06-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனக்குத் தானே
உறுதி எடுத்துக் கொள்ளுங்கள், நான் மிக-மிக இனிமையாக ஆக
வேண்டும். அனைவரையும் சுகத்தின், அன்பின் பார்வையுடன் பார்க்க
வேண்டும். யாருடைய பெயர்-ரூபத்திலும் (வடிவத்தில்) சிக்கிக்
கொள்ளக் கூடாது.
கேள்வி:
யோகத்தின் சித்தி (பலன்) எது?
உறுதியான (பக்கா) யோகியின் அடையாளம் கூறுங்கள்?
பதில்:
அனைத்துக் கர்மேந்திரியங்களும்
முற்றிலும் சாந்தமாக, குளிர்ந்ததாக ஆகி விடும் - இது தான்
யோகத்தின் சித்தியாகும். யாருடைய கர்மேந்திரியங்கள் ஒரு
சிறிதும் சஞ்சல மடையாமல் உள்ளனவோ, அவர் தான் பக்கா யோகி ஆவார்.
அணுவளவும் எந்த ஒரு தேகதாரி மீதும் கண்கள் மூழ்கி விடாதிருக்க
வேண்டும். இனிமையான குழந்தைகளே, இப்போது நீங்கள் இளைஞர்
கிடையாது. உங்களுக்கு இப்போது வானப்ரஸ்த நிலை.
பாடல்:
விழித்தெழுங்கள் பிரியதரிசினிகளே,
விழித்தெழுங்கள்.........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள்.
இதனுடைய அர்த்தத்தைப் பற்றி மனதில் விசார் சாகர் மந்தன் செய்ய
வேண்டும். மேலும் குஷியில் இருக்க வேண்டும். ஏனென்றால் இவை புது
உலகத்திற்கான புது விசயங்கள். இந்தப் புது விசயங்களை இப்போது
கேட்க வேண்டும். குழந்தைகள் இப்போது அறிவார்கள், புது உலகை
ஸ்தாபனை செய்பவர் ஒன்றும் மனிதராக இருக்க முடியாது. நீங்கள்
இந்த விசயங்களைக் கேட்கும் போது புரிந்துக் கொள்கிறீர்கள்,
இவையோ 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட நடந்த, இருந்த பழைய
விசயங்கள், அவை மீண்டும் புதிதாகச் சொல்லப்படுகின்றன. ஆக,
பழையது புதிய தாகவும் புதியது பழையதாகவும் ஆகி விடுகின்றது.
இப்போது நீங்கள் அறிவீர்கள், 5000 ஆண்டுகளுக்கு முந்தைய அதே
விசயங்களை பாபா புதியதாக ஆக்கிச் சொல்கிறார். விசயம் அதே தான்.
எதற்காகச் சொல்கிறார்? புது உலகத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக.
இதில் ஞான நாட்டியம் ஆட வேண்டியுள்ளது. பக்தியிலும் கூட அநேகர்
நாட்டியமாடுகின்றனர். நாலாபுறமும் சுற்றி வந்து
நாட்டியமாடுகின்றனர். ஞானத்தின் நாட்டியமோ முற்றிலும் சுலப
மானதாகும். அதில் கர்மேந்திரியங்கள் அதிகமாக செயல்படுகின்றன.
முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இதுவோ உள்ளுக்குள் மட்டும் ஞான
நாட்டியம் நடைபெறுகின்றது. சிருஷ்டிச் சக்கரம் எப்படிச்
சுற்றுகிறது - அந்த ஞானம் புத்தியில் உள்ளது. இதில் எந்த ஒரு
கஷ்டமும் இல்லை. ஆம், நினைவு செய்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது.
குழந்தைகளில் அநேகர் ஃபெயிலாகி விடு கின்றனர். எங்கேயாவது கீழே
விழுந்து விடுகின்றனர். அனைத்திலும் முக்கிய விசயம் -
பெயர்-வடிவங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆண்-பெண் காமவசமாகி
பெயர்-வடிவங்களில் சிக்கிக் கொள்கின்றனர் இல்லையா? கோபம்,
பெயர்-வடிவங்களில் சிக்க வைப்பதில்லை. முதல்-முதலில் இதில்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும்-எந்த ஒருவரின்
பெயர்-வடிவத்திலும் சிக்கக் கூடாது. தன்னை ஆத்மா என உணர
வேண்டும். நாம் ஆத்மா அசரீரியாக வந்தோம், அசரீரி ஆகிச் செல்ல
வேண்டும். இந்த சரீரத்தின் உணர்வை விட வேண்டும். இந்தப்
பெயர்-வடிவத்தில் சிக்குவதென்பது மிகவும் கெட்ட நோயாகும். பாபா
குழந்தைகளுக்கு எச்சரிக்கை தருகிறார். ஒரு சிலர் இவ்விசயத்தைப்
புரிந்துக் கொள்வதில்லை. பெயர்-வடிவத்தில் சிக்கி
யிருக்கிறீர்கள் என்று பாபா வீணாகச் சொல்கிறார் என்று அவர்கள்
சொல்கின்றனர். ஆனால் இது மறைமுகமான நோயாகும். அதனால் நாயகன்
நாயகி களை, அல்லது தந்தை குழந்தைகளை எழுப்புகிறார். குழந்தைகளே,
எழுந்தி ருங்கள், இப்போது மீண்டும் கலியுகத் திற்குப் பிறகு
சத்யுகம் வரப் போகிறது. பாபா ஆத்ம ஜோதியைப் பிரகாசிக்கச்
செய்வதற்காக வந்துள்ளார். மனிதர்கள் இறந்து விட்டால் அவர்களின்
ஜோதியை ஏற்றி வைக்கின்றனர். பிறகு தீபத்தை அணைந்து விடாமல்
கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். ஆத்மா இருளில் இருந்து விடக்
கூடாது. உண்மையில் இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயங்கள்.
ஆத்மாவோ ஒரு விநாடியில் சென்று விடுகிறது. அநேக மனிதர்கள்
ஜோதியையும் கூட பகவான் என ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரம்மத்தைப்
பெரிய ஜோதி எனச் சொல்கின்றனர். பிரம்ம சமாஜத் தினருக்குக்
கோவில் உள்ளது. அங்கே இரவும் பகலும் ஜோதி ஏற்றி வைக் கின்றனர்.
எவ்வளவு செலவு ஆகின்றது! நெய் வீணாக செலவாகிறது. அங்கே அதை
ஊற்ற வேண்டிய தேவை கிடையாது. நினைவு நெய்யின் வேலையைச்
செய்கிறது. நினைவு என்பது நெய் போன்றது. ஆக, இனிமையிலும்
இனிமையான குழந்தைகள் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். புதிய
விசயமாக இருப்பதன் காரணத்தால் தான் சண்டை நடைபெறுகின்றது. பாபா
சொல்கிறார், நான் வருவது, இனிமையான குழந்தைகளிடம் பாரதத்தில்
தான் வருகிறேன். ஒருவருக்கு தான் பிறந்த தேசம் பிரியமானதாக
இருக்குமல்லவா? மீண்டும் நான் எனது பாரத தேசத்தில் தான்
வருகிறேன். கீதையில் கிருஷ்ணரின் பெயர் இல்லாதிருந்தால்
மனிதர்கள் அனைவரும் சிவ பாபாவை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
சிவாலயத்திற்கு எவ்வளவு பேர் செல்கின்றனர்! பெரிய திலும் பெரிய
கோவிலாக சோமநாதர் கோவில் இருந்தது. இப்போதோ எவ்வளவு ஏராளமான
கோவில்கள் உருவாகியுள்ளன! எல்லையற்ற தந்தையை ஏற்றுக் கொண்டது
போல் கிருஷ்ணரை இந்த அளவுக்கு அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை.
ஆக, இந்தச் சமயம் இவரைப் போன்ற பிரியமான பொருள் உங்களுக்கு
வேறெதுவும் இல்லை. இதில் பிரம்மா விற்கு மகிமை எதுவும் கிடையாது.
இதுவோ நிராகாரின் மகிமை, அவர் எதையும் அனுபவிக் காதவர்.
எல்லையற்ற தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால் அவரிடமிருந்து
சொர்க்கத் தின் ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும்
இல்லையா?
இன்று-நாளை எனச் சொல்லியே காலன் ஒரு நாள் விழுங்கி (கொண்டு
சென்று) விடுவான். சமயம் இன்னும் கொஞ்சம் தான் பாக்கி உள்ளது.
பாபாவிடமிருந்து ஆஸ்தியையோ பெற்றுக் கொள்ளுங்கள். எப்போது
கருத்தை (ஆராய்வை) எழுதுகின்றனரோ, அப்போது புரிய வைக்கவும்
வேண்டும். அவர் எல்லையற்ற தந்தை என நிச்சயம் செய்கிறீர்கள்
என்றால் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான முயற்சி
செய்யுங்கள். இல்லையென்றால் வெளியில் சென்றதுமே மறந்து
விடுவீர்கள். பாபாவோ கல்யாண்காரி (நன்மை செய்பவர்) இல்லையா?
பாபா சொல் கிறார், இந்த யோகத்தினால் தான் உங்களுடைய அனைத்து
துக்கங்களும் 21 பிறவிகளும் விலகிப் போகும். பெண் குழந்தைகள்
வீட்டிலும் கூட, இப்போது அனைத்து துக்கங்களையும் போக்கக்
கூடியவராகிய எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதால் தான்
தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆவீர்கள் என்று புரிய வைத்துக்
கொண்டே இருக்க வேண்டும். தூய்மையாகவோ அவசியம் இருக்க வேண்டும்.
தூய்மையின் விசயம் முக்கியமானதாகும். எவ்வளவுக் கெவ்வளவு
நினைவில் அதிகமாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு இந்திரியங்களும்
சாந்தமாகி விடும். யோகத்தின் சித்தி (குறிக்கோள்) முழுமையாகாத
வரை இந்திரியங்களும் கூட சாந்தமாகாது. ஒவ்வொருவரும் தன்னை
சோதிக்க வேண்டும்-காம விகாரம் என்னை ஏமாற்றாமல் உள்ளதா? நான்
பக்கா யோகியாக இருக்கிறேன் என்றால் எந்த ஒரு சஞ்சலமும் இருக்கக்
கூடாது. இது வானப்ரஸ்த நிலை போலத்தான்-இதில் பாபாவை நினைவு
செய்து கொண்டே இருக்க வேண்டும். பாபா குழந்தைகள் அனைவருக்குமே
புரிய வைக்கிறார். எப்போது நீங்கள் நல்ல யோகியாக ஆகிறீர்களோ,
கண்கள் எங்கும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கு மானால் பிறகு உங்கள்
இந்திரியங்கள் சாந்தமாகி விடும். இது அனைவரையும் ஏமாற்றக்
கூடியது என்பது முக்கியமாகும். யோகத்தில் மனநிலையும்
நல்லபடியாக உறுதியாகி விடும். பிறகு நாம் இளமையிலேயே வானப்ரஸ்த
நிலையை அடைந்து விட்டோம் என அனுபவம் ஆகும். பாபா
சொல்கிறார்-காமம் மகாசத்ரு. ஆக, தன்னைச் சோதித்துக் கொண்டே
இருங்கள். எவ்வளவு நினைவில் இருக்கிறீர்களோ, அவ்வளவு
கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக் கொண்டே செல்லும். மேலும் மிக
இனிமையான சுபாவம் அமைந்து விடும். நான் முதலில் எவ்வளவு
கடுமையாக இருந்தேன், இப்போது எவ்வளவு இனிமையான வனாக மாறி
விட்டேன் என்பது அனுபவமாகும். பாபா அன்பின் கடல் இல்லையா,
அதனால் குழந்தைகளும் அது போல் ஆக வேண்டும். ஆகவே பாபா
சொல்கிறார், அனைவரிடமும் அன்பின் பார்வை இருக்க வேண்டும்.
யாருக்காவது துக்கம் கொடுப்பீர்களானால் துக்கமடைந்தே இறந்து
விடுவீர்கள். அதனால் மிகவும் இனிமையானவராக ஆக வேண்டும்.
பாபா சொல்கிறார் - நான் ரூப்-பஸந்த் (யோகி மற்றும் ஞானி)
இல்லையா? பாபாவிடமிருந்து எவ்வளவு விலை மதிக்க முடியாத ஞான
ரத்தினங்கள் கிடைக்கின்றன! அவற்றால் நீங்கள் (புத்தி என்ற) பையை
நிரப்பிக் கொள்கிறீர்கள். அந்த மனிதர்கள் சங்கருக்கு முன்
போய்க் கேட்கின்றனர்-பையை நிரப்புங்கள் என்று. சங்கர் பையை
நிரப்புகிறவர் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்போது
நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஞானக்கடலான பாபா
குழந்தைகளாகிய நமது பையை ஞான ரத்தினங்களால் நிரப்புகிறார்.
நீங்களும் ரூப்-பஸந்த் (யோகி மற்றும் ஞானிகள்). ஒவ்வொருவரின்
ஆத்மாவும் ரூப்-பஸந்த். தன்னைத்தான் பார்த்துக் கொண்டே
இருங்கள்-நாம் எவ்வளவு ஞான ரத்தினங்களை தாரணை செய்து, ஞான
நாட்டியம் ஆடுகிறோம், அல்லது ஞான ரத்தினங்களை தானம் செய்கிறோம்?
அனைத்திலும் நல்ல ரத்தினம் மன்மனாபவ என்பது. தந்தையை நினைவு
செய்வதன் மூலம் தந்தையின் ஆஸ்தி யைப் பெறுகிறீர்கள். எப்படி
பாபாவிடம் ஞானம் நிறைந்துள்ளதோ, அது போல் பாபா அமர்ந்து
குழந்தைகளைத் தமக்குச் சமமாக ஆக்குகிறார். குருமார்களும்
தங்களுக்குச் சமமாக ஆக்கு கின்றனர். இவர் எல்லையற்ற தந்தை,
இவருடைய ரூபம் புள்ளி. உங்களுடைய வடிவமும் புள்ளி தான்.
உங்களைத் தமக்குச் சமமாக ஞானக்கடலாக ஆக்குகிறார். எவ்வளவு தாரணை
செய்கிறார்களோ, செய்விக்கிறார்களோ....... அவர்கள் நமக்கு
உயர்ந்த பதவி என்று புரிந்து கொள்வார்கள். அநேகருக்கு நன்மை
செய்பவராக ஆவீர்களானால் அநேகரின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
பாபாவும் தினந்தோறும் சேவை செய்கிறார் இல்லையா? இந்த குல்ஜார்
குழந்தை எவ்வளவு இனிமையாகப் புரிய வைக்கிறது! அனைவருக்கும்
பிடித்திருக்கிறது. இப்படிப்பட்ட பிராமணி அனைவருக்கும் கிடைக்க
வேண்டும் என மனம் எண்ணுகிறது. இப்போது ஒரு பிராமணி எல்லா
இடங்களுக்குமோ செல்ல இயலாது. பிறகும் பாபா சொல்கிறார், தான்
நன்றாகப் புரிய வைப்பதாக யார் நினைக்கிறார்களோ, அவர்கள்
ஆல்ரவுண்டு சேவை செய்ய வேண்டும். தானாகவே ஆர்வம் வர வேண்டும்.
நான் சென்டர்களைச் சுற்றி வருவேன்........ நான் அநேகருக்கு
நன்மை செய்ய முடியும், எனது நல்ல நறுமணம் பரவுகிறது என யார்
புரிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் 10-15 தினங்கள் சென்று
சென்டர்களைச் சுற்றி விட்டு வருவேன் என்ற ஆர்வம் கொள்ள வேண்டும்..
ஒருவரைப் பார்த்துப் பிறகு மற்றவர்களும் கற்றுக் கொள்வார்கள்.
யார் செய்வார்களோ, அவர்கள் அடைவார்கள். இந்த சேவை மிகவும் நன்மை
செய்யக் கூடியது. நீங்கள் மனிதர்களுக்கு உயிர்தானம்
கொடுக்கிறீர்கள். இது மிகவும் உத்தமத்திலும் உத்தமமான காரியம்.
பணியில் இருப்பவர்களும் யுக்தியுடன் நேரம் ஒதுக்கி சேவைக்காகச்
செல்ல முடியும். சேவையில் ஈடுபாடு உள்ளவர்கள் மீது பாபா அன்பு
செலுத்த வும் செய்வார். பாலனையும் செய்வார். யாருக்கு சேவையில்
ஆர்வம் உள்ளதோ. அவர்கள் சேவை இல்லாமல் இருக்க முடியாது. பாபா
உதவியும் செய்கிறார் இல்லையா? குழந்தைகள் மிகவும் இரக்க மனம்
உள்ளவர்களாக ஆக வேண்டும். பாவம், அவர்களின் உலகத்தார் வாழ்க்கை
மிகவும் துக்கம் நிறைந்தது. நீங்கள் உயிர் தானம்
கொடுக்கிறீர்கள். யாருக்காவது அவிநாசி ஞான ரத்தினங்களின் தானம்
கொடுப்பதைப் போன்ற சர்வோத்தம ஞான தானம் வேறெதுவும் கிடையாது.
மிகவும் கருணை உள்ளம் கொண்டவராக ஆக வேண்டும். பிராமணி பலவீனமாக
இருக்கும் காரணத்தினால் சேவை மந்தமாக ஆகி விடுகிறது. அதனால்
நல்ல டீச்சர் வேண்டும் எனக் கேட்கின்றனர். எப்போதெல்லாம்
சிந்தனை வருகிறதோ, அப்போது சேவைக்காகச் சென்று விட வேண்டும்.
பாபா, எந்த சென்டர் மந்தமாக உள்ளது, நான் போய் சுற்றிவிட்டு வர
வேண்டும். கண்காட்சிக் கான சித்திரங்களும் உள்ளன. சித்திரங்களை
வைத்துப் புரிய வைப்பதால் மிக நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.
நாம் சேவையை எப்படி அதிகப் படுத்துவது என்பது பற்றிச் சிந்தனை
செய்ய வேண்டும். பாபாவும் அனைவரின் வாழ்க்கையை வைரம் போன்றதாக
ஆக்குகிறார். குழந்தைகள் நீங்களும் கூட சேவை செய்ய வேண்டும்.
வந்தே மாதரம் எனப் பாடப்பட்டுள்ளது. ஆனால் அர்த்தத்தைப்
புரிந்து கொள்ள வில்லை. பதீத் மனிதர்களின் அல்லது (வசித்த) பூமி
முதலியவற்றின் வந்தனை ஒரு போதும் செய்யப்படு வதில்லை. இதுவோ 5
தத்துவங்களால் உருவாக்கப் பட்ட சரீரம் என்றால் சரீரத்திற்குப்
பூஜை செய்வதென்பது பூதத்தின் பூஜை ஆகின்றது. சிவபாபாவுக்கோ
சரீரம் கிடையாது. அவருக்கு செய்யப்படும் பூஜை அனைத்திலும்
உத்தமமானது. மற்றவை மத்திமம் (இடைப்பட்டது). தற்சமயமோ
மனிதர்களுக்கும் கூடப் பூஜை செய்து கொண்டே இருக்கின்றனர்.
அவர்கள் தூய்மையற்றவர்கள். மகான் ஆத்மாக்களோ, தேவதைகள் ஆவர்.
சந்நியாசிகளைக் காட்டிலும் அவர்கள் அதிகத் தூய்மையானவர்கள்.
இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் தேவதை ஆகிக்
கொண்டிருக்கிறோம். பாபா நமக்கு இந்த அவிநாசி ஞான ரத்தினங்களை
தானம் செய்வதற்குக் கற்றுத் தருகிறார். இதைப் போன்ற உயர்ந்த
தானம் வேறு எதுவும் கிடையாது. ஒரு தந்தையை மட்டுமே நினைவு
செய்ய வேண்டும். சிவன் மற்றும் லட்சுமி-நாராயணரின் சித்திரங்களோ
இருக்கின்றன. ஒவ்வொரு வரும் அவர்களின் வீட்டில் வைத்திருந்தால்
நினைவிருக்கும். சிவபாபா நம்மை இந்த லட்சுமி-நாராயணர் போல
ஆக்கிக் கொண்டிருக்கிறார். இச்சமயம் நீங்கள் அது போல் ஆகிக்
கொண்டி ருக்கிறீர்கள். சொர்க்கத்தைப் படைப்பவர் சிவபாபா.
சத்யுகத்திலோ ஆஸ்தி தர மாட்டார். இந்தக் கடைசிப் பிறவியில்
சிவபாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் இது
போல் ஆவீர்கள். மற்ற அனைத்து விசயங்களையும் விட்டுவிட்டு சேவை
மற்றும் சேவை தான் முக்கியம். பாபாவை நினைவு செய்து கொண்டே
இருங்கள் - இதுவும் கூடப் பெரிய சேவை செய்வதாகும். தத்துவங்கள்
முதலிய அனைத்தும் தூய்மை யாகி விடும். யோகத்தின் மகிமை மிகப்
பெரியதாகும். உலகத்தில் யோக ஆசிரமங்களோ அநேகம் உள்ளன. ஆனால் அவை
அனைத்தும் சரீர சம்மந்தமான ஹடயோகங்கள். உங்களுடையது
இராஜயோகமாகும். இதனால் உங்கள் துன்பங்கள் விலகிப் போய் விடும்.
அந்த அநேக விதமான ஹடயோகம் முதலிய வற்றால் ஏணிப்படியில் இறங்கியே
வந்திருக் கிறீர்கள். முக்கியமான விசயம் நினைவினுடைய தாகும்.
பார்க்க வேண்டும், நமது மனம் எங்காவது விகாரத்தின் பக்கம்
போகாமல் இருக்கிறதா? விகாரிகள் தான் (பதீத்) தூய்மையற்றவர்கள்
எனச் சொல்லப்படுகின்றனர். அதாவது சோழி போன்றவர்கள். விகாரத்தில்
விழுவதால் தனக்குத் தானே நஷ்டம் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
யார் செய்கிறார்களோ, அவர்கள் பலன் அடைவார்கள். பாபா
பார்த்தாலும் சரி, பார்க்கவில்லை என்றாலும் சரி. தன்னைத் தான்
சோதிக்க வேண்டும் - நாம் பாபாவின் சேவை செய்கிறோமா? நமக்குள்
ஏதேனும் அவகுணம் இல்லாதிருக்கிறதா? இருந்தால் வெளியேற்றி விட
வேண்டும். தன்னிட மிருந்து அவகுணங்களை வெளியேற்றுவதற்காக பாபா
நிறைய யுக்தி சொல்லிப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்.
நிர்குணம் என்பதன் அர்த்தமும் கூட யாருக்கும் புரிய வில்லை.
நிர்குண பாலகர்களின் (குழந்தைகளின்) மண்டலி (சபை) என்ன செய்ய
முடியும், அவர்களிடம் எந்த ஒரு குணமும் இல்லாத போது? அர்த்தம்
இல்லாமல் என்ன வருகிறதோ, அதைச் சொல்லி விடுகின்றனர். அநேக
வழிமுறைகள் உள்ளன இல்லையா? உங்களுக்கு ஒரே வழிமுறை கிடைக்கிறது.
இதனால் உங்களுக்கோ அளவற்ற குஷி இருக்க வேண்டும். பாபா இதை
மட்டும் சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தாமரை
மலருக்குச் சமமாக ஆகுங்கள். மனம்-சொல்-செயலால் தூய்மையாகுங்கள்.
குழந்தைகள் நீங்கள் அறிவீர் கள், பிராமணர்களாகிய நாம்
ஸ்ரீமத்படி நம்முடைய உடல்-மனம்-செல்வத்தினால் தங்களுக்கும் முழு
உலகத்திற்கும் சேவை செய்து கொண்டிருக்கிறோம். பாபா பாரதத்தில்
தான் வருவார் இல்லையா? பாண்டவர்கள் நீங்கள் பாரதத்தை
சொர்க்கமாக ஆக்குகிற சேவை செய்து கொண்டி ருக்கிறீர்கள். நீங்கள்
தங்களுடைய காரியத்தைச் செய்து கொண்டி ருக்கிறீர்கள். கடைசியில்
வெற்றி பாண்டவர்களுக்குத் தான் கிடைக்கப்போகிறது. இதில்
சண்டையின் விசயம் கிடையாது. நீங்கள் இரட்டை அஹிம்சையாளர்கள்.
விகாரத்திலும் செல்வதில்லை, துப்பாக்கி யால் சுடுவதும் இல்லை.
வன்முறையினால் யாரும் உலகின் மீது இராஜ்யம் (அரசாட்சி) செய்ய
இயலாது. பாபா புரிய வைத்துள்ளார்- அந்த இருவரும் (கிறிஸ்தவர்கள்)
தங்களுக்குள் ஒன்று பட்டால் உலகின் மீது இராஜ்யம் செய்ய
முடியும். ஆனால் டிராமாவில் அது போல் இல்லை. கிறிஸ்தவர்கள் தான்
கிருஷ்ணபுரியை அபகரித்துள்ளனர். முதலில் பாரதம் கிருஷ்ணரின்
புரியாகத் (இராஜ்யமாகத்) தான் இருந்தது இல்லையா? அவர்கள் சண்டை
யிட்டு இராஜ்யத்தை அடைந்தனர், நிறைய செல்வத்தை அள்ளிச் சென்றனர்.
இப்போது மீண்டும் செல்வம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது.
மேலும் நீங்கள் மீண்டும் உலகத்தின் எஜமானர் ஆகி விடுகிறீர்கள்.
பாபா எவ்வளவு யுக்திகள் சொல்கிறார்! அவர்கள் தான் உங்கள்
இராஜ்யத்தை அபகரித்துக் கொண்டனர். பிறகு அவர்கள் தங்களுக்குள்
சண்டையிட்டுக் கொள் கின்றனர். உலகத்தின் அதிபதியாக நீங்கள்
ஆகிறீர்கள். எவ்வளவு பெரிய இராஜ்யம்! முயற்சி இதில் மட்டுமே
உள்ளது-நினைவு செய்து கொண்டே இருங்கள், தங்களின் ஆஸ்தியைப்
பெறுங் கள். இதில் சலிப்படையக் கூடாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மற்ற அனைத்து விசயங்களையும் விட்டுவிட்டு ஞான தானம் செய்ய
வேண்டும். ரூப்-பஸந்த் (யோகி-ஞானி) ஆக வேண்டும். தன்னுடைய
அவகுணங்களை நீக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களைப்
பார்க்கக் கூடாது.
2) தன்னுடைய சுபாவத்தை மிக இனிமையானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அனைவரிடத்தும் அன்பு நிறைந்த பார்வை வைக்க வேண்டும். யாருக்கும்
துக்கம் கொடுக்கக் கூடாது. கர்மேந்திரியங்களை வென்றவராக ஆக
வேண்டும்.
வரதானம்:
முழுமையான அர்ப்பணிப்பு (சம்பூர்ண சமர்ப்பண்) என்ற விதியின்
மூலமாக, அனைத்து தெய்வீக குணங்களாலும் (சர்வகுண சம்பன்ன)
நிறைந்தவராக ஆகக்கூடிய முயற்சியில் சதா வெற்றி பெறுபவர் ஆகுக.
யாருடைய எண்ணத்தில் கூட உடல் உணர்வு இல்லையோ, அதுவே முழுமையான
அர்ப் பணிப்பு என்று அழைக்கப்படுகின்றது. தனது உடலின் உணர்வை
அர்ப்பணித்து விடுவது, நான் இன்னார் (பெயர்/பதவி) என்ற
எண்ணத்தையும் அர்ப்பணித்து முழுமையாகத் தங்களை ஒப்படைப்பவர்கள்,
அனைத்துக் குணங்களிலும் நிறைந்தவர்களாக ஆகுகின்றார்கள். அவர்
களிடம் எந்தவொரு குணத்தின் குறைபாடும் இருப்பதில்லை. யார்
முழுமையாக அர்ப்பணித்து, அனைத்துக் குணங்களும் நிறைந்தவர்களாக
ஆகுவதற்கான அல்லது முழுமை யடைவதற் கான இலக்கை வைக்கின்றார்களோ,
அத்தகைய முயற்சி செய்பவர்களுக்கு (புருஷார்த் திகளுக்கு)
பாப்தாதா சதா விஜயி பவ (சதா வெற்றி பெற்றவராக ஆகுக) என்ற
வரதானத்தை அளிக்கின்றார்.
சுலோகன்:
மனதைத் தன் வசப்படுத்துபவர்களே (கட்டுப்படுத்துபவர்களே)
மன்மனாபவ என்ற நிலையில் நிலைத்திருக்க முடியும்.
அவ்யக்த சமிக்ஞை: அபவித்திரதாவின் விதையைக் கூட அழித்துவிட்டு,
சம்பூரண தூய்மையானவராக ஆகுங்கள்
தூய்மை மற்றும் தூய்மையற்ற தன்மைக்கு முக்கியக் காரணம் நினைவு
(ஸ்மிருதி) ஆகும். எப்பொழுது, இவர் ஒரு தேவி (தெய்வீக ஆத்மா)
என்ற நினைவு இருக்கின்றதோ அப்பொழுது, அந்த நினைவானது நம்முடைய
பார்வை (திருஷ்டியை) மற்றும் எண்ண ஓட்டத்தை (விருத்தியை)
தூய்மையானதாக ஆக்குகின்றது; ஆனால், இவர் ஒரு பெண் என்ற நினைவு
வரும்போது, அந்த நினைவானது, நம்முடைய எண்ண ஓட்டம் மற்றும்
பார்வையை தூய்மையற்ற தன்மையை நோக்கி இழுக்கின்றது. அங்கு
ரூபத்தை (வெறும் வெளிப்புற உடலமைப்பைப்) பார்ப்பார்கள், ஆனால்
தேவி என்ற நினைவில் ரூஹானியத்தை (ஆன்மீகத் தன்மையை) காண்பார்கள்.