10-10-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! மனம், சொல்-செயலால் யாருக்கும் துக்கம் தரலாகாது. ஒருபோதும் எவர் மீதும் கோபம் கொள்ளலாகாது. அன்பு மிக இனிமையானது இதனால் எவரையும் தன் வசம் செய்ய முடியும்.

கேள்வி:
தந்தை குழந்தைகளை இரட்டை மகுடதாரிகளாக, உலகின் எஜமானராக, மிக நல்லவர்களாக மாற்ற என்ன வழி கூறுகிறார்?

பதில்:
தெய்வீக நற்குணங்களை கடைபிடித்து மிகமிக இனிமையாகுங்கள். ஒருவரையொருவர் சகோதரர்-சகோதரர் எனவும், சகோதரன்-சகோதரி என்ற பார்வையிலும் பாருங்கள். தனது முயற்சியாலேயே தனக்கு இராஜ திலகம் அணியுங்கள். (2) சுயம் ஈஸ்வர் தந்தையே உங்களுக்கு பாடம் கற்பிக்கின்றார், எனவே பாடத்தை தினசரி படியுங்கள். எந்த அளவு தானும் பயின்று பிறருக்கும் பயிற்றுவிப்பீர்களோ தனது நடத்தையை உயர்வாக மாற்றுவீர்களோ அந்தளவு நல்லவராவீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள் நாம் இப்போது நரகத்தின் கரையைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். இது முற்றிலும் வேறுபட்ட இடையில் உள்ள புருஷோத்தம சங்கமயுகம். கடலின் நடுவே உங்கள் படகு உள்ளது. நீங்கள் சத்யுகத்திலும் இல்லை, கலியுகத்திலும் இல்லை. நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தைச் சார்ந்த மிக உயர்ந்த பிராமணர்கள். பிராமணர் களுடையதே சங்கமயுகமாகும். பிராமணன் உச்சிக்குடுமி (உயர்ந்தவர்) இது பிராமணர்களின் மிக சிறிய யுகமாகும். இந்த யுகத்தில் ஒரு பிறவி மட்டுமே உள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியான யுகம். எதைக் குறித்து மகிழ்ச்சி? பகவான் நமக்கு படிப்பிக்கின்றார். இத்தகைய மாணவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியிருக்கும். இப்போது உங்கள் புத்தியில் முழு சக்கரம் பற்றிய ஞானமும் உள்ளது. இன்று நாமே பிராமண ராகி நாளை நாமே தேவதை ஆகின்றோம். முதலில் நமது இனிய இல்லம் செல்வோம் - பிறகு புதிய உலகில் வருவோம். பிராமணராகிய நாமே சுயதரிசன சக்கரதாரிகள். நாமே இந்த குட்டிக் கர்ணம் விளையாடுகின்றோம். விராட ரூபத்திலும் பிராமணர் ஆகின்றீர்கள். நாள் முழுவதும் புத்தியில் இந்த விசயங்கள் இருக்க வேண்டும்.

இது உங்களுடைய மிகமிக அன்பான குடும்பம். நீங்கள் ஒவ்வொருவரும் மிகமிக அன்பானவராக வேண்டும். தந்தை இனிமையானவர் அவ்வாறே குழந்தைகளும் இனிமையாக இருக்க வேண்டும். ஒருபோதும் எவர்மீதும் கோபம் கூடாது. மனம்-சொல்-செயலால் எவருக்கும் துக்கம் தரக்கூடாது. தந்தை ஒருபோதும் எவருக்கும் துக்கம் தருவதில்லை. தந்தையை எவ்வளவு நினைப்பீர்களோ அவ்வளவு இனிமை ஆவீர்கள். இந்த நினைவாலேயே கரையை சேருவீர்கள். இதுவே நிûவு யாத்திரை. நினைவு செய்தபடியே சாந்தி தாம் வழியே சுகமாமம் செல்வோம். தந்தை குழந்தைகளை சதா சுகமாக்கவே வந்துள்ளார். என்னை நினைத்தால் பூதங்கள் ஓடிவிடும் என்று பூதங்களை விரட்டும் வழியும் கற்பிக்கின்றார். ஏதேனும் பூதம் இருந்தால் இங்கேயே என்னிடம் விட்டுச் செல்லுங்கள். தந்தையே நீங்கள் வந்து எங்களிடம் உள்ள பூதங்களை விரட்டி, எங்களை தூய்மை செய்யுங்கள் என்று கூறினீர்கள். தந்தை எவ்வளவு நறுமணம் வீசம் மலராக்குகின்றார். பாபா மற்றும் தாதா இருவரும் இணைந்து குழந்தைகளை அலங்கரிக்கின்றனர். அவர் எல்லைகுட்பட்ட தந்தை, இவர் எல்லையில்லாதவர். குழந்தைகள் மிக அன்பாக நடந்துக் கொள்ள வேண்டும், நடத்த வேண்டும். அனைத்து விகாரங் களையும் தானம் செய்ய வேண்டும். கொடுங்கள் தானம், விடுபடும் கிரகணம். இதில் சாக்கு போக்கிற்கு இடமில்லை. அன்புடன் நீங்கள் எவரையும் தன் வசம் செய்யலாம். அன்புடன் புரிய வையுங்கள். அன்பு மிக நல்லது. புலி, யானை போன்ற மிருகங்களையும் கூட மனிதர்கள் அன்பால் வசமாக்குகின்றனர். அவர்களோ அசூர மனிதர்கள். நீங்களோ அப்போது தேவதை யாகின்றீர்கள். எனவே தெய்வீக குணங்களை கடைபிடித்து மிக மிக இனிமையாகுங்கள். ஒருவரையொருவர் சகோதர-சகோதரர் என்றும் சகோதரன்-சகோதரி என்றும் பாருங்கள். ஆத்மா ஆத்மாவிற்கு ஒருபோதும் துக்கம் தர இயலாது. பாபா கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளே நான் உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியம் தர வந்துள்ளேன். இப்போது நீங்கள் என்ன வேண்டுமோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை உலகின் எஜமானராக, இரட்டை மகுடதாரிகளாக மாற்ற வந்துள்ளேன். ஆனால் முயற்சி நீங்கள் தான் செய்ய வேண்டும். நானாக யார் தலைமீதும் கிரீடம் வைக்க மாட்டேன். நீங்களே தனது முயற்சியால் தனக்கு இராஜ திலகம் அணிந்து கொள்ள வேண்டும். பாபா என்னென்ன செய்து இரட்டை மகுடதாரி ஆகலாம் என்பதற்கான வழிகளைக் கூறுகின்றார். படிப்பில் முழு கவனம் கொடுங்கள். ஒருபோதும் படிப்பை விடாதீர்கள். ஏதேனும் காரணத்திற்காக கோபித்துக் கொண்டு படிப்பை விட்டு விலகினால் மிகுந்த நஷ்டம் அடைய நேரிடும். நஷ்டத்தையும், இலாபத்தையும் பார்த்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் ஈஸ்வரிய பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஈஸ்வர் தந்தையிடம் படிக்கின்றீர்கள். படித்து பூஜைக்குறிய தேவதையாகின்றீர்கள். அதற்கேற்ப தினசரி மாணவராகவும் ஆக வேண்டும், மாணவ வாழ்க்கையே உயர்நத வாழ்க்கை. எந்தளவு படிப்பீர்களோ, கற்பிப்பீர்களோ நன்னடத்தை உள்ளவராவீர்களோ அவ்வளவு நல்லவராவீர்கள்.

இனிமையான குழந்தைகள் இப்போது உங்களுக்கு வீடு திரும்பும் பயணம். எப்படி நீங்கள் சத்யுகத்திலிருந்து, திரேதா, துவாபர, கலியுகம் வரையிலும் கீழே இறங்கி வந்தீர்கள் அவ்வாறே இப்போது நீங்கள் இரும்பு யுகத்திலிருந்து மேலே தங்கயுகம் வரையிலும் செல்ல வேண்டும். சில்வர் ஏஜ் (வெள்ளியுகம்) வரை எட்டும்போது இந்த கர்மேந்திரியங்கள் சலனம் அடங்கி விடும். எனவே எந்தளவு பாபாவை நினைவு செய்வீர்களோ அந்த அளவு ஆத்மாவிலிருந்து ரஜோ, தமோ எனும் கறைகள் நீங்கும். எந்தளவு கறை நீங்குமோ அந்தளவு பாபா காந்தம் போன்று அதிகமாக ஈர்ப்பார். ஈர்ப்பு இல்லை என்றால் நிச்சயம் கறை இருப்பதாகும். கறை முழுவதும் நீங்கி விட்டால் சுத்த தங்கமாகிவிடும். அதுவே இறுதி நிலை. கர்மாதீத் நிலையாகும். இனிமையான குழந்தைகளுக்கு தந்தையின் முதன்மையான விசயம் ஆத்மா அபிமானி ஆகுக - தேகம் உட்பட தேக சம்பந்தங்கள் அனைத்தும் மறந்து மனதால் என்னை நினையுங்கள். அவசியம் தூய்மை ஆகுங்கள். குமாரி தூய்மையாக இருப்பதால் அனைவரும் அவரை வணங்குவார்கள். திருமணம் ஆன பிறகு பூஜாரி ஆகிவிடுவார். அவர் அனைவரையும் வணங்குவார். கண்ணியர் தன் வீட்டில் இருக்கும்போது அதிக உறவுகள் நினைவில் வருவ தில்லை. திருமணத்திற்கு பிறகு தேக சம்பந்தமும் அதிகமாகின்றது. கணவன், பிள்ளைகள் மீது பற்று அதிகரிக்கிறது. மாமனார், மாமியார் நினைவும் வருகின்றது. முதலில் தாய் தந்தை மீது மட்டுமே பற்று இருக்கும். இங்கு அந்த அனைத்து சம்பந்தங்களையும் மறக்க வேண்டும். ஏனெனில் தந்தை ஒருவரை உங்களுக்கு உண்மையிலும் உண்மையான தாய்-தந்தையாவார். இது ஈஸ்வரிய சம்பந்தம். நீயே தாயும், தந்தையும் என பாடுகின்றனர். இந்த தந்தை உங்களை உலகின் எஜமானராக மாற்றுகின்றார். எனவே பாபா கூறுகின்றார்: எல்லையில்லா தந்தையான என்னை நிரந்தரமாக நினையுங்கள். வேறெந்த மனிதர் மீதும் பற்றுதல் வைக்காதீர்கள். இந்த எல்லையில்லா தந்தை உங்களை சொர்க்கம் அழைத்துச் செல்கின்றார். அத்தகைய இனிமை யான தந்தையை மிக அன்பாக நினையுங்கள். சுயதரிசன சக்கரத்தை சுற்றுங்கள். இந்த நினைவு சக்தியாலேயே ஆத்மாவாகிய நீங்கள் உறுதியாக சொர்க்கத்தின் எஜமானவீர்கள். சொர்க்கம் பெயர் கேட்டாலே மனம் மகிழ்கின்றது. யாரொருவர் நிரந்தரமாக நினைவு செய்து பிறரையும் நினைவு செய்ய வைப்பாரோ அவரே உயர் பதவி அடைவார். இவ்வாறு முயற்சி செய்து செய்து இறுதியில் ஆந்த உயர் நிலை பெறுவீர்கள். இந்த உலகமும் பழையது, உடலும் பழையது, தேக சம்பந்தங்களும் பழையது. இந்த அனைத்திலிருந்தும் புத்தியை விடுவித்து ஒரு தந்தையுடன் இணையுங்கள். இறுதி காலத்தில் ஒரு தந்தையின் நினைவே இருக்க வேண்டும். வேறெந்த சம்பந்தமும் நினைவில் கூடாது. இறுதியில் தேக சம்பந்தம் நினைவு வந்தால் பதவி குறைந்தே போகும். இறுதி காலத்தில் எல்லையில்லா தந்தை நினைவு இருந்தாலே நரனிலிருந்து நாராயணராக ஆவீர்கள். தந்தை நினைவு இருந்தால் சிவாலயம் தூரமில்லை.

இனிமையிலும் இனிமையான செல்ல குழந்தைகள் தந்தையிடம் புத்துணர்ச்சி பெறவே வந்துள்ளீர்கள். ஏனெனில் குழந்தைகளுக்கு எல்லையில்லா தந்தையிடமிருந்து எல்லையில்லா உலக ராஜ்யம் கிடைக்கின்றது என்று தெரியும். இதனை ஒருபோதும் மறக்கக்கூடாது. இது சதா நினைவுல் இருந்தாலே மட்டற்ற மகிழ்ச்சி நிறையும். இந்த பேட்ஜை அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருங்கள். இதனை இதயத்திலேயே ஒட்டிக் கொள்ளுங்கள், ஆஹா பகவான் சொல்படியே நாம் இவ்வாறு மாறுகின்றோம், இந்த பேட்ஜை அன்பாக பார்த்துக் கொண்டே யிருங்கள். பாபா, பாபா என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் எப்போதும் நினைவு இருக்கும். நாம் பாபா மூலமாக இவ்வாறு மாறுகின்றோம்.

இனிமையான குழந்தைகளுக்கு விசாலபுத்தி வேண்டும். நாள் முழுவதும் சேவைக்கான சிந்தனையே ஓட வேண்டும். சேவையின்றி இருக்க முடியாது என்ற குழந்தைகளே பாபாவிற்கு தேவை. குழந்தைகள் நீங்கள் முழு உலகையும் முற்றுகையிடவேண்டும். தூய்மையற்றவர் களை தூய்மை அடைய செய்ய வேண்டும். உலகம் முழுவதையும் துக்கதாமத்திலிருந்து சுகதாம மாக மாற்ற வேண்டும். ஆசிரியர்களும் கற்பிப்பவராக ஆகலாம். அதிகம் நீங்கள் இப்போது மிக உயர்ந்த ஆசிரியர் ஆகியுள்ளீர்கள். எவ்வளவு நல்ல ஆசிரியரோ அவர் அனேகரை தன்னைப்போன்று மாற்றுவார். ஒருபோதும் களைத்துப்போக மாட்டார். ஈஸ்வரிய சேவையில் மிகுதி குஷியுள்ளது. தந்தையின் உதவியும் கிடைக்கின்றது. இது மிகப்பெரிய வியாபாரமும் ஆகும். வியாபரிகளே செல்வந்தர் ஆகின்றனர். அவர்கள் இந்த ஞான மார்க்கத்திலும் அதிகம் கர்வம் காண்பிக்கின்றனர். தந்தையும் மிகப் பெரிய வியாபாரி ஆவார். முதல் தரமான வியாபாரம் இது. ஆனால் மிகுந்த தைரியம் வேண்டும். புதிய குழந்தைகளும், பழைய குழந்தைகளை விட முயற்சியில் முன்னேற முடியும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அதிர்ஷ்டம் உள்ளது. முயற்சியும் ஒவ்வொருவரும் தனித்தனியே செய்ய வேண்டும். தன்னை முழுமையாக சோதனை செய்யுங்கள். நன்கு சோதனை செய்பவர்கள் தனது நேரத்தை வீண் செய்ய மாட்டார்கள். இரவு பகலாக முயற்சி செய்வார்கள். முடிந்த வரையில் நேரத்தை பாதுகாத்து சேமிப்பு செய்ய வேண்டும். நான் தந்தையை ஒருபோதும் மாறக்க மாட்டேன், ஸ்காலர்சிப் (சிறப்பு சலுகை) பெற்றே தீருவேன் என தனக்குத் தானே உறுதி செய்வார்கள். அத்தகைய குழந்தைகளுககு உதவியும் கிடைக்கின்றது. அத்தகைய புத்தம் புதிய குழந்தைகளையும் பார்ப்பீர்கள், சாட்சாத்காரம் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். ஆரம்பத்தில் நிகழ்ந்தது போன்றே இறுதியிலும் பார்ப்பீர்கள். எவ்வளவு அருகே செல்வீர்களோ அவ்வளவு குஷியில் நடனமாடிக் கொண்டேயிருப் பீர்கள். அந்தப் பக்கம் (கலியுகத்தில்) சொல்லொன்னாத துயர விளையாட்டுகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

குழந்தைகளாகிய உங்களுக்கு ஈஸ்வரிய பந்தயம் நடைபெறுகின்றது. எவ்வளவு முன்னால் ஓடிவிடுவீர்களோ அவ்வளவு புத்துலக காட்சிகளும் தென்படும். குஷி அதிகரிக்கும். இப்போது கலியுகத்தின் மீது வைராக்கியமும் சத்யுகத்தின் மீது அன்பும் ஏற்படவேண்டும். சிவபாபா நினைவிருந்தால் சொர்க்கமும் நினைவில் இருக்கும். சொர்க்கம் நினைவிலிருந்தால் சிவபாபா நினைவும் இருக்கும். நாம் இப்போது சொர்க்கத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கின்றோம். பாதம் நரகத்தின் பக்கம், தலை சொர்க்கத்தின் பக்கம். இப்போது சிறியவர் பெரியவர் அனை வருக்கும் வானபிரஸ்த நிலையாகும். பாபாவிற்கு சதா இந்த பெருமிதம் இருந்தது. ஆஹா நான் குழந்தை கிருஷ்ணன் ஆவேன்! அதற்காக முன்னதாகவே பரிசுகளையும் அனுப்பு கிறார்கள். முழு நம்பிக்கையுள்ள கோப கோபியர்கள் பரிசுகளை அனுப்புகின்றனர். அவர்களுக்கு அதீந்திரிய சுகமும் அனுபவம் ஆகின்றது. நாமே அமரலோகத்தின் தேவதை ஆவோம். கல்ப முன்பும் நாமே ஆனோம். பிறகு 84 மறுபிறவியும் நாமே எடுத்து வந்தோம். இந்த குட்டிக்கர்ண விளையாட்டு நினைவிலிருந்தால் பெரும் பாக்கியமே. சதா ஈடில்லா மகிழ்ச்சியில் இருங்கள். பெரிய லாட்டரி கிடைத்துள்ளது. 5000 வருடங்களுக்கு முன்பும் நாமே இராஜ்ய பாக்கியம் அடைந்தோம், மீண்டும் நாளை அடைவோம். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கல்ப முன்பு பிறவி எடுத்தது போன்றே எடுப்போம். அவர்களே நம் தாய்-தந்தை ஆவார்கள். யார் ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையாக இருந்தாரோ அவரே மீண்டும் தந்தை ஆவார். இவ்வாறாக நாள் முழுவதும் சிந்தனை செய்துக் கொண்டிருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இவ்வாறாக ஞான சிந்தனை செய்யாதிருந்தால் அவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் ஆவார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஈஸ்வரி சேவையில் ஒருபோதும் களைத்துவிடக்கூடாது. நல்ல ஆசிரியராகி தன்னைப் போல் மாற்றும் சேவை செய்ய வேண்டும்.

2. நினைவு சக்தியால் ஆத்மாவை உறுதியாக்கவும். எந்த மனிதர் மீதும் பற்றுக் கூடாது.

வரதானம்:
அமைதி சக்தி மூலம் நொடியில் ஒவ்வொரு பிரச்சனைக்கும்
தீர்வு காணக்கூடிய ஏகாந்தவாசி ஆகுக

ஏதாவது ஒரு புதிய அல்லது சக்திசாலியான விஷயத்தை கண்டுபிடிக்கின்றார்கள் என்றால் அண்டர் கிரவுண்டுக்கு சென்று விடுகின்றார்கள். இங்கே ஏகாந்தவாசி ஆகுவது தான் அண்டர் கிரவுண்ட் ஆகும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், வேலை செய்து கொண்டிருந்தாலும், விஷயங்களை கேட்கும்போதும் சொல்லும் போதும், டைரக்ஷன் கொடுக்கும் பொழுதும், இந்த தேகத்தின் உலகம் மற்றும் தேகத்தின் உணர்விலிருந்து கடந்து அமைதியில் சென்றுவிடுங்கள். இந்தப் பயிற்சி மற்றும் அனுபவம் செய்யக்கூடிய செய்விக்கக்கூடிய நிலையானது ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு கொடுத்துவிடும். இதன் மூலம் ஒரு நொடியில் எவருக்கும் சாந்தி மற்றும் சக்தியின் அனுபவத்தை செய்விக்க முடியும். யார் அவர்கள் முன்னால் வந்தாலும், அவர்கள் இந்த நிலையில் சாட்சாத்காரத்தின் அனுபவம் செய்வார்கள்.

சுலோகன்:
வீணான எண்ணம் மற்றும் விகல்பத்திலிருந்து விலகி
ஆத்மீக ஸ்திதியில் இருப்பதுதான் யோகயுக்த் ஆகுவதாகும்.

அவ்யக்த சமிக்கை: பரோபகார பாவனையால் (மற்றவர்களுக்கு உதவி செய்யும் உணர்வினால்) நிரம்பப்பெற்று தீமை செய்பவருக்கும் நன்மை செய்யுங்கள்

பிரம்மா பாபா குழந்தைகளை எஜமானர் ஆக்கினார் மற்றும் தன்னை சேவாதாரியாக வைத்திருந்தார். எஜமானருக்கான மதிப்பும் கொடுத்தார், புகழும் கொடுத்தார். பெயரும் கொடுத்தார். ஒருபொழுதும் தன்னுடைய பெயரை முன்னால் வைக்கவில்லை - என்னுடைய குழந்தைகள் என்று குழந்தைகளை முன்னால் வைத்தார். எவ்வாறு பாபா பெயர், மதிப்பு, புகழ் அனைத்தையும் தியாகம் செய்தாரோ, பரோபகாரம் செய்தாரோ, குழந்தை களுடைய சுகத்தை தன்னுடைய சுகமாக புரிந்து கொண்டாரோ, குழந்தைகளுடைய மறதியின் காரணத்தினால் ஏற்படும் துக்கத்தின் அனுபவத்தை தன்னுடைய துக்கமாக புரிந்து கொண்டாரோ, அதுபோல் தந்தையை பின்பற்றி பரோபகார பாவனையினால் நிறைந்தவராகுங்கள், அப்பொழுது விஷ்வ நன்மைக்கான காரியம் சம்பன்னம் ஆகும்.