08-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தற்போது உங்களுள்
ஓடுவது ஈசுவரிய புது ரத்தமாகும். நீங்கள் மிகுந்த போதையுடன்
சொற்பொழிவாற்ற வேண்டும். சிவபாபா நமக்குக் கற்பித்துக்
கொண்டிருக்கிறார் என்ற போதை இருக்கட்டும்.
கேள்வி:
உங்களுக்கு உங்களுடைய இலட்சியம்
நோக்கத்தினுடைய போதை நிலையாக அமைந்திருக்க வேண்டுமானால்,
அதற்காக எந்த ஒரு (யுக்தி) வழி முறையைக் கடை பிடிக்க வேண்டும்?
பதில்:
உங்களுடைய ராஜாவின் பாஸ்போர்ட்
எடுத்து வையுங்கள். கீழே சாதாரண உடை மேலே ராஜாவின் உடையால்
அலங்கரிக்கப்பட்ட படம் மற்றும் அதற்கு மேல் சிவ பாபாவின் படம்.
அப்பொழுது லட்சியம் நோக்கத்தின் நினைவு சுலபமாக இருக்கும்.
பாக்கெட்டில் இந்த பாஸ்போர்ட் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எப்பொழுதாவது மாயையின் புயல் வந்தது என்றால், நம்முடைய
பாஸ்போர்ட் ரத்தாகி விடும். நாம் சொர்க்கத்திற்குப் போக
முடியாது என்ற எண்ணம் ஏற்படும்.
பாடல்:
இரவின் பிரயாணியே களைப்படையாதே......
ஓம் சாந்தி.
குழந்தைகள் இந்த பாடலின் பொருளைப் புரிந்து கொண்டீர்கள்.
இப்பொழுது பக்தி மார்க்கத்தின் கோரமான இருளின் இரவு முடிந்து
விட்டது. இப்பொழுது நம்மிடம் காலன் வர முடியாது என்பதை
குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இங்கு அமர்ந்துள்ளோம். நமது
இலட்சியம் நோக்கமாவது மனிதனிலிருந்து தேவதை ஆவதற் கானதாகும்.
எப்படி சந்நியாசிகள் நீங்கள் உங்களை எருமை என்று நினைத்துக்
கொண்டீர்களானால், அதுவாகவே ஆகி விடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.
அது பக்தி மார்க்கத்தின் உதாரணம் ஆகும். எப்படி இராமர்
குரங்குகளின் சேனை மூலமாக பாரதத்தை இராவணனிடமிருந்து
விடுவித்தார் என்று இதுவும் ஒரு உதாரணம் உள்ளது அல்லவா? நீங்கள்
இங்கு அமர்ந்துள்ளீர்கள். நாமே தேவி தேவதை, இரட்டை கிரீடம்
அணிந்தவர்களாக ஆகிடுவோம் என்பதை அறிந்துள்ளீர்கள். பள்ளி,
கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்றால், நான் நன்கு படித்து
டாக்டர் ஆவேன், இஞ்சினியர் ஆவேன் என்று கூறுவார்கள். நீங்கள்
இங்கு அமர்ந்துள்ளீர்கள். நாம் இந்த படிப்பினால் நாமே தேவி
தேவதை ஆகிக் கொண்டிருக் கிறோம் என்பதை அறிந்துள்ளீர்கள். இந்த
சரீரத்தை விடுவோம். பின் நமது தலை மீது கிரீடம் இருக்கும்.
இதுவோ மிகவுமே அசுத்தமான சீ - சீ உலகமாகும். புது உலகம் என்பது
முதல் தரமான உலகமாகும். பழைய உலகமாவது முற்றிலும் மூன்றாவது
தரம். இந்த உலகமோ முடியப் போகிறது. நம்மை உலகிற்கு அதிபதியாக
ஆக்குபவர், அவசியம் உலகின் படைப்பு கர்த்தா வாகத்தான் இருப்பார்.
வேறு யாரும் கற்பிக்க முடியாது. சிவபாபா நமக்கு இராஜ யோகத்தை
கற்பிக்கின்றார். ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் என்று தந்தை
புரிய வைத்துள்ளார். ஆத்ம அபிமானி ஆவதில் தான் உழைப்பு (முயற்சி)
உள்ளது. முழுமையாக ஆத்ம உணர்வுடையவராக ஆகி விட்டால் இனி
வேறென்ன வேண்டும்! நீங்கள் பிராமணர் களாகவோ இருக்கவே
இருக்கிறீர்கள். நாம் தேவதை ஆகிக் கொண்டு இருக்கிறோம் என்ற போதை
இருக்கிறது. முதலில் நாம் கலியுக நரகத்தில் பதீதமாக இருந்தோம்.
அசுரர்கள் மற்றும் தேவதை களுக்கு இடையில் எவ்வளவு வித்தியாசம்
உள்ளது. தேவதைகள் எவ்வளவு தூய்மையாக இருக்கிறார்கள்! இங்கு
எவ்வளவு பதீதமான மனிதர்கள்! முகம் மனிதர் களினுடையதாகத்
இருக்கிறது என்றாலும், குணங்களைப் பாருங்கள் எப்படி இருக்கிறது.
யார் தேவதைகளின் பூசாரியாக இருக்கிறார்களோ சுயம் தாங்களும்
அவர்களுக்கு முன்னால் போய் மகிமை பாடுகிறார்கள். நீங்கள்
சர்வகுண சம்பன்னர்... எங்களிடம் எந்த குணமும் இல்லை. இப்பொழுது
நீங்கள் மாற்றம் அடைந்து தேவதையாகி விடுவீர்கள். நாம்
கிருஷ்ணபுரிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் கிருஷ்ணரை
பூஜிக்கிறார்கள். ஆனால் எப்பொழுது செல்வோம் என்பது தெரியாது.
பகவான் வந்து பாலனை (வளர்ப்பு) கொடுப்பார் என்று பக்தி செய்துக்
கொண்டே இருக்கிறார்கள். பக்தியின் பலன் சத்கதி ஆகும். எனவே இது
கல்வியாகும். முதலில் நமக்கு கற்பிப்பவர் யார் என்ற நிச்சயம்
வேண்டும். இவர் ஸ்ரீ ஸ்ரீ ..... ஆவார். தந்தை நமக்கு ஸ்ரீமத்
அளித்துக் கொண்டிருக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர் கள். யாருக்கு இது தெரியவில்லையோ அவர்கள் எப்படி
சிறந்தவர்களாக ஆக முடியும்? தற்காலத் திலோ ஒருவரையொருவர்
தாழ்வாக ஆக்குவதற்கான வழி கொடுக் கிறார்கள், அசுர வழியே
தாழ்ந்த வழியாகும். இத்தனை எல்லா பிராமணர்களும் ஸ்ரீ ஸ்ரீ
சிவபாபா வின் வழிப்படி நடந்து கொண்டிருக் கிறார்கள்.
பரமாத்மாவின் வழியினால் தான் சிறந்தவர்கள் ஆகிறார்கள். யாருடைய
அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ அவர்களுடைய புத்தியில் தான் பதியும்.
இல்லை என்றால் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். புரிந்து
கொண்டு விட்டார்கள் என்றால் சுயம் அவர்களே உதவி செய்ய
முற்படுவார்கள். நிறைய பேருக்கு இவர் யார் என்பதே தெரியாது.
எனவே பாபா யாரையும் சந்திப்பதே இல்லை. அவர்கள் இன்னுமே தங்களது
அசுர வழியை எடுத்து வருவார்கள். இப்பொழுது எல்லோரும் மனித
வழிப்படி தான் நடந்து கொண்டிருக் கிறார்கள். ஸ்ரீமத் பற்றி
தெரியாத காரணத்தினால் பிரம்மா தந்தைக்கும் தங்களது வழியை
கொடுக்க முற்படுகிறார்கள். இப்பொழுது தந்தை, குழந்தைகளாகிய
உங்களை சிறந்தவர்களாக ஆக்குவதற்காக வந்திருக்கின்றார். பாபா 5
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு போலவே நாங்கள் உங்களை
சந்தித்துள்ளோம் என்று இப்பொழுது குழந்தைகள் கூறு கிறார்கள்.
யாருக்குத் தெரியவே இல்லையோ, அவர்கள் இது போல பதில் அளிக்க
முடியாது. குழந்தை களுக்கு படிப்பினுடைய மிகுந்த போதை இருக்க
வேண்டும். இது மிகவும் உயர்ந்த கல்வி யாகும். ஆனால் மாயை
மிகவுமே எதிராக உள்ளது. நாம் எந்த கல்வியை கற்கிறோமோ அதன் மூலம்
நமது தலை மீது இரட்டை கிரீடம் வரப் போகிறது என்பதை நீங்கள்
அறிவீர்கள். வருங்காலத் தில் பல பிறவிகளுக்கு இரட்டை கிரீடம்
அணிந்தவர்கள் ஆகிடுவீர்கள். எனவே அதற்கு பிறகு அப்பேர்ப்பட்ட
முயற்சி செய்ய வேண்டும். இதற்கு இராஜயோகம் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு அதிசயமானது. இலட்சுமி நாராயணரின் கோவிலுக்குச்
செல்லுங்கள் என்று பாபா எப்பொழுதும் புரிய வைக்கிறார்.
பூசாரிகளுக்கு நீங்கள் புரிய வைக்கலாம். இலட்சுமி நாராயணருக்கு
இந்த பதவி எப்படி கிடைத்தது என்று அவர்களிடம் கேளுங்கள்.
இவர்கள் எப்படி உலகிற்கு அதிபதி ஆனார்கள்? இது போல அமர்ந்து
யாருக்காவது கூறினீர்கள் என்றால் பூசாரிகளுக்கும் நன்மை
ஏற்படும். நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிறோம் என்று நீங்கள்
கூறலாம். இந்த இலட்சுமி நாராயணருக்கு இராஜ்யம் எப்படி கிடைத்தது?
கீதையில் பகவான் கூறுகிறார், நான் உங்களுக்கு இராஜயோகம்
கற்பித்து ராஜாக்களுக்கு ராஜாவாக ஆக்குகிறேன் என்று உள்ளது
அல்லவா? எனவே குழந்தைகளுக்கு எவ்வளவு போதை இருக்க வேண்டும்?
நாம் இது போல ஆகிறோம். உங்களுடைய படம் மற்றும் ராஜாவாக
இருக்கும் படத்தை வேண்டு மானால் வைத்துக் கொள்ளுங்கள். கீழே
உங்களுடைய படம் மேலே ராஜாவின் உடையுடன் கூடிய படம் இருக்கட்டும்.
இதில் செலவு எதுவும் கிடையாது. ராஜாவின் உடையை சட்டென்று தயார்
செய்து கொள்ள முடியும். அதை உங்களிடம் வைத்துக் கொண்டீர்கள்
என்றால் அடிக்கடி நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும். நாம் தான்
தேவதை ஆகிக் கொண்டு இருக்கின்றோம். மேலே சிவபாபா வேண்டுமானால்
இருக்கட்டும். இவை எல்லாமே படங்களில் எடுக்க வேண்டி இருக்கும்.
நாம் மனிதரிலிருந்து தேவதை ஆகிறோம். மேலே சிவன், பிறகு ராஜா ஆடை
அணிந்த சித்திரம், அதற்குக் கீழே உங்களுடைய சாதாரண படம்.
சிவபாபாவிடமிருந்து நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டு இரட்டை
கிரீடம் அணிந்த தேவதை ஆகிக் கொண்டிருக் கிறோம். படம்
வைக்கப்பட்டிருந்தது என்றால், யாராவது கேட்கும் போது உங்களால்
கூற முடியும். நமக்கு கற்பிப்பவர் இவர் சிவபாபா ஆவார். படத்தைப்
பார்த்து குழந்தைகளுக்கு போதை ஏறும். கடையில் வேண்டுமானாலும்
இந்த படத்தை வைத்து விடுங்கள். பக்தி மார்க்கத்தில் பாபா
நாராயணரின் படத்தை வைத்திருந்தார். பாக்கெட்டிலும்
வைத்திருப்பார். நீங்களும் உங்கள் போட்டோவை வைத்துக்
கொண்டீர்கள் என்றால் நாம் தான் தேவி தேவதை ஆகிக்
கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கும். தந்தையை நினைவு
செய்வதற்கான உபாயம் தேட வேண்டும். தந்தையின் நினைவை மறப்பதால்
விழுகிறார்கள். விகாரத்தில் விழுந்தார்கள் என்றால், இப்பொழுது
நாம் தேவதையாக ஆக முடியாது என்று வெட்கம் ஏற்படும்.
ஹார்ட்ஃபெயில் ஆகி விடும். நாம் எப்படி தேவதை ஆக முடியும் என்று
மன முடைந்து போய் விடுவார்கள். விகாரத்தில் விழுந்தவர்களின்
போட்டோக்களை எடுத்து விடுங்கள் என்று பாபா கூறுகிறார். நீங்கள்
சொர்க்கத்திற்குச் செல்வதற்கு லாயக்கில்லை என்று கூறுங்கள்.
உங்களுடைய பாஸ்போர்ட் முடிந்து விட்டது. நாங்களோ விழுந்து
விட்டோம் என்று சுயம் தாங்களும் உணர்ந்து விடுவார்கள். எப்படி
பாபா நாரதரின் உதாரணம் கூறுகிறார் - இலட்சுமியை மணம் முடிக்க
லாயக்காக உள்ளீர்களா என்று உங்கள் முகத்தை நீங்களே பாருங்கள்
என்று அவருக்குக் கூறினார்கள். எனவே முகம் குரங்கு போல
தென்பட்டது. ஆக மனிதர்களுக்கும் வெட்கம் ஏற்படும் - நம்மிடம்
இந்த விகாரம் உள்ளது. பிறகு ஸ்ரீ இலட்சுமி நாராயணரை எப்படி மணம்
முடிக்க முடியும்? பாபாவோ நிறைய வழிமுறைகள் கூறுகிறார். ஆனால்
யாராவது நம்பிக்கையும் வைத்தால் தானே? விகாரத்தின் போதை
ஏற்படும் பொழுது இந்த கணக்குப்படி நாம் ராஜாக்களுக்கெல்லாம்
ராஜா இரட்டை கிரீடம் அணிந்தவர்களாக எப்படி ஆக முடியும் என்று
நினைப்பார்கள். முயற்சி செய்ய வேண்டும் அல்லவா? இது போன்ற
அழகான (யுக்தி) வழி முறைகளை உருவாக்குங்கள். மேலும்
அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டே இருங்கள் என்று பாபா புரிய
வைக்கிறார். இது ராஜயோகத் தினால் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது விநாசம் எதிரிலேயே நிற்கிறது. நாளுக்கு நாள் புயல்கள்
வலுப்பட்டுக் கொண்டே போகும். குண்டுகள் ஆகியவை தயாராகிக்
கொண்டிருக்கிறது.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த படிப்பை படிப்பதே உயர்ந்த பதவியை
அடைவதற்காக தான்! நீங்கள் ஒரே ஒரு முறை பதீத நிலையிலிருந்து
பாவனமாக ஆகிறீர்கள். நாம் நரக வாசியாக இருக்கிறோம் என்று
மனிதர்கள் புரிந்துள்ளார்களா என்ன? ஏனெனில், கல் புத்தியாக
உள்ளார்கள். இப்பொழுது நீங்கள் கல் புத்தியிலிருந்து தங்க
புத்தியாக ஆகி கொண்டிருக்கிறீர்கள். அதிர்ஷ்டத் தில் இருந்தது
என்றால், உடனே புரிந்து கொண்டு விடுவார். இல்லையென்றால் எவ்வளவு
தான் தலையிலடித்துக் கொண்டாலும் புத்தியில் பதியாது. தந்தையைப்
பற்றியே அறியாமல் உள்ளார்கள். எனவே நாஸ்திகர்கள் ஆவார்கள்.
அதாவது அநாதை ஆவார்கள். தலைவனுக்கு சொந்தமானவர்களாக ஆக வேண்டும்.
ஏனெனில், சிவபாபாவின் குழந்தைகள் ஆவார்கள். இங்கு யாருக்கு
ஞானம் உள்ளதோ அவர்கள் தங்கள் குழந்தைகளை விகாரத்திலிருந்து
காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள். அஞ்ஞானிகளோ தங்களைப் போல
குழந்தைகளை விகாரத்தில் சிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.
இங்கு விகாரங்களிலிருந்து காப்பாற்றப்படுகிறது என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். கன்னியர்களை முதலில் காப்பாற்ற வேண்டும்.
தாய் தந்தையர்கள் விகாரத்தில் தள்ளி விட்டு விடுகிறார்கள். இது
இழிந்த (பிரஷ்டாச்சாரி) உலகம் ஆகும். (சிரேஷ்டாச்சாரி) சிறந்த
உலகத்தையே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் அதை யார்
உருவாக்குவார்கள். நான் இந்த சாதுக்கள், சந்நியாசிகளுக்கும்
நன்மை செய்கிறேன் என்று பகவான் கூறுகிறார். பகவான்
எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டி உள்ளது என்று கீதையில்
எழுதப்பட்டுள்ளது. ஒரே ஒரு பகவான் தந்தை வந்து அனைவரையும்
உயர்த்துகிறார். இச்சமயம் ஒரு வேளை உண்மையில் கீதையின் பகவான்
சிவன் ஆவார் என்று தெரிய வந்து விட்டால், என்ன ஆகி விடும் என்றே
தெரியாது. ஆனால் இப்பொழுது இன்னும் கொஞ்சம் தாமதம் உள்ளது.
இல்லை யென்றால் எல்லோருடைய ஆசனங்களும் ஒரேயடியாக ஆட ஆரம்பித்து
விடும். சிம்மாசனங் கள் ஆடுகின்றன அல்லவா? சண்டை ஏற்படும்
பொழுது இவர்களுடைய சிம்மாசனம் ஆட ஆரம்பித்துள்ளது. இப்பொழுது
விழப் போகிறது என்று தெரிய வருகிறது. இப்பொழுதே இது ஆடி
விட்டால் பின் குழப்பம் ஏற்பட்டு விடும். இனி முன்னால் போகப்
போக அவ்வாறு ஆகப்போகிறது. எனவே சொற்பொழிவில் நீங்கள் புரிய
வைக்கலாம். யார் சம்ஸ்கிருதத்தை நல்ல முறையில் அறிந்துள்ளார்களோ
அவர்கள் சுலோகங்களைக் கூறலாம். உண்மையில் பிரம்மாவின் உடல்
மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டி ருக்கிறார் என்பதை சுயம் பதீத
பாவனர் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் (சத்கதி தாதா)
கூறுகிறார். அனைவருக்கும் சத்கதி அதாவது முன்னேறச் செய்து
கொண்டிருக்கிறார். சொற் பொழிவு நிகழ்த்துவதிலும் மிகுந்த போதை
தேவை. கன்னியர்களினுடையது புது இரத்தம் ஆகும். அவர்களால்
ஞானக்கல்லை அடிக்க முடியும். மாணவர்களுக்கு புது இரத்தம்
இருக்கும் அல்லவா. எனவே நிறைய குழப்பம் விளைவிக்கிறார்கள். கல்
அடிக்கிறார்கள். இதில் அவர்கள் தீவிரமாக இருப்பார்கள்.
இப்பொழுது இது கூட உங்களுடையது புது இரத்தமாகும். எவ்வளவு
நஷ்டம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள்
அறிவீர்கள். உங்களுடையது இது ஈசுவரிய புது இரத்தமாகும். நீங்கள்
பழையவர்களிலிருந்து புதியவர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களுடைய ஆத்மா பழையதாக இரும்பு யுகத்தினுடையதாக ஆகி
விட்டுள்ளது. அது இப்பொழுது புதியதாக தங்க யுகத்தினுடைய தாக
ஆகிக் கொண்டு இருக் கிறது. எனவே குழந்தைகளுக்கு மிகுந்த ஆர்வம்
இருக்க வேண்டும். போதை நிரந்தரமாக இருக்க வேண்டும். நம்
இனத்தவரை உயர்த்த வேண்டும். குரு மாதா என்று பாடவும் படுகிறது.
மாதா எப்பொழுது குருவாக ஆகிறார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். குருக்களுடைய நடவடிக்கைகள் இப்பொழுது தான்
நடக்கிறது. தந்தை வந்து தாய்மார்கள் மீது ஞான அமிருத கலசத்தை
வைக்கிறார். ஆரம்பமே அவ்வாறு ஆகிறது. சென்டர்களுக்காக கூட
பிராமணி வேண்டும் என்கிறார்கள். பாபாவோ தைரியம் இல்லையா என்ன,
நீங்களே நடத்தலாமே என்பார். இல்லை பாபா, மாதா வேண்டும்
என்பார்கள். அதுவும் சரிதான், மதிப்பு கொடுக் கிறார்கள்.
தற்கால உலகத்தில் ஒருவருக் கொருவர் நொண்டி (உண்மையற்ற)
மரியாதையே கொடுக்கிறார்கள். நிலையானது யாருக்கும் கிடைப்பது
இல்லை. இச்சமயம் குழந்தைகளாகிய உங்களுக்கு நிலையான ராஜ்ய
பாக்கியம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு தந்தை
எவ்வளவு விதம் விதமாகப் புரிய வைக்கிறார். தங்களை எப்பொழுதும்
மலர்ந்த முகத்துடன் வைத்திருப்பதற்காக மிகவும் நல்ல நல்ல
யுக்திகளை தந்தை கூறுகிறார். சுபபாவனை வைக்க வேண்டும். ஒகோ!
நாம் இந்த இலட்சுமி நாராயணராக ஆகிறோம். ஒரு வேளை ஒருவருடைய
அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால், என்ன முயற்சி செய்வார்கள்?
பாபாவும் முயற்சி பற்றி கூறுகிறார். முயற்சி ஒரு பொழுதும் வீண்
போகாது. இதுவோ எப்பொழுதிற்குமாக, பயனுள்ள தாக ஆகி விடுகிறது.
ராஜதானி ஸ்தாபனை ஆகி விடும். விநாசம் மகாபாரமான மகாபாரத போர்
மூலமாக ஆகப் போகிறது. இனி முன்னால் போகப்போக நீங்கள் வலிமை
உடையவர் ஆகி விடும் பொழுது இவர்கள் எல்லோரும் வருவார்கள்.
இப்பொழுது புரிந்து கொள்ள மாட்டார் கள். இல்லையென்றால்,
அவர்களுடைய ராஜ்யம் பறந்து போய் விடும். உங்களிடம் மிகவும்
நல்ல படங்கள் உள்ளன. இது சத்கதி அதாவது சுகதாமம். இது
முக்திதாமம் ஆகும். இந்த நாடகமே பாரதத்தின் மீது
அமைக்கப்பட்டுள்ளது. சிவ ஜெயந்தி இங்கு கொண்டாடு கிறார்கள்.
நான் வந்துள்ளேன். கல்பத்திற்குப் பிறகு மீண்டும் வருவேன் என்று
தந்தை கூறுகிறார். பாரதம் தான் சொர்க்கம் ஆகும். கிறிஸ்துவிற்கு
இத்தனை வருடங்களுக்கு முன்னதாக பேரடைஸ் (சொர்க்கம்) இருந்தது
என்றும் கூறுகிறார்கள். இப்பொழுது இல்லை. மீண்டும் ஆகப் போகிறது.
எனவே அவசியம் நரகவாசிகளின் விநாசம், சொர்க்கவாசிகளின் ஸ்தாபனை
ஏற்படும். நீங்கள் இப்பொழுது சொர்க்கவாசி ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். நரகத்தின் விநாசம் ஆகி விடும். இதுவும்
அறிவு வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒவ்வொருவர் மீதும் சுபபாவனை வைக்க வேண்டும். அனைவருக்கும்
உண்மையான மதிப்பு கொடுக்க வேண்டும். சத்யுக ராஜதானியில்
உயர்ந்த பதவியை பெறுவதற்காக முயற்சி செய்ய வேண்டும்.
2. ஆத்ம உணர்வுடையவர் ஆவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மனித
வழியை விடுத்து, ஒரே ஒருவரினுடைய ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.
படிப்பினுடைய போதையில் இருக்க வேண்டும்.
வரதானம்:
அனைத்து ஆத்மாக்களின் தூய்மையற்ற எண்ணங்கள் மற்றும்
உள்ளுணர்வுகளை சாம்பலாக்கி விடக்கூடிய மாஸ்டர் ஞான சூரியன்
ஆவீர்களாக.
எப்படி சூரியன் தனது கிரணங்களால் அசுத்தங்கள், குப்பைகளின்
கிருமிகளை சாம்பலாக்கி விடுகிறது. அதேபோல நீங்கள் மாஸ்டர் ஞான
சூரியனாகி எந்த ஒரு பதிதமான ஆத்மாவையும் பார்த்தீர்கள் என்றால்
அவரது பதிதமான சங்கல்பம், பதிதமான விருத்தி அல்லது திருஷ்டி
சாம்பலாகிவிடும். பதித பாவனி ஆத்மா மீது பதிதமான சங்கல்பம்
தாக்குதல் ஏற்படுத்த முடியாது. பதித ஆத்மாக்கள் பதித பாவனிகள்
மீது சமர்ப்பணம் ஆகி விடுவார்கள். இதற்காக மைட் ஹவுஸ் ஆகி
அதாவது மாஸ்டர் ஞான சூரிய ஸ்திதியில் எப்பொழுதும் நிலைத்
திருங்கள்.
சுலோகன்:
தனது தாரணை சொரூபத்தினால் யோகி வாழ்க்கையின் தாக்கத்தை
ஏற்படுத்துவது- இது மிகப்பெரிய சேவையாகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது உங்களின் வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்.
எப்படி பாக்கியவிதாதா தந்தை பிரம்மா மூலமாக பாக்கியத்தை
பகிர்ந்து கொடுத்தார் என்ற பாடல் இருக்கிறது. எனவே பிரம்மாவின்
காரியம் எதுவோ அதுவே பிராமணர்களின் காரியம் ஆகும். உலகத்தார்
துணிமணி வழங்குகிறார்கள், உணவு தானியங்கள் வழங்குவார்கள்,
தண்ணீர் பகிர்ந்து அளிப்பார்கள். ஆனால் சிறந்த பாக்கியத்தையோ
பாக்கிய விதாதாவின் குழந்தை களாகிய நீங்கள் மட்டுமே பகிர்ந்து
கொடுக்க முடியும். யாருக்கு பாக்கியம் பிராப்தி யாகிறதோ
அவர்களுக்கு எல்லாமே பிராப்தி ஆகிவிடுகிறது. எனவே பாக்கியத்தை
பகிர்ந்து கொடுப்பதில் பரந்த உள்ளம் உடையவராகுங்கள்.