08-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அமைதியாக
இருப்பதற்கான சுபாவம் மிக நல்லது. சாந்த சுபாவம் உள்ளவர்கள்
மிக இனிமையானவர்கள். வீணாகப் பேசுவதை விட பேசாதிருப்பது நல்லது
கேள்வி:
எந்தக் குழந்தைகளை அனைவரும்
நேசிப்பார்கள்? தன்னைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சாதனம்
எது?
பதில்:
யார் அனைவருக்கும் ஆர்வத்துடனும்
அன்போடும் சேவை செய்கிறார்களோ, அவர்களை அனைவரும் நேசிப்பார்கள்.
உங்களுக்கு ஒரு போதும் சேவையின் அகங்காரம் வரக்கூடாது.
பாபாவிடமிருந்து கிடைத்துள்ள கஸ்தூரியை மற்றவர்களுக்குக்
கொடுக்க வேண்டும். அனைவருக்கும் சிவபாபாவை நினைவு படுத்த
வேண்டும். இந்த நினைவு யாத்திரை மூலம் தான் நீங்கள் மிகமிகப்
பாதுகாப்பாக இருப்பீர்கள். எவ்வளவு நினைவில் இருக்கிறீர் களோ,
அவ்வளவு குஷியும் இருக்கும் மற்றும் நடத்தையும் (மேனர்ஸ்)
சீராகிவிடும்..
ஓம் சாந்தி.
ஆன்மிகத் தந்தை அமர்ந்து ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய
வைக்கிறார். புரிய வைத்துப் புரிய வைத்து எவ்வளவு புத்திசாலி
ஆக்கி விடுகிறார்! படிப்பும் கூட எளிமையானது இல்லையா? அது
ஸ்தூல படிப்பு, இது சூட்சும படிப்பு. குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், இந்தப் படிப்பை பாபாவைத் தவிர வேறு யாராலும்
கற்பிக்க முடியாது. பாபா வந்திருப்பதே பவித்திரமாக்கவும்
படிப்பைச் சொல்லித் தரவும் தான். நோக்கம்-குறிக்கோள் முன்னாலேயே
உள்ளது. எனவே அத்தகைய தந்தையை நினைவு செய்து குஷியில்
மெய்சிலிர்க்க வேண்டும். இதையும் குழந்தைகள் அறிவார்கள் -
நாளுக்கு நாள் நாம் சாந்தியில் தான் செல்ல வேண்டும். சாந்தியோ
அனை வருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. பெரிய மனிதர்கள்
அதிகம் பேசுவ தில்லை. நீங்கள் மிக-மிகப் பெரிய மனிதராக
ஆகிறீர்கள். உண்மை யில் மனிதர் என்று சொல்ல மாட்டார்கள்.
நீங்களோ தேவதை ஆகிறீர்கள். தேவதைகள் மிகக் குறைவாகப்
பேசுவார்கள். நீங்களும் தேவதை ஆக வேண்டும். ஆகவே
சப்தத்திலிருந்து மாறி அமைதியில் இருப்பதற் கான அப்பியாசம்
செய்யுங்கள். அமைதியில் இருப்பவர்களைப் பற்றிப் புரிந்து
கொள்வார்கள், இவர்களுக்குத் தங்கள் மீது கவனம் உள்ளது, அதனால்
நீங்கள் சாந்திதாம் செல்ல வேண்டு மானால் பேசுவதும் கூட மிக
மெதுவாகவே பேச வேண்டும். மெதுவாகப் பேசிப் பேசி சாந்திதாம்
சென்று விட வேண்டும். எவ்வளவு நீங்கள் சாந்தியில்
இருக்கிறீர்களோ, அவ்வளவு நீங்கள் சாந்தியைப் பரவச்
செய்கிறீர்கள். நீங்கள் மிகுந்த சாந்தியில் இருக்க வேண்டும்.
சப்தமாகப் பேசுவது நன்றாக இருக்காது. கோபமும் அழகல்ல.
குழந்தைகளிடம் எந்த ஒரு விகாரமும் இருக்கக் கூடாது. நாம்
யாரோடும் சண்டை-சச்சரவு செய்யாமல் இருக்கிறோமா என்பதைப்
பார்க்க வேண்டும். பாபா புரிய வைத்ததுள்ளார் - தீயதைக்
கேட்காதீர்கள், தீயதைப் பேசாதீர்கள் எந்த விஷயம் உங்களுக்குப்
பிடிக்கவில்லையோ, அந்தக் கெட்ட விஷயங்களில் இருந்து விலகி விட
வேண்டும். அப்போது இருவரின் வாயும் மூடி இருக்கும். ஒவ்வொரு
விஷயத்திலும் தெய்விக குணங்களை தாரணை செய்ய வேண்டும். யாராவது
சத்தமாகப் பேசினால் சொல்லுங்கள் -- அமைதியாக இருங்கள், சத்தம்
செய்ய வேண்டாம்.” நீங்கள் சாந்தியை ஸ்தாபனை செய்பவர்கள் என்பதை
அறிவீர்கள். சத்யுகத்தில் சாந்தி உள்ளது இல்லையா? மூலவதனத்திலோ
சாந்தி இருக்கவே செய்கிறது. சரீரமே இல்லை எனும் போது எப்படிப்
பேசுவார்கள்? பாபா குழந்தைகளுக்கு ஸ்ரீமத் மிக நல்லதாகவே
தருகிறார். பாபா புரிய வைக்கிறார் - இனிமையான குழந்தைகளே,
இப்போது நீங்கள் உங்களது வீட்டுக்குச் செல்ல வேண்டும்,
சப்தத்திலிருந்து (டாக்கி) அமைதி நிலைக்கு (மூவி) வர வேண்டும்.
பிறகு அமைதியில் சென்றுவிட வேண்டும். யாரைச் சந்தித்தாலும்
அவர்களுக்கு இதே செய்தியைச் சொல்ல வேண்டும். நீங்கள் எவ்வளவு
அமைதியில் இருக்கிறீர்களோ, இவர்கள் ஏதோ ஈடுபாட்டில் மூழ்கி
இருக்கிறார்கள் என்று. புரிந்து கொள்வார்கள், அமைதியாக
இருப்பதற்கான சுபாவம் மிக நல்லது. அப்படிப்பட்டவர்கள் மிக
இனிமையானவர்களாக இருப்பார்கள். தவறாகப் பேசுவதை விட பேசாமல்
இருப்பது நல்லது.
நீங்கள் உண்மையிலும் உண்மையான இறைத்தூதர்கள். உங்களுக்கு அனைவர்
மீதும் கருணை இருக்க வேண்டும். இரக்கம் வைக்கும் குழந்தைகள்
மிகுந்த அமைதியில் பாபாவின் நினைவில் இருப்பார்கள். செய்தி
மட்டும் கொடுக்க வேண்டும் - அதாவது எல்லையற்ற தந்தையை நினைவு
செய்வீர்களானால் எல்லையற்ற சுகம்- சாந்தி கிடைக்கும். லௌகீகத்
தந்தையிடம் மிகுந்த செல்வம் உள்ளதென்றால் மிகுந்த ஆஸ்தி
கிடைக்கும் இல்லையா? எல்லையற்ற தந்தையிடமோ உலக ராஜபதவியே உள்ளது.
அந்த உலக ராஜபதவி ஒவ்வொரு 5000 ஆண்டு களுக்குப் பிறகு
உங்களுக்குக் கிடைக்கிறது.
குழந்தைகள் நீங்கள் அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தோடு சேவை
செய்ய வேண்டும். ஒவ்வொருவரையும் சேவைக்குத் தகுதி உள்ளவராக
ஆக்க வேண்டும். யார் மற்றவர்களுக்கு அன்போடு சேவை செய்கிறார்களோ,
அவர்களை அனைவருமே நேசிப்பார்கள். ஒரு போதும் சேவையின் அகங்காரம்
வரக் கூடாது. உங்களுக்கு பாபா விடமிருந்து ஞானத்தின் கஸ்தூரி
கிடைத்துள்ளது. அதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். சிவபாபா
நினைவு இருக்கிறதா என்று ஒருவர் மற்றவர்க்கு நினைவு படுத்திக்
கொண்டே இருக்க வேண்டும். இதில் குஷியும் உள்ளது. நினைவு
படுத்துகிறவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நினைவு யாத்திரை மூலம்
குழந்தைகள் நீங்கள் மிகமிகப் பாதுகாப்பாக இருப்பீர்கள். எவ்வளவு
நினைவில் இருக்கிறீர் களோ, அவ்வளவு குஷியும் இருக்கும். மேலும்
நடத்தையும் சீராகும். நீங்கள் உங்களது நடத்தையைச் சீர்திருத்த
வேண்டியது மிகமிக அவசியம். ஒவ்வொரு வரும் தங்களின் மனதைக்
கேட்டுக் கொள்ள வேண்டும் - நமது சுபாவம் மிகமிக இனிமையாக உள்ளதா?
ஒரு போதும் யார் மீதும் கோபப் படாமல் இருக்கிறோமா? யாராவது ஒரு
போதும் வெறுப்படையும் சூழ்நிலை இருக்கக் கூடாது. அந்த மாதிரி
முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தை கள் நீங்கள் மிக
உயர்ந்த சேவையில் இருக்கிறீர்கள். நீங்கள் இந்த முழு
உலகத்திற்கும் ஒளி கொடுக்க வேண்டும். நீங்கள் இந்த பூமியின்
சைதன்ய நட்சத்திரங்கள். நட்சத்திர தேவதை என்றும்
சொல்லப்படுகிறது. இப்போது அந்த நட்சத்திரங்கள் ஒன்றும் தேவதை
கிடையாது. நீங்களோ அதைவிட மிகப்பெரிய பலவான்கள். ஏனென்றால்
நீங்கள் முழு உலகத்தையும் ஒளி பெறச் செய்கிறீர்கள். நீங்கள்
தாம் தேவதை ஆகப் போகிறவர்கள். எப்படி மேலே நட்சத்திரங் களின்
பிரகாசம் உள்ளது, சில நட்சத்திரங்கள் மிகப் பிரகாசமாக உள்ளன,
சில நட்சத்திரம் லேசாக ஜொலிப்பு குறைவாக உள்ளன. குழந்தைகளாகிய
நீங்களும் யோக பலத்தால் சம்பூர்ண பவித்திரமாகிறீர்கள் என்றால்
ஜொலிக்கிறீர்கள்.
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு அவிநாசி ஞான ரத்தினங்களின்
லாட்டரி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றால் எவ்வளவு குஷி
இருக்க வேண்டும்! உள்ளுக்குள் குதூகலமடைந்து கொண்டே இருங்கள்.
உங்களுடைய இந்த பிறவி வைரம் போன்றதெனப் பாடப்பட்டுள்ளது.
பிராமணர்களாகிய நீங்கள் தாம் ஞானம் நிறைந்தவர்களாக ஆகிறீர்கள்.
ஆகவே உங்களுக்கு ஞானத்தின் குஷி தான் இருக்கிறது. இந்த தேவதைகளை
விடவும் நீங்கள் உயர்ந்தவர்கள். எனவே உங்கள் முகம் சதா
குஷியினால் மலர்ந்திருக்க வேண்டும். பாபா குழந்தைகளுக்கு
ஆசிர்வாதம் செய்கிறார் - இனிமையான குழந்தைகளே, சதா சாந்த் பவ.
சிரஞ்சீவி பவ. அதாவது அநேக ஜென்மங் கள் வாழ்ந்திருங்கள்.
ஆசிர்வாதமோ பாபாவிட மிருந்து கிடைக்கிறது. பிறகும் கூட
ஒவ்வொருவரும் தனது புருஷார்த்தம் செய்ய வேண்டும் - அதாவது நாம்
சிரஞ்சீவி எப்படி ஆவது? பாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள்
சிரஞ்சீவி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆசிர்வாதத்தை பாபா
தருகிறார். பிராமணர்களும் சொல்கின்றனர் - ஆயுஷ்வான் பவ. !
பாபாவும் சொல்கிறார், குழந்தைகளே சதா வாழ்ந்து கொண்டிருங்கள்.
உங்களை அரைக் கல்பத்திற்கு காலன் விழுங்க மாட்டான்.
சத்யுகத்தில் மரணம் என்ற பெயரே இருக்காது. இங்கோ மனிதர்கள்
சாவதற்கு பயப்படு கின்றனர் இல்லையா? நீங்களோ இறப்பதற்காகவே
புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள்,
பாபாவை நினைவு செய்து-செய்தே நாம் இந்த சரீரத்தை விட்டு
நம்முடைய சிவபாபாவிடம் சென்று விடுவோம். பிறகு சொர்க்கவாசி
ஆவோம்.
இப்போது நீங்கள் மிக அன்பான பாபாவின் குழந்தைகளாக
ஆகியிருக்கிறீர்கள். ஆகவே நீங்களும் கூட பாபாவுக்கு சமமாக மிக
இனிமையானவராக, மிக அன்பானவராக ஆக வேண்டும். பாபா கடிதங்களிலும்
எழுதுகிறார் - இனிமையிலும் இனிமையான, செல்லமான, தேடிக்
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே பாபா மிக இனிமையானவர் இல்லையா?
நடைமுறை யில் அனுபவம் செய்கிறீர்கள், பாபா எவ்வளவு இனிமையானவர்,
எவ்வளவு அன்பானவர் என்று. நம்மையும் அது போல் ஆக்குகிறார்.
இதையும் நீங்கள் அறிவீர்கள் -- நாம் எவ்வளவு இனிமையானவராக,
எவ்வளவு அன்பானவராக இருந்தோம் என்று. நாம் தான் பூஜைக்குரிய
நிலையிலிருந்து பூஜாரி ஆனோம் என்றால் தன்னையே பூஜித்துக்
கொண்டிருந்தோம். இதுவும் மிக அற்புதமான புரிந்து கொள்வதற்கான
விஷயங்களாகும்.
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், அரைக்கல்பத்தின் நம்முடைய
துக்கங்களைப் போக்குபவராகிய பாபா இப்போது வந்து
விட்டிருக்கிறார். ஹர-ஹர மகாதேவா எனச் சொல் கின்றனர். இப்போது
அவர் மகாதேவரோ இல்லை. துக்கத்தையோ பாபா தாம் போக்குவார்.
துக்கத்தைப் போக்கி சுகம் தருபவர் பாபா. அரைக்கல்பமாக நீங்கள்
அதிக துக்கத்தைப் பார்த்திருக்கிறீர்கள். 5 விகாரங் களின் நோய்
மிக அதிகமாகி விட்டது. இந்த நோய் அதிக துக்கம் கொடுத்துள்ளது.
அதனால் பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, இந்தக்
கர்மங்களின் கணக்கை இப்போது சரி செய்யுங்கள். வியாபாரிகளும்
கூட 12 மாதங்களுக்கான கணக்கு வைக்கின்றனர் இல்லையா?
பாபா புரிய வைக்கிறார், குழந்தைகளே, இப்போது முழு
சிருஷ்டியிலும் பாருங்கள், எவ்வளவு குப்பைகள் - இதுவோ நரகம்.
அதனால் நரகத்தை சொர்க்கமாக்குவதற்காக பாபா வர வேண்டி உள்ளது.
பாபா மிகுந்த அன்போடு வருகிறார். அப்போது குழந்தைகள் புரிந்து
கொள்கின்றனர், பாபா நமது சேவைக்காக வந்துள்ளார். இங்கே
அமர்ந்தவாறே அனைவர்க்கும் சேவை ஆகி விடுகிறது. முழு
சிருஷ்டிக்குமான கல்யாண்காரி வள்ளலோ ஒருவர் தாம் இல்லையா?
பாபாவுக்குத் தெரியும், முழு உலகத்தின் ஆத்மாக்கள் அனைவருக்கும்
நான் தான் ஆஸ்தி தர வருகிறேன். எல்லையற்ற தந்தையின் பார்வை உலக
ஆத்மாக்களின் பக்கம் செல்கிறது. இங்கே அமர்ந்திருந்தாலும்
பார்வை முழு உலகத்தின் மீது மற்றும் முழு உலகத்தின் மனிதர்கள்
அனைவர் மீதும் உள்ளது. ஏனென்றால் முழு உலகத்தையே முழுத்
திருப்தியடையச் செய்ய வேண்டும். டிராமா பிளான் படி கல்பத்திற்கு
முன் போலவே முழு உலக ஆத்மாக்களும் திருப்தி யடையப் போகிறார்கள்.
பாபா அனைத்துக் குழந்தைகளையும் நினைவு செய்கிறார். பார்வையோ
அவர்கள் மீது செல்கிறது இல்லையா? சங்கமயுகத்தில் தான் பாபா
குழந்தைகளின் சேவையில் ஆஜராகிறார். அவரோடு ஒப்பிடும் போது
யாராலும் அது போல் சேவை செய்ய இயலாது. அவருடையது எல்லை யற்ற
சேவை. குழந்தைகள் நீங்களும் கூட எப்போது அவரைப் போல் சேவை
செய்கிறீர்களோ, அப்போது தான் நீங்கள் பாபாவை எடுத்துக்
காட்டுவீர்கள். சேவை செய்பவர்களுக்கு பலனும் மிகப் பெரியதாகக்
கிடைக்கிறது. நாம் ஸ்ரீமத் படி முழு உலக மனிதர்களுக்கும் சுகம்
கொடுக்கிறோம் என்பதில் குழந்தைகளுக்கு நஷாவும் அதிகரிக்கிறது.
பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, இப்போது ஞான
ரத்தினங்களால் நன்றாகத் தங்கள் பையை நிரப்பிக் கொள்ளுங்கள்.
தங்களது நேரத்தை வீணாக்காதீர்கள். பாபாவின் நினைவில் நேரத்தைப்
பயனுள்ளதாக்குங்கள். யார் நல்லபடியாக தாரணை செய்கிறார்களோ,
அவர்கள் பிறகு மற்றவர்களுக்கும் நல்ல சேவை அவசியம் செய்வார்கள்.
நேரத்தை வீணாக்க மாட்டார்கள். குழந்தைகள் புருஷார்த்தம் செய்து
அந்தர்முகி (உள்முக நோக்குள்ளவராக) ஆக வேண்டும். உள்ளுக்குள்
ஆத்மா உள்ளது இல்லையா? ஆத்மாக்களாகிய நமக்கு பாபா புரிய
வைத்துக் கொண்டிருக் கிறார் என்று நிச்சயம் செய்ய வேண்டும்.
ஆத்ம அபிமானி ஆகி இருப்பது தான் உண்மையிலும் உண்மையான
அந்தர்முகி ஆவதாகும். அந்தர்முகி என்றால் உள்ளே இருக்கும் ஆத்மா
அனைத்தையும் பாபாவிடமிருந்து தான் கேட்க வேண்டும். பாபா அன்போடு
அடிக்கடி புரிய வைக்கிறார். தாய்-தந்தை மற்றும் முக்கியமான
பெரிய சகோதர-சகோதரிகள், நல்ல சேவை செய்பவர்களிடம் கற்றுக்
கொண்டே செல்லுங்கள். உள்ளுக்குள் இதை நிச்சயம் செய்யுங்கள் -
நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. சரீர நிர்வாகமும் செய்ய
வேண்டும். தன்னுடைய படைப்புகளையும் கவனிக்க வேண்டும். மோகம்
மட்டும் வைக்கக் கூடாது. மோகம் வைப்பதால் நஷ்டம் ஏற்பட்டு
விடும். ஒரு பாபா விடம் மோகம் வையுங்கள். இங்கே நீங்கள்
பாபாவின் முன்னிலையில் இருக்கிறீர்கள். ஆத்மாக்கள் மற்றும்
பரமாத்மா முன்னால் உள்ளார். ஏனென்றால் இங்கே சுயம் தந்தை
ஆத்மாக்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். அங்கே ஆத்மாக்கள்
ஆத்மாக்களுக்குப் படிப்பிக்கின்றனர்.
இந்த அனைத்து விஷயங்களும் குழந்தைகளாகிய உங்களுக்குள் அசை போட
வேண்டும். மாணவர்களின் புத்தியில் நாள் முழுவதும் படிப்பு
உள்ளது இல்லையா? உங்கள் புத்தியிலும் படிப்பு முழுவதும் உள்ளது.
இது ஆன்மிகப் படிப்பு. நல்ல மாணவர்கள் எப்போதும் தனிமையில்
சென்று படிப்பார்கள். மாணவர்கள் தங்களுக்குள் சந்தித்துக்
கொள்கின்றனர் என்றால் படிப்பைப் பற்றித் தான் உரையாடுவார்கள்.
இந்த எல்லையற்ற படிப்பிலோ இன்னும் அதிகக் குஷியில் மூழ்கிவிட
வேண்டும்.
குழந்தைகள் நீங்கள் இப்போது பாபாவின் உதவியாளர் ஆகிறீர்கள்.
நினைவில் இருப்பது தான் உதவி செய்வதாகும். ஏனென்றால் நினைவு
யாத்திரை என்றால் சாந்தி யாத்திரை. அதனால் ஒவ்வொருவரும்
தங்களின் வீட்டை சொர்க்கமாக்குங்கள் எனச் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு வரின் புத்தியிலும் அப்பா மற்றும் ஆஸ்தி உள்ளது.
தந்தையை நினைவு செய்வீர் களானால் இராஜபதவி கிடைக்கும்.
வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை. தன்னை ஆத்மா என்று மட்டும்
உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள். அப்போது இராஜ்யம்
உங்களுடையது. குழந்தைகள் நீங்கள் அனைவர்க்கும் இதே செய்தியைக்
கொடுத்துக் கொண்டிருங்கள் - தந்தையை நினைவு செய்வீர்களானால்
சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு
தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் இதயபூர்வமான, உயிருக்குயிரான
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு
ஆன்மிகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபாவின் நினைவில் தனது நேரத்தைப் பயனுள்ளதாக்க வேண்டும்.
இந்த விலைமதிக்க முடியாத நேரத்தை எங்காவது வீணடித்துவிடக்
கூடாது. புருஷார்த்தம் செய்து அந்தர்முகியாக, அதாவது ஆத்ம
அபிமானி ஆகி இருக்க வேண்டும்.
2) இப்போது நாம் தேவதைகளை விடவும் உயர்ந்த பிராமணர்கள். இப்போது
பாபாவிடமிருந்து அழியாத ஞானரத்தினங்களின் லாட்டரி கிடைத்துள்ளது.
ஞானம் நிறைந்தவராக ஆகியிருக் கிறீர்கள் என்றால் முகம் சதா
குஷியால் மலர்ந்திருக்க வேண்டும். உள்ளுக்குள் குஷியில்
குதூகலித்திருக்க வேண்டும்.
வரதானம்:
மனதின் மஹா தானத்தின் மூலம் ஒவ்வொரு சங்கல்பத்தின் வெற்றியையும்
(ஸித்தி) பெறக்கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகுக.
மனதின் மூலம் சக்திகளை தானம் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு
மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற வரதானம் கிடைத்து விடுகிறது.
ஏனெனில் மனதின் மூலம் சக்திகளை தானம் செய்வதால் சங்கல்பத்தில்
அவ்வளவு சக்தி சேமிக்கப்பட்டு, ஒவ்வொரு சங்கல்பத்தின் வெற்றி
யும் கிடைக்கிறது. அவர்கள் தங்கள் சங்கல்பங்களை எங்கே
விரும்புகிறார்களோ அங்கே ஒரு நொடியில் நிலைநிறுத்த முடியும்,
சங்கல்பங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள்
தங்கள் சங்கல்பங்களை வென்றவர்கள் என்பதால், சஞ்சலமான சங்கல்பம்
உள்ளவர் களையும் கூட சிறிது நேரத்திற்கு அசையாதவராக அல்லது
அமைதியானவராக மாற்ற முடியும்.
சுலோகன்:
நிரந்தரமாக ஒரே தந்தையின் துணையில் இருங்கள், அப்போது
தீய சகவாசத்தின் (சங்கதோசம்) பாதிப்பிலிருந்து தப்பித்துக்
கொள்வீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை: அபவித்திரதாவின் விதையைக் கூட அழித்துவிட்டு,
சம்பூரண தூய்மையானவராக ஆகுங்கள்
எந்தவொரு விகர்மமும் (பாவச் செயலும்) அல்லது வீண் கர்மமும்
மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் சதா
துணைவனை உங்களுடன் வைத்துக் கொள்வ தில்லை அல்லது துணையின்
அனுபவத்தை செய்வதில்லை. சக்திகள் ஒரு நொடி பார்வையின் (திருஷ்டியின்)
மூலம் அசுரர்களை வதம் செய்வது போல, நீங்கள் கம்பைண்ட் (இணைந்த)
வடிவத்தின் நினைவின் மூலம் உங்கள் அசுர சமஸ்காரங்கள் அல்லது
அபவித்திர சங்கல்பங் களை நொடியில் வதம் செய்யுங்கள்.