02.08.26 காலை முரளி
ஓம் சாந்தி 17.02.2011 பாப்தாதா,
மதுபன்
மனசா சேவை மூலம் ஆத்மாக்களுக்கு ஒரு துளி கொடுப்பதற்கான சேவை
செய்து கொண்டு, நீண்ட காலமாகத் தீவிர புருஷார்த்தம் செய்து
எவர்-ரெடியாக இருப்பீர்களானால், மாலையின் மணி ஆகி விடுவீர்கள்
இன்று அன்புக்கடல் தம்முடைய அன்புக் குழந்தைகளைச்
சந்திப்பதற்காக வந்துள்ளார். குழந்தைகள் நினைத்தார்கள் -
என்னுடைய பாபா, வந்து விடுங்கள் என்றதும் பாபா சொல்கிறார் -
என்னுடைய அன்பான குழந்தாய்! அன்பில் அப்படி ஒரு கவர்ச்சி உள்ளது
- ஒவ்வொரு குழந்தையும் தந்தையைத் தன்னுடையவராக ஆக்கிக் கொண்டார்.
மற்றும் பாபா ஒவ்வொரு குழந்தையையும் என்னுடைய குழந்தாய் எனச்
சொல்லித் தனக்குள் நிறைத்துக் கொண்டார். அற்புதம் என்னவென்றால்,
என்னுடைய பாபா என்று குழந்தைகள் சொன்னார்கள் என்றால், என்னுடைய
என்ற சொல்லில் அவ்வளவு அன்பு நிறைந்துள்ளது - பாபாவும் சொன்னார்
- என்னுடைய குழந்தைகளே! அன்பு எதிலிருந்து எதுவாக ஆக்கி
விடுகின்றது! ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் இன்று அன்பின்
அலை வீசிக் கொண்டுள்ளது. இதைப் பார்த்து பாப்தாதா
மகிழ்ச்சியடைந்து கொண்டி ருக்கிறார். அன்பு தான் மனதைத்
தனதாக்கக் கூடிய சாதனமாகும். ஆக, ஒவ்வொரு குழந்தைக்குள்ளும்
இன்று அன்பின் அலை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து
பாப்தாதா குஷியடைந்து கொண்டிருக்கிறார்.
இப்போது ஐந்து நிமிடத்திற்கு ஒரு டிரில் பாப்தாதா அனைவரையும்
செய்ய வைக் கின்றார். தனது மனதின் சக்தி மூலம் உலகத்தில் உள்ள
உங்கள் பக்தர்கள் மற்றும் துக்கம் அசாந்தியில் உங்களை
நினைத்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை இங்கே அமர்ந்தவாறே இமர்ஜ்
செய்யுங்கள். சப்தம் கேட்க வருகிறதா? காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள் அத்தகைய ஆத்மாக்களுக்கு உங்கள் மனதின் சக்தி
மூலம் சுகம் சாந்தியின் கிரணங்களை அனுப்புங்கள். இந்த மனதின்
சேவையை நாள் முழுவதும் அடிக்கடி செய்து கொண்டே இருங்கள்.
ஏனென்றால் பாபாவுடன் கூடவே குழந்தைகள் நீங்களும் உலக சேவகர்கள்
ஆவீர்கள். நாள் முழுவதும் எப்படி வாய்மொழி மூலம் சேவைக்கு
நிமித்தமாகிறீர்களோ, அது போல் இடையிடையில் மனசா சேவையின்
அப்பியாசமும் செய்து கொண்டே செல்லுங்கள். இதில் உங்களுக்கே கூட
நன்மை உள்ளது. ஏனென்றால் உங்கள் மனம் சதா சேவையில் பிஸியாக
இருக்குமானால், உங்களிடம் இடையிடையில் மாயா செய்ய வைக்கிற
தவறான, வீணான சங்கல்பங் களில் இருந்து பாதுகாக்கப் படுவீர்கள்.
இதற்காகக் கடின உழைப்பு செய்ய வேண்டிய திருக்காது. இப்போது
பாப்தாதா கேட்கிறார் - எப்படி இருக்கிறீர்கள் என்றால், என்ன
பதில் சொல்கிறீர்கள்? புருஷார்த்தம் நடைபெறுகிறது, ஆனால் சில
நேரம். எப்போதும் புருஷார்த்தம் நடைபெறுவதில்லை. ஆக, பாப்தாதா
இப்போது குழந்தைகள் அனைவரின் இந்த ரிக்கார்டைப் பார்க்க
விரும்புகிறார் - இந்த சில நேரம் என்ற வார்த்தையை முடித்துவிட
வேண்டும் என விரும்புகிறார். இது முடியுமா? சில நேரம் என்பது
முடிந்து போகுமா? சமயத்தில் தயாராகி விடுவீர்களா? நடந்து
கொண்டிருக் கிறது, நடந்தே தீரும் இதற்கு பதிலாக இப்போதே
எவர்-ரெடி ஆக முடியுமா? ஏன்? எவர்-ரெடியாக இருப்பதற்கான
அப்பியாசம், மாயாவை வென்றவர், மனதை வென்று உலகை வென்றவர் என்ற
சம்ஸ்காரத்தையும் நீண்ட காலமாக உருவாக்கு வீர்களானால், அப்போது
கடைசி நேரத்திலும் இந்த நீண்ட கால அப்பியாசம் வெற்றியாளராக்கி
உங்களை விசேஷ மாலையின் மணியாக ஆக்கி விடும். பாஸ் வித் ஆனர் ஆகி
விடுவீர்கள். வெறும் பாஸ் இல்லை, பாஸ் வித் ஆனர். ஆக,
சொல்லுங்கள், இந்த தைரியம் உள்ளது இல்லையா? பாஸ் வித் ஆனரோ
ஆகத்தான் வேண்டும் இல்லையா? யார் துவாபரயுகத்திலிருந்து இது வரை
பூஜைக்குரியவராக ஆகிறார்களோ, அதாவது மாலையின் மணியாக ஆகிறார்களோ,
அப்போது தன்னை மாலையின் மணி ஆக்கு வதற்கான சுத்த சங்கல்பம்
உள்ளது இல்லையா?
பாப்தாதாவும் நாள்தோறும் அமிர்தவேளையில் தம்முடைய மாலையின்
மணிகளைப் பார்த்து விசேஷ சந்திப்பைக் கொண்டாடுகிறார். ஆக,
நீங்கள் அனைவரும் தங்களை மாலையின் மணிகளாகப் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். 16 ஆயிரத்தின் இரண்டாவது மாலையும் உள்ளது,
ஆனால் பிறகும் அது இரண்டாவது மாலை ஆகி விட்டது. மகிமைக்கும்
பூஜைக்கும் உரிய விசேஷ மாலை தான் முதல் மாலை ஆகும். ஆக, இன்று
பாப்தாதா அந்த மணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏனென்றால்
பிரம்மா பாபாவுடன் கூட விசேஷ ராஜ்ய அதிகாரி துணையாக அவர்களே
ஆகிறார்கள். ஆக, இன்று பிரம்மா பாபா தம்முடைய இப்போதைய தீவிர
புருஷார்த்தி மற்றும் வருங்கால ராஜ்ய அதிகாரி, சிம்மாசனத்திலோ
இருவர் அமர்வார்கள். ஆனால் ராஜ்யத்தின் துணையாக இருப்பவர்கள்
அவர்களின் முதல் மாலை. எனவே தன்னைத் தான் சோதனை செய்து
பார்த்தீர்களா? பாப்தாதாவுடனோ செல்வீர்கள். ஏனென்றால் இப்போது
உங்கள் அனைவர்க்கும் திரும்பும் பயணம் (ரிட்டர்ன் ஜர்னி) சென்று
தான் ஆக வேண்டும் எனும் போது பாபாவுடன் கூடவே செல்ல வேண்டும்.
தனியாகச் செல்லக் கூடாது. ஆகவே கூடவே செல்லக்கூடிய சமீப
மணிகளாக யார் இருப்பார்கள்? நீண்ட காலம் தீவிர
புருஷார்த்திகளாக இருப்பவர்கள். புருஷார்த்திகள் அல்லர்.
எப்போதாவது என்று இருப்பவர்களும் இல்லை. நீண்ட காலம் பாபாவுக்கு
சமமாக இருப்பவர்கள் தாம் ராஜ்ய அதிகாரி ஆவார்கள். எனவே என்ன
நினைக்கிறீர்கள்? தீவிர புருஷார்த்தம் உள்ளதா? தீவிர
புருஷார்த்தத்தின் லைனில் நான் இருக்கிறேன் என நினைப்பவர்கள கை
உயர்த்துங்கள். தீவிர புருஷார்த்திகள் நன்றாகக் கை உயர்த்துங்
கள். சிறிதாகக் கை உயர்த்துகிறார்கள். நல்லது. அநேகர் கை
உயர்த்திக் கொண்டிருக் கிறார்கள். மீண்டும் உயரமாகக் கை
உயர்த்துங்கள். சிறிதாக வேண்டாம்.
பாப்தாதாவோ நாள்தோறும் குழந்தைகளின் சார்ட்டைப் பார்க்கிறார்.
பெரும்பான்மை யோர் தீவிர புருஷார்த்தி களாகவும் உள்ளனர். ஆனால்
சில நேரம் என்ற சொல்லை யும் கூடவே சொல்கின்றனர். ஆனால் பாபா ஏன்
சொல்லிக் கொண்டிருக்கிறார்? அட்டென்ஷன் ப்ளீஸ், சூட்சும
சங்கல்பத்திலும் கூட குழப்பம் இருக்கக் கூடாது. ஆடாத, அசையாத,
சுத்த சங்கல்பதாரியாக நீண்ட காலத்துக்கு ஆகியே தீர வேண்டும்.
குழந்தைகள் பலர் மிக இனிமையிலும் இனிமையான ஆன்மிக உரையாடல் செய்
கிறார்கள். சொல்கிறார்கள், பாபா நாங்கள் தயாராகி விடுவோம்.
ஏனென்றால் சமயம் எவ்வளவு அருகில் வருகிறதோ, நிலைமை குழப்பத்தில்
வருகிறதோ, அப்போது வைராக்கியமோ, தானாக வந்து விடும். ஆனால்
உங்கள் ஆசிரியர் யார்? சமயமா, பாபாவா? சமயமோ உங்கள் படைப்பு.
அதனால் பாபா இப்போது சைகை காட்டுகிறார் - நீண்ட காலத்தின்
தீவிர புருஷார்த்தம் கடைசியில் பாஸ் வித் ஆனர் ஆக்கி விடும்.
அனைவருமே பாஸ் ஆவார்கள். ஆனால் பாஸ் வித் ஆனர் ஆகிறவர்கள்
நீண்ட காலம் இடைவிடாத தீவிர புருஷார்த்தம் செய்பவர்களாக அவசியம்
இருக்க வேண்டும். எனவே இன்றைய தேதியைக் குறித்து வையுங்கள்.
இப்போதும் சில நேரம், சம்திங், ஆகி விடும், செய்து விடுவோம்
இந்தச் சொற்கள் இனிமேலும் தொடரக் கூடாது. உங்கள் அன்போ
எப்போதுமே உள்ளது. கடைசி மணியின் மீதும் கூட பாபாவுக்கு அன்பு
உள்ளது. ஏன்? மனதார என்னுடைய பாபா என்றோ சொன்னார்கள். இன்றைய
பெரிய-பெரிய ஆத்மாக்கள் என்னுடைய பாபா எனச் சொல்லவில்லை. ஆனால்
அவர் என்னுடைய பாபா என்பதையோ ஏற்றுக் கொள்கிறார். அதனால்
தந்தைக்கு அவர் மீதும் அன்பு உள்ளது. குழந்தைகளிடமோ எப்போதும்
பாபாவுக்கு அன்பு உள்ளது. கடைசி வரை இருக்கும். கடைசியில்
உள்ளவர் வரை அன்பு உள்ளது. அன்பு தான் உங்களை பாபாவுடையவராக
ஆக்கியது. பாப்தாதா இதையும் சொல்லியிருக்கிறார் - அன்பு
பெரும்பாலான குழந்தைகளுக்கு உள்ளது. மற்றும் இருக்கவும்
செய்யும். ஆனால் அன்பு மட்டும் இல்லை, சக்தியும் வேண்டும்.
தீவிர புருஷார்த்தமும் இருக்க வேண்டும்.
பாப்தாதாவுக்கோ குழந்தைகள் மீது நம்பிக்கை உள்ளது இல்லையா? எனவே
இப்போதிருந்தே அப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் பல கோடி-கோடி
மடங்கு வாழ்த்துகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆஹா
குழந்தைகளே ஆஹா! தைரிய சாலிகள்! உங்கள் தைரியம் மற்றும்
பாபாவின் உதவியோ இருக்கவே செய்கிறது. இப்போது ஒரு விஷயம் செய்ய
வேண்டும். தன் மனதை பிஸியாக வைத்திருப்பதற்கு எப்படி முதலில்
பாபா சொன்னார் - ஒரு விநாடியில் நிறுத்த வேண்டும், நான்
புள்ளியாக இருக்கிறேன்.. புள்ளி வைக்க வேண்டும் மற்றும்
அனைவரையும் புள்ளி ரூபத்தில் பார்க்க வேண்டும். பார்ப்பதே
புள்ளியைத் தான் என்றால், வேறு எந்த ஒரு சங்கல்பமும் நடைபெறாது.
மனசா சேவைக்கான கவனம் வைக்க வேண்டும். இவ்வளவு
துக்கத்திலிருக்கும் ஆத்மாக்கள் கூக்குரலிட்டுக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கிரணங்கள் கொடுக்கும்
சேவையில் அதிகப்படியாக மனதை ஈடுபடுத்த வேண்டும்.மனசா சேவை
மிகவும் சிரேஷ்டமான சேவையாகும். துக்கத்தில் இருப்பவர்
களுக்கும் நன்மை, மற்றும் உங்களுக்கும் கூட நன்மை. இரட்டை நன்மை
உள்ளது. எப்படி வாய்மொழி மூலம் சேவை செய்கிறீர்கள் மற்றும் சேவை
அதிகரித்துக் கொண்டும் செல்கிறது. மனதார செய்கிறீர்கள்,
எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது சென்டர்களும்
அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வாய்மொழி சேவை
பெரும்பாலோருடையது சரியாக உள்ளது. அனைவருக்கும் இல்லை, பெரும்பா
லோருக்கு. அது போல் இப்போது மனதால் விசேஷ ஆத்மாக்களுக்குத்
துளியைக் கொடுப்பதற்கான சேவையும் செய்து கொண்டே இருங்கள். மனதை
ஃப்ரீயாக விடாதீர்கள். ஏதாவதொரு சேவையில், மனதின் மூலம்
சக்திகள் கொடுப்பதற்கான சேவை, வாயினால் வார்த்தைகளின் சேவை,
கர்மத்தில் குணங்களின் மூலம் சேவை, சம்பந்தம்-தொடர்பில் குஷி
கொடுப்பதற்கான சேவை, இந்த விதவிதமான சேவைகளில் மனதை பிஸியாக
வையுங்கள். ஏனென்றால் முழு உலகிலும் மிகப்பெரிய பணக்கார
ஆத்மாக்கள் யார்? நீங்கள் தாம் இல்லையா? எவ்வளவு கஜானாக்கள்
கிடைத்துள்ளன! ஆக, ஒவ்வொரு கஜானா மூலமாகவும் சேவை செய்யுங்கள்.
கஜானாவை எவ்வளவு சேவையில் ஈடுபடுத்துவீர்களோ, அவ்வளவு
கஜானாக்கள் அதிகரித்துக் கொண்டே போகும். எனவே இப்போது எப்படி
சுயத்தின் சேவை மீது கவனம் கொடுக்கிறீர்களோ, அது போல்
துக்கத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு, தங்களின் பக்தர்களுக்கு
மனதின் மூலம் கிரணங்களைக் கொடுப்பதற்கான சேவை மீதும் கவனம்
கொடுத்து, நாள் முழுவதும் செய்யுங்கள். அதிகமாகக்
கூக்குரலிடுகின்றனர். உங்களுக்கு அது கேட்க வில்லையா?
பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவதொரு துக்கத்திற்கான
காரணம் உள்ளது. அத்தகைய துக்கத்தில் இருப்பவர்களுக்கு சுகம்
கொடுப்பவர் யார்? சொல்லுங்கள், யார்? அது நீங்கள் தாம். ஆக,
இந்த மனசா சேவையை நாள் முழுவதும் சோதித்துப் பாருங்கள் -
எவ்வளவு நேரம் செய்தோம்? எப்படி சுயத்திற்காகக் கொடுக்
கிறீர்களோ, அது போல் மனசா சேவைக்காக எவ்வளவு நேரம் கொடுத்தோம்?
இரக்க மனமுள்ளவர் தாமே நீங்கள்? அப்போது துக்கத்தில்
இருப்பவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். உங்கள் பாடலும் உள்ளது
இல்லையா - ஓ! தாய்-தந்தையே! , துக்கத்தில் இருப்பவர்கள் மீது
கருணை காட்டுங்கள். பாப்தாதா அதிக சப்தங்களைக் கேட்க
வேண்டியதாக உள்ளது. உங்களுக்குக் குறைவாகக் கேட்கிறது. ஆனால்
இப்போது கேளுங்கள், எங்கே போவார்கள் அவர்கள்? அவர்கள்
உங்களுடைய சகோதர-சகோதரி கள் தாம். ஆக, தனக்கும் நன்மை
செய்யுங்கள். மனதை பிஸியாக வைத்திருங்கள் மற்றும் துக்கத்தில்
இருப்பவர்களின் துக்கத்தைப் போக்குங்கள். கதறுகிறார்கள், மனம்
கதறுகிறது. பாப்தாதாவோ கேட்கிறார். அப்போது குழந்தைகளை நினைவு
செய்கிறார் --- ஓ என் செல்லமான குழந்தைகளே, காணாமல் போய்த்
தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, இப்போது இரக்க மன ரூபத்தை
தாரணை செய்யுங்கள். உங்கள் பிராமணர்களிலும் கூட ஒருவர்
மற்றவரின் சகயோகி ஆகுங்கள். எப்படிப்பட்ட சம்ஸ்காரமாக
இருந்தாலும் சரி, உங்கள் வேலை என்ன? சம்ஸ்காரங்களோடு மோதுவதா,
அல்லது அவர்களையும் சம்ஸ்காரங்களின் மோதலில் இருந்து விடுவிப்
பதா? உங்களுக்கும் டைட்டில் உள்ளது இல்லையா, துக்கத்தைப் போக்கி
சுகம் கொடுப் பவர் என்று? பாபாவின் துணைவர்கள் இல்லையா?
பாபாவின் துணைவர்கள் என்ன சங்கல்பம் செய்திருக்கிறீர்கள்? இந்த
உலகத்தை துக்கம் அசாந்தியிலிருந்து மாற்றி, சுகம் சாந்தியை
ஸ்தாபனை செய்தே ஆக வேண்டும். செய்யத் தான் வேண்டும் இல்லையா?
கை உயர்த்துங்கள். செய்ய வேண்டுமா? அல்லது வெறுமனே பார்க்க
வேண்டுமா? ஆகிக் கொண்டிருக்கிறது, ஆனால் இப்போது மாற வேண்டும்.
பிராமண ஆத்மாவாக இருந்தாலும் சரி, சும்மா பார்த்துக் கொண்டு
இருந்து விடாதீர்கள். இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்,
ஆனால் அவர்களையும் கூட வாய்மொழி மற்றும் மனதின் சங்கல்பத்தின்
மூலம் மாற்றுங்கள், செய்யத் தான் வேண்டும். பாப்தாதா கேட்டுக்
கொண்டு இருக்கிறார். பாப்தாதா வரை செய்தியைக் கோண்டு போய்ச்
சேர்த்தாயிற்று. எப்போது செய்தியைக் கொடுத்தாயிற்றோ, நீங்கள்
பாப்தாதாவின் வழி காட்டுதல் படி நடந்து செல்லுங்கள். பொறுப்பு
பாப்தாதாவுடையது மற்றும் அவருடைய துணையாக இருக்கும் இனிய
குழந்தைகள், நிமித்தமாகியிருக்கும் குழந்தைகள். ஆக, சதா தனது
மனதை வீண் சங்கல்பங்களுக்கு பதிலாக இப்போது துக்கத்தில்
இருக்கும் ஆத்மாக்களுக்கு, பிராமணர்களாக இருந்தாலும், யாராக
இருந்தாலும், தொந்தரவுக்கு உள்ளாகி இருக்கும் ஆத்மாக்களுக்கு
சகயோகம் கொடுங்கள். சகயோகி ஆகுங்கள். நல்லது.
புதுப்புதுக் குழந்தைகள், யார் முதல் தடவை வந்திருக்கிறார்களோ,
அவர்கள் ஒரு விநாடியில் 10 நிமிடத்தின் வேலைகளைச் செய்ய
வேண்டும். சமயத்தை ஒரு சிறிதும் வீணாக்கக் கூடாது. கவனம்
கொடுக்க வேண்டும். தனது புருஷார்த்தத்தைத் தீவிர மாக்கி எவ்வளவு
முன்னேற விரும்புகிறீர்களோ, முன்னேற முடியும். இது உங்கள்
அனைவர்க்கும், பிராமணர்களின் தரப்பிலிருந்து, பாபாவின்
தரப்பிலிருந்து சுப பாவனை, சுப விருப்பம். நல்லது. (மதுபன்
நிவாசிகள் அனைவரும் எழுந்திருங்கள்)
மதுபன் நிவாசிகள் இல்லை என்றால் உங்கள் விருந்தாளிகளை யார்
கவனிப்பார்கள்? ஓய்வாக வருகிறீர்கள், உண்ணுகிறீர்கள்,
அருந்துகிறீர்கள், புத்துணர்ச்சி பெறுகிறீர்கள். எனவே மதுபன்
நிவாசிகளுக்காகக் கை தட்டுங்கள். பாப்தாதாவுக்குத் தெரியும்,
இடம் குறைவாக இருப்பதால் மதுபன் நிவாசிகள் கொஞ்சம் தூரத்தில்
அமர்ந்து கேட்க வேண்டி உள்ளது. இதுவும் சேவை தான்.
மற்றவர்களுக்கு சுகம் கொடுப்பது, சுகம் தரும் வள்ளல் ஆகி
விட்டீர்கள் இல்லையா? ஆக, மதுபன் நிவாசிகளின் வேலை சுகம்
கொடுப்பது மற்றும் சுகம் பெறுவது. ஏனென்றால் வருகிறவர் களின்
அனுபவங்களில் இருந்து நீங்கள் அனுபவம் சொல்கிறீர்கள். அந்த
அனுபவத்தினால் ஒருவர் மற்றவர்க்கு நன்மை ஆகி விடுகிறது. அநேக
நன்மைகள் ஏற்படுகின்றன. ஆனால் நேரம் குறைவாக இருப்பதால்
குறைவாகச் சொல்கிறோம். ஆனால் மதுபன் நிவாசி களின் டைட்டில்
என்ன? சுகம் கொடுப்பது, சுகம் பெறுவது. சுகம் தரும் வள்ளலின்
குழந்தைகள் தந்தையைப் பின்பற்றுபவர்கள். நல்லது.
இச்சமயம் வந்திருப்பவர்களில் யார் ரெகுலராக முரளி கேட்கிறவர்கள்,
முரளி கேட்காதவர்கள் யாராவது இருந்தால் கை உயர்த்துங்கள்.
ஒருவரும் இல்லை. நல்லது. யார் படிப்பதோ கேட்கதோ இல்லை, அவர்கள்
எழுந்திருங்கள். கொஞ்சம் பேர். பரவா யில்லை, இனி நேரம்
கிடைக்கும் போது பாபாவின் மகாவாக்கியங்களை அவசியம் கேட்க
வேண்டும் அல்லது படிக்க வேண்டும். பரந்தாமத்திலிருந்து பாபா
வருகிறார். சூட்சுமவதனத்தில் இருந்து பிரம்மா பாபா வருகிறார்.
வந்து மகாவாக்கியங்களைச் சொல்கிறார்கள். அதனால் முரளியை ஒரு
போதும் ஒரு நாள் கூட தவறவிடக் கூடாது. தவற விடுவீர்களானால்
பாப்தாதாவின் மனசிம்மாசனத்தில் இருந்து விடு பட்டு விடுவீர்கள்.
எனவே யாரெல்லாம் முரளியைத் தவற விடுகிறார்களோ, அவர்கள் புரிந்து
கொள்ள வேண்டும் - நாம் மூன்று சிம்மாசனங்களின் மாலிக் இல்லை,
இரண்டு சிம்மாசனங்களின் மாலிக் கூட சக்திக்கேற்றவாறு தான் ஆவோம்.
எனவே முரளி, முரளி, முரளி. ஏனென்றால் முரளியில் தினசரி
வழிகாட்டுதல்கள் உள்ளன. எனவே அன்றன்றைக்கான வழிகாட்டுதல்களைப்
பெற வேண்டும் இல்லையா? எனவே யாரெல்லாம் தவற விடுகிறார்களோ,
காரணத்துடனோ, காரணம் இல்லாமலோ - அவர்கள் எப்படி முரளி கேட்பது
என்பதற்கான தங்களின் புரோகிராமைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஏதேனுமொரு மீட்டெடுப்பைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
தற்சமயம் விஞ்ஞானத்தின் சாதனங்கள் உங்களுக்காக வெளிவந்துள்ளன.
பிரம்மா பாபாவுக்குள் பிரவேசமாவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்
இந்த விஞ்ஞான சாதனம் வெளிவந்துள்ளது. உங்களுக்கும் அது
பயனுள்ளதாக இருக்கும். எனவே அதைப் பயன் படுத்துங்கள். அதன்
நன்மையை எடுத்துக் கொள்ளுங்கள். நல்லது. முன்னால்
அமர்ந்திருக்கிற அல்லது எங்காவது அமர்ந்து கேட்டுக்
கொண்டிருக்கும் குழந்தை களுக்கு பாப்தாதாவின் இதயப்பூர்வமான
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
சேவையின் டர்ன் - உ.பி. (உத்திர பிரதேசம்) பனாரஸ் : உ.பி. மீது
பிரம்மா பாபாவுக்கு, ஜெகத் அம்பாவுக்கு மிகுந்த அன்பு
இருந்துள்ளது. எவ்வளவு பிரம்மா பாபா உ.பி.க்கு வந்திருக்கிறாரோ,
அவ்வளவு பாம்பேக்கும் வந்திருக்கிறார். ஆனால் உ.பி.க்கும்
வந்திருக்கிறார். ஆக, எந்த இடத்தில் பிரம்மா பாபாவின் கால்கள்
பதிந்துள்ளனவோ, அந்த இடம் எவ்வளவு பாக்கியவான்! லக்னோ, கான்பூர்
இரண்டும் இந்த பாக்கியத்தின் அதிகாரி ஆகியுள்ளன. பாம்பேயும்
ஆகியுள்ளது. ஆனால் இப்போது உ.பி.யின் டர்ன். நேரடியாக மம்மா
மற்றும் பாபாவின் போதனைகளின் துளி உ.பி. மீது விழுந்துள்ளது.
இப்போது உ.பி. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்? வாய்மொழி மூலம்
திருவிழா வில் (மேளா) சேவையோ செய்கிறீர்கள். ஆனால் இப்போதைய
சமயத்தின் அனுசாரம் பாப்தாதா முன்பே என்ன சொல்லியே வந்துள்ளாரோ,
அதாவது வாரிசு மற்றும் புகழ் பெற்ற மைக், புகழ் பெற்ற என்பதன்
அர்த்தம் இது தான் - அவர்கள் சொல்வதன் பிரபாவம் கேட்பவர்கள்
மீது பதிய வேண்டும். அத்தகைய மைக் தயார் செய்யுங்கள். அத்தகைய
வாரிசுகளின் குரூப் ஒவ்வொரு சென்டரிலும் இருக்க வேண்டும்.
எவ்வளவு சென்டர்கள் உ.பி.யில் உள்ளன? நிறைய உள்ளன இல்லையா? ஆக,
இத்தனை வாரிசுகளை உருவாக்க வேண்டும். கணக்குப் பார்க்க வேண்டும்
- எத்தனை சென்டர் கள் உள்ளன மற்றும் எத்தனை வாரிசுகள்
உருவாகியிருக்கிறார்கள்? மேலும் எவ்வளவு உருவாக வேண்டுமோ,
அவ்வளவு உருவாகியிருக்கிறார்களா அல்லது உருவாக்க வேண்டுமா?
உருவாக்க வேண்டும் என்றால் சமயத்தின் மீது எந்த ஒரு
நம்பிக்கையும் கிடையாது. சீக்கிரம்-சீக்கிரமாக வாரிசு மற்றும்
மைக்கை உருவாக்குங்கள். அவர்களின் சப்தத்தின் மூலம் அநேக
ஆத்மாக்களின் பாக்கியத்தின் ரேகை திறந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நீங்களோ, அதிக சேவை செய்திருக்கிறீர்கள். யார் பழைய
வர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அதிக சேவை செய்திருக்கிறார்கள்.
இப்போது சேவை செய்ய வையுங்கள். செய்பவர்களைத் தயார் செய்யுங்கள்.
செய்ய முடியும் தானே? டீச்சர்கள் கை உயர்த்துங்கள். நல்லது.
டீச்சர்களும் அதிகம் உள்ளனர். ஆக இவ்வளவு தயார் செய்யுங்கள்.
ஒவ்வாரு சென்டரும், சிறியதோ பெரியதோ சென்டர் களின் லிஸ்ட்டில்
இருப்பவர்கள் தங்கள் நிரூபணத்தைக் காட்ட வேண்டும். ஏனென்றால்
சமயத்தின் மீது எந்த நம்பிக்கையும் கிடையாது. எந்த நேரமும் எது
வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே பாப்தாதா எந்த-எந்த
ஜோனிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்களோ, வராதவர்களாயினும் சரி,
அனைத்து ஜோன்களுக்கும் இதையே சொல்கிறோம் - இப்போது முன்னேறிச்
செல்லுங்கள். வகுப்புகளோ நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இப்போது
நிமித்தமாகிறவர்களை உருவாக்குங்கள் மற்றும் உருவாக்குவதற்காக
பாப்தாதா பார்த்துள்ளார் - ஒவ்வொரு ஜோனிலும் அத்தகைய ஆத்மாக்கள்
உள்ளனர் - நிமித்தமாக ஆக முடியும். ஆக, உ.பி.யைச் சேர்ந்தவர்கள்,
ஒன்று, பக்தர்களுக்கு நன்மை செய்யுங்கள். பக்தர் எனச் சொல்லிக்
கொள்பவர்கள் கொஞ்சமாக இருக்கலாம். ஆனால் பக்தர்களும்
இருப்பார்கள். அவர்களுக்கு பக்தியின் பலன் கிடைக்குமாறு
செய்யுங்கள். அதிகமாக முயற்சி செய்கிறார்கள். பாப்தாதா
பார்த்துள்ளார் - ஒவ்வொருவரும் தமது புருஷார்த்தத்தில்
முன்னேறிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இப்போது இன்னும்
முன்னேறுவதற்கான இடைவெளி நேரம் கொஞ்சம் உள்ளது. செய்து
கொண்டிருக் கிறீர்கள் - செய்யவே இல்லை என்று அந்த மாதிரியும்
இல்லை. செய்து கொண்டும் இருக்கிறீர்கள். ஆனால் வேகத்தை இன்னும்
கொஞ்சம் அதிகப் படுத்துங்கள். நல்லவர்கள் மற்றும் நல்ல சேவை
செய்கிறீர்கள். தாதிகள் அனைவரும் கூட உங்களுக்கு வாழ்த்துகள்
சொல்கிறார்கள். பாண்டவர்களும் எவ்வளவு பேர் வருகிறார் கள்!
பாண்டவர்களும் குறைந்தவர்கள் இல்லை. அந்த மாதிரி அநேக சேவைகள்
உள்ளன - அவற்றைப் பாண்டவர்கள் மட்டுமே செய்ய இயலும். எனவே
பாண்டவர் களுக்கும் கூட பாப்தாதா மற்றும் மதுபன் நிவாசிகள்
அனைவர்க்கும் வாழ்த்துகள் சொல்கிறார். நல்லது.
ஆசீர்வாதம்:
புத்தி என்ற காலை மரியாதாக்களின் கோட்டுக்குள்
வைத்திருக்கக்கூடிய அனைத்துப் பிராப்திகளும் நிரம்பியவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் புத்தி என்ற காலை ஒரு சிறிதும் மரியாதாவின்
கோட்டுக்கு வெளியே வைப்பதில்லையோ, அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும்
அன்பானவர் களாகவும் ஆகி விடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு போதும்
எந்த ஒரு விக்னமோ, புயலோ, குழப்பமோ, சலிப்போ வர முடியாது.
வருகிறது என்றால் புரிந்து கொள்ள வேண்டும் - நிச்சயமாக புத்தி
என்ற காலை மரியாதாவின் கோட்டுக்கு வெளியே வைத்து விட்டீர்கள்.
கோட்டுக்கு வெளியே கால் வைப்பது என்றால் பிச்சைக்காரர் ஆவதாகும்.
எனவே ஒரு போதும் பிச்சைக்காரராக, அதாவது யாசிப்பவராக ஆகாமல்,
சர்வ பிராப்திகளும் நிரம்பிய சக்திசாலி ஆகுங்கள்.
சுலோகன்:
யார் எப்போதும் விலகியும், பாபாவிடம் அன்பாகவும் இருப்பார்களோ
அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
அவ்யக்த இஷாரா : தூய்மையற்ற விதையைக் கூட முடித்துவிட்டு
சம்பூர்ண தூய்மை (பவித்ரம்) ஆகுங்கள்.
உறுதித்தன்மை (திடதா) என்பது வெற்றிக்கான சாவியாகும். வெற்றி
என்பது குழந்தைகளாகிய உங்களது பிறப்புரிமை ஆகும். எனவே
உறுதித்தன்மையைப் பயன்படுத்துங்கள். கவனக்குறைவாக ஆகாதீர்கள்.
ஆகி விடும், செய்து விடலாம் என்று யோசிக்காதீர்கள். திட
சங்கல்பத்தின் மூலம் மனதின் வீணான சங்கல்பங்களை முடித்து விட்டு
வெற்றியாளர் ஆகுங்கள்.