06.09.26 காலை முரளி
ஓம் சாந்தி 19.10.2011 பாப்தாதா,
மதுபன்
வீண் சமயம், வீணான சங்கல்பங்களை வென்றவர் ஆகி, தங்களுக்குள்
சம்ஸ்கார நல்லிணக்கத்தின் நடனம் ஆடுவதற்கான சங்கல்பம் வையுங்கள்
இன்று பாப்தாதா தம்முடைய நாலாபுறம் உள்ள இனிமையிலும் இனிமையான,
மிகமிக அன்பான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அனைவரும் மிகுந்த அன்போடு தங்களின் நினைவைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு அன்பை பாபாவிடம் மட்டுமே
காட்டுகிறார்கள். இந்தப் பரமாத்ம அன்பு இப்பொழுது மட்டுமே
கிடைக்கின்றது. ஒவ்வொரு குழந்தையும் அன்பில் மூழ்கி
இருக்கிறார்கள். பாபாவும் ஒவ்வொரு குழந்தையின் அன்புக்குப்
பிரதிபலன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆஹா குழந்தைகளே ஆஹா!
சிலர் அருகிலும், சிலர் தொலைவிலும் இருந்தாலும் ஒவ்வொரு
குழந்தையும் பாபாவின் உள்ளத்தில் நிறைந்திருக் கிறார்கள்.
அனைவரின் இதயங்களிலும் இவ்வளவு அன்பைச் செலுத்துபவர் யாரோ என்ற
பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த பாபா மற்றும்
குழந்தைகளின் ஆன்மிக அன்பானது ஒவ்வொரு குழந்தையையும்
தேகத்திலிருந்து விடுபட்டவராகவும், பாபாவுக்கு அன்பானவராகவும்
ஆக்கக்கூடியது. மேலும் இந்த அன்பு இப்போது தான்
குழந்தைகளுக்குக் கிடைத்துள்ளது. இது குழந்தைகளை எதிலிருந்து
எதுவாக ஆக்கக்கூடியது! இந்த அன்பானது இந்த ஒரு பிறவியில்
மட்டும் தான் கிடைக்கின்றது. பாபாவும் குழந்தைகளின் அன்பைப்
பார்த்து, குழந்தைகளின் அன்பில் மூழ்கி விடுகிறார்.
இன்று பாப்தாதா ஒவ்வொருவரின் நெற்றியிலும் இந்த மூன்று
பாக்கியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்று பாபாவின்
சொரூபத்தில் கிடைக்கின்ற ஆஸ்தியின் பாக்கியம். இரண்டாவது,
ஆசிரியர் ரூபத்தில் உயர்ந்த படிப்பிற்கான பாக்கியம். மூன்றாவது,
சத்குருவின் ரூபத்தில் வரதானங்களின் பாக்கியம். ஒவ்வொருவரின்
நெற்றி இந்த மூன்று பாக்கியங்களால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
பாப்தாதாவும் கூட தம்முடைய பாக்கியசாலிக் குழந்தைகளைப்
பார்த்துப் புன்முறுவல் செய்து கொண்டிருக்கிறார். முன்னால்
அமர்ந்திருந்தாலும் சரி, தூரத்தில் இருந்தாலும் சரி, இதயத்தின்
நெருக்கத்தில் இருக்கிறீர்கள். அத்தகைய குழந்தைகள் மற்றும்
தந்தைக்கிடையிலான அன்பு முழுக் கல்பத்திலும் இப்போது தான்
கிடைக்கிறது. இந்த அன்பின் அனுபவத்தை மற்றவரகளுக்கும்
செய்வித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது சிலர் நினைக்
கிறார்கள் - இந்த பிராமண ஆத்மாக்களுக்கு ஏதோ கிடைத்துள்ளது.
அதற்கான தெளிவு ஏற்பட்டுக் கொண்டே போகிறது. பாபா பார்த்தார் -
இந்தப் பிளாட்டினம் ஜுபிலியின் பிரபாவம் நாலாபுறமும்
ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளும் உளமார சேவை செய்கிறார்கள்.
திட்டங்களும் தீட்டியிருக்கிறீர்கள். ஆஹா குழந்தைகளே ஆஹா என்று
பாப்தாதாவும் நாலாபுறம் உள்ள குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்லிக்
கொண்டிருக்கிறார். இந்த 75 ஆண்டுகளில் தனது முயற்சியின்
ஆதாரத்தில் நிர்விக்ன நிலை உள்ளவராகி மற்றவர்களையும் ஆக்கிக்
கொண்டு வந்தடைந்து விட்டீர்கள். இப்போது பாபா குழந்தைகளிடம் எதை
விரும்பு கிறார்? சதா ஒவ்வொரு குழந்தையும் பாபாவுக்கு சமமாக ஆக
வேண்டும். எப்படி பிரம்மா பாபா வெற்றி அடைந்தாரோ, அது போல்
ஒவ்வொரு குழந்தையும் சதா வெற்றி அடைய வேண்டும். இதற்காக பிரம்மா
பாபா கூட என்ன செய்தார்? அதே போல் தந்தையைப் பின்பற்றுங் கள்.
நீங்கள் அனைவரும் ஒவ்வோர் அடி எடுத்து வைப்பதற்கு முன் முதலில்
இதை பிரம்மா பாபா செய்வாரா என்று சோதனை செய்யுங்கள். பிரம்மா
பாபா ஒவ்வொரு குழந்தையின் புருஷார்த்தத்திலும் சேவையிலும் உள்ள
குறைகளைத் தெரிந்திருந்தாலும் பலவீனங்கள் மீது இன்னும் அதிக
இரக்கம் மற்றும் நன்மைக்கான பாவனை வைத்தார். தமது பரிவாரத்தின்
ஒவ்வொரு சகோதர-சகோதரி மீதும் சுப பாவனை, சுப ஆசை, இரக்கம்
மற்றும் நன்மைக்கான பார்வையினால் அவர்களுக்கும் சகயோகி ஆகுங்கள்
என்ற இதையே அனைத்துக் குழந்தை களுக்கும் சொல்லி வந்தார்.
பாப்தாதா அன்பு என்ற பாடத்தில் ஒவ்வொரு குழந்தையும் தனது
சக்திக்கேற்றவாறு தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என முதலிலேயே
சொல்லியிருக்கிறார். அன்பினால் தான் முன்னேறிக் கொண்டிருக்
கிறீர்கள். இப்போது பாப்தாதா குழந்தைகளின் அன்பைப் பார்த்துக்
குஷி அடைந்துள்ளார். அன்பு என்ற பாடத்தினால் தான் ஒவ்வொரு
குழந்தையும் வரிசைக்கிரமமாகச் சென்று கொண்டே இருக்கின்றனர்.
அன்பில் கொஞ்சம் சமர்ப்பணம் செய்ய வேண்டி உள்ளது என பாபா
விரும்புகிறார். பாபாவிடம் அன்பு உள்ளது. ஆகையால் எந்த
மாதிரியான சமர்ப்பணம் செய்ய வேண்டும்? பாபா எதை விரும்புகிறாரோ,
அதைப் புரிந்து கொண்டு விட்டீர்கள். புரிந்து கொண்டீர்களா?
தலையை அசையுங்கள். புரிந்து கொண்டிருக்கிறீர்களா? செய்ய
வேண்டும் என்றால் இதற்கும் கூட தைரியம் வேண்டும் இல்லையா?
தைரியமாகக் கை உயர்த்துங்கள். தைரியம் உள்ளதா? நல்லது. தைரியம்
உள்ள குழந்தைகளுக்கு பாபாவின் உதவி எப்போதும் கிடைக்கும்.
இப்போது பாப்தாதா விரும்புகிறார் - ரிசல்ட்டில் பார்க்கப்போனால்
இது வரை முழுத் தூய்மையின் கணக்குப்படி வீண் எண்ணங்கள் கூட
தூய்மையின்மையின் விதையாகும். இந்த வீணான சங்கல்பம் மற்றும்
வீணான சமயம் இவை பெரும்பாலான குழந்தைகளிடம் இப்போது தென்படுவதை
பாப்தாதா பார்த்தார்.. மேலும் வீணான சங்கல்பத்திற்கு மனமே
ஆதாரமாகும். அதை மன்மனாபவ நிலையில் இருக்க விடுவதில்லை.
ஏனென்றால் பாப்தாதா சில காலத்திற்கு முன்பே இந்த சமிக்ஞை
கொடுத்து விட்டார் - எது நடக்க வேண்டுமோ, அது திடீரென்று தான்
நடக்கும். திடீர் என்ற கணக்குப்படி அதிகபட்ச குழந்தைகளிடம்
இந்த வீண் சங்கல்பம் சம்ஸ்காரமாக எழுந்துள்ளதை பாப்தாதா சோதனை
செய்து விட்டார். பிரம்மா பாபா இந்த வீணான நேரம், வீணான
சங்கல்பம் இவற்றில் வெற்றியாளராகி கர்மாதீத் நிலையை
அடைந்துள்ளார். எனவே தந்தையைப் பின்பற்றுங்கள்.
மனம் உங்களது படைப்பு, நீங்கள் மனதின் படைப்பாளர் என்றால் மனதை
நடத்துபவர்கள் நீங்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். மனதைக்
கட்டுப்படுத்தும் சக்தி மற்றும் அதிகார சக்தியைப் பயன்படுத்தும்
எஜமானர்கள் நீங்கள். ஆனாலும் மனம் ஏமாற்றி விடுகின்றது. மனம்
ஒரு குதிரை எனச் சொல்லப் படுகின்றது. ஆனால் உங்களிடம் ஸ்ரீமத்
என்ற கடிவாளம் உள்ளது. இருக்கிறதா கடிவாளம்? ஒரு போதும் மனம்
வீணான எண்ணங்களின் பக்கம் செல்லக் கூடாது. கடிவாளத்தை
இறுக்கமாக வைத்துக் கொள்வதால் வீணான எண்ணங் களின் தூய்மையற்ற
தன்மையைச் சிறிதளவாவது அழித்துவிட முடியும். மனதுக்கு எஜமானராகி
எப்படி பிரம்மா பாபா மனதை சோதனை செய்தாரோ, அதே போல் தினமும்
சோதனை செய்யுங்கள். மேலும் வீணான சங்கல்பத்தை அழியுங்கள். இன்று
பாப்தாதா வீண் சங்கல்பங்களை முடித்துவிட விரும்புகிறார். தீய
எண்ணங்கள் குறைவாக வருகின்றன. ஆனால் வீணானவை அதிகம் உள்ளன.
இதில் தான் சமயம் விரையமாகின்றது. எனவே மனதை வேறு கவர்ச்சிகளில்
வீணாகி விடாதபடி மனதுக்கு எஜமானராகி மனதை பிஸியாக வைத்துக்
கொள்ளுங்கள். இது முடியுமா? இன்று பாப்தாதா அனைவருக்கும் வீணான
எண்ணங்களை அழித்து விடுவதற்கான சங்கல்பத்தைக் கொடுத்துக்
கொண்டுள்ளார். முடியுமா? வீண் சங்கல்பங்களை முடித்து விழாவையும்
கொண்டாடு வோம் என்பவர்கள் கை உயர்த்துங்கள். வீணாகும் சமயத்தைப்
பாதுகாக்க வேண்டும். சமயம் மற்றும் சங்கல்பம் இரண்டையும்
சேமிக்க வேண்டும். ஏனென்றால் பாப்தாதா அனைவரின் சார்ட்டைப்
பார்த்துக் கொண்டிருக்கிறார். சார்ட்டில் இந்தக் குறைபாடு அதிக
பட்சக் குழந்தைகளிடம் இருப்பது தெரிய வந்துள்ளது. மனதின்
எஜமானர்களே உலகின் எஜமானர் ஆகியிருக்கிறார்கள். எப்படி பிரம்மா
பாபா மனதை வென்றதால் உலகை வென்றாரோ, அது போல் இப்போது
உங்களையும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார். இப்போது அட்வான்ஸ்
பார்ட்டியும் கூட எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. நான்கு மணிக்கு
அட்வான்ஸ் பார்ட்டி குழந்தைகளும் கூட வதனத்துக்கு வந்து எப்போது
முக்திக்கான வாசலைத் திறப்பீர்கள்? என்று கேட்கிறார்கள்.
திறப்பவர்கள் யார்? நீங்கள் அனைவரும் முக்திக்கான வாசலைத்
திறப்பவர்கள் தாம் இல்லையா? பாப்தாதாவிடம் எது வரை என்று
அட்வான்ஸ் பார்ட்டியும் ஆன்மிக உரையாடல் செய்கிறார்கள். எனவே
பாபா உங்களிடம் கேட்கிறார் - எது வரை? என்ன பதில் கொடுக்கப்
போகிறீர்கள்? முதல் வரிசையில் இருப்பவர்கள் சொல்லுங்கள் - எது
வரை? ஒவ்வொரு காரியத்திற்கும் தேதி முடிவு செய்கிறீர்கள்
இல்லையா? இந்தக் காரியத்திற்கான தேதி எப்போது வரை? பிரம்மா பாபா
ஃபரிஸ்தா ரூபத்தில் அழைப்பு விடுக்கின்றார். சொல்ல முடியுமா?
தேதியைச் சொல்ல முடியுமா? சொல்லுங்கள், தேதியைச் சொல்ல முடியுமா?
இப்போது தேதி முடிவாகி விட்டதா? பாண்டவர்கள் கை உயர்த்துங்கள்.
தேதி குறித்து விட்டீர் களா இல்லையா? ஏன்? பாபா, எங்கள் ஆர்வமே
வீட்டுக்குப் போக வேண்டும். வீடு செல்ல வேண்டும், வீடு செல்ல
வேண்டும் என்று தீதி சொல்கிறார்கள். எங்களுக்கு ஆர்வமே
கர்மாதீத் ஆக வேண்டும் என்று தாதி சொல்கிறார்கள். உங்களுக்கு
தீதி தாதியிடம் அன்பு உள்ளது தானே? அன்பு என்பது அனைவரிடமும்
தான். ஏனென்றால் யாரெல்லாம் அட்வான்ஸ் பார்ட்டியில்
சென்றிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரிடமும் உங்களுக்கு அன்பு
உள்ளது. இப்போது அவர்களின் கேள்விக்கு பதில் கொடுங்கள்.
தங்களுக்குள் ஆன்மிக உரையாடல் செய்து பதிலைத் தயார் செய்யுங்கள்.
செய்வீர்களா?
இன்றோ இரட்டை வெளிநாட்டினரின் சந்திப்பிற்கான நாள் இல்லையா? ஆக,
இரட்டை வெளிநாட்டினரும் தங்களுக்குள் ஆலோசனை செய்து தேதி சொல்ல
வேண்டும் மற்றும் பாரதவாசிகளும் இதைப் பற்றிச் சர்ச்சை செய்து
சொல்ல வேண்டும். பதில் உள்ளதா? ஆம் சொல்லுங்கள், சொல்லுங்கள்..
யார் சொன்னார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். (மோகினி சகோதரி,
(தற்போதைய தலைமை நிர்வாகி) நியு யார்க் - பாபா, தேதியை நீங்கள்
தீர்மானம் செய்யுங்கள், நாங்கள் எவர்-ரெடியாக இருக்கிறோம்)
இல்லை, நீங்கள் தீர்மானியுங்களேன். நீங்கள் தாம் தயாராக
வேண்டும் இல்லையா? இந்த தீபாவளியில் தீபாவளி கொண்டாடுங்கள்
என்று பாபா சொல்வார் பரவாயில்லையா? எவரெடியா? எவரெடியா?
சீக்கிரம் என்று சொல்வேன். அதனால் நீங்கள் சொல்லுங்கள் எனச்
சொல்கிறேன். (டாக்டர் நிர்மலா - பாபா, ஒரு வருடம் கொடுங்கள்)
நல்லது, நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்களா? இவர் ஒரு
வருடம் என்று சொல்கிறார். யார் ஒரு வருடம் தேவை எனப் புரிந்து
கொண்டிருக் கிறீர்களோ, கை உயர்த்துங் கள். பெரிதாகக் கை
உயர்த்துங்கள். நல்லது, ஒரு வருடம் என்பவர்கள் பெயர்களைக்
குறித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது சிலர் சிரிக்கிறார்கள்.
சொல்லுஙகள் (நிர்வயர் - இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லை.
இன்றே இப்போதே ஏற்பட வேண்டும்) கை தட்டுங்கள். நல்லது, மிக
நல்லது. இப்பொழுதே அனைவரும் தங்கள் மனதால் ஒரு போதும் வீண்
சங்கல்பம் வரவிட மாட்டோம் என்று உறுதிமொழி எடுங்கள். இது
முடியுமா? இப்பொழுதி லிருந்து நவ் ஆர் நெவர் எனச் சொல்வோம்.
குறைந்த பட்சம் எந்த வீணான சங்கல்பமும் வரவிட மாட்டேன். நேரத்தை
வீணாக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்போம். இதில் யார் தயாரோ,
கை உயர்த்துங்கள். பெரும்பாலோர் உயர்த்தினீர்கள். கொஞ்சம் சமயம்
பிடிக்கும் என்பவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது. இந்த
தீபாவளியில் இந்த உறுதிமொழி எடுக்க வேண்டும். யாரெல்லாம்
அதிகபட்சம் கை உயர்த்தினார்களோ, அவர்கள் இவற்றை ஸ்வாஹா செய்ய
வேண்டும். எனவே உங்கள் அனைவரின் சார்பாக திட சங்கல்பத்திற்காக
இன்று கேக் வெட்டுவோம். விருப்பம் தானே? இன்றைய கேக் இந்த திட
சங்கல்பத்தின் ரகசியமாகும். ஏனென்றால் அனைவரும்
விரும்புகிறார்கள், அஞ்ஞானிகளும் விரும்புகிறார்கள் - இப்போது
ஏதேனும் நடந்தாக வேண்டும், இப்போது ஏதாவது நடந்தாக வேண்டும்.
ஆனால் சக்தி இல்லை. தந்தையைப் பினபற்றுகிறீர்கள் இல்லையா?
பிரம்மா பாபாவின் ஜென்மமே திட சங்கல்பத் தினால் நிகழ்ந்ததாகும்.
செய்தாக வேண்டும். யோசிப்போம் இல்லை. என்ன செய்யலாம், என்ன
செய்ய மாட்டேன், செய்தே ஆக வேண்டும். அந்த ஒரு திட சங்கல்பம்
தான் இத்தனை குழந்தைகளின் எதிர் காலத்தை உருவாக்கியது. ஒரு
பிரம்மா பாபா எவ்வளவு தைரியம் வைத்தார் பாதி பங்கு கிடைத்தது.
யக்ஞத்தை உருவாக்கினார். யக்ஞத்தின் பிராமணர்களைப் படைத்தார்.
இப்போது தேச-விதேச ஆத்மாக்கள் வந்து சேர்ந்திருக் கிறார்கள்.
ஒரு பிரம்மா பாபாவின் திட சங்கல்பமே காரணம். ஆக, திட
சங்கல்பத்தினால் எதைத் தான் செய்ய முடியாது. இதுவோ உங்கள்
முன்னால் உதரணமாக உள்ளது. சங்கல்பம் செய்கிறீர்கள். மிக
நல்ல-நல்ல சங்கல்பங்கள் பபாவிடம் வந்து சேர்கின்றன. ஆனால் அதில்
திடத்தன்மை குறைந்து விடுகிறது. திடத்தன்மை வெற்றிக்கான
சாவியாகும்.
பாருங்கள், டில்லியைச் சேர்ந்தவர்கள் செய்தே ஆக வேண்டும் என்ற
திட சங்கல்பம் வைத்தார்கள். ஆகி விட்டதல்லவா? யோசிக்கலாம்,
பார்க்கலாம் என்று நினைக்கவில்லை. அனைவரின் திட சங்கல்பம்
இதற்கு நிமித்தமானது. எப்படி நிமித்தமானது? குழந்தைகள் அனைவரின்
சகயோகம் மற்றும் திட சங்கல்பம் இதை நடைமுறைப் படுத்தி
வெற்றியாக்கியது. இதில் அனைவரும் துணை நின்றனர். மேலும் ஒரு
வழியில் சென்றனர். ஆம், இல்லை என்றில்லாமல் ஒரு வழியில்
சென்றதால் திடத்தன்மையில் அவ்வளவு சக்தி உள்ளது. எந்தக்
காரியத்தைத் தொடங்கினாலும் அதில் முதலில் திட சங்கல்பத்தின்
விதையை விதையுங்கள். அதற்கான பலன் வெளிப்பட்டே ஆக வேண்டும்.
இந்த 75 (2011 வரை 75 ஆண்டுகள்) ஆண்டுகள் எப்படிக் கடந்து
சென்றன? பிரம்மா பாபா மற்றும் குழந்தைகளின் திட சங்கல்பத்துடன்
75 ஆண்டுகள் நடந்து முடிந்து விட்டன. இன்று வீணான சமயம், வீணான
சங்கல்பத்தை அழித்தே ஆக வேண்டும் என்ற இந்த சங்கல்பத்தை
எழுப்புங்கள். எப்போது வீணானது முடிந்து போகின்றதோ, அப்போதே சதா
சிரேஷ்ட சங்கல்பத்தின் கஜானா அற்புதத்தைக் காண்பிக்கும்.
ஆக, பாப்தாதாவுக்கு இரட்டை வெளிநாட்டினரைப் பார்த்துக் குஷி.
விருத்தியும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் இரட்டை
சேவையின் பக்கம் கவனம் நன்றாக உள்ளது. பாப்தாதா இந்த சமிக்ஞை
மட்டும் மீண்டும் தந்து கொண்டிருக்கிறார் - உங்களுக்குள்
சம்ஸ்கார நல்லிணக்கத்தின் நடனம் ஆடுங்கள். இதை யோசிக்காதீர்கள்
- சென்டரோ நன்றாகத் தானே நடந்து கொண்டிருக்கிறது. சேவையோ
நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் எது வரை பரிவாரம்
உள்ளதோ, பிரபு பரிவாரம். லௌகிகப் பரிவாரம் இல்லை, பிரபு
பரிவாரம். பிரபு பரிவாரத்தின் அர்த்தமே, ஒருவர் மற்றவர் மீது
சுப பாவனை. நன்மையின் பாவனை. ஒருவர் மற்றவர் மீது இதே சங்கல்பம்
இருக்கட்டும் - நாம் அனைவரையும் ஒன்றாக, ஒருவர் மற்ற வரை
முன்னேறச் செய்தவாறே முக்தியின் வாசலைத் திறந்து சேர்ந்தே
செல்ல வேண்டும். எனவே சென்டருக்கு வருபவர்கள் நம்மைப் பார்த்து
இவர்கள் 8 அல்ல, 10 அல்ல, ஆனால் பத்தும் ஒன்று எனப் புரிந்து
கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு வாயுமண்டலம் இருக்க வேண்டும்.
இப்பொழுது சம்ஸ்கார நல்லிணக்கத்தின் ராஸ் - நடனம் புரிய
வேண்டும் என்று ஒவ்வொருவரும் மனதில் தீபாவளியில் சங்கல்பத்தை
எழுப்புங்கள். ஓர் ஆத்மா கூட ஒருவர் மற்றவரிடம் இருந்து விலகிச்
செல்லாமல் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். எனவே இந்த
தீபாவளியில் சம்ஸ்கார சந்திப்பின் ராஸ் - நடனம் ஆட வேண்டும்.
ஒருவர் கூட என்னால் பாரமாகாமல் அனைவரும் லேசாக இருக்க மனதில்
திட சங்கல்பம் செய்ய வேண்டும். சம்ஸ்காரத்தில் இணக்கம் இல்லை
என்றால் சுமையாகி விடும். இந்த எண்ணத் தினால் வாசல் கதவுகளைத்
திறப்பதற்கான விரைவான ஏற்பாடு நடைபெற வேண்டும் என்று பாப்தாதா
விரும்புகின்றார். யாரும் நம்மிடம் கோபமாகவோ சுமையாகவோ இருக்கக்
கூடாது என்பதைச் சோதனை செய்யுங்கள். இது முடியுமா? முடியுமா?
தலையை அசையுங்கள். முடிந்தால் கையை உயரத்துங்கள். அப்போது இது
இந்த தீபாவளியின் மிக நல்ல அழகிய அலங்காரமாகி விடும். பாப்தாதா
வெளிநாட்டினரை தினம் மனதில் இமர்ஜ் செய்கிறார். ஏன்? ஏனென்றால்
இரட்டை வெளிநாட்டினர் முழு உலகத்திலும் பாபாவின் பெயரை விளங்கச்
செயவதற்கு நிமித்தமாக உள்ளனர். எந்த விஷயத்தில்? இவர்கள்
பாரதவாசிகள் இல்லை, வெளிநாட்டினர். இவர்கள் தங்கள் பாக்கியத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நாம் ஏன் இருந்துவிட
வேண்டும்? இந்தத் தூண்டுதல் இந்த டில்லி புரோகிராம் மூலம்
நன்றாகப் பரவியுள்ளது. அதனால் பாப்தாதா சேவைக்கு நிமித்தமாக
உள்ள உங்கள் அனைவரையும் இமர்ஜ் செய்கிறார். பாரதத்தை
விழிப்படையச் செய்யுங்கள். விழிப்படையச் செய்து கொண்டி
ருக்கிறார்கள். மேலும் பாரதத்தை விழிப்படைச் செய்யும் அளவுக்கு
வரும் காலங்களில் வி.ஐ.பி.க்களைத் தயார் செய்வார்கள். அவர்களின்
அனுபவம் பாரதவாசிகளை விழிப்படையச் செய்யும் தொடக்கத்தில்
அதிகமான வி.ஐ.பி.க்களை அழைத்து வந்தது பாப்தாதாவுக்கு
நினைவிருக்கிறது. நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார்கள். இப்போது
அந்த சேவை இல்லை. மேடையில் அத்தகைய அனுபவம் சொல்லும்
பிரமுகர்களைத் தயார் செய்யுங்கள். இப்போது அதிகமான கலை
நிகழ்ச்சிகளைக் காண்பித்தீர்கள். அனுபவமும் சொன்னீர்கள். ஆனால்
இன்னும் கொஞ்சம் காலம் உள்ளது. இப்போது பாரதவாசிகளின்
அதிர்ஷ்டத்தை விழிப்புறச் செய்கின்ற அத்தகைய பிரமுகர்களை
அழைத்து வாரு?ஙகள். இப்போதும் கூட வெளிநாட்டவர் மற்றும்
பாரதத்தின் சேவையும் இணைந்ததின் பிரபாவமும் நன்றாக இருந்தது.
அத்தகைய சேவையை அதிகரியுங்கள். மேலும் முக்கியமான விஷயம்
என்னவென்றால் ஒவ்வொருவரும் மிக விரைவாகத் தன்னைத் தான்
சம்பன்னமாக்க வேண்டும். அது உங்கள் அனைவரின் முழுமைத்
தன்மைக்கான முக்தியின் வாசலைத் திறந்து விட வேண்டும். நல்லது.
நாலாபுறம் உள்ள, முன்னால் அமர்ந்திருப்பவர்களாயினும், வேறு
எங்கே அமர்ந்திருப்பவர்களாயினும், அனைவரின் கவனமும் மதுபன் மீது
உள்ளது. பாப்தாதாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்களோ பார்த்துக் கொண்டு தான் இருக் கிறார்கள்.
பாப்தாதாவும் குழந்தைகள் அனைவரையும், நாலாபுறம் உள்ள குழந்தைகளை,
சதா மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய, சதா டபுள் புருஷார்த்தி,
டபுள் புருஷார்த்தி என்றால் சுயத்தின் புருஷார்த்தத்திலும்,
மற்றும் சேவையின் புருஷார்த்தத்திலும், அத்தகைய டபுள்
புருஷார்த்தி மற்றும் டபுள் நிச்சயம் மற்றும் நஷாவில்
இருக்கக்கூடிய, சதா பாபாவுடன் கூடவே இருக்கக் கூடிய, சதா
தங்களுக்குள்ளும் நன்மை மற்றும் இரக்கத்தின் சுப பாவனையில்
இருக்கக்கூடிய, ஒவ்வொரு குழந்தைக்கும் பெயர் சகிதம்
பாப்தாதாவின் உளமார்ந்த அன்பு நினைவைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்.
ஆனால் இன்றைய விஷயம், வீண் சங்கல்பத்திற்கு முடிவு கட்டுவதை
மறந்துவிட வேண்டாம். பாப்தாதா விடம் ரிக்கார்டோ வந்து சேர்ந்து
விடுகிறது. பாப்தாதா பார்ப்பார் - எத்தனை தீவிர புருஷார்த்தி
குழந்தைகள் உள்ளனர், மற்றும் ஒருவர் மற்றவர்க்கும் கூட
ஊக்கம்-உற்சாகம் கொடுத்து, முன்னேறச் செய்பவர்கள். யாராவது தவறே
செய்தாலும், அவருக்கு அவர் தவறு செய்கிறார் மற்றும் நீங்கள்
அவரது தவற்றை மனதில் சங்கல்பம் செய்கிறீர்கள் - இதைச்
செய்கிறார், இதைச் செய்கிறார், இதைச் செய்கிறார் . இதையும்
முடித்து விடுங்கள். அவருக்கு சகயோகம் கொடுங்கள். சிரேஷ்ட பாவனை
கொடுங்கள். அந்த மாதிரி சேவை செய்து, முழு சங்கட்டனையும்
சிரேஷ்ட சங்கல்பம் செய்பவர்களாக ஆக்கியே தீர வேண்டும். எந்த ஒரு
சென்டரிலும், ஒரு போதும் ஒருவர் மற்றவருக்காக வேறு எந்த ஒரு
பாவனையும் இருக்க வேண்டாம். சுப பாவனை, சுப விருப்பம் மட்டும்.
சரி தானே? மிக நன்று. இப்போது குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா
வாழ்த்துகளுடன் உள்ளத்தின் அன்பு நினைவுகளையும் கூடவே தந்து
கொண்டிருக்கிறார். நல்லது.
ஆசீர்வாதம்:
பலனை எதிர்பார்க்காத சேவை மூலம் உலக ராஜ்யத்தை
அடையக்கூடிய விஷ்வ கல்யாணி, இரக்க மனம் உள்ளவர் ஆகுக.
பலனை எதிர்பார்க்காத (சுயநலமற்ற) சேவாதாரிக்கு ஒரு போதும் இந்த
சங்கல்பம் வர முடியாது - நான் இவ்வளவு செய்தேன், எனக்கு
இவரிடமிருந்து கொஞ்சம் பெயர், புகழ், மதிப்பு அல்லது மகிமை
கிடைக்க வேண்டும் இதுவும் பெற்றுக் கொள்வதாகும். வள்ளலின்
குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கான சங்கல்பமும் வைக்கிறார்கள்
என்றால் அவர்கள் வள்ளல் இல்லை. இவ்வாறு பெறுவதும் கூட
கொடுப்பவர் முன்னால் அழகாக இருக்காது. எப்போது இந்த சங்கல்பம்
முடிவடைகிறதோ, அப்போது விஷ்வ மகாராஜனின் அந்தஸ்து கிடைக்கும்.
அத்தகைய பலனை எதிர்பார்க்காத சேவாதாரி, எல்லையற்ற வைராக்கி தான்
விஷ்வ கல்யாணியாக, இரக்க மனம் உள்ளவராக ஆகிறார்.
சுலோகன்:
தனது தவற்றை மற்றவர் மீது சுமத்துவதும் கூட பரசிந்தனை ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது உங்களின் வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்.
அனைத்திலும் பெரியதிலும் பெரிய கொடை - வள்ளலின் குழந்தைகள் ஆகி
அனைவருக்கும் சகயோகம் கொடுப்பதாகும். கெட்டுப் போன காரியத்தை,
கெட்டுப் போன சம்ஸ்காரங்களை, கெட்டுப்போன மூடை (மனநிலை) சுப
பாவனை மூலம் சரி செய்வதில் சதா அனைவரின் சகயோகி ஆக வேண்டும்.
இவர் இதைச் சொன்னார், இதைச் செய்தார், இதைப் பார்த்து, கேட்டு,
புரிந்து கொண்டிருந்தாலும், தனது சகயோகத்தின் ஸ்டாக் மூலம்
மாற்றம் செய்து, அவரை நிரப்பி விடுவது தான் அனைத்திலும் பெரிய
தானமாகும்.