01.11.26 காலை முரளி
ஓம் சாந்தி 05.03.2012 பாப்தாதா,
மதுபன்
இப்போது நாலாபுறமும் துக்கம் அசாந்தி அதிகரித்துக் கொண்டுள்ளது,
எனவே தங்களின் விஷ்வகல்யாணி சொரூபத்தைப் பிரத்தியட்சம்
செய்யுங்கள்,மனசா சேவையை அதிகரியுங்கள், பாபாவின் சேர்க்கையின்
நிறத்தின் மூலம் டபுள் ஹோலி ஆகுங்கள்
இன்று பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் பாக்கியத்தின் ரேகைகளைப்
பார்த்துக் கொண்டிருக் கிறார். நெற்றியில் ஜொலிக்கும்
நட்சத்திரத்தின் ரேகை, கண்களில் அன்பு மற்றும் சக்தியின் ரேகை,
இதழ்களில் புன்சிரிப்பின் ரேகை, கால்களில் ஒவ்வோரடியிலும் பல
கோடி மடங்கின் ரேகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள்
அனைவரும் கூடத் தங்களின் பாக்கியத்தின் ரேகைகளைப் பார்த்து
மகிழ்ச்சி அடைகிறீர்கள் இல்லையா? மனதால் இதைத் தான்
பாடுகிறீர்கள் - ஆஹா எனது பாக்கியம்! ஒவ்வொருவரின் நெற்றியும்
அந்த தெய்வீக நட்சத்திரத் தினால் ஜொலித்துக் கொண்டிருப்பதைப்
பார்த்து பாப்தாதாவும் குஷியடைகிறார் மற்றும் இந்தப் பாடலைத்
தான் மனதில் பாடுகிறார் - ஆஹா குழந்தைகளே ஆஹா! குழந்தைகளின்
மனதிலி ருந்து என்ன பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறார்? ஆஹா பாபா
ஆஹா! ஆக, குழந்தைகளும் ஆஹா! தந்தையும் ஆஹா! ஆக, இந்த சபை
முழுவதும் என்னவாக ஆகி விட்டது? ஆஹா! ஆஹா! ஆஹா! ஆக, தனது
பாக்கியத்தைப் பார்த்து சதா இதே போல் மகிழ்ந்திருங்கள் -
இப்போது மகிழ்ந்திருப்பது போல். இந்த பாக்கியம் இப்போது
சங்கமயுகத்தில் மட்டுமே கிடைக் கின்றது. சஙகமயுகத்தின் ஒவ்வொரு
நொடியும் மிகமிக மதிப்பு வாய்ந்ததாகும். சங்கமயுகத்தின் ஒரு
நொடி அவிநாசி ஆகி விடுகின்றது. ஏனென்றால் ஒவ்வொரு நொடிக்கும்
21 பிறவிகளோடு சம்பந்தம் உள்ளது. இப்போதைய ஒரு நொடியின்
சம்பந்தம் 21 பிறவிகளோடு உள்ளது. எனவே சோதித்துப் பாருங்கள் -
ஒரு நொடி வீணாகி விட்டால் ஒரு பிறவியின் விஷயம் இல்லை, 21
பிறவிகளின் சம்பந்தத்தின் விஷயமாகும். எனவே பாப்தாதா
குழந்தைகளின் கவனத்தை அவ்வப்போது ஈர்க்கிறார் - சங்கமயுகத்தின்
ஒரு நொடியையும், ஒரு சங்கல்பத்தையும் கூட வீணாக்கி விடாதீர்கள்.
ஏனென்றால் ஒரு பிறவியை வீணாக்கவில்லை, ஆனால் 21 பிறவிகளை
வீணாக்கி விட்டீர்கள். சங்கமயுகத்தின் மகத்துவத்தை ஒவ்வொரு
நேரமும் நினைவு வையுங்கள்.
பாப்தாதா வீணான சமயம் மற்றும் வீணான சங்கல்பத்தின்
வீட்டுப்பாடம் அனைவருக்கும் கொடுத்திருந்தார். ஆக, அனைவரும்
இந்த வீட்டுப்பாடத்தைச் செய்தீர்களா? எனக்கு கவனம் இருந்தது,
அதிகமாக வெற்றியும் அடைவதற்கான லட்சியத்தோடு லட்சணத்தைக் கொண்டு
வருவதற்கான முடிவு வந்துள்ளது என்பவர்கள் கை உயர்த்துங்கள்.
நல்லது. பாண்டவர்கள் கை உயர்த்துகிறார்களா? கையை நன்றாக
உயர்த்துங்கள். இப்போது அனைவரும் காரியமாற்ற வில்லை. அவிநாசி
தந்தையின் மூலம் இந்தக் காரியம் கிடைத்துள்ளது. சங்கமயுகத்தின்
மகத்துவத்தை சதா புத்தியில் வையுங்கள். ஒவ்வொரு நொடியும்
அவிநாசி ஆவதற்கானது. ஏனென்றால் அவிநாசி பாபா இதை வரதானமாகக்
கொடுத்துள்ளார். எனவே சுலபமாகவே ஆகி விடும். பாபா
சொல்லியிருக்கிறார் - ஒவ்வொரு பிராமணக் குழந்தையின் ஒவ்வோர்
அடியிலும் பல மடங்கு பெறுமான ரேகைகள் உள்ளன. யோசித்துப்
பாருங்கள் - ஒவ்வோரடியிலும் பல கோடி மடங்கு ரேகைகள் என்றால்
சங்கமயுகத்தில் எத்தனை கோடிகளுக்கான பொன்னான வாய்ப்பு!
ஒவ்வொருவரும் இதைத் தனது நினைவில் வைக்க வேண்டும். குழந்தைகள்
பலர் யோசிக்கிறார்கள் - பாப்தாதா எதை விரும்புகிறார்? பாப்தாதா
இதைத் தான் விரும்புகிறார் - ஒவ்வொரு குழந்தையும் டபுள் ராஜா
ஆக வேண்டும். இப்போது சுயராஜ்ய அதிகாரி மற்றும் வருங்காலத்தில்
உலக ராஜ்ய அதிகாரி. எந்த ஒரு குழந்தையும் டபுள் ராஜாவை விடக்
குறைந்தவராக ஆகக் கூடாது. ஆக, ஒவ்வொரு குழந்தையும் டபுள் ராஜ்ய
அதிகாரி தான் இல்லையா? தலை அசையுங்கள். ஆக, ஒவ்வொரு குழந்தையும்
டபுள் ராஜ்ய அதிகாரி. தலையை அசையுங்கள். ஆக, பாபாவுக்கு எவ்வளவு
குஷி ஏற்படுகிறது!
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் ரிக்கார்டையும் தினமும்
பார்க்கிறார். அப்போது என்ன பார்க்கிறார்? ஒவ்வொருவரும் தங்கள்
மனதிலோ தெரிந்து கொண்டிருப்பீர்கள். இராஜ்ய அதிகாரியாகவோ
ஆகியிருக்கிறீர்கள். ஆனால் இப்போது நீங்கள் சுயராஜ்ய அதிகாரிகள்.
சுயராஜ்ய அதிகாரி என்றால் மனம்-புத்தி சம்ஸ்காரத்தைத் தனது
கட்டுப்பாட்டில் நடத்துபவர். எப்போது விரும்புகிறீர்களோ, எப்படி
விரும்புகிறீர்களோ, அது போல் அதிகாரத்தில் இருக்க வேண்டும்.
எப்படி இந்த ஸ்தூல கர்மேந்திரியங்கள், கைகள் உள்ளன. கால்கள்
உள்ளன. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இது போல் மனம் புத்தி
சம்ஸ்காரம் மீது எப்போது விரும்புகிறீர்களோ, எப்படி
விரும்புகிறீர்களோ, ரூலிங் பவர் மற்றும் கன்ட்ரோலிங் பவர்
இருக்க வேண்டும். இப்போது பார்த்தால் நம்பர்வார் அநேகர் உள்ளனர்.
அவர்களும் என்னுடையவர்கள். மனம் நான் இல்லை. என்னுடையது.
சம்ஸ்காரங்கள் என்னுடையவை. புத்தி என்னுடையது, ஆனால்
கன்ட்ரோலிங் பவர், ரூலிங் பவர் நம்பர்வார் உள்ளது. பாப்தாதா
சமயத்தின் குறிப்பையும் கூட அவ்வப்போது கொடுத்துக் கொண்டே
இருக்கிறார். அந்த சமயத்தின் அனுசாரம் உங்களில்
ஒவ்வொருவருக்கும் சுவமானம், விஷ்வ கல்யாண்காரி. இப்போதைய
சமயத்தின் படி ஒவ்வொரு குழந்தையும் விஷ்வ கல்யாணி சொரூபத்தைப்
பிரத்தியட்சம் செய்வதற்கான சமயம். நாலாபுறமும் துக்கம் அசாந்தி
அதிகரித்துக் கொண்டுள்ளது. உங்கள் சகோதரர்கள், உங்கள் சகோதரிகள்,
பரிவாரங்கள் துக்கமடைந்து கொண்டே இருக்கிறார்கள் எனும் போது
உங்கள் பரிவாரத்தின் மீது இரக்கம் வரவில்லையா?
இப்போது பாப்தாதா இந்த சமிக்ஞையைத் தான் கொடுத்துக்
கொண்டிருக்கிறார் - சுய புருஷார்த்தத்துடன் கூடவே உலக சேவை,
எப்படி வாய்மொழி மூலம் சேவையை நிகழ்காலத்தில் நன்கு தடபுடலாகச்
செய்து கொண்டி ருக்கிறீர்கள். பாப்தாதா குஷியடைகிறார். இந்த 75
ஆண்டுகளின் நிறைவு விழா அனைவரின் மனதிலும் பெரும்பாலும்
சேவையின் உற்சாகத்தைக் கொண்டு வந்துள்ளது. பாப்தாதா பார்த்துக்
குஷி அடைகிறார். ஆனால் இப்போது மனசா சேவைக்கும் தேவை உள்ளது.
ஏனென்றால் அனைத்துத் தரப்பிலும் விஷ்வ கல்யாண்காரி ஆக வேண்டும்.
அதில் மனம் சொல் மற்றும் செயல், அதாவது நடத்தை மற்றும்
முகத்தின் மூலம் கூன்று வித சேவைகளையும் செய்ய வேண்டியது
இப்போது அவசியமாகும். தினந்தோறும் சோதித்துப் பாருங்கள் -
மூன்று சேவைகளிலும் எத்தனை சதவிகிதம் சேவை செய்தோம்? வாய்மொழி
சேவைக்கோ பாப்தாதாவும் சர்ட்டிஃபிக்கேட் கொடுத்துள்ளார். ஆனால்
இப்போது மனதின் சூட்சும வைப்ரேஷன் மூலம் ஆத்மாக்களின் துக்கம்
அசாந்தியில் ஆதரவு தருபவராக ஆக வேண்டும். உங்களுக்கு இரக்கம்
வரவில்லையா? பாப்தாதாவுக்கோ, குழந்தை கள் மீது இரக்கம் வருகிறது
- அவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறகும் குழந்தைகள்
இல்லையா? அதனால் எனவே இப்போது ஒவ்வொரு குழந்தையும் வெறுமனே
சென்டர் கல்யாணகாரியாக இல்லாமல், ஜோன் கல்யாணகாரியாக இல்லாமல்
விஷ்வ கல்யாணகாரி ஆக வேண்டும். ஏனென்றால் இது சங்கமயுகத்தின்
மிகப்பெரிய மகத்துவம். இப்போது சங்கமயுகத்தில் எவ்வளவு
விரும்புகிறீர்களொ, அவ்வளவு பாபாவிடமிருந்து சகயோகம் கிடைக்கும்.
ஆக, இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டீர்களா? மனசா
சேவையை அதிகப் படுத்துங்கள். தனது காரியத்தின் படி எப்படி
டிராஃபிக் கன்ட்ரோலுக்கான நேரம் தீர்மானிக்கப்பட்டுள்ளதோ, அதே
போல் ஒவ்வொருவரும் மனசா சேவைக்கான நேரத்தை யும் தீர்மானிக்க
வேண்டும். எப்போது அதிக துக்கம் ஏற்படுகிறதோ, அப்போது அனைவரின்
கவனமும் அந்தக்குழப்பத்தின் மீது செல்லும். ஆனால் இப்போது மனசா
சேவைக்கான சமயம். எனவே ஒவ்வொரு குழந்தையும் தனது விஷ்வ கல்யாணி
சொரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். உலக நன்மையில் தனது நன்மை
தானாகவே சுலபமாகி விடும். ஏனென்றால் மனம் ஃப்ரீயாக இருந்தால்
வீணானவை வருகின்றன. ஆனால் மனம் பிஸியாக இருக்குமானால் வீணானவை
சுலபமாகவே முடிந்து போய்விடும். ஆகவே பாப்தாதா நாலாபுறமும்
சுற்றி வந்து இந்த தேசம் மற்றும் வெளி தேசங்களின் அஞ்ஞானி
குழந்தைகளைப் பார்க்கும் போது இரக்கம் வருகிறது. எனவே நீங்கள்
அனைவரும் கூட இப்போது துக்கத்தைப் போக்கி சுகம் கொடுப்பவர்
ஆகுங்கள்.
ஆக, பாருங்கள் உலக மனிதர்களின் ஹோலிக்கும் மற்றும் உங்களது
ஹோலிக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது! பாப்தாதா இதற்கு
முன்பும் கூட சொல்லியிருக்கிறார் - உங்கள் பக்தர்கள், நீங்கள்
செய்துள்ள காரியங்களைக் காப்பி செய்வதில் சாமர்த்தியசாலிகள்.
ஏனென்றால் இந்த விதிகள் அனைத்தையும் துவாபரத்திலிருந்து
வரக்கூடிய ஆத்மாக்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஆக,
முதல்-முதல் பிறவியாக இருந்தது இல்லையா? எனவே அவர்களின் புத்தி
கூட எப்படி நியமம் உள்ளதோ - முதலில் சதோபிரதான், பிறகு ரஜோ,
தமோவில் வருகின்றனர். எனவே அந்தச் சமயம் அவர்களின் புத்தி
தங்கள் கணக்குப்படி சதோவாக இருந்தது. ஆகவே உங்களது ஒவ்வொரு
விசேஷத் தன்மையையும், நீங்கள் சதா உற்சாகத்தில் குஷியில்
இருக்கிறீர்கள், அதை உற்சவ ரூபத்தில் கொண்டாடத் தொடங்கி
யிருக்கிறீர்கள். எப்படி சிவராத்திரியிலும் கூட
சொல்லியிருக்கிறோம் இல்லையா, அதாவது காப்பி செய்வதில் எவ்வளவு
சாமர்த்தியசாலிகள் அது போல் இப்போதும் கூட நீங்கள் சதா
சங்கமயுகத்தில் உற்சாகத்தில் இருக்கிறீர்கள். அப்போது உங்கள்
உற்சாகத்தை அவர்கள் உற்சவ ரூபத்தில் நினைவுச்சின்னமாக
ஆக்கியிருக்கிறார்கள். அதனால் ஹோலியில் என்ன செய்கிறார் கள்?
நீங்களும் கூட உங்கள் வாழ்க்கையை வண்ணமாக்கியிருக்கிறீ
ர்கள்.
ஆனால் அவர்களின் வண்ணம் எது? உங்கள் அனைவரின் நிறம் என்பது
பாபாவின் சேர்க்கையின் நிறம். ஆக, முழு நேரமும் பாபாவின்
சேர்க்கையின் நிறத்தில் இருக்கிறீர்கள் இல்லையா? ஆக, அவர்களும்
கூட நிறத்தையோ தயார் செய்திருக்கிறார்கள். ஆனால் தேக உணர்வு
இல்லையா? அதனால் ஸ்தூல நிறத்தைத் தயார் செய்திருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் அனைவரும் இந்தக் கலயாண்காரி சங்கமயுகத்தில் இந்த
நிறத்தில், சேர்க்கையின் நிறத்தில் இருக்கிறீர்கள் இல்லையா?
நிறத்தைப்படியச் செய்திருக்கிறீர்கள் இல்லையா? சேர்க்கையின்
நிறம் படிந்து விட்டது மற்றும் ஹோலி என்று ஆங்கிலத்தில்
தூய்மைக்குச் சொல்லப் படுகிறது. ஆக, சேர்க்கையின் நிறத்தில்
நீங்கள் ஹோலி, அதாவது பவித்திரமாகிறீர்கள். பவித்திரம்
ஆகியிருக்கிறீர்கள் இல்லையா? பவித்திரதாவின் விரதத்தை அனைவரும்
பக்காவாக மேற்கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? நம்பர்வார்
இருந்தாலும் பிராமணர் ஆவது என்றால் பவித்திரதாவின் விரதத்தை
மேற் கொள்வது. ஏனென்றால் பாபா சதா பவித்திரமாக இருப்பவர்.
சொரூபமே பவித்திர சொரூபம். ஆக வேண்டியதில்லை. சொரூபமே
பவித்திரதா. ஆக, ஹோலியின் விசேஷத் தன்மை என்னவென்று அறிந்து
கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? பவித்திரமாகவோ நீங்கள் ஆகிறீர்கள்.
ஆனால் சேர்க்கையின் நிறத்தினால் டபுள் பவித்திரம் ஆகிறீர்கள்.
பவித்திர தர்ம பிதாக்கள், மகான் ஆத்மாக்கள் ஆகிறார்கள். ஆனால்
அவர்கள் ஆத்மாவை மட்டும் பவித்திரமாக்கு கிறார்கள். சரீரம்,
ஆத்மா இரண்டுமே பவித்திரமாக நீங்கள் வருங்காலத்தில் ஆகிறீர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே பாருங்கள், துவாபரயுகத்திலிருந்து
யாரெல்லாம் வந்திருக் கிறார்களோ, பவித்திரமாகி இருக்கிறார்கள்.
ஆனால் டபுள் பவித்திரமாக யாரும் ஆகவில்லை. சரீரமும் பவித்திரம்,
ஆத்மாவும் பவித்திரம். நீங்கள் வருங்காலத்தில் ராஜ்ய அதிகாரி
ஆகும் போது ஆத்மா, சரீரம் இரண்டுமே பவித்திரமாக இருக்கும்.
முழுச் சக்கரத்தையும் சுற்றி வாருங்கள். துவாபரயுகத்திலிருந்து
வந்துள்ளனர், துவாபரத்திலிருந்து இது வரை பாருங்கள், யாராவது
டபுள் பவித்திமாக ஆகியிருக்கிறார்களா? ஏனென்றால் உங்களுக்கு
நிறம் எப்படிப் படிந்துள்ளது? பரமாத்மாவின் சேர்க்கையின் நிறம்
படிந்துள்ளது. ஆக, எப்படி பரமாத்மா பவித்திரமாக இருக்கிறாரோ,
அது போல் நீங்களும் 21 பிறவிகளுக்கு டபுள் பவித்திரமாக
இருக்கிறீர்கள். தர்ம பிதாக்கள் வந்திருக்கலாம். அவர்களும் கூட
டபுள் பவித்திரம் கிடையாது. உங்களுக்கு பாக்கியம். ஏனென்றால்
நீங்கள் இருப்பதே பரமாத்மாவின் சேர்க்கையில். சேர்க்கையின்
நிறம் அவ்வளவு பக்காவாக உள்ளது - அதனால் நீங்கள் டபுள்
பவித்திரமாகி விடுகிறீர்கள். மேலும் ஹோலியின் இன்னொரு பொருளே
ஹோ லீ (நடந்தது முடிந்து விட்டது) நடந்து விட்டது. நடந்து
முடிந்தது நடந்து முடிந்தது தான். ஆக, முடிந்து விட்டதை
முடிந்ததாக ஆக்க வருகிறதா? எது முடிந்து போனதோ அது முடிந்து
போனது தான். ஹோலீ என்ற சொல்லின் அர்த்தமாக என்ன வெளிப்பட்டது?
முடிந்தது முடிந்தது தான். அதனால் நீங்கள் டபுள் ஹோலியாக 21
பிறவிகளுக்கு இருக்கிறீர்கள். ஒரு பிறவி இல்லை, ஏனென்றால்
சங்கம யுகத்தின் ஒவ்வொரு விநாடியும் 21 பிறவிகளோடு தொடர்புடையது.
இங்கே நீங்கள் ஒரு விநாடி அல்லது ஒரு நிமிடத்தைப் பயனுள்ளதாக
ஆக்கினீர்கள் என்றால் 21 பிறவிகள் உங்களுக்கு வெற்றிகரமாக
இருக்கும். இது கேரண்டி. ஆக, அந்த மாதிரி ஹோலி கொண்டாடி
யிருக்கிறீர்களா? ஹோலீ செய்வதற்கு வருகிறதா? எது கடந்து சென்றதோ,
அது கடந்து போய் விட்டது. ஹோ லீ (முடிந்து விட்டது). மேலும்
மூன்றாவது வடிவமைப்பு, என்ன செய்கிறார்கள்? முதலில்
எரிக்கிறார்கள், பிறகு கொண்டாடுகிறார்கள். ஆக, நீங்கள் என்ன
செய்தீர்கள்? யோக அக்னியால் தங்களுடைய பலவீனங்களை,
சம்ஸ்காரங்களை, அநேக ஜென்மங்களாக இருந்த தலைகீழான சம்ஸ்காரங்களை
யோக அக்னியினால் எரித்து விட்டீர்கள் இல்லையா? எரித்து
விட்டீர்களா அல்லது இப்போதும் எரித்துக் கொண்டிருக்கிறீர்களா?
எரித்து விட்டீர்களா? நமது யோக அக்னி மூலம் நமது முந்தைய
சம்ஸ்காரத்தை எரித்து விட்டோம், எரிந்து விட்டன என்று யார்
நினைக்கிறீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். எரிந்து விட்டனவா
அல்லது இன்னும் கூட வருகின்றனவா? கொஞ்சம்-கொஞ்சம் வருகின்றனவா?
பாப்தாதாவுக்குத் தங்களின் சார்ட் அனுப்புகிறார்கள் இல்லையா,
அப்போது சொல்கிறார்கள் - அதிகம் கழிந்து விட்டது - சொல்வதில்
சாமர்த்தியசாலிகள் இல்லையா? எனவே சொல்கின்றனர் - அதிகம்
முடிந்து விடடன. சில நேரம் கொஞ்சம் இமர்ஜ் ஆகி விடுகின்றன.
ஆனால் எரிந்தது என்றால் எரிந்தது தான். எரிந்த பிறகு பெயர்
அடையாளம் இருப்பதில்லை. கொன்ற பிறகு சரீரத்தின் நினைவுச்
சின்னமோ காணப்படுகிறது. ஆனால் எரிந்த பிறகு முடிந்து போகும்.
எப்படி இராவணனையும் பாருங்கள், வெறுமனே கொல்லவில்லை, ஆனால்
எரிக்கவும் பட்டது. அப்போது பெயர் அடையாளம் முற்றிலும் முடிந்து
போனது. ஆக, நீங்கள் அனைவரும் கூட தன்னைத் தான் பாருங்கள்,
சம்ஸ்காரங்களைக் கொன்றிருக்கிறோமா, எரித்து விட்டோமா? பழைய
சம்ஸ்காரங் களை எரிக்கவில்லை என்றால் இடையிடையே இமர்ஜ் ஆகி
விடும். ஆனால் பக்தர்கள் அனைத்தையும்
காப்பியடித்திருக்கிற
ார்கள். நீங்கள் எரிக்கிறீர்கள் என்றால்
அவர்களும் எரிக்கிறார்கள். பிறகு கொண்டாடுகிறார்கள். எரிக்காமல்
கொண்டாடுவதில்லை. ஆக, நீங்களோ சம்ஸ்காரங்களை எரித்து ஹோலி (புனிதமாக)
ஆகி விட்டீர்கள். சிலர் ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். சிலர் ஆகி
விட்டீர்கள். ஆக, நீங்கள் ஹோலி கொண்டாடினீர்களா? பாபாவின்
சேர்க்கையின் நிறத்தினுடைய ஹோலி. இப்போது சேர்க்கையில்
அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? அப்போது சேர்க்கையின்
நிறத்தினுடைய ஹோலி கொண்டாடி விட்டீர்கள் இல்லையா?
கொண்டாடினீர்களா? கை உயர்த்துங்கள். கொண்டாடி விட்டீர்கள். ஹோலி
கொண்டாடுவது என்றால் ஹோலியாக, பவித்திரமாக ஆவதாகும். எப்படி
தந்தையோ, அப்படி குழந்தைகளும். உங்களுடைய சம்ஸ்காரம் ஏதேனும்
எரியவில்லை, இன்னும் இமர்ஜ் ஆகி வருகிறது என்றால் நன்றாகவா
இருக்கிறது? சங்கல்பம் வருகிறது இல்லையா --- இப்போது தீவிர
புருஷார்த்தத்தின் மூலம் இதை எரித்தே ஆக வேண்டும். வெறுமனே
கொன்றால் மட்டும் போதாது. சிலர் சம்ஸ்காரத்தைக் கொன்று
விட்டார்கள். இறந்தவர்களிடம் இருந்து மீண்டும் உயிர் வந்து
விடுகிறது. எரித்து விட்டீர்கள் என்றால் மீண்டும் ஒரு போதும்
வராது.
ஆக, இன்று எரிக்க வேண்டுமா அல்லது கொன்றாலே போதுமா?
எரிப்பதற்கான சக்தி உள்ளதா? சக்தி உள்ளதா? சங்கல்பம் செய்ய
முடியுமா? பலர் சொல்கின்றனர், பாப்தாதாவுடன் ஆன்மிக உரையாடல்
செய்கின்றனர் இல்லையா? அநேகர் இனிமையிலும் இனிமையான ஆன்மிக
உரையாடல் செய்கின்றனர், சொல்கின்றனர் - பாபா, நாங்களோ அதிக
முயற்சி செய்தோம், மீண்டும் மீண்டும் வந்து விடுகிறது.
விரும்பவில்லை, ஆனால் வந்து விடுகிறது. காரணம் தெரியுமா?
எரிக்கிறீர்கள், பாப்தாதா பார்க்கிறார், புருஷார்த்தம்
அதிகமாகச் செய்கிறார்கள். ஆனால் புருஷார்த்தத்துடன் கூடவே திட
சங்கல்பமும் அவசியம். திடதா என்பது வெற்றிக்கான சாவி. திட
சங்கல்பம் செய்யப்படுகிறது என்றால் திடதாவின் அர்த்தம்,
மீண்டும் திரும்பி வராது. பிறகு தெரிகிறது, அதிகமாக இனிமையிலும்
இனிமையான ஆன்மிக உரையாடல் செய்கிறார் கள். மீண்டும் வருகிறது
என்றால் என்ன சொல்கிறார்கள்? ஆன்மிக உரையாடலோ அனைவருமே
செய்கிறார்கள் இல்லையா? மிகவும் இனிமையான ஆன்மிக உரையாடல்
செய்கிறார்கள். சொல்கிறார்கள், விரும்பவோ இல்லை, ஆனால் வந்து
விடுகிறது. ஆக, சக்தி குறைவாக உள்ளது இல்லையா? திடதா குறைவாக
உள்ளது இல்லையா? திட சங்கல்பதாரி ஆகுங்கள். செய்தே ஆக வேண்டும்.
மேலும் அந்த திட சங்கல்பத்தை தினந்தோறும் சோதித்துப் பாருங்கள்
- எந்தக் காரணத்தால் மீண்டும் திடதாவில் பலவீனம் வந்தது? மேலும்
அந்த சூழ்நிலை மீது விசேஷ கவனம் செலுத்திக் கொண்டே இருங்கள் -
இது மீண்டும் வரக்கூடாது. மாஸ்டர் சர்வசக்திவான் இருக்கையில்
அமர்ந்து கொண்டு அந்த சங்கல்பத்தை, சம்ஸ்காரத்தை முடித்து
விடுங்கள். குழந்தைகள் பலர் சொல்கின்றனர், நான் அநேக தடவை
அனுபவம் செய்கிறேன் - சில நேரம் ஏதாவது சக்தியை விரும்புகிறோம்
என்றால் அச்சமயம் அந்த சக்தி வருவதில்லை. சக்தி உள்ளது, ஆனால்
சமயத்தில் எப்போதாவது சக்தியை இமர்ஜ் செய்தாலும் அது வருவதில்லை.
ஆனால் மாஸ்டர் சர்வசக்திவான்! உங்கள் டைட்டில் என்ன? மாஸ்டர்
சர்வசக்திவான், மற்றும் என்ன சொல்கிறீர்கள்? சக்தி சமயத்தில்
வருவதில்லை. காரணம்? தனது மாஸ்டர் சர்வசக்திவான் இருக்கையில்
அமர்வதில்லை. இப்போது அலுவலகத்திற்கே சென்றாலும் கூட யாருக்கு
அத்தாரிட்டி இருக்குமோ, அவர் கட்டளையிடுவாரானால் ஏற்று
நடக்கிறார்கள் இல்லையா? அது போல் வேறு யாராவது சொன்னால்
கேட்பார்களா என்ன? ஆக, உங்களுடைய இருக்கை என்பது மாஸ்டர் சர்வ
சக்திவானின் இருக்கை. அந்த இருக்கை மீது செட்டாகி இருக்கவில்லை
என்றால் வரவழைத்தாலும் சமயத்தில் சக்தி வராது. அதற்காக பாப்தாதா
அடிக்கடி சொல்லியிருக்கிறார் - தனது மனதை பிசியாக வைத்திருங்கள்.
சில நேரம் ஏதேனும் சக்தியை நாள் முழுவதும் இமர்ஜ் செய்து
பாருங்கள் - அதன் சக்தி என்ன? இது போல் அனுபவம் செய்து கொண்டே
இருக்கிறீர்கள், தங்கள் இருக்கையில் செட்டாகி இருக்கிறீர்கள்
என்றால் சக்தி உங்கள் முன்னால் சதா ஆஜராகி இருக்கும். உங்களது
சக்தி இல்லையா? ஆக, ஹோலி கொண்டாடினீர்களா? நீங்களோ எப்போதுமே
ஹோலி கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறீர்கள். சதா பாபாவின்
சேர்க்கையின் நிறத்தைப் பூசிக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.
நிறம் பூசப்பட்டவராக இருக்கிறீர்கள் இல்லையா? நல்லது.
இன்று பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுவமான் தருகிறார்.
ஒவ்வொரு குழந்தையும் திட சங்கல்பதாரி விசேஷ ஆத்மா ஆகுங்கள்.
சங்கல்பம் செய்ததும் ஆகிவிட வேண்டும். இதைத் தான் திட சங்கல்பம்
என்பது. திட சங்கல்பம் செய்தோம் எனச் சொல்கிறார்கள். ஆனால்
திடதா என்றாலே வெற்றி. வெற்றி இல்லை என்றால் திடதா இல்லை என்று
தான் சொல்வார் கள். ஆக, இப்போது திடதா பவ. இந்த தனது விசேஷ
சுவமானை நாள் தோறும் அமிர்தவேளை யில் நினைவில் கொண்டுவர
வேண்டும் மற்றும் அந்த விதி பூர்வமாக முன்னேற வேண்டும்.
சங்கமயுகத்தின் சமயம் மிகவும் அன்பானது. ஒரு விநாடி இல்லை, ஒரு
விநாடி ஒரு வருடத்தின் பிராப்திக்கு சமமானது. எனவே பாப்தாதா
சொல்லிக் கொண்டே இருக்கிறார் - ஒரு விநாடி கூட வீணாகிப்
போய்விடக் கூடாது. சக்திசாலி ஆகுங்கள், சக்திசாலியாக ஆக்குங்கள்.
சரி தானே? நல்லது.
நாலாபுறம் உள்ள மிகமிகப் புனிதமான குழந்தைகளுக்கு,
ஒவ்வோரடியிலும் என்னுடைய பாபா எனச் சொல்லிக் கொண்டு பறந்து
கொண்டிருப்பவர்கள் மற்றும் சதா தங்களின் தீவிர புருஷார்த்
தத்தின் மூலம் முன்னேறிக் கொண்டுள்ளனர் மற்றும் முன்னேற்றிக்
கொண்டும் உள்ளனர். அத்தகைய பாப்தாதாவின் உள்ளத்தின்
கண்மணிகளுக்கு பாப்தாதா தமது மிகமிக மிகமிக உள்ளத்தின் அன்பைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதோடு ஹோலியின் வாழ்த்துகளையும்
கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தாம் உண்மையில்
புனிதமானவர்கள் மற்றும் வேறு யாரும் டபுள் ஹோலி ஆவதில்லை.
நீங்கள் தாம் டபுள் ஹோலி ஆகிறீர்கள். எனவே பல கோடி மடங்கு
வாழ்த்துகள், வாழ்த்துகள்!
ஆசீர்வாதம்:
தன் மீது பாப்தாதாவை பலியாகச செய்கின்ற தியாகமூர்த்தி,
நிச்சயபுத்தி உள்ளவர் ஆகுக
பாபா கிடைத்ததும் அனைத்தும் கிடைத்தது. இந்தக் குஷியின் நஷாவில்
அனைத்தையும் தியாகம் செய்யக்கூடிய ஞான சொரூப, நிச்சயபுத்தி
உள்ள குழந்தைகள் பாபா மூலம் எப்போது குஷி, சாந்தி, சக்தியின்
சுகத்தை அனுபவம் செய்கிறார்களோ, அப்போது உலக வழக்கத்தையும்
பொருட்படுத்தாமல் சதா முன்னேறச் செய்து கொண்டே இருக்கின்றனர்.
அவர்களுக்கு உலகத்தின் அனைத்தும் துச்சமாக, சாரமற்றதாக அனுபவம்
ஆகும். அத்தகைய தியாகமூர்த்தி, நிச்சயபுத்தி உள்ள குழந்தைகள்
மீது தம்முடைய அனைத்து செல்வங்களுடன் கூடவே பலியாகி விடுகிறார்.
எப்படி குழந்தைகள் சங்கல்பம் செய்கிறார்கள் - பாபா, நாங்கள்
உங்களுடையவர்கள். அப்போது பாபாவும் சொல்கிறார் - எதுவெல்லாம்
பாபாவுடையதோ, அவை எல்லாமே உங்களுடையவை.
சுலோகன்:
யார் தமது ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் கர்மத்தின் மூலம் பாபாவின்
அன்பின் வைப்ரேஷன்களைப் பரப்புகிறார்களோ, அவர்கள் தாம் சகஜயோகி
ஆவார்கள்.
அவ்யக்த இஷாரா: பிரம்மா பாபாவுக்கு சமமாக சம்பன்ன மற்றும்
சம்பூர்ண ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் பிறவி எடுத்ததுமே இந்த
விரதம் மேற்கொண்டிருக்கிறீர்கள்--- நாம் பாபாவுக்கு சமமாக
சம்பன்னம் மற்றும் சம்பூர்ணம் ஆக வேண்டும். எப்படி அனைவரும்
எவர்-ரெடி என்ற வார்த்தையைச் சொல்கிறீர்கள், அது போல் சம்பன்னம்
மற்றும் சம்பூர்ணம் ஆவதில் எவர்-ரெடி ஆகுங்கள். இதில்
கவனக்குறைவு வரக்கூடாது.