08.11.26    காலை முரளி            ஓம் சாந்தி 18.10.2071      பாப்தாதா,   மதுபன்


தீபாவளியின் பொருட்டு அவ்யக்த பாப்தாதாவின் விசேஷ மகாவாக்கியம்

இன்று பாப்தாதா என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்? தீபங்களின் மாலைகளாகிய உங்களை பார்ப்பதற்காக வந்திருக்கின்றார். இதன் நினைவார்த்தமாக மனிதர்கள் தீபாவளி கொண்டாடு கின்றனர். ஆனால் பாப்தாதா சைத்தன்ய தீபங்களின் மாலையை பார்த்துக் கொண்டிருக் கின்றார். நீங்கள் அனைவரும் கூட தீபாவளியன்று எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை பார்க் கின்ற பொழுது நமது நினைவார்த்தமாகத் தான் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் என்ற குஷி ஏற்படுகிறதா? எரிந்து கொண்டிருக்கும் தீபம் பிரியமானதாக தோன்றுவது போன்று தனது நினைவார்த்தம் நினைவிற்கு வந்ததும் நீங்கள் அனைவரும் கூட தந்தை மற்றும் முழு உலக ஆத்மாக்களுக்கும் பிரியமானவர்களாக தோன்றுகிறீர்கள். ஆக நினைவார்த்தமாக இருப்பதை இன்று வெளிப் படையான ரூபத்தின் பார்க்க வந்திருக்கிறேன். மாலையில் ஒரு மணி மட்டுமே இருக்காது, பல மணிகள் சேர்ந்தது தான் மாலையாகும். ஒரு தீபம் மட்டும் தனியாக இருந்தது எனில் அதை தீப மாலை (தீபாவளி) என்று கூற முடியாது. இவ்வாறு பல தீபங்கள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன, மாலையின் ரூபத்தில் தென்படுகின்றன. ஆக ஒவ்வொருவரும் தன்னை இந்த தீப மாலையில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீபம் என்று நினைக் கிறீர்களா? அல்லது நீங்களும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கும் அநேக தீபங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறீர்களா? இன்று தீபாவளி நாள், நீங்கள் அனைவரும் தீபாவளி கொண்டாடினீர்களா? இன்று விசேஷ முறையில் தீபாவளி கொண்டாடினீர்களா? நீங்கள் சதா சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீபங்கள் தான், ஆனாலும் விசேஷமாக நினைவார்த்த நாளன்று விசேஷ ஆத்மாக்கள் என்ன செய்ய வேண்டும்? விசேஷ ரூபத்தில் நிமித்தம் ஆகியிருக்கும் விசேஷ ஆத்மாக்கள் எந்த விசேஷ சேவை செய்ய வேண்டும்? விசேஷ ஆத்மாக் கள் பிற ஆத்மாக்களை விட விசேஷ காரியம் செய்ய வேண்டும் அல்லவா! ஏனெனில் மற்ற ஆத்மாக்கள் செய்ய முடிந்ததை, செய்து கொண்டிருப்பதை செய்தீர்கள் எனில் என்ன வித்தியாசம் இருக்கிறது? விசேஷ ஆத்மாக்கள் விசேஷ காரியம் செய்ய வேண்டும். பாப்தாதா விசேஷமான நாளன்று விசேஷ ரூபத்தில் குழந்தைகளுக்கு மற்றும் பக்தர்களுக்கு இரண்டு ரூபங்களிலும் சேவை செய்கின்றார். விசேஷ ஆத்மாக்கள் குறிப்பாக தங்களது நினைவார்த்த நாளன்று சாட்சாத்கார மூர்த்தியாகி சாட்சாத் பாப்தாதா சமம் ஆத்மாக்களுக்காக தங்களது பாவனையின் மூலம், தங்களது ஆன்மிக அன்பின் சொரூபத்தின் மூலம், தங்களது சூட்சும சக்திகளின் மூலம் ஆத்மாக்களுக்குள் சக்தி நிரப்ப வேண்டும். அவ்யக்த ரூபத்தில் பாப்தாதா நாலாப்புறங்களிலும் குழந்தைகளுக்கு சேவை செய்வது போன்று! பாப்தாதா என்னை சந்தித்தார், எனது நினைவிற்கு பதிலளித்தார் மற்றும் என் நினைவிற்கு வெளிப்படையான பலன் நான் அனுபவம் செய்தேன் என்று அவர்கள் நினைக்கின்றனர். மேலும் பக்தர்களும் அனுபவம் செய்கின்றனர் - எனது அன்பு மற்றும் பாவனையின் பலன் பகவான் நிறைவேற்றி விட்டார், இந்த அனுபவம் நடைமுறை ரூபத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட விசேஷ ஆத்மாக்கள் தனது அவ்யக்த ஸ்திதியில், தனது ஆன்மிக லைட் மற்றும் மைட் ஸ்திதியின் மூலம் லைட் ஹவுஸ் மற்றும் மைட் ஹவுஸ் ஆகி ஒரு இடத்தில் இருந்தாலும் கூட நாலாப் புறங்களிலும் அலௌகீக ஆன்மிக சேவைக்கான பாவனை மற்றும் விருத்தியின் மூலம் சேவை செய்ய வேண்டும். இதைத் தான் எல்லையற்ற சேவை என்று கூறப்படுகிறது. இந்த அனுபவம் மற்றும் உணர்வு ஏற்பட வேண்டும் - எனது பிரஜை மற்றும் பக்தர் இன்று விசேஷ ரூபத்தில் நினைவார்த்த தினத்தன்று விசேஷ ஆத்மாவாகிய என்னை நினைவு செய்து கொண்டிருக்கின்றனர். அல்ப கால மாயாஜாலம் செய்பவர்கள் ஒரு இடத்தில் இருந்து கொண்டே தனது பக்தர்களுக்கு தனது ரூபத்தின் சாட்சாத்காரம் செய்விக்க முடியும் போது, விசேஷ ஆத்மாக்கள் தனது லைட் மற்றும் மைட் மூலம் பக்தர்களுக்கு மற்றும் பிரஜைகளுக்கு தனது சேவையின் மூலம் அனுபவம் செய்விக்க முடியாதா? இவ்வாறு விசேஷ மாக நினைவார்த்த நாட்கள் வரும் பொழுது விசேஷ ஆத்மாக்கள் இவ்வாறு விசேஷ சேவை யில் அனுபவம் செய்ய வேண்டும். இவ்வாறு சேவை செய்தீர்களா? இந்த சேவை செய்ய வேண்டியிருக்கிறது. மேலும் தீபாவளி அன்று தன் மீது விசேஷ கவனம் இருந்ததா? இன்றைய நாள் தனது ஆத்மாவின் சன்ஸ்காரத்தில் சதா காலத்திற்கும் மாற்றம் கொண்டு வரும் விசேஷ கவனம் கொடுத்தீர்களா? நினைவார்த்த ரூபத்தில் இன்றைய நாள் பழைய கணக்குகளை முடிக்கும் வழக்கம் நடைபெற்று வருகிறது. அந்த ஒரு நிலை நடைமுறை ரூபத்தில் ஆத்மாக் கள் செய்திருக்கிறீர்கள், அதனால் தான் நினைவார்த்தம் நடைபெற்று வருகிறது. ஆக இன்றைய நாள் தன்னிடம் மீதமிருக்கும் பழைய சம்ஸ்காரங்களின் கணக்கு அழித்து விட்டீர் களா? அழிப்பதற்கு முன் தனது கணக்குகளை சோதனை செய்வார்கள். ரிசல்ட் பார்ப்பார்கள். அதே போன்று நீங்கள் அனைவரும் கூட தனது கணக்குகளை சோதனை செய்தீர்களா? எதை சோதனை செய்ய வேண்டும்? இன்றைய நாள் வரை என்ன முயற்சி செய்தீர்களோ, அதற்கான ரிசல்ட் எந்த விசயத்தில் மற்றும் எத்தனை சதவிகிதம் வெற்றி மூர்த்தியாக ஆகியிருக்கிறேன்? முதலில் தனது மன சங்கல்பங்களின் கணக்கை சோதனை செய்யுங்கள் - இன்று நான் சம்பூர்ண சிரேஷ்ட சங்கல்பங்களின் முயற்சியில் எந்த அளவிற்கு வெற்றி அடைந்திருக் கிறேன்? வீண் எண்ணங்கள் மற்றும் விகார எண்ணங்களின் மீது எவ்வளவு வெற்றி அடைந் திருக்கிறேன்? வார்த்தைகளின் மூலம் எந்த அளவிற்கு ஆத்மாக்களுக்கு தந்தையின் அறிமுகம் கொடுக்க முடிந்தது? எத்தனை ஆத்மாக்களை தந்தைக்குப் பிரியமானவர்களாக மற்றும் சகயோகிகளாக ஆக்க முடிந்தது? வார்த்தைகளின் எந்த அளவிற்கு ஆன்மிகம் மற்றும் அலௌகீகம் மற்றும் ஈர்ப்பு வந்திருக்கிறது? அதே போன்று காரியத்தில் சதா விடுபட்ட மற்றும் அன்பான, அலௌகீக, அசாதாரண காரியம் எந்த அளவிற்கு செய்ய முடிந்தது? காரியங்களில் எந்த அளவிற்கு கர்மயோகியாக, யோகயுக்தாக, யுக்தியுக்தாக, அன்பின் ரூபம் கொண்டு வந்திருக்கிறேன்? தனது சம்ஸ்காரம் மற்றும் சொரூபத்தில் அதாவது முகத்தில் எந்த அளவிற்கு பாப்சமான் ஆகர்ஷன ரூபம், அன்பு ரூபம், சகயோகி ரூபம் ஆகியிருக்கிறேன்? இவ்வாறு தனது கணக்கு பார்ப்பதன் மூலம் இன்று வரை என்ன குறை மற்றும் பலவீனம் இருக்கிறதோ, அதை சமாப்தி செய்து புது கணக்கு ஆரம்பிக்க முடியும். இவ்வாறு தனது கணக்கு சோதனை செய்யுங்கள்.

இது தான் தீபாவளி கொண்டாடுவது என்று கூறப்படுகிறது. அதாவது தன்னை சம்பூர்னம் ஆக்குவதற்கான திடசங்கல்பம் செய்வது தான் கொண்டாடுவதாகும். ஆக இவ்வாறு தீபாவளி கொண்டாடினீர்களா? அல்லது சந்திப்பு மட்டும் செய்தீர்களா? சந்திப்பு செய்வதன் நினைவார்த்தம் மாலையின் ரூபத்தில் இருக்கிறது. ஆனால் திடசங்கல்பத்தின் நினைவார்த்தம் தீபத்தின் ஜோதி ரூபமாக இருக்கிறது. ஆக இரண்டு ரூபத்தில் கொண்டாடி னீர்களா? புது ஆடை அணிந்தீர்களா? ஆத்மாவிற்கு புது ஆடை எதன் ஆதாரத்தில் கிடைக்கிறது? சம்ஸ்காரத்தின் ஆதாரத்தில் கிடைக் கிறது அல்லவா! ஆத்மாவிடம் என்ன சம்ஸ்காரம் இருக்கிறதோ, அதன்படி ஆடை தயார் ஆகிறது. ஆக எந்த புது ஆடை அணிவீர்கள்? ஆத்மாவில் புது யுகத்தின் சம்ஸ்காரம் மற்றும் புது யுகத்தை ஸ்தாபனை செய்யுங்கள் தந்தையைப் போன்று சம்பூர்ன சன்ஸ்காரத்தை தாரணை செய்வது தான் புது ஆடை அணிவதாகும். சரீரத்தில் புது ஆடை எவ்வளவு வேண்டு மென்றாலும் அணிந்து கொள்ளுங்கள். ஆனால் இன்றைய பழைய உலகில் புது ஆடையும் புது உலக ஆடைக்கு முன் பழையது தான். ஏனெனில் இற்றுப் போன நிலையில் இருக்கிறது. ஆகையால் புது ஆடை அணிந்தாலும் கூட புதியது என்று கூறமாட்டோம். சதோ பிரதான உலகில் தான் அனைத்தும் புதியதாக இருக்கும். தமோ பிரதான உலகின் பொருட்கள் அனைத்தும் பழையதாகும். சாரமற்றதாகும். ஆக அதை புதியது என்று கூறுவோமா என்ன? எனவே புது ஆடை என்றால் தனது ஆத்மாவின் புதிய சம்ஸ்காரம், சிரேஷ்ட சம்ஸ்காரத்தை தாரணை செய்ய வேண்டும். வேறு என்ன செய்வீர்கள்? புது சம்ஸ்காரங்களை தாரணை செய்து விட்டீர்கள், பிறகு கணக்கு வைக்கும் போது சுத்தமாகி விடும் அல்லவா! ஆக கணக்கு வைப்பது தான் சுத்தம், தூய்மையாகும். சுத்தப்படுத்தும் பொழுது அழுக்கு அல்லது புழு அனைத்தும் தானாகவே அழிந்து விடும். இவ்வாறு கணக்கு சோதனை செய்யும் பொழுது என்ன பலவீனம் இருக்கிறதோ, அது தானாகவே அழிந்து விடும். ஒருவருக்கொருவர் தங்களது இனிய வார்த்தை களினால் என்ன கொடுக்கல்-வாங்கல் செய்து கொள்வீர்கள்? தீபாவளி அன்று ஒருவருக் கொருவர் பணம் பெறுவார்கள் அல்லவா! நீங்கள் உங்களுக்குள் என்ன பணம் கொடுப்பீர்கள்? கொடுப்பதற்கு உங்களிடம் என்ன பணம் இருக்கிறது? (அன்பு என்ற பணம்) ஒருவருக்கொருவர் அன்பானவர்களாக சதா இருக்கத் தான் செய்கிறீர்கள்! இன்றைய நாள் விசேஷமாக அன்பான வர்களாக ஆவீர்களா? அன்பானவர்களாக இருக்கிறீர்கள், இந்த அன்பின் அடையாளம், ஒருவருக் கொருவரின் அருகாமையின் அடையாளம் தீபாவளி என்று கூறப்படுகிறது. விசேஷ நாட்களின் விசேஷமாக என்ன பணம் கொடுக்க வேண்டும்? இன்று வரை தனது முயற்சியின் மூலம் எளிதாக வெற்றி அடைந்திருக்கிறீர்கள் அல்லது அனுபவம் ஏற்பட்டிருக்கிறதோ, அப்படிப்பட்ட அனுபவ ஞான இரத்தினங்கள், அதன் மூலம் நடைமுறையில் அனுபவியாகி அனுபவியாக ஆக்க முடியுமோ, அப்படிப்பட்ட ஞான இரத்தினங்களை ஒருவருக்கொருவர் பணத்தின் ரூபத்தில் விசேஷ ரூபத்தில் கொடுக்க வேண்டும். புரிந்ததா? தந்தையின் பொக்கிஷங்களை தனது அனுபவத்தின் மூலம் தன்னுடையதாக ஆக்கியது போன்று தன்னுடையதாக ஆக்கிக் கொண்ட ஞான இரத்தினங்களை ஒருவருக்கொருவர் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அந்த ஆத்மாவும் எளிதாக அனுபவியாக ஆகிவிடும், இது தான் பணம் கொடுப்பதாகும். எனவே சதா காலத்திற்கும் நினைவு ரூபமாக ஆகிவிடுமளவிற்கு பணம் ஒருவருக்கொருவர் கொடுக்க வேண்டும். ஆக ஒருவருக்கொருவர் சதா காலத்திற்கும் நினைவு ரூபம் ஆகிவிடும்படியான பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு இரத்தினம் ஒருவருக்கு கொடுக்கும் பொழுது சதா காலத்திற்கும் அந்த ஆத்மாவிற்கு தந்தையின் கூடவே நீங்கள் கொடுத்த இரத்தினத்தின் நினைவும் அவசியம் இருக்கும். ஒருவரை சதா காலத்திற்கும் சம்பன்னம் ஆக்குவதற்கு பணம் அவசியம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தீபாவளி கொண்டாடுங்கள் மற்றும் இவ்வாறு சிரேஷ்ட ஆத்மாவாகி பிற ஆத்மாக்களுக்கு சிரேஷ்ட சேவை செய்யுங்கள்.

இன்றைய நாள் அனைத்து ஆத்மாக்களும் செல்வத்திற்காக ஏங்குகின்றனர். ஏங்கும் ஆத்மாக் களுக்கு அந்த அளவிற்கு ஆன்மிக செல்வம் கொடுங்கள், அதன் ஆத்மா ஒருபொழுதும் செல்வம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. யார் செல்வம் கேட்பார்கள்? பிச்சைக் காரர்கள். இன்றைய நாட்களில் ஆத்மா பிச்சைக்காராக ஆகின்றது. இராயல் பிச்சைக்காரர் என்று கூறலாம். எவ்வளவு தான் கோடீஸ்வரானாலும், இன்றைய நாட்களில் பிச்சைக்காராக ஆகின்றனர். இவ்வாறு பிச்சைக்கார ஆத்மாக்களுக்கு யாசிப்பதிலிருந்து விடுவியுங்கள். இது எல்லையற்ற சேவையாகும். வள்ளலின் குழந்தைகள் அல்லவா! எனவே வள்ளலின் குழந்தை கள், வரதாதாவின் குழந்தைகள், தனது வரதானத்தின் சக்தியின் மூலம், ஞான தானத்தின் சக்தியின் மூலம் பிச்சைக்காரர்களை செல்வந்தர்களாக ஆக்குங்கள். இன்றைய நாட்களில் இந்த பிச்சைக்கார ஆத்மாக்களின் மீது விதாதா மற்றும் வரதாதாவின் குழந்தைகளுக்கு கருணை ஏற்பட வேண்டும். எந்த ஆத்மாக்களுக்கு இவ்வாறு கருணை ஏற்படுகிறதோ, அவர்களுக்குத் தான் மாயை மற்றும் உலக ஆத்மாக்கள் நமஸ்காரம் செய்கின்றனர். அதனால் தான் இன்று வரைக்கும் தீபம் ஏற்றுகின்றனர். தீபம் ஏற்றும் பொழுது அவசியம் நமஸ்காரம் செய்வர். இவ்வாறு சுடர் விட்டு எரியும் தீபம் போன்ற ஆத்மாக்களின் நினைவார்த்தம் இன்று வரை நடைபெறுகிறது. அனைந்த தீபத்திற்கு நமஸ்காரம் செய்யமாட்டார்கள். எனவே சதா சுடர் விட்டு எரியும் தீபம் ஆகுங்கள். அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவும் நமஸ்காரம் செய்கின்றார்.

(மகாராஷ்டிரா மண்டலத்தின் சகோதர, சகோதரிகளுக்கு

அவ்யக்த பாப்தாதாவின் மகாவாக்கியம் - ரிவைஸ் 20.03.2012)

இந்த மண்டலத்தின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது. பெயரே மகாராஷ்டிரா. ஆக மகாவாக இருப்பீர்கள் அல்லவா! பெயருக்குத் தகுந்தாற் போன்று எண்ணிக்கையும் மகானாக இருக்கிறது. மும்பை மற்றும் டெல்லி இரண்டு பக்கமும் உள்ள குழந்தைகள் சேவை மிக நன்றாக செய்து கொண்டிருக்கின்றனர். அது சொல்ல வேண்டிய விசயமல்ல. நன்றாக செய்து கொண்டிருக் கின்றனர், செய்து கொண்டிருப்பர். ஆனால் டெல்லி மற்றும் மும்பையிடம் இதைத் தான் விரும்புகின்றார் - உங்கள் சம்பந்தம், தொடர்பில் வந்திருக்கும் விசேஷ ஆத்மாக்கள், மைக் போன்று ஆகக் கூடியவர்கள், பிறகு வாரிசாகவும் ஆகக் கூடியவர்கள், அப்படிப்பட்ட ஒரு குழுவை உருவாக்குங்கள். ஏனெனில் அனைத்து வர்கத்தினர்களும் ரிசல்ட் பாப்தாதாவிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ரிசல்ட் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது, பட்டியலில் நல்ல நல்ல ஆத்மாக்கள் உள்ளனர், அவர்கள் பெயரை வெளிப்படுத்த முடியும். இப்பொழுது அவர்களை வெளிப்படுத்துங்கள். உங்களுக்குப் பதிலாக அவர்கள் சொற்பொழிவு செய்ய வேண்டும். ஞானம் என்றால் என்ன, எனது வாழ்க்கையில் என்ன வித்தியாசங்கள் வந்திருக் கின்றன என்ற அனுபவத்தை அவர்கள் வர்ணனை செய்ய வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் பொழுது, இப்பொழுதும் சிலர் தங்களது நல்ல நல்ல அனுபவங்களை கூறவும் செய்கின்றனர். ஆனால் அவர்கள் நிகழ்ச்சிகளில் கூறினர், ஆனால் தொடர்ந்து வாழ்க்கையில் அனுபவம் செய்ய வேண்டும். இதில் கவனம் கொடுத்தீர்கள் எனில் வெளிப்படுவார்கள். சிலர் தகுதி யானவர்களாக இருக்கிறார்கள், ஆனால் சிறிது முயற்சி செய்து அவர்களை முன்னேற்றுங்கள். ஒவ்வொரு வர்க்கத்தினர்களும் இந்த பட்டியலை வெளிப்படையான முறையில் குடும்பம் மற்றும் தந்தையின் முன் கொண்டு வர வேண்டும். வர்க்கத்தினர்கள் காரியம் செய்திருக் கின்றனர். பாப்தாதா பார்த்தார், ஆனால் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கிறீர்கள், இப்பொழுது ஏதாவது புதுமை கொண்டு வாருங்கள். வாரிசு உருவாக்குவது தான் புதுமையாகும். குறைந்த பட்சம் தொடர்பில் உள்ளவர்கள் சம்பந்தத்தில் வர வேண்டும், சம்பந்தத்திற்குப் பிறகு சேவையில் ஈடுபடுவார்கள். சம்பந்தம் என்றால் வருவது, செல்வது கிடையாது. ஆனால் தந்தை மற்றும் குடும்பத்தினர்களுக்கு துணையாக ஆகிவிட வேண்டும். இதுவும் நடக்கும், பிராமணர் கள் இணைந்து ஏதாவது ஒரு சங்கல்பம் செய்து விட்டால் அது முடிந்தே விடும் என்பதை பாப்தாதா பார்த்தார். ஆனால் அனைவருக்கும் ஒரே சங்கல்பம் இருக்க வேண்டும். ஏனெனில் இப்பொழுது வாயுமண்டலம் மாறி விட்டது. எனவே இவ்வாறு மைக் போன்ற குழந்தைகளின் குழு உருவாக்க பாப்தாதா விரும்புகின்றார். மதுவனத்தில் சந்திக்க வருகின்றனர் எனில் அது வேறு விசயம், ஆனால் குடும்பத்தினர்களாக ஆகி வர வேண்டும். ஏனெனில் சேவையில் ஏதாவது புதுமை வேண்டும் அல்லவா! நல்லது.

மற்றபடி பாப்தாதாவிற்கு ஒரு ஆசை இருக்கிறது, அதுவும் மண்டலத்தினர்களுக்காக பாக்கி இருக்கிறது. அது எது? ஒவ்வொரு சேவை நிலையமும் இந்த மகிழ்ச்சியான செய்தி எழுத வேண்டும் - நமது சேவை நிலையம் நிர்விக்னமாக (தடையற்றதாக), ஒற்றுமையாக இருக்கிறது. பாபா குழந்தைகள் அனைவரும் மிகச் சரியாக, எந்த காரியம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதில் சுறுசுறுப்பாக, நிர்விக்னமாக இருக்கிறோம். இந்த செய்தி இப்பொழுது எந்த மண்டலத் திலிருந்தும் வரவில்லை. மகாராஷ்டிரா மகான் காரியம் செய்வீர்கள் அல்லவா! எந்த ஒரு மண்டலமும் இந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி இதுவரை அனுப்பவில்லை. ஆக வேண்டும், நீங்கள் தான் ஆக வேண்டும், வேறு யார் ஆவார்கள்? உங்களது தபஸ்யா குறைந்தது கிடையாது. ஆசிரியர்களாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும், உலகின் கணக்கில் ஒவ்வொருவரும் மகான் ஆத்மாக்கள். இப்பொழுதே பாருங்கள், உங்களுடையதை சிறிது நிர்விக்னமாக ஆக்கும் போது, உங்களது சிலையை சுப பாவனையுடன் பார்ப்பது போன்று உங்களை சைத்தன்ய ரூபத்தில் தேவியின் ரூபத்தில், தேவதைகளின் ரூபத்தில் பார்ப்பார்கள். மற்றபடி அனைவரும் சேவைகள் நன்றாக செய்தீர்கள். அதற்கு பாப்தாதா வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக் கின்றார். நல்லது.

ஆசீர்வாதம்:
தெய்வீக குணங்களை வரவேற்பதன் மூலம் அவகுணங்களை அழிக்கக் கூடிய தெய்வீக குணதாரி ஆகுக.

தீபாவளியன்று லெட்சுமியை வரவேற்பது போன்று குழந்தைகளாகிய நீங்கள் தனக்குள் தெய்வீக குணங்களை வரவேற்பு செய்யுங்கள். அப்போது அவகுணங்கள் அர்ப்பணிப்பின் ரூபத்தில் அழிந்து விடும். பிறகு புது சம்ஸ்காரம் என்ற புது ஆடை அணிவீர்கள். இப்பொழுது பழைய ஆடையின் மீது துளியளவும் அன்பு இருக்கக் கூடாது. எந்த குறைகள் இருந்தாலும், பலவீனம், பலமற்று, கோமலமாக இருந்தாலும் அவை அனைத்தும் பழைய கணக்குகள். இன்றிலிருந்து சதா காலத்திற்கு அழித்து விடுங்கள். அப்போது தான் தெய்வீக குணமுடையவர் களாக ஆவீர்கள், மேலும் எதிர்காலத்தில் கிரீடதாரிகளாக ஆவீர்கள். அதன் நினைவார்த்தம் தான் இந்த தீபாவளி ஆகும்.

சுலோகன்:
சுவ இராஜ்ய அதிகாரி ஆக வேண்டுமெனில் மனம் என்ற
மந்திரியை தனது சகயோகியாக ஆக்கிக் கொள்ளுங்கள்.


அவ்யக்த சமிக்கை: பிரம்மா பாபாவிற்குச் சமமாக சம்பன்ன (நிறைந்த)
மற்றும் சம்பூர்ண (முழுமையான) நிலையை அனுபவம் செய்யுங்கள்.

பிந்து மற்றும் சிந்து இந்த இரண்டு வார்த்தைகளையும் கூட நினைவில் வைத்துக் கொண்டால் சம்பூர்ண நிலை எளிதாக வந்து விடும். ஒன்று பிந்துவின் நினைவு மற்றும் ஏக்ரஸ் நிலை, ஒரே ஒருவரின் வழி மற்றும் ஒரே ஒருவரின் காரியத்தில் உதவியாளர். பிந்து மற்றும் ஒருவர், இதைத் தவிர வேறு விஸ்தாரத்தில் செல்ல வேண்டிய அவசியமில்லை. விஸ்தாரத்தில் செல்ல வேண்டுமெனில் சேவையில் செல்லுங்கள். அதற்கு முன் தனது புத்தியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.