10-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! எப்படி தந்தை
அபகாரிகள் மீதும் உபகாரம் செய்கிறாரோ, அதே போல நீங்கள் கூட (ஃபாலோ
ஃபாதர்) தந்தையை பின்பற்றுங்கள். சுகம் அளிப்பவராக ஆகுங்கள்.
இந்தத் தேகத்தை மறந்துக் கொண்டேச் செல்லுங்கள்.
கேள்வி:
(தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடன்
இருப்பவர்களின் முக்கிய அடையாளங்கள் என்னவாக இருக்கும்.
பதில்:
(1) அவர்களுக்கு தங்களிடையே மிக
மிக ஆன்மீக அன்பு இருக்கும். (2) அவர்கள் ஒரு பொழுதும் ஒருவர்
மற்றவர்களின் குறைகளை வர்ணனை செய்ய மாட்டார்கள். (3) அவர்கள்
மிக மிக சுகம் அளிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். (4)
அவர்களுடைய மகிழ்ச்சி ஒரு பொழுதும் மறைந்து போகாது. எப்பொழுதும்
அளவற்ற குஷியில் இருப்பார்கள். (5) ஒரு பொழுதும் கருத்து
வேற்றுமையில் வர மாட்டார்கள். (6) ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதர
சகோதரிகள் ஆவோம், இந்த நினைவு மூலமாக குணத்தை கிரகிப்பவர்களாக
இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாருடைய குணங்கள் தான் தென்படும்.
அவர்கள் சுயம் தாங்களும் குணவான் ஆக இருப்பார்கள். மேலும்
மற்றவர்களையும் குணவான் ஆக ஆக்கு வார்கள். (7) அவர்களுக்கு ஒரு
தந்தையைத் தவிர வேறு யாரும் நினைவிற்கு வரமாட்டார்கள்.
ஓம் சாந்தி.
உயர்ந்ததிலும் உயர்ந்த எல்லையில்லாத தந்தைக்கு முன்னால் குழந்தை
களாகிய நீங்கள் அனைவரும் அமர்ந்துள்ளீர்கள். இப்பேர்ப்பட்ட
தந்தை கிடைத்துள்ளார், எனவே நீங்கள் எவ்வளவு பாக்கியசாலி
ஆவீர்கள். நீங்கள் ஞானக் கடலான தந்தையிடம் ஞான இரத்தினங் களால்
பையை நிரப்புவதற்காக, சம்பாதிப் பதற்காக தந்தையிடம்
வந்துள்ளீர்கள். தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய
உங்களை எவ்வளவு உயர அழைத்துச் செல்கிறார். தந்தையோ
குழந்தைகளாகிய உங்களை மட்டும் பார்க்கிறார். அவருக்கோ யாரை யும்
நினைவு செய்ய வேண்டியது இல்லை. இவருடைய (பிரம்மா) ஆத்மாவோ
தந்தையை நினைவு செய்ய வேண்டி உள்ளது. நாங்கள் இருவருமோ
குழந்தைகளாகிய உங்களை தான் பார்க்கிறோம் என்று தந்தை கூறுகிறார்.
ஆத்மாவாகிய நானோ சாட்சி (பார்வையாளர்) ஆகி பார்க்க வேண்டியது
இல்லை. ஆனால் தந்தையின் சேர்க்கையில் நான் கூட அவ்வாறே
பார்க்கிறேன். தந்தை கூடவோ இருக்கிறேன் அல்லவா? அவருடைய குழந்தை
ஆவேன். எனவே கூடவே இருந்து பார்க்கிறேன். நான் உலகிற்கு
எஜமானனாக ஆகி, நான் தான் இதை செய்வது போல திருஷ்டி கொடுக்கிறேன்.
தேகம் உற்பட அனைத்தையும் மறக்க வேண்டி உள்ளது. மற்றபடி தந்தை
மற்றும் குழந்தை இருவருமே ஒருவராக ஆகி விடுகிறோம். எனவே தந்தை
இனிமையான குழந்தைகளை நிறைய புருஷார்த்தம் (முயற்சி) செய்யுங்கள்
என்று புரிய வைக்கிறார். எப்படி தந்தை அபகாரிகள் மீதும் உபகாரம்
செய்கிறார். அதே போல நீங்களும் (ஃபாலோ ஃபாதர்) தந்தையை
பின்பற்றுங்கள். சுகம் அளிப்பவராக ஆகுங்கள். தங்களுக்குள் ஒரு
பொழுதும் சண்டை போடாதீர்கள். தங்களை ஆத்மா என்று உணர்ந்து இந்த
தேகத்தை மறந்து கொண்டே செல்லுங்கள். ஒரு தந்தையை தவிர வேறு
எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. இது கூட உயிருடன் இருந்தே
இறந்த நிலை ஆகும். இந்த உலகத்திலிருந்து நாம் இறந்து விட்டது
போல ஆகி விட்டோம். நாம் இறந்தால் உலகமே இறந்து விட்டது போல
என்று கூறவும் செய்கிறார்கள். இங்கோ நீங்கள் உயிருடன் இருந்தே
இறக்க வேண்டும். சரீர உணர்வை நீக்கிக் கொண்டே செல்லுங்கள்.
தனிமையில் அமர்ந்து பயிற்சி செய்துக் கொண்டே இருங்கள்.
அதிகாலையில் தனிமையாக அமர்ந்து உங்களிடமே நீங்கள் உரையாடுங்கள்.
மிகவும் ஊக்கத் துடன் தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா,
அவ்வளவு தான், இப்பொழுது நாங்கள் உங்களது மடியில் வந்தே
விட்டோம். அவ்வளவே. ஒருவரின் நினைவிலேயே சரீரத்திற்கு முடிவு (அந்த்)
ஏற்பட்டு விட வேண்டும். இதற்கு தான் ஏகாந்தம் என்று
கூறப்படுகிறது. தந்தையை நினைவு செய்து செய்து இந்த சரீரம் என்ற
தோல் விடுபட்டு போய் விடும்.
இந்த பழைய உலகம், பழைய உடல் முடியப் போகிறது. மற்றபடி (புருஷார்த்தம்)
முயற்சிக்காக சங்கமத்தின் சிறிது காலம் உள்ளது. பாபா இந்த
படிப்பு எதுவரை நடக்கும் என்று குழந்தைகள் கேட்கிறார்கள்.
தெய்வீக ராஜதானி ஸ்தாபனை ஆகும் வரையும் கூறிக் கொண்டே இருப்பேன்
என்று பாபா கூறுகிறார். பிறகு புது உலகிற்கு (டிரான்ஸ்ஃபர்)
மாற்றம் ஆகி விடுவோம். இது பழைய உடல் ஆகும். ஏதாவது கர்ம கணக்கு
கூட நடந்துக் கொண்டே இருக்கும். இதில் பாபா உதவி செய்வார் என்ற
இந்த நம்பிக்கை வைக்கக் கூடாது. திவால் ஆகியது. நோய்வாய்ப்
பட்டீர்கள் - இது உங்களுடைய கணக்கு வழக்கு ஆகும் என்று தந்தை
கூறுவார். ஆம், பிறகும் யோகத்தினால் ஆயுள் நீண்டு விடும்.
உங்கள் உழைப்பு செய்யுங்கள். கிருபை வேண்டாதீர்கள். தந்தையை
எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ, அதில் நன்மையே தான் உள்ளது.
கூடுமானவரையும் யோக பலத்தை பயன்படுத்துங்கள். பக்தி
மார்க்கத்தில் என்னை கண் களுக்குள் மறைந்து கொள்ளுங்கள் என்று
பாடுகிறார்கள். பிரியமான பொருளை கண்மணி, உயிரினும் இனிய....
என்று கூறுகிறார்கள். இந்த தந்தையோ மிகவும் பிரியமானவர் ஆவார்.
ஆனால் மறைமுகமாக இருக்கிறார். அவருக்காக சொல்லிலடங்காத அன்பு
இருக்க வேண்டும். குழந்தைகளையோ தந்தை தன் கண்களுக்குள் மறைந்து
தான் வைக்கிறார். கண்கள் என்பது இந்த ஸ்தூல கண்கள் ஒன்றும்
கிடையாது. இதுவோ புத்தியின் விˆயம் ஆகும். மிகவும்
அன்பிற்குரிய நிராகாரமான தந்தை நமக்கு படிப்பித்துக்
கொண்டிருக்கிறார். அவர் ஞானக் கடல், சுகக்கடல், அன்பின் கடல்
ஆவார். அப்பேர்ப்பட்ட மிகவும் அன்பிற்குரிய தந்தையிடம் எவ்வளவு
அன்பு இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எவ்வளவு பலன்
எதிர்பாராத சேவை செய்கிறார். எனவே குழந்தைகளாகிய நீங்கள் கூட
அவ்வளவே அன்புடன் சேவை செய்ய வேண்டும். ஸ்ரீமத் படி நடக்க
வேண்டும் எங்காவது தங்கள் வழிப்படி நடந்தீர்கள் என்றால்
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கு கோடு விழுந்து விடும்.
குழந்தைகளாகிய உங்களுக்குள் மிக மிக ஆன்மீக அன்பு இருக்க
வேண்டும். ஆனால் தேக அபிமானத்தில் வரும் காரணத்தால் அந்த அன்பு
ஒருவருக்கு மற்றவரிடம் இருப்பதில்லை. ஒருவர் மற்றவரது குறைகளையே
வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னார் இப்படி
இருக்கிறார்.... அவர் இப்படி செய்கிறார்... நீங்கள் (தேஹீ
அபிமானி) ஆத்ம உணர்வு டையவர் களாக இருக்கும் பொழுது யாருடைய
குறைகளையும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்க வில்லை.
தங்களுக்குள் மிகுந்த அன்பு இருந்தது. இப்பொழுது மீண்டும் அதே
நிலையை தாரணை செய்ய வேண்டும். முதலில் நீங்கள் எவ்வளவு
இனிமையாளர்களாக இருந்தீர்களோ, அவ்வாறே இனிமையானவராக, சுகம்
அளிப்பவராக ஆகுங்கள். தேக அபிமானத்தில் வந்த காரணத்தினால்
துக்கம் அளிப்பவராக ஆனீர்கள். அதனால் உங்களுடைய ஆன்மீக
மகிழ்ச்சி மறைந்து போய் விட்டது. வாழ்க்கை கூட குறுகியதாக ஆகி
விட்டது. இப்பொழுது மீண்டும் தந்தை உங்களை சதோபிரதானமாக ஆக்கி,
சதா சுகமுடையவர்களாக ஆக்க வந்துள்ளார். நீங்கள் எந்த அளவு
தந்தையை நினைவு செய்துக் கொண்டே இருப்பீர் களோ, அந்த அளவு
குறைகள் நீங்கிக் கொண்டே போகும். கருத்து வேற்றுமைகள் நீங்கிக்
கொண்டே போகும். நாம் சகோதர சகோதரர்கள் ஆவோம் என்பது பக்குவமாக
நினைவில் இருக்க வேண்டும். ஆத்மா சகோதர சகோதரர் என்று
பார்க்கும் பொழுது எப்பொழுதுமே குணங்கள் தான் தென்படும்.
அனைவரையும் குணவான்களாக ஆக்குவதற்கான முயற்சி செய்யுங்கள்.
அவகுணங்களை விடுத்து குணங்களை தாரணை செய்யுங்கள். ஒரு பொழுதும்
யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். ஒரு சிலரிடம் எப்பேர்ப்பட்ட
குறைகள் உள்ளன என்றால் அவர்களால் சுயம் தங்களையும் புரிந்து
கொள்ள முடிவதில்லை. அவர்களோ தங்களை மிகவும் நல்லவர்களாக
இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் குறைகள்
இருக்கும் காரணத்தால் அங்கங்கு தவறான வார்த்தைகள் வெளிப்பட்டு
விடுகின்றன. சதோபிரதான நிலையில் இந்த விசயங்கள் இருக்காது. நாம்
எவ்வளவு இனிமையானவர் ஆகி உள்ளோம் என்று உங்களையே நீங்கள்
பாருங்கள். நமக்கு தந்தையிடம் எவ்வளவு அன்பு இருக்கிறது?
தந்தையுடன் முற்றிலுமாக ஒட்டிக் கொண்டு விடும் அன்பிற்கு
அப்பேர்ப் பட்ட அன்பு இருக்க வேண்டும். பாபா நீங்கள் எங்களை
எவ்வளவு உயர்ந்தவராக அறிவாளி யாக ஆக்குகிறீர்கள். சொர்க்கத்தின்
அதிபதி ஆக்குகிறீர்கள். இது போல உள்ளுக்குள் தந்தைக்கு மகிமை
செய்து நெகிழ்ந்து போய் விட வேண்டும். ஆன்மீக குஷியில் இருக்க
வேண்டும். மகிழ்ச்சியைப் போன்ற சத்துணவு எதுவும் கிடையாது என்று
பாடவும் செய்கிறார்கள். தந்தையை சந்திப்பதிலும் கூட எவ்வளவு
மகிழ்ச்சி இருக்க வேண்டும். சங்கமத்தில் தான் குழந்தைகளாகிய
உங்களுக்கு 21 பிறவிகள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதற்
கான சத்துணவு கிடைத்து விடுகிறது. பிறகு யாருக்குமே எந்த
விˆயத்திலும் கவலை இருப்பதில்லை. இப்பொழுது எவ்வளவு கவலைகள்
இருக்கின்றன. எனவே அதனுடைய பாதிப்பு சரீரத்தின் மீதும் வந்து
விடுகிறது. உங்களுக்கோ எந்த ஒரு விசயத்தின் கவலையும் இல்லை.
இந்த மகிழ்ச்சியின் சத்துணவை நீங்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிக்
கொண்டே இருங்கள். ஒருவர் மற்றவருக்கு இந்த பலத்த உபசாரம் செய்ய
வேண்டும். இப்பேர்ப்பட்ட உபசாரம் மனிதர்கள் மனிதர்களுக்கு
செய்ய முடியாது. நீங்கள் தந்தையின் ஸ்ரீமத் படி இந்த உபசாரம்
செய்கிறீர்கள். எவரொருவருக்கும் தந்தையின் அறிமுகம் அளிப்பது -
இது தான் க்ஷேம நலம் கூட ஆகும். இது ஞானம் மற்றும் யோகத்தின்
முதல்தரமான அதிசயமான சத்துணவு ஆகும். இந்த சத்துணவு ஒரேயொரு
ஆன்மீக மருத்துவர் மூலமாக கிடைக்கிறது. மன்மனாபவ, மத்யாஜீ பவ -
அவ்வளவே, இரண்டு மகா வாக்கியங்களின் சத்துணவு ஆகும். மிகவும்
அன்பிற்குரிய தந்தையிடமிருந்து உலக அரசாட்சி கிடைக்கிறது. இது
ஏதோ குறைவான விˆயமா என்ன? இந்த இரண்டு மகா வாக்கியங்களே பெயர்
பெற்றவை ஆகும். இந்த இரண்டு மகாவாக்கி யங்களால் நீங்கள் (எவர்
ஹெல்தி - எவர் வெல்தி) என்றும் ஆரோக் கியம் மற்றும் செல்வம்
உடையவர்களாக ஆகி விடுகிறீர்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள்
இந்த விசயங்களை நினைவு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இறை மாணவ வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை என்ற இந்த பாடல் கூட
இப்பொழுதிற்கானது ஆகும். கூடுமானவரையும் ஒருவர் மற்றவருக்கு
இந்த ஆன்மீக சத்துணவை சேர்ப்பியுங்கள். ஒருவர் மற்றவரை
முன்னேற்றுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். மிகவும் பொறுமையுடன்,
கம்பீரத் தன்மையுடன், அறிவுடன் தந்தையை நினைவு செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கையை வைரம் போல ஆக்குங்கள்.
இனிமையான குழந்தைகளே, தந்தையிடமிருந்து கிடைக்கும் ஸ்ரீமத்படி
நடப்பதில் கவனக் குறைவாக இருக்கக் கூடாது. தந்தையினுடைய
செய்தியை அனைவருக்கும் சேர்ப்பிக்க வேண்டும். எல்லாருக்கும்
தந்தையின் செய்தியோ கிடைக்க வேண்டும் அல்லவா? செய்தி மிகவும்
எளிதானது - தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு
செய்யுங்கள். மேலும் கர்ம இந்திரியங்கள் மூலமாக மற்றும் மனம்
சொல் செயல் மூலமாக எந்தவொரு தீய செயலும் செய்யாதீர்கள். ஒரு
நாள் உங்களுடைய இந்த அமைதியின் பலத்தின் (சைலன்ஸ் பவர்) குரல்
வெளிப்படும். நாளுக்கு நாள் உங்களுடைய முன்னேற்றம் ஏற்பட்டுக்
கொண்டே போகும். உங்களுடைய பெயர் புகழடைந்து கொண்டே போகும். இது
நல்ல ஸ்தாபனம், நல்ல காரியம் செய்து கொண்டிருக் கிறார்கள்,
வழியும் மிகவும் எளிதானதாக கூறுகிறார்கள் என்று எல்லாரும்
புரிந்துக் கொண்டு விடுவார்கள். இந்த பிராமணர்களின் விருட்சம்
மிகவுமே பெருகிக் கொண்டே போகும். பிரஜைகள் அமைந்து கொண்டே
போவார்கள். சென்டர்கள் நிறைய விருத்தி அடைந்து விடும்.
உங்களுடைய கண்காட்சிகள் கூட கிராம கிராமங்களில் நடக்கும்.
குழந்தை களாகிய நீங்கள் மிக உயர்ந்த சேவை செய்ய வேண்டும்.
உங்களுடைய புது புது சென்டர்கள் திறந்து கொண்டே போகும். அவை
மூலம் அநேக மனிதர்கள் வந்து தங்களது வாழ்க்கையை வைரம் போல
அமைத்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் மிகவும் அன்புடன்
ஒவ்வொரு வரையும் பராமரிக்க வேண்டும். பாவம் எங்காவது அவர்களது
கால் வழுக்கி விடக் கூடாதே (திசைத் தவறி சென்று விடக் கூடாதே)
என்ற கவனம் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு அதிகமான சென்டர்கள்
இருக்குமோ, அந்த அளவிற்கு அதிகமானோர் வந்த உயிர் தானம்
பெறுவார்கள். குழந்தைகளாகிய உங்களது பிரபாவம் வெளிப்படும்
பொழுது இங்கு வந்து எங்களுக்கு மனிதனை தேவதையாக ஆக்கக் கூடிய
இராஜயோகத்தை கற்பியுங்கள் என்று நிறைய பேர் அழைப்பார்கள். இனி
முன்னால் போக போக அதே பகவான் அபுவில் வருகை தந்துள்ளார் என்று
மிகவுமே கிளர்ச்சி ஏற்படும்.
இந்த சமயத்தில் பழைய உலகத்தில் சர்வதேச (இண்டர்நேசனல்)
குழப்பங்கள் உள்ளன. இப்பொழுது இந்த எல்லா குழப்பங்களும் முடியப்
போகிறது. இதைப் பற்றி நீங்கள் எந்தவொரு கவலையும் பட
வேண்டியதில்லை. இதை பொருட்படுத்தாதீர்கள். இப்பொழுது இந்த பழைய
உலகம் போய் விட்டது போலவே தான். இதன் மீது பற்றுக் கொள்ளக்
கூடாது என்று நீங்கள் எல்லாருக்கும் கூறுங்கள். ஒரு வேளை பற்று
இருந்தது, இதயம் தூய்மையாக இருக்கவில்லை என்றால் அளவற்ற குஷி
கூட இருக்காது. குழந்தைகளுக்கு ஏராளமான ஞான செல்வத்தின்
பொக்கிசம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. எனவே அளவற்ற மகிழ்ச்சி
இருக்க வேண்டும். எந்த அளவிற்கு இதயம் தூய்மையானதாக இருக்குமோ,
அந்த அளவிற்கு மற்றவர்களையும் தூய்மையாக ஆக்குவார்கள்.
யோகத்தின் நிலை மூலமாகத் தான் இதயம் தூய்மை ஆகிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கு யோகியாக ஆகும் மற்றும் ஆக்குவதற்கான
ஆர்வம் கூட இருக்க வேண்டும். ஒரு வேளை தேகத்தின் மீது பற்று
இருக்கிறது, தேக அபிமானம் இருக்கிறது என்றால் நமது நிலை மிகவுமே
பக்குவப்படாததாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். (தேஹீ
அபிமானி) ஆத்ம உணர்வுடைய குழந்தைகள் தான் உண்மையான வைரம்
ஆகிறார்கள். எனவே கூடுமானவரையும் ஆத்ம உணர்வில் இருப்பதற்கான
பயிற்சி செய்யுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து தேடி
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகத்
தந்தையின் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தைக்கு சமானமாக நிரகங்காரி ஆகி (அகங்காரமற்றவர்) மிகவும்
அன்புடன் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க
வேண்டும். தனது வழிபடி நடந்து தங்களது அதிர்ஷ்டத்திற்கு
கோடிட்டு கொண்டு விடக் கூடாது.
2. சங்கமத்தில் தந்தை மூலமாக கிடைத்திருக்கும் மகிழ்ச்சியின்
சத்துணைவை சாப்பிட்டுக் கொண்டும் மற்றவர்களுக்கு ஊட்டிக்
கொண்டும் இருக்க வேண்டும். தங்களது நேரத்தை வீணடிக்க கூடாது.
மிகவும் பொறுமையுடனும் கம்பீரத் தன்மையுடனும் அறிவுடனும்
தந்தையை நினைவு செய்து தங்களது வாழ்க்கையை வைரம் போல ஆக்கிக்
கொள்ள வேண்டும்.
வரதானம்:
ஆசைகளை ஆசையற்றவராக மாற்றக்கூடிய (பரிவர்த்தனை)
சக்தி சொரூப ஆத்மா ஆகுக!
சக்தி சொரூபமாவதற்கு பற்றி-ருந்து பற்றற்றவராக பரிவர்த்தனை
செய்யுங்கள். தன்னுடைய தேகம், தேக சம்மந்தங்களில் ஏதாவது ஒரு
பதார்த்தத்தில் ஆசை இருந்தால் மாயா கூடவே வந்து விடும். மேலும்
சக்தி சொரூபம் ஆக விடாது. ஆகையால் முத-ல் ஆசையற்றவராக ஆகுங்கள்.
அப்பொழுது மாயாவின் தடைகளை வெல்ல முடியும். தடைகள் வருவதைக்
கண்டு கூக்குரல் போடுவது, பயப்படுவது இவற்றிற்குப் பதிலாக சக்தி
சொரூபத்தைத் தாரணை செய்யுங்கள். அப்பொழுது தடைகளை வென்றவர்
ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
கருணையும், ஆசையற்றவராகவும் பற்றற்றவராகவும் இருங்கள்-
ஆசையுடையவராக அல்ல
மாதேஷ்வரி அவர்களின் விலை மதிப்பிட முடியாத மகாவாக்கியம் -
வாழ்க்கையின் நம்பிக்கை நிறைவு பெறுவதற்கான அழகான நேரம்.
வாழ்க்கையில் எப்பொழுதும் சுகம் மற்றும் அமைதி கிடைக்க வேண்டும்
என்ற நம்பிக்கை அனைத்து ஆத்மாக்களாகிய நமக்கு வெகுகாலமாக
இருந்தது. இப்பொழுது அநேக பிறவிகள் விருப்பம் எப்பொழுதாவது
நிறைவேறும் அல்லவா? இப்பொழுது இது நம்முடைய கடைசி பிறவி. அந்த
கடைசி பிறவியினுடையதும் கடைசி ஆகும். நானோ இப்பொழுது சிறியவனாக
இருக்கிறேன் என்று யாருமே நினைக்காதீர்கள். சிறியவர்களோ
பெரியவர்களோ சுகமோ வேண்டும் அல்லவா? ஆனால் எந்த பொருள் காரணமாக
துக்கம் கிடைக்கிறது என்பது பற்றிய ஞானம் கூட முதலில் வேண்டும்.
இந்த ஐந்து விகாரங்களில் சிக்கிய காரணத்தால் எந்தவொரு கர்ம
பந்தனம் அமைக்கப்பட்டு விட்டுள்ளதோ அவற்றை பரமாத்மாவின் நினைவு
என்ற அக்கினி மூலமாக சாம்பலாக்க வேண்டும் என்ற ஞானம் இப்பொழுது
உங்களுக்கு கிடைத்துள்ளது. இது கர்ம பந்தனத்திலிருந்து
விடுபடுவதற்கான எளிதான உபாயம் ஆகும். இந்த சர்வ சக்திவான்
பாபாவை நடந்தாலும் சென்றாலும் மூச்சுக்கு மூச்சு நினைவு
செய்யுங் கள். இப்பொழுது இந்த உபாயத்தை கூறுவதற்கான உதவி சுயம்
பரமாத்மா வந்து செய்கிறார். ஆனால் இதில் புருஷார்த்தமோ (முயற்சி)
ஒவ்வொரு ஆத்மாவும் செய்ய வேண்டும். பரமாத்மாவோ தந்தை, ஆசிரியர்,
குரு ரூபத்தில் வந்து நமக்கு ஆஸ்தி கொடுக்கிறார். எனவே முதலில்
தந்தையினுடையவர் ஆக வேண்டும். பிறகு ஆசிரியரிடம் படிக்க
வேண்டும். அந்த படிப்பின் மூலம் வருங்கால பல பிறவிகளுக்கான
சுகத்தின் பிராப்தி அமையும். அதாவது ஜீவன் முக்தியின் பதவியில்
முயற்சிக்கேற்ப பதவி கிடைக்கிறது. மேலும் குருவின் ரூபத்தில்
பரிசுத்தமாக ஆக்கி முக்தி அளிக்கிறார். எனவே இந்த இரகசித்தை
புரிந்து அப்பேர்ப்பட்ட புருஷார்த்தம் செய்ய வேண்டும். இதுவே
பழைய கணக்கை முடித்து புதிய வாழ்க்கையை அமைப்பதற்கான நேரம்
ஆகும். இதே நேரத்தில் எவ்வளவு புருஷார்த்தம் செய்து தங்களது
ஆத்மாவை தூய்மையாக ஆக்கி கொள்வார்களோ, அந்த அளவிற்கே தூய்மையான
பதிவுகள் நிரம்பும், மேலும் அது முழு கல்பத்தில் நடந்து வரும்.
எனவே இந்த நேரத்தின் சம்பாத்தியத்தை பொறுத்தே முழு கல்பமும்
இருக்கும். பாருங்கள் இந்த நேரத்தில் தான் உங்களுக்கு முதல் இடை
கடை பற்றிய ஞானம் கிடைக்கிறது. நாம் அதே தேவதை ஆக வேண்டும்.
மேலும் நம்முடையது ஏறும் கலை ஆகும். பிறகு அங்கு போய்
பிராப்தியை அனுபவிப்போம். அங்கு தேவதைகளுக்கு நாங்கள் பின்னால்
விழுந்து விடுவோம் என்பது பற்றி தெரிய வராது. ஒரு வேளை சுகம்
அனுபவித்த பிறகு விழ வேண்டி இருக்கும் என்பது தெரிய
வந்ததென்றால் விழப்போகிறோம் என்ற கவலையில் சுகத்தைக் கூட
அனுபவிக்க முடியாமல் போய் விடுவீர்கள். எனவே மனிதர்கள்
எப்பொழுதும் ஏறுவதற்கான புருஷார்த்தம் செய்கிறார்கள். அதாவது
சுகத்திற்காக சம்பாதிக்கிறார் என்ற நியமம் இயற்றப்பட்டுள்ளது.
ஆனால் நாடகத்தில் பாதி பாதி பாகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த
இரகசியத்தை நாம் அறிந்துள்ளோம். ஆனால் எந்தச் சமயத்தில்
சுகத்தின் முறை வருகிறதோ, புருஷார்த்தம் செய்து சுகத்தை பெற
வேண்டும். இது தான் புருஷார்த்தத்தின் சிறப்பு. நடிகருடைய வேலை
நடிக்கும் பொழுது முழுமையான சிறப்புடன் பாகத்தை நடிப்பது -
பார்ப்பவர்கள் ஆகா ஆகா என்று கூறி பாராட்டக் கூடிய வகையில்
இருக்க வேண்டும். எனவே கதாநாயகன் கதாநாயகியின் (ஹீரோ, ஹீரோயின்)
பாகம் தேவதைகளுக்கு கிடைத்துள்ளது. அவர்களுடைய நினைவார்த்த
சித்திரங்களுக்கு பாடலும் பூஜையும் நடக்கிறது. நிர்விகாரி
இல்லறத்தில் இருந்து தாமரை மலர் போன்ற நிலையை அமைப்பது - இதுவே
தேவதைகளின் சிறப்பு ஆகும். இந்த சிறப்பை மறந்த காரணத்தில் தான்
பாரதத்திற்கு இப்பேர்ப்பட்ட துர்கதி ஏற்பட்டுள்ளது. இப்பொழுது
மீண்டும் அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை அமைக்கக் கூடிய பரமாத்மா
சுயம் வந்து விட்டுள்ளார். இப்பொழுது அவரது கையை பிடித்துக்
கொள்வதன் மூலம் வாழ்க்கை என்ற படகு கடந்து சென்று விடும்.
நல்லது. ஓம் சாந்தி.
அவ்யக்த சமிக்ஞை: அபவித்திரதாவின் விதையைக் கூட அழித்துவிட்டு,
சம்பூரண தூய்மையானவராக ஆகுங்கள்
நான் சங்கமயுக பிராமணன் ஆவேன், வீணான சங்கல்பம், தூய்மையற்ற
சம்ஸ்காரம் கீழானவர்களுடைய சொரூபமாகும். இந்த அபவித்ரதா (தூய்மையற்ற)
மற்றும் பாபாவின் நினைவற்ற சம்ஸ்காரம் என்பது பிராமணணாகிய
என்னுடையதல்ல, அது கீழான தன்மை யுடையவர்குடையது என்ற அனுபவம்
ஏற்படும். அவைகளை என்னுடைய என்று புரிந்து கொண்டால் மாயையின்
வசமாகி குழப்பம் அடைவதாகும்.