04.05.25    காலை முரளி            ஓம் சாந்தி  20.02.2005      பாப்தாதா,   மதுபன்


உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா!’ எனக் கூறி, மாஸ்ரர் சகல அழியாத பொக்கிஷங்கள் ஆகுவதுடன், அதனால் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுங்கள்.

இன்று, பாக்கியத்தை அருள்பவரான பாப்தாதா, குழந்தைகள் எல்லோருடைய நெற்றியின் மத்தியிலும் பாக்கிய ரேகைகளைப் பார்க்கிறார். பிரகாசிக்கும் தெய்வீக நட்சத்திரங்களின் ரேகைகள் ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் புலப்படுகிறது. பாபா ஒவ்வொருவரின் கண்களிலும் அன்பினதும் சக்தியினதும் ரேகைகளைப் பார்க்கிறார். உங்களின் உதடுகளில் மேன்மையான, இனிமையான வார்த்தைகளின் ரேகையைப் பார்க்கிறார். இனிய புன்னகையின் ரேகை உங்களின் உதடுகளில் பிரகாசிக்கிறது. உங்களின் இதயத்தின் ரேகையில் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரின் அன்பு கலந்திருப்பதை பாபா பார்க்கிறார். பாபா உங்களின் கைகளில் சதா சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருக்கும் ரேகைகளைப் பார்க்கிறார். உங்களின் பாதங்களில் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களை சம்பாதிக்கும் ரேகைகளை பாபா பார்க்கிறார். கல்பம் முழுவதிலும் இந்தச் சங்கம யுகத்தில் குழந்தைகளான நீங்கள் பெற்ற இத்தகைய மேன்மையான பாக்கியத்தை வேறு எவரும் பெறவில்லை. உங்களின் பாக்கியத்தை நீங்கள் இத்தகையதாக அனுபவம் செய்கிறீர்களா? இத்தகைய மேன்மையான பாக்கியத்தின் ஆன்மீக போதையை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? உங்களின் இதயத்தில், ‘ஆஹா எனது பாக்கியமே!’ என்ற பாடல் தானாக ஒலிக்கிறது. சங்கமயுகத்தின் இந்தப் பாக்கியம் அழியாத பாக்கியம் ஆகியுள்ளது. ஏன்? ஏனென்றால் நீங்கள் அழியாத தந்தையிடம் இருந்து அழியாத பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இதை இந்த சங்கமயுகத்தில் மட்டுமே பெறுகிறீர்கள். இந்த அதிகபட்ச மேன்மையான சங்கமயுகத்தில் மட்டுமே நீங்கள் சங்கமயுகத்தின் இந்த விசேடமான பேற்றினை அனுபவம் செய்கிறீர்கள். எனவே, இத்தகைய மேன்மையான பாக்கியத்தின் அனுபவம் சதா வெளிப்பட்ட நிலையில் இருக்கிறதா? அல்லது, அது சிலவேளைகளில் அமிழ்ந்தும் சிலவேளைகளில் வெளிப்பட்டும் இருக்கிறதா? அதற்காக நீங்கள் என்ன முயற்சியைச் செய்தீர்கள்? இத்தகைய மகத்தான பாக்கியத்திற்கான முயற்சி மிகவும் இலகுவாக இருந்தது. ‘எனது பாபா!’ எனக் கூறுவதன் மூலம் நீங்கள் பாபா இனங்கண்டு, ஏற்றுக் கொண்டு அவரை உங்களுக்குச் சொந்தமானவர் ஆக்கினீர்கள். பாபாவை என்னுடையவர் என ஏற்றுக் கொள்ளுதல் என்றால் சகல உரிமைகளும் உடையவராக ஆகுதல் என்று அர்த்தம். உங்களுக்கு இத்தகைய பெரியதோர் உரிமை கிடைத்துள்ளது. இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எதைப் பெற்றுள்ளீர்கள் என உங்களிடம் யாராவது கேட்டால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் எதை அடைய விரும்பினேனோ, அதை அடைந்துவிட்டேன். இறை பொக்கிஷங்களில் எந்தவிதக் குறைவும் இல்லை. நீங்கள் உங்களை இத்தகைய பேற்றின் சொரூபமாக அனுபவம் செய்கிறீர்களா அல்லது இன்னமும் அதை அனுபவம் செய்யும் நடைமுறையில்தான் இருக்கிறீர்களா? எதிர்காலம் வேறுவிடயம். ஆனால் இந்தச் சங்கமயுகத்தில் மட்டுமே நீங்கள் பேறுகளின் சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் இதை சங்கமயுகத்தில் அனுபவம் செய்யாவிட்டால், எதிர்காலத்திலும் உங்களால் அதை அனுபவம் செய்ய முடியாதிருக்கும். ஏன்? எதிர்காலமே வெகுமதியாகும். ஆனால், இந்த வேளையில் நீங்கள் செய்யும் முயற்சிகள் என்ற மேன்மையான செயல்களாலேயே வெகுமதி உருவாக்கப்படுகிறது. நீங்கள் கடைசி கணத்தில் அனுபவ சொரூபம் ஆகுவீர்கள் என்பதல்ல. இந்த அனுபவம் சங்கமயுகத்தில் நீண்ட காலத்தில் இருந்து பெறப்படுவது. வாழ்க்கையில் இருந்து விடுபட்டவராக இருப்பதன் விசேடமான அனுபவம் இந்த நேரத்திற்கு உரியது. இப்போதே நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் கவலையற்ற சக்கரவர்த்திகளா அல்லது உங்களுக்குள் ஏதாவது கவலைகள் உள்ளனவா? கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகிவிட்டவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் அப்படி ஆகிவிட்டீர்களா அல்லது அப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு என்ன கவலை உள்ளது? நீங்கள் அருள்பவரின் குழந்தைகளாக இருப்பதனால், கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் அப்படி ஆகிவிட்டீர்கள்தானே? ‘எனது பாபா!’ என நீங்கள் ஏற்றுக் கொண்ட கணத்தில், சுமைகளின் பல கூடைகள் அகற்றப்பட்டு விடுகின்றன. உங்களுக்கு ஏதாவது சுமைகள் உள்ளனவா? நீங்கள் பஞ்சபூதங்களின் விளையாட்டுக்களையும் மாயையின் விளையாட்டுக்களையும் பார்க்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அந்த விளையாட்டுக்களைக் கவலையற்ற சக்கரவர்த்திகளாகவும் பற்றற்ற பார்வையாளர்களாகவும் பார்க்கிறீர்கள். உலக மக்கள் என்ன நடக்குமோ என நினைத்துப் பயப்படுகிறார்கள். உங்களுக்கு அந்தப் பயம் இருக்கிறதா? உங்களுக்குப் பயமாக இருக்கிறதா? என்ன நடக்க இருக்கிறதோ, அது எல்லாவற்றிலும் சிறந்ததாகவே இருக்கும் என்ற நம்பிக்கையும் (நிச்சய்) அது நிச்சயிக்கப்பட்டது (நிஸ்சித்) என்பதும் உங்களுக்கு இருக்கிறது. ஏன்? நீங்கள் ஒவ்வொரு காட்சியையும் திரிகாலதரிசிகளாக (முக்காலங்களையும் அறிந்தவர்கள்) பார்க்கிறீர்கள். இன்று என்ன நடக்கிறது என்றும் நாளை என்ன நடக்கப் போகிறது என்றும் நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள்தானே? சங்கமயுகத்தின் பின்னர் என்ன வரப் போகிறது என்பது உங்கள் எல்லோரின் முன்னாலும் தெளிவாக இருக்கிறதல்லவா? புதிய யுகம் வரவுள்ளது. உலக மக்கள் உங்களைக் கேட்கிறார்கள்: ‘அது வருமா?’ அவர்களுக்கு இந்தக் கேள்வி இருக்கிறது. நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்? ‘அது கிட்டத்தட்ட இங்கேயே வந்துவிட்டது.’ இதனாலேயே, என்ன நடக்கப் போகிறது என நீங்கள் கேள்வி கேட்பதில்லை. அழகான பொன்னுலகம் வரவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இரவின் பின்னர் இது இப்போது சங்கமயுகத்தின் விடியல் காலம். இது அமிர்தவேளை. அமிர்த வேளையின் பின்னர், பகல் வரவுள்ளது. இந்த நம்பிக்கை உடையவர்கள் கவலையில் இருந்து விடுபட்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்தவிதமான கவலைகளும் இருக்காது. அவர்கள் கவலை அற்றவர்களாக இருப்பார்கள். நீங்கள் உலகைப் படைப்பவரிடம் இருந்து படைப்பைப் பற்றிய இந்தத் தெளிவான ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள்.

அன்பான, ஒத்துழைக்கும் அல்லது தொடர்பில் உள்ள குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அன்பிலே கட்டுப்பட்டு, உங்களின் சொந்த வீட்டை வந்தடைந்து இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். பாப்தாதா அன்பான குழந்தைகளை, ஒத்துழைக்கும் குழந்தைகளை, தொடர்பில் இருக்கும் குழந்தைகளான உங்கள் எல்லோரையும் உங்களின் உரிமைகளைப் பெறுவதற்காக உங்களின் வீட்டை வந்து அடைந்திருப்பதற்காகப் பாராட்டுகிறார். பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! குழந்தைகளான உங்களின் மீது பாப்தாதாவிற்கு அதிக அன்பு இருக்கிறதா அல்லது குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதாவின் மீது அதிக அன்பு இருக்கிறதா? யாருடைய அன்பு மகத்தானது? உங்களுடையதா அல்லது தந்தையினுடையதா? தந்தை கூறுகிறார்: குழந்தைகளின் அன்பே மகத்தானது. பாருங்கள், குழந்தைகளான உங்களுக்கு அன்பு இருப்பதனாலேயே நீங்கள் தொலைதூர இடங்களில் இருந்து இங்கே வந்துள்ளீர்கள். குழந்தைகள் எத்தனை நாடுகளில் இருந்து வந்துள்ளீர்கள்? (50 நாடுகள்). நீங்கள் 50 நாடுகளில் இருந்து வந்துள்ளீர்கள். ஆனால், யார் மிகத் தொலைவில் இருந்து வந்தது? அமெரிக்காவில் இருந்து வந்திருப்பவர்கள் தொலைவில் இருந்து வந்துள்ளார்களா? நீங்களும் தொலைவில் இருந்துதான் வந்துள்ளீர்கள். ஆனால் பாப்தாதா பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளார். அதனுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா எங்கே உள்ளது? அமெரிக்கா மிகத் தொலைவில் உள்ளதா அல்லது பரந்தாமம் மிகத் தொலைவில் உள்ளதா? பாப்தாதாவே வெகு தூரத்தில் இருக்கும் இடத்தில் வசிப்பவர் ஆவார். குழந்தைகளான நீங்கள் தந்தையை நினைக்கிறீர்கள், அவர் உங்களின் முன்னால் வந்துவிடுகிறார். இப்போது குழந்தைகளான உங்களிடம் இருந்து தந்தை எதை விரும்புகிறார்? தந்தை உங்களிடம் இருந்து எதை விரும்புகிறார் என நீங்கள் கேட்கிறீர்கள். எனவே, மிக மிக இனிய, இனிமையிலும் இனிமையான குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சுய இராச்சிய அதிகாரி அரசர் ஆகவேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் எல்லோரும் அரசர்களா? உங்களுக்கு உங்கள் மீதே சுய இராச்சிய அதிகாரம் உள்ளதா? உங்களை சுய இராச்சிய அரசர்களாகக் கருதுபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (பலர் தமது கைகளை உயர்த்தினார்கள்). மிகவும் நல்லது. பாப்தாதா உங்களைப் பார்க்கும்போது குழந்தைகளான உங்களின் மீது அன்பாக உணர்கிறார். ஏனென்றால், நீங்கள் துன்பத்தில் இருந்தும் அமைதி இன்மையில் இருந்தும் வெகு தூரமாகச் செல்வதற்கு 63 பிறவிகளாக மிகக் கடினமாக உழைத்து வருகிறீர்கள். அதனால், குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சுய இராச்சிய அதிகாரியாக, உங்களுக்கே அதிபதியாக, உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்களுக்கு அதிபதியாக, ஓர் அரசனாக ஆகவேண்டும் எனத் தந்தை இப்போது விரும்புகிறார். உங்களால் நீங்கள் விரும்பும்போது, விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்திற்கு உங்களின் மனதையும் புத்தியையும் சம்ஸ்காரங்களையும் மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். சதா பதட்டம் இல்லாத வாழ்க்கையின் அனுபவம் வெளிப்பட வேண்டும். அது சிலவேளைகளில் அமிழ்ந்து போவதை பாப்தாதா காண்கிறார். நீங்கள் நினைக்கிறீர்கள்: நான் இதைச் செய்யக்கூடாது. இது சரி, அது பிழை. எவ்வாறாயினும், நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்க மட்டுமே செய்கிறீர்கள். ஆனால் அதைப் பயிற்சியில் போடுவதில்லை. அதைப் பற்றிச் சிந்திப்பது என்றால் அது அமிழ்ந்து இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் அதைப் பயிற்சியில் போடுவது என்றால் அது வெளிப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் காலத்திற்காகக் காத்திருக்கவில்லைத்தானே? சிலவேளைகளில் நீங்கள் அதற்காகக் காத்திருக்கிறீர்கள். நீங்கள் இதயபூர்வமாக உரையாடும்போது, குழந்தைகளான உங்களில் சிலர் காலம் வரும்போது எல்லாம் சரியாகிவிடும் எனச் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், காலம் உங்களின் படைப்பு. நீங்கள் மாஸ்ரர் படைப்பவர்கள்தானே? எனவே, மாஸ்ரர் படைப்பவர்கள் படைப்பின் அடிப்படையில் தொடர முடியாது. மாஸ்ரர் படைப்பவர்களான நீங்கள் காலத்தின் நிறைவை நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

உங்களால் ஒரு விநாடியில் உங்களின் மனதின் அதிபதியாகி, உங்களின் மனதிற்குக் கட்டளை இடமுடியுமா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களின் மனதை உங்களால் ஒருமுகப்படுத்த முடிகிறதா? உங்களால் முற்றுப்புள்ளி இட முடிகிறதா? அல்லது, நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி இட முயற்சி செய்யும்போது, அதற்குப் பதிலாக அது ஒரு கேள்விக்குறி ஆகிவிடுகிறதா? ‘என்ன? ஏன்? எப்படி? இது என்ன? அது என்ன?’ வியப்புக்குறியேனும் இருக்கக்கூடாது. அது முற்றுப்புள்ளியாக இருக்க வேண்டும். ஒரு விநாடியில் ஒரு புள்ளி ஆகுங்கள். வேறெந்தக் கடின உழைப்பும் இல்லை. ‘புள்ளி’ என்ற ஒரு வார்த்தையைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் புள்ளியின் சொரூபம் ஆகவேண்டும். வீணானவை எல்லாவற்றுக்கும் ஒரு புள்ளி (முற்றுப்புள்ளி) வையுங்கள். நீங்கள் செவிமடுக்கும் மேன்மையான வாசகங்களின் கருத்துக்களைக் கடையுங்கள். வேறு எந்தக் கஷ்டமும் இல்லை. புள்ளியானவரை நினையுங்கள். ஒரு புள்ளி வைத்து, ஒரு புள்ளி ஆகுங்கள். நாள் முழுவதும் நீங்கள் எவ்வளவு மும்முரமாக இருந்தாலும் அவ்வப்போது இதை முயற்சி செய்து பயிற்சி செய்யுங்கள்: உங்களால் ஒரு விநாடியில் ஒரு புள்ளி ஆகமுடியுமா? ஒரு விநாடியில் உங்களால் புள்ளியைப் பிரயோகிக்க முடியுமா? நீங்கள் மீண்டும் மீண்டும் அதைப் பயிற்சி செய்யும் போது மட்டுமே உங்களால் முழுமையான மதிப்பெண்களை, முழுமையான புள்ளிகளை வரவிருக்கும் இறுதிக் கணங்களில் பெற்று, திறமைச் சித்தி எய்த முடியும். இது ஓர் இறை கல்வி. இது ஓர் இறை பராமரிப்பு.

யாரெல்லாம் வந்திருக்கிறீர்களோ, முதல் தடவை வந்திருப்பவர்களும் முதல் தடவை சந்திப்பைக் கொண்டாட வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பலர் வந்திருக்கிறார்கள். வரவேற்புகள்! நீங்கள் முதல் தடவை வந்திருப்பதைப் போல், முதல் இலக்கத்தையும் கோருங்கள். உங்களுக்கு இன்னமும் ஒரு வாய்ப்பு உள்ளது. நீங்கள் இப்போது முதல் தடவை வந்துள்ளீர்கள், பலர் உங்களுக்கு முன்னால் இருக்கிறார்கள் என நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால், கடைசியாக வந்திருப்பவர்களும் வேகமாகச் செல்ல முடியும், வேகமாகச் செல்பவர்களால் முதலில் வரமுடியும் என்ற வாய்ப்பை இந்த நாடகம் வைத்துள்ளது. உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்பவர்களை சான்ஸிலர்கள் (வேந்தர்கள்) என பாப்தாதா அழைக்கிறார். அதனால் ஒரு சான்ஸிலர் ஆகுங்கள். நீங்கள் ஒரு சான்ஸிலர் ஆக விரும்புகிறீர்களா? உங்களுக்கு விருப்பமா? நீங்கள் சான்ஸிலர் ஆகுவீர்கள் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் சான்ஸிலர்கள் ஆகுவீர்களா? ஆஹா! பாராட்டுக்கள். இங்கே வந்திருக்கும் எல்லோரும் தமது கைகளை உயர்த்துவதை பாப்தாதா பார்க்கிறார். பெரும்பாலானோர் தமது கைகளை உயர்த்துகிறார்கள். பாராட்டுக்கள், பாராட்டுக்கள். இங்கே வந்துள்ள இனிமையிலும் இனிமையான, அன்பான குழந்தைகள் எல்லோரையும் குறிப்பாக பாப்தாதா நினைவு செய்கிறார். பாபா ஏன் உங்களை நினைவு செய்தார்? (இன்று இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து பல விஐபி கள் சந்திப்பிற்காக வந்துள்ளார்கள்) நீங்கள் ஏன் அழைக்கப்பட்டுள்ளீர்கள்? உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், பலருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நீங்களே இங்கே வந்துள்ளீர்கள். பாப்தாதா ஏன் உங்களை நினைவு செய்கிறார்? ஏனென்றால், இங்கே வந்துள்ள நீங்கள் எல்லோரும் அன்பான, ஒத்துழைப்பவராக (சகயோகி) இருப்பதில் இருந்து இலகு யோகிகள் (சகஜ் யோகிகள்) ஆகுகின்ற தரமான ஆத்மாக்கள் என்பதை பாப்தாதா அறிவார். நீங்கள் தைரியசாலிகளாக இருந்தால், நீங்கள் இலகு யோகிகள் ஆகுவீர்கள். அதன்பின்னர் உங்களால் தூதுவர்கள் ஆகி, மற்றவர்களுக்கும் இலகு யோகத்தின் செய்தியைக் கொடுக்க முடியும். செய்தியைக் கொடுத்தல் என்றால் ஓர் இறை செய்தியாளர் ஆகுதல் என்று அர்த்தம். ஆத்மாக்களைத் துன்பத்தில் இருந்தும் அமைதி இன்மையில் இருந்தும் விடுவித்தல் என்பதே அதன் அர்த்தம். எப்படியும் அவர்கள் உங்களின் சகோதர, சகோதரிகள், அப்படித்தானே? எனவே உங்களின் சகோதர, சகோதரிகளுக்கு இறை செய்தியை வழங்குதல் என்றால் அவர்களை விடுவித்தல் என்று அர்த்தம். நீங்கள் இதில் இருந்து அதிகளவு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஆத்மாக்களை அவர்களின் துன்பம் மற்றும் அமைதி இன்மையில் இருந்து விடுவிப்பதன் மூலம் நீங்கள் அதிகளவு ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். ஆசீர்வாதங்களைப் பெறுவதன் மூலம் நீங்கள் அதிகளவு உள்ளக அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்கள். ஏன்? இது ஏனென்றால் நீங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து அளித்தீர்கள். சந்தோஷத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் உங்களின் சந்தோஷம் அதிகரிக்கிறது. நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? பாப்தாதா குறிப்பாக உங்கள் எல்லோரையும் கேட்கிறார் - விருந்தாளிகளாக அல்ல, ஆனால் உரிமை உடையவர்களாக – நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? உங்களை விருந்தாளிகளாகக் கருதாதீர்கள். நீங்கள் உரிமை உடையவர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? ஆம், இங்கே வந்திருக்கும் உங்கள் எல்லோரையும் பாபா கேட்கிறார். (சர்வதேச விருந்தினர் ரிட்ரீட்டுக்காக வந்திருப்பவர்கள்) நீங்கள் விருந்தினர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள், ஆனால் நீங்கள் விருந்தினர்கள் அல்ல. நீங்கள் மகான் ஆகி, மற்றவர்களையும் மகான்கள் ஆக்குவீர்கள். எனவே, உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் சந்தோஷமாக இருக்கிறேனா? நீங்கள் சந்தோஷமாக இருந்தால், உங்களின் கையை அசையுங்கள். நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் திரும்பிச் செல்லும்போது என்ன செய்யப் போகின்றீர்கள்? நீங்கள் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள்தானே? எல்லோருடனும் அதிகளவு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்களோ, அந்தளவிற்கு அது அதிகரிக்கும். ஓகே. அச்சா, நீங்கள் விரும்பிய அளவுக்கு கைதட்டலாம். (எல்லோரும் அதிகளவு கைதட்டுகிறார்கள்). நீங்கள் இப்போது கைதட்டியதைப் போல், இயல்பாகவே சதா அதிகளவு சந்தோஷத்தின் கைதட்டல் இருக்க வேண்டும். அச்சா.

பாப்தாதா எப்போதும் ஆசிரியர்களுக்குக் கூறுகிறார்: ஆசிரியர்கள் என்பவர்கள் அவர்களின் முகச்சாயல்களினூடாக எதிர்காலம் புலப்படும். நீங்கள் இத்தகைய ஆசிரியர்கள்தானே? மக்கள் உங்களைப் பார்க்கும்போது, அவர்களுக்கு சுவர்க்கத்தின் சந்தோஷத்தின் உணர்வு இருக்க வேண்டும். அவர்களுக்கு அமைதியின் அனுபவம் ஏற்பட வேண்டும். நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும் தேவதைகளாகத் தென்பட வேண்டும். நீங்கள் இத்தகைய ஆசிரியர்கள்தானே? இது நல்லது. நீங்கள் வீட்டில் வசித்தாலென்ன அல்லது நடந்த சேவைக்குக் கருவிகளாக இருந்தாலென்ன, புத்திகளில் நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள் எல்லோரும் பாப்தாதாவிற்குச் சமமானவர் ஆகுவீர்கள்.

சதா மேன்மையான, பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும் நீங்கள் பௌதீக ரூபத்தில் பாபாவின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன அல்லது தொலைவில் அமர்ந்திருந்தாலும் இதயத்திற்கு நெருக்கமாக இருந்தாலும் எப்போதும் கருவிகளாகி, புதுப்பித்தல் பணியை வெற்றிகரமாகச் செய்யும் விசேடமான ஆத்மாக்களுக்கும் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுகின்ற தைரியசாலிக் குழந்தைகளுக்கும் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேகரிக்கும் உலகில் பல - பல - பல மில்லியன் மடங்கு செல்வந்த ஆத்மாக்களுக்கும் சதா நிரம்பியிருக்கும் ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

இரட்டை வெளிநாட்டு மூத்த கருவி சகோதரிகளுக்கு: நீங்கள் சேவையின் நல்லதோர் அத்தாட்சியைக் கொடுக்கிறீர்கள். இதன் மூலமே ஒலி பரவும். உங்களின் அனுபவங்களை விவரிப்பதன் மூலம் மற்றவர்களின் அனுபவங்களும் அதிகரிக்கும். எனவே பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். வெளிநாட்டு சேவை செய்வதற்குக் கருவிகளாக இருப்பவர்கள் மிக நல்ல ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சேவை செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். நீங்கள் இந்தத் தேசத்தில் இருந்து சென்றுள்ளீர்கள். ஆனால் நீங்கள் வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு நீங்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல் சேவை செய்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்குச் சொந்தமாக இருக்கும் உணர்வை, நீங்கள் எல்லோரும் எல்லா இடங்களையும் சேர்ந்தவர்கள், ஓரிடத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல என்ற உணர்வைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் இலண்டனையோ அல்லது அமெரிக்காவையோ மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல. நீங்கள் எல்லையற்ற சேவையாளர்கள். உங்களிடம் உலகிற்கான பொறுப்பு உள்ளதல்லவா? எனவே, பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். நீங்கள் மிக நன்றாகச் செய்கிறீர்கள். நீங்கள் முன்னேறும்போது, தொடர்ந்து மிக நன்றாகப் பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்வீர்கள். அச்சா.

நீங்கள் எல்லோரும் புனிதமான மற்றும் சந்தோஷமான அன்னங்கள். ஓர் அன்னத்தின் வேலை என்ன? அன்னத்திடம் வேறுபிரித்தறியும் சக்தி அதிகளவில் உள்ளது. அதனால் நீங்களும் வீணானவை அனைத்தையும் முடிக்கின்ற, புனிதமான மற்றும் சந்தோஷமான அன்னங்கள். அத்துடன் சக்திசாலிகள் ஆகுவதன் மூலம் நீங்கள் மற்றவர்களையும் சக்திவாய்ந்தவர்கள் ஆக்குகிறீர்கள். நீங்கள் எல்லோரும் என்றும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்றும் என்றும் சந்தோஷமா? இப்போது, ஒருபோதும் துன்பம் வர அனுமதிக்காதீர்கள். நீங்கள் துன்பத்திற்கு விவாகரத்து வழங்கி விட்டீர்கள். அப்போது மட்டுமே உங்களால் மற்றவர்களின் துன்பத்தைத் தீர்க்க முடியும். எனவே, நீங்கள் சந்தோஷமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் சந்தோஷத்தை வழங்க வேண்டும். நீங்கள் இந்த வேலையைச் செய்வீர்கள்தானே? இங்கே நீங்கள் பெற்ற சந்தோஷத்தை உங்களுக்குள் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏதாவது நடக்கும்போது, ‘பாபா, இனிய பாபா, இந்தத் துன்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறுங்கள். அதை உங்களுடன் வைத்திருக்காதீர்கள். தீய விடயங்களை நீங்கள் உங்களுடன் வைத்திருப்பீர்களா? துன்பம் என்பது தீங்கான ஒன்றுதானே? எனவே, அந்தத் துன்பத்தை நீக்கி, சந்தோஷமாக இருங்கள். எனவே, இதுவே சந்தோஷக் குழு, சந்தோஷத்தை வழங்குகின்ற குழு. நடக்கும்போதும் அசையும்போதும் தொடர்ந்து சந்தோஷத்தை வழங்குங்கள். நீங்கள் ஆசீர்வாதங்கள் பலவற்றைப் பெறுவீர்கள். ஆகவே, இந்தக் குழுவினர் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள். (ஒரு விருந்தாளி கண்ணீர் சிந்தினார்). நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? இப்போது புன்னகை செய்யுங்கள். தொடர்ந்து புன்னகை செய்யுங்கள். சந்தோஷமாக நடனம் ஆடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நினைவிற்கும் சேவைக்கும் இடையில் சமநிலையைக் கொண்டிருப்பதன் மூலம் இராச்சிய உரிமை உடையவராகிப் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.

உங்களிடம் நினைவைக் கொண்டிருப்பதற்கும் சேவை செய்வதற்கும் இடையில் சமநிலை காணப்படும்போது, நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வோர் அடியிலும் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் ஒவ்வோர் எண்ணத்திலும் சேவை செய்யும்போது, நீங்கள் வீணானவை எல்லாவற்றில் இருந்தும் விடுபடுவீர்கள். சேவை உங்களின் வாழ்க்கையின் பாகம் (அங்கம்) ஆகும். எப்படி உங்களின் சரீரத்தின் ஒவ்வொரு பாகமும் அத்தியாவசியமோ, அதேபோல், சேவையும் பிராமண வாழ்க்கையின் விசேடமான பாகம் ஆகும். சேவை செய்வதில் பல வாய்ப்புக்களைக் கொண்டிருப்பது, ஓரிடத்தையும் சகவாசத்தையும் கொண்டிருப்பதும் உங்களின் பாக்கியத்தின் அடையாளமே ஆகும். சேவை செய்வதற்கான பொன்னான வாய்ப்பை எடுத்துக் கொள்பவர்கள் மட்டுமே இராச்சியத்திற்கான உரிமையைப் பெறுவார்கள்.

சுலோகன்:
இலகு யோகி வாழ்க்கையே இறையன்பின் பராமரிப்பின் ரூபம் ஆகும்.


அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

தூய்மையே பிராமணர்களான உங்களின் மகத்தான அலங்காரம் ஆகும். சம்பூரணமான தூய்மை என்பது மகத்தான சொத்து, இராஜரீகம் மற்றும் உங்களின் வாழ்க்கையின் ஆளுமை ஆகும். அதைக் கிரகித்து, என்றும் தயார் ஆகுங்கள். பஞ்ச பூதங்களும் தமது பணியை ஆரம்பிக்கும். தூய்மையின் ஆளுமையைக் கொண்டிருப்பவர்கள், சம்பூரணமான, முழுமையான, இராஜரீக ஆத்மாக்கள் ஆகுகிறார்கள். அத்துடன் அவர்கள் பண்புகளின் தேவிகள் என்றும் அழைக்கப்படுவார்கள்.