09.08.26 காலை முரளி
ஓம் சாந்தி 02.03.2011 பாப்தாதா,
மதுபன்
மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற சுவமானத்தின் இருக்கையில் இருந்து,
ஒருவருக்கொருவர் ஊக்கம்-உற்சாகம் கொடுத்து, சகயோகி ஆகி வீண்
எண்ணங்கள் என்ற எருக்கம் பூவை அர்ப்பணித்து நம்பர் ஒன் என்ற
பரிசு பெறுங்கள்
இன்று நீங்கள் அனைவரும் மற்றும் நாலாப்புறங்களிலும் உள்ள
அனைத்து குழந்தைகளும் அமிர்தவேளையிலிருந்து மிகவும் அன்பு
நிறைந்த வாழ்த்துக்களை அன்புடன் மற்றும் குஷியுடன் கொடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள். தந்தையும் செல்லக் குழந்தைகளாகிய உங்கள்
அனை வருக்கும் இந்த ஜெயந்தியின் வாழ்த்துக்கள் கொடுப்பதற்காக
வந்திருக்கின்றார். ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கு மிகவும்
அன்பானவர்கள், மனதிற்கு பிரியமானவர்களாக இருக்கிறீர்கள். எனவே
பாப்தாதா தனது கையிலுள்ள மாலையினால் உங்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார் - நீங்கள் எதிரில்
வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றீர்கள், அடைந்து
கொண்டும் இருக்கிறீர்கள். ஆனால் நாலாப்புறங்களிலும் உள்ள
குழந்தைகள் சில இடங்களில் வாழ்த்துக்கள் கொடுத்துக்
கொண்டிருக்கின்றனர், தந்தையும் உள்நாடு, அயல்நாட்டின் அனைத்து
குழந்தைகளுக்கும் மிக அன்பாக வாழ்த்துக்கள் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியான
முகத்துடன் அன்புக் கடலில் விளையாடிக் கொண்டிருப்பதை பாப்தாதா
பார்த்துக் கொண்டிருக்கின்றார். தந்தைக்கு குஷி இருக்கிறது -
தந்தை தனியாக வருவது கிடையாது, குழந்தைகளுடன் தான் வருகின்றார்.
ஏனெனில் தந்தை வருவதே யக்ஞம் படைப்பதற்காக! ஆக யக்ஞத்தில் யார்
இருப்பார்கள்? பிராமணர்கள். ஆகையால் தந்தை தனியாக வருவது
கிடையாது, குழந்தைகளுடன் வந்திருக் கின்றார். ஏனெனில் இந்த
ஜெயந்தி தான் அனைத்து ஜெயந்திகளிலும் விசித்திரமானது ஆகும்.
முழு கல்பத்திலும் இந்த ஒரு ஜெயந்தி தான் தந்தை மற்றும்
குழந்தைகளின் பிறப்பு ஒன்றாக ஏற்படுகிறது. எனவே இந்த ஜெயந்தி
வைரத்திற்கு சமமான ஜெயந்தி என்று கூறப்படுகிறது. தந்தையும்
விசேஷமாக ஆதி இரத்தின குழந்தைகளுக்கு விசேஷ வாழ்த்துக்கள்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆக இன்று நீங்கள் அனைவரும்
வாழ்த்து கொடுக்க வந்திருக்கிறீர்களா? அல்லது பெறுவதற்கு
வந்திருக்கிறீர்களா? கூடவே இருப்பீர்கள், கூடவே பறப்பீர்கள்,
கூடவே வருவீர்கள், பிரம்மா பாபாவுடன் இராஜ்யம் செய்வீர்கள்
என்று தந்தை கூறுகின்றார். கூடவே இருப்பதற்கான உறுதிமொழி
கொடுத்திருக்கின்றார். நீங்களும் என்ன கூறுகிறீர்கள்? நாமும்
எங்கு தந்தை இருக்கின்றாரோ, அங்கு கூடவே இருப்போம். இது
குழந்தைகள் தந்தையிடம், தந்தை குழந்தைகளிடம் கொடுத்த உறுதிமொழி.
சரீரத்தில் எங்கு வேண்டுமென்றாலும் இருக் கலாம், ஆனால்
உள்ளத்தில் தந்தை சதா கூடவே இருக்கின்றார். அதனால் தான் தந்தையை
திலாராம் என்று கூறுகின்றோம். இங்கு நினைவுச் சின்னமாகவும்
தில்வாலா (தில்வாடா) கோயில் இருக்கிறது. ஆக அனைவரின் உள்ளத்தில்
திலாராம் இருக்கிறார் அல்லவா! மேலும் தந்தை குழந்தைகளிடம்
கூறுகின்றார் - ஒருபோதும் தனியாக இருந்து விடாதீர்கள். சதா
கூடவே இருங்கள், கூட இருந்தே ஆக வேண்டும். தனிமையாகும் போது
மாயை தனது வாய்ப்பை எடுத்துக் கொள்கிறது. கூடவே இருந்தீர்கள்
எனில் சுயம் கலங்கரை விளக்கு கூடவே இருக்கிறார், அவர் முன் மாயை
தூரத்திலேயே ஓடி விடும், நெருக்கத்தில் கூட வரவே முடியாது. எனவே
குழந்தைகள் தந்தையிடம், தந்தை குழந்தைகளிடம் சதா கூடவே
இருப்பதற் கான உறுதிமொழி செய்திருக்கின்றோம். நீங்கள் அனைவரும்
கூட உறுதிமொழி செய்திருக் கிறீர்கள் தானே! கூடவே இருக்கின்றார்,
கூடவே இருப்பார். கூடவே இருப்பது நன்றாக இருக்கிறது. கை
உயர்த்துங்கள்.
பாப்தாதா பார்த்தார்கள் - ஒவ்வொரு குழந்தையும் அமிர்தவேளையில்
தந்தையிடம் உள்ளப் பூர்வமான விசயங்கள் பேசுகிறீர்கள். உண்மையில்
நேரம் கிடைப்பது கிடையாது, ஆனால் அமிர்தவேளையில் ஒவ்வொருவரும்
மிகவும் இனிமையிலும் இனிய உள்ளத்திலுள்ள விசயங்கள்
பேசுகிறீர்கள். தந்தையும் ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத் திலுள்ள
விசயங் களை கேட்டு அனைத்து விசயங்களுக்கு பதிலும்
கொடுக்கின்றார். அனைவருக்கும் ஒரு விசயத்தின் குஷி இருக்கிறது
- நாம் மனதார என்னுடைய பாபா என்று கூறும் பொழுது தந்தை ஆஜராகி
விடுகின்றார். எஜமான் ஆஜராகி விடுகின்றார். இதில் மனதிற்கான
விசயமாகும், வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
மனதார என்னுடைய பாபா என்று கூறுங்கள், எஜமான் ஆஜராகி விடுவார்.
ஆக இன்று நாலாப்புறங்களிலிருந்தும் இனிய பாடல் பாப்தாதாவின்
காதில் ஒலித்துக் கொண்டி ருந்தது. எந்த பாடல்? என்னுடைய பாபா,
இனிமையான பாபா, அன்பான பாபா. பாப்தாதாவும் குழந்தைகளின் அன்பில்
மூழ்கியிருந்தார், மூழ்கியிருக்கின்றார். இப்பொழுது பாப்தாதா
உங்களது அன்பின் தெய்வீக காரியத்தைப் பார்த்து கூறுகின்றார் -
உங்களது பக்தர்களும் குறைந்த புத்தி உயடையவர்கள் கிடையாது.
அவர்களும் உங்களது நினைவுச் சின்னத்தை மிக நன்றாக நகல்
உருவாக்கியிருக்கின்றனர். துவாபர யுகத்தில் வந்தனர், முதல்
பிறப்பு சதோ பிரதானமாக இருக்கும். ஏனெனில் பரந்தாமத்திலிருந்து
ஆத்மா வருகின்றது. ஆக இன்று பக்தர் களின் பக்கமும் பார்வை
சென்றது. அவர்கள் மிகவும் யுக்தியாக நகல் செய்திருக்கின்றனர்.
ஏனெனில் ஆரம்ப காலத்தின் உங்களது பக்தர்கள் உங்களது நடைமுறை
செயல்களின் நினைவுச் சின்னங்களையும் மிக நன்றாக நகல்
செய்திருக்கின்றனர். ஆனால் உங்களுடையது நடைமுறைக்கானது,
அவர்களுடையது நினைவுச் சின்னமாகும். நீங்கள் விரதம்
எடுத்தீர்கள், என்ன விரதம் எடுத்தீர்கள்? தூய்மை. அவர்களும்
விரதம் கடைபிடிக்கின்றனர், விரதத்தை நகல் செய்திருக்கின்றனர்.
ஆனால் உங்களுடைய விரதம் ஒரு பிறவியில் கடைபிடிப்பதனால் பல
பிறவிகளுக்கு அந்த விரதம் இருக்கும். அவர்கள் ஒரு நாள் மட்டும்
தூய்மையாகவும் இருக் கின்றனர், உணவு-குடிப்பதிலும் சுத்தமாக
இருக்கின்றனர். உங்களுடையது 21 பிறவிகளுக்கான விரதம்,
அவர்களுடையது அல்ப காலத்திற்கானது. அதே போன்று முழித்திருத்தல்.
நீங்கள் வெளிச்சத்தில் வந்து முழ உலகின் இருளை போக்கி
விட்டீர்கள். அரை கல்பம் இருள் வரவே முடியாது. மன இருளை
போக்கினீர்கள், வெளியில் இயற்கையின் துக்கம் என்ற இருளையும்
போக்கினீர்கள். அதையும் அவர்கள் நகல் செய்தனர், முழித்துக்
கொண்டு இருக்கின்றனர். மற்றொரு விசயம், நீங்கள் தந்தையிடம் பலி
ஆகிவிட்டீர்கள், அர்பணம் ஆகிவிட்டீர்கள். முழுமையாக சமர்பணம்
ஆகிவிட்டீர்கள். இதையே அவர்களும் நகல் செய்கின்றனர். ஆனால்
தன்னை பலி கொடுப்பது கிடையாது, எதை பலி கொடுக்கின்றனர்?
அறிவீர்கள் அல்லவா! ஆட்டை பலி கொடுக்கின்றனர். ஏன் ஆடு பலி
கொடுக்கின்றனர், வேறு எதையும் ஏன் பலி கொடுப்பதில்லை அனைவரும்
சிரிக்கிறீர்கள், அறிந்து கொண்டீர்கள். தந்தை குழந்தைகளாகிய
உங்களுக்கு அடிக்கடி சமிக்ஞை கொடுக்கின்றார் - நான் என்பதை
விடுத்து நிமித்த உணர்வு தாரணை செய்யுங்கள். அவர்கள் ஆடு
தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் அதுவும் நான் நான் (மே மே) என்று
கூறுகிறது. ஆக பக்தர்களின் புத்தி அதிசயம் செய்தது அல்லவா!
உங்களது பக்தர்கள் அல்லவா! தந்தை மற்றும் உங்களுடைய பக்தர்கள்!
எனவே தந்தை உங்களுடைய பக்தர் களையும் யார் உண்மையான உள்ளத்துடன்
பக்தி செய்கிறார்களோ, அவர்களுக்கு பக்தியின் பலன் ஏதாவது
கொடுத்து விடுகின்றார். அவர்களும் சதா உண்மையாக மற்றும்
சாத்வீகமாக இருக்கின்றனர், குஷியாக இருக்கின்றனர். துக்கத்தின்
பொழுது துக்கப்படுவது கிடையாது. ஏனெனில் உண்மையான உள்ளத்துடன்
பக்தி செய்கின்றனர். எனவே தந்தையும் இன்றைய நாட்களில்
குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த சமிக்ஞை கொடுக்கின்றார் - நான்
என்பது இருக்கக் கூடாது. நான் என்ன கூறுகின்றேனோ, அதுவே நடக்க
வேண்டும். நான் கூறுவது தான் சரி, அதுவே நடக்க வேண்டும். இந்த
நான் நான், ஒன்று சாதாரணமாக நான் சரீரதாரியாக இருக்கிறேன்,
தேகதாரியாக இருக்கிறேன். ஒன்று சாதாரண நான் மற்றும் ஆழமான நான்.
அதில் பாபா கொடுத்ததையும் நான் செய்தேன், நான் கூறினேன், நான்
செய்தேன், தந்தையின் சிறப்பம்சங்களிலும் நான் என்பது வந்து
விடுகிறது. ஞானத்தின் அறிவு, சிறப்பம்சங்களின் அறிவு - இதிலும்
ஆழமாக நான் என்று வந்து விடுகிறது. எனவே தந்தை சமிக்ஞை
கொடுத்துக் கொண்டே இருக்கின்றார் - நான் மற்றும் எனது, சதா
என்னுடைய பாபா என்பதிலேயே மனதின் பற்றுதல் இருக்க வேண்டும்.
எல்லைக்குட்பட்ட எனது, எனது பெயர், எனது பெருமை என்பதை நீக்கி
நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர் எனும் போது எவ்வளவு குஷி
ஏற்படும்! பகவான் என்னுடையவராக ஆகிவிட்டார், வேறு என்ன வேண்டும்.
ஆக ஒன்று சாதாரண என்னுடையது, மற்றொன்று ஆழமான என்னுடையது. இந்த
ஆழமான என்னுடையது கறையுடையவர்களாக ஆக்கி விடுகிறது. என்னுடைய
பாபா எனும் போது அது செல்வந்தனாக ஆக்கி விடுகிறது.
இன்று பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கிறீர்கள். தன்னுடைய
பிறந்த நாளும் கொண்டாட வந்திருக்கிறீர்கள் அல்லவா!
குழந்தைகளின்றி தந்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் தந்தை
குழந்தைகளின் பிறந்த நாள் உற்சவத்தின் வாழ்த்துக்கள்
கொடுப்பதற்கு வந்திருக் கின்றார், ஆஹா என்னுடைய குழந்தைகளே ஆஹா!
இப்பொழுது ஒரு விசயம் கூறவா! தயாராக இருக்கிறீர்களா! கூறட்டுமா?
செய்ய வேண்டியிருக்கும். கை உயர்த்துங்கள், செய்வீர் களா?
இரட்டை அயர்நாட்டினர் செய்வீர்களா? ஆசிரியர்கள் செய்வீர்களா?
நல்லது. இன்று நினைவுச் சின்னமாக, சிவபரமாத்மாவின்
நினைவார்த்தமாக எருக்கம் பூ அர்ப்பணிக்கின்றனர், ரோஜா அல்ல.
வேறு எந்த மலர்களையும் அர்ப்பணிப்பது கிடையாது, எருக்கம் பூ
அர்ப்பணிக் கின்றனர். ஆக இன்று எந்த ஒரு விசயத்தை
அர்ப்பணியுங்கள், எந்த வீட்டுப் பாடம் கொடுக்க விரும்புகின்றார்?
தயாராக இருக்கிறீர்கள் தானே! நல்லது.
குழந்தைகள் அனைவரும் ஆம் பாபா என்று கூறுவது தந்தைக்கு மிகவும்
நன்றாக பிடித்திருக் கிறது. பிறந்த நாளான இன்று தந்தைக்கு இந்த
சங்கல்பம் இருக்கிறது - அனைவரும் ஒருவருக் கொருவர்
ஊக்கம்-உற்சாகம் கொடுத்து, ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக ஆகி
வீண் எண்ணங்கள் என்ற எருக்கம் பூவை அர்ப்பணிப்பு செய்யுங்கள்.
வீண் எண்ணங்கள் வரக் கூடாது, கேட்கக் கூடாது மற்றும் கெட்ட
சகவாசத்தில் வந்து வீண் சங்கல்பங் களின் கலர் தூவக் கூடாது.
ஏனெனில் வீண் சங்கல்பம் எங்கு இருக்குமோ, அங்கு நினைவின்
சங்கல்பம், ஞானத் தின் இனிய வார்த்தை, இதை முரளி என்று
கூறுகின்றோம், அந்த சுத்த சங்கல்பம் நினைவிற்கு வராது. முரளி
கேட்கவும் செய்யலாம், படிக்கவும் செய்யலாம், அது அவசியமானதாகும்.
பிராமணர்களின் நியமம் ஆகும். ஆனால் கேட்பது என்ற நிலையிலேயே
இருப்பார்கள். மனதில் சிந்தனை வராது. யோசிப்பார்கள்,
கூறுவார்கள் - இன்றைய முரளி மிகவும் நன்றாக இருந்தது. என்ன
கூறினார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் வரதானமும் மிக
நன்றாக இருந்தது, ஆனால் நினைவிற்கு வீண் எண்ணங்கள் மனம்,
புத்தியை தன் பக்கம் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. தந்தையின்
முன் என்ன கூறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாபா,
ஆர்வமான செய்திகள் கேட்க வேண்டும் அல்லவா! ஞானம்
நிறைந்தவர்களாக ஆக வேண்டி இருக்கிறது. ஆனால் வீண் விசயங்கள்
பதவி அடைவதில் நஷ்டமாக்கி விடும். நீங்கள் அனைவரும் வீண்
எண்ணங்களுக்கான உறுதிமொழி தந்தையிடம் செய்கிறீர்களா? நாம்
விரும்பு வது கிடையாது, ஆனால் அது வந்து விடுகிறது என்று
நீங்கள் கூறுவீர்கள். விரும்புவது கிடையாது, ஆனால் வந்து
விடுகிறது. எனவே தந்தையிடம் திடமான எண்ணத்துடன் கொடுத்து விட
வேண்டும். முதலில் கொடுக்க வருகிறதா? தந்தையிடம் கொடுத்து
விட்டீர்களா? கொடுத்த பொருள் ஒருவேளை திரும்பவும் உங்களிடம்
வந்து விட்டால் அதை வைத்துக் கொள்வீர்களா? திரும்பி கொடுத்து
விடுவீர்களா? ஒருவேளை கொடுத்த பொருள் நீங்கள் உங்களிடம்
வைத்துக் கொண்டால் உங்களுடைய பட்டம் என்னவாக இருக்கும்?
தந்தையிடம் ஒரு முறை தனது விருப்பத்துடன் திடமாக கொடுத்து
விடுங்கள். மேலும் சோதனை செய்யுங்கள் - அடிக்கடி கொடுத்த பொருள்
என்னிடம் திரும்பி வந்து விடுவதில்லை தானே! பிறரது பொருளை
தன்னுடையதாக ஆக்கிக் கொள்வது நல்லது கிடையாது. எனவே தினமும்
தூங்குவதற்கு முன் சோதனை செய்யுங்கள் - இன்று முழு நாளும் எந்த
வீண் எண்ணமும் வரவில்லை தானே? செய்யவில்லை தானே? கொடுத்த பொருளை
திரும்பவும் பெற்றுக் கொள்ளவில்லை தானே?
இன்று பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்கு தைரியம் இருக்கிறது தானே!
தைரியம் இருக்கிறதா? கை உயர்த்துங்கள், தைரியம் இருக்கிறதா?
எங்கு தைரியம் இருக்கிறதோ, அங்கு பாப்தாதாவும் உங்களுக்கு பரிசு
கொடுப்பார். நீங்கள் மனதார என்னுடைய பாபா என்று கூறுங்கள்.
இரக்கமுள்ள, கருணையுள்ளம் உடையவர் பாபா, நீங்கள் இந்த பொருளை
எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனதார கூறும் பொழுது தந்தை
அதிகப்படியான பரிசு கொடுப்பார். ஏனெனில் தைரியம் உங்களுடையது,
அதிகப்படியான உதவி தந்தை கொடுப்பார். எங்கு தைரியம் இருக்கிறதோ,
அங்கு தந்தையின் உதவி அவசியம் இருக்கும். இதை அனுபவம்
செய்திருக்கிறீர்கள் தானே! ஏனெனில் பாப்தாதா நீண்ட காலமாக
எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றார் - இப்பொழுது தீவிர
முயற்சிக்கான வழி மூன்று புள்ளி வைப்பதாகும். புள்ளியாக
இருக்கிறேன், புள்ளியான தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும்
கடந்து முடிந்தவைகளுக்கு புள்ளி, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதையே பாப்தாதா புள்ளி ஆகுங்கள், புள்ளியை பாருங்கள் மற்றும்
புள்ளி வையுங்கள் என்று கூறுகின்றார். அதனால் தான் புள்ளிக்கு
மிகுந்த மகத்துவம் இருக்கிறது. இன்றைய நாட்களிலும் புள்ளிக்கு
(பிந்து) அதிக மகத்துவம் இருக்கிறது. பாருங்கள் பைசா
எண்ணுகின்றனர் அல்லவா! இன்றைய நாட்களில் அனைவருக்கும் எதன் மீது
அதிக அன்பு இருக்கிறது? பணத்தின் மீது. பணம் எப்படி
அதிகரிக்கும்? புள்ளி (பிந்து) வைத்துக் கொண்டே செல்லுங்கள்,
10 க்குப் பிறகு பிந்து வைத்தால் 100 ஆகிவிடும். அடுத்த பிந்து
வைத்தால் 1000 ஆகிவிடும். எனவே பிந்துவிற்கு மகத்துவம்
இருக்கிறது. ஆனால் உண்மையான பிந்து எது? என்பதை மறந்து
விட்டீர்கள். இன்று தந்தையின் பிறந்த நாள் பரிசு கொடுத்து
விட்டீர்களா? கொடுத்தீர்களா? உள்ளப்பூர்வமாக கொடுத்தீர்களா? ஏன்,
எதற்கு என்று கேட்கமாட்டீர்களா? எப்படி செய்வது? என்ன செய்வது?
இது மிகவும் கெட்ட மொழியாகும். என்ன செய்வது? எப்படி செய்வது?
என்ன, எப்படி என்று கூறக் கூடாது. ஆக பரிசு கொடுப்பதற்கு குஷி
குஷியாக கை உயர்த்தீனீர்களா? அல்லது குழுவில் வலுக்கட்டாயமாக
உயர்த்தீனீர்களா? ஏனெனில் வலுக்கட்டாயமாக செய்பவர்கள் சதா
செய்யமாட்டார்கள், அவ்வப் பொழுது இருக்கும். உள்ளப்பூர்வமாக
செய்யக் கூடியவர்கள் செய்தே தீருவார்கள், ஆகியே தீருவார்கள்.
பரிசு கொடுத்து விட்டீர்களா? கொடுத்தே ஆக வேண்டும். இவ்வாறு
குஷி குஷியாக சங்கல்பம் செய்தீர்கள் எனில் சர்வசக்திவான்
தந்தையின் குழந்தைகள் மாஸ்டர் சர்வசக்தி வானாக இருப்பவர்களுக்கு
என்ன பெரிய விசயம்! இருக்கையில் அமர்ந்திருங்கள், மாஸ்டர் சர்வ
சக்திவான் என்ற இருக்கையில் சதா செட் ஆகியிருங்கள். மறந்து
விடாதீர்கள். இது சுவமானம் அல்லவா! தனது சுவமானத்தை விட்டு
விடக் கூடாது. சுவமானத்திற்காக சண்டை யிட்டுக் கொள்கின்றனர்.
எனவே இன்று தந்தைக்கு அன்பு ஏற்பட்டிருக்கிறது - சிறிய விசயத்
திற்காக தனது சுவமானம், பரமாத்மாவின் மூலம் அடைந்த சுவமானம்,
மனிதர்களின் மூலம் அடைந்த சுவமானம் - அதிலும் எவ்வளவு போதை
இருக்கிறது! இது பரமாத்மாவின் மூலம் கிடைத்திருக்கும்
சுவமானமாகும் - மாஸ்டர் சர்வசக்திவான். என்ன வேண்டுமோ அதை
செய்து விட முடியும். தைரியம் இருக்கிறது தானே? தலை அசையுங்கள்.
கை அசைக் காதீர்கள், தலை அசையுங்கள். தைரியம் இருக்கிறதா?
நீங்கள் செய்விக்க வேண்டியிருக்கும், கவனம் ஏற்படுத்த வேண்டும்.
நீங்கள் செய்வீர்கள் மற்றும் கவனம் ஏற்படுத்தி செய்விப்பீர்கள்.
நிமித்தம் அல்லவா! பிறகு யார் எந்த வகுப்பு, யாருடைய வகுப்பு
நம்பர் எடுக்கின்றனர்? நல்ல பரிசும் கொடுப்பேன். என்ன பரிசு
கொடுப்பேன் என்று கூறமாட்டேன். பெரிய பரிசு கொடுப்பேன். முழு
வகுப்பும் முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் செய்தார் என்று
இருக்கக் கூடாது. மெஜாரிட்டி செய்ய வேண்டும்.
ஆக இன்று பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தையின் மீது அன்பு வந்து
கொண்டிருக்கிறது - நம்பர் ஒன்னில் வர வேண்டும். இரண்டாவதாக வரக்
கூடாது. முதல் இராஜ்ய அரியணையில் அமரமாட்டீர்கள், அரியணையில்
இருவர் அமர்வீர்கள். ஆனால் முதல் இராஜ்யம், முதல் இராஜ்ய
வம்சத்தின் சம்பந்தத்தில் வருவீர்கள். இரண்டு எண்ணிக்கை
முடிவாகி விட்டது. ஆனால் இராஜ்யம் செய்வது, இராஜ்ய அதிகாரி ஆக
வேண்டுமெனில் முதல் இராஜ்யத்தில் வர வேண்டும். ஆக
பாப்தாதாவிற்கு குழந்தைகளின் மீது இந்த அன்பு தான் இருக்கிறது
- ஒவ்வொரு குழந்தையும் ஏதாவது ஒரு சிறப்பம்சத்தில் நம்பர்
ஒன்னில் வர வேண்டும். வரிசைக்கிரமமாக அல்ல. ஆர்வம் இருக்கிறதா?
நம்பர் ஒன்னில் வர வேண்டுமா? அல்லது எது கிடைத்தாலும் சரி தானா?
சரி சரி என்று கூறக் கூடாது. தந்தையின் ஆசை - ஒவ்வொரு
குழந்தையும் ஏதாவது அதிசயம் செய்து நம்பர் ஒன்னில் வர வேண்டும்.
நான்கு பாடங்கள் உள்ளன. ஏதாவது ஒரு பாடத்தில் நம்பர் ஒன் ஆகியே
தீர வேண்டும். ஆகியே தீர வேண்டும் என்பதை அடிக்கோடு இடுங்கள்.
சரி, அதிக உழைப்பு கொடுக்கவில்லை, ஏதாவது ஒரு பாடத்தில் நம்பர்
ஒன். இது எளிது தானே! மற்றபடி இன்றைய நாளில் அமிர்தவேளையில்
சந்திப்பு செய்து கொண்டிருந்த ஒவ்வொரு குழந்தையும் மிகவும்
குஷியாக, குஷியில் சிரித்துக் கொண்டு, மகிழ்ச்சியான முகத்துடன்
இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் தந்தையும் கூட
ஒவ்வொரு குழந்தைக்கும் சதா பறக்கும் கலைக்கான வரதானம்
கொடுத்தார். நடக்கும் கலை அல்ல, பறக்கும் கலை. எனவே
பாப்தாதாவின் இன்றைய வரதானம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பாப்தாதா உங்களது மற்றும் தனது ஜெயந்தி அன்று என்ன வரதானம்
கொடுத்தார்? பறக்கும் கலை பவ! நீங்களும் கூட சிவராத்திரி
திருவிழா மனதில் கொண்டாடி னீர்கள் தானே! ஆக அனைவரும் நன்றாக
இருக்கிறீர்கள், நன்றாக இருப்பீர்கள், நல்லதிலும் நல்லதாக
இராஜ்ய பதவி பலனாக அடைவீர்கள். அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள்
தானே! தந்தை நல்லதை மட்டுமே பார்க்கின்றார். நல்லது.
நாலாப்புறங்களிலும் உள்ள, எதிரில்
அமர்ந்திருந்தாலும்-அவரவர்களது இடங்களில் அமர்ந்து கொண்டாடிக்
கொண்டிருந்தாலும், அனைவரையும் பாப்தாதாவும் பார்த்து மகிழ்ச்சி
அடைந்து கொண்டிருக்கின்றார். குழந்தைகளும் தந்தையின் சந்திப்பை
பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார். ஆனால் இன்று
சங்கல்பம் செய்யுங்கள் - சதா குஷி. அவ்வப்பொழுது இருப்பவர்கள்
கிடையாது, சதா குஷி. யார் பார்த்தாலும், உங்களது முகத்தைப்
பார்த்து யோசிக்க வேண்டும் - இவர் மிகவும் பாக்கியவான்
ஆத்மாவாக தென்படுகின்றார். உங்களது பாக்கியம் நடத்தை மற்றும்
முகத்தில் தென்பட வேண்டும். மனதில் அதிகம் இருக்கிறது என்று
இருந்து விடக் கூடாது. உங்களது பாக்கியவான் முகம்,
மகிழ்ச்சியான முகம் மற்றவர்களுக்கு அறிமுகம் கொடுக்கும். ஏதோ
இருக்கிறது என்று முகம் கூறும். உங்களது முகம் சேவை செய்ய
வேண்டும். தந்தை வரை அழைத்து வர வேண்டும். மகிழ்ச்சியாக
இருப்பதும் சேவைக்கான சாதனமாகும். ஆக நாலாப்புறங்களிலும் உள்ள
குழந்தைகளுக்கு உங்களது பிறந்த நாளுக்கான பல கோடி மடங்கு
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். நல்லது.
ஆசீர்வாதம்:
சந்தேக எண்ணங்களை அழித்து மாயாவை
வெல்லக் கூடிய வெற்றி இரத்தினம் ஆகுக.
ஒருபோதும் முன்கூட்டியே இந்த சந்தேக எண்ணம் வரக் கூடாது - நான்
தோல்வி அடைந்து விடுவேனா, தெரியவில்லையே! சந்தேக புத்தியுடையவர்
ஆகும் போது தான் தோல்வி அடைகிறீர்கள். ஆகையால் நான் வெற்றி
அடைந்து காட்டுவேன் என்ற சங்கல்பம் சதா இருக்க வேண்டும். வெற்றி
என்னுடைய பிறப்புரிமை, இவ்வாறு அதிகாரியாகி காரியம் செய்வதனால்
வெற்றிக்கான அதிகாரம் பலனாக கிடைத்து விடும். இதன் மூலம் வெற்றி
இரத்தினம் ஆகிவிடுவீர்கள். ஆகையால் மாஸ்டர் ஞானம் நிறைந்தவரின்
வாயில் தெரியவில்லை என்ற வார்த்தை ஒருபோதும் வரக் கூடாது.
சுலோகன்:
கருணை உணர்வானது எளிதாகவே
பொறுப்புணர்வை வெளிப்படுத்தி விடுகிறது.
அவ்யக்த சமிக்ஞை: அபவித்திரதாவின் விதையைக் கூட அழித்துவிட்டு,
சம்பூரண தூய்மையானவராக ஆகுங்கள்
தொட்டால் சுருங்கி இலையானது சிறிது விரல் பட்டால் சக்தியற்றதாக
ஆகிவிடும், அதற்கு நேரம் ஏற்படாது. அதே போன்று நீங்கள் ஒரு
விநாடியின் சுத்த சங்கல்ப சக்தியின் மூலம் மாயாவை தொட்டால்
சுருங்கி போன்று மயக்க மடையச் செய்யுங்கள். தனது உண்மையான
சொரூபம், வரதானி சொரூபம் சதா நினைவில் இருந்தால் அசுத்தம்
அல்லது மறதியின் பெயர், அடையாளம் இருக்காது.