09-06-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தையுடன் பறந்து
செல்ல வேண்டுமெனில் முற்றிலும் துôய்மை ஆகுங்கள், முழுமையாக
சமர்பணம் ஆகிவிடுங்கள், இந்த உடல் என்னுடையது இல்லை -
முற்றிலும் அசரீரி ஆகுங்கள் !
கேள்வி:
உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்காக
எந்த ஒரு பயத்தை வெளியேற்ற வேண்டும்?
பதில்:
அநேக குழந்தைகள் மாயாவின் புயலைக்
கண்டு மிகவும் பயந்துவிடு கின்றார்கள், சொல் கின்றார்கள்
தந்தையே புயல் மிகவும் பயமுறுத்துகிறது (துன்பம் தருகிறது), இதை
நிறுத்துங்கள்! குழந்தைகளே, இது குத்துச் சண்டை என்று தந்தை
சொல்கின்றார். இந்த குத்துச் சண்டையில் கூட ஒரே மாதிரியாக சண்டை
நடந்து கொண்டிருக்கும் என்பதில்லை. ஒருவர் 10 அறை கொடுக்
கின்றார் என்றால், இன்னொருவர் 5 அறை நிச்சயம் கொடுப்பார்,
ஆகையால் நீங்கள் பயப்படக் கூடாது. ‘மஹாவீர்’ ஆகி வெற்றி அடைய
வேண்டும், அப்பொழுது தான் உயர்ந்த இலட்சியத்தை அடைய முடியும்.
பாடல்:
உன்னுடைய வாசலுக்கு வந்துள்ளோம்
சபதத்தை மேற்கொண்டு.....
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டை கேட்டீர்கள். அவசியம் இந்த பாடலில் ரகசியம்
அடங்கி உள்ளது. அதனால் தான் இந்த ரிக்கார்டை வாங்கி வந்து
அர்த்தத்தைப் புரிய வைக்கின்றார். உயிருடன் இருந்து கொண்டே
தந்தையுடையவராவது என்று இதற்குத் தான் சொல்லப்படுகின்றது-
தந்தையுனுடையவராக ஆன பிறகு ஆசிரியருடையவர் ஆக வேண்டும்,
ஆசிரியருடையவர் ஆன பிறகு அதிகபட்சம் பேர் குருவைப் பின்பற்று
கின்றார்கள். கிறிஸ்த்தவர்களுக்கு குழந்தை பிறக்கும் போது கூட
கிறிஸ்தவனாகி விடுகின்றார்கள். குருவின் மடியில்
கொடுக்கின்றார்கள். கிறிஸ்தவ பாதிரியராக இருக்கலாம் அல்லது வேறு
யாராகவும் இருக்கலாம். கிறிஸ்தவ பாதிரியரை ஏசு கிறிஸ்து என்று
சொல்ல முடியாது. அவர் பெயரால் தான் கிறிஸ்தவர்கள் ஆகின்றோம்
என்று சொல்கின்றார்கள்.
இப்பொழுது குழந்தைகள் நீங்கள் முதலில் தந்தையின் குழந்தைகள்
ஆகின்றீர்கள், அசரீரி ஆகின்றீர்கள். நம்முடைய உடல், செல்வம்,
மனம் எதுவெல்லாம் இருக்கின்றதோ அவற்றை தந்தைக்கு அர்பணம் செய்
கின்றீர்கள். உயிருடன் இறக்கின்றீர்கள் அப்படி என்றால்
நம்முடைய ஆத்மா அவருடையதாகி விடுகின்றது. இதை புத்தியில் வைக்க
வேண்டும். எதுவெல்லாம் என்னுடைய பொருளோ, என்னுடைய உடல்,
என்னுடைய செல்வம், சொத்து, உறவு முதலியவை களை எல்லாவற்றையும்
மறந்து விடுகின்றோம். இறந்த பின்பு அனைத்தும் மறந்து
விடுகின்றோம் தானே ! எவ்வளவு உயர்ந்த லட்சியமாக உள்ளது. நாம்
‘அசரீரி’ ஆத்மா. இதை உறுதி யாக்க வேண்டும். உடலை விட்டால்
இறந்து விட்டீர்கள் என்பது அப்படி இல்லை, ஆத்மா முழுமையான
துôய்மை நிலையை அடையவில்லை. நீங்கள் தந்தையின் குழந்தைகள்
ஆகிவிட்டீர்கள், ஆனால் உங்களுடைய ஆத்மா துôய்மையற்றிருக்கின்றது
என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாவின் இறக்கைகள் துண்டிக்கப்
பட்டுள்ளது. இப்பொழுது ஆத்மா பறக்க முடியாது. தமோபிரதானம்
ஆகிவிட்ட காரணத்தால் ஒரு மனிதன் கூட திரும்பிப் போக முடியாது.
மாயா ஒரேயடியாக இறக்கையைத் துண்டித்து விட்டது. ஆத்மா
அனைத்தையும் விட வேகமாகப் பறக்கும் என்பதை தந்தை புரிய
வைக்கின்றார். அதைவிட வேகமாகச் செல்லும் பொருள் வேறு எதுவும்
இருக்க முடியாது. ஆத்மாவை விட வேகமாக யாரும் போக முடியாது.
கடைசியில் பார்ப்பதற்கு கொசுக் கூட்டம் போல் அனைத்து
ஆத்மாக்களும் பறப்பார்கள். எங்கே பறப்பார்கள்? மிகவும்
துôர-துôரமாக, சூரியன் சந்திரனை எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.
பின்பு அங்கிருந்து திரும்பி வர வேண்டிய தில்லை. உலகில் விடும்
ராக்கெட் போய்விட்டு திரும்பி வந்துவிடும். சூரியன் வரை கூட
போக முடியாது. ஆனால் நீங்கள் அதைவிட துôரம் செல்ல வேண்டும்.
சூட்சமவதனத்தையும் கடந்து வெகுதொலைவிலுள்ள மூலவதனத் திற்குச்
செல்ல வேண்டும். ஆத்மாவிற்கு இறக்கை கிடைத்து விடுகின்றது.
கணக்கு-வழக்கை முடித்துவிட்டு ஆத்மா துôய்மை ஆகிவிடும்.
‘தீர்ப்பு வழங்கும் நேரம்’ என்பது பற்றி மிகவும் விளக்கமாக
எழுதப்பட்டுள்ளது. அனைத்து ஆத்மாக்களும் தனது கணக்கு-வழக்கை
முடித்துவிட்டு தான் திரும்பிச் செல்ல வேண்டும். இப்பொழுது
அனைத்து ஆத்மாக்களும் அழுக்காக உள்ளன, பாவ ஆத்மாக்களாக உள்ளன.
எவ்வளவு பெரிய சாது சன்யாசிகளும் அப்படிதான் உள்ளனர்.
தன்னைத்தானே குரு என்று நினைத்துக் கொண்டிருக் கின்றார்கள்.
‘அஹம் பிரம்மாஸ்மி’ அஹம் பிரம்மஹம், நாம் பிரம்மத்தை அடைந்து
விட்டோம். நாம் இங்கே அமர்ந்து கொண்டு இருக்கின்றோம், பிறகு
எப்படி பிரம்மத்தையே அடைந்துவிட்டோம் என்று கூறுகின்றார்கள்.
ஆனால் நாம் ஆத்மாக்கள் பிரம்மத்தில் வசிக்கக் கூடியவர்கள்
என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ஆனால்
இப்பொழுது அங்கே யாரும் போக முடியாது. அனைத்து ஆத்மாக்களும்
இங்கே தான் புனர்ஜென்மம் எடுக்கின்றன. இது எல்லையற்ற நாடகம்.
நாம் நடிகர்கள், நடிப்பதற்காக அங்கிருந்து வர வேண்டியுள்ளது.
அனைத்து ஆத்மாக்களும் இந்த மேடையில் வந்துவிட்டது. எப்பொழுது
அழிவு நேரம் வருகின்றதோ அப்பொழுது அனைத்து ஆத்மாக்களும்
வந்துவிடுகின்றார்கள், அங்கிருந்து கொண்டு என்ன செய்வார்கள்?
நடிகர்கள் நடிப்பை நடிக்காமல் வீட்டிலேயே உட்கார்ந்து
விடுவார்களா என்ன? நாடகத்தில் அவசியம் வர வேண்டியுள்ளது.
அங்கிருந்து எப்பொழுது அனைவரும் இறங்கி விடுகின்றார்களோ
அப்பொழுது பரமாத்மா மீண்டும் வந்து அனைவரையும் அழைத்துச்
செல்கின்றார். தந்தை சொல்கின்றார்: நான் இங்கே இருந்தாலும்
அங்கிருந்து ஆத்மாக்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள்,
அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது, வரிசைப்படி. மீண்டும்
நீங்கள் செல்வீர்கள். அனைத்தும் உங்கள் நிலையைப் பொறுத்து தான்
உள்ளது. அதனால் இறந்து மறுபிறவி நீங்கள் எடுக்க வேண்டும். நாம்
ஆத்மா இதில் நம்பிக்கை வைக்க வேண்டும், இதில் தான் முயற்சி
இருக்கிறது. குழந்தைகள் சரீர உணர்வில் வந்து அடிக்கடி
மறந்துவிடுகின்றீர்கள். தந்தை இவை அனைத்தும் உங்களுடையது என்று
எப்பொழுது முழுமையாக அர்ப்பணமாகின்றீர்களோ, அப்பொழுது தான்
ஆத்ம அபிமானியாக இருப்பீர்கள். நான் கூட உங்களுடையவன்
என்றிருக்க வேண்டும். இந்த உடல் கூட என்னுடையது கிடையாது, இதை
நான் விட்டுவிடுகின்றேன். தந்தையே நான் உன்னுடையவன் ! என்று
நினைக்க வேண்டும். தந்தை சொல்கின்றார்: என்னுடைய வன் ஆகிவிட்டு,
அனைத்திலிருந்தும் பற்றை விட்டுவிடுங்கள். இங்கே வந்து
உட்கார்ந்து விடுவது என்பதில்லை. நீங்கள் உங்களுடைய தொழில்
அனைத்தையும் செய்ய வேண்டும். வீட்டை நன்கு கவனித்துக் கொள்ள
வேண்டும். குழந்தைகள், (லௌகீக) தாய்-தந்தையின் சுமையை குறைக்க
வேண்டும். அவர்களுக்கு சேவை செய்து கடனைத் திருப்பி செலுத்த
வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு தாய்- தந்தையை பாலனை
செய்யும் கடன் (பொறுப்பு) தலையில் இருக்கின்றது. இப்பொழுது
தந்தை உங்களை பாலனை செய்து கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில்
யார் வந்தாலும் உடனடியாக சமர்பணம் ஆனார்கள், தன்னிடம் எதையும்
வைத்துக் கொள்ளவில்லை, சமர்பணம் (யக்ஞத்தில் ஒப்படைத்து)
செய்தார்கள், அந்த செல்வத்தால் தான் குழந்தைகள் நீங்கள்
பாரதத்தை துôய்மை ஆக்கிக் கொண்டு இருக்கின்றீர்கள். பாரதம் தான்
முற்றிலும் துôய்மையாக இருந்தது. பாரதவாசிகளை போல் துôய்மை,
சுகம் நிறைந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. பாரதம் மிகப்
பெரிய தீர்த்த ஸ்தானம். இங்குதான் பதீத-பாவனரான தந்தை வந்து
முழு உலகத்தை, தூய்மையற்றவர்களை துôய்மை ஆக்குகின்றார்.
இப்பொழுது இந்த தத்துவம் (இயற்கை) கூட எதிரியாக உள்ளது.
பூகம்கம் வருகின்றது, புயல் வருகின்றது, ஏனென்றால், தமோபிர
தானம் ஆகிவிட்டது. இயற்கைச் சேதங்கள் வரும், மிகவும் துக்கம்
கொடுக்கும். இந்த நேரம் அனைத்தும் துக்கம் கொடுக்க கூடிய தாக
உள்ளது. சத்தியயுகத்தில் உள்ள அனைத்தும் சுகம் கொடுக்கும்.
அங்கே புயல் அல்லது வெப்ப காற்று இதெல்லாம் ஏற்படாது. உங்களில்
கொஞ்சம் பேர் தான் இதை எல்லாம் புரிந்து கொள்கின்றார்கள். இன்று
இருப்பவர் நாளை இருக்க மாட்டார் என்று சொல்கின்றார்கள், ஆனால்
ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. இங்கே வருபவர் அனைவருமே
விதிப்படி நடந்துக் கொள்வ தில்லை, இங்கிருந்து போன பிறகு 10
நாட்களில் கடிதம் எழுதுகின்றார்கள், தந்தையே, இவரை மாயா
சாப்பிட்டுவிட்டது என்று. இப்படி எல்லாம் நடக்கத் தான்
செய்கின்றது. சிறிய பூ (குழந்தை) பெரியதாகும் போது பழம் (முதிர்ச்சி)
உருவாகி விடும். அவர்களிடம் மற்றவர் களையும் தனக்கு சமம் ஆக்க
கூடிய பலம் இருக்கும். அதனுடைய பலன் வெளிப்பட ஆரம்பிக்கும்.
தந்தையினுடையவர் ஆகிவிட்டீர்கள், ஆனாலும் பிரஜைகளையும்
உருவாக்க வேண்டும், வாரிசு களையும் உருவாக்க வேண்டும்.
வழிகாட்டியாகி தந்தையிடம் வந்து விட்டீர்கள், நாம் வந்து
சேர்ந்துவிட்டோம் என்ப தில்லை, லட்சியம் உயர்ந்தது ஆகும்.
மாயாவின் அதிக புயல் வருகின்றது என்று சொல்கின்றார்கள். நீங்கள்
தந்தையின் குழந்தை யாக ஆகிவிட்டீர்கள், புயல் வரத்தான் செய்யும்.
தந்தை நாங்கள் உங்களுடையவராக இருந்தோம் என்று சொல்கின்றார்கள்.
உங்களிடமிருந்து ஆஸ்தியை அடைந்துள்ளோம். பிறகு 84 பிறவி எடுத்து,
எடுத்து கடந்து வந்து இப்பொழுது உங்கள் குழந்தை ஆகி விட்டோம்.
நான் உங்களிடம் இருந்து ஆஸ்தியை அடைந்தே தீருவேன் என்றால்,
தந்தையை அந்தளவு நினைக்க வேண்டி வரும். மேலும் தனக்குச் சமமாக
ஆக்கும் பலனை கொடுக்க வேண்டி வரும். இல்லை என்றால், மாலை எப்படி
உருவாகும்? தந்தையின் வாரிசாக எப்படி உருவாக்குவீர்கள்.
சிம்மாசனத்தில் உட்காரக் கூடியவர்களுக்கு பிரஜை கூட வேண்டும்,
வாரிசும் வேண்டும். தந்தையிடம் அதிகம் பேர் வருகின்றார்கள்
பிறகு கைவிட்டு சென்று விடுகின்றார்கள். புத்தியின் தொடர்பு
துண்டிக்கப்பட்டால், விளையாட்டு முடிந்துவிடும்.
சில பேர் தந்தையிடம் வந்து கேட்கின்றார்கள்- தந்தையே ! எந்த
புயலும் வராத நிலையை எவ்வாறு உருவாக்குவது? இதற்கு நான் வழி (பலமுறை)
சொல்- விட்டேனே, என்னை நினைவு செய்யுங்கள் ! புயல் வரத்தான்
செய்யும். குத்துச்சண்டையில் ஒருவரே அடி வாங்கி கொண்டிருப்
பதாகப் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் இரண்டு பக்கத்தில்
உள்ளவர் களும் பலசாலிகளாக இருப்பார்கள். ஒரு பக்கம் உள்ளவர்
5அடி கொடுத்தால், எதிரில் உள்ளவர் 10 அடி கொடுப்பார். இது கூட
குத்துச் சண்டை மாதிரி தான்! தந்தையை நினைத்துக் கொண்டே
இருந்தீர்களானால், மாயா ஓடிப் போய்விடும். ஆனால் அது உடனே
நடக்காது. மாயாவுடன் குத்துச் சண்டை போட வேண்டி தான் வரும்.
மாயா அடிக்கவே அடிக்காது என்று நினைக்காதீர்கள். யாராக
இருந்தாலும் சரி, இது மிப் பெரிய குத்துச் சண்டை. மிகவும்
பயப்பட்டு விடுகின்றார்கள், மாயா ஒரேயடியாக மூக்கை பிடித்து
விடுகின்றது. இது போர்க்களம் தானே ! புத்தியோகம் ஈடுபடுவதில்
மாயா மிகவும் தடை செய்கின்றது. முயற்சி எல்லாம் நினைவில் தான்
இருக்கின்றது. ஆனால் ஞானி ஆத்மா தான் எனக்கு பிரியமானவர்கள்
என்று தந்தை சொல்கின்றார். ஆனால் ஞானம் கொடுப்பவர் மட்டும்
பிரியமானவர் என்பதில்லை. முதலில் யோகம் முழுமையாகச் செய்ய
வேண்டும். தந்தையை நினைக்க வேண்டும். மாயாவின் புயலைக் கண்டு
பயப்படக்கூடாது. உலகத்திற்கு எஜமானன் ஆக வேண்டுமல்லவா !
அனைவரும் ஆவீர்களா? 16108 மாலை என்பது மிகப் பெரியது. கடைசியில்
தான் முழுமையாகும். திரேதாயுகம் கடைசி வரை எத்தனை ராஜா-ராணி
வருகின்றார்கள். சிலரின் அடையாளங்கள் இருக்கின்றது தானே ! 8
பேருடைய அடையாளங்கள் உள்ளன. இது முற்றிலும் சரியானது.
திரேதாயுகக் கடைசியில் 16108 இளவரசர், இளவரசிகள் இருப்பார்கள்.
ஆரம்பத்தில் இத்தனை பேர் இருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில்
கொஞ்ச பேர் தான் இருப்பார்கள், பிறகு தான் அதிகமாகிக் கொண்டே
போவார்கள். அவர்கள் அனைவரும் இங்கு தான் உருவாகின்றார்கள்.
வாய்ப்பு மிகவும் நன்றாக உள்ளது, ஆனால் முயற்சி அதிகமாக உள்ளது.
கீதையில் கூட சொல்லப் படுகின்றது- இறந்தாலும் உங்களை விட
மாட்டேன் என்று. தந்தையே! இந்த உடல்- பொருள்-மனம் அனைத்தும்
உங்களுடையது நாங்கள் ‘அசரீரி’ ஆகி, உங்களை நினைவு செய்வோம்.
புத்தியின் தொடர்பை உங்களிடம் வைப்போம் என்கின்றார்கள். பிறகு
இவை அனைத்தும் உங்களுக்குத்தான் என்று தந்தையும் சொல்கின்றார்.
‘என்னுடையது’ எல்லாம் ‘உங்களுடையது’ தான் என்று தந்தையும்
சொல்கின்றார். இது அனைத்தும் பகவான் கொடுத்தது என்று பொதுவாக
சொல்வார்கள் அல்லவா? இப்பொழுது இவை அனைத்தும் அழியப் போகின்றன
என்று, தந்தை சொல்கின்றார். உங்களிடம் என்ன இருக்கின்றது? இந்த
உடல் கூட அழிந்துவிடும். இப்பொழுது நான் மீண்டும் உங்களுடையது
அனைத்தை யும் மாற்றுகின்றேன். நீங்கள் வெறும் மாற்றிக் கொள்வது
மட்டும் (எக்ஸ்சேன்ஜ்) செய் கின்றீர்கள் அல்லவா?. அதனால் தந்தை
சொல்கின்றார்- நீங்கள் அசரீரி ஆகி, என்னை நினைவு செய்யுங்கள்.
புத்தியால் அனைத்தையும் அர்ப்பணம் செய்துவிடுங்கள். ராஜா
அரிச்சந்திரன் கதையில் அனைத் தையும் அடகு வைத்துவிடு என்று
சொல்வார்கள் அல்லவா?
இப்பொழுது அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தையும் நான்
உங்களுக்குப் புரிய வைக்கின்றேன் என்று தந்தை சொல்கின்றார்.
நான் தான் பிரம்மா வாய் (வழி ஞானம் தந்து) மூலமாக ராஜா, ராணி
ஆக்கினேன் மீண்டும் இப்பொழுதும் ஆக்குகின்றேன். ஒரு போதும்
மனிதன், மனிதனுக்கு கீதை சொல்-, இராஜாயோகம் கற்றுக் கொடுத்து
ராஜா-ராணி ஆக்க முடியாது. வெறும் கீதை கேட்பதால் என்ன லாபம்?
நான் தான் கல்ப- கல்பம் வந்து உங்களை சொர்க்கத்திற்கு எஜமானன்
ஆக்குகின்றேன் என்று தந்தை சொல்கின்றார். என்னுடையவர்
ஆகின்றீர்கள் என்றால், வாரிசு ஆகின்றீர்கள் என்று பொருளாகும்.
அதனால் எவ்வளவு யோகத்தில் இருக்கின்றீர் களோ அவ்வளவு சுத்தம்
ஆகிக் கொண்டே இருப்பீர்கள். தந்தையே இவை அனைத்தும் உங்களுடையது
நான் டிரஸ்டி என்று இருக்க வேண்டும். உங்கள் கட்டளை இல்லாமல்,
நான் ஒன்றும் செய்ய மாட்டேன். உடல் நிர்வாகத்தைக் கூட எப்படிச்
செய்வது? இது கூட வழி கேட்பேன் ! எப்பொழுதும் ஏழைகள் தான் முழு
கணக்கு பட்டியல் கொடுக்கின்றார்கள். செல்வந்தர்கள் கொடுக்க
முடியாது. சமர்ப்பணம் ஆக முடியாது. எங்கோ யாரோ சிலர் அப்படி
இருக்கின்றார்கள், ஒரு ஜனகரைப் போல ஆகின்றார்கள். குழந்தைகள்
இருக்கிறார்கள், இணைந்த சொத்தாக இருக்கும் போது தனியாக எப்படி
இருக்க முடியும்? செல்வந்தர்கள் தனது சொத்தை எவ்வாறு
விடுவார்கள் மற்றும் சமர்பணம் ஆவார்களா? தந்தை ஏழைப்பங்காளனாக
இருக்கின்றார். அனை வரையும் விட தாய்மார்கள் தான் ஏழைகளாக
இருக்கின்றார்கள். அவர்களை விட கன்னியர்கள் இன்னும் ஏழைகளாக
இருக்கின்றார் கள். கன்னியர்களுக்கு ஒருபோதும் ஆஸ்தியின் போதை
இருக்காது. ஆண் குழந்தைகளுக்குத் தான் சொத்தின் போதை இருக்கும்.
அனால் அவர்கள் தான் அனைத்தையும் விட்டுவிட்டு வைகுண்ட ஆஸ்தியைப்
பெற வேண்டியிருக்கின்றது. ஏழைகளுக்குத் தான் எப்பொழுதும் தானம்
கொடுப்பார்கள். பாரதம் தான் அனைத்தையும் விட ஏழையாக உள்ளது,
அமெரிக்கா அனைவரை யும் விட பணக்கார நாடாக உள்ளது. அவர்களுக்கு
ஆஸ்தி கிடைக்குமா என்ன? பாரதம் தான் அனைத்தையும் விட பணக்கார
நாடாக இருந்தது. மேலும் அந்த நேரம் பிற தர்மங்கள் (மதம்) இல்லை.
பாரதவாசிகள் மட்டுமே இருந்தார்கள், ஒரு மொழிதான் இருந்தது.
கடவுள் ஒருவர் தான். நான் ஒரு இராஜ்யம், ஒரு தர்மம், ஒரு மொழியை
ஸ்தாபனை செய்கின்றேன். சர்வ சக்திகள் நிறைந்தவர் தான், ஒரு
அரசாங்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். ஒன்றிலிருந்து தான் இரண்டு,
மூன்று என்று உருவாகின்றது. இப்பொழுது எத்தனை தர்மங்கள் உள்ள,
மீண்டும் ஒரு தர்மம் வர வேண்டும். இது 5 ஆயிரம் ஆண்டின் விசயம்
ஆகும். ஒரு தர்மம் இருந்தது. பண்டிதர்கள் சத்திய யுகத்தை லட்சக்
கணக்கான வருடங்கள் என்று எழுதிவிட்டார்கள். சத்தியயுகம் என்றால்,
என்ன என்று அவர்கள் அறிவதே இல்லை. சொர்க்கவாசி ஆனார்கள், மேலே
போய் விட்டார்கள் என்று நினைக்கின்றார்கள். தில்வாடா கோவிலில்
கூட கூரையில் சொர்க்கத்தைக் காட்டி இருக்கின்றார் கள். இதனால்
மனிதர்கள் குழப்பம் அடைந்து விடு கின்றார்கள். உண்மையில்
சொர்க்கம் என்பது மேலே ஒன்றும் கிடையாது. தந்தையிடம்
சென்றுவிட்டு மீண்டும் இங்கு வந்து நாம் இராஜ்யம் செய்வோம்
என்று நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இந்த ஞானம் புத்தியில்
இருக்க வேண்டும், அப்பொழுது தான் மற்றவர்களுக்குப் புரிய வைக்க
முடியும். காயாக (அரைகுறையாக) உள்ளவர் களை மாயா என்ற பறவை
சாப்பிட்டு விடுகின்றது, அதனால் தான் போட்டோ வாங்கி வைக்
கின்றோம், பெயரை பதிவு செய்து வைக்கின்றோம்.
தந்தையிடம் செய்தி வருகின்றது, ஒருவர் ஞான அம்பை என் மீது
எய்தார் அதனால் நான் தந்தையினு டையவன் ஆகி விட்டேன் என்று
சாஸ்திரங்களில் கூட எழுதப்பட்டு உள்ளது!- (பிரம்மா) குமாரிகள்
அம்பு எய்தார்கள் என்று. அடே, தந்தையை ஏன் மறந்தீர்கள்?
இதற்குத் தான் ‘ஞான அம்பு’ என்று சொல்லப்படுகின்றது. தந்தையின்
நினைவை மட்டும் நினைவூட்ட வேண்டும். மற்றபடி இதில் இம்சையான
அம்பு ஒன்றும் இல்லை. நான் பிரம்மா வாய் மூலமாக அனைத்து
சாஸ்திரங்களின் இரகசியத்தைப் புரிய வைக்கின்றேன் என்று தந்தை
சொல்கின்றார். பிரம்மா இங்கு அவசியம் தேவைப்படுகின்றார். அவரை
மீண்டும் விஷ்ணுவின் கமல நாபியிலிருந்து வந்ததாகக்
காட்டுகின்றார்கள். ஒன்றுமே அறிவதில்லை. மனிதர்களுக்கு என்ன
தோன்றுகின்றதோ அதை எழுதிவிட்டார்கள். கலப்படம் நிறைய உள்ளது.
இன்று ரித்தி-சித்தி செய்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள். உண்மை
எப்பொழுது வெளிப்படுகின்றதோ அப்பொழுது பொய்யானவர்கள் எதிர்க்
கின்றார்கள். சிவதந்தை நிராகாரமானவர், பிரம்மா பௌதீக உடலுடையவர்
என்று இப்பொழுது நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். மற்றபடி நாபி
என்ற விசயம் எல்லாம் ஒன்றும் இல்லை. நல்லது-
இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய்-தந்தை
பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மேலும் காலை வணக்கங்கள்.
ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இப்பொழுது ஞானி ஆத்மாவாக ஆக வேண்டும், ஞானம் மட்டும் சொல்ல
கூடியவர்கள் ஆகக் கூடாது. நினைவில் இருப்பதற்கும் முயற்சி
செய்ய வேண்டும். அசரீரி ஆகி, அசரீரியான தந்தையை நினைக்க
வேண்டும்.
2) தந்தையினுடையவராகி மற்ற விஷயங்களின் மீது உள்ள பற்றை நீக்க
வேண்டும். இந்த உடல்கூட என்னுடையது கிடையாது. முழுமையாக
ஆன்மீக-அபிமானி ஆகி அர்பணம் ஆக வேண்டும்.
வரதானம்:
மாஸ்டர் சர்வசக்திவான் என்ற சீட்டில் நிலைத்திருக்கக் கூடிய
சகஜமான மற்றும் எக்காலத்திற்குமான கர்மயோகி ஆவீர்களாக.
எப்படி எந்த ஒரு எந்திரத்தை ஒருமுறை இயங்க தயார் செய்து
விட்டால் பிறகு தானாகவே ஒடிக் கொண்டே இருக்கும். அதேபோல மாஸ்டர்
சர்வசக்திவான் என்ற நிலையில் சுயம் தங்களை ஒருமுறை நிலைக்கச்
செய்து விட்டீர்கள் என்றால் ஒருபொழுதும் பலவீனமான வார்த்தைகள்
வெளிப்படாது. ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தை மற்றும் செயல் அதே
செட்டிங் அமைப்பிற்கேற்ப தானாக நடந்து கொண்டே இருக்கும். இதே
அமைப்பு சுலபமாக மற்றும் எக்காலத்திற்குமாக கர்மயோகி, நிரந்தர
நிர்விகல்ப சமாதியில் இருக்கக்கூடிய சகஜயோகியாக ஆக்கி விடும்.
சுலோகன்:
நான் என்பதற்கு பதிலாக பாபா பாபா என்று கூறுவதுதான்
நினைவிற்கான நிரூபணம் ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை : எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்றால் தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
யார் சகிப்புத்தன்மை உடையவரோ அவரே டிராமாவின் கேடயம் கொண்டு
நிலைத்திருக்க முடியும் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
சகிப்புத்தன்மை இல்லை என்றால் டிராமாவின் கேடயத்தை பிடித்து
கொள்வது கூட கடினம் ஆகும். இச்சமயத்தில் என்ன கர்மம்
செய்கிறீர்கள் என்றாலும் அதில் செய்பவர் செய்விப்பவரின் நினைவு
சதா இருக்கட்டும். செய்விப்பவர் தந்தை ஆவார். செய்பவரான நாம்
கருவி ஆவோம். இதை நினைவில் கொண்டு செயல்களை செய்தீர்கள் என்றால்
சாட்சி ஆகி நமது பாகத்தை ஏற்று நடிப்பது போல் அனுபவம் ஆகும்.