11.01.26    காலை முரளி            ஓம் சாந்தி  20.10.2008      பாப்தாதா,   மதுபன்


திருப்தியின் மணியாகி உலகில் திருப்தியின் ஒளியை பரப்புங்கள் - திருப்தியாக இருங்கள் - அனைவரையும் திருப்திப் படுத்துங்கள்

இன்று பாப்தாதா என்றென்றும் திருப்தியாக இருக்கும் தனது திருப்தி மணிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு திருப்தி மணிகளின் பளபளப்பால் அகிலமே எவ்வளவு அழகுடன் மிளிர்கின்றது. திருப்தி மணிகள் ஒவ்வொருவரும் தந்தைக்கும், தனக்கும், அனைவருக்கும் பிரியமானவராக உள்ளனர் திருப்தி என்பது அனைவருக்கும் பிரியமானது. திருப்தி என்பது அனைத்து பிராப்திகளாலும் நிரம்பரச் செய்வது, ஏனெனில் எங்கு திருப்தி இருக்குமோ அங்கு இல்லை என்ற பொருளே இல்லை. திருப்தியான ஆத்மாவில் திருப்தி என்பது இயல்பான இயற்கை ஆகும். திருப்தி எனும் சக்தி தானாகவே சுலபமாக நாலாபுறமும் வாயுமண்டலத்தில் பரவுகின்றது. அவர்களின் முகம், கண்கள் சுற்று புறத்திலும் திருப்தியை பரப்புகின்றது. திருப்தி உள்ள இடத்தில் மற்ற சிறப்பம்சங்களும் தானாகவே வந்து விடுகின்றது. திருப்தி என்பது சங்கமயுகத்தில் தந்தையின் வரப் பிரசாதம் ஆகும். திருப்தியான மனோநிலை எந்த இன்னலையும் சுலபமாக வெற்றி கொள்வது, இன்னல்கள் மாறிக் கொண்டே இருக்கும் ஆனால் திருப்தியெனும் சக்தி என்யென்றும் முன்னேற்றத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கும் எத்தனை தான் இன்னல் எதிலே வந்தாலும் திருப்தியானவரின் முன்பு ஒவ்வொரு மாயாவும், இயற்கையும் பொம்மலாட்டம் போன்றே தென்படும். எனவே திருப்தியான ஆத்மா ஒருபோதும் பதட்டமடை வதில்லை. இன்னல் யாவும் மனதை மகிழ வைக்கும் விளையாட்டாகவே அனுபவம் ஆகும். காட்சிகள் எத்தனை மாறினாலும் பார்வையாளராக இருக்கையில் அமர்ந்திருக்கும் திருப்தியான ஆத்மா தன்னிலையால் சூழ்நிலையை தகர்த்து விடுகின்றார். ஒவ்வொருவரும் தன்னை என்றென்றும் திருப்தியாக உள்ளேனா? என்று எப்போதும் சோதனை செய்க? எப்போதுமா, அவ்வப்போதா?

பாப்தாதா எப்போதும் ஒவ்வொரு சக்திக்காக, மகிழ்ச்சிக்காக, டபுள் லைட்டாகி பறப்பதற்காக சதா எனும் சொல்லை சதா நினைவில் வைக்கச் சொல்கின்றார். அவ்வப்போது என்ற சொல் பிராமணரின் அகராதியில் கிடையாது. ஏனெனில் திருப்தி என்றாலே சர்வ பிராப்திகளிருக்கும். எங்கே சர்வ பிராப்திகள் இருக்குமோ அங்கு அவ்வப்போது என்ற சொல்லுக்கே இடமில்லை, என்றென்றும் அனுபவம் செய்பவரா முயற்சி செய்து கொண்டிருப்பவரா? ஒவ்வொருவரும் தன்னையே கேளுங்கள், சோதனை செய்தீர்களா? ஏனெனில் நீங்கள் அனைவரும் விசேஷமாக தந்தைக்கு அன்பான, ஒத்துழைப்பான மிகப்பிரியமான, இனிமையிலும் இனிமையான சுய மாற்றம் செய்யும் குழந்தைகள் அப்படிதானே? அப்படித்தானே? தந்தை எப்படி பார்க்கின்றாரோ அவ்வாறே தன்னைத் தானே அனுபவம் செய்கின்றீர்களா? கை உயர்த்துங்கள் என்றென்றும் உள்ளவர்கள், அவ்வப்போது அல்ல சதா திருப்தியானவர்கள் சதா என்ற சொல் நினைவில் உள்ளதா. கை மெல்ல மெல்ல உயர்த்துகின்றீர்கள். நல்லது மிக நல்லது மெல்ல மெல்ல மற்றும் யோசித்து யோசித்து கை உயர்த்துகின்றீர்கள். ஆனால் பாப்தாதா மீண்டும் மீண்டும் கவனத்தை திருப்புகின்றார். இப்போது சமயம் மற்றும் தன்னை இரண்டையும் பாருங்கள். நேரத்தின் வேகத்தையும் தனது வேகத்தையும் சோதனை செய்யுங்கள் கௌரவத்துடன் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் அல்லவா! ஒவ்வொருவரும் தன்னை பாபாவின் செல்லமான ராஜா குழந்தை என நினையுங்கள். தன்னை ராஜா குழந்தை என உணர்கிறீர்களா தினமும் பாப்தாதா, உங்களை எவ்வாறு அன்பு பாராட்டு கின்றார். அன்பு நினைவுகளைத் தருகின்றார். செல்லமான குழந்தைகளே செல்லமானவர்கள் யார்? தந்தையை பின்பற்று பவரே செல்லமானவர் ஆகின்றார். பின்பற்றுவது மிக மிக மிக சுலபம் தானே கடினம் ஏதுமில்லை. ஒரு தந்தையை பின்பற்றினாலே அனைத்து விசயங்களிலும் பின்பற்றியதாகும். ஒரு வரியை மட்டும் தினமும் தந்தை நினைவூட்டுகின்றார். அது நினைவுள்ளதா? தன்னை ஆத்மா என புரிந்து தந்தையை நினையுங்கள் ஒரு வரிதானே நினைக் கின்ற ஆத்மாவிற்கு தந்தையின் பொக்கிஷம் கிடைத்து விட்டது அவர் சேவையின்றி இருக்க முடியாது. ஏனெனில் அளவில்லா பிராப்தி, அழியாத பொக்கிஷம் உள்ளது. வள்ளலின் பிள்ளைகள் கொடுக்காமல் இருக்க முடியாது. பெரும்பாலும் உங்களுக்கான பட்டப் பெயர் என்ன? இரட்டை அயல்நாட்டவர் பட்டமே இரட்டை பாப்தாதாவிற்கும் உங்களைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி எனவே தன்னில் தானாகவே ஆஹா என என் குழந்தைகளே ஆஹா என பாடுகின்றார். நல்லது. வெவ்வேறு தேசங்களில் இருந்து எந்த விமானத்தில் வந்துள்ளீர்கள்? உடல் ரீதியாக ஏதேனும் ஒரு விமனத்தில் வந்து விட்டீர்கள் ஆனால் பாப்தாதா எந்த விமானத்தைப் பார்க்கின்றார்? மிகவும் உயர்ந்த அன்பு எனும் விமானத்தில் தனது பிரியமான வீட்டை வந்து அடைந்துள்ளீர்கள். பாப்தாதா இன்று விசேஷமாக ஒரு வரதானம் திருப்தி எனும் ஒளியை பரப்புங்கள். தானும் திருப்தியாக இருந்து பிறரையும் திருப்பு செய்யுங்கள். சில குழந்தைகள் சொல்கிறார்கள், பாபா திருப்தியாக இருப்பது எளிது, பிறரை திருப்தி செய்வது சற்று கடினம். பாப்தாதாவிற்கு தெரியும். ஒவ்வொரு ஆத்மாவையும் திருப்திப்படுத்த எளிமையான வழி, சுலபமான சாதனம், ஒரு வேளை உங்களிடம் யாரேனும் அதிருப்தியடைந்தால் அவரது தாக்கம் உங்கள் மீதும் படுகின்றது. வீண் எண்ணம் எழுகின்றது. பாப்தாதா கொடுத்துள்ள சுபபாவனை சுபகாமனா எனும் மகா மந்திரம் தன் நினைவில் வைத்தால் வீண் எண்ணம் எழாது தன்னைப் பற்றி தெரிந்திருந்தும் அவர் அப்படி, இவர் இப்படி தான் ஆனால் தன்னை சதா இந்த வைப்ரேஷனிலிருந்து விலகி பாபாவின் அன்பினையே அனுபவம் செய்யுங்கள். உங்களுடைய விலகிய தன்மை, தந்தையின் அன்பில் மூழ்கிய தன்மை அந்த ஆத்மாவை சென்று அடையவில்லை என்றாலும் வாயு மண்டலத்தில் அவசியம் பரவும். ஒருவேளை மாற்றம் ஏதும் நிகழாதபோதும் உங்கள் மனதில் அவரைப் பற்றிய வீண் எண்ணம் இருந் தாலும் வாயு மண்டலத்தில் அனைவரது எண்ணமும் பரவும். எனவே நீங்கள் விலகியிருந்து தந்தையின் அன்பால் இணைந்து அந்த ஆத்மாவின் நன்மை குறித்து நல்லாசை, நல்விருப்பம் வையுங்கள். சிலர் பல முறை செய்கின்றார், அவர் தவறு செய்தார் எனவே சத்தமாக பேசினேன் தன் சுபாவமும், வாயும் வேகமாக செயல்படுத்துவது அவர் தவறு செய்தால் நீங்கள் வேகமாக சத்தமக பேசுவது தவறில்லையா! அவர் ஒரு தவறு செய்தாள் நீங்கள் சத்தமாக பேசினீர்கள், அது கோபத்தின் அம்சமாகும் அது சரியா? தவறால் தவறை சரி செய்ய முடியுமா? நிகழ்காலத்திற்கேற்ப தன் சத்தமான குரலிலும் கவனம் வையுங்கள். கருணையுடன் பேசுங்கள். இவ்வாறு சத்தமாக பேசுவது, மன உளைச்சலுடன் பேசுவது இவர் மாறவே மாட்டார் என சொல்வது இவையும் இரண்டாம் நம்பர் விகாரத்தின் அம்சமாகும். மலராக வார்த்தைகளை தூவ வேண்டும் என்பார்கள். இனிய சொல், மலர்ந்த முகம், இனிய உள் உணர்வு, இனிய உறவு, தொடர்பு இவையும் சேவைக் கான சாதனங்களே ஆகவே ரிசல்ட்டை பாருங்கள். ஒருவர் தவறு செய்கின்றார் அதனை புரிய வைக்கும் நல்ல லட்சியத்துடன் அறிவுரை தருகின்றீர்கள். வேறெந்த இலட்சியமும் கிடையாது. உங்கள் இலட்சியம் நல்லதே ஆனாலும் ரிசல்ட்டில் என்ன பார்க்கிறோம்? இவர் மாறுகின்றாரா? மேலும் உங்களை நெருங்கவே பயப்படுகின்றார். ஆக நீங்கள் வைத்த இலட்சியம் நிறைவேற வில்லை எனவே தன் மனதின் எண்ணம் சொல் சம்மந்தம், தொடர்பு என்றென்றுடம் இனிமையாக அமையுங்கள், எனெனில் நிகழ்காலத்தில் மக்கள் நடைமுறை வாழ்க்கையை பார்க்க விரும்பு கின்றார்கள். வார்த்தையால் சேவை செய்தால் அதனால் ஈர்க்கப்பட்டு அருகே வருவார்கள், இது இலாபம் தானே மேலும் நடைமுறையில் இனிமை, உயர்ந்த பாவனை, நன்னடத்தை முகம் பார்த்து தன்னையும் இவ்வாறு மாற்ற வேண்டும் என்ற படிப்பினை பெறுகின்றார்கள். இனி வரும் காலங்களில் நிலமைகள் மாறும், அப்போது உங்களுடைய முகமும், செயலுமே அதிக சேவை செய்யும், எனவே தன்னை சோதனை செய்க அனைத்து ஆத்மாக்கள் மீதும் சுபபாவனை, சுபகாமனா உள்ளுணவு உயர்ந்த பார்வையெனும் சம்ஸ்காரம் இயற்கையான இயல்பாக உள்ளதா?

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் வெற்றி மாலையின் மணியாக பார்க்க விரும்புகின்றார். நீங்கள் அவ்வாறே தன்னை மாலையின் மணியாகவே உணருகின்றீர்களா. சில குழந்தைகள் நினைக்கின்றார்கள் நிமித்த மான குழந்தைகளே 108 மணி மாலையில் வருவார்கள், ஆனால் பாப்தாதா முன்பே கூறியுள்ளார். பக்தியில் 108 மணிமாலை புகழப்படுகின்றது. ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றி மாலையில் மணியானால் பாப்தாதா மாலையை மேலும் நீளமாக்கி விடுவார். பாபாவின் உள்ளமெனும் மாலையில் வெற்றி இரத்தினமாக குழந்தைகள் உங்கள் ஒவ்வொருவருக்கும் இடமுண்டு. இது தந்தையின் உத்திரவாதம் தன்னுடைய எண்ணம், சொல், செயல் நடத்தை, முகம் யாவிலும் வெற்றியை கெண்டு வந்தாலே போதும். பிடித்துள்ளதா? ஆவீர்களா? வெற்றிமாலையின் மணியாக்குவேன் என்று பாப்தாதா உத்திரவாதம் தருகின்றார். யார் ஆவீர்கள்? (அனைவரும் கை உயர்த்துகின்றனர்) நல்லது அப்போது பாப்தாதா மாலைக்குள்ளே மாலையை உருவாக்க ஆரம்பித்து விடுவார். இரட்டை அயல் நாட்டவருக்கு பிடித்துள்ளதா? வெற்றி மாலையில் கொண்டுவருவது தந்தையின் வேலை, ஆனால் உங்கள் வேலை வெற்றி யடைவது. சுலபம, கடினமா? கடினமாகிறதா? கடினமானது என்பவர்கள் கை உயர்த்துங்கள். கடின மாகிறதா? கொஞ்சம் கொஞ்சம் சிலருக்கு பாப்தாதா சொல்கிறார். பாப்தாதா என்று சொல்லும் போது, பாபா எனும் போது தந்தைûயின் ஆஸ்தி கிடைக்காதா? அனைவரும் ஆஸ்திக்கு அதிகாரி கள், எவ்வளவு சுலபமாக தந்தை ஆஸ்தி கொடுத்தார், ஒரு நொடிக்கான விசயம் நீங்கள் தெரிந்து கொண்டு என்னுடைய தந்தை என ஏற்றுக் கொண்டீர்கள் உடனே பாபா என்ன சென்னார்? எனது குழந்தாய் குழந்தை என்றாலே ஆஸ்திக்கு அதிகாரியாவது இயல்பு தானே. பாபா என்று சொல்கிறீர்கள் அனைவரும் ஒரே சொல் மேரா பாபா என்று சொல்கிறீர்கள்? அப்படித்தானே? மேரா பாபா? இதில் கை உயர்த்துங்கள் எனது பாபா எனும் போது எனது ஆஸ்தில்லையா? எனது தந்தை எனும்போதே எனது ஆஸ்தியும் இணைந்தே உள்ளது. என் ஆஸ்தி? தந்தைக்கு நிகராக மாறுவது வெற்றி பெறுவது பாப்தாதா பார்க்கின்றார் இரட்டை அயல்நாட்டவரா பெரும்பாலும் கைகோர்த்து நடந்து செல்வார்கள். இவ்வாறு கைகோர்த்து நடந்து செல்வது ஒரு நாகரீகம். ஆகவே இப்போதும் பாபா சொல்கிறா சிவபாபாவின் கை என்பது என்ன? இந்த கை அல்ல. சிவ தந்தையின் கையை பிடித்துள்ளீர்கள் என்றால் எந்த கை ? ஸ்ரீமத் என்பது தான் சிவபாபாவின் கையாகும். கைகோர்த்து நடப்பது பிடிக்கும் எனில் ஸ்ரீமத் எனும் கை கோர்த்து நடப்பது என்ன கடினம் பிரம்மா பாபாவை பார்த்தீர்கள், நடைமுறை வாழ்வில் ஒவ்வொரு அடியும் ஸ்ரீமத்படி நடந்து முழுமையான ஃபரிஸ்தா எனும் இலக்கை அடைந்து விட்டார். அவ்யக்த ஃபரிஸ்தா ஆகி விட்டார். அவ்வறே தந்தையை பின்பற்றி ஒவ்வொரு ஸ்ரீமத் காலையில் கண் விழித்தது முதல் இரவு துயிலும் வரை ஒவ்வொரு அடியும் ஸ்ரீமத் பாப்தாதா கூறிவிட்டா. எவ்வாறு எழுவது, செய்வது, மனதில் எவ்வாறான எண்ணம் நினைப்பது, நேரத்தை எவ்வாறு உயர்வாக பயன் படுத்துவது, இரவு உறங்கும் வரையிலும் ஸ்ரீமத் கிடைத்துள்ளது இதனை செய்யலாமா கூடாதா என்று யோசிக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. பிரம்மா பாபாவை பின்பற்றினாலே போதும் ஒவ்வொரு குழந்தையும் இராஜா குழந்தையே, சுயராஜ்யதிகாரிகளே எனவே தனது சுயராஜ்யத்தை மறவாதீர்கள். புரிந்ததா!

பாப்தாதா பல முறை சமிக்ஞை செய்துள்ளார் நேரம் எதிர்பாராவிதமாக மிகவும் கடுமையாக வந்து கொண்டிருக்கின்றது, எனவே எவரெடி அசரீரி நிலையின் அனுபவம் அவசியம் எவ்வளவு தான் முக்கியமான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும் ஒரு நொடியில் அசரீரி ஆவதற்காக பயிற்சியை இப்போதிருந்தே பயிற்சி செய்து பாருங்கள். மிகவும் பசி என்று சொல்வீர்கள், தாகம் எடுத்தால் என்ன செய்வீர்கள்? தண்ணீர் அருந்துவீர்கள் தானே! ஏனெனில் தாகத்திற்கு தண்ணீர் பருகுவது அவசியம் என்று தெரியும் அவ்வாறே இடை இடையே அசரீரி, ஆத்மீக நிலையில் நிலைபெறுவதற்கான பயிற்சியும் அவசியமாகின்றது. ஏனெனில் வருகின்ற நாட்களில் நாலா புறமும் கூச்சல், குழப்பம் நடுவே உறுதியான மனோநிலையில் இருப்பது அவசியமாகும், இப்போதிலிருந்தே நீண்ட கால பயிற்சி செய்யவில்லையென்றால் அதி தீவிரமான கூச்சல் குழப்பம் நடுவே எப்படி உறுதியாக இருப்பீர்கள். முழு நாளில் ஓரிரண்டு நிமிடம் ஒதுக்கி சமயத்திற்கேற்ப ஆத்மீக நிலை மூலம் அசரீரி ஆக முடிகிறதா? என சோதனை செய்யுங்கள். சோதனை செய்து மாற்றம் கொண்டு வாருங்கள். சோதனை செய்தால் மட்டும் போதாது மாற்றமும் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் இந்த பயிற்சியினை சோதனை செய்வதால் இயல்பான மனோ நிலை அமைந்து விடும். பாப்தாதா மீது அன்பு உள்ளதா என்றால் அனைவரும் கை உயர்த்துவீர்கள். அன்பு உள்ளது தானே. முழு அன்பு உள்ளதா, முழு அன்பா, பாதியா? பாதி யில்லையே. அன்பு உள்ளது எனில் கொடுத்த வாக்கு என்ன? என்ன உறுதி மொழி செய்தீர்கள்? உடன் செல்வோமா? அசரீரி ஆக உடன் செல்வோமா பின்னால் பின்னால் வருவோமா? உடன் செல்வோமா? சிறிது நேரம் வதனத்தில் உடன் இருப்போம், பிறகு பிரம்மா உடன் முதல் பிறவியில் வருவோம் இது தானே உறுதிமொழி? ஆம் அல்லவா கை உயர்த்தவில்லையே, தலை அசையுங்கள், கை உயர்த்தி களைத்திருப்பீர்கள். உடன் செல்வோம் எனும்போது பின்னால் நின்று விட கூடாது. தந்தையும் யாரை தன்னுடன் அழைத்துச் செல்வார்? சமமானவரையே தன்னுடன் பாபா அழைத்துச் செல்வார். தந்தைக்கும் தனியே செல்ல பிடிக்காது. குழந்தைகளுடனே செல்ல விரும்புகின்றர். தந்தையுடன் செல்ல தயாரா? தலை அசையுங்கள் அனைவரும் செல்வோமா? நல்லது. அனைவரும் செல்ல தயாரா ? தந்தை செல்லும்போதே செல்வேம் அல்லவா. இப்போது அல்ல. இப்போது வெளிநாடு திரும்பி செல்ல வேண்டும். தந்தை கட்டளையிடுவார் மோகத்தை அறவே நீக்கி நினைவின் சொரூபமாக மணி அடிப்பார் அப்போதே உடன் செல்வோம் தயாரா? அன்பின் அடையளம் உடன் செல்வதே ஆகும். நல்லது.

பாப்தாதா குந்தைகள் ஒவ்வொருவரையும் தொலைவில் இருப்பினும் அருகே உணர்கின்றார். அறிவியல் சாதனம் தொலைவில் இருப்பவரை அருகே கொண்டு வரும், பார்க்க வைக்கும், பேச வைக்கும் எனில் பாப்தாதவும் தொலைவில் உள்ள குழந்தைகளை அருகே பார்க்கின்றார். தொலைவில் அல்ல உள்ளத்தில் வைத்துள்ளார். பாப்தாதா முக்கியமாக ஒவ்வொரு முறையும் மண்டலம் வாரியக வந்துள்ள குழந்தைகள் தன் உள்ளத்தில், கண்ணுக்குள் நிறுத்தி ஒவ்வொரு வரையும் உடன் செல்பவர்கள் உடன் இருப்பவர்கள், உடன் இராஜ்யம் செய்பவர்களாக பார்க்கின்றார். இன்று முழு நளிலும் என்ன டிரில் செய்வீர்கள்ள? இப்போதே ஒரு நொடியில் ஆத்மா அபிமானி, தனது உடலை பார்த்தாலும் அசரீ நிலையில் விலகி தந்தைக்கு பிரியமான வராக அனுபவம் செய்வீர்களா. இப்போதே ஒரு நொடியில் அசரீரி ஆகுக. நல்லது ( பாபா டிரில் செய்விக்கின்றார்) இவ்வாறே இடையிடையே முழு நாளில் எப்படியாகவது ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த பயிற்சியை உறுதி செய்யுங்கள். ஏனெனில் பாபாவிற்குத் தெரியும் வருகின்ற காலம் மிகவும் கூக்குரலுடன் இருக்கும். நீங்கள் அனைவருக்கும் சக்தி தர வேண்டும் ஒளி தருவதிலேயே உங்களுடைய தீவிர முயற்சி நடந்தேறும், குறைந்த நேரத்திலேயே சக்தி மூலமாக அனைத்து சக்திகளும் தர வேண்டும். அவ்வாறு கடுமையன நேரத்தில் சக்தி தருவீக்ள், எவ்வளவு பேருக்கு தருவீர்களோ அநேகருக்கோ குறைவானவர்களுக்கோ அவ்வளவு பேரும் துவாபர கலியுகம் வரையிலும் பக்தர்கள் ஆவார்கள். சங்கமயுகத்தில் ஒவ்வொருவரும் பக்தர்களையும் உருவாக்கு கிறார்கள், ஏனெனில் கொடுத்த சுகம், சாந்தி அவர்கள் உள்ளத்தில் பதிந்து விடுகின்றது. பக்தியின் வடிவில் உங்களுக்கு திருப்பி தருவார்கள் நல்லது.

நாலாபுறமும் உள்ள பாப்தாதாவின் கண்மணி இரத்தினங்கள் உலகிற்கே ஆதாரமாகி விமோட்சனம் தரும் ஆத்மாக்கள், மாஸ்டர் துக்கம் களைந்து சுகம் தருபவர்கள் உலகை மாற்றும் குழந்தைகளுக்கு மிக மிக உளமார்ந்த அன்பு மற்றும் உளப்பூர்வமான அன்பு நினைவுகள் மற்றும் பன் மடங்கு வரதானம் பெற்றுக் கொள்க நல்லது.

ஆசீர்வாதம்:
இணைந்த சொரூபத்தின் நினைவு மற்றும் உயர் நிலையின் பெருமிதம் மூலமாக கல்ப கல்பத்திற்கும் அதிகாரி ஆகுக !

நானும் எனது பாபாவும் இந்த நினைவால் இணைந்திருங்கள் தனது உயர் நிலை இன்று பிராமணன் நாளை தேவதை என்ற நினைவில் சதா நிலைத்திருங்கள். நானே அது, அதுவே நான் எனும் மந்திரம் சதா நினைவிருந்தால் இந்த பெருமிதம் குஷியில் பழைய உலகம் மறந்தே போகும். நாமே கல்பகல்பமும் அதிகாரி ஆத்மா எனும் மகிழ்ச்சி சதா இருக்கும். நாமே இருந்தேம், நாமே இருக்கின்றோம். நாமே கல்ப கல்பமாக இருப்போம்.

சுலோகன்:
தனக்குத் தானே ஆசிரியர் ஆகுங்கள் அப்போது அனைத்து பலவீனங்களும் அழிந்தே போகும்.


அவ்யக்த சமிக்ஞை : இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனமில்லாது ஜீவன் முக்தி நிலையை அனுபவம் செய்யுங்கள்.

பொதுவாக யாருக்கும் கட்டுக்குள் இருப்பது பிடிக்காது, ஆனால் பிறர் வசம் ஆகும்போது கட்டுப்பட்டவர் ஆகின்றனர். ஆகவே நான் பிறர் வசமான அடிமைய சுதந்திர ஆத்மாவா? என சோதனை செய்க. ஜீவன் முக்தியின் ஆனந்தமே இப்போது தான் உள்ளது. நாளை வாழ்வில் சொர்க்கத்தில் ஜீவன் முக்தி ஜீவன் பந்தனம் என்ற ஞானமே இருக்காது. இப்போதைய ஜீவன் முக்தி நிலையே உயர்ந்த அனுபவமாகும். வாழ்வில் இருந்தாலும் விடுபட்ட நிலை, எந்த கட்டுப்பாடும் இல்லை.