10-06-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! சிவபாபா மற்றும்
பிரம்மா பாபா இருவரும் கூறும் வழிமுறை பிரசித்தமானது. நீங்கள்
இருவருடைய வழிப்படியும் நடந்து தங்களுக்கு நன்மை செய்துக்
கொள்ள வேண்டும்.
கேள்வி:
முதல் நம்பர் டிரஸ்டி யார்
மற்றும் எப்படி?
பதில்:
சிவபாபா முதல் நம்பர் டிரஸ்டி
ஆவார். அவரிடம் முற்றிலும் பற்று கிடையாது. பக்தி மார்க்கத்தில்
கூட நீங்கள் அவர் பெயரில் என்னவெல்லாம் தான புண்ணியம்
செய்கிறீர் களோ அவை எல்லாமே இன்ஷ்யூர் ஆகி விடுகிறது. அதனுடைய
பலன் அடுத்த பிறவி யில் கிடைக்கிறது. இப்பொழுது கூட யார்
தந்தையின் பெயரில் தங்களுடைய அனைத்தையும் இன்ஷ்யூர்
செய்கிறார்களோ அதற்கான முழு கைமாறு தந்தை அளிக்கிறார். ஏனெனில்
பாபா கூறுகிறார் - சுயம் நான் சுகத்தை அனுபவிப்பது இல்லை. நான்
உங்களுடையதை பெற்று என்ன செய்யப் போகிறேன்!
பாடல்:
வாசலுக்கு வந்துள்ளோம் சபதம்
எடுத்து.. .. .. ..
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான அருமையான குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள்.
யார் தந்தையினுடையவராக ஆகிறார்களோ, அவர்களே குழந்தைகள் என்று
அழைக்கப்படுகின்றனர். இது கடைசி மறு வாழ்வுடைய பிறவி என்று
தந்தை புரிய வைத்துள்ளார். உயிருடனிருந்து கொண்டே
தந்தையினுடையவராக வேண்டும். ஸ்ரீமத் பாடப்பட்டுள்ளது என்பதையோ
குழந்தை கள் அறிந்துள்ளார்கள். ஸ்ரீமத் பகவானுவாச் இப்படி
கீதையில் கிருஷ்ணருடைய பெயரை பேட்டு விட்டுள்ளார்கள். ஆனால் அது
சிவபாபா ஆவார். அதற்குப் பிறகு பிரம்மா பின் கிருஷ்ணர். ஸ்ரீமத்
கிருஷ்ணரினுடையது என்று கூற மாட்டார்கள். சிறந்ததிலும்
சிறந்தவர் நமது தந்தை ஆவார். பதீதபாவனர் என்று கிருஷ்ணர் அல்லது
ராதைக்குக் கூற மாட்டார்கள். அவர்கள் தெய்வீக குணங்கள் உடைய
மனிதர்கள் ஆவார்கள். மனிதர்களை பதீத பாவனர் என்று கூறப்பட
மாட்டாது. சத்யுகத்தில் பதீத பாவனரே வாருங்கள் என்று
கூறமாட்டார்கள். பதீதர்களை பாவன மாக்குபவர் ஒரே ஒரு தந்தை ஆவார்.
அவருடைய ஸ்ரீமத்படி நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
பிரஜாபிதா பிரம்மாவின் வழி பிரசித்தமானது. ஸ்ரீமத் கூட
பிரசித்தமானதாகும். ஆனால் அதில் தந்தைக்குப் பதிலாக கிருஷ்ணரின்
பெயரை போட்டு விட்டு தவறு செய்து விட்டுள்ளார்கள். எல்லா தர்மத்
தினருக்கும் தந்தை ஒருவரே ஆவார். கிருஷ்ணரையோ எல்லோரும் ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள். கிறித்தவர்கள் கிறிஸ்துவை தந்தை என்று ஏற்று
கொள்வார்கள், கிருஷ்ணரை அல்ல. ஏனெனில் கிறித்தவர்கள்
கிறிஸ்துவின் முக வம்சாவளி ஆவார்கள். சிவபாபா வந்து உங்களை
தன்னுடையவராக ஆக்குகிறார். தலையை உள்ளங்கையில் வைத்து (உறுதிமொழி
கூறி) தந்தை யினுடையவராக ஆகி உள்ளோம் என்று கூறுகிறார்கள்.
அவரது டைரக்ஷ்ன் படி நடக்க வேண்டி யுள்ளது. நீங்கள் தந்தைக்கு
உங்களுடைய வழியைக் கூற வேண்டிய அவசியம் இருப்பதில்லை. சுயம்
அவரே வழி அளிப்பவராவார். இவர்களோ எல்லோரும் குழந்தைகள் ஆவார்கள்.
சிவபாபா பிரசித்த மானவர் ஆவார். அவர் என்ன வழி கூறுவாரோ, என்ன
செய்வாரோ அது சரியாகவே இருக்கும். இந்த பிரம்மாவிற்குக் கூட
இப்படி செய் என்று வழி கூறுவார். உங்களுடைய சம்மந்தமே
சிவபாபாவுடன் உள்ளது. யாருடைய அவகுணத் தையும் பார்க்கக் கூடாது.
ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். சிவபாபாவோ நிராகாரமானவர் ஆவார்.
இது அவருடைய வீடு கிடையாது. நீங்கள் இங்கு பழைய வீட்டில்
இருக்கிறீர்கள். பிறகு சொர்க்கத்திற்குப் போய் உங்கள் வீட்டில்
இருப்பீர்கள். நானோ இருக்க மாட்டேன் என்று சிவபாபா கூறுகிறார்.
இச்சமயம் சிறிது நேரத்திற் காக இங்கு வருகிறேன்.
நீங்கள் உண்மையிலும் உண்மையான மீட்புப் படையாவீர்கள். சுப்ரீம்
ஆத்மா (தந்தை) நாடகத் திட்டப்படி முந்தைய கல்பத்தைப் போல
டைரக்ஷ்ன் அளித்துக் கொண்டிருக்கிறார். கல்ப கல்பமாக என்ன
டைரக்ஷ்ன் அளித்திருப்பாரோ அதையே அளிக்கிறார். இரவுப் பகலாக
ஆழமான விஷயங் களை கூறிக் கொண்டே இருக்கிறார். புதியவர்கள்
யாரும் இதைப் புரிந்துக் கொள்ள முடியாது. ஒரு சிலர் 35-40
வருடங்களாக இருக்கிறார்கள் என்றாலும் கூட நிறைய பேர் இந்த
ஆழமான விஷயங்களைப் புரிந்து கொள்வதில்லை. பாபாவோ தினமும்
புதியதாகக் கூறிக் கொண்டே இருக்கிறார். கராச்சியிலிருந்து
ஆரம்பமாகி முரளி வெளிப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. முதலில் பாபா
முரளி நடத்தி கொண்டிருக்கவில்லை. இரவு 2.00 மணிக்கு எழுந்து
10-15 பக்கங்கள் எழுதுவார். பாபா எழுதியதை வைத்து
கொண்டிருந்தார். பிறகு அவற்றினுடைய நகல்கள் எடுக்கப் படும்.
பக்தி மார்க்கத்தில் சாஸ்திரங்களுடைய காகிதங்களைப்
பாதுகாக்கிறார்கள். நாளுக்கு நாள் பெரிய பெரிய புத்தகங்களை
தயார் செய்து வருகிறார்கள். எவ்வளவு வாழ்க்கை வரலாறை
தயாரித்துக் கொண்டே போகிறார்கள். அதை பிறகு படித்து வைத்துக்
கொள்கிறார்கள். நீங்களோ முரளியைப் படித்து வீசி விட்டு
விடுகிறீர்கள். இல்லையென்றால் இந்த மகாவாக்கியங்களை நிரந்தரமாக
வைத்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இவை எல்லாமே அழிந்து போய்
விடும் என்று அறிந்துள்ளீர்கள். என்னென்ன படங்களையெல்லாம்
நீங்கள் தயாரிக்கிறீர்களோ அது சிறிது காலத்திற்கு மட்டுமே ஆகும்.
பிறகு இவை எல்லாமே புதைந்து போய் விடும். பிறகு அங்கு
சாஸ்திரங்களோ, படங்களோ எதுவும் இருக்காது. பிறகு இப்பொழுது
எதெல்லாம் நடந்து கொண்டி ருக்கிறதோ அவை கல்பத்திற்குப் பிறகும்
நடக்கும். சாஸ்திரங்கள் பிறகு துவாபரத்திலிருந்து ஆரம்பமாகும்.
கிரந்தங்கள் கூட முன்பெல்லாம் கையால் எழுதப்பட்டதாக மிகவும்
சிறியதாக இருந்தது. இப்பொழுது பெரியதாக தயாரித் துள்ளார்கள்.
நாளுக்கு நாள் பெரியதாக செய்துக் கொண்டே போவார்கள்.
இல்லையென்றால் சிவபாபாவினுடைய வாழ்க்கை சரித்திரம் எவ்வளவு
எழுத வேண்டும். இப்பொழுது பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை
சரித்திரத்தை நாம் அறிந்துள் ளோம் என்று குழந்தைகளாகிய நீங்கள்
கூறுகிறீர்கள். நான் பக்தி மார்க்கத்தில் என்ன செய்கிறேன்
என்பதை தந்தை வந்து புரிய வைக்கிறார். பக்தி மார்க்கத்தில் கூட
இன்ஷ்யூரன்ஸ் செய்கிறேன். இறைவனின் பெயரில் தான புண்ணியம்
செய்துள்ளார் என்று கூறுவார்கள். ஆனால் இறைவன் பெரிய வீட்டில்
பிறவி எடுக்க வைத்துள்ளார் என்பார்கள். பக்தி மார்க்கத்தில்
தர்மாத்மாக்கள் நிறைய இருக்கிறார்கள். இறைவன் பெயரில்,
ஸ்ரீகிருஷ்ணர் பெயரில் தான புண்ணியம் செய் கிறார்கள். ஆகவே தான்
தந்தை புரிய வைக்கிறார் - நான் குழந்தைகளுக்கு அடுத்த பிறவியில்
அல்ப காலத்திற்கான பலன் அளிக்க வந்துள்ளேன். நல்லதோ தீயதோ பலன்
கிடைத்தே விடுகிறது இல்லையா? எவ்வளவு இன்ஷ்யூரன்ஸ் ஆகியது. யார்
எப்படி கர்மம் செய்கிறார்களோ அதற்கேற்ற பலன் கிடைக்கிறது. மாயை
தவறான காரியம் செய் விக்கிறது. அதனால் நீங்கள் துக்கம்
அடைகிறீர்கள். இப்பொழுது நான் உங்களுக்கு எப்பேர்ப்பட்ட
கர்மத்தைக் கற்பிக்கிறேன் என்றால் உங்களுக்கு ஒரு பொழுதும்
துக்கம் ஏற்படாது. மேலும் மாயை கூட அங்கு இருக்காது. மற்றபடி
இருப்பது பதவி. யார் எவ்வளவு இன்ஷ்யூர் செய்கிறார்களோ,
அதற்கேற்ப பதவி கிடைக்கும். சிவபாபா கூட டிரஸ்டி ஆவார் அல்லவா?
முதல் நம்பர் டிரஸ்டி ஆவார். மற்றவர்களுக்கு சொத்தின் மீது
பற்று இருக்கும். ஒரு சில டிரஸ்டிகளோ ஒருவருடைய சொத்துக்களையே
அழித்து விடு கிறார்கள். தந்தையோ பாருங்கள், எப்பேர்ப்பட்ட
டிரஸ்டியாக இருக்கிறார். இவை எல்லாமே குழந்தைகளுக்காக என்று
கூறுகிறார். உங்களுடைய முழு சம்மந்தமும் சிவபாபா விடம்
இருக்கிறது. நான் உண்மையான டிரஸ்டி ஆவேன் என்று தந்தை
கூறுகிறார். சுயம் நான் எந்தவித சுகமும் எடுப்பதில்லை.
குழந்தைகளுக்கு முழு ராஜதானியைக் கொடுக்கிறேன். லௌகீக தந்தை
கூட குழந்தைகளுக்கு எல்லாமே ஆஸ்தியாக கொடுத்து விட்டுப்
போகிறார். நானோ சொர்க்கத்தில் எதுவுமே பெறுவதில்லை.
உங்களுக்குத் தான் எல்லாமே கொடுத்து விடுகிறேன். எனவே
உங்களுடைய சம்பந்தம் முழுமையாக சிவபாபாவுடன் உள்ளது. நான் கூட
முழுமையாக இன்ஷ்யூர் செய்து விட்டேன் என்று இந்த (பிரம்மா) பாபா
கூறுகிறார். உடல், மனம், பொருள் எல்லாமே தந்தையின் சேவையில்
உள்ளது. சிந்தியில் ஒரு பழமொழி உள்ளது - கை யாருக்கு இப்படி (வள்ளல்
ரூபத்தில்) இருக்கிறதோ அவர்கள் முதல் வரிசையில் சேர்ந்து
விடுவார்கள். தந்தையிடம் எல்லாமே இன்ஷ்யூர் செய்துவிட வேண்டும்.
இரண்டு பிடி அரிசி கொடுத்து விட்டதால் மாளிகை கிடைத்து விட்டது.
இப்பொழுது பாருங்கள் வீடு கட்டப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு ரூபாய்
அனுப்பினார் என்னுடைய செங்கல் கூட உபயோகத்தில் வர வேண்டும்
என்று. தந்தை எழுதினார் - உங்களுக்கு எல்லோரையும் விட நல்ல
மாளிகை கிடைக்கும். ஏனெனில் நீங்கள் ஏழை ஆவீர்கள். நான்
இருப்பதே ஏழைப்பங்காளனாக. ஏழையின் ஒரு ரூபாயும் பணக்காரரின்
பத்தாயிரம் ரூபாயும் சமம். இருவருக்குமே ஒரே மாதிரி பதவி
கிடைத்து விடுகிறது. பணக்காரர்கள் வருவது மிகவும் அரிது.
எல்லோரையும் விட கன்னியர்களோ மிகவும் சுதந்திர மானவர்கள்!
பாருங்கள் மம்மா முதல் நம்பரில் சென்றார். அவரிடம் எதுவுமே
இருக்கவில்லை. ஏழை வீட்டி-ருந்து வந்தார். பிறகும் முதல்
நம்பரில் சென்று விட்டார். இவர் எல்லாமே கொடுத்து விட்டார்.
பிறகும் முதலில் இலட்சுமி பின்னர் நாராயணர். எவ்வளவு அதிசயமான
விளையாட்டு இது. எனவே ஒரு பொழுதும் எந்த விஷயத்திலும் சந்தேகம்
இருக்கக் கூடாது. பாப்தாதா ஏதேனும் குறைந்தவரா என்ன? சிறிதளவு
கூட இதில் சந்தேகம் வரக் கூடாது. மிகவும் இனிமை யானவராகவும் ஆக
வேண்டும். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் பெற வேண்டும். இல்லை
யென்றால் மாயை மிகவும் தீமை செய்வித்து விடுகிறது.
குழந்தைகளுக்கு எவ்வளவு டைரக்ஷன் கொடுக்க வேண்டி இருக்கிறது.
முழுமையான சமாச்சாரம் எழுதுங்கள் என்று பாபா கூறுகிறார். பாபா
எல்லா வகையிலும் பாதுகாப்பார். பாபாவிற்கு மிகவும் சிந்தனை
இருக்கிறது. எப்படியாவது இந்த குழந்தை முன்னேறி விட வேண்டும்.
படிப்பின் மீது முழுமையான கவனம் தேவை. நாம் மிகவுமே
அன்பிற்குரிய இறை தந்தையின் மாணவர்கள் ஆவோம். பகவானுவாச்
என்றும் எழுதப் பட்டுள்ளது. ஆனால் கிருஷ்ணரின் பெயரை போட்டு
விட்டுள்ளார்கள். கிருஷ்ணர் கூட எல்லா மனிதர்களிலும்
உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருக்கிறார் அல்லவா? முதல் இளவரசர்
ஆவார். கிருஷ்ணருடைய பெயர் கொடுக்கிறார்கள். நாராயணரினுடையது
ஏன் இல்லை. கிருஷ்ணர் பாலகன் ஆவார். சிறு வயதில் பாலகன்
சதோபிரதானமாக இருப்பார். பிறகு குழந்தைப் பருவத் திலிருந்து
இளைஞர், பிறகு முதுமை நிலை வருகிறது. குழந்தைகளுக்கு மகிமை
செய்கிறார்கள். ஏனெனில், தூய்மையாக இருக்கிறார்கள் அல்லவா?
பாலகன் பிரம்ம ஞானிக்கு சமானம் என்று கூறுகிறார்கள். குழந்தைகள்
மூலமாக எந்த பாவமும் ஆவதில்லை. எனவே கிருஷ்ணர் கூட சிறிய
குழந்தையான காரணத்தால் அவருக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்.
இருப்பினும் கிருஷ்ணரை துவாபர யுகத்தில் காண்பித்து
விட்டுள்ளார்கள். இவை எல்லாமே தந்தை வந்து புரிய வைக்கிறார்.
பிராமணர்களாகிய உங்களை தவிர உலகத்தில் இந்த எல்லா விஷயங்கள்
பற்றி தெரிந்தவர்கள் யாருமே இருக்க முடியாது. பிராமணர்கள்
உத்தமமானவர்கள் ஆவார்கள். பிராமணர்களாகிய நீங்கள் ஈசுவரிய
குழந்தைகள் ஆவீர்கள். சத்யுகத்தில் ஈசுவரிய குழந்தைகள் என்று
கூற மாட்டார்கள். இறைவனிடமிருந்து அவசியம் சொர்க்கத்தின்
பிராப்தி ஆகும். இது உங்களுடைய மிகவுமே அரிய விலை மதிப்பிட
முடியாத வாழ்க்கையாகும். எல்லோருக் குமே இது அமைய முடியாது.
இந்த நாடகம் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய கல்பத்தில்
யார் படித்தார்களோ அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பகவான் அவசியம் பகவான் பகவதியை உருவாக்கினார். ஆனால் பகவான்
பகவதி என்று கூற முடியாது. கடவுள் ஒருவரே. நிராகாரமானவருக்கு
மகிமை உள்ளது. சாகாரமானவருக்கு மகிமை ஆகிறதா என்ன? இந்த
இலட்சுமி நாராயணரும் கூட நிராகார மானவர்களை தான் இது போல
ஆக்கினார். இப்பொழுது இராஜயோகத்தைக் கற்று கொண்டிருக்கிறார்கள்.
இராஜ்யம் ஸ்தாபனை ஆகியது. எனவே அந்த நேரத்தில் விநாசம் கூட
ஆகியது. தந்தை அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி கொடுப்பார்.
இப்பொழுதோ இருப்பது சங்கமத்தின் விஷயமாகும். சிவபாபா
வரும்பொழுது நாடகம் முடிவடை கிறது. பிறகு கிருஷ்ணரின் பிறவி
ஆகிறது. மனிதர்களோ பாவம் குழம்பி விட்டுள்ளார்கள். அதனால் தான்
தந்தை வந்து புரிய வைக்கிறார். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம்
அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைக் கூறுகிறார். இப்பொழுது
நீங்கள் மாஸ்டர் நாலேஜ்ஃபுல் ஆக ஆகி யுள்ளீர்கள். ஆத்மாவிற்குத்
தான் மகிமை உள்ளது. ஞானக்கடல், அன்புக்கடல், பேரானந்தக்கடல் இது
தந்தையின் மகிமையாகும். தந்தை கூறுகிறார்: இந்த பாரதமோ
எல்லாவற்றையும் விட பெரிய தீர்த்த ஸ்தலம் ஆகும். ஆனால்
கிருஷ்ணரின் பெயரைப் போட்டதால் எல்லா மகிமை யையும் இல்லாமல்
செய்து விட்டுள்ளார்கள். இல்லையென்றால் எல்லோருமே சிவனுடைய
கோவிலில் மலர்களை படைத்திருப்பார்கள். அனைவருக்கும் சத்கதி
அளிக்கும் வள்ளல் ஒருவர் ஆவார். அரைக் கல்பம் நீங்கள்
பிராப்தியை அனுபவித்து பிறகு கீழே வருகிறீர்கள். எல்லோருமே
தமோபிரதானமாக ஆகவே வேண்டி உள்ளது. இப்பொழுது தந்தை கூறுகிறார்
- குழந்தைகளாகிய உங்களுக்காக புதிய உலகத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறேன். அதில் சுயம் அவர் வருவதில்லை. எல்லாமே
குழந்தைகளாகிய உங்களுக்காக உள்ளது. தெளிவான விஷயமாகும்.
மனிதர்களோ தங்களுக் காகச் செய்கிறார்கள். பிறகு கூறுகிறார்கள்,
நாங்கள் பலன் எதிர்பாராமல் செய்கிறோம் என்று. ஆனால் பலன்
எதிர்பாராமல் யாரும் செய்ய முடியாது. ஒவ்வொரு செயலுக்கும் பலன்
அவசியம் கிடைக்கிறது. நானோ குழந்தைகளாகிய உங்களுக்கு அவினாஷி
ஞான ரத்தினங்களைக் கொடுக்கிறேன். உங்களுக்காகவே தான் வைகுண்டம்
எடுத்து வந்துள்ளேன். குழந்தைகளுக்கு சாம்ராஜ்யத்தின் நினைவுச்
சின்னத்தை அளிக்கிறார். எனவே அதைப் பெறு வதற்கு அவ்வாறு
தகுதியுடையவராக ஆக வேண்டும். சொர்க்கத்தின் அதிபதியாக வேண்டும்.
உள்ளங்கையில் சொர்க்கம் கிடைக்கிறது. ஒரு நொடியில் ஜீவன் முக்தி
அல்லது ஒரு நொடியில் அரசாட்சி. திவ்ய திருஷ்டி அளிக்கும் வள்ளல்
சிவபாபா ஆவார். ஒரு நொடியில் வைகுண்டத்திற்கு அழைத்துச்
செல்கிறார். இந்த பாபாவின் கையில் எதுவும் சாவி கிடையாது. நான்
குழந்தை களாகிய உங்களுக்கு இராஜ்யத்தை அளிக்கிறேன் என்று தந்தை
கூறுகிறார். நான் ஆட்சி புரியவ தில்லை. பிறகு நீங்கள் பக்தி
மார்க்கத்தில் போகும் பொழுது உங்களை திவ்ய திருஷ்டியினால்
மகிழ்விக்க வேண்டி வரும். எவ்வளவு நல்ல முறையில் புரிய
வைக்கிறார். அப்பேர்ப்பட்ட பாபா கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கம
யுகத்தில் ஒரு முறை தான் வருகிறார். அமைந்தது அமைக்கப்பட்டது
மீண்டும் அமைந்து கொண்டிருக்கிறது. இனி அமைய வேண்டியது எதுவு
மில்லை...... எதெல்லாம் நடக்கிறதோ நாடகத்தில் பதிவாகி உள்ளது.
அதை சாட்சியாக இருந்து (பார்வையாளராக) பாருங்கள். பாபா மிகவும்
நல்ல முறையில் புரிய வைக்கிறார். குழந்தைகளே நான் உங்களுக்கு
இன்ஷ்யூர் செய்யும் மிகப் பெரிய இன்ஷ்யூரன்ஸ் அதிபர் ஆவேன்.
உங்களுடைய ஒரு பைசாவைக் கூட வீணாக்கு வதில்லை. சோழியிலிருந்து
உங்களை வைரத் திற்குச் சமானமாக ஆக்குகிறேன். இவை எல்லாவற்றையும்
சிவபாபா இவர் மூலமாகச் செய் கிறார். செய்பவரும் செய்விப்பவரும்
ஆவார். நிராகாரமானவர், நிரகங்காரி ஆவார். காட்ஃபாதர் எப்படி
வந்து கற்பிக்கிறார். பாதங்களை வணங்குங்கள் என்றெல்லாம் கூறுவ
தில்லை. தந்தை கீழ்படிதலுள்ள சேவகன் ஆவார். யாரை அதிபதியாக
ஆக்கினேனோ அவர்கள் சுகத்தை அனுபவித்து அனுபவித்து இப்பொழுது
துக்கமுடையவர்களாக ஆகி விட்டுள்ளார்கள். சுகமும் நிறைய
கிடைக்கிறது. இவ்வளவு சுகம் வேறு எந்த தர்மத்திற்கும்
கிடைப்பதில்லை. பாரதவாசி களுக்கு மட்டும் கிடைக்கிறது,
மற்றவர்கள் என்ன செய்தார்கள் (கிடைக்காகமல் இருப்பதற்கு) என்று
கூற முடியாது. அட இத்தனை ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள்.
எல்லோருமோ வர முடியாது. இந்த நாடகம் அமைக்கப் பட்டுள்ளது.
பாரதத்தில் தான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. பகவான்
வந்து சகஜ இராஜ யோகத்தைக் கற்பித்திருந்தார். நான் மறுபடியும்
வந்து விட்டுள்ளேன் என்று தந்தை கூறுகிறார். 84 பிறவிகளின்
பாகம் ஏற்று நடித்தோம். இப்பொழுது மீண்டும் நாம் வீட்டிற்குப்
போகிறோம் என்பதை நீங்களும் அறிந்துள்ளீ ர்கள். இது மிகவும்
பழைய சட்டையாக ஆகி விட்டுள்ளது (பாம்பின் உதாரணம்).
சந்நியாசிகள் பிறகு கூறுகிறார்கள் - ஆத்மாவே பரமாத்மாவுடன்
கலந்து விடுகிறது. அப்பேர்ப்பட்ட நிலையில் இருந்து இருந்து
பிறகு சரீரத்தை விட்டு விடுகிறார்கள். ஆனால் பிரம்மத்தில்
யாரும் கலந்து விடுவதில்லை. அவர்களிலும் கூட ஒரு சிலர் மிகவும்
தீவிரமானவர்களாக இருப்பார்கள். அமைதி யாக அமர்ந்து சரீரத்தை
விட்டு சென்று விடும் பொழுது அந்த வாயுமண்டலத்தில் 2-3 நாட்கள்
வரை ஆழ்ந்த அமைதி நிலவி விடுகிறது. எனவே இந்த பழைய சரீரத்தை
விட்டு விட்டு பாபாவிடம் செல்கிறோம் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பிரம்மம் என்பதோ பாபா கிடையாது. இது
அப்பாவிகளாகிய அவர்களுடைய பிரமையாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் சாட்சியாக இருந்து
பார்க்க வேண்டும். ஏனெனில் அமைந்தது அமைக்கப்பட்டது மீண்டும்
அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பொழுதும் எந்த
விஷயத்திலும் சந்தேகம் எழுப்பக் கூடாது.
2. தந்தை ஆயுள் காப்பீட்டு (இன்சூரன்ஸ்) மேக்னேட் ஆவார். எனவே
உடல், மனம், பொருளை தந்தையின் சேவையில் பயனுள்ளதாக ஆக்கி
தங்களுடைய வருங்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். தந்தையிடம்
முழுமையான தொடர்பு வைக்க வேண்டும். தந்தைக்கு முழுமையான
சமாச்சாரம் கொடுக்க வேண்டும்.
வரதானம்:
மர்ஜீவா ஸ்திதி மூலம் தைரியம் மற்றும் உற்சாகத்தின்
அழியாத முத்திரை பதிக்கக் கூடிய பிராப்தி சம்பன்னம் ஆகுக.
யார் பிராப்திகளால் நிரம்பப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களின்
ஒவ்வொரு நடத்தை, கண்கள் மூலம் ,ஊக்கம்-உற்சாகம் காணப்படும்.
ஆனால் தைரியம் மற்றும் உற்சாகத்தின் அவிநாசி முத்திரை
பதிப்பதற்காகத் தனது கடந்த காலத்தின் அல்லது ஈஸ்வரிய
மரியாதைகளுக்கு விரோத மான சம்ஸ்காரங்கள், சுபாவங்கள்,
சங்கல்பங்கள் மற்றும் கர்மங்கள் னெஹீனென்ன உள்ளனவோ,
அவற்றிலிருந்து மர்ஜீவா ஆகுங்கள். உறுதிமொழி ரூப ஸ்விட்சை செட்
செய்து, நடைமுறையில் உறுதிமொழியின் படி நடந்து கொண்டே
செல்லுங்கள். தைரியத்துடன் கூடவே உற்சாகமும் இருக்குமானால்
பிராப்தியின் ஒளிப்பிரகாசம் தூரத்திலிருந்தே காணப்படும்.
சுலோகன்:
திருவிழா (மேளா) அல்லது குழப்பத்தில் (ஜமேலா)
டபுள் லைட்டாக இருப்பவரே தாரணா மூரத்தி ஆவார்.
அவ்யக்த சமிக்ஞை : எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்றால் தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
உங்களது ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு வார்த்தையிலும் விசேஷத்
தன்மை இருக்க வேண்டும். சதா சரள சுபாவம், சரள வார்த்தை, சரளத்
தன்மை நிறைந்த கர்மம் இருக்க வேண்டும். அந்த மாதிரி சரள
சொரூபமாக இருங்கள். சதா ஒருவரின் வழிப்படி ஒருவருடன் அனைத்து
சம்பந்தங்கள், ஒருவரிடம் அனைத்துப் பிராப்திகள், ஒருவரிடம்
ஏக்ரஸ் நிலையில் இருப்பதற்கான சகஜ அப்பியாசியாக இருங்கள். சதா
குஷியாக இருங்கள். குஷியின் கஜானாவைப் பகிர்ந்தளியுங் கள்.
குஷியின் அலைகளை அனைவருக்கும் பரவச் செய்யுங்கள். இதுவே
உண்மையான சேவையாகும்.