வைக் கிறீர்கள். இவ்வாறு சொல்வார்கள், பிரம்மா குமாரிகளிடம் இவ்வளவு ஞானம் உள்ளது, அவர்கள் படைப்பவர் மற்றும் படைப்பு பற்றிய ஞானம் தருகின்றனர். அவருடைய வாழ்க்கை வரலாற்றைச் சொல்கின்றனர். நீங்கள் கேட்க முடியும் - சிவஜெயந்தி கொண்டாடுகிறீர்கள், பூஜை செய்கிறீர்கள் என்றால் நிச்சயமாக அவர் எப்போதோ வந்திருப்பார். அதனால் தான் சிவஜெயந்தி கொண்டாடப் படுகின்றது. அவர் எப்போது வந்தார்? சிவபாபா நிராகாராக உள்ளார். அவருக்குத் தம்முடைய சரீரம் என்பது கிடையாது. சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள் என்றால் நிச்சயமாக சரீரத்தில் வந்திருப்பார் இல்லையா? நிராகாருக்கு ஜெயந்தி எப்படி இருக்க முடியும்? ஆத்மா அமர் (அழியாதது). இறந்த பின் பிறவி எடுக்கும் போது ஜெயந்தி கொண்டாடப் படுகின்றது. ஆத்மாவிற்கு ஜெயந்தி கிடையாது. ஆத்மா அழிவற்றது. ஆத்மாவின் ஜெயந்தி எனச் சொல்ல மாட்டார்கள். சிவனோ நிராகார். அவருடைய உருவம் லிங்கமாக வைக்கப் படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தச் சிந்தனை இருக்க வேண்டும். இங்கிருந்து தங்களின் வீடு, தொழில்களில் போய்விடும் போது இந்த விஷயங்கள் புத்தியிலிருந்து வெளி யேறி விடுகின்றன. இதைப் பற்றிய சிந்தனை ஏற்படுவதில்லை. குருக்கள் முதலானவர்களின் சங்கிலி விலங்கில் அநேகர் சிக்கிக் கொண்டுள்ளனர். இதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அபலைகள் மிகவும் கள்ளங்கபடம் இல்லாதவர்களாக உள்ளனர் இல்லையா? நீங்கள் அவர்களிடம் கேட்க முடியும் - சிவஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் அவர் யார்? அவர் வந்து என்ன செய்தார், எப்போது வந்தார்? ஜெயந்தி என்றாலே பிறப்பு. நிராகார் சிவனுடைய பிறப்பைக் கொண்டாடினோம். அவர் நிராகார் என்றால் பிறகு அவருடைய பிறப்பு எப்படிக் கொண்டாடப்படு கின்றது? யாருக்குள் வந்தார்? ஆத்மா சரீரத்திற்குள் சென்றால் பிறப்பு எனச் சொல்கின்றனர். ஆத்மாவோ ஆத்மா தான். சரீரத்தில் பிரவேசமாகிறது என்றால் சொல்வார்கள், ஆத்மா தனது பாகத்தை நடிப்பதற்காக சரீரத்தை எடுத்துக் கொண்டுள்ளது. அவரோ நிராகார். அவர் எப்படி ஜென்மம் எடுத்தார்? யாருக்குள் வந்தார்? அவர் பரமாத்மா என அழைக்கப் படுகின்றார். இது யாருக்கும் தெரியாது. அநேக சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படித்தவர் களாக அவர்கள் இருக்கலாம். ஆனாலும் அவர் களுக்கு எதுவும் தெரியாது. இப்போது நீங்கள் ஞானத்தால் நிரம்பி இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் ஞானத்தைத் தான் சொல்ல வேண்டும். ஒரு சிலர் இரண்டு-மூன்று ஆண்டுகளாக வருகின்றனர். பிறகு அஞ்ஞானத்தின் பிரவேசம் ஆகி விடுகின்றது. பாபா பிறகு அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தை தாரணை செய்ய வைக்கிறார். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் தரப் படுகின்றது. ஆனால் கணவன் ஞானத்தில் உள்ளார், மனைவி ஞானத்தில் இல்லை என்றால் அன்னமும் கொக்குமாக ஆகி விட்டனர் என்றாகிறது. அதனால் முதலில் மனைவிக்கு ஞானம் கொடுக்க வேண்டும். மனைவி, கணவனை குரு, ஈஸ்வரனாக மதிக்கிறாள் என்றால் மனைவி குருவின் ஆணையை ஏற்று நடக்க வேண்டும் இல்லையா? இது இங்கே உள்ள விஷயம் தான். அங்கே (சத்யுகத்தில்) ஆணையை ஏற்று நடப்பது அல்லது ஏற்காமல் போவதற்கான கேள்வியே கிடையாது. அனைவரும் அன்போடு நடந்து கொள்வார்கள். அங்கே இந்த மாதிரி விஷயம் எதுவும் கிடையாது. ஆகவே தர்மம் செய்வதென்பது வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். மனைவி ஞானத்தில் வருகிறாள், கணவன் வரவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? (ஞானத்தின்) பூம்-பூம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கும் பூம்-பூம் செய்ய வேண்டும். தன்னைப் போன்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள் என்று அவர்களுக்கும் சொல்ல வேண்டும். இப்போது யுத்தம் முன்னால் நின்று கொண்டுள்ளது. பாபா வந்திருக்கிறார். மனிதர்கள் அழைக்கின்றனர், ஹே பதீத-பாவனரே வாருங்கள். எப்போது தூய்மையில்லாத உலகத்தின் விநாசம் நடைபெற வேண்டுமோ, அப்போது நீங்கள் ஏன் மீண்டும் தூய்மையற்றவர்களாக ஆகிறீர்கள்? தாய் ஞானத்தில் உள்ளார் என்றால் தாயின் வேலை தன்னை சேர்ந்தவர்களுக்கும் நன்மை செய்வதாகும். இப்போது நீங்கள் பாபாவிடமிருந்து 21 பிறவிகளுக்கு முழு இராஜ்யத்தையும் அடைகிறீர்கள். உங்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. நீங்கள் முழு உலகத்தின் எஜமானராகிறீர்கள். வித்தியாசத்தைப் பாருங்கள், எவ்வளவு உள்ளது! அப்படிப்பட்ட ஆஸ்தி தரக்கூடியவரை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும்! ஆக, அநேகர் முழு நாளிலும் சிவபாபாவை நினைவு செய்வதே இல்லை. நாள் முழுவதும் வீடு மற்றும் வேலை-வெட்டி பற்றிய விஷயங்களிலேயே இருக்கின்றனர். இல்லை யென்றால் அதிகாலை எழுந்து மிகுந்த அன்போடு பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா, உங்களிடம் உறுதிமொழி கொடுக்கிறேன். உங்களிட மிருந்து நிச்சயமாக ஆஸ்தி பெறுவோம். பாபா, நீங்கள் எவ்வளவு இனிமையானவர்! உங்கள் நினைவினால் எங்கள் விகர்மங்கள் விநாசமாகி விடும். உள்ளுக்குள் தனக்குத் தான் இவ்வாறு பேசிக் கொள்ள வேண்டும். இதனை ஞானக் கடலை கடைவது என சொல்லப்படும். பாபா, உங்களிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெற்றே தீர்வோம். இப்போது நாங்கள் தமோபிர தானத்தில் இருந்து சதோபிரதானமாக நிச்சயமாக ஆவோம். அப்போது தான் சத்யுக இராஜ்யத்தைப் பெறுவோம். பாபா, உங்களை நாங்கள் நிரந்தரமாக நினைவு செய்வோம். 63 பிறவி களாக நாங்கள் எவ்வளவு பாவம் செய்திருக்கிறோம்! தலை மீது எவ்வளவு சுமை உள்ளது! அதனால் பாபா, நாங்கள் உங்களை மிகவும் நினைவு செய்கிறோம். பாபா, நாங்கள் உணவு சமைக்கிறோம், வெளியில் சுற்றி வருவதற்காகச் செல்கிறோம் என்றாலும் கூட உங்களின் நினைவிலேயே இருப்போம். இப்படி-இப்படி உரையாடல் செய்து கொண்டே உறுதிமொழி எடுத்துக் கொள்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகிக் கொண்டே போகும். பாபா, நாங்கள் உங்கள் நினைவிலேயே உணவு சமைப்போம். நாங்கள் அவசியம் சதோபிர தானமாக ஆக வேண்டும். நாளைக்கே நான் சரீரத்தை விட்டு விட்டால் சதோபிரதானம் ஆகவே முடியாது, அதனால் மரணம் பற்றிய பயம் உள்ளது இல்லையா? பாபா, நாங்கள் உயிருடன் இருந்து கொண்டே உங்களிடம் இருந்து ஆஸ்தியை அவசியம் பெறுவோம். பிறகு பார்க்க வேண்டும்-இன்று நாள் முழுவதும் நாம் எவ்வளவு நினைவு செய்தோம்? எந்த ஒரு நிலையிலும் நினைவு யாத்திரையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லற விவகாரங் களிலும் இருக்க வேண்டும். யுக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி-இப்படி புருஷார்த்தத்தில் தீவிர வேகத்தில் ஈடுபட்டு இருந்தால் நினைவும் இருக்கும், ஆயுளும் அதிகமாகும். வருங்காலத்தில் உங்கள் ஆயுள் அதிகமாகும். நினைவு செய்யவில்லை என்றால் பதவி குறைந்து விடும். புருஷôர்த்தம் செய்து பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும் இல்லையா? மேலும் சுயதரிசனச் சக்கரதாரியாகவும் ஆக வேண்டும். எப்படி இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக ஆக்குவதற்கு கன்யாஸ்திரீகள் மிகவும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்! வீடு களுக்கும் கடைகளுக்கும் செல்கின்றனர். அனை வருக்கும் சொல்கின்றனர், பைபிள் எடுத்துக் கொள்ளுங்கள், இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொடுக்கின்றனர். எங்களது கிறிஸ்தவ தர்மத்தில் மிகுந்த சுகம் உள்ளது எனச் சொல் கின்றனர். அவர்களுக்கும் மிஷன் (இயக்கம்) உள்ளது. பௌத்தர்களுக்கும் மிஷன் உள்ளது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இந்துக்கள் புரிந்து கொள்வதில்லை. நம்முடைய இந்து தர்மத்தைச் சேர்ந்தவர்களைக் கிறிஸ்தவர்களாக ஆக்கிக் கொண்டே செல்கின்றனர். நீங்கள் கண்காட்சிகளில் எவ்வளவு புரிய வைக்கிறீர்கள்! தங்களின் அபிப்பிராயங்களையும் எழுதித் தருகின்றனர். ஆனால் வீட்டுக்குப் போனதும் எல்லாம் முடிந்தது. இதனால் தான் பாடப் பட்டுள்ளது-குரங்குகளுக்கு முன் ரத்தினங்களை வைத்தால் அவை கல்லென்று நினைத்து வீசியெறிந்து விடும். ஆக, இவர்களும் கூட அழிவற்ற ஞான ரத்தினங்களை கல் எனப் புரிந்து கொண்டு வீசியெறிந்து விடுகின்றனர். இதை சிறிதும் புரிந்து கொள்வதில்லை. ஆம், யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ, அவர்களுக்குத் தான் (டச்) புத்தியில் தூண்டுதல் ஏற்படும். விஷயம் மிகவும் சகஜமானது. பாபா சொர்க்கத்தைப் படைப்பவர். பாபா பாரதத்தில் வருவதும் ஒரு முறை தான்.

பாபா சொல்கிறார் - நீங்கள் பதீத-பாவனராகிய தந்தையாகிய என்னை அழைத்தே வந்திருக்கிறீர்கள். இப்போது நான், உங்களை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்கு வதற்காக வந்திருக்கின்றேன். நீங்கள் சொல்லவும் செய்கிறீர்கள், இந்த மிகத் தாழ்ந்த உலகத்தை மிக உயர்ந்த உலகமாக ஆக்கியே தீர்வோம். இப்போது அனைவரும் நரகவாசிகளாக உள்ளனர். இப்போது நீங்கள் சிவபாபாவின் ஸ்ரீமத் படி நடக்கிறீர்கள். சிவபகவான் சொல்கிறார், நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானர்களாக, ராஜாவிற்கெல்லாம் மேலான ராஜாவாக ஆக்குகிறேன். கீதையில் மிக நன்றாக எழுதப் பட்டுள்ளது - சொல்கிறார், நான் இந்த சாதுக் களுக்கும் கூட விமோசனம் அளிப்பதற்காக வருகிறேன். ஆகவே இதை அவர்களுக்கும் சொல்ல வேண்டும் இல்லையா? பதீத-பாவனா, சீதைகளின் ராமரே என அழைக்கவும் செய் கின்றனர். இப்போது இதன் அர்த்தத்தையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் அழைக்கின்றனர், ஹே ராம்! வந்து சீதைகளாகிய எங்களுக்கு விமோசனம் அளியுங்கள். பிறகு சொல்கின்றனர், ரகுபதி ராகவ ராஜா ராம்...... உண்மையில் ராஜா ராமரின் விசயம் கிடையாது. முக்கியமான தவறு இது தான் - சிவனுக்கு பதில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டனர். அவர்களிடம் கேட்க வேண்டும், கிருஷ்ணர் அல்லது ராமரைக் கருப்பாக ஏன் காட்டியுள்ளனர்? சத்யுக-திரேதாவில் அழகாகவே உள்ளனர். பிறகு ஷ்யாம் ஆகின்றனர். முதலில் கோல்டன் ஏஜ், சில்வர் ஏஜ், பிறகு காப்பர், அயர்ன் ஏஜ். இச்சமயம் அயர்ன் ஏஜ். கோல்டன் ஏஜ் இருந்தது என்றால் எவ்வளவு மதிப்பு இருந்தது! ஆக, யுக்தியோடு போய் புரிய வைக்க வேண்டும். அவர்கள் ஒன்றும் அவ்வளவு சீக்கிரமாக அவர்களின் பிடிவாதத்தை விட்டுவிட மாட்டார்கள். மரத்தின் ஆயுள் அதிகமாகி விட்டதால் இற்றுப்போன நிலையை அடைந்துள்ளது. ஆயுள் இந்த உலகத்திற்கும் இருக்கிறது இல்லையா? புது உலகம் மற்றும் பழைய உலகம். பழையது என்றால் கலியுகம், தமோபிரதான உலகம். இதில் ஒருவரும் சதோபிரதானமாக இருக்க முடியாது. இப்போது தமோபிரதானம் முடிந்துவிடப் போகிறது. புது உலகை யார் ஸ்தாபனை செய்வார்? அதே தந்தை தான். பிரளயம் ஏற்படும் என்பதெல்லாம் கிடையாது. எப்போது தூய்மை இழந்து விடுகிறார்களோ, அப்போது தான் பாபாவை அழைக் கின்றனர். பிறகு சொல்கின்றனர், வந்து தூய்மையாக்குங்கள். அவர் வருவார் என்றால் நிச்சயமாக பழைய உலகத்தில் தான். பதீத பாவனர் எனச் சொல்கின்றனர் என்றால் நிச்சயமாக இறுதியில் தான் வருவார். அவர் தாமே சொல்கிறார்: கல்ப-கல்பமாக, கல்பத்தின் சங்கமயுகத்தில் தூய்மையான உலகை உருவாக்குவதற்காக வருகிறேன். இப்போது சங்கமயுகம். இப்போது பாபா அனைவரையும் சத்கதியில் அழைத்துச் செல்கிறார். ஆக, அப்படிப்பட்ட தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் இல்லையா? தனது மனநிலையை ஒருநிலைப்படுத்த வேண்டும். அதிகாலை எழுந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். தன்னை ஆத்மா என உணர வேண்டும். இவை சரீரத்தின் உறுப்புகள். பாபா சொல்கிறார்-ஹே குழந்தைகளே, நான் உங்களுக்கு எதைச் சொல்கிறேனோ, அதை மட்டும் கேளுங்கள். முக்தி-ஜீவன் முக்திக்காக வேறு எந்த விஷயத்தையும் கேட்கா தீர்கள். பரந்தாமத்தில் இருந்து பாபா வந்துள்ளார், தூய்மை யாக்குவதற்காக. பிறகு நீங்கள் பழைய சாஸ்திரங்களை ஏன் நினைவு செய்கிறீர்கள். பக்தி செய்கிறீர்கள், பகவான் கிடைப்பார் என்பதால். அவரோ அனைவருக்கும் சத்கதி அளிக்கும் தந்தை இல்லையா? தந்தையைத் தவிர இந்த ஞானத்தை யாராலும் கொடுக்க முடியாது. இந்த லட்சுமி- நாராயணருக்கு இந்த இராஜ்யம் எப்படிக் கிடைத்தது? ஆத்மாவைப் பற்றிச் சொல்லும் போது அது பிந்தியாக உள்ளது என்கின்றனர். விசித்திரமான ஒரு நட்சத்திரம் ஜொலிக்கின்றது. பாபா புரிய வைக்கிறார், நீங்கள் என்னை பரமாத்மா, சுப்ரீம் ஸோல் எனச் சொல்கிறீர்கள். லௌகிக் தந்தையை எப்போதாவது பரமாத்மா எனச் சொல்வார்களா என்ன? பரந்தாமத்தில் வசிப்பவராகிய பரமாத்மாவை சுப்ரீம் ஸோல் எனச் சொல்கின்றனர். அவர் உங்களுடைய தந்தை. அவர் வந்து இவருக்குள் (பிரம்மா) பிரவேசமாவார். குரு சிஷ்யரின் அருகில் அமர்வார் இல்லையா? அதுபோல இந்த விஷயங்கள் எந்த ஒரு சாஸ்திரத்திலும் இல்லை. இப்போது நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள், அவர் நம்முடைய தந்தை. 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட பாபா யோகம் கற்றுக் கொடுத்திருந்தார். என்னை நினைவு செய்யுங்கள், விஷ்ணுபுரியை நினைவு செய்யுங்கள் என்று நிச்சயமாக சங்கம யுகத்தில் தான் சொல்வார். சத்யுகத்தில் இருந்தது ஒரே தர்மம். இப்போது மீண்டும் ஒரே தர்மம் இருக்கும் இல்லையா? இப்போதுள்ள இத்தனை தர்மங்களும் அழிந்து போகும். இது அதே சமயம் தான். பாபா சொல்கிறார்-என்னை நினைவு செய்வீர்களானால் நான் உங்களை உலகத்திற்கு அதிபதி ஆக்குவேன். பாபாவின் நினைவினால் நீங்கள் தமோபிர தானத்தில் இருந்து சதோபிரதானமாக ஆவீர்கள். பாபா சொல்கிறார் - எந்தக் குழந்தைகள் நல்ல சேவை செய்கிறார்களோ, அவர்களை நான் நினைவு செய்கிறேன், ஏனென்றால் அவர்கள் எனக்கு உதவியாளர்கள். அநேகருக்கு நன்மை செய்கின்றனர் என்றால் அவர்கள் எனக்குப் பிரியமான வர்களாக உள்ளனர். உங்களுக்கோ ஒரே ஒரு தந்தை தான் பிரியமான வராக உள்ளார். அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. அதனால் குழந்தைகள் நீங்கள் நல்லபடியாகப் புருஷôர்த்தம் செய்ய வேண்டும். நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். அதிகமாக வீணான சிந்தனைகளும் வரலாம். பக்தி மார்க்கத்தில் தனக்குத் தானே அடி கொடுத்துக் கொள்ளவும் செய்கின்றனர். நமக்கு சிவனுடைய தரிசனம் (காட்சி) கிடைக்க வேண்டும் என்று தரிசனத்திற்காக மிகுந்த முயற்சி செய்கின்றனர். இங்கே நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பாபாவின் நினைவினால் பாவங்கள் நீங்கி விடும். மேலும் 21 பிறவி களுக்கு ஆஸ்தி கிடைக்கும். தரிசனம் (சாக்ஷாத்காரம்) கிடைப்பதால் பாவங்கள் எதுவும் நீங்காது. பாபா உலகத்திற்கு எஜமானர் ஆக்குகிறார். அவரை மிகுந்த அன்போடு நினைவு செய்ய வேண்டும். இப்போது உங்கள் புத்தியில், நாம் என்னவாக ஆகிக் கொண்டிருக் கிறோம் என்பது உள்ளது. அடுத்த பிறவியில் நாம் போய் இது போல் ஆவோம். இது சத்யுகத்தின் இளவரசர்-இளவரசி ஆவதற்கான கல்லூரி ஆகும். பாபா வந்து தர்மத்துடன் கூடவே தெய்வீக இராஜ்யத்தையும் ஸ்தாபனை செய்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபா முக்தி-ஜீவன் முக்திக்காக என்ன ஞான விஷயங்களைச் சொல்லியிருக்கிறாரோ, அதையே கேட்க வேண்டும், தாரணை செய்ய வேண்டும். மற்ற அனைத்தையும் மறந்து விட வேண்டும். தனக்கும் தனது லௌகிகக் குடும்பத்திற்கும் நன்மை செய்ய வேண்டும்.

2) வீணான சிந்தனைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அதிகாலை எழுந்து ஞானக் கடலை கடைய (விசார் சாகர் மந்தன்) வேண்டும். நினைவு யாத்திரையிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும்.

வரதானம்:
ஞான யோகத்தின் சக்திசாலி கிரணங்கள் மூலமாக பழைய சம்ஸ்காரங்கள் என்ற கிருமிகளை சாம்பலாக்கி விடக்கூடிய மாஸ்டர் ஞான சூரியன் ஆவீர்களாக.

எப்பேர்ப்பட்ட தூய்மையற்ற சூழ்நிலையை மாற்றுவதற்காக அதாவது பழைய சம்ஸ்காரங்கள் என்ற கிருமிகளை சாம்பலாக்குவதற்கு நான் மாஸ்டர் ஞான சூரியன் ஆவேன் என்ற இதே நினைவு இருக் கட்டும்.சூரியனுடைய கடமையாவது வெளிச்சத்தை கொடுப்பது.மேலும் அசுத்தத்தை அழித்து விடுதல் .எனவே ஞான யோகத்தின் சக்தி அல்லது சிறந்த நடத்தை மூலமாக இதே காரியத்தை செய்து கொண்டே இருங்கள்.சக்தி குறைவாக இருந்தது என்றால் ஞானம் பிரகாசத்தை மட்டும் கொடுக்கும்.ஆனால் பழைய சம்ஸ்காரங்கள் என்ற கிருமிகள் அழிந்து விடாது.எனவே முதலில் யோக தபஸ்யா மூலமாக பவர்ஃபுல் சக்திசாலி ஆகுங்கள்.

சுலோகன்:
நல்விருப்பங்களின்(சுப பாவனை) மேலான

எண்ணங்களே சேமிப்பு கணக்கை அதிகரிக்கின்றன.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது உங்களின் வள்ளல் சொரூபத்தை வெளிப்படுத்துங்கள்.

நிகழ்காலத்தில் குழந்தைகளாகிய நீங்கள் தங்களது இரக்க உள்ளத்தையும் வள்ளலின் சொரூபத்தையும் வெளிப்படுத்துங்கள். உங்களது எல்லா களஞ்சியங்களும் நிறந்தரமாக திறந்தபடி இருக்க வேண்டும். அனாதி ஆதி வள்ளல் தன்மையின் சம்ஸ்காரத்தை தங்களது வாழ்க்கையில் எப்பொழுதும் வெளிப்படையாக வைத்திருந்து பரமாத்ம செய்தி தூதுவர் ஆகி உலகத்தில் தந்தையை வெளிப்படுத்தும் செய்தியை பரப்புங்கள். எல்லையில்லாத வள்ளலாக ஆகி உலக உருண்டை மீது நின்றபடியே எல்லையில்லாத சேவையின் அதிர்வலைகளை பரப்புங்கள். மகான் வள்ளல் ஆகுங்கள்.