02-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள்
விகாரங்களை தானம் செய்தால்
கேள்வி:
விருட்சபதி பாபா, தன்னுடைய
பாரதவாசி குழந்தைகளுக்கு, குருதிசை ஏற்படு வதற்கு என்ன நினைவு
படுத்துகின்றார்?
பதில்:
ஹே பாரதவாசி குழந்தைகளே,
உங்களுடைய ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் மிகவும் உன்னதமானது.
நீங்கள் சர்வகுண சம்பன்ன, 16 கலை சம்பூர்ணமானவர்களாக இருந்தீர்
கள். நீங்கள் கடலின் குழந்தைகள் காம விகாரத்தில் போய் கருப்பாகி
விட்டீர்கள், கிரஹனம் ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது நான் மீண்டும்
உங்களை வெள்ளையாக்க வந்துள்ளேன், இந்த நினைவு வருவதால்
விருட்சபதியின் திசை (குரு பார்வை) உங்கள் பக்கம் இருக்கிறது.
பாடல்:
ஓம்நமச் சிவாய......
ஓம் சாந்தி.
இது யாருடைய மகிமையைக் கேட்டீர்கள்? எல்லையற்ற தந்தையின்
மகிமையைக் கேட்டீர்கள். உயர்ந்தவர் பரமபிதா பரமாத்மா ஆவார்.
லௌகீக தந்தையை அவ்வாறு சொல்ல மாட்டார்கள் அனைத்து
ஆத்மாக்களுக்கும் ஆன்மீக தந்தை- உயர்ந்ததிலும் உயர்ந்தவர்
என்பதை நீங்கள் குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். அவருடைய பெயர்
தான் சிவன். பெயரும், ரூபமும் இல்லாமல் எந்த ஒரு பொருளும்
இருப்பதில்லை. இந்த நேரத்தில் அனைவருக்கும் இராகுதிசை
ஏற்பட்டுள்ளது, ஆகையால் தான் இந்த உலகம் இரும்பு யுகம் என்று
சொல்லப் படுகின்றது. திசைகள் (கிரஹங்களின் பார்வை) கூட
உருவாகின்றது. குருதிசை, சுக்கர திசையன்று சொல்கின்றோம்.
இப்பொழுது உங்கள் மேல் குருதிசை உருவாகியுள்ளது. உயர்ந்த திலும்,
உயர்ந்தவர் பகவான் சிவபாபா என்று புகழ் பாடப்படுகின்றது.
அவருடைய உண்மையான பெயர் சிவன். நான் விதை ரூபமாக, சைத்தன்யமாக
இருக்கின்றேன் என்று பாபாவே புரிய வைக்கின்றார். அவரை
சத்-சித்-ஆனந்தம் என்றும் சொல்கின்றோம். அவர் சுகக்கடலாக இருக்
கின்றார், ஆனந்தக் கடலாக இருக்கின்றார், அமைதிக்கடலாக
இருக்கின்றார். இந்த அனைத்து மகிமைகளும் அந்த ஒருவருக்குத் தான்.
பாரதவாசிகள் மகிமை பாடுகின்றார்கள். ஆனால் அர்த்தம் ஒன்றும்
புரியவில்லை. ஒரேயடியாக கல் புத்தியாக ஆகிவிட்டார்கள். கல்
புத்தியாக யார் ஆக்கியது? இராவணன்! சத்தியயுகத்தில் நீங்கள்
தங்க புத்தியாக இருந்தீர்கள், இன்றிலிருந்து 5 ஆயிரம்
வருடத்திற்கு முன்பு இந்த பாரதம் பாரஸ்புரியாக (தங்க யுகமாக)
இருந்தது. அப்பொழுது தேவி-தேவதைகள் இருந்தார்கள். பாரதம் தான்
அழியாத கண்டம் என்று புகழ் பாடப் படுகின்றது. பாரதத்தில் தான்
பாரஸ் புத்தி தேவதைகள் இருந்தார்கள், அவர்களே இப்பொழுது கல்
புத்தி பதீதர்களாகி விட்டார்கள். பதீதர்களாக எப்படி ஆனார்கள்,
என்பதனை பாபா புரிய வைக்கின்றார். துவாபரயுகத்திலிருந்து
காமவிகாரத்தில் அமர்ந்து கருப்பாகி விட்டார் கள்.
காமவிகாரத்தில் பஸ்மம் ஆகி விட்டார்கள். அதில் முக்கியமாக
பாரதவாசிகளின் விஷய மாகும். பாரதத்தில் பாரஸ் புத்தி தேவதைகள்
ஆட்சி இருந்தது, அதில் தேவி-தேவதைகள் இருந்தார்கள், அதை
விஷ்ணுபுரி இராம இராஜ்யம் என்று சொல்லப்படுகின்றது. இதனை பாபா
தான் வந்து சொல்கின்றார். இனிû மயிலும்-இனிமையான செல்லமான
குழந்தைகளே ! நீங்கள் சத்தியுகத்தில் இருந்தீர்கள், சர்வகுண
சம்பன்னமாக இருந்தீர்கள். இது உங்கள் மகிமை, அங்கு விகாரம்
என்பதே இல்லை. துவாபர யுகத்திலிருந்து இராவணன், 5விகாரங்களின்
இராஜ்யம் ஆரம்பம் ஆகின்றது. இராம இராஜ்யத்தி-ருந்து இராவண
இராஜ்யம் ஆரம்பம் ஆகின்றது. இப்பொழுது கிரஹணம் ஏற்பட்டுள்ளது.
முற்றிலும் பாரதம் கருப்பாகிவிட்டது. குரு திசையில் மிகவும்
நன்றாக இருந்தது. பாரதத்தில் குரு திசை சத்திய யுகத்தில்
இருந்தது. பின்பு திரேதா யுகத்தில் சுக்கர திசையில் இரண்டு
கலைகள் குறைந்து விட்டது. அதற்குத் தான் வெள்ளியுகம் என்று
சொல்லப்படுகின்றது. பின்பு துவாபர யுகம், கலியுகம் வருகின்றது.
ஏணிப்படியில் இறங்கிக் கொண்டே வந்தீர்கள் சனிதிசை ஏற்பட்டு
விட்டது. இப்பொழுது அனைவரின் மீதும் இராகு திசை உள்ளது. சூரியன்
மீதும் கிரஹணம் ஏற்பட்டால் தானம் கொடுங்கள், கிரஹணம்
நீங்கிவிடும் என்று கூறுவார்கள்.
இப்பொழுது ஆன்மீகத் தந்தை குழந்தைகளுக்கு இது தான் ஆன்மீக ஞானம்
என்று புரிய வைக்கின்றார். இது ஒன்றும் சாஸ்த்திர ஞானம்
கிடையாது. சாஸ்த்திர ஞானத்தை பக்தி மார்க்கம் என்று
சொல்லப்படுகின்றது. சத்தியயுகம்-த்ரேதா யுகத்தில் பக்தி
இருப்பதில்லை. ஞானம் மேலும் பக்தி, பின்பு தான் வைராக்கியம்
அப்படி என்றால் இந்த உலகத்தை விட வேண்டி வரும். இது சூத்திர
வர்ணம், விராட ரூபத்தில் காட்டுகின்றார்கள் அல்லவா பிராமணன்,
தேவதை, சத்திரியன், வைஷ்யன் என்று பாரதத்தில் தான் இந்தக் கதை
உள்ளது. விராட ரூபத்தை உருவாக்குகின்றார்கள். கல் புத்தியாக
இருப்பதால் புரிந்து கொள்வதில்லை. கல் புத்தியாக ஏன்
இருக்கின்றார்கள், ஏனெனில் பதீதமானவர்கள் ஆனதால், பாரதவாசிகள்
தான் பாரஸ் புத்தியாக இருந்தார்கள். சம்பூர்ண நிர்விகாரி ஆக
இருந்தார்கள். இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடத்திற்கு முன்னால்
பாரதம் சொர்க்கமாக இருந்தது. வேறு எந்த கண்டமும் கிடையாது. இதை
பாபா தான் புரிய வைக்கின்றார் இந்த இராஜயோகத்தை யார் கற்றுக்
கொடுக்கின்றார்? சிவாச்சாரி. ஞானக்கடல் எந்த மனிதர்களையும்
ஞானக்கடல், பதீத-பாவனன் என்று சொல்ல முடியாது. அனைவரையும்
விடுவிக்கக் கூடியவர் ஒரு பாபா தான். பாபா சுயம் வருகின்றார்.
துக்கத்தில் இராவணனிடமிருந்து விடுவிக்கின்றார். பின்பு
வழிகாட்டி ஆகி அனை வரையும் அழைத்துச் செல் கின்றார். அவரை
ஆன்மீக வழிகாட்டி என சொல்லப்படுகிறது, தந்தை சொல்கிறார் - நான்
உங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறேன், அனை வரையும்
திரும்ப அழைத்துச் செல்வேன். என்னைப் போல வழிகாட்டி வேறு யாரும்
ஆக முடியாது. இறை தந்தை தான் விடுவிப்பவர், வழிகாட்டி
ஆனந்தக்கடல் என்றும் அவருக்குச் சொல்லப்படுகின்றது. அவர்தான்
அனைவர் மீதும் கருணை காட்டுகின்றார். ஏனென்றால், அனைவரும்
கடலின் குழந்தைகள் காமவிகாரத்தில் அமர்ந்து எரிந்து விட்டார்கள்.
அதிலும் முக்கியமாக பாரதத்தின் விசயமாகும். நீங்கள் தான் 16 கலை
சம்பன்ன, சம்பூர்ண நிர்விகாரி ஆக இருந்தீர்கள். இப்பொழுது காமச்
சிதையில் அமர்ந்து என்ன ஆகிவிட்டீர்கள்? இப்பொழுது பாபா
வந்துவிட்டார். இந்த விருக்ஷபதி பாபா வந்து மனிதர்களுக்கு
குருதிசையை உருவாக்கு கின்றார். முக்கியமாக பாரதம், மற்றும்
முழு உலகத்திற்கும் இப்பொழுது இராகு திசை ஏற்பட்டுள்ளது. நான்
வந்து தான் பாரதம், மற்றும் முழு உலத்திற்கும் அனைவருக்கும்
கதி-சத்கதி கொடுக்கின்றேன் என்று பாபா சொல்கின்றார். நீங்கள்
பாரஸ் (தங்க) புத்தியாக ஆவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். மிகவும்
அன்பானவர் பாபா-அனைத்து நாயகிகளுக்கும் அவர் ஒருவர் தான்
நாயகனாக உள்ளார். அனைத்து தேசத்தையும் ஒன்று சேர்க்கின்றார்,
ஏனெனில் அவர் அனைவருக்கும் தந்தை அல்லவா? பாரதத்தில் சிவனுடைய
கோவில்கள் அதிகமாக உள்ளன, அவர் இருக்கும் இடத்தைத் தான்
சிவாலயம் என்று சொல்லப்படுகின்றது. சத்திய யுகத்தில் தேவி-தேவதா
தர்மம் இருந்தது. ஆனால் அந்த தர்மம் எப்பொழுது இருந்தது,
அவர்களுடைய இராஜ்ஜியம் எப்பொழுது இருந்தது இது யாருக்கும்
தெரியாது. சத்தியயுகத்தின் ஆயுள் மிக நீளமாக எழுதிவிட்டார்கள்.
உங்கள் மேல் குரு திசை அமருகின்றது 21 ஜன்மத் திற்காக என்று
பாபா புரிய வைக்கின்றார். விருக்ஷபதி, ஞானக்கடல், பதீத பாவனன்
என்றெல்லாம் அவரை அழைக்கின்றார்கள். நீ தாய்-தந்தை, நாங்கள்
உங்கள் குழந்தைகள் என்றெல்லாம் புகழ் பாடுகின்றார்கள். நிச்சயம்
நாம் சத்திய யுகத்தில்-திரேதா யுகத்தில் சுகம் நிறைந்தவர்களாக
இருந்தோம். தந்தையை சொர்க்கத்தைப் படைப்பவர் என்று புகழ்பாடு
கின்றோம் அப்படி யென்றால் நாம் சொர்க்கத்தில் இருந்திருப்போம்
அல்லவா! நீங்கள் அனை வரும் சொர்க்கவாசிகளாக இருந்தீர்கள்,
இப்பொழுது நரகவாசிகளாக ஆகிவிட்டீர்கள் என்று பாபா புரிய
வைக்கின்றார். பாரதத்தில் தான் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம்
இருந்தது. பின்பு கிறிஸ்தவ தர்மம் வரும் போது கிறிஸ்தவ
தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள். நீங்கள் தேவி-தேவதா
தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தன்னுடைய தர்மத்தை ஏன் மறந்து
விட்டீர்கள் என்று பாபா கேட்கின்றார். நீங்கள் தான் தேவி- தேவதா
தர்மத்தை சார்ந்தவர்களாக இருந்தீர்கள்.
உங்களுடையது தான் சிரேஷ்டமான தர்மமாகவும், கர்மமாகவும் இருந்தது
என்று பாபா நினைவு படுத்து கின்றார். இப்பொழுது நீங்கள் கீழான,
பாவி, ஏழையாகி விட்டீர்கள், நீங்கள் தேவதைகளுக்குப் பூஜாரியாக
ஆகி விட்டீர்கள், பின்பு தன்னை இந்துக்கள் என்று ஏன் சொல்லிக்
கொள்கின்றீர்கள்? பாரதத்திற்கு என்ன நிலமை ஏற்பட்டு விட்டது.
தேவதை தர்மத்தில் இருந்த நீங்கள் விகாரி ஆனதால் தன்னை தேவதை
என்று சொல்வ தில்லை. இப்பொழுது இந்த பதீத உலகம் முடியும்
தருவாயில் உள்ளது, மகாபாரத யுத்தம் முன்னால் நின்று கொண்டு
இருக்கின்றது என்று பாபா சொல்கின்றார். பகவானுடைய மகாவாக்கியம்
- நான் உங்களுக்கு சத்திய யுகத்திற்காக இராஜயோகம் கற்றுக்
கொடுக்கின்றேன். பகவான் ஒருவர் தான், நாம் அவரின் குழந்தைகள்
சாலிகிராம். நீங்கள் பூஜிக்கத் தகுதியானவர்களாக இருந்தீர்கள்
பின்பு நீங்களே பூஜாரி பக்தர்கள் ஆகிவிட்டீர்கள் என்று பாபா
சொல்கின்றார். இப்பொழுது மீண்டும் பூஜிக்கத் தகுதியானவர்கள்
ஆவதற்காக ஞானம் கேட்கின்றீர்கள். பின்பு துவாபர யுகத்தில்
இருந்து மீண்டும் பூஜிக்கத் தகுதியான நிலையிலிருந்து
பூஜாரிகளாக ஆகிவிடுகின்றீர்கள். நீங்கள் 84 ஜென்மம் முழுமையாக
எடுக்கின்றீர்கள். 84 ஜென்மம் யார் முழுமையாக எடுக் கின்றார்களோ
அவர்களே இப்பொழுது வந்து பிரம்மா குமாரி, பிரம்மா குமார்கள்
ஆகின்றார்கள். பிரம்மா மூலமாக ஆதி சனாதன தர்மம் ஸ்தாபனை
செய்யப்பட்டுள்ளது என்று புகழ் பாடப்பட்டுள்ளது. பிரஜாபிதா
உள்ளார் என்றால், அதிக குழந்தைகளும் இருப்பார்கள் தானே !
அதுவும் அவசியம் இங்குதான் இருப்பார்கள். எத்தனை பிரஜைகள்
உள்ளார்கள். இந்த பிராமணர் கள் தான் மீண்டும் தேவதைகள் ஆக
வேண்டும். பாபா வந்து சூத்திரனிலிருந்து மாற்றி பிராமண தர்மத்தை
ஸ்தாபனை செய்கின்றார். இந்த சங்கமயுகத்தில் தான் ஆதி சனாதன
தேவி-தேவதா தர்ம ஸ்தாபனை ஏற்படுகின்றது. இது தான் கல்யாணகாரி
சங்கமயுகம். இந்த யுகத்தைத் தான் கல்யாணகாரி என்று
சொல்லப்படுகின்றது. இந்த வினாசத்திற்குப் பிறகு தான்
சொர்க்கத்தின் கதவு திறக்கப்படுகின்றது. நீங்கள் இங்கே
சொர்க்கவாசியாக ஆவதற்காக அதாவது விஷ்ணுபுரி செல்வதற்காக
வந்துள்ளீர்கள். குழந்தைகளான உங்களுக்கு இப்பொழுது அழிவற்ற
குருதிசை ஏற்பட்டுள்ளது. 16 கலையை தான் சம்பூர்ணம் என்று
சொல்லப் படுகின்றது. பின்பு இரண்டு கலைகள் குறைந்துவிடுகின்றது.
இதனை சுக்கர திசை என்று சொல்லப்படுகின்றது. சத்தியுகத்தில்
குருதிசை பின்பு திரேதா யுகத்தில் சுக்கரதிசை என்று
சொல்லப்படுகின்றது. பிறகு கீழே இறங்கியே வந்துள்ளீர்கள்,
செவ்வாய் கிரகம், சனி திசை, இராகு திசை இப்படி ஏற்படு கிறது.
பல பிறவிகளாக தலைகீழான திசைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
இப்பொழுது பாபா மூலமாக குருதிசை ஏற்படுகின்றது. இவர் எல்லையற்ற
தந்தை ஞானக்கடல், பதீத-பாவனன் ஆவார். அவர்தான் உங்கள் தந்தையும்
ஆசிரியராகவும், சத்குருவாகவும் கூட இருக்கின்றார். மற்ற
அனைவரும் பொய்யானவர்கள், யாருக்கும் சத்கதி தர முடியாது. இதை
விகாரமான விஷமான உலகம் என்று சொல்லப்படுகின்றது. அது விகாரமற்ற
உலகம் என்று சொல்லப் படுகின்றது. இப்பொழுது இந்த விகார
உலகத்தில் அனைவரும் துக்கம் நிறைந்தவர்களாக உள்ளார்கள். சண்டை,
அடிதடி என்று என்ன-என்னவெல்லாம் நடக்கின்றது, இதைத்தான் இரத்த
ஆறு ஓடும் அநீதிகள் என்று சொல்லப்படுகின்றது. என்ன,என்ன தவறுகள்
செய்கின்றார்கள். ஒரே அணுகுண்டு போட்டால் அடுத்த வினாடியே
அனைவரும் அழிந்து விடுவார்கள். இப்பொழுது அதே சங்கமயுகம்
நடக்கின்றது. தேவதைகளான உங்களுக்காக புதிய உலகம் வேண்டும்.
அதனால் இனிமையிலும், இனிமையான குழந்தைகளே! மன்மனாபவ என்ற
மந்திரத்தில் இருங்கள் என்று பாபா சொல்கின்றார். இதை எந்த அப்பா
சொல்கின்றார்? சிவபாபா. அவர் நிராகாரமானவராக இருக்கின்றார்.
நீங்களும் நிராகானமானவர்கள் தான், ஆனால் நீங்கள் அடுத்தடுத்து
ஜென்மம் எடுக்கின்றீர்கள், நான் வருவதில்லை. இந்த நேரத்தில்
அனைவரும் பதீதர்கள், ஒருவர் கூட பாவனமானவர்கள் கிடையாது. பதீதம்
ஆகவே வேண்டும். சதோ-ரஜோ-தமோ நிலையில் இறங்கித்தான் ஆக வேண்டும்.
இந்த நேரம் முழு மரமும் ஆடும் நிலைக்கு வந்துவிட்டது. உலகம்
முற்றிலும் பழையதாகிவிட்டது. இப்பொழுது மீண்டும் அதனை
புதியதாக்க வேண்டும். பதீத உலகில் எத்தனை மனிதர்கள் பாருங்கள்.
பாவன உலகத்தில் மிகவும் குறைவான பேர் தான் இராஜ்யம்
செய்கின்றார்கள். ஒரே ஒரு தர்மம் தான் இருந்தது. பாரதத்தைத்
தான் சொர்க்கம் என்று சொல்லப்படுகின்றது. பானைக்குள் தான்
சந்திரன், பானைக்குள் தான் சூரியன் என்று பாடப்படுகின்றது.
சத்திய யுகத்தில் 9 லட்சம் பேர் இருப்பார் கள், பின்பு தான்
அதிகமாகின்றார்கள். முதலில் சின்ன பூ செடியாக இருந்தது.
இப்பொழுது முட்கள் நிறைந்த பெரிய காடாகிவிட்டது. டெல்லியில்
மொகலாய தோட்டம் பாருங்கள் எவ்வளவு பெரியதாக உள்ளது. அதைவிட
பெரிய தோட்டம் வேறு எதுவும் இல்லை. காடு கூட எவ்வளவு பெரியதாக
உள்ளது. சத்தியுகத்தில் தோட்டம் கூட மிகவும் சிறியதாக இருக்கும்.
பிறகு வளர-வளர பெரியதாகிவிடுகின்றது. இப்பொழுது முட்கள்
நிறைந்த காடாகிவிட்டது. இராவணன் வந்ததால் முள்ளாகி விட்டார்கள்.
இது முள்ளான காடு. தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு
கொள்கின்றார்கள். எவ்வளவு கோபம் வருகின்றது. குரங்கை விட கீழான
நிலை என்று சொல்லப்படுகின்றது. என்னுடைய கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளே ! உங்கள் மீது இப்பொழுது குருதிசை ஏற்பட்டுள்ளது
என்று பாபா சொல்கின்றார். இப்பொழுது தானம் செய்யுங்கள் கிரஹணம்
நீங்கிவிடும். சம்பூர்ண நிர்விகாரி நீங்கள் இங்கே தான் ஆக
வேண்டும். பின்பு இந்த உடலை விட்டுவிட்டு சிவாலயம் வந்து
விடுவீர்கள், சிவலாயத்தில் மிகுந்த சுகம் இருக்கும், அது தேவி
தேவதைகளின் இராஜ்யம் சத்யுகத்தை சிவலாயம் என்றும்,. கலியுகத்தை
வேஷ்யாலயம் என்று சொல்லப் படுகின்றது. இந்த வைஷ்யாலயத்தை
இராவணன் ஸ்தாபனை செய்தார். பதீத நிலையிலிருந்து பாவன நிலையை
எப்படி அடைவீர்கள் என்று பாபா கேட்கின்றார்? என்ன, திரிவேணி,
அல்லது கங்கையில் குளிப்பதால் பாவனம் ஆகிவிடுவீர்களா? இது
ஜென்ம-ஜென்மமாக செய்து வருகின்றீர்கள். கோடிக்கணக்கான மனிதர்கள்
செய்து வருகின்றார்கள், ஏனென்றால் தன்னை பதீதர்கள் என்று
நினைக்கின்றார்கள். இப்பொழுது பாரஸ்நாத் உங்களை பாரஸ்
புத்தியாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றார்கள், அதனால் அப்படிப்
பட்ட பாரஸ்நாத் பாபாவை நீங்கள் எவ்வளவு அன்பாக நினைக்க வேண்டும்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்-தந்தை
பாப்தாதாவின் அன்பான நினைவுகள் மேலும் காலை வணக்கங்கள்.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே செய்கின்றார்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த முள் நிறைந்த காட்டிலிருந்து மலரான தோட்டத்திற்குச்
செல்வதற்காக விகாரம் என்ற முள்ளை விட வேண்டும். தங்கயுகத்தினர்
ஆகுவதற்காக மிகவும் அன்பாக நினைவு செய்ய வேண்டும்.
2) இந்த கல்யாணகாரி சங்கமயுகத்தில் சூத்திரனிலிருந்து பிராமணன்
ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். திசை (கிரக தோஷம்)
நீங்குவதற்காக விகாரங்களை தானம் செய்ய வேண்டும்.
வரதானம்:
சங்கம யுகத்தில் ஒவ்வொரு செயலையும் ஒர் கலையினுடைய ரூபத்தில்
செய்யக்கூடிய, 16 கலைகளும் நிறைந்தவர் ஆகுக.
சங்கம யுகம் என்பது குறிப்பாக செயல் வடிவிலான கலையைக்
காட்டுவதற்கான யுகமாகும். யாருடைய ஒவ்வொரு செயலும் கலை
நயத்துடன் இருக்கின்றதோ, அவர்களுடைய ஒவ்வொரு செயலும் மற்றும்
குணங்களும் மகிமைப்படுத்தப்படுகின்றன. 16 கலைகளும் நிறைந்தவர்
என்றால், அவர்களுடைய ஒவ்வொரு நடத்தையும் ஒர் முழுமையான கலை
வடிவில் தென்பட வேண்டும்-இதுவே முழுமையான நிலையின் அடையாளமாகும்.
சாகார தந்தையின் (பிரம்மா பாபாவின்) பேச்சு, நடை... என
அனைத்திலும் தனித்துவத்தைக் கண்டீர்கள் அல்லவா, அதுதான் கலை
எனப்படும். அவரிடம் எழுந்து அமரும் கலை, பார்க்கும் கலை,
நடக்கும் கலை என அனைத்தும் இருந்தன. எல்லாவற்றிலும் ஒரு
பற்றற்ற நிலையும் சிறப்பும் இருந்தது. எனவே, அவரைப் பின்பற்றி
நீங்களும் 16 கலைகளும் நிறைந்தவராக ஆகுங்கள்.
சுலோகன்:
யார் ஒரு விஷயத்தை உடனடியாகப் புரிந்துகொண்டு (பகுத்தறிந்து)
சரியான முடிவை எடுக்கிறாரோ, அவரே சக்திவாய்ந்தவர் ஆவார்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
குழந்தைகளாகிய உங்களுடைய யோகம் எப்போது ஜுவாலா சொரூபமாக, சக்தி
வாய்ந்ததாக மாறுகிறதோ, அப்போது தூய்மை என்ற நெருப்பு ஒரு
நொடியில் உலகத்தின் அசுத்தங்களை (குப்பைகளை) சாம்பலாக்கிவிடும்.
தூய்மையின் இந்த சக்தி மிகவும் மகா சக்தியாகும். இறுதியில்
நீங்கள் முழுமையாகத் தூய்மையடையும் போது, உங்களுடைய உயர்ந்த
சங்கல்பத்தின் தீவிரத்தீயினால் (அன்பின் நெருப்பினால்) இந்த
அசுத்தங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும்.