08-06-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த முழு உலகமும்
ஈஸ்வரிய குடும்பமாகும், அதனால் தான் நீங்கள் தாய், தந்தையாக
இருக்கிறீர்கள், நாங்கள் உங்களது குழந்தைகள் என்று மகிமை
பாடுகின்றனர். இப்போது நீங்கள் நடைமுறையில் இறை
குடும்பத்தினர்களாக ஆகியிருக்கிறீர்கள்.
கேள்வி:
தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு
முழு ஆஸ்தி அடைவதற்கான எளிய விதி என்ன?
பதில்:
சங்கமத்தில் சிவபாபாவை தனது
வாரிசாக ஆக்கிக் கொள்ளுங்கள். உடல், மனம், பொருளால் பலியாகி
விடும் போது 21 பிறவிகளுக்கு முழு ஆஸ்தி பலனாக கிடைத்து விடும்.
எந்த குழந்தைகள் சங்கமத்தில் தனது பழையவைகள் அனைத்தையும்
காப்பீடு (இன்சூர்) செய்கிறார் களோ அதற்கு கைமாறாக நான் 21
பிறவிகள் வரை கொடுக்கிறேன் என்று பாபா கூறுகின்றார்.
பாடல்:
கண் பார்வை இல்லாதவர்களுக்கு வழி
காண்பியுங்கள் ........
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். பக்தர்கள் பகவானை அழைக்கின்றனர்.
பகவானை முழுமையாக அறியாத காரணத்தினால் மனிதர்கள் எவ்வளவு
துக்கமானவர்களாக இருக்கின்றனர்! பக்தி மார்க்கத்தில் எவ்வளவு
கடின உழைப்பு செய்து கொண்டிருக்கின்றனர்! இந்த வாழ்க்கைக்கான
விசயம் மட்டுமேயன்றி எப்போது பக்தி ஆரம்பமானதோ அப்போதிலிருந்தே
ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். பாரதத்தில் தான் தேவி
தேவதை களின் இராஜ்யம் இருந்தது. அது தான் சொர்க்கம், சத்தியமான
கண்டம் (தேசம்) என்று கூறப்படுகிறது. பாரதத்தின் மகிமை மிகவும்
உயர்ந்தது, ஏனெனில் பரம்பிதா பரமாத்மாவின் பிறப்பிடமாகும்.
அவரது உண்மையான பெயர் சிவன். சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர்.
ருத்ரன் அல்லது சோமநாத ஜெயந்தி என்று கூறுவது கிடையாது.
சிவஜெயந்தி அல்லது சிவராத்திரி என்று கூறப்படுகிறது.
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார்.
அனைத்து பக்தர்களின் பகவான் அவசியம் ஒருவராகத் தான் இருக்க
வேண்டும். அனைவரும் கண் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர்,
அதாவது ஞானக் கண்ணில்லாதவர்களாக இருக்கின்றனர். பகவானின்
மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன்.
ஸ்ரீமத் பகவத் கீதை முக்கியமானது. ஸ்ரீ என்றால் சிரேஷ்ட
வழியாகும். இப்போது நீங்கள் புத்திவான்களாக ஆக்கப்படுகிறீர்கள்.
தெய்வீகக் கண் என்றால் ஞானம் என்ற மூன்றாவது கண்
காண்பிக்கின்றனர். உண்மையில் ஞானம் என்ற மூன்றாவது கண்
பிராமணர்களாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள்
தந்தையை மற்றும் தந்தையின் படைப்பு களைப் பற்றிய முதல், இடை,
கடையை அறிந்து கொள்கிறீர்கள். இந்த நேரத்தில் அனைவரிடத்திலும்
தேக அகங்காரம் அல்லது 5 விகாரங் கள் உள்ளன, அதனால் தான்
காரிருளில் இருக்கின்றனர். குழந்தைகளாகிய உங்களிடத்தில் ஒளி
இருக்கிறது. உங்களது ஆத்மா முழு உலகின் சரித்திர, பூகோளத்தை
அறிந்து கொண்டுள்ளது. முன்பு நீங்கள் அனைவரும் அஞ்ஞானத்தில்
இருந்தீர்கள். ஞானக் கண்மை சத்குரு கொடுத்தார், அஞ்ஞான இருள்
நீங்கி விட்டது. யார் பூஜைக்குரியவர்களாக இருந்தார் களோ அவர்களே
பூஜாரிகளாக ஆகிவிட்டனர். பூஜைக்குரியவர்கள் ஒளியில் (சத்ய
திரேதா வில்) இருந்தனர். பூஜாரிகள் இருளில் (துவாபர்,
கலியுகத்தில்) இருக்கின்றனர். பரமாத்மாவை நீங்களே
பூஜைக்குரியவர், நீங்களே பூஜாரி என்று கூற முடியாது. அவர் பரம
பூஜைக்குரியவர் ஆவார். அனைவரையும் பூஜைக்குரியவராக ஆக்கக்
கூடியவராவார். அவர் பரம பூஜ்யமானவர் என்று கூறப்படுகிறார்.
பரம்பிதா பரம் ஆத்மா என்றால் பரமாத்மா. கிருஷ்ணரை இவ்வாறு
கூறுவது கிடையாது. அவரை அனைவரும் பரம்பிதா என்று கூற
மாட்டார்கள். நிராகார இறைவனைத் தான் அனைவரும் பரம்பிதா என்று
கூறுகின்றனர். அவரும் ஆத்மா தான், ஆனால் பரம் (உயர்ந்தவர்) ஆக
இருக்கின்றார். அதனால் தான் அவர் பரமாத்மா என்று
கூறப்படுகின்றார். அந்த பரம் ஆத்மா சதா பரந்தாமத்தில் இருக்கக்
கூடியவர் ஆவார். ஆங்கிலத்தில் அவரை சுப்ரீம் சோல் (பரம் ஆத்மா)
என்று கூறுகின்றனர். தந்தை கூறு கின்றார் - ஆத்மா பரமாத்மாவை
விட்டு பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது ....... என்று நீங்கள்
பாடவும் செய்கிறீர்கள். பரமாத்மா பரமாத்மாவை விட்டு பிரிந்து
வெகு காலம் ஆகிவிட்டது என்ற கூறுவது கிடையாது. ஆத்மா தான்
பரமாத்மா, பரமாத்மா தான் ஆத்மா என்று கூறுவது தான் முதல் நம்பர்
அஞ்ஞானமாகும். ஆத்மாவானது பிறப்பு இறப்பில் வருகிறது. பரமாத்மா
மறுபிறப்பு களில் வருவது கிடையாது. பாரதவாசிகளாகிய நீங்கள்
சொர்க்கவாசிகளாக இருந்தீர்கள் என்பதை தந்தை அமர்ந்து புரிய
வைக்கின்றார். மனிதர்களில் பூஜைக்குரியவர்கள் தேவி தேவதைகள்
ஆவர். இவர்கள் அனைவரும் ஈஸ்வரிய குடும்பமாகும். ஈஸ்வரன்
படைப்பவர் ஆவார். நீங்கள் தான் தாய், தந்தை, நாங்கள் உங்களது
குழந்தைகள் ....... என்று பாடப்படுகிறது. ஆக குடும்பம்
ஆகிவிடுகிறது அல்லவா! நல்லது, தாய், தந்தை என்று நீங்கள் யாரை
கூறுகிறீர்கள்? இவ்வாறு கூறுவது யார்? ஆத்மா தான் தாய், தந்தை.....
என்று கூறுகிறது. உங்களது கருணையினால் எங்களுக்கு சொர்க்கம்
என்ற சுகமான பூமி கிடைத்திருந்தது. தாய், தந்தையாகிய நீங்கள்
வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள். ஆக நாங்கள் உங்களது
குழந்தைகளாக ஆகின்றோம். நான் சங்கமத்தில் வந்து தான் புது
உலகிற்காக இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
மனிதர்களின் புத்தி முற்றிலும் கீழானதாக ஆகிவிட்டது.
சொர்க்கத்தை நரகம் என்று புரிந்து கொள்கின்றனர். அங்கும் கம்சன்,
ஜராசந்தன், ஹிரண்யன் போன்றவர்கள் இருந்தனர் என்று கூறுகின்றனர்.
நீங்கள் மறந்து விட்டீர்களா என்ன? என்று தந்தை வந்து புரிய
வைக்கின்றார். எனது சிவஜெயந்தியையும் நீங்கள் பாரதத்தில் தான்
கொண்டாடுகிறீர்கள். சிவராத்திரி என்று பாடப் பட்டிருக்கிறது.
எந்த ராத்திரி? இந்த பிரம்மாவின் எல்லையற்ற ராத்திரி ஆகும்.
தந்தை சங்கமத்தில் வந்து இரவை பகலாக அதாவது நரகத்தை சொர்க்கமாக
ஆக்குகிறார். சிவராத்திரி என்பதன் அர்த்தம் யாருக்கும்
தெரியவில்லை. பகவான் நிராகாரமானவர். மனிதர்களுக்கு பிறவி
பிறவியாக சரீரத்தின் பெயர் மாறுகிறது. எனக்கு சரீரத்தின் பெயர்
எதுவும் கிடையாது என்று பரமாத்மா கூறு கின்றார். எனது பெயரே
சிவன். நான் வயோதிக, வானபிரஸ்த சரீரத்தை ஆதாரமாக எடுத்துக்
கொள்கிறேன். இவர் பூஜைக்குரியவராக இருந்தார், இப்போது
பூஜாரியாக ஆகி விட்டார். சிவபாபா வந்து சொர்க்கத்தை
படைக்கின்றார், நாம் அவரது குழந்தைகள் எனில் அவசியம் நாம்
சொர்க்கத் திற்கு எஜமானர்களாக ஆக வேண்டும் அல்லவா! சிவபாபா
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும்
அவரவர்களுக்கென்று நாடகத்தில் பாகம் இருக்கிறது. ஒவ்வொரு
ஆத்மாவிற்கும் அவரவர்களுக்கான சுகம், துக்கத்தின் பாகம்
பதிவாகியிருக்கிறது. நாம் சிவபாபா வின் வாரிசாக ஆகியிருந்தோம்
என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவபாபா சொர்க்கவாசிகளாக ஆக்கி
யிருந்தார், அதனால் தான் அவரை அனைவரும் நினைவு செய்கின்றனர். ஓ
பரம்பிதா! கருணை காட்டுங்கள்! சாதுக்களும் சாதனை செய்கின்றனர்,
ஏனெனில் இங்கு அதிக துக்கம் இருப்பதால் நிர்வாண் தாமம் (முக்திக்கும்)
செல்ல விரும்புகின்றனர். ஆத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடும்
அல்லது ஆத்மா தான் பரமாத்மா என்று புரிந்து கொள்வது தவறாகும்.
ஆத்மாக்களாகிய நாம் பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள், பிறகு
தேவதா குலத்திற்கு வருவோம், பிறகு 84 பிறவிகள் எடுப்போம் என்று
இப்போது நீங்கள் கூறுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் வர்ணங்களில்
வருகிறோம். சிவபாபா பிறப்பு, இறப்பில் வருவது கிடையாது.
நாராயணனின் இராஜ்யம் மட்டுமே இருந்தது. எவ்வாறு கிறிஸ்தவ
தர்மத்தில் முதலாம் எட்வர்ட், இரண்டாம் எட்வர்ட், மூன்றாம்....
என்று நடைபெற்றதோ அதே போன்று அங்கும் முதலாம் லெட்சுமி நாராயணன்,
இரண்டாம் லெட்சுமி நாராயணன், மூன்றாம் லெட்சுமி நாராயணன் என்று
8 சாம்ராஜ்யம் நடைபெறும். இப்போது பிராமணர்களாகிய உங்களுக்கு
மூன்றாவது கண் திறக்கப்பட்டிருக்கிறது. தந்தை அமர்ந்து
ஆத்மாக்களிடத்தில் உரையாடல் செய்கிறார். நீங்கள் இவ்வாறு 84
பிறவிச் சக்கரத்தில் இத்தனை இத்தனை பிறப்புகள் எடுத்து
வந்தீர்கள். வர்ணங்களின் சித்திரத்தையும் உருவாக்கு கிறீர்கள்
- அதில் தேவதா, சத்ரிய, வைஷ்ய, சூத்ர, பிராமணர்களை
உருவாக்குகிறீர்கள். நாம் பிராமணர்கள் குடுமி போன்றவர்கள்
என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இந்த நேரத்தில் நாம்
நடைமுறையில் ஈஸ்வரிய வம்சத்தினர்களாக இருக்கிறோம். இந்த எளிய
இராஜயோகம் மற்றும் ஞானத்தின் மூலம் நமக்கு சுகமான உலகம்
கிடைக்கிறது. சிலர் சூரியவம்ச இராஜ்யத்தின் ஆஸ்தி அடை கின்றனர்,
சிலர் சந்திர வம்சத்தின் ஆஸ்தி அடைகின்றனர். முழு இராஜ்யமும்
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர்களது
முயற்சியின் படி அந்த பதவி அடை வார்கள். நான் படித்துக்
கொண்டிருக்கும் போதே சரீரத்தை விட்டு விட்டால் என்ன பதவி
கிடைக்கும்? என்று யாராவது கேட்டால் பாபாவினால் கூறி விட
முடியும். நினைவின் மூலம் ஆயுள் அதிகரிக்கும், விகர்மங்கள்
விநாசம் ஆகும். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆவதற்கு வேறு
எந்த உபாயமும் கிடையாது. பதீத பாவன் என்று கூறியதும் பகவானின்
நினைவு வருகிறது. ஆனால் பகவான் யார்? என்பதை அறியவில்லை. நான்
பாரதத்தில் தான் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். இது எனது
பிறப்பிடமாகும். சோமநாத் கோவில் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது!
இதை தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். பிறகு
பக்தி மார்க்கத்தில் நினைவுச் சின்னத்தை உருவாக்க ஆரம்பித்து
விடுகின்றனர். எப்போது பூஜாரிகளாக ஆகிறீர்களோ அப்போது முதன்
முதலில் சோமநாதரின் கோவிலை உருவாக்குகிறீர்கள். பாரதம் சத்யுகம்,
திரேதாவில் மிகுந்த செல்வமிக்கதாக இருந்தது. கோவில்களிலும்
அளவற்ற செல்வம் இருந்தது. பாரதம் வைரத்திற்குச் சமமாக இருந்தது.
இப்போது பாரதம் சோழி போன்று ஏழையாக ஆகிவிட்டது. மீண்டும் தந்தை
வந்து பாரதத்தை வைரம் போன்று ஆக்குகின்றார். படைப்பவர் யார்?
என்று யாரிடத்தில் வேண்டுமென்றாலும் கேளுங்கள். பரமாத்மா என்று
கூறுவர். அவர் எங்கு இருக்கிறார்? அவர் சர்வவியாபி என்பார்கள்.
இந்த முழு மரமும் இற்றுப் போன நிலையில் இருக்கிறது என்று தந்தை
கூறுகின்றார்.
பாபா, மம்மாவின் இதய சிம்மாசனத்தில் அமருமளவிற்கு நான்
தகுதியானவனாக ஆகியிருக் கிறேனா? என்று தன்னைப் பாருங்கள். இது
தூய்மையற்ற உலகமாகும். முக்கிய மானது தூய்மை யாகும். இப்போது
ஆரோக்கியமும் கிடையாது, செல்வமும் கிடையாது, மகிழ்ச்சியும்
கிடையாது. இது கானல் நீர் போன்ற இராஜ்ய மாகும். இதைப் பற்றியும்
சாஸ்திரத்தில் துரியோதனனின் கதை எழுதப்பட்டிருக்கிறது.
விகாரிகள் தான் துரியோதனன் என்று கூறப்படுகின்றனர். எங்களுக்கு
கௌரவம் கொடுங்கள் என்று திரௌபதிகள் கூறுகின்றனர். அனைவரும்
திரௌபதிகள் அல்லவா! அனைத்து பெண் குழந்தைகளும் சொர்க்கத்தின்
வாயிலாக இருக்கின்றனர். பாபா எவ்வளவு நல்ல முறையில் புரிய
வைக்கின்றார்! யாருடைய புத்தியோகம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறதோ
அவர்களுக்கு தாரணையும் ஏற்படும். பிரம்மச்சரிய சமயத்தில் தான்
ஞானம் கற்பிக்கப்படுகிறது. இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர்
போன்று இருக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். இரண்டு
பக்கமும் இருக்க வேண்டும். அவசியம் வாழ்ந்து கொண்டே இறக்கவும்
வேண்டும். இறக்கும் தருவாயில் மனிதர்களுக்கு மந்திரம் கொடுப்பர்.
நீங்கள் அனைவரும் இறக்கக் கூடியவர்கள் என்று தந்தை கூறுகின்றார்.
நான் காலனுக்கெல்லாம் காலனாக இருக்கிறேன், அனைவரையும் அழைத்துச்
செல்பவன். ஆக குஷி ஏற்பட வேண்டும் அல்லவா! பிறகு யார் நன்றாக
படிப்பார்களோ அவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவார்கள்.
படிக்க வில்லை யெனில் பிரஜை பதவி அடைவார்கள். இராஜ்ய பதவி
அடைவதற்காக நீங்கள் இங்கு வந்திருக் கிறீர்கள். இது படிப்பாகும்,
இதில் குருட்டு நம்பிக்கைக்கான விசயமே கிடையாது. இந்த படிப்பு
இராஜ்யத்திற்கானது. வக்கீல் ஆக வேண்டும் என்று படிப்பின்
இலட்சியம் வைக்கின்றனர் எனில் கற்பிக்கும் ஆசிரியரிடத்தில்
தொடர்பு அவசியம் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு பகவான்
உங்களுக்கு கற்பிக்கின்றார் எனில் அவரிடத்தில் தொடர்பு வைத்துக்
கொள்ள வேண்டும். நான் பரந்தாமம், வெகு தொலைவிலிருந்து வருகிறேன்
என்று தந்தை கூறுகின்றார். பரந்தாமம் எவ்வளவு தொலைவில்
இருக்கிறது! சூட்சுமவதனத்தை விட உயரத்தில் இருக்கிறது,
அங்கிருந்து வருவதற்கு எனக்கு ஒரு விநாடி தான் ஆகிறது. அவரை
விட வேகமானவர் வேறு யாரும் இருக்க முடியாது. விநாடியில்
ஜீவன்முக்தி கொடுக்கின்றார். ஜனகரின் உதாரணம் இருக்கிறது அல்லவா!
இப்போது நரகம், பழைய உலகமாகும். புது உலகம் தான் சொர்க்கம்
என்று கூறப்படுகிறது. தந்தை நரகத்தை விநாசம் செய்வித்து
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். மற்ற அனைத்து
ஆத்மாக்களும் சாந்திதாமத்திற்குச் சென்று விடும். ஆத்மா
அழிவற்றது. அதற்கு கிடைத்திருக்கும் பாகமும் அழிவற்றது ஆகும்.
பிறகு ஆத்மா சிறியதாக, பெரியதாக எப்படி ஆக முடியும்? அதாவது
எப்படி எரிந்து, இறக்க முடியும்? இருப்பதோ நட்சத்திரம் போன்று!
பெரியதாக, சிறியதாக ஆக முடியாது. இப்போது நீங்கள் இறை தந்தையின்
மாணவர்கள். இறை தந்தை ஞானம் நிறைந்தவர், ஆனந்தமயமானவர். அவர்
உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இந்த படிப்பின்
மூலம் நாம் தேவி தேவதைகளாக ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நீங்கள் பாரதத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். முதன்
முதலில் தந்தையினுடையவர்களாக ஆக வேண்டும். மற்ற இடங்களில்
குருக்களிடத் தில் செல்கின்றனர், அவர்களுடையவர்களாக ஆகின்றனர்
அதாவது அவரை தனது குருவாக ஆக்கிக் கொள் கின்றனர். இங்கு
இருப்பது தந்தை. ஆக முதலில் தந்தை யின் குழந்தையாக ஆக வேண்டும்.
தந்தை குழந்தைகளுக்கு தனது சொத்தை கொடுப்பார். தந்தை
கூறுகின்றார் - குழந்தைகளே! நீங்கள் பண்டமாற்றம் (எக்ஸ்சேஞ்)
செய்யுங்கள். உங்களது சோழி போன்றவை அனைத்தும் என்னுடையது,
என்னுடைய அனைத்தும் உங்களுடையது. தேக சகிதமாக என்னவெல்லாம்
இருக்கிறதோ அவை அனைத்தையும் என்னிடம் கொடுத்து விடுங்கள். நான்
உங்களது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டையும் தூய்மையாக்கி விடுவேன்.
மேலும் இராஜ்ய பதவியும் கொடுப்பேன். உங்களிடத்தில் என்னவெல்லாம்
இருக்கிறதோ நீங்கள் பலியாக்கி விட்டால் ஜீவன்முக்தி கிடைக்கும்.
பாபா, இவை அனைத்தும் உங்களுடையது. என்னை நீங்கள் வாரிசாக
ஆக்குங்கள் என்று தந்தை கூறுகின்றார். நான் உங்களுக்கு 21
பிறவிகளுக்கு வாரிசாக ஆக்குகிறேன். எனது வழிப்படி மட்டுமே
நடங்கள். தொழில் போன்றவைகள் செய்யுங்கள். வெளி நாட்டிற்குச்
செல்லுங்கள், எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள். எனது வழிப்படி
நடந்தால் போதும். மாயை அடிக்கடி போரில் வீழ்த்தும்,
எச்சரிக்கையுடன் இருங்கள். எந்த விகர்மமும் செய்யக் கூடாது.
ஸ்ரீமத் படி நடந்தால் சிரேஷ்டமாக ஆவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஆத்மா மற்றும் சரீரம் இரண்டையும் தூய்மையாக்குவதற்காக தேக
சகிதமாக என்ன வெல்லாம் இருக்கிறதோ அதை தந்தையிடம் அர்ப்பணித்து
அவரது ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.
2) தாய், தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்வதற்கு தன்னை
தகுதியானவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். தகுதியானவராக ஆவதற்கு
முக்கியமாக தூய்மையை தாரணை செய்ய வேண்டும்.
வரதானம்:
சங்கமயுகத்தில் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்பராக
இரட்டை பிராப்திக்கு அதிகாரி ஆகுக
எந்த குழந்தைகள் சங்கமயுகத்தில் அதீந்திரிய சுகத்தை அனுபவம்
செய்கிறார்களோ அவர்களுக்கு சதா அமைதி, குஷி எனும் இரட்டை
பிராப்தி அடைநதோமென்ற பெருமிதம் இருக்கும். ஏனெனில் அதீந்திரிய
சுகத்தில் இவ்விரண்டும் அடங்கியே உள்ளது. இப்போது குழந்தைகளான
உங்களிடம் உள்ள தந்தையும் ஆஸ்தியும் எந்ற இரு பிராப்திகளும்
முழு கல்பத்திலும் கிடைப்பதில்லை. ஆகவே இவ்விரண்டு
பிராப்திகளின் அதிகாரி ஆகுங்கள்.
சுலோகன்:
ஒருவருக்கொருவர் சம்ஸ்காரங்களை தெரிந்து கொண்டு அவர்களுடன்
இணைந்து செல்வதே முன்னேற்றத்திற்கான வழியாகும்.
அவ்யக்த சமிக்ஞை : எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்றால் தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
சரள சுபாவமுடையவரே சதா முக மலர்ச்சியுடன் இருப்பார்கள். முக
மலர்ச்சியே அனைவரையும் தன வசம் ஈர்க்கும். முக மலர்ச்சியென்பது
அதீந்திரிய மனோ நிலையின் அனுபவத்துடன் அதீந்திரிய சுகத்தில்
உறைந்திருப்பது. இதுவே முக மலர்ச்சியாகும். இதற்காக
பார்வையாளரெனும் இருக்கையில் அமர்ந்து மாயை மற்றும் இயற்கையின்
பொம்மலாட்டத்தை பொழுதுபோக்கென பாருங்கள்.
மாதேஷ்வரியின் விலை மதிப்பிட முடியாத மகா வாக்கியம்.
உண்மையான தலைவனான பரமாத்மாவிடம் உண்மையானவர் ஆகி இருங்கள்.
இதே நேரத்தில் தான் நமக்கு நிரந்தரமாக என்னுடைய நினைவில்
இருங்கள் என்ற கட்டளை பரமாத்மா மூலமாக கிடைத்துள்ளது. யோகம்
என்பதன் பொருள் ஈசுவரிய நினைவில் இருப்பது. யோகம் என்பதற்கு
தியானத்தில் அமர்வது (தவம்) என்ற அர்த்தம் கிடையாது. நம்முடையது
இது சகஜயோகம் ஆகும். நடந்தாலும் சென்றாலும் காரியம் செய்யும்
பொழுதும் அவரது நினைவில் இருப்பது - இதற்கு தான்
துண்டிக்கப்படாத, இடையறாத (அகண்ட) யோகம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதில் நிரந்தரமாக இருப்பதற்கான அப்பியாசத்தின் அவசியம்
உள்ளது. அவருடைய கட்டளைப்படி கீழ்படிதலுள்ளவராக இல்லை. ஏதாவது
கட்டளையை மீறுபவராக ஆனீர்கள் என்றால் அவசியம் தண்டனை அனுபவிக்க
வேண்டி வரும். அவருடைய கட்டளையாவது - எப்படி நான் கர்மம்
செய்கிறோனோ என்னை பார்த்து நீங்களும் அடி (ஃபுட் ஸ்டெப்)
எடுத்து வையுங் கள். இல்லையென்றால் மாயையிடம் அடி வாங்குவீர்கள்.
உண்மையான (பாதுˆô) தலைவனிடம் உண்மையாக ஆகி இருங்கள். எந்தவொரு
மாயையின் தடை துன்புறுத்தினாலும் தைரியமாக முன்னால் அடி எடுத்து
வைக்க வேண்டும். அப்பொழுது அவரது (தந்தையின்) உதவியின் மூலமாக
மாயை அகன்று விடும். பாதை தெளிவாகி விடும். பிறகோ எங்கு அமர்த்
தினாலும், எப்படி நடத்தினாலும் - பாதை தெளிவாக ஆகி விடும். இது
போல துணை அளிப்பதற்கு மிகவும் தைரியம் வேண்டும். அப்பேர்ப்பட்ட
மகான் சௌபாக்கியசாலி முற்றிலும் குறைவாகத் தான்
வெளிப்படுவார்கள். அவர்கள் வெற்றி மாலையில் செல்வார்கள்.
மற்றவர்கள் பாக்கியசாலி ஆவார்கள். அவர்கள் கொஞ்ச நஞ்சம் (கிடைத்தை)
எடுத்துக் கொண்டு போய் பிரஜைகளாக ஆவார்கள். எனவே கொஞ்சம்
கிடைப்பதில் குஷி ஆகி விடாதீர்கள். தங்களது விருப்பமோ
சம்பூர்ணம் ஆக வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். துணிவு
கொள்ளுங்கள். முன்னேறி செல்ல வேண்டும். மாயை தடை ஏற்படுத்தும்.
ஆனால் அதன் மீது வெற்றி பெற வேண்டும். இதில் தவறு செய்தீர்கள்
என்றால் அது நம்பிக்கையில் குறைவு என்பதாகும். சிறிது தங்களது
தாரணை யில் குறைவு ஆகும். இதுவோ தங்களது குற்ற மாகும். இதில்
சமூக அந்தஸ்து, குலத்தின் மரியாதைகளை ஆகியவற்றை துண்டிக்க
வேண்டி வருகிறது. இவற்றை துண்டித்து விடும் பொழுது தான்
உண்மையான பரலௌகீகி தெய்வீக மரியாதையை பெறுவீர்கள். இந்த விகாரி
உலகமோ போகப் போகிறது. பாருங்கள் மீரா கூட உலக அந்தஸ்தை இழந்தார்.
அப்பொழுது தான் கிரிதரனை அடைந்தார். அந்த உலக அந்தஸ்தை வைத்துக்
கொண்டீர்கள் என்றால் இந்த தெய்வீக உலகத்தினை சேர்ந்தவர்களாக ஆக
முடியாமல் இருப்பீர்கள். இப்பொழுது நன்மையின் பொருட்டு ஈசுவரிய
ஆலோசனையோ கொடுக்கப்படுகிறது. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
எது சரியானது? என்று தங்களது புத்தியின் மூலமாக தீர்மானிக்க
வேண்டும்.