02-10-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இராவணின் வழியில்
நடந்து எந்த பாவக் காரியமும் செய்யக் கூடாது, பதீதமானவர்களை
பாவனமாக்கும் வழி கூறுங்கள்.
கேள்வி:
நல்ல புத்திசாலி குழந்தைகள் எந்த
முயற்சி செய்தாலும் ஸ்ரீமத் மீது மட்டுமே அவசியம் கவனம்
செலுத்துவார்கள்?
பதில்:
புத்திசாலி குழந்தைகள் உயர்ந்த
பதவி அடைவதற்காக நிரந்தரமாக நினைவில் இருப்பதற்கான முயற்சி
செய்தாலும் நான் நிமித்தமாக ஆகி பல ஆத்மாக்களுக்கு நன்மை செய்ய
வேண்டும் என்ற ஸ்ரீமத் மீது சதா கவனம் செலுத்துவார்கள். யார்
பலருக்கு நன்மை செய்கிறார்களோ, அவர்களுக்கு தானாகவே நன்மை
ஏற்பட்டு விடும்.
பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பி
வந்திருக்கிறேன்........
ஓம் சாந்தி.
குழந்தைகளின் புத்தியில் புது உலகம் மற்றும் பழைய உலகம்
இரண்டும் இருக்கிறது. ஏனெனில் பழைய உலகம் இப்போது விநாசம் ஆகப்
போகிறது, புது உலகை தந்தை படைக்கிறார் என்பதை குழந்தைகள்
அறிவீர்கள். சிவஜெயந்தியும் கொண்டாடுகிறோம், சிவ ராத்திரியும்
கொண்டாடுகிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இரண்டின்
பொருளையும் உலகில் யாரும் அறியவில்லை. சிவஜெயந்தி என்றால்
சிவனின் பிறந்த நாள். இவர்கள் மனிதனுக்கான பிறந்த நாளை
கொண்டாடுகின்றனர், சிவனுக்கு ஜெயந்தி பிறவி என்பது ஏற்படுவதே
கிடையாது. பிறப்பு எப்படி எடுப்பார்? என்பதை புரிந்து கொள்வது
கிடையாது. ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பு எடுத்தார் என்று அவருக்கு
மகிமை பாடப்படுகிறது. சிவஜெயந்தியைப் பற்றி எந்த வர்ணனையும்
கிடையாது. பரம்பிதா பரமாத்மா பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை
செய்கிறார் என்றும் கூறப் பட்டிருக்கிறது. மேலே
சூட்சுமவதனத்திலிருந்து கொண்டு யாருக்கா வது தூண்டுதல்
கொடுப்பாரா என்ன? இது நடக்கவே நடக்காத காரியமாகும். பதீத
பாவனனாகிய தந்தையைத் தான் நினைவு செய்கின்றனர். எப்போது தந்தை
சுயம் வந்து புரிய வைப்பாரோ அப்போது தான் மனிதர்களின்
புத்தியில் பதியும். இது நாடகத்தில் பதிவாகியிருக்கின்ற
காராணத்தினால் தந்தை சங்கமத்தில் வர வேண்டியிருக்கிறது. தந்தை
வந்திருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் இதுவரையிலும் இவ்வாறு சிலர் மட்டுமே கடினமாகத் தான்
புரிந்து கொள்கின்றனர். ஆனால் பரமாத்மா பிரம்மாவின் மூலம்
பாரதத்தை மீண்டும் சிரேஷ்டமானதாக, சத்யுக உலகமாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றார் என்ற கருத்தை யாரும் எழுதுவது கிடையாது.
தந்தை வந்திருக்கின்றார், சொர்க்க இராஜ்யத்தின் ஆஸ்தி
கொடுத்துக் கொண்டிருக்கின்றார், இராஜயோகம் கற்பித்துக்
கொண்டிருக் கின்றார் என்பதை யதார்த்த முறையில் யாரும் புரிந்து
கொள்வது கிடையாது. ஆயிரக்கணக்கில் வருகின்றனர், சிலர்
நிலைக்கின்றனர், அவர்களிலும் சிலர் வந்து கொண்டே இருந்து பிறகு
நின்று விடுகின்றனர். எவ்வளவு தமோபிரதான புத்தியுடையவர்களாக
ஆகிவிட்டனர்! இந்த அளவு எளிய விசயத்தையும் புரிந்து கொள்ள
முடிவது கிடையாது. என் ஒருவனை நினைவு செய்தால் உங்களது
விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும் என்று தந்தை கூறுகின்றார். இது
யோக அக்னியாகும். இதன் மூலம் நீங்கள் சதோபிரதானமாக
ஆகிவிடுவீர்கள். எந்த பாவ காரியமும் செய்யாதீர்கள். பாவ
காரியங்களை செய்விக்கக் கூடியது இராவணன், அவரது வழிப்படி
நடக்காதீர்கள். யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள்.
தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்கு வதற்காக தந்தை வந்திருக்கின்றார்.
உங்களது தொழிலும் இது தான் என்று பாபா கூறுகின்றார். இரவு பகல்
இதே சிந்தனை செய்யுங்கள். தூய்மை இழந்தவர்களை தூய்மை
ஆக்குவதற்கான வழியை நாம் எப்படி கூறுவது? வழி மிகவும் எளிது.
யோக பலத்தின் மூலம் தான் நாம் சதோ பிரதானமாக ஆவோம். இது தான்
அழிவற்ற சர்ஜனின் (டாக்டரின்) மருந்தாகும். இது எந்த மந்திரமும்
கிடையாது. இங்கு தந்தையை மட்டும் நினைவு செய்தால் போதும்.
எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கின்றார்! ஒவ்வொரு கல்பத்திலும்
இதை புரிய வைத்திருந்தார். ஞானம், பக்தி, வைராக்கியம் என்றும்
கூறுகின்றனர். எதிலிருந்து விடுவிப்பார்? துக்கத்திலிருந்து,
இராவண இராஜ்யத்திலிருந்து. இராவணனை ஆங்கிலத் தில் சைத்தான்
என்று கூறுகின்றனர். ஆக சைத்தானின் இராஜ்யத்திலிருந்து
விடுவித்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று
கூறுகின்றனர். எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து கூடவே அழைத்துச்
செல்லுங்கள். யாராவது சிறையிலிருந்து விடுதலையான பிறகு மிக
அன்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்ற தாகும். எல்லையற்ற
தந்தை அனைத்து குழந்தைகளையும் கவனிக்கிறார் - உங்களை நான்
சிறையிலிருந்து விடுவிப்பதற்காக வந்திருக்கிறேன். மேளா,
கண்காட்சிகளில் இது மாடல் ரூபத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
அனைவரும் எப்படி சிறையில் சிக்கிக் கொண்டுள்ளனர்! இருப்பினும்
மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. தந்தை எவ்வளவு
எளிய முறையில் புரிய வைத்து உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார்.
என்னை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும் என்று
கூறுகின்றார். நீங்கள் சத்யுகத்திற்கு எஜமானர்களாக
ஆகிவிடுவீர்கள். எவ்வளவு எளிதாக இருக்கிறது! எந்த தர்மத்தினரும்
புரிந்து கொள்ள முடியும். இந்த தர்மம் எப்போது ஸ்தாபனை ஆனது?
என்று கூற வேண்டும். கடைசியில் அனைத்து ஆத்மாக் களும்
அவரவர்களது பிரிவுகளில் (செக்சன்) சென்று விடுவார்கள். மீண்டும்
தேவி தேவதா தர்மம் ஆரம்பமாகும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை
என்று எழுதப்பட்டிருக்கிறது. திரிமூர்த்தி சித்திரம் நம்பர் ஒன்
ஆகும். திரிமூர்த்தி மற்றும் சக்கரம் - இந்த சித்திரங்களின்
மூலம் மிகத் தெளிவாக புரிய வைக்க முடியும். ஒன்று சாந்தி தாமம்,
மற்றொன்று சுகதாமம் மேலும் இது துக்கதாமம் என்பதும் புரிய
வைக்கப்பட்டிருக்கிறது. இந்த துக்கதாமத்தின் மீது வைராக்கியம்
ஏற்பட வேண்டும். இப்போது பக்தியின் இரவு முடிவடைந்து விட்டது,
சத்யுகம், திரேதா என்ற பகல் ஆரம்பமாகிறது.
தந்தை கூறுகின்றார் - இப்போது பழைய உலகம் அழியப் போகிறது,
ஆகையால் இதன் மீது வைராக்கியம் ஏற்பட வேண்டும். அவர்களுடையது
எல்லைக்குட்பட்ட வைராக்கியம், உங்களுடையது எல்லையற்ற
வைராக்கியம். இந்த சந்நியாசி போன்றவர்கள் எந்த புது உலகையும்
உருவாக்குவது கிடையாது, படைப்பவர் தந்தை அல்லவா! அவர் தான்
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடிய தந்தை என்று
கூறப்படுகின்றார். வேறு யாரும் கிடையாது. சத்யுக இராஜ்யத்தை
அடைவதற்கான படிப்பாகும். ஞானக்கடல் வந்து ஞானம் கொடுக்கின்றார்.
ஞானக் கடல், பதீத பாவனன் என்று அவர் தான் கூறப்படுகின்றார்.
எந்த ஞானம் கொடுக்கின்றார்? வழக்கறிஞர், மருத்துவருக்கான ஞானம்
கொடுக்கிறாரா என்ன? பரமாத்மாவிடம் சிருஷ்டியின் முதல், இடை,
கடைக்கான ஞானம் இருக்கிறது. அதில் அனைத்து ஞானமும் வந்து
விடுகிறது - வழக்கறிஞர், இன்ஜினியர் போன்ற அனைத்திற்கும்
வெண்ணெய் (அடிப்படை) ஆக இருப்பது இறை ஞானமாகும். அந்த உலகாய
படிப்பு படிப்பது, இன்ஜினியர் ஆவது ஒன்றும் பெரிய விசயம்
கிடையாது. சத்யுக புது உலகின் வழக்கங்கள் எதுவோ அது அங்கு தான்
நடைபெறும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் கல்பத்திற்கு முன்பு
மாளிகைகளை எப்படி உருவாக்கியிருந்தோமோ அதையே திரும்பவும்
செய்வோம். அது தான் சத்யுகம் என்று கூறப்படுகிறது.
அங்கிருக்கும் வழக்கங்கள் மனிதர்களுக்குத் தெரியாது. அங்கு
வைரத்தினால் மாளிகைகள் எப்படி உருவாகும்? அவர்கள் 16 கலைகள்
நிறைந்தவர்கள், சம்பூர்ண நிர்விகாரி என்று பாடப்படுகின்றனர்.
என்ன வழக்கம் இருக்குமோ அதன்படி தான் ஆட்சியும் நடைபெறும். அது
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. ஆத்மாக்கள் தங்களது நடிப்பு
நடிப்பார்கள். கட்டடங்கள் எப்படி கட்டப்படும்? எப்படி
வாழ்வார்கள்? போன்ற அனைத்தும் பதிவாகியிருக்கிறது. இந்த பழைய
உலகில் எப்படி நடைபெறுகிறதோ அதே போன்று அந்த உலகிலும் நடைபெறும்.
இங்கு அசுரர்கள், அங்கு தேவதைகள். சாஸ்திரங்களில் இந்த
விசயங்கள் எதுவும் கிடையாது. ஞானம் மற்றும் பக்தி, பிரம்மாவின்
பகல், பிரம்மாவின் இரவு என்றும் பாடுகின்றனர். பிரம்மாவின்
பெயரைத் தான் பயன்படுத்துகின்றனர், விஷ்ணுவை அல்ல. பிரம்மாவே
விஷ்ணுவாக ஆகிவிடுகின்றார். பிரம்மா, சரஸ்வதி விஷ்ணுவின் இரண்டு
ரூபங்களாகிய லெட்சுமி, நாராயணனாக இருக்கின்றனர். ஆகையால்
லெட்சுமி நாராயணன் 84 பிறவிகள் எடுத்தபின்பு இவ்வாறு ஆகின்றனர்
என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். இராஜயோகத்தின் தபஸ்யா
செய்வது. இங்கு தான், சூட்சும வதனத்தில் அல்ல. யக்ஞம்
போன்றவைகள் இங்கு தான் படைக்கப் படுகிறது. இது கடைசி யக்ஞமாகும்,
பிறகு சத்யுகம், திரேதாவில் எந்த யக்ஞமும் இருக்காது என்று
தந்தை புரிய வைக்கின்றார். வித விதமான யக்ஞத்தை
உருவாக்குகின்றனர், மழை பொழியவில்லை எனில் யக்ஞம் (யாகம்)
உருவாக்குவார்கள். ஏதாவது துக்கம் வந்தால் யாகம் வளர்ப்பர்.
யாகம் வளர்ப்பதன் மூலம் துக்கம் நீங்கி விடும் என்று
நினைக்கின்றனர். இது அனைத்தையும் விட மிகப் பெரிய யக்ஞமாகும்,
இந்த ஞான யக்ஞத்தின் மூலம் முழு உலகின் துக்கமும் நீங்கி விடும்.
இது இராஜஸ்வ அசுவமேத அவிநாசி ஞான யக்ஞமாகும். அனைத்தும் இதில்
சுவாஹா ஆகி விடும். எவ்வளவு நல்ல முறையில் புரிய
வைக்கப்படுகிறது. டெல்லியில் மண்டபத்தில் மேளா செய்தீர்கள்,
இதுவும் மிக நல்லதாகும். மண்டபம் உருவாக்குவதற்கு தாமதம் ஆகாது.
ஹாலுக்காக எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது! இதற்கு தனது
மண்டபத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். சிறிய சிறிய ஊர்களில்
சிறிய மண்டபங்களை உருவாக்குங்கள். கிராமங்களில் மின்சாரம்
இல்லையெனில் பகல் நேரங்களில் கண்காட்சி வைத்துக் கொள்ள முடியும்.
தங்களது பொருட்களாகவே இருக்க வேண்டும், ஏன் வாடகைக்கு எடுக்க
வேண்டும்? கண் காட்சிக்கான குழுவிற்கு தந்தை கட்டளையிடுகின்றார்.
தண்ணீர் புகாத (வாட்டர் புரூப்) மண்டபத்தை உருவாக்குங்கள். மழை
பெய்தாலும் பரவாயில்லை. பாபா டெல்லி சென்ற போது பனி நேரத்திலும்
சென்று சொற்பொழிவு செய்தார். பனி காலத்திற்கான ஆடை
அனைவரிடத்திலும் இருக்கிறது. கண்காட்சிக்காக எத்தனை மண்டபம்
வேண்டுமோ உருவாக்குங்கள். யாரும் தடை போடக் கூடாது, இன்சூரன்ஸ்
செய்து கொள்ளுங்கள். சேவை செய்ய வேண்டியிருக்கிறது அல்லவா!
புரிய வைக்கவும் வேண்டும், தந்தையின் முழு அறிமுகம் கொடுக்க
வேண்டும். இப்போது நாம் தந்தையின் கூடவே இருக்கிறோம். ஞானக்
கடலாகிய தந்தையிடமிருந்து நமக்கு ஞானம் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் ஞானத்திற்கான அவசியம் கிடையாது.
நான் சத்கதி அளிப்பதற்காக வந்திருக்கிறேன் என்று தந்தை
கூறுகின்றார். பிறகு இராவணனின் மூலம் துர்கதி ஏற்படுகிறது.
சத்கதியின் வள்ளல் ஒரே ஒரு தந்தை மட்டுமே. எவ்வளவு தெளிவாகப்
புரிய வைக்கப்படுகிறது! ஆனால் சுயம் புரிந்து கொள்வது கிடையாது,
ஆனால் இது மனிதர்களுக்கு மிகவும் நல்லது என்று கூறிவிடு
கின்றனர். சுயம் புரிந்து கொள்வதற்கு நேரம் இல்லை. பெரிய பெரிய
மனிதர்களிடம் சென்று எவ்வளவு புரிய வைக்கிறீர்கள்! தந்தை எப்படி
சிரேஷ்ட உலகை உருவாக்குகின்றார்? என்பதை புரிய வைத்தால் போதும்.
சிரேஷ்டமானவர்களாக ஆக்குவது தந்தையின் காரியமாகும், அதனால் தான்
தந்தையை அழைக்கின்றனர். துக்கத்தை நீக்குங்கள், சுகம் கொடுங்கள்
என்று பாடிக் கொண்டே இருக்கின்றனர். தந்தை வரும் போது நாம்
பலியாகி விடுவோம் என்றும் நினைக்கின்றனர். அவரது கட்டளைப் படி
(ஸ்ரீமத்) நடப்போம். இருப்பினும் தந்தையின் ஸ்ரீமத் படி நடப்பது
கிடையாது. பகவான் என்றால் யார்? என்று மனிதர்களுக்கு தெரியாது.
சர்வவியாபி என்று கூறிவிடுகின்றனர். ஹரே, பதீத பாவனன் பகவான்
ஒரே ஒருவர் அல்லவா! அவர் சர்வவியாபியாக எப்படி இருக்க முடியும்?
அப்படி இருந்தால் அனைவரும் பகவான் என்று அழைக்கப்படுவர்! பகவான்
உருவத்தில் சிறியவராக, அல்லது பெரியவராக இருக்கமாட்டார். சிலர்
மாமிசம் சாப்பிடுவதாகவும், சிலர் சண்டையிட்டுக் கொள்வதாகவும்
....... கண்காட்சிகளில் காண்பிக்கப்பட்டிருக
்கிறது. இவை
அனைத்தையும் பகவான் செய்கிறாரா என்ன? அந்த நேரத்தில் மனிதர்கள்
மகிழ்ச்சியடைந்து சென்று விடுகின்றனர். வெளியில் சென்றதும்
இங்கு கேட்டதை இங்கேயே விட்டு விடுகின்றனர். பிரஜைகளாக
ஆகிவிடுவர். இராஜா ஆவதற்கு தலையை எவ்வளவு உடைத்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது! இராஜா ஆவதற்கு அனைவரும் கை
உயர்த்துகிறீர்கள், 5-7 நாட்கள் கழித்து பார்த்தால்
இருக்கமாட்டார்கள். மாயை எவ்வளவு திறமை வாய்ந்ததாக இருக்கிறது!
உடனேயே மாட்ட வைத்து விடுகிறது. இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வது
எவ்வளவு கடின விசயமாகும்! தர்மத்தை ஸ்தாபனை செய்வதில் கடினம்
கிடையாது. அங்கு அசுரர்களின் தடைகள் ஏற்படுவது கிடையாது. இங்கு
திருமணம் வேண்டாம் என்று குழந்தை கூறும், ஆனால் அவசியம் செய்து
கொள்ள வேண்டும் என்று சரீரத்தின் தந்தை கூறுவார். திருமணம்
இன்றி உலகம் எப்படி இயங்கும்? ஹரே, திருமணம் செய்து
கொள்ளவில்லையெனில் நல்லது தானே! திருமணம் செய்யவில்லை யெனில்
குழந்தையும் இருக்காது. குடும்பக்கட்டுப்பாடு ஏற்பட்டு விடும்.
யார் என்ன செய்வார்களோ அவர்கள் அதற்கேற்ற பலனை அடைவார்கள் என்று
தந்தை புரிய வைக்கின்றார். நாளடைவில் மிக வேக வேகமாக வருவார்கள்.
கல்பத்திற்கு முன்பு எப்படி ஸ்தாபனை ஆனதோ அதே போன்று தான் ஆகும்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எந்த நாள் கடந்து
முடிந்ததோ அது முந்தைய கல்பத்தைப் போன்றே! இரவு தூங்கும் போது
இன்றைய முழு நாளும் நாடகப்படி முடிந்தது, நாளை என்ன நடக்க
வேண்டுமோ அது நாடகப்படி நடைபெறும் என்ற சிந்தனை ஏற்படுகிறது.
இது நாடகம் என்பது உங்களுக்குத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
இதன் முதல், இடை, கடை என்ன? என்று எதுவும் தெரியாது.
உங்களுக்குத் தெரியும், நீங்கள் முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்கள் அனைவரும் காரிருளில்
இருக்கின்றனர். நாடகத்தில் என்ன பாகம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறதோ அது உருவாக்கப்பட்ட நாடகப்படி நடைபெறு கிறது.
இன்று இங்கு அமர்ந்திருக்கிறீர்கள், நாளை வியாதி வந்து
விடுகிறது, அப்போதும் நாடகப்படி அனுபவிக்க வேண்டி யிருக்கிறது
என்று கூறுவீர்கள். கல்ப கல்பத்திற்கு இவ்வாறே நடைபெறும்.
புத்தியில் நாடகம் இருக்கிறது, ஆகையால் எந்த கவலையும் கிடையாது.
தடைகள் ஏற்படுகிறது, காரியங்களில் தாமதம் ஏற்படுகிறது - கல்ப
கல்பம் தாமதம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆகையால்
தான் இவ்வாறு ஏற்படுகிறது. உயர்ந்த பதவி அடைவதற்காக அதிக
முயற்சி செய்ய வேண்டும். நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேனா?
என்று பார்க்க வேண்டும். பாபாவின் சேவை செய்து கொண்டிருக்கிறேனா?
அல்லது ஒரே இடத்தில் இருக்கிறேனா? நான் யாருக்காவது நன்மை
செய்கிறேனா? பலருக்கு நன்மை செய்யும் போது நமக்கும் நன்மை
ஏற்படும். தேர்வு முடிவடைந்ததும் நான் இந்த பதவி அடைவேன் என்பது
அனைவருக்கும் தெரிந்து விடும். கல்ப கல்பத்திற்கான விசயமாகும்.
பிறகு கடைசியில் நான் இவ்வளவு காலம் ஏன் முயற்சி செய்யவில்லை?
பாபாவின் ஸ்ரீமத்படி ஏன் நடக்கவில்லை? என்று அதிகம்
பட்சாதாபப்பட வேண்டியிருக்கும். பாபா கூறுவது மன்மனாபவ, அவ்வளவு
தான். குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள் என்று எவ்வளவு
அன்பாக கூறுகின்றார்! மற்றவர்களுக்கு வழி காட்டக் கூடிய சேவை
செய்யுங்கள். ஏன் முயற்சி செய்து உயர்ந்த பதவி அடையக் கூடாது!
அவர்களைத் நல்ல புத்திசாலி குழந்தைகள் என்றே கூறலாம். இவர்
ஸ்ரீமத் படி நடப்பது கிடையாது, யாருக்கும் நன்மை செய்வது
கிடையாது, ஆகையால் கண்டிப்பாக குறைந்த பதவி தான் அடைவார் என்று
படிப்பு கற்பிப்பவரும் புரிந்து கொள்வார். எந்த அளவிற்கு
பலருக்கு வழி காட்டுவீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி
அடைவீர்கள். தனக்காக சேவை செய்ய வேண்டும், யார் செய்வார்களோ
அவர்கள் பலனை அடைவார்கள். ஆக நாம் ஏன் இந்த மாதிரியான சேவை
செய்யக் கூடாது? என்று முயற்சி செய்ய வேண்டும். எங்காவது
கண்காட்சி நடைபெறுகிறது எனில் அங்கு (வேலை செய்பவர்கள்) பாதி
சம்பளத்தில் சென்று சேவை செய்ய வேண்டும். சிலர் முழு
சம்பளத்தையும் விட்டு விட்டு சேவை செய் கின்றனர்.
குழந்தைகளுக்கு தேவை யெனில் அனுப்பி வையுங்கள் என்று பாபா
கூறுகின்றார். சரீர நிர்வாகத்திற்கு ஆயிரம் செய்தாலும் சரி, 10
ரூபாய் செய்தாலும் சரியே. யாரிடத்திலாவது பணம் அதிகமாக
இருந்தால் இலட்சக்கணக்கிலும் செலவாகிறது. நீங்கள் புல்
வெட்டினாலும் தந்தையை நினைவு செய்தால் போதும், 21 பிறவிகளுக்கு
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அனைத்து கவலைகளிலிருந்தும் விடுபடுவதற்கு நாடகத்தை சரியான
முறையில் புரிந்து புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். எது
கடந்து முடிந்ததோ கல்பத்திற்கு முன்பு போன்று நடைபெற்றது.
2) நாம் தூய்மை இழந்தவர்களை தூய்மையாக்குவதற்கு வழி எப்படி
கூறுவது? என்று இரவு பகல் சிந்திக்க வேண்டும். ஸ்ரீமத் மூலம்
தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
வரதானம்:
உலக மாற்றத்திற்கான சிரேஷ்ட காரியத்தின் பொறுப்பு ஏற்றுக்
கொண்டாலும் டபுள் லைட்டாக இருக்கக் கூடிய ஆதார மூர்த்தி ஆகுக.
யார் ஆதார மூர்த்தியாக இருக்கிறார்களோ, அவர்கள் மீது தான் முழு
பொறுப்பும் இருக்கும். இப்பொழுது நீங்கள் எந்த ரூபத்தில், எங்கு
அடி எடுத்து வைத்தாலும் அநேக ஆத்மாக்கள் உங்களை
பின்பற்றுவார்கள். இந்த பொறுப்பு இருக்கிறது. ஆனால் இந்த
பொறுப்பு உங்களது மனநிலையை உருவாக்கு வதில் மிகுந்த உதவி
செய்யும். ஏனெனில் இதன் மூலம் அநேக ஆத்மாக்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும். இதன் காரணத்தினால் பொறுப்பு இலேசாகி விடுகிறது.
இந்த பொறுப்பு களைப்பை போக்கக் கூடியதாகும்.
சுலோகன்:
மனம் மற்றும் புத்தி இரண்டையும் சமமாக வைத்து
சேவை செய்வதனால் வெற்றி கிடைக்கும்.
அவ்யக்த சமிக்கை: பரோபகார பாவனையால் (மற்றவர்களுக்கு உதவி
செய்யும் உணர்வினால்) நிரம்பப்பெற்று தீமை செய்பவருக்கும் நன்மை
செய்யுங்கள்
தனது அனைத்து பொக்கிஷங்களையும் மற்ற ஆத்மாக்களுக்கு தானம்
கொடுப்பது - இது தான் பரோபகார் செய்வதாகும். இப்படிப்பட்ட
பரோபகாரிகள் தனக்குள் அனைத்து பொக்கிஷங் களையும் நிறைத்து
வைத்து கவலையற்ற சக்கரவர்த்தியின் அனுபவம் செய்வார்கள்.
அவர்களது சங்கல்பத்திலும் கவலையின் சன்ஸ்காரம் வெளிப்பட
முடியாது. எங்கு சேவை இருக்கிறதோ, அங்கு யாருடைய பலவீன
சன்ஸ்காரத்தையும் பார்க்காமல், அவர்கள் மீது கருணை உள்ளத்தின்
பாவனை வைத்து, அபகாரிகளுக்கும் உபகாரம் (தீமை செய்பவர்களுக்கும்
நன்மை செய்வது) செய்யுங்கள்.