07-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இங்கு
ஸ்ரீகிருஷ்ணரைப் போன்று இளவரசர் ஆவதற்கான படிப்பு
படிக்கிறீர்கள், உங்களுக்கு இந்த படிப்பைக் கற்பிப்பவர் சுயம்
பகவான் ஆவார்.
கேள்வி:
பகவானின் மகாவாக்கியம் என்ற
வார்த்தையை பாபா பயன்படுத்தும் போது சில குழந்தைகள்
குழப்பமடைந்து விடுகின்றனர் - ஏன்?
பதில்:
ஏனெனில் பகவான் குப்தமாக
இருக்கிறார் அல்லவா! இந்த தாதா (பிரம்மா) பகவானின் மகாவாக்கியம்
என்று கூறியிருப்பார் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
ஆனால் நிராகார பகவான் பேசுவதற்கு அவசியம் வாய் தேவை அல்லவா!
நான் எப்படி இவரிடத்தில் பிரவேசம் செய்து உங்களுக்கு படிப்பைக்
கற்பிக்கிறேன்? என்பது ஆச்சரியமான, புரிந்து கொள்ள வேண்டிய
விசயம் என்று பாபா கூறுகின்றார்.
ஓம் சாந்தி.
பகவானின் மகாவாக்கியம். பகவான் என்ன கூறுகின்றார்? பகவானின் மகா
வாக்கியம் என்று கூறியது யார்? யாரையும் காண முடிவதில்லை.
மனிதனை பகவான் என்று கூற முடியாது. பேசுபவர் தான் பகவானின்
மகாவாக்கியம் என்று கூறியிருப்பதாக சிலர் புரிந்து கொள்கின்றனர்.
ஆனால் நிராகார பகவான் தான் பேசிக் கொண்டிருக்கின்றார் என்பதை
நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இங்கு அமர்ந்திருப்பது யார்?
பகவான் எங்கு இருக்கிறார்? இது புது விசயம் அல்லவா! அதனால்
மனிதர்கள் குழப்பமடைந்து விடுகின்றனர். ஆனால் பகவானின்
மகாவாக்கியம் கண்டிப்பாக இருக்கிறது. நான் குழந்தைகளுக்கு
இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகின்றார்.
நரனிலிருந்து நாராயணன் அதாவது கிருஷ்ணர், நாரியிலிருந்து
லெட்சுமி அதாவது இராதை ஆக்குவதற்காக யோகா மற்றும் ஞானம் கற்பிக்
கிறேன், இதை விட வேறு என்ன வேண்டும்? உங்களை நான்
இராஜாவிற்கெல்லாம் இராஜா, இளவரசர்களுக்கெல்லாம் இளவரசராக
ஆக்குகிறேன். இளவரசன், இளவரசியும் கோயிலுக்குச் செல்வார்கள்
அல்லவா! விகாரியான இளவரசர் விகாரமற்ற இளவரசராகிய ஸ்ரீகிருஷ்ணரை
வணங்குகிறார். ஆக நான் உங்களை இளவரசருக்கெல்லாம் இளவரசராக
ஆக்குகிறேன். ஸ்ரீகிருஷ்ணரைப் போன்று சொர்க்கத்தின் இளவரசராக
ஆகுங்கள். ஞானத்தைக் கற்பதன் மூலம் அவ்வாறு ஆவீர்கள் அல்லவா!
டாக்டரோ அல்லது வக்கீலோ தனது மாணவர்களிடம் நான் உங்களை
டாக்டராக அல்லது வக்கீலாக ஆக்குகிறேன் என்று கூறுவார் அல்லவா!
ஆனால் படிப்பதனால் தான் ஆக முடியும். இராஜயோகம் கற்பிக்கக்
கூடியவர் ஒரே ஒரு பகவானே அன்றி கிருஷ்ணர் அல்ல என்பதை
குழந்தைகள் நல்ல முறையில் புரிந்திருக்கிறீர்கள். இராதை,
கிருஷ்ணர் தனித்தனியான இராஜ்யத்தின் குழந்தைகள் ஆவர்.
அவர்களுக்குள் நிச்சயதார்த்தம் ஏற்படுகிறது, திருமணத்திற்குப்
பிறகு பெயர் மாறுகிறது. அதனால் தான் லெட்சுமி நாராயணனின்
சித்திரத்தின் கீழே இராதை கிருஷ்ணரை காண்பித்திருக்கின்றனர்.
இந்த பிரம்மாவும் நம்பர் ஒன் பக்தர் என்பதை தந்தை நல்ல முறையில்
புரிய வைக்கின்றார். முன்பு நாராயணனின் பூஜை செய்து வந்தார்.
கிருஷ்ண பக்தி என்றாலும், நாராயண பக்தி என்றாலும் விசயம் ஒன்று
தான். கிருஷ்ணரே வளர்ந்து நாராயணனாக ஆகின்றார். இப்போது உங்களை
நரனிலிருந்து நாராயணன் ஆக்குவதற் காக இராஜயோகம் கற்பித்துக்
கொண்டி ருக்கிறேன். இப்போது உங்களது 84 பிறவிகள் முடிவடைந்து
விட்டது. தற்சமயம் இவரது ஆத்மாவும் படித்துக் கொண்டிருக்கிறது.
பிறகு எதிர்காலத்தில் ஸ்ரீகிருஷ்ணராக ஆகுவார். தந்தை
கூறுகின்றார் - குழந்தைகளே! நீங்கள் ஞானச் சிதையில் அமர்ந்து
தூய்மையாக ஆகிறீர்கள், பிறகு காமச் சிதையில் அமர்ந்து கருப்பாக
ஆகிவிடுகிறீர்கள். இது கம்சபுரியாகும், நான் உங்களை
கிருஷ்ணபுரிக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணர் தான் சர்வ குணங்கள் நிறைந்தவராகவும், 16 கலைகளில்
முழுமை யானவராகவும்......... இருக்கின்றார். இங்கு
யாரிடத்திலும் சர்வ குணங்கள் கிடையாது. குழந்தைகளை சம்பூர்ண
நிர்விகாரிகளாக ஆக்குவதற்காக நான் வந்திருக்கிறேன். யோக
பலத்தின் மூலமே ஆக முடியும். புஜ பலம் என்பது இம்சைக்கான
யுத்தமாகும், வில்-அம்பு எய்தியும், பிறகு வாள் மூலமும் சண்டை
யிட்டனர், இப்போது அணுகுண்டுகளினால் சண்டையிடுகின்றனர்.
வீட்டில் இருந்த படியே அனைவரும் இறந்து விடும் அளவிற்கு நாம்
அணு குண்டை தயாரிக்கிறோம் என்று தாங்களே கூறுகின்றனர். பிறகு
இராணுவம் என்ன செய்யும்? தந்தை கூறுகின்றார் - இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே! இது பாட சாலையாகும். நான் உங்களை
ஸ்ரீகிருஷ்ணர் போன்று இளவரசராக ஆக்குகிறேன். யார் சத்யுகத்தின்
முதல் இளவரசராக இருந்தாரோ, அவர் 84 பிறவிகள் எடுத்து
கலியுகத்தில் யாசிப்பவராக (ஏழைகளாக) ஆகிவிட்டார். பாரதத்தில்
தான் அவரது இராஜ்யம் இருந்தது. பிறகு மறுபிறப்பு எடுக்க
வேண்டியிருக்கும் அல்லவா! கிருஷ்ணரை பகவான் என்று கூறுகின்றனர்
எனில் பிறகு பகவான் எப்படி பிறப்பு இறப்பில் வர முடியும்?
பகவான் நிராகாராமானவர். படைப் பவர் அவர் ஒரே ஒருவர் ஆவார்.
மற்ற அனைவரும் படைப்புகள் ஆகும். அதனால் நாம் ஆத்மாக்கள்
அனைவரும் சகோதர, சகோதரர்கள் என்று கூறுகின்றனர். பிரம்மா குமார்,
குமாரிகள் நீங்கள் அனைவரும் தங்களுக்குள் சகோதர, சகோதரிகள்
என்பதை தந்தை புரிய வைக்கின்றார். பிறகு கெட்ட பார்வை எப்படி
இருக்க முடியும்? எதிர்காலத்தின் ஆஸ்தியை நீங்கள் ஒரே ஒரு
தந்தையிடம் அடைகிறீர்கள். ஒருவேளை தூய்மையாக ஆகவில்லையெனில்
சாந்திதாமம், சுகதாமத்திற்கு எப்படி செல்வீர்கள்! நாம் தூய்மையை
இழந்து விட்டோம், எங்களை தூய்மையாக்குவதற்கு வாருங்கள் என்று
அழைக்கின்றனர். ஆகவே என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். இது உங்களது கடைசிப் பிறவியாகும். அனைத்து
ஆத்மாக்களாகிய நீங்கள் திரும்பவும் வானபிரஸ்த நிலைக்குச் செல்ல
முடியும். ஆகையால் வானபிரஸ்திகளாக இருக்கிறீர்கள். இவ்வாறு
எந்த குருவும் வழி காண்பிக்க முடியாது. இந்த ஞானம் ஒரே ஒரு
தந்தையிடம் மட்டுமே இருக்கிறது. அவர் தான் பதீத பாவன்,
நிராகாராமானவர் ஆவார். என்னை நினைவு செய்யுங்கள், நேரம்
குறைவாக இருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். நான் இந்த
சரீரத்தை கடனாக எடுத்திருக்கிறேன். சரீரமின்றி ஆத்மா எப்படி
பேச முடியும்? பகவானின் மகா வாக்கியம் - நான் வயோதிக, சாதாரண
சரீரத்தில் பிரவேசம் செய்து குழந்தைகளாகிய உங்களுக்கு
கற்பிக்கிறேன். நான் கர்பத்தில் வருவது கிடையாது. கர்பத்தில்
வருபவர்கள் பிறப்பு இறப்பில் வர வேண்டியிருக்கும். நான் ஒரே ஒரு
முறை தான் வருகிறேன். எனக்கு இயற்கையின் ஆதாரம் அவசியம்
தேவைப்படுகிறது. நான் இதில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு
கற்பிக்கிறேன். இவர் முதலில் தனது வைர வியாபாரம் செய்து வந்தார்.
எந்த குருவும் கற்றுக் கொடுக்கவில்லை. திடீரென்று தந்தை
பிரவேசமாகி விட்டார். செய்பவர், செய்விப்பவராக இருக்கின்ற
காரணத்தினால் இவர் மூலம் காரியங்களை செய்வித்துக்
கொண்டிருக்கின்றார். இவரும் கற்றுக் கொண்டிருக்கிறார்.
நீங்களும் கூடவே கற்றுக் கொண்டி ருக்கிறீர்கள். உங்களிடம் தான்
கூறுகிறார், ஆனால் கேட்பது முதலில் நான் தான். குழந்தை களாகிய
உங்களுக்கு கற்பிக்க வருகிறேன், ஆனால் இவரது ஆத்மாவும்
படித்துக் கொண்டி ருக்கிறது. குழந்தைகளுக்கு இராஜயோகம்
கற்பிக்க வந்திருக்கிறேன். இவ்வாறு ஒருபோதும் யாரும் கற்பிப்பது
கிடையாது. இங்கு தூய்மை ஆவதற்கான விசய மாகும். இந்த சங்கமயுகமே
புருஷோத்தம் ஆவதற்கான யுகமாகும். புருஷோத்தமனாக ஸ்ரீகிருஷ்ணர்
இருந்தார். சுயம்வரத் திற்குப் பின்பு அவரது கலை சிறிது
குறைந்து விடுகிறது, அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணருக்கு அதிக மகிமை
இருக்கிறது. பெயரே ஸ்ரீகிருஷ்ணபுரி, இது கம்சபுரி என்று
கூறப்படுகிறது. மற்றபடி கிருஷ்ணர் மற்றும் கம்சன் பற்றி கதை
உருவாக்கி விட்டனர்.
பரிபக்குவ நிலை ஏற்பட்டதும் தானாகவே பக்தி விடுபட்டு விடும்
என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளது. பக்தி
செய்யாதீர்கள் என்ற நீங்கள் ஒருபோதும் யாருக்கும் கூறக் கூடாது.
அவர்களுக்கு ஞானம் கொடுக்க வேண்டும். தந்தை உங்களுக்கு ஞானம்
கொடுத்து சொர்க்கத்தின் இளவரசர்களாக ஆக்குவதற் காக
வந்திருக்கின்றார். கிருஷ்ணரும் சொர்க்கத் திற்கு எஜமானராக
இருந்தார், இப்போது கிடையாது. அவரும் இராஜயோகத்தின் மூலம்
மீண்டும் ஆகிக் கொண்டிருக்கிறார். நீங்களும் முயற்சி செய்து
தந்தையை நினைவு செய்ய வேண்டும். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்
கூடியவர் இறை தந்தை ஆவார். அவர் வந்து புது உலகை படைக்கின்றார்.
எப்போது கலியுகம் முடிவடைகிறதோ அப்போது தான் அவர் ஸ்தாபனை
செய்வார். சத்யுகம், திரேதாவில் வருவது கிடையாது. நான் கல்ப
கல்பம் சங்கம யுகத்தில் வருகிறேன் என்று கூறுகின்றார். அவர்கள்
கல்பம் என்ற வார்த்தையை நீக்கி விட்டு யுகத்திற்கு யுகம் என்று
எழுதி விட்டனர். 4 யுகங்கள் உள்ளன, ஐந்தாவது யுகம் சங்க
மயுகமாகும். நல்லது, பிறகு 5 அவதாரங்கள் என்று கூற வேண்டும்.
ஆனால் ஆமை, மீன், பரசுராம அவதாரம் போன்ற இவ்வளவு அவதாரங்கள்
இருக்குமா என்ன? இவை அனைத்தும் சாஸ்திரங்களின் விசயமாகும்.
தர்மத்தின் பெயர் மற்றும் பாரதத்தின் பெயரையே மாற்றி விட்டனர்.
இந்து தர்மம் மற்றும் இந்துஸ்தான் என்று கூறிவிடுகின்றனர்.
பாரதம் என்ற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதர்மம் எப்பொழுதெல்லாம்.......
பாரதம். அதிலும் பாரதம் என்ற வார்த்தை வருகிறது. நீங்கள் ஒரே
ஒரு பிறவி தான் பக்தி செய்தீர்கள் என்பது கிடையாது என்று தந்தை
புரிய வைக்கின்றார். துவாபரத்திலிருந்து செய்தீர்கள். பக்தி
முதலில் கலப்பட மற்று இருந்தது, சிவனின் பக்தி மட்டுமே
செய்தீர்கள். எந்த சிவபாபா பாரதத்தை சொர்க்கமாக ஆக்கினாரோ அவரே
மீண்டும் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக வந்திருக்
கின்றார். ஆக நான் தூய்மையற்ற சரீரத்தில், தூய்மையில்லாத உலகில்
தூய்மை இழந்தவர் களை தூய்மை ஆக்குவதற்காக வருகிறேன் என்று பாபா
கூறுகின்றார். அதனால் தான் பக்தி மார்க்கத்தில் எனக்கு மிகப்
பெரிய கோயில் கட்டு கிறீர்கள். எவ்வளவு தெளிவான விசயமாகும்!
இவரிடத் தில் பாபா பிரவேசம் ஆனார், பிறகு இவர் கீதை படிப்பதை
விட்டு விட்டார். பக்தியையும் விட்டு விட்டார். தானாகவே
விடுபட்டு விட்டது. பக்தி செய்யாதீர்கள் என்று யாரும்
உங்களுக்கு கூறவில்லை.
மீண்டும் உங்களை கிருஷ்ணபுரிக்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக
வந்திருக்கிறேன் என்று குழந்தை களாகிய உங்களுக்கு பாபா புரிய
வைக்கின்றார். கிருஷ்ணரின் இராஜ்யம் 8 தலை முறை நடைபெறுகிறது.
சத்யுகத்தின் இளவரசர் என்று முதலில் கூறப்படுவார், பிறகு
சத்யுகத்தின் அரசராக ஆகிறார். 8 பிறவிகளுக்கு நடைபெறுகிறது.
அந்த நேரத்தில் வேறு எந்த இராஜ்யமும் இருக்காது. குழந்தைகளாகிய
நீங்களும் சத்யுகத்தின் இளவரசராக ஆகுங்கள் என்று இப்போது தந்தை
கூறுகின்றார். பக்தியில் எந்த சுகமும் கிடையாது. ஞானத்தினால்
நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். ஒருவரது தந்தை
இறந்து விட்டால் அவரிடத்தில் உங்களது தந்தை எங்கு சென்று
விட்டார்? என்று கேளுங்கள். சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று
கூறுவர். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் சென்று விட்டதாக நினைக்
கின்றனர். ஆனால் இங்கேயே சரீரத்தை விட்டு விட்டு ஆத்மா மட்டுமே
செல்கிறது. முன்பு நரகத்தில் இருந்தார் என்பது தான் இதன்
பொருளாகும். ஆத்மா சரீரத்தை விடுத்து சொர்க்கத் திற்கு சென்றது
எனில் பிறகு இதில் அழுவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? இங்கு
சொர்க்கம் இருக்கிறதா என்ன? ஆனால் புரிந்து கொள்வது கிடையாது.
அனைத்தும் ஈஸ்வரனின் கட்டளை என்று கூறிவிடுகின்றனர். சுகம்,
துக்கம் அனைத்தும் ஈஸ்வரனே கொடுக்கின்றார், அனைவரும் ஈஸ்வரனின்
ரூபங்களாகும் என்று கூறுகின்றனர். ஆனால் நான் எப்படி குழந்தை
களுக்கு துக்கம் கொடுக்க முடியும்? என்று தந்தை கேட்கின்றார்.
தந்தையிடம் குழந்தைகள் ஒருபோதும் துக்கத்தை கேட்பார்களா என்ன?
தந்தை குழந்தைகளை தகுதியுடையவர்களாக ஆக்கி சொத்துக்களை கொடுத்து
விட்டு சென்று விடுகின்றார். மற்றபடி அவரவர்களது கர்மத்தின் படி
தான் துக்கம் அடைகின்றனர். குழந்தை வேண்டும் என்பது போன்ற
எதையும் கேட்காதீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இது போன்ற
சொத்துக்கள் அனைத்தும் அழியக் கூடியவைகள் ஆகும். பிறகு உங்களது
குழந்தைகளுக்கு என்ன கிடைக்கும்? உங்களது சொத்துக்களுக்கு
குழந்தைகள் எஜமானர்களாக ஆகுமளவிற்கு நேரமே கிடையாது. குழந்தை
வளர்ந்த பிறகு தான் எஜமானராக ஆகும். ஆனால் அந்த அளவிற்கு நேரம்
கிடையாது. விநாசம் எதிரில் இருக்கிறது. கலியுகம் இன்னும் 40
ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று மனிதர்கள் கூறுகின்றனர். இந்த
பிரம்மா குமார், குமாரிகள் தான் விநாசம், விநாசம் என்று கூறிக்
கொண்டே இருக்கின்றனர். புலி வருது புலி வருது....... கடைசியில்
வந்து கொன்று சென்று விட்டது என்ற கதை இருக்கிறது அல்லவா!
சிறிது சிறிதாக காலன் வருவார் என்று அனைவரும் நினைக் கின்றனர்.
இது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மகா காலன் வந்து
விட்டார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். காலனுக்கெல்லாம் மகா
காலன் சிவபாபா வந்திருக்கின்றார், அவர் அனைத்து ஆத்மாக்களையும்
திரும்பி அழைத்துச் செல்வார். ஆக சரீரத்தை அவசியம் விட
வேண்டியிருக்கும். அதனால் தான் யோகா மூலம் தூய்மையாக ஆகுங்கள்
என்று பாபா கூறுகின்றார். ஆத்மாக்களை தூய்மையாக்கி பிறகு
திரும்பி அழைத்துச் செல்வார். தூய்மையாக ஆகவில்லையெனில்
கடைசியில் அதிக தண்டனை அடைய வேண்டி யிருக்கும். மேலும் உயர்ந்த
பதவுயும் அடைய முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் நம்பர் ஒன் நேர்மை யுடன்
தேர்ச்சி பெற்றவர் ஆவார், அவருக்கு ஸ்காலர்சிப் கிடைக்கிறது.
21 பிறவிகளுக்கு இராஜ்யத்தை அடைகிறார். எவ்வளவு எளிதாக புரிய
வைக்கின்றார்! புத்தியில் அமரவும் செய்கிறது, பிறகு மறைந்து
விடுகிறது. யாரையும் பக்தியிலிருந்து விடுவிக்கக் கூடாது.
பக்தர்களுக்கு பக்தியின் பலன் கொடுப்பதற்காக தந்தை
வந்திருக்கின்றார். நான் முந்தைய கல்பத்தைப் போன்று அதே சாதாரண
சரீரத்தில் வந்திருக்கிறேன் என்று கூறுகின்றார். கல்ப
கல்பத்திற்கு வந்து உங்களுக்கு கற்பிக்கிறேன். இது
உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பாகும். நாம் சதோ பிரதானமாக
இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது தமோபிர தானமாக
இருக்கிறோம், மீண்டும் சதோ பிரதானமாக ஆக வேண்டும். மற்ற
தர்மத்தைச் சார்ந்தவர்கள் இந்த அளவிற்கு சுகத்தையும்
பார்த்ததில்லை, துக்கத்தையும் பார்த்ததில்லை. வெளியில் (வெளிநாடு)
உள்ளவர்களிடத்தில் அதிக செல்வம் இருப்பதால் ஏழை நாடுகளுக்கு
கடன் கொடுக்கின்றனர். நாம் திரும்பி வாங்கிக் கொண்டிருக்கிறோம்
என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது. முற்றிலும் காரிருளில்
கும்பகர்ணனைப் போன்று தூங்கிக் கொண்டி ருக்கின்றனர். கடைசியில்
ஐயோ ஐயோ என்று கூறி எழுந்து கொள்வர். பிறகு நீங்கள் டூ லேட்
என்று கூறுவீர்கள். ஏனெனில் யுத்தம் ஆரம்பமாகி விடும். பிறகு
என்ன செய்ய முடியும்! காடு தீ பற்றி எறியும் போது பிறகு டூ லேட்
ஆகிவிடும். அதனால் தான் தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே!
இப்போது மிக தீவிரமாக முயற்சி செய்து கொண்டே செல்லுங்கள். பாபா
வேறு எந்த கஷ்டமும் கொடுப்பது கிடையாது. நான் பூஜை செய்ய வில்லை
எனில் நான் நாஸ்திகன் ஆகி விட்டதாக கூறுகின்றனர் என்று
பாபாவிடம் வந்து கூறுகின்றனர். சாட்சியாக இருந்து பாபாவின்
நினைவில் இருங்கள் என்று பாபா அறிவுறுத்து கின்றார். சிறிது
வெளிப்படையான முறையில் பூஜை செய்து விடுங்கள். ஒன்று உள்ளப்
பூர்வமாக செய்வது, மற்றொன்று திருப்திப்படுத்துவதற்காக செய்வது.
உள்ளுக்குள் நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். ஒருவேளை
யாராவது தொந்தரவு செய்கின்றனர் எனில் நீங்கள் பூஜை செய்து
காட்டுங்கள், அவர்கள் குஷியடைந்து விடுவர். இது ஒன்றும் பாவ
காரியம் கிடையாது. திருமணம் போன்ற இடங்களுக்கு செல்லுங் கள்
என்று தான் பாபா பலருக்கு கூறுகின்றார். இரண்டு பக்கமும்
கவனிக்க வேண்டும். அங்கும் பல முறை கூறுவதால் யாருக்காவது அம்பு
பதிந்து விடும். யுக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். இப்போது
தூய்மையை இழந்துவிடக் கூடாது என்பது தான் தந்தையின்
கட்டளையாகும். தூய்மையாவதன் மூலம் தான் நீங்கள் கிருஷ்ணபுரிக்கு
எஜமானர்களாக ஆக முடியும். சிவ பாபாவை நினைவு செய்தால் விகர்மம்
விநாசம் ஆகும், மேலும் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள்.
குழந்தைகளே! இவ்வாறு யுக்தியுடன் தனது உற்றார்,
உறவினர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அது உலகாய
யாத்திரையாகும், இது ஆன்மீக யாத்திரையாகும். இந்த ஆன்மீக
யாத்திரையை தந்தை கற்பிக்கின்றார். என் ஒருவனை நினைவு செய்தால்
தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக ஆகிவிடுவீர்கள் மற்றும் அனைத்து
துக்கமும் தூர விலகி விடும் என்று கூறுகின்றார். மிகக் குறைந்த
வியாபாரிகள் தான் (ஞான இரத்தினங் களின்) வியாபாரம் செய்கின்றனர்,
அதாவது வைகுண்டத்தின் சாம்ராஜ்யத்தை அடை கின்றனர். ஸ்ரீமத் படி
நடந்து கொண்டே இருங்கள். செல்வத்தை வீணாக்குவது, எந்த பலனையும்
ஏற்படுத்தாமல் இருப்பது போன்றவைகள் இருக்கக் கூடாது. வீட்டையும்
கவனிக்க வேண்டும், குழந்தைகளை வளர்க்கவும் வேண்டும். ஸ்ரீமத்
படி நடந்தால் போதும். பாபா, இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய
வேண்டும்? என்று அறிவுரை கேட்க வேண்டும். நான் திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்று மகள் கூறுகிறாள் எனில் திருமணம் செய்து
வையுங்கள் என்று பாபா கூறுகின்றார். ஏனெனில் அவரது கணக்கை
அவருக்கு கொடுத்து விடுங்கள். தந்தை புரிய வைக்கின்றார்,
அவ்வளவு தான், இருப்பினும் ஏதாவது கேட்க வேண்டுமெனில் கேட்டு
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். குழந்தைகள் தந்தையின் கட்டளைப்படி
நடக்க வேண்டும், இதில் தான் நன்மை இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒவ்வொரு காரியத்தையும் சாட்சியாக இருந்து சிவபாபாவின்
நினைவில் செய்ய வேண்டும்.லௌகீக மற்றும் அலௌகீகம் விசயங்களில்
இரண்டையும் சமநிலையில் பராமரிக்க வேண்டும். லௌகீகத்தில்
யுக்தியுக்தாக நடந்து கொள்ள வேண்டும்.
2. கடைசிப் பிறவியிலும் கடைசி நேரமாகிய இப்போது வானபிரஸ்த
நிலையாகும். திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆகையால்
அவசியம் தூய்மையாக ஆக வேண்டும். எந்தபந்தனத்தையும் உருவாக்கிக்
கொள்ளக் கூடாது.
வரதானம்:
கட்டளையின் பாலனை மூலமாக அனைத்து ஆசைகளையும்
முடிக்கக் கூடிய மாயா ப்ரூப் ஆகுங்கள் !
அமிர்தவேளையில் இருந்து இரவு வரை தினசரியில் என்ன கட்டளை
கிடைத்திருக்கிறதோ அதன்படி ஸ்மிருதி, சேவை மற்றும் தொடர்புகளை
சோதனை செய்யுங்கள். ஒவ்வொரு சங்கல்பமும் கட்டளைப்படி
பின்பற்றும் பொழுது அதனுடைய அனைத்து ஆசைகளும் முடிந்து
விடுகின்றன. ஒருவேளை உள்ளுக்குள் புருஷார்த்தம், வெற்றியினுடைய
ஆசை இருந்த தென்றால் அவசியம் எங்காவது, ஏதாவது கட்டளை பின்பற்ற
முடியாமல் போய் விடுகிறது. ஆகவே எப்பொழுதாவது, ஏதாவது குழப்பம்
வந்தால், நாலாபுறமும் சோதனை செய்வதின் மூலமாக தானாகவே மாயா
ப்ரூப் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
தங்களது சூட்சும பலவீனங்களை நினைத்து,
அவைகளை விட்டு விடுவது தான் சுய சிந்தனையாகும்.
எண்ணங்களே சேமிப்பு கணக்கை அதிகரிக்கின்றன.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது உங்களின் வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்.
எங்கு சேவையின் பற்றாக்குறை ஏற்படுகின்றதோ அங்கு அனைத்து
சேவையும் அறிந்த சேவாதாரி மூலம் அப்பற்றாக்குறை
தீர்க்கப்படுகிறது. அதுபோல மற்றவர்களுக்க ஏதாவது ஒரு சக்தியின்
குறைவு அனுபவம் ஆனால் உங்களின் சகתפயகம் மூலம் அதை நிரப்புங்கள்,
அவர்களின் குறை மற்றவர்களுக்கும் அனுபவம் ஆகாது இதைத்தான்
சமயத்தின் அனுசாரம் சகயோகம் கொடுக்கும், வள்ளலான தந்தையின்
குழந்தைகள் என கூற முடியும்.