04.10.26    காலை முரளி            ஓம் சாந்தி 31.12.2011      பாப்தாதா,   மதுபன்


புதுவருடத்தில் தீவிர புருஷார்த்தி பவ என்ற வரதானத்தின் மூலம் தனது முகத்தின் மூலம் ஃபரிஸ்தா ரூபத்தைக் காண்பியுங்கள், லைட்-மைட் சொரூப ஜுவாலாமுகி யோகத்தின் மூலம் வீணானவற்றை எரித்து விடுங்கள், துக்கத்தில் அமைதியற்று இருக்கும் ஆத்மாக்களுக்கு சக்திகளின் தானம் கொடுங்கள்

இன்று பிராமணப் பரிவாரத்தைப் படைப்பவர் தமது நாலாபுறம் உள்ள பரிவாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறிய பரிவாரம், சிறிய உலகமாக உள்ளது. ஆனால் மிகவும் அன்பானது. ஏனென்றால் கோடியில் சிலர். ஏன் அன்பானவர்கள்? ஏனென்றால் பாபாவை இவர்கள் அறிந்துள்ளார்கள். பாபாவினால் ஆஸ்திக்கு அதிகாரி ஆகியிருக்கிறார்கள். ஆக, எப்படி பாபா அன்பானவரோ, அது போல் இந்த பிராமணப் பரிவாரமும் அன்பானது. பாப்தாதா பிறந்த உடனே ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில் பாக்கியத்தின் நட்சத்திரத்தை ஜொலிக்கச் செய்திருக் கிறார். எனவே இந்தச் சிறிய உலகம் மிக அன்பானது. நீங்கள் அனைவரும் கூட உங்களின் இவ்வளவு சுவமான்களை அறிந்திருக்கிறீர்கள் இல்லையா? பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தை யையும் பார்த்துக் குஷியடைகிறார். மற்றும் என்ன பாடல் பாடுகிறார்? ஆஹா குழந்தைகளே, ஆஹா!

இன்றோ அனைவரும் இந்தச் சிறப்பான நாளில் பாபாவுடன் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள். இன்றைய நாள் சங்கமத்தின் (சந்திப்பதற்கான) நாள். விடை கொடுப்பதும் உள்ளது மற்றும் வாழ்த்து சொல்வதும் உள்ளது. அதே போல் சங்கமத்திற்கு மகத்துவம் உள்ளது. எங்கெல்லாம் கடல் மற்றும் நதியின் சங்கமம் உள்ளதோ, அதற்கு மிகுந்த மகத்துவம் உள்ளது. ஆக, இன்றைய நாளின் மகத்துவமும் கூட மிகுந்த மகிமைக்குரியதாக உள்ளது. பழைய வருடம் முடிவடைந்து புதிய வருடம் ஆரம்பமாகின்றது. இன்றைய நாள் அனைவரின் மனதில் இனி வரப்போகும் வருடத்திற்காக எவ்வளவு ஊக்கம் உள்ளது! ஒவ்வொருவரும் அவரவர் மனதில் திட்ட மிட்டுள்ளனர் - எதை விட வேண்டும் மற்றும் என்னவாக ஆக வேண்டும்? இரண்டையுமே திட்ட மிட்டு இருக்கிறீர்களா? திட்டமிட்டிருக்கிறீர்களா? யார் வரப்போகிற வருடத்திற்காக, தனது முன்னேற்றத்திற்காக, தீவிர புருஷார்த்தத்தின் பிளான் உருவாக்கியிருக்கிறீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். உருவாக்கி இருக்கிறீர்களா? வாழ்த்துகள்! ஏனென்றால் அனைவரும் அறிவீர்கள் - பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்காகவும் என்ன விரும்பு கிறார் என்று. பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்காகவும் இதே சுப-பாவனை தான் வைக்கிறார் - ஒவ்வொரு குழந்தையும் பாபாவுக்கு சமமாக சம்பன்னம மற்றும் சம்பூர்ணம் ஆக வேண்டும். இப்போதோ சமயமும் துணை நிற்கின்றது. எனவே ஒவ்வொருவரும் தமது மனதில் தமக்காகப் புதிய திட்டம் உருவாக்கி இருக்கிறீர்கள் இல்லையா? சிலவற்றை விட வேண்டும். சில முன்னேற்றமடைய வேண்டும். ஆக, எதை விட வேண்டும்? பாப்தாதா பார்த்தார், பழைய உலகம் மற்றும் சம்பந்தத் தில் விடுவதில் அனைவரின் புருஷார்த்தத்தின் மீது கவனமும் உள்ளது. ஒரு விஷயத்தை விடவும் விரும்புகிறீர்கள். ஆனால் இது வரை பாப்தாதா பார்த்தார், பழைய சம்ஸ்காரத்தை விடுவதில் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டி உள்ளது. ஆக, பாப்தாதா இதைத் தான் விரும்பு கிறார் - இந்தப் புது வருடத்தில் ஒவ்வொரு குழந்தையும் தனது பழைய சம்ஸ்காரத்தை சம்ஸ்காரம் செய்துவிட வேண்டும். நீங்கள் அனைவரும் கூட இந்த சங்கல்பத்தைத் தான் நிறைவேற்ற விரும்புகிறீர்கள் இல்லையா? ஏனென்றால் பழைய சம்ஸ்காரத்தை நீங்கள் சொல்கிறீர்கள் - என நேச்சர் என்று. நோக்கம் இல்லை, ஆனால் நேச்சர். ஆக, நேச்சர் இந்த ஜென்மத்தின் பிராமணருடையது இல்லை, ஆனால் பழையது. ஆக, அந்தப் பழைய சம்ஸ்காரம் அல்லது நேச்சரை இன்றைய தினம் விட்டு விடுவதற்கான சங்கல்பம் செய்ய முடியுமா? செய்ய முடியுமா? விரும்பவும் செய்கிறீர்கள். விரும்பவில்லை என்பதும் இல்லை. ஆனால் பிறகும் கூட அடிக்கடி புருஷார்த்தத்தில் தீவிரத் தன்மையைக் கொண்டு வருவதில் அதே சம்ஸ்காரம் விதவிதமான ரூபத்தில் விக்னங்களை ஏற்படுத்துகின்றன. ஆக, பாப்தாதா இதைத் தான் விரும்புகிறார் - வருடத்திற்கு விடை கொடுப்பதோடு கூடவே இன்றைய நாளில் அதற்கும் விடை கொடுத்து விடுங்கள். இதற்காக நீங்கள் தயாரா? யார் தயாராக இருக்கிறீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். இதற்காக என்ன செய்வீர்கள்? தனக்காகப் பிளான் ஏதாவது யோசித்திருக் கிறீர்களா? இதற்காக அனைத்திலும் நல்ல விஷயம் - திட சங்கல்பம். சங்கல்பம் உள்ளது - நடந்தாக வேண்டும் என்று, ஆனால் சங்கல்பத்தில் தீவிரத் தன்மை வேண்டும். எப்படி பிராமண் ஆவதோடு கூடவே இந்த உறுதிமொழி எடுத்தீர்கள் - எந்த ஓர் அசுத்த உணவையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆக, பாப்தாதா பார்த்தார் - இதில் திட சங்கல்பத்தினால் மெஜாரிட்டி பாஸ். எப்படி உடலுக்காக அசுத்த உணவு பற்றிய சங்கல்பம் செய்தீர்கள் மற்றும் நடைமுறையில் செய்து கொண்டிருக்கிறீர்கள், அதே போல் மனதிற்காக இந்த திட சங்கல்பம் செய்ய வேண்டும் - ஒரு போதும் யாருக்காகவும், எந்த ஒரு சூழ்நிலையின் படியும் எந்த ஒரு வீண் சங்கல்பமும் செய்யாமல், சதா ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் சுப-பாவனை, சுப-விருப்பம் வைத்தே ஆக வேண்டும். மனதிற்கான உணவு சங்கல்பம். எனவே எப்படி உடலுக்காகப் பெரும்பாலோர் திட சங்கல்பம் செய்திருக்கிறீர்களோ, அதே போல் மனதிற்காக வீண் சங்கல்பம், அசுத்த பாவனையை அழித்து விட முடியாதா? ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் மனதின் அன்பு மற்றும் சகயோகத்தைத் தனது மனதில் வைக்க முடியாதா?

ஆக, இன்று பாப்தாதா இந்தப் பழைய வருடத்தோடு இந்த உள்ளுணர்வு மற்றும் திருஷ்டிக்கு ஒவ்வொரு குழந்தையிடமிருந்தும் விடை கொடுக்க வேண்டும் என விரும்புகிறார். இந்த திட சங்கல்பம் செய்ய முடியுமா? செய்ய முடியுமா? சொல்லுங்கள், மாதாக்கள், டீச்சர்கள், சகோதரர் கள் அனைவரும் கூட விரும்புகிறீர்கள் இல்லையா? ஆம், கை உயர்த்துங்கள். நாளை முதல் எந்த ஓர் ஆத்மாவுக்காகவும் எதேனும் வீணானது உள்ளது, வீணான பாவனை அல்லது வீணான பாவம் (பாவ்) உள்ளதென்றால் அதற்கு இப்போது மூடுவிழா நடத்த வேண்டும் என விரும்பு கிறார். சொல்லுங்கள், டீச்சர்கள் அனைவரும் தயாரா? டீச்சர்கள் இரண்டிரண்டு கைகளை உயர்த்துங்கள். உயர்த்துங்கள். நல்லது. யார் உயர்த்தவில்லையோ, அவர்கள் உயர்த்துங்கள். யார் உயர்த்தவில்லையோ, அவர்கள் கொஞ்சம் எழுந்து நில்லுங்கள். நன்றாக உள்ளது! புருஷார்த்தம் செய்வீர்கள், ஆனால் திட சங்கல்பம் செய்ய மாட்டீர்கள், அப்படித் தானே? யார் எழுந்திருக்கிறார்களோ, அவர்கள் லட்சியம் மற்றும் புருஷார்த்தம் செய்வீர்கள் என்றால் கை உயர்த்துங்கள். ஏனென்றால் சமயத்தின் கவனம் வைத்து இதை யோசியுங்கள் - அனைவரும் இந்த சங்கம சமயத்தில் வருங்காலத்திற்கான நீண்ட காலத்தின் வெற்றியைப் பெற வேண்டும். 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பெற வேண்டும். ஆக, எங்கே இந்த ஒரு பிறவி மற்றும் எங்கே 21 பிறவிகள்! ஆக, இந்த ஒரு பிறவியில் கூட போதுமான காலத்திற்குத் தனது புருஷார்த்தத்தைத் தீவிரப் படுத்த வேண்டும். அப்போது தான் நீண்ட காலத்திற்கான பிராப்தியை அடைய முடியும். பாபாவிடம் அன்பு உள்ளது இல்லையா, அப்போது அவரோடு கூடவே இருக்க வேண்டும் இல்லையா? ஆக, இப்போதும் இவ்வளவு சமயம் பாப்-சமான் ஆக வேண்டும். பிரம்மா பாபாவுக்கு ஒவ்வொரு குழந்தையிடமும் எவ்வளவு அன்பு உள்ளது! ஆக, இந்த அன்பு, பாப்தாதா இருவரின் அன்பை இந்தப் பிறவியில் தான் அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் யாரிடம் அன்பு உள்ளதோ, அவரது சொல்லை ஒரு போதும் மீற முடியாது. ஆக, பிரம்மா பாபாவிடம் அனைவர்க்கும் அன்பு உள்ளது. எவ்வளவு அன்பு? நிறைய அன்பு உள்ளது. அதைக் காண்பிக்க முடியாதிருந்தாலும், பாபாவுக்குத் தெரியும், எல்லாக் குழந்தைகளுக்குமே அன்பு உள்ளது, நம்பர்வார் உள்ளது. ஆனால் அன்பு உள்ளது இதில் பாப்தாதாவும் குழந்தைகள் அனைவர்க்கும் அன்பு உள்ளதென்று சர்ட்டிஃபிக்கேட் தருகிறார். அன்போ இருக்கிறது, ஆனால் பாப்தாதா பார்த்தார் - சில நேரம் குறும்புக்காரர்களாக ஆகி விடுகின்றனர். அப்போது பாபா என்ன செய்கிறார்? பாபா பார்த்துப் பார்த்து விசேஷ சக்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் பாபா இதைத் தான் விரும்புகிறார் - ஒவ்வொரு குழந்தையும் ராஜாக் குழந்தை. உலகில் செல்லக் குழந்தையாக இருப்பவர்களை ராஜாக் குழந்தை என்று சொல்கிறார்கள். உண்மையில் ராஜா இல்லை, ஆனால் ராஜாக் குழந்தை எனச் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் அனைவருமே பாப்தாதாவுக்கு இப்போதும் ராஜாக் குழந்தைகள் தாம், வருங்காலத்திலும் ராஜாக் குழந்தை தான். இப்போது சுவமான் சுயராஜ்யம். இப்போது ஆத்மாவின் ராஜ்யம் சர்வ சர்மேந்திரியங்கள் மீதும் உள்ளது. ஆக, இப்போது நீங்கள் சுயராஜ்ய அதிகாரி, வருங்காலத்தில் உலக ராஜ்ய அதிகாரி. ஆக, நீங்கள் ராஜாக் குழந்தைகள் தாம் இல்லையா? அப்படியானால் தலையை அசையுங்கள்.

ஆக, பாப்தாதா இன்று அமிர்தவேளையில் நாலாபுறமும் வெளிநாடுகளிலும் சரி, இந்த தேசத்திலும் சரி, நாலாபுறமும் சுற்றிவரச் சென்றார். அப்போது என்ன பார்த்தார்? யோகத்தில் அமிர்தவேளையில் பெரும்பாலோர் அமர்கிறார்கள், ஆனால் அன்பில் அமர்கிறார்கள், பாப்தாதா வோடு உரையாடவும் செய்கிறார்கள், ஆத்மிக ஸ்மிருதி யிலும் அமர்கிறார்கள், பாப்தாதாவிட மிருந்து சக்தியும் பெறுகிறார்கள். ஆனால் இப்போது வரவிருக்கும் புது வருடத்தில் பாபா புதுமையை விரும்புகிறார். ஏனென்றால் இப்போதைய சமயம் ஒவ்வொரு நாளும் ஆபத்தானதாக வரத்தான் போகிறது. ஆக, அந்த மாதிரி சமயத்தில் இப்போது ஜுவாலாமுகி யோகம் வேண்டும். இந்த ஜுவாலாமுகி யோகத்திற்கு இப்போது அவசியம் உள்ளது. ஜுவாலா முகி யோகம் என்றால் லைட்-மைட் சொரூப சக்திசாலி. ஏனென்றால் சமயத்தின் பிரமாணம் இப்போது துக்கம், அசாந்தி, குழப்பம் அதிகரிக்கவே போகிறது. எனவே உங்களுடைய துக்கத் திலிருக்கும், குழப்பத்திலிருக்கும் ஆத்மாக்களுக்கு விசேஷமாக ஜுவாலாமுகி யோகத்தின் மூலம் சக்திகள் கொடுப்பதற்கான அவசியம் அதிகரிக்கும். துக்கம் அசாந்திக்கு பதிலாக ஏதேனும் சக்தி, சாந்தியைத் தனது மனசா சேவை மூலம் நீங்கள் இப்போதைய சமயத்தின் தலைப்பு வைத்திருக்கிறீர்களே, ஒரே பரிவாரம் என்று, அதன் பிரமாணம் எப்போது ஒரே பரிவாரம் உள்ளதோ, அப்போது அசாந்தியிலிருக்கும் ஆத்மாக்களுக்கு ஏதேனும் ஒரு துளியைக் கொடுப்பீர்கள். அதனால் பாப்தாதா அடுத்த வருடம் இப்போது வந்தே விட்டது. அதற்காக விசேஷமாக கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். அதாவது இப்போது ஜுவாலாமுகி யோகத் திற்கான அவசியம் உள்ளது. ஜுவாலாமுகி யோகத்தின் மூலம் தான் மீதமுள்ள சம்ஸ்காரங்களும் பஸ்மம் ஆக வேண்டும்.

இப்போது உங்கள் அட்வான்ஸ் பார்ட்டியின் துணைவர்கள் உங்கள் அனைவரிடமும் இதை விரும்புகிறார்கள் --- இப்போது முடிவிற்கான சமயத்தை முன்னால் கொண்டு வாருங்கள். இப்போது திரும்பிச் செல்லும் பயணத்தை நினைவு வையுங்கள். உங்கள் தீதி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார் - எனக்கு சதா இது நினைவிருந்தது - இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும். இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும். உங்கள் தாதி இதைத் தான் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார் - எப்படி எனக்கு நினைவிருந்தது - இப்போது சம்பன்னமாக வேண்டும், சம்பூர்ணம் ஆக வேண்டும், ஈடுபாடு இருந்து கொண்டே இருந்தது. ஆக, இன்று விசேஷமாக அமர்தவேளையில் வதனத்தில் பாப்தாதாவுடனான சந்திப்பில் சொல்லிக் கொண்டிருந்தார் - இப்போது எங்கள் பக்கமிருந்து தாதிமார் யார்-யார் போயிருக்கிறார்களோ, அனைவரும் ஒன்று சேர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள் - இப்போது ஜுவாலமுகி யோகத் திற்கான மிகுந்த அவசியம் உள்ளது. மற்றவர்களுக்கு சக்தி கொடுப்பதற்காகவோ, தனது பிராமணப் பரிவாரத்தை சம்பன்னம் ஆக்குவதற்காகவோ அது அவசியம். இப்போது சமயத்தை சமீபத்தில் கொண்டுவரக் கூடிய நீங்கள் நிமித்தமாக இருக்கிறீர்கள். எனவே வரவிருக்கும் வருடத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? விசேஷமாக என்ன செய்வீர்கள்? ஒருவர் மற்றவரின் சிநேகி சகயோகி ஆகி ஒவ்வொரு சென்டர், சேவாஸ்தானம் ஜுவாலாமுகி யோகத்தின் வைப்ரேஷன், மற்றும் கர்மத்தில் ஒருவர் மற்றவரின் சிநேகி சகயோகி ஆகி, ஒவ்வொருவருக்காகவும் கவனம் கொடுத்தவாறு, என்னவெல்லாம் குறைபாடு உள்ளதோ, அதில் சகயோகம் கொடுங்கள். மனதின் மூலம் மற்ற ஆத்மாக்களுக்கு சேவை செய்யுங்கள் மற்றும் தனது சகயோகத்தின் மூலம் பிராமண துணைவர்களுக்கு விசேஷ சேவை செய்யுங்கள். அப்போது தான் எங்களது ஆசை நிறைவேறும். இன்று வதனத்தில் அட்வான்ஸ் பார்ட்டி அடுத்த வருடத்திற்காக உங்கள் அனைவருக்கும் அன்பு நினைவுகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் மற்றும் தங்கள் மனதின் ஆசைகளை யும் சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அப்படியானால் சொல்லுங்கள், பாப்தாதாவின் சங்கல்பத் தையோ கேட்டீர்கள். ஆனால் அதோடு கூடவே தங்கள் தாதிமாருடைய அடுத்த வருடத்திற் கான சுப-பாவனைகளையும் கேட்டீர்கள் இல்லையா? பாப்தாதாவோ குழந்தைகள் அனை வருக்கும், சிலர் பலவீனமாக இருந்தாலும், தீவிர புருஷார்த்தியாக இருந்தாலும், அனைவருக்கும் மூன்று வாழ்த்துகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார் --- ஒன்று புது வாழ்க்கைக்கான வாழ்த்து, இரண்டாவது புது வருடத்தின் வாழ்த்து மற்றும் மூன்றாவது புது உலகத்தில் துணைவராகிச் செல்வதற்கான வாழ்த்து.

பாப்தாதா இதையும் சொன்னார் - அனைவரும் தங்களுக்குள் தங்களுக்காக சமயத்தை நிச்சயம் செய்யுங்கள் - எது வரை தன்னை பாப்-சமான் ஆக்குவீர்கள்? தனக்குள் தானே நிச்சயம் செய்யுங் கள். ஆக, நிச்சயம் செய்வதற்கு வருகிறது இல்லையா? பாப்தாதாவோ இன்று ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து இந்த வரதானத்தையே கொடுத்துக் கொண்டிருக்கிறார் - அடுத்த வருடத்தில் ஒவ்வொரு குழந்தையும் தீவிர புருஷார்த்தி ஆகுக. எப்படி பாப்தாதா முதலிலேயே இரண்டு விஷயங்களில் கவனப் படுத்தியிருக்கிறார். ஏனென்றால் சங்கமத்தின் சமயம் திடீரென்று முடிந்துவிடப் போகிறது. ஆக, ஒன்று சமயம், இன்னொன்று சங்கல்பம். இரண்டின் மீதும் ஒவ்வொரு கணமும் கவனம்! பாப்தாதாவுக்கு இதுவும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் சுப-பாவனை உள்ளது - ஒவ்வொரு குழந்தையும் இவ்வருடம் என்னவாக ஆக வேண்டும்? என்ன ஆவார்கள்? யார் உங்களது முகத்தைப் பார்த்தாலும், உங்கள் முகத்தின் மூலமாக ஃபரிஸ்தா ரூபம் காணப்பட வேண்டும். நான் இன்னார், நான் இன்னார். என்று அந்த மாதிரி இல்லை. ஃபரிஸ்தா அனுபவத்தில் வர வேண்டும். இதற்காக ஜுவாலாமுகி யோகம், எந்த ஒரு வீணானதும் இருக்கக் கூடாது. லைட்-மைட் சொரூப யோகத்தின் மூலம் வீணானவற்றை எரித்து விடுங்கள். சக்திசாலி ஃபரிஸ்தாவாகக் காணப்பட வேண்டும் - யாரைப் பார்த்தாலும் சரி. ஏனென்றால் பாபாவின் காணாமல் போய், தேடிக்கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் நீங்கள். பாபா உங்களைக் குறிப்பாக எங்கெங்கிருந்தோ தேர்ந்தெடுத்துத் தம்முடையவர்களாக ஆக்கி யிருக்கிறார். ஆகவே லட்சியம் வையுங்கள் நான் பிராமணரிலிருந்து ஃபரிஸ்தா ஆகும் ஆத்மா. ஆக, அமிர்தவேளை தனது தினச்சரியாவில் நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் ஃபரிஸ்தா ரூபம். ஃபரிஸ்தா சொரூபமோ நன்றாக உள்ளது இல்லையா? பிரம்மா பாபா ஃபரிஸ்தா ஆனார் எனவே தந்தையைப் பின்பற்றுங்கள்.

ஆக, இந்த வருடத்திற்காகக் கொடுக்கப்பட்ட வரதானம் - தீவிர புருஷார்த்தி, சாதாரண புருஷார்த்தி என்றால் ராஜ்யத்தின் துணையாக ஆக மாட்டீர்கள். மேலும் பாபா இதைத் தான் விரும்புகிறார் - யாரெல்லாம் பாப்தாதாவின் முரளியைப் படிக்கும் இறைமாணவர்களாக இருக் கிறார்களோ, அவர்கள் அனைவரும் என்னவாக ஆவார்கள்? ஃபரிஸ்தா! அனைத்து சுமைகளும் இறங்கி விடும். எந்த விதமான சம்ஸ்காரத்தின் சுமையும் முடிந்து போகும். ஆக, இவ்வருடத் தின் வீட்டுப் பாடமாக என்ன இருந்தது? ஃபரிஸ்தா சொரூபத்தில் இருக்க வேண்டும். இதைத் தான் தீவிர புருஷார்த்தி என்பது. இப்போது ஒவ்வொரு சென்டர், ஒவ்வொரு வாரம், ஒவ்வொரு மாணவரின் ரிசல்ட்டைப் பார்க்க வேண்டும் - தீவிர புருஷார்த்தியாக இருந்தாரா? எந்த ஒரு பிரச்சினை வந்தாலும், அதற்காக சகயோகி ஆகி, அன்போடு அவர்களுக்கு தைரியம் கொடுத்து, தனது சென்டரை, மாணவர்களைத் தீவிர புருஷார்த்தி ஆக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் ரிசல்டடைப் பாரக்க வேண்டும். ஏனென்றால் சமயம் குழப்பம் நிறைந்ததாக ஆகத் தான் போகிறது.

ஆக, இன்றைய சங்கம தினத்தில் விடை கொடுப்பது மற்றும் வாழ்த்துக்கான தினத்தில், நாலாபுறம் உள்ள, குழந்தைகள் எங்கே அமர்ந்திருந்தாலும், பாப்தாதா பார்த்துக் கொண்டிருக் கிறார், எப்படி அனைவரும் விஞ்ஞானத்தின் சாதனங்கள் மூலமாகப் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள் மேலும் பார்த்துப் பார்த்து எவ்வளவு குஷியடைந்து கொண்டிருக்கிறார்கள்! ஆக, நாலாபுறம் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா விசேஷ வரதானம் கொடுத்துக் கொண்டிருக் கிறார் - சதா திருப்தியின் மணி ஆகுக. திருப்தியாக இருக்க வேண்டும். மற்றவர்களையும் திருப்திப் படுத்த வேண்டும். நல்லது.

இப்போது தாதிமார் ஒன்று சேர்ந்து ஏதேனும் புதிய ப்ளான் உருவாக்குங்கள். (தாதி ஜானகி - பாபா, ஜனவரி மாதத்திற்கு மிகுந்த மகத்துவம் உள்ளது. ஜனவரி மாதத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து புருஷார்த்தம் செய்ய வேண்டும். அந்த மாதிரி சேவையின் ஏதாவது ப்ளான் உருவாக வேண்டும். இதனால் அனைவரின் மனதிலிருந்தும் அன்போடு வெளிப்பட வேண்டும் - மேரா பாபா! இது போல் எனது பாவனை உள்ளது) பாப்தாதா புது வருடத்தில் புதுமையை விரும்புகிறார். அதே சம்ஸ்காரத்தை விரும்பவில்லை. ஒவ்வொரு குழந்தையும் பாப்-சமான் தென்பட வேண்டும். பிரம்மா தந்தையைப் பின்பற்றுங்கள். சூழ்நிலைகள், பிரச்சினைகள் அனைத்தும் (பிரம்மா) பாபாவிடம் வந்தன. ஆனால் ஃபரிஸ்தா ஆகி விட்டார். எனவே ஃபரிஸ்தா ஆகியே தீர வேண்டும். இந்த திட சங்கல்பம் ஒவ்வொரு வரும் தனக்குத்தானே மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் தனக்குத்தானே செய்வீர் களானால் கவனம் இருக்கும். நான் ஆக வேண்டும், அவ்வளவு தான். மேலும் நீங்கள் ஆகும் போது இயற்கையாக வைப்ரேஷன் பரவும். ஆக, இப்போது என்ன லட்சியம் வைத்தீர்கள்? ஃபரிஸ்தா ஆகியே தீர வேண்டும். சொல்லுங்கள், பக்கா இல்லையா? நல்லது. அனைவருக்கும் மிகமிக பாப்தாதாவின் உள்ளத்தின் அன்பு மற்றும் வாழ்த்துகள்!

ஆசீர்வாதம்:
அனைத்துக் கணக்குகள் மற்றும் உறவுகளை ஒரு பாபாவுடன் வைக்கக் கூடிய டபுள் லைட் ஃபரிஸ்தா ஆகுக.

டபுள் லைட் ஃபரிஸ்தா ஆவதற்கு தேக உணர்விலிருந்தும் அப்பாற்பட்டு இருங்கள். ஏனென்றால் தேக உணர்வு என்பது மண். இதன் சுமையும் இருக்குமானால் பாரமான தன்மை இருக்கும். ஃபரிஸ்தா என்றால் தனது தேகத்துடனும் கூட உறவு கிடையாது. பாபா கொடுத்துள்ள உடலையும் பாபாவுக்குக் கொடுத்தாயிற்று. தனது பொருளை வேறு ஒருவருக்குக் கொடுத்து விட்டால் தனது தொடர்பு (உரிமை) முடிந்து விட்டது. அனைத்துக் கணக்கு-வழக்குகளும், அனைத்துக் கொடுக்கல்-வாங்கலும் பாபாவுடன், மற்ற அனைத்துப் பழைய கணக்குகள் மற்றும் உறவுகள் முடிந்தன. அத்தகைய சம்பூர்ண பெகர் (யாசிப்பவர்) தான் டபுள்லைட் ஃபரிஸ்தா ஆவார்.

சுலோகன்:
தன்னுடைய விசேஷத் தன்மைகளைப் பிரயோகத்தில் கொண்டு வருவீர்களானால் ஒவ்வோரடியிலும் பிராப்தியை அனுபவம் செய்வீர்கள்.


அவ்யக்த சமிக்கை: பரோபகார பாவனையால் (மற்றவர்களுக்கு உதவி செய்யும் உணர்வினால்) நிரம்பப்பெற்று தீமை செய்பவருக்கும் நன்மை செய்யுங்கள்

எந்த ஓர் ஆத்மாவிடம் இருந்தும் சிறிது பெற்றுக் கொண்டு கொடுப்பதற்கான ஆசை இருக்கக் கூடாது. சங்கல்பத்திலும் கூட இது வரக்கூடாது - இவர் செய்தால் நானும் செய்வேன். இவர் மாறினால் நானும் மாறுவேன். அவர் கொஞ்சம் மாறினால் நானும் கொஞ்சம் மாறுவேன்.. யாசிப்பவரையும் பெரும் செல்வந்தராக ஆக்குபவர் - அபகாரிக்கும் உபகாரம் செய்பவர் தாம் பரோபகாரத்தின் பாவனையால் நிரம்பியவர் ஆவார்.