07.12.25 காலை முரளி
ஓம் சாந்தி 02.02.2008 பாப்தாதா,
மதுபன்
சம்பூர்ண பவித்திரதா மூலம் ஆன்மிக ராயல்டி மற்றும்
பர்சனாலிட்டியை அனுபவம் செய்து, தனது மாஸ்டர் ஞான சூரியன்
சொரூபத்தை வெளிப்படுத்துங்கள்
இன்று பாப்தாதா நாலாபுறம் உள்ள தம்முடைய ராயல்டி (ராஜ கௌரவம்)
மற்றும் பர்சனாலிட்டி யின் (ஆளுமை) பரிவாரத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார். இந்த ராயல்டி அல்லது ஆன்மிகப்
பர்சனாலிட்டியின் அஸ்திவாரம் சம்பூர்ண தூய்மையாகும். தூய்மையின்
அடையாளம் அனை வரின் நெற்றியில், அனைவரின் தலை மீது
ஒளிக்கிரீடமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய
ஜொலிக்கின்ற கிரீடதாரி ஆன்மிக ராயல்டி, ஆன்மிகப் பர்சனாலிட்டி
உள்ளவர்கள் பிராமணப் பரிவாரத்தினராகிய நீங்கள் மட்டும் தான்.
ஏனென்றால் தூய்மையை உங்களுடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
பிராமண ஆத்மாக்களாகிய உங்களுடைய தூய்மை யின் பிரபாவம் ஆதி
காலத்திருந்தே பிரசித்தமாக உள்ளது. நினைவு வருகிறதா, உங்கள்
அநாதி மற்றும் ஆதி காலம்? நினைவு செய்யுங்கள் - அநாதி
காலத்திலும் கூட தூய்மையான ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மா
ரூபத்திலும் கூட விசேஷமாக ஜொலிக்கின்ற நட்சத்திரங்கள்,
ஜொலித்துக் கொண்டே இருக்கும் மற்ற ஆத்மாக்களும் உள்ளனர். ஆனால்
நட்சத்திரங்களாகிய உங்கள் ஜொலிப்பு அனைவரோடும் கூட இருந்த
போதிலும் விசேஷமான ஜொலிப்பாக உள்ளது. எப்படி வானத்தில்
நட்சத்திரங்கள் அநேகம் உள்ளன. ஆனால் ஒரு சில நட்சத்திரங்கள்
விசேஷமாக ஜொலிப்ப வையாக உள்ளன. அனைவரும் தங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்களா? பிறகு ஆதி காலத்தில் உங்கள் தூய்மையின்
ராயல்டி மற்றும் பர்சனாலிட்டி எவ்வளவு உயர்ந்ததாக இருந்துள்ளது!
அனைவரும் ஆதிகாலத்தில் வந்து சேர்ந்து விட்டீர்களா? வந்து
சேர்ந்து விடுங்கள். சோதித்துப் பாருங்கள் - எனது ஜொலிக்கின்ற
ரேகை எத்தனை சதவிகிதத்தில் உள்ளது? ஆதிகாலத்திலிருந்து கடைசி
காலம் வரை உங்கள் தூய்மையின் ராயல்டி, பர்சனாலிட்டி சதா காலமும்
உள்ளது. அநாதி காலத்தின் ஜொலிக்கின்ற நட்சத்திரம், ஜொலிக்கின்ற
பாபாவுடன் கூடவே வாசம் செய்பவர்கள். உடனுக்குடன் தங்களின்
விசேஷதாவை அனுபவம் செய்யுங்கள். அனைவரும் அநாதி காலத்தில் வந்து
சேர்ந்து விட்டீர்களா? பிறகு முழுக் கல்பத்திலும் பவித்திர
ஆத்மாக்களாகிய உங்கள் ராயல்டி பல வித ரூபங்களில் உள்ளது. ஆனால்
ஆத்மாக்களாகிய உங்களைப் போல் யாரும் சம்பூர்ண பவித்திரமாக
ஆகவில்லை. பவித்திரதாவின் பிறப்புரிமை, விசேஷ ஆத்மாக்களாகிய
உங்களுக்கு பாபாவிடமிருந்து கிடைத்துள்ளது. இப்போது ஆதி
காலத்திற்கு வந்து விடுங்கள். ஆதி காலத்திலும் பார்த்தீர்கள்,
இப்போது ஆதி காலத்தில் உங்கள் பவித்திரதாவின் ராயல்டியின்
சொரூபம் எவ்வளவு உயர்ந்தது! அனைவரும் சத்யுகம் வந்து சேர்ந்து
விட்டீர்களா? சேர்ந்து விட்டீர்களா? வந்து விட்டீர்களா? எவ்வளவு
அன்பான சொரூபம் தேவதா ரூபம்! தேவதைகளைப் போன்ற ராயல்டி மற்றும்
பர்சனாலிட்டி முழுக் கல்பத்திலும் எந்த ஓர் ஆத்மாவுக்கும் இல்லை.
தேவதா ரூபத்தின் ஜொலிப்பை அனுபவம் செயது கொண்டிருக்கிறீர்கள்
இல்லையா? இவ்வளவு ஆன்மிகப் பர்சனாலிட்டி, இவையனைத்தும்
பவித்திரதாவின் பிராப்தியாகும். இப்போது தேவதா ரூபத்தின்
அனுபவம் செய்தவாறு மத்திய காலத்திற்கு வந்து விடுங்கள். உங்கள்
பக்தர்கள் பூஜைக்குரிய ஆத்மாக்களாகிய உங்களுக்குப் பூஜை
செய்கிறார்கள். சித்திரங்களை உருவாக்குகிறார்கள். எவ்வளவு
ராயல்டியின் சித்திரங்களை உருவாக்குகிறார்கள் மற்றும் எவ்வளவு
ராயல்டியுடன் பூஜை செய்கிறார்கள்! தன்னுடைய பூஜைக்குரிய
சித்திரம் முன்னால் வந்து விட்டது இல்லையா? சித்திரங்களையோ
தர்மாத்மாக்களுக்கும் கூட செய்கிறார்கள். தர்ம பிதாக்களுக்கும்
செய்கிறார்கள். நடிகர்களுக்கும் செய்கிறார்கள். ஆனால் உங்கள்
சித்திரங்களின் ஆன்மிகத் தன்மை மற்றும் விதிபூர்வமான பூஜையில்
வித்தியாசம் உள்ளது. ஆக, உங்களது பூஜைக்குரிய சொரூபம் முன்னால்
வந்து விட்டதா? நல்லது, பிறகு கடைசி காலமாகிய சங்கமயுகத்திற்கு
வாருங்கள் -- இந்த ஆன்மிக டிரில் செய்து கொண்டிருக்கிறீர்கள்
இல்லையா? சுற்றி வாருங்கள் மற்றும் தனது தூய்மையினுடைய, தனது
விசேஷ பிராப்தியினுடைய அனுபவம் செய்யுங்கள். கடைசி காலமாகிய
சங்கமயுகத்தில் பிராமண ஆத்மாக்களாகிய உங்களுடைய பரமாத்ம
பாலனையின், பரமாத்ம அன்பின், பரமாத்ம படிப்பின் பாக்கியம்
கோடியில் சில ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தான் கிடைக்கிறது.
பரமாத்மாவின் நேரடிப் படைப்பு, முதல் படைப்பு பவித்திர
ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தான் கிடைக்கிறது. இதன் மூலம்
பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் தாம் உலக ஆத்மாக்களுக்கும்
முக்தியின் ஆஸ்தியை பாபாவிடமிருந்து கிடைக்கச் செய்கிறீர்கள்.
ஆக, இந்த முழுச் சக்கரத்தில் அநாதி காலம், ஆதி காலம், மத்திய
காலம் மற்றும் கடைசிக் காலம், முழுச் சக்கரத்திலும் இவ்வளவு
சிரேஷ்ட பிராப்திக்கான ஆதாரம் பவித்திரதா ஆகும். சக்கரம்
முழுவதையும் சுற்றினீர்கள். இப்போது தன்னை சோதித்துப் பாருங்கள்,
தன்னைத் தான் பாருங்கள். பார்ப்பதற்கான கண்ணாடி உள்ளது இல்லையா?
தன்னைப் பார்ப்பதற்கான கண்ணாடி உள்ளதா? யாருக்கு உள்ளதோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். கண்ணாடி உள்ளதா, கண்ணாடி தெளிவாக
உள்ளதா? ஆக, கண்ணாடியில் பாருங்கள் - எனது பவித்திரதாவுக்கு
எத்தனை சதவிகிதம்? பவித்திரதா என்பது வெறுமனே பிரம்மச்சரியம்
மட்டுமில்லை. ஆனால் பிரம்மாச்சாரி. மனம்-சொல்-செயல்,
சம்பந்தம்-தொடர்பு அனைத்திலும் பவித்திரதா உள்ளதா? எத்தனை
சதவிகித்தில் உள்ளது? சதவிகிதத்தைக் கணக்கிட வருகிறது இல்லையா?
டீச்சர்களுக்கு (சமர்பண சகோதரிகள்) வருகிறதா? பாண்டவர்களுக்கு
வருகிறதா? நல்லது, நீங்கள் சாமர்த்தியசாலிகள்! தாய்மார்களுக்கு
வருகிறதா? வருகிறதா, தாய்மார்களுக்கு? நல்லது.
பவித்திரதாவின் அடையாளம் - உள்ளுணர்வு, பார்வை மற்றும் செயல்
மூன்றிலும் சோதித்துப் பாருங்கள். சம்பூர்ண பவித்திரதாவின்
உள்ளுணர்வு என்னவாக இருக்குமோ, அது புத்தியில் வந்து விட்டது
இல்லையா? யோசித்துப் பாருங்கள் - சம்பூர்ண பவித்திரதாவின்
உள்ளுணர்வு என்றால் ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் சுப பாவனை, சுப
விருப்பம். நீங்கள் அனுபவிகள் இல்லையா? மற்றும் திருஷ்டி
என்னவாக இருக்கும்? ஒவ்வோர் ஆத்மாவையும் ஆத்மா ரூபத்தில்
பார்ப்பது, ஆத்மிக ஸ்மிருதியுடன் பேசுவது, நடப்பது.
சுருக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விவர மாகவோ நீங்கள்
சொற்பொழிவு செய்ய முடியும். மேலும் கிருதி, அதாவது கர்மத்தில்
சுகம் பெற வேண்டும், சுகம் தர வேண்டும். இதை சோதித்துப்
பாருங்கள் -- எனது உள்ளுணர்வு, பார்வை, செயல் இதன்படி
இருக்கிறதா? சுகத்தைப் பெற வேண்டும். துக்கத்தைப் பெறக்கூடாது.
ஆக, சோதித்துப் பாருங்கள்-ஒரு போதும் துக்கத்தையோ பெறவில்லை
தானே? எப்போதாவது, கொஞ்சம்- கொஞசம்? துக்கம் கொடுப்பவர்களோ
இருக்கத் தானே செய்கிறார்கள்! அவர்கள் துக்கம் கொடுத் தாலும்
கூட நீஙகள் அவர்களைப் பின்பற்றுவீர்களா என்ன? பின்பற்ற வேண்டுமா.
அல்லது கூடாதா? யாரைப் பின்பற்ற வேண்டும்? துக்கம் கொடுப்பவரையா
அல்லது பாபாவையா? பாபா, பிரம்மா பாபா, நிராகாரின் விஷயமோ
இருக்கவே செய்கிறது, ஆனால் பிரம்மா பாபா எந்த ஒரு
குழந்தையிடமிருந்தாவது துக்கத்தைப் பெற்றுக் கொண்டாரா? சுகம்
கொடுத்தார், சுகத்தைப் பெற்றுக் கொண்டார். தந்தையைப் பின்பற்ற
வேண்டுமா, அல்லது எப்போதாவது பெற்றுக் கொள்ள வேண்டி யதாக உள்ளதா?
பெயரே துக்கம், எப்போது துக்கம் கொடுக்கிறார்களோ, இன்சல்ட்
செய்கிறார்களோ, அப்போது அறிவீர்கள், இது கெட்ட பொருள் என்று.
யாராவது உங்களை இன்சல்ட் செய்கிறார் என்றால் அதை நீஙகள் நல்லது
எனப் புரிந்து கொள்கிறீர்களா? கெட்டது எனப் புரிந்து கொள்
கிறீர்கள் இல்லையா? ஆக, அவர் உங்களுக்கு துக்கம் கொடுக்கிறார்,
அல்லது இன்சல்ட் செய்கிறார் என்றால், கெட்ட பொருளை யாரேனும்
உங்களுக்குக் கொடுக்கிறார் என்றால் நீங்கள் அதை வாங்கிக்
கொள்வீர்களா? வாங்கிக் கொள்வீர்களா? கொஞ்ச நேரத்துக்கு. அதிக
நேரத்துக்கு இல்லை, கொஞ்ச நேரத்துக்கு? கெட்ட பொருளை வாங்க
வேண்டியதாக உள்ளதா? ஆக, துக்கம் அல்லது இன்சல்ட்டை ஏன் பெற்றுக்
கொள்கிறீர்கள்? அதாவது மனதில் ஃபீலிங் ரூபத்தில் ஏன் வைக்
கிறீர்கள்? ஆக, தன்னைத் தான் கேட்டுக் கொள்ளுங்கள் - நான்
துக்கத்தைப் பெற்றுக் கொள்கிறேனா? அல்லது துக்கத்தை மாறிய (பரிவரித்தன்)
ரூபத்தில் பார்க்கிறீர்களா? என்ன நினைக்கிறீர்கள்? துக்கத்தைப்
பெறுவது சரியா? சரியா? மதுபன் வாசிகள் சொல்லுங்கள், சரியா?
கொஞ்சம்-கொஞசம் பெற்றுக் கொள்ளலாமா? துக்கத்தைப் பெற்றுக்
கொள்ளலாம் இல்லையா? பெறக்கூடாது, ஆனால் பெற்றுக் கொள்கிறீர்கள்.
தவறுதலாகப் பெற்றுக் கொள்கிறீர்கள். துக்கத்தின் ஃபீலிங்
வந்தால் வருத்தப்படுபவர் யார்? மனதில் குப்பையை வைத்திருந்தால்
யார் வருத்தப் படுவார்கள்? எங்கே குப்பை உள்ளதோ, அங்கே வருத்தப்
படுவார்கள் இல்லையா? எனவே அந்தச் சமயம் உங்கள் ராயல்டி மற்று
பர்சனாலிட்டியை முன்னால் கொண்டு வாருங்கள் மற்றும் தன்னை எந்த
ரூபத்தில் பார்க்க வேண்டும்? உங்கள் டைட்டில் என்ன என்பது
உங்களுக்குத் தெரியுமா? உங்களது டைட்டில் பொறுமையின் தேவி,
பொறுமையின் தேவ். ஆக, நீங்கள் யார்? பொறுமையின் தேவிகள்,
பொறுமையின் தேவர்களா இல்லையா? சில நேரம் ஆகி விடுகிறீர்கள்.
உங்கள் பொஸிஷனை நினைவு வையுங்கள். சுயமரியாதையை நினைவு
செய்யுங்கள். நான் யார்? இதை ஸ்மிருதியில் கொண்டு வாருங்கள்.
முழுக் கல்பத்தின் விசேஷ சொரூபத்தின் ஸ்மிருதியைக் கொண்டு
வாருங்கள். ஸ்மிருதியோ வருகிறது இல்லையா?
பாப்தாதா பார்த்தார் - எப்படி எனது என்ற சொல்லை சகஜ நினைவில்
மாற்றி விட்டீர்கள். ஆக, எனது என்பதன் விஸ்தாரத்தை
ஒருங்கிணைப்பதற்காக என்ன சொல்கிறீர்கள்? மேரா பாபா. எப்போ
தெல்லாம் எனது எனது என்பது வருகிறதோ, அப்போது மேரா பாபா
என்பதாகச் சுருக்கி விடுகிறீர்கள். மேலும் அடிக்கடி மேரா பாபா
எனச் சொல்வதால் நினைவும் சகஜமாகி விடும் மற்றும் பிராப்தியும்
அதிகமாகி விடும். அது போலவே நாள் முழுவதும் எந்த விதமான
பிரச்சினை அல்லது காரணம் வருகிறது என்றால் அதில் இந்த இரண்டு
சொற்கள் விசேஷமானவை - நான் மற்றும் எனது. ஆக, எப்படி பாபா என்ற
சொல்லைச் சொன்னதுமே என்னுடைய என்ற சொல் பக்காவாக நினைவாகி
விட்டது. ஆகி விட்டது இல்லையா? அனைவரும் இப்போது பாபா, பாபா
என்று மட்டும் சொல்வதில்லை. மேரா பாபா - என்னுடைய பாபா எனச்
சொல்கிறீர்கள். அது போலவே நான் என்ற சொல்லைச் சொல்கிறீர்கள்
என்றால் அதையும் மாற்றுவதற்காக எப்போ தெல்லாம் நான் என்ற
சொல்லைச் சொல்கிறீர்களோ, அப்போது தன்னுடைய சுவமான்களின்
லிஸ்ட்டை முன்னால் கொண்டு வாருங்கள். நான் யார்? ஏனென்றால் நான்
என்ற சொல் வீழ்த்துவதற்கு நிமித்தமாகவும் ஆகிறது மற்றும் நான்
என்ற சொல், சுவமானத்தின் ஸ்மிருதி மூலம் மேலே உயர்த்தவும்
செய்கிறது. எனவே எப்படி மேரா பாபா என்பது அப்பியாசம் ஆகி
விட்டதோ, அது போல் நான் என்ற சொல்லை தேக உணர்வின் ஸ்மிருதிக்கு
பதிலாக தனது சிரேஷ்ட சுவமானத்தை முன்னால் கொண்டு வாருங்கள்.
நான் சிரேஷ்ட ஆத்மா, பாபாவின் மன சிம்மாசனத்தில் அமரக்கூடிய
ஆத்மா, விஷ்வ கல்யாணி ஆத்மா -- இது போல் ஏதேனுமொரு சுவமானத்தை
நான் என்பதோடு இணைத்து விடுங்கள். எப்படி மேரா (என்னுடைய) என்ற
சொல் இப்போது பெரும்பாலும் பாபா என்ற சொல்லை நினைவு
படுத்துகிறதோ, அது போல் நான் என்ற சொல் சுவமானத்தை நினைவு
படுத்த வேண்டும். ஏனென்றால் இப்போதைய சமயம் இயற்கை மூலம் தனது
சவாலை விட்டுக் கொண்டிருக்கிறது.
சமயத்தின் சமீபத்தை சாதாரண விஷயம் என நினைக்காதீர்கள்.
திடீரென்று (அச்சானக்) மற்றும் எவர்ரெடி என்ற சொற்களைத் தனது
கர்மயோகி வாழ்க்கையில் ஒவ்வொரு நேரமும் ஸ்மிருதி யில் வையுங்கள்.
தனது சாந்தியின் சக்தியைத் தனக்காகவும் பலவித ரூபங்களில்
பிரயோகம் செய்யுங்கள். எப்படி விஞ்ஞானம் தனது புதுப்புதுப்
பிரயோகங்களைச் செய்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு தனக்காகப்
பிரயோகம் செய்வதற்குப் பயிற்சி செய்து கொண்டே இருக் கிறீர்களோ,
அவ்வளவு மற்றவர்களுக்காகவும் சாந்தியின் சக்தி பிரயோகம் ஆகிக்
கொண்டே இருக்கட்டும்.
இப்போது விசேஷமாக தன்னுடைய சக்திகளின் சகாஷை நாலாபுறமும் பரவச்
செய்யுங்கள். உங்கள் இயற்கை சூரியனின் சக்தி, சூரியனின்
கிரணங்கள் தங்கள் காரியங்களை எத்தனை ரூபங்களில் செய்து
கொண்டிருக்கின்றன! அதனால் மழை பெய்யவும் செய்கிறது, தண்ணீர்
காய்ந்து வற்றிப் போகவும் செய்கிறது. பகலில் இருந்து இரவு,
இரவிலிருந்து பகலாக ஆக்கிக் காட்டவும் செய்கிறது. அப்போது
நீங்கள் உங்கள் சக்திகளின் சகாஷை வாயுமண்டலத்தில் பரவச் செய்ய
முடியாதா? ஆத்மாக்களுக்குத் தன் சக்திகளின் சகாஷ் மூலம் துக்கம்
அசாந்தியிலிருந்து விடுவிக்க முடியாதா? ஞான சூரியன் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள். கிரணங்களைப் பரவச் செய்யுங்கள். சகாஷ்
பரப்புங்கள். எப்படி ஸ்தாபனையின் ஆரம்ப காலத்தில் பாப்தாதாவின்
தரப்பிலிருந்து அநேக ஆத்மாக்களுக்கு சுகம்-சாந்தியின் சகாஷ்
கிடைப்பதன் அனுபவம் வீட்டில் அமர்ந்தவாறே கிடைத்தது. போக
வேண்டும் என்ற சங்கல்பம் வந்தது. அது போல் இப்போது மாஸ்டர் ஞான
சூரியன் குழந்தைகளாகிய உங்கள் மூலமாக சுகம் சாந்தியின் அலையைப்
பரப்புவதற்கான அனுபவம் இருக்க வேண்டும். ஆனால் அதற்கான சாதனம்
மனதின் ஒருமுகத்தன்மை. நினைவின் ஒருமுகத்தன்மை. அப்போது தான்
அது நடக்கும். ஒருமுகத்தன்மையின் சக்தியைத் தனக்குள் அதிகப்
படுத்துங்கள். எப்போது விரும்புகிறீர்களோ, எது வரை
விரும்புகிறீர்களோ, அது வரை மனதை ஒருமுகப்படுத்த முடிய வேண்டும்.
இப்போது மாஸ்டர் ஞான சூரியனின் சொரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
மற்றும் சக்திகளின் கிரணங்கள், சகாஷைப் பரவச் செய்யுங்கள்.
பாப்தாதா கேட்டார் மற்றும் குஷியடைகிறார் - குழந்தைகள் சேவையின்
ஊக்கம்-உற்சாகத்தில் ஒவ்வோரிடத்திலும் சேவையை நன்கு செய்து
கொண்டிருக்கிறார்கள். பாப்தாதாவிடம் சேவை பற்றிய செய்திகள்
அனைத்துத் தரப்பிலிருந்தும் நல்ல-நல்லதாக வந்து சேர்ந்துள்ளன.
கண்காட்சி நடத்தலாம், செய்தித்தாளகள் மூலமாகச் செய்யலாம், டி.வி.
மூலம் செய்தி கொடுப்பதற்கான காரியத்தை அதிகப் படுத்திக் கொண்டே
செல்கிறீர்கள். செய்தியும் சென்று சேர்கிறது செய்தியை ந்னகு
சென்று சேருமாறு செய்து கொண்டிருக்கிறீர்கள். கிராமங்களிலும்
எங்கெல்லாம் மிச்சமிருக் கிறதோ, அங்கு ஒவ்வொரு ஜோனும் அவரவர்
ஏரியாவை அதிகப் படுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.
செய்தித்தாள்கள் மூலம், டி.வி. மூலம் பல்வேறு சாதனங்கள் மூலம்
ஊக்கம்-உற்சாகத்துடன் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கான
அனைத்தையும் செய்கின்ற குழந்தைகளுக்கு பாப்தாதா மிகவும்
சிநேகயுக்த் ஆசிர்வாதங்கள் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது செய்தி கொடுப் பதிலோ நல்ல
ஊக்கம-உற்சாகம் உள்ளது. மேலும் நாலா புறமும் பிரம்மாகுமாரீஸ்
என்பது என்ன, மிக நல்ல சக்திசாலி காரியம் செய்து கொண்டிருக்
கிறார்கள் என்ற இந்த சப்தமும் நன்றாகப் பரவிக் கொண்டுள்ளது.
மற்றும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஆனால்
என்னவென்று சொல்லவா? ஆனால் சொல்லவா? ஆனால் பிரம்மாகுமாரிகளின்
பாபா எவ்வளவு நல்லவர் என்ற அந்த சப்தம் இப்போது அதிகரிக்க
வேண்டும். பிரம்மா குமாரிகள் நல்ல காரியம் செய்து
கொண்டிருக்கிறார்கள். ஆனால் செய்விப்பவர் யார் என்ற இந்தப்
பிரத்தியட்சதா இப்போது வர வேண்டும். தந்தை வந்திருக்கிறார் -
இந்தச் செய்தி மனம் வரை சென்று சேர வேண்டும். இதற்கான திட்டத்தை
உருவாக்குங்கள்.
பாப்தாதாவிடம் குழந்தைகள் கேள்வி கேட்டார்கள் -- வாரிசு அல்லது
மைக் என்று யாரைச் சொல்வது? மைக்குகள் வெளிப்பட்டும்
இருக்கிறார்கள். ஆனால் பாப்தாதா இப்போதைய சமயத்தின் அனுசாரம்
மைக் அந்த மாதிரி இருக்க வேண்டுமென விரும்புகிறார், அல்லது
அவசியம் - அவருடைய சப்தத்தில் மகான் தன்மை இருக்க வேண்டும்.
சாதாரணமாக பாபா என்ற சொல்லைச் சொன்னாலும் கூட, நன்றாகச்
செய்கிறார்கள், இது வரை கூட கொண்டு வந்திருக்கிறீர்கள் எனும்
போது பாப்தாதா வாழ்த்து சொல்கிறார். ஆனால் இப்போது அந்த மாதிரி
மைக் வேண்டும் - அவருடைய சப்தத்துக்கு மக்கள் மத்தியில்
செல்வாக்கு இருக்க வேண்டும். அநத மாதிரி புகழ் பெற்றவராக
இருக்க வேண்டும். புகழ் என்பதன் அர்த்தம் இதுவன்று - சிரேஷ்ட
பதவியில் இருப்பவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவரது
சப்தத்தைக் கேட்பவர் புரிந்து கொள்ள வேண்டும் - இதைச்
சொல்பவரின் சப்தத்திற்கு மதிப்பு உள்ளது. இதை அனுபவத்தில்
சொல்கிறார்கள் என்றால் அதற்கு மதிப்பு இருக்கும். அந்த மாதிரி
மைக்குகளோ அநேகர் உள்ளனர். ஆனால் ஒவ்வொருவருடைய பேச்சிலும்
உள்ள சக்தியில் ஒவ்வொரு மாதிரியான வித்தியாசம் இருக்கும். அது
போல் அப்படிப்பட்ட மைக்கைத் தேடுங்கள், அவர்களின் சொல்லில்
சக்தி இருக்க வேண்டும். அவரது சப்தத்தைக் கேட்பவர்கள் புரிந்து
கொள்ள வேண்டும் - இவர் அனுபவம் செய்து வந்திருக்கிறார். அதனால்
அதில் ஏதோ விஷயம் உள்ளது. ஆனால் பிறகும் கூட தற்போது ஒவ்வொரு
ஜோன், ஒவ்வொரு வர்க்கத்திலும் மைக் வெளிப்பட வேண்டியது அவசியம்.
சேவை யின் பிரத்தியட்ச ரிசல்ட் வெளிப்படவில்லை என்று பாப்தாதா
சொல்லவில்லை. வெளிப் பட்டுள்ளது. ஆனால் இப்போது சமயம் குறைவாக
உள்ளது மற்றும் சேவையின் மகத்துவம் உள்ள ஆத்மாக்களை இப்போது
நிமித்தமாக்க வேண்டும். அவர்களின் சப்தத்திற்கு மதிப்பு இருக்க
வேண்டும். பதவி அல்லது அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால்
அவருக்கு நடைமுறை வாழ்க்கை மற்றும் நடைமுறை அனுபவத்தின்
அத்தாரிட்டி இருக்க வேண்டும். அவரது பேச்சில் அனுபவத்தின்
அத்தாரிட்டி இருக்க வேண்டும். எப்படிப்பட்ட மைக் வேண்டும்
என்பது புரிந்ததா? வாரிசு பற்றியோ அறிந்திருக்கிறீர்கள்.
யாருடைய ஒவ்வாரு சுவாசத்திலும், ஒவ்வோரடியிலும் தநதை மற்றும்
கடமை மற்றும் அதோடு கூடவே மனம்-சொல்-செயல், உடல்-மனம்-செல்வம்
அனைத்திலும் பாபா மற்றும் யக்ஞம் நிறைந்திருக்க வேண்டும். சகாஷ்
கொடுப்பதற்கான சக்தி இருக்க வேண்டும். நல்லது.
இப்போது ஒரு விநாடியில், ஒரு விநாடி ஆகி விட்டது, ஒரு
விநாடியில் முழு சபையும், யார் எங்கே இருக்கிறீர்களோ, அங்கே
மனதை ஒரே சங்கல்பத்தில் நிலைக்கச் செய்யுங்கள் - பாபா மற்றும்
நான் பரந்தாமத்தில் அநாதி ஜோதி பிந்து சொரூபமாக இருக்கிறேன்.
பரந்தாமத்தில் பாபாவோடு கூட அமர்ந்து விடுங்கள். நல்லது.
இப்போது சாகாரத்தில் வந்து விடுங்கள்.
இப்போது நிகழ்காலத்தின் கணக்குப்படி மனம்-புத்தியை ஒருமுகப்
படுத்துவதற்கான அப்பியாசம், என்ன காரியம் செய்து
கொண்டிருக்கிறீர்களோ, அந்தக் காரியத்திலேயே ஒருமுகப்
படுத்துங்கள். கட்டுப்படுத்தும் சக்தியை மிகவும்
அதிகமாக்குங்கள். மனம்-புத்தி-சம்ஸ்காரம் மூன்றின் மீதும்
கட்டுப்படுத்தும் சக்தி. இந்த அப்பியாசம் வரப்போகிற சமயத்தில்
அதிக சகயோகம் கொடுக்கும். வாயுமண்டலத்தின் அனுசாரம் ஒரு
விநாடியில் கட்டுப்படுத்த வேண்டியதிருக்கும். என்ன
விரும்புகிறீர்களோ, அது தான் நடக்க வேண்டும். ஆக, இந்த
அப்பியாசம் மிகவும் அவசியமாகும். இதை லேசாக ஆக்கிவிடக் கூடாது.
ஏனென்றால் சமயத்தில் இது தான் கடைசி நேரத்தை அழகானதாக
உருவாக்கும். நல்லது.
நாலாபுறம் உள்ள இரட்டை சிம்மாசனதாரி, பாப்தாதாவின் மன
சிம்மாசனதாரி, அதோடு உலக ராஜ்ய சிம்மாசனத்திற்கு அதிகாரி, சதா
தனது அநாதி சொரூபம், ஆதி சொரூபம், மத்திய சொரூபம், கடைசி
சொரூபத்தில் விரும்புகிற போது நிலைத்திருக்கக் கூடிய, சதா சர்வ
கஜானாக்களையும் சுயம் காரியத்தில் ஈடுபடுத்தக் கூடிய மற்றும்
மற்றவர்களையும் கஜானாக்களால் நிரம்பிய வர்களாக ஆக்கக்கூடிய
அனைத்து ஆத்மாக்களுக்கும், தந்தை மூலமாக முக்தியின் ஆஸ்தி
கிடைக்கச் செய்கிற அத்தகைய பரமாத்ம அன்பிற்குப் பாத்திரமான
ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள், மனப்பூர்வ
ஆசிர்வாதங்கள் மற்றும் நமஸ்தே.
ஆசீர்வாதம்:
துணைவர் மற்றும் சாட்சி நிலையின் அனுபவத்தின் மூலம் சதா வெற்றி
மூர்த்தி ஆகுக.
எந்தக் குழந்தைகள் சதா பாபாவோடு கூடவே இருக்கிறார்களோ, அவர்கள்
தாமாகவே சாட்சி ஆகி விடு கிறார்கள். ஏனென்றால் பாபா சுயம்
சாட்சியாகிப் பார்ட் நடிக்கிறார். எனவே அவருடன் கூட
இருப்பவர்களும் கூட சாட்சியாகிப் பார்ட் நடிப்பார்கள் மற்றும்
யாருடைய துணைவர் சுயம் சர்வ சக்திவான் தந்தையாக இருக்கிறாரோ,
அவர்கள் வெற்றி மூர்த்தியாகவும் தாமாகவே ஆகி விடு வார்கள்.
பக்தி மார்க்கத்திலோ, அழைக்கிறார்கள் - சிறிது நேரத்திற்கான
துணையின் அனுபவத்தைச் செய்வியுங்கள். ஜொலிப்பைக் காட்டுங்கள்.
ஆனால் நீங்கள் சர்வ சம்பந்தங்களால் துணையாகி விட்டீர்கள். எனவே
இதே குஷி மற்றும் நஷாவில் இருங்கள் - எதையெல்லாம் அடைய வேண்டுமோ,
அவை அனைத்தையும் அடைந்து விட்டேன்.
சுலோகன்:
வீண் சங்கல்பங்களின் அடையாளம் - மன வருத்தம் மற்றும் குஷி
மறைந்து விடுதல்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
நீண்ட காலம் ஆடாத, அசையாத, நிர்விக்ன, நிர்பந்தன், நிர்விகல்ப,
நிர்விகர்ம, அதாவது நிராகாரி, நிர்விகாரி, மற்றும் நிரகங்காரி
ஸ்திதியில் இருங்கள். அப்போது கர்மாதீத் ஆக முடியும். சேவையின்
விஸ்தாரத்தை நீங்கள் எவ்வளவு தான் அதிகப் படுத்தினாலும்
விஸ்தாரத்தில் சென்ற போதும் சாரத்தின் ஸ்திதியினுடைய அனுபவம்
குறையக் கூடாது. விஸ்தாரத்தில் சாரம் மறந்து போக் கூடாது.
உண்ணுங்கள், அருந்துங்கள், சேவை செய்யுங்கள், ஆனால் விடுபட்ட
நிலையை மறந்து விடாதீர்கள்.