09-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! யோகபலத்தினால் தான்
நீங்கள் உங்களுடைய விகர்மங்கள் மீது வெற்றி பெற்று விகர்மாஜீத்
ஆக வேண்டும்.
கேள்வி:
எந்த ஒரு சிந்தனை முயற்சி
செய்யும் குழந்தைகளையும் கூட முயற்சியில் பலவீமடையும்படி செய்து
விடுகின்றது?
பதில்:
இன்னும் அதிக சமயம் உள்ளது,
கடைசியில் தாவி முன்னேறிச் சென்று விடலாம் என்ற சிந்தனை
குழந்தைகளுக்கு வரும் போது முயற்சி பலவீனமடைகிறது. ஆனால் பாபா
புரிய வைக்கிறார், குழந்தைகளே ! மரணம் ஏற்படும் நேரம்
நிச்சயிக்கப் பட்டதல்ல. நாளை-நாளை எனச் சொல்லியே இறந்து
விடுவார்கள். அப்போது வருமானம் என்னவாகும்? அதனால் எவ்வளவு
முடியுமோ, ஸ்ரீமத்படி தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து
கொண்டே இருங்கள். சமயத்தைப் பற்றி யோசித்து முயற்சியற்றவராக ஆகி
விடாதீர்கள்.
பாடல்:
ஓம் நமோ சிவாய.......
ஓம் சாந்தி.
நிராகார், சாகார் (சரீரம்) இல்லாமல் எந்த ஒரு கர்மமும் செய்ய
இயலாது. என்பது குழந்தை களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது
மற்றும் பாகத்தையும் நடிக்க முடியாது. ஆன்மிகத் தந்தை வந்து
பிரம்மா மூலமாக ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்.
யோக பலத்தினால் தான் சதோபிரதானமாக ஆக முடியும் மற்றும்
உலகத்தின் எஜமானர் ஆக முடியும். இது குழந்தைகளின் புத்தியில்
உள்ளது, அதாவது கல்ப- கல்பமாக பாபா வந்து பிரம்மா மூலம்
இராஜயோகம் கற்பிக்கிறார். மேலும் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை
ஸ்தாபனை செய்கிறார். அதாவது மனிதர்களை தேவதை ஆக்குகிறார்.
மனிதர்கள் தேவி-தேவதையாக இருந்த போது தூய்மையாக இருந்தனர்.
இப்போது அதிலிருந்து மாறி 84 பிறவிகளுக்குப் பின் தூய்மை
இல்லாதவர்களாக ஆகி விட்டுள்ளனர். பாரதம் பாரஸ் புரியாக (தங்கம்
போல்) இருந்த போது தூய்மை, சுகம்-சாந்தி அனைத்தும் இருந்தது.
இது 5000 ஆண்டுகளின் விஷய மாகும். தேதி-கிழமையுடன் கூட பாபா
முழுக் கணக்கையும் புரிய வைக்கிறார். இவரைக் காட்டிலும்
உயர்ந்தவர் யாரும் கிடையாது. சிருஷ்டி அல்லது கல்ப விருட்சம்
எனச் சொல்லப் படும் மரத்தின் ஆதி-மத்ய-அந்தத்தின் (முதல்-இடை-கடை)
இரகசியத்தையும் பாபா தான் வந்து புரிய வைக்கிறார். பாரதத்தில்
இருந்த தேவி-தேவதா தர்மம் இப்போது மறைந்து விட்டுள்ளது.
சித்திரங்கள் மட்டும் நிச்சயமாக உள்ளன. பாரதவாசிகளுக்குத்
தெரியும், அதாவது சத்யுகத்தில் லட்சுமி-நாராயணரின் இராஜ்யம்
இருந்தது. சாஸ்திரங்களில் தவறு செய்திருக்கலாம், அதில்
கிருஷ்ணரை துவாபர யுகத்திற்குக் கொண்டு சென்று விட்டனர். பாபா
தான் வந்து மறந்து விட்டவர்களுக்கு வழி சொல்கிறார். அவரை
முக்தி-ஜீவன் முக்தியின் வழிகாட்டி எனச் சொல்கின்றனர்.
அனைவருக்கும் முக்தி-ஜீவன் முக்தி தருபவர் ஒரே ஒருவர் தான்.
பாரதம் ஜீவன்முக்த் நிலையில் இருந்த போது மற்ற அனைத்து
ஆத்மாக்களும் முக்திதாமத்தில் இருந்தனர். அதனால் அவர்
முக்தி-ஜீவன் முக்தி அளிக்கும் வள்ளல் எனச் சொல்லப் படுகின்றார்.
படைப்பவர் ஒருவர் தான். சிருஷ்டியும் ஒன்று தான். உலகத்தின்
சரித்திர-பூகோளமும் ஒன்று தான், அது தான் ரிப்பீட் ஆகிறது.
சத்யுக திரேதா, துவாபர, கலியுகம், அதன் பிறகு சங்கமயுகம்.
கலியுகம் தூய்மையற்றது, சத்யுகம் தூய்மையானது. சத்யுகம் வரும்
என்றால் முதலில் கலியுகம் விநாசமாகும். விநாசத்திற்கு முன்
ஸ்தாபனை நடைபெறும். சத்யுகத்தில் ஸ்தாபனை நடை பெறாது. எப்போது
தூய்மையற்ற உலகத்தைப் தூய்மையாக்க வேண்டுமோ, அப்போது பகவான்
வருவார். இப்போது பாபா சகஜ யுக்தி சொல்கிறார் - தேகத்துடன் கூட
தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு தேகி (ஆத்ம) அபிமானி
ஆகி தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை பக்தர்களுக்கு பலனைத்
தருபவர். பக்தர்களுக்கு ஞானம் தருகிறார் - தூய்மையாவதற்காக.
அனைவரையும் தூய்மையாக்குவது யோக பலம். ஞானக்கடல் வந்து பிரம்மா
வாயின் மூலம் ஞானம் சொல்கிறார். தூய்மை யற்றவர்களை
தூய்மையாக்குகிறார். இச்சமயம் அனைத்து ஆத்மாக்களும்
தூய்மையற்றவர்களாகி விட்டுள்ளனர். அதனால் தந்தையை அழைக்கின்றனர்.
ஏனென்றால் தந்தையைத் தவிர யாராலும் தூய்மையாக்க முடியாது. பதீத
பாவனி கங்கை என்றால் பிறகு பதீத-பாவனா சீதாராம் என்று ஏன்
அழைக்கிறீர்கள்? புத்தி சொல்கிறது, பரமபிதா பரமாத்மா நிச்சயமாக
மீண்டும் புது உலகின் ஸ்தாபனை மற்றும் பழைய உலகின்
விநாசத்திற்காக வருவார். கல்ப-விருட்சத்திற்கு ஆயுளும் உள்ளது.
அதன் விதை இற்றுப் போனதாக ஆகும் போது தான் அதைத் தமோபிரதானம்
எனச் சொல்கின்றனர். புது உலகம் எனச் சொல்ல மாட்டார்கள். இது
அயர்ன் ஏஜ்டு (இரும்பு யுகம்) உலகம். இந்த விஷயங்கள் அனைத்தும்
புத்தியில் பதிய வைக்கப் படுகின்றது - மற்றவர்களுக்குப் புரிய
வைப்பதற்காக. ஒவ்வொரு வீட்டிலும் செய்தி கொடுக்க வேண்டும்.
பரமாத்மா வந்து விட்டார் என்று சொல்லக் கூடாது. யுக்தியோடு
புரிய வைக்க வேண்டும். சொல்லுங்கள்-இரண்டு தந்தையர்
உள்ளனர்-லௌகிக் மற்றும் பரலௌகிக். துக்கமான நேரத்தில் பரலௌகிகத்
தந்தை தான் நினைவு செய்யப்படுகின்றார். சுகதாமத்தில் யாரும்
பரமாத்மாவை நினைவு செய்ய மாட்டார்கள். சத்யுகம்,
லட்சுமி-நாராயணரின் இராஜ்யத்தில் சுகம் சாந்தி தூய்மை அனைத்தும்
இருந்தன. தந்தையின் ஆஸ்தி கிடைத்து விட்டதென்றால் பிறகு ஏன்
அழைக்க வேண்டும்? அங்கே சுகமே-சுகமாக இருக்கும். தந்தை துக்கத்
திற்காக உலகைப் படைக்கவில்லை. இது உருவாக்கப் பட்ட ஒரு
விளையாட்டு. யாருடைய பாகம் கடைசியில் உள்ளதோ, அவர்கள் 2-4
பிறவிகள் எடுக்கின்றனர். மற்ற சமயம் சாந்தி தாமத்தில்
இருப்பார்கள். மற்றப்படி விளையாட்டில் இருந்து யாராவது
விடுபட்டு விடுவது என்பது நடக்காது. ஓரிரு பிறவிகள் எடுத்தனர்,
மீதி சமயம் மோட்சம் போலத் தான். ஆத்மா பார்ட்தாரியாக உள்ளது.
சிலருக்கு உயர்ந்த பார்ட், சிலருக்குக் குறைந்தது. ஈஸ்வரனின்
எல்லையை (முடிவுவரை) அடைய முடியாது எனப் பாடப்படுகிறது. ஈஸ்வரனே
வந்து படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல்-இடை-கடை பற்றிய
ரகசியத்தைப் புரிய வைக்கிறார். பாபா புரிய வைக்கிறார், நான்
சாதாரண உடலில் பிரவேசமாகிறேன். இவர் (பிரம்மா) தம்முடைய
பிறவிகள் பற்றி அறிந்திருக்கவில்லை. நான் இவருடைய 84 பிறவிகளின்
கதையைச் சொல்கிறேன். எந்த ஒரு பார்ட்டும் மாற முடியாது. இது
உருவாக்கப் பட்ட விளையாட்டு. இது யாருடைய புத்தியிலும்
பதிவதில்லை. எப்போது தூய்மை அடைந்து புரிந்து கொள்கிறார்களோ,
அப்போது புத்தியில் பதியும். நல்லபடியாகப் புரிய வைப்பதற்காக 7
நாள் பட்டியில் அமர வேண்டும். பாகவதம் முதலியவற்றையும் கூட 7
நாள் வைக்கின்றனர். சிலர் 7 நாளில் நன்றாகப் புரிந்து கொண்டு
விடுகின்றனர். சிலரோ எனது புத்தியில் எதுவும் பதியவில்லை எனச்
சொல்லி விடுகின்றனர். உயர்ந்த பதவி பெறப் போவதில்லை எனும் போது
புத்தியில் எப்படிப் பதியும்? நல்லது, பிறகும் நன்மையோ
நடைபெற்றது இல்லையா? பிரஜை களோ இவ்வாறு தான் உருவாகின்றனர்.
மற்றப்படி இராஜ்ய பாக்கியத்தை அடைவதில் முயற்சி உள்ளது. பாபாவை
நினைவு செய்வதால் தான் விகர்மங்கள் விநாசமாகும். இப்போது
நீங்கள் செய்தாலும் சரி, செய்யவில்லை என்றாலும் சரி. ஆனால்
பாபாவின் கட்டளையாவது, அன்பான பொருள் (பரிசு) நினைவு செய்யப்
படுகின்றது இல்லையா? பக்தி மார்க்கத்திலும் கூட ஹே பதீத பாவனா
வாருங்கள் என அழைக்கின்றனர். இப்போது அவர் கிடைத்துள்ளார். அவர்
சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் ஆத்மாவின் கறை நீங்கி
விடும். இராஜபதவி என்பது அப்படியே சும்மா கிடைத்து விடாது.
நினைவு செய்வதில் தான் கொஞ்சம் முயற்சி உள்ளது.. அதிகம் நினைவு
செய்பவர்கள் தான் கர்மாதீத் நிலையை அடைகின்றனர். முழுமையாக
நினைவு செய்யவில்லை என்றால் விகர்மங்கள் விநாசமாகாது. யோக
பலத்தினால் தான் விகர்மாஜீத் ஆக வேண்டும். லட்சுமி-நாராயணர்
இவ்வளவு தூய்மையாக எப்படி ஆனார்கள்? அதுவும் கலியுகக் கடைசியில்
யாருமே தூய்மையானவர்கள் இல்லை எனும் போது? இச்சமயம் கீதா
ஞானத்தின் எப்பிஸோட் ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கிறது. சிவபகவான்
வாக்கு- தவறுகளோ, அனைவருமே செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
நான் வந்து அனை வரையும் தவறு செய்யாதவர்களாக ஆக்குகிறேன்.
பாரதத்தில் உள்ள சாஸ்திரங்கள் அனைத்துமே பக்தி
மார்க்கத்தினுடையவை. பாபா சொல்கிறார்-நான் என்னென்ன சொல்லி
யிருந்தேனோ, அதெல்லாம் யாருக்குமே தெரியாது. யார் என்னிடம்
கேட்டார்களோ, அவர்கள் 21 பிறவிகளின் பலனை அடைந்தார்கள். பிறகு
ஞானம் மறைந்து விட்டது. நீங்கள் தான் சக்கரத்தைச் சுற்றி வந்து
மீண்டும் இந்த ஞானத்தைக் கேட்டுக் கொண்டி ருக்கிறீர்கள்.
நீங்கள் அறிவீர்கள், நாம் மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கான
கன்றை (நாற்று) நட்டுக் கொண்டிருக் கிறோம். இது தெய்விக
மரத்தின் கன்று. அந்த மனிதர்களோ அந்த மரக்கன்று களை நட்டுக்
கொண்டிருக்கின்றனர். பாபா வந்து வித்தியாசத்தைச் சொல்கிறார்.
அவர் களுடைய திட்டம் என்ன, உங்களுடைய திட்டம் என்ன என்பதை
நீங்கள் காட்டவும் செய்கிறீர் கள். உலக மக்கள் தொகை பெருகுவதை
தடுப்பதற்காக அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டம்
போடுகின்றனர். பாபாவோ மிக நல்ல விசயம் சொல்கிறார் - அநேக
தர்மங்கள் விநாசமாகி விடும், தெய்விக தர்மத்தின் குடும்பம்
ஸ்தாபனை ஆகிவிடும். சத்யுகத்தில் ஒரே ஓர் ஆதி சநாதன தேவி-தேவதா
தர்மத்தின் குடும்பம் இருந்தது. அப்போது மற்ற அநேகக்
குடும்பங்கள் இல்லை. இச்சமயம் பாரதத்தில் பாருங்கள், எவ்வளவு
குடும்பங்கள்! குஜராத்திக் குடும்பம், சீக்கியக் குடும்பம்.........
உண்மையில் பாரதத்தில் ஒரு குடும்பம் மட்டுமே இருக்க வேண்டும்.
அநேகக் குடும்பங்கள் இருக்குமானால் சண்டை- சச்சரவுகளும்
நிச்சயமாக இருக்கும். பிறகு உள்நாட்டுப் போர் (சிவில் வார்) ஆகி
விடும். குடும்பத்திலும் கூட சிவில் வார் (சண்டை சச்சரவு) வந்து
விடும். எப்படி கிறிஸ்தவர்களுக்கு தங்களுக்குள் குடும்பம்
இருந்தால் அவர் களிலும் சகோதரர்கள் தங்களுக்குள் சந்திப்பதில்லை.
பிரிவினை ஆகி விடுகின்றது. தண்ணீரும் கூடப் பங்கிடப் படுகின்றது.
சீக்கிய தர்மத்தினர் தங்களுடைய தர்மத்தின் குடும்பத்திற்கு நாம்
அதிக சுகம் தர வேண்டும் என நினைக்கின்றனர். மோகம் செல்கிறது
இல்லையா? அதற்காகக் கஷ்டப் பட்டுக் கொண்டே உள்ளனர். கடைசி நேரம்
வரும் போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்குவார்கள்.
விநாசமோ நடைபெறத் தான் போகிறது. ஏராளமான பாம்ஸ் (வெடிகுண்டுகள்)
தயாரித்துக் கொண்டே இருக்கின்றனர். உலக மகா யுத்தம் வந்த போது
இரண்டு குண்டுகளைப் போட்டார்கள். இப்போதோ ஏராளமாகத்
தயாரித்துள்ளனர். புரிந்துக் கொள்ள வேண்டிய விசயம் இல்லையா? இது
அதே மகாபாரத யுத்தம் என்பதை நீங்கள் புரிய வைக்க வேண்டும்.
பெரிய-பெரிய மனிதர்களும் சொல்கின்றனர், சண்டையை நிறுத்த வில்லை
என்றால் முழு உலகத்தையும் நெருப்புப் பற்றிக் கொள்ளும் என்று.
நீங்கள் அறிவீர்கள், நெருப்போ பற்றிக் கொள்ளத் தான் போகிறது
என்று. பாபா ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்.
காணாமல் போன தேவதா தர்மத்தை மீண்டும் தந்தை ஸ்தாபனை செய்கிறார்.
இப்போது கலியுகம், இதன் பிறகு சத்யுகம் வர வேண்டும். இப்போது
கலியுக விநாசத்திற்காக மகாபாரத யுத்தம் உள்ளது.. இவையனைத்
தையும் நன்றாக தாரணை செய்து புரிய வைக்க வேண்டும். ஏனென்றால்
மனிதர்கள் அசுர சம்பிரதாயத்தினர். அதனால் எச்சரிக்கை யாக
இருக்க வேண்டும். கல்பத்திற்கு முன் என்ன விக்னங்கள் ஏற்பட்டனவோ,
அவை நிச்சயமாக ஏற்படும். இது உருவாக்கப்பட்ட ஒரு நாடகம். நாம்
இதில் கட்டுப் பட்டிருக் கிறோம். நினைவு யாத்திரையை ஒரு போதும்
மறக்கக் கூடாது. ஒரு பாடல் உள்ளது இல்லையா-இரவு நேரப் பயணிகளே
களைத்துப் போகக் கூடாது........... இதன் அர்த்தத்தை யாராலும்
புரிந்து கொள்ள முடியாது. இரவு முடிந்து பகல் வரப் போகிறது.
அரைக்கல்பம் முடிவடைந்தது. இப்போது சுகம் ஆரம்ப மாகும். பாபா
மன்மனாபவ என்பதன் அர்த்தத்தையும் புரிய வைத்துள்ளார். கீதையில்
கிருஷ்ணரின் பெயரை மட்டும் போட்டு விட்டதால் அந்த சக்தி
இருக்கவில்லை. இப்போது நாம் மனிதர்கள் அனைவருக்கும் நன்மை
செய்து கொண்டிருக் கிறோம். யார் கல்யாண்காரி ஆகிறார்களோ,
அவர்களுக்கு ஆஸ்தி கிடைக்கும். நினைவு யாத்திரை இல்லாமல் நன்மை
நடைபெற முடியாது. இச்சமயம் அனைவரும் விபரீத புத்தி உள்ளவர்களாக
இருக்கின்றனர். பரமாத்மா சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர்.
அவர் எல்லையற்ற தந்தை என்பதை நீங்கள் புரிய வைக்க வேண்டும்.
எல்லையற்ற தந்தையிடம் இருந்து தான் பாரதவாசிகளுக்கு எல்லையற்ற
ஆஸ்தி கிடைக்கிறது. பாரதவாசிகள் தான் 84 பிறவி
எடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்கள் நடைமுறையில்
பார்க்கிறீர்கள். ஞானத்தையோ நீங்கள் கேட்டுக் கொண்டே தான்
இருக்கிறீர்கள். நாளுக்கு நாள் உங்களிடம் அநேகர்
புதிது-புதிதாக வந்து கொண்டே இருப்பார்கள். இப்போதே
பெரிய-பெரிய மனிதர்கள் வந்து விட்டால் பிறகு தாமதமாகாது. உடனே
சப்தம் பரவி விடும். பேரிரைச்சல் எழுந்து விடும். அதனால் யுக்தி
யோடு மெது-மெதுவாகச் செல்ல வேண்டும். இது குப்தமான ஞானம்.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.
பக்தியில் உள்ளது துக்கம், ஞானத்தில் இருப்பது சுகம். இராவணனோடு
உங்களது யுத்தம் எப்படி நடைபெறுகிறது என்பதை நீங்கள் தான்
அறிவீர்கள். வேறு யாரும் தெரிந்து கொள்ள முடியாது. பகவான்
சொல்கிறார், தமோபிர தானத்தில் இருந்து சதோபிரதானம் ஆக
வேண்டுமானால் என்னை நினைவு செய்யுங்கள். அப்போது பாவங்கள்
அழிந்து விடும். தூய்மை அடைந்தீர்களானால் உடன் அழைத்துச்
செல்வேன். முக்தியோ அனைவருக்குமே கிடைக்க வேண்டும். அனைவரும்
இராவண இராஜ்யத்திலிருந்து விடுபட்டு விடுவார்கள். நீங்கள்
சொல்கிறீர்கள், சிவசக்திகளாகிய பிரம்மா குமார்-குமாரிகள் தான்
மிக உயர்ந்த ஓர் உலகை பரமபிதா பரமாத்மாவின் ஸ்ரீமத் படி ஸ்தாபனை
செய்வார்கள் - கல்பத்திற்கு முன் போல். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் உயர்ந்த உலகம் இருந்தது. இதை புத்தியில் பதிய வைக்க
வேண்டும். முக்கிய மான பாயின்ட்டுகள் எப்போது புத்தியில் தாரணை
ஆகிறதோ, அப்போது நினைவு யாத்திரையில் இருப்பீர்கள். சிலர்
நினைக்கின்றனர், இன்னும் நேரம் இருக்கிறது, கடைசியில்
புருஷார்த்தம் செய்து கொள்ளலாம். ஆனால் மரணத்திற்காக நியமம்
என்று எதுவும் கிடையாது. நாளையே இறந்து போனால்? அதனால்
கடைசியில் தாவி முன்னேறி விடலாம் என நினைக்காதீர்கள். இந்தச்
சிந்தனை இன்னும் அதிகமாகக் கீழே விழ வைத்து விடும். எவ்வளவு
முடியுமோ, புருஷார்த்தம் செய்து கொண்டே இருங்கள். ஸ்ரீமத் படி
ஒவ்வொருவரும் தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும். தன்னை
சோதித்துப் பார்க்க வேண்டும், நான் எந்தளவு பாபாவை நினைவு
செய்கிறேன், பாபாவின் சேவை எவ்வளவு செய்கிறேன்? ஆன்மிக இறை
சேவாதாரி நீங்கள் தான் இல்லையா? நீங்கள் ஆத்மாக்களை (துன்பத்திலிருந்து)
மீட்டெடுக்கிறீர்கள். ஆத்மா தூய்மையற்ற நிலையிலிருந்து
தூய்மையாக எப்படி ஆவது என்பதற்கான யுக்தி சொல்கிறார். கிருஷ்ணரை
நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாச மாகாது. அவர் இளவரசராக
இருந்தார், அவர் பயனை அனுபவித்தார். அவரை மகிமை செய்வதற்கும்
தேவை கிடையாது. தேவதைகளுக்கு என்ன மகிமை செய்வீர்கள்? ஆம்,
பிறந்த நாளையோ அனைவரும் கொண்டாடு கின்றனர். இது பொதுவான விஷயம்.
மற்றப்படி அவர் என்ன செய்தார், ஏணிப்படியிலோ இறங்கியே தான்
வருகிறார். நல்ல அல்லது கெட்ட மனிதர்களோ இருக்கவே செய்கின்றனர்.
ஒவ்வொருவரின் பாகமும் அவரவரு டையது. இது எல்லையற்ற விஷயம்.
முக்கிய கிளைகள் எண்ணிப் பார்க்கப் படுகின்றன. மற்றப்படி இலைகளோ
அநேகம் உள்ளன. அவற்றை எது வரை நீங்கள் எண்ணிக் கொண்டே
இருப்பீர்கள? பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்,
குழந்தைகளே, முயற்சி செய்யுங்கள், அனைவருக்கும் பாபாவின்
அறிமுகம் கொடுங்கள், அப்போது பாபாவிடம் புத்தியோகம் இணைந்து
விடும் என்று. பாபா சொல்கிறார்- அனை வருக்கும்
சொல்லுங்கள்-தூய்மை அடைந்துவிட்டால் முக்திதாம் சென்று
விடுவீர்கள். உலகத்திற்குத் தெரியாது, மகாபாரத யுத்தத்தினால்
என்ன ஆகும் என்று. இந்த யக்ஞம் படைக்கப் பட்டுள்ளது, ஏனென்றால்
புது உலகம் வேண்டும். நமது யக்ஞம் முடிவடையுமானால் அனைத்தும்
இந்த யக்ஞத்தில் ஸ்வாஹா ஆகி விடும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உண்மையிலும் உண்மையான இறைவனின் உதவியாளர் ஆகி அனைத்து
ஆத்மாக்களையும் நரகத்தி-ருந்து மீட்டெடுப்பதற்கான சேவை செய்ய
வேண்டும். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். அனைவருக்கும்
தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும்.
2) மிக-மிக அன்பான பொருளை (தந்தை) அன்போடு நினைவு செய்ய
வேண்டும். ஏற்கனவே உருவாக்கட்டுள்ள டிராமாவின் மீது உறுதியாக
இருக்க வேண்டும். தடைகளினால் பயப்படக் கூடாது.
வரதானம்:
மன்மனாபவ என்ற விதியின் மூலம் மனதின் ரசனையின் ஸ்திதியை அனுபவம்
செய்கிற மற்றும் செய்விக்கக் கூடிய சர்வ பந்தனங்களில் இருந்தும்
விடுபட்டவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் இரும்புச் சங்கிலிகள் மற்றும் நுட்பமான
கயிறுகளின் பந்தனங்களை விட்டு பந்தன்முக்த் ஸ்திதியில்
இருக்கிறார்களோ, அவர்கள் கலியுகத்தின், ஸ்தூல வஸ்துகளின் ரசனை
மற்றும் மனதின் பற்றுதலில் இருந்து விடுபட்டு விடுகின்றனர்.
அவர்களை தேக-அபிமானம் அல்லது தேகத்தின் பழைய உலகின் எந்த ஒரு
பொருளும் ஒரு சிறிதும் தன் பக்கம் கவர்ந்து இழுப்பதில்லை
என்றால், அப்போது அலௌகிக அதிந்திரிய சுகம் அல்லது மனதின்
ரசனையினுடைய ஸ்திதி அனுபவமாகின்றது. இதற்காக நிரந்தர மன்மனாபவ
ஸ்திதியில் இருக்க வேண்டும்.
சுலோகன்:
எந்த சேவையில் அனைவரின் ஆசிர்வாதங்களோடு கூடவே
குஷியின் அனுபவம் ஆகின்றதோ, அதுவே உண்மையான சேவையாகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது உங்களின் வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்.
உலகத்திலும் தானத்தைப் புண்ணியம் என நினைக்கிறார்கள். வள்ளலின்
குழந்தைகள் நீங்கள் சதா தானம் செய்யும் புண்ணிய ஆத்மாக்கள்.
நீங்கள் எந்த ஓர் ஆத்மாவின் மூலமாகவும் அல்பகால பிராப்தி
பெறுவதற்கான விருப்பம் வைக்க முடியாது. இந்த ஆத்மா ஏதேனும்
கொடுத்தால் நான் கொடுப்பேன், அல்லது அவரும் ஏதாவது செய்தால்
நானும் செய்வேன் என்பது போல் எல்லைக்குட்பட்ட ஆசைகள் வைக்கக்
கூடாது. வள்ளலின் குழந்தைகள் ஆகி, அனைவருக்காகவும் அன்பு,
சகயோகம், சக்தி கொடுக்கும் புண்ணிய ஆத்மா ஆகுங்கள்.